{"Header": ["\nகொக்கேய்ன் கடத்தலில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் கைது"], "Time": ["\n01 Jan, 2017\t", "| 9:25 pm ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2017/01/01/%e0%ae%95%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%9f%e0%af%81/", "Content": "கொக்கேய்ன் மற்றும் ஹஷீப் கடத்தலில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் கார் ஒன்றுடன் இன்று வெலிகம பகுதியில் கைது செய்யப்பட்டனர். இதேவேளை இரண்டு கிலோகிராம் ஹெரோய்ன் உடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று மாலை கைது செய்யப்பட்டார். 2016 ஆம் ஆண்டு ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதன்போது 1486 கிலோகிராம் கொக்கேன் மற்றும் 147 கிலோகிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கடந்த வருடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு இறுதியில் நடப்பது என்ன?"} |