{"Header": ["\nசபை முதல்வர், பிரதம கொறடா ஆகியோர் நியமனம்"], "Time": ["\n02 Jan, 2020\t", "| 7:45 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/02/%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b1%e0%ae%9f%e0%ae%be/", "Content": "Colombo (News 1st) சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்கவை நியமிப்பதற்கு இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்கை் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்கவை எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சியின் பிரதி அமைப்பாளர்களாக ஜே.சி. அலவத்துவல, அஜித் பி.பெரேரா மற்றும் ரஞ்சித் அலுவிஹாரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி அமைப்பாளர்களாக ஆஷு மாரசிங்க, சிட்னி ஜயரத்ன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்."} |