text
stringlengths
13
771
gender
int64
0
1
audio_path
stringlengths
37
37
ஆனால், நான் சொல்லி என்ன பயன், ஏன் பயன் இல்லை.
0
data/tamil_tts_wavs/female_000100.wav
பழுவூர்க்காரர்கள் போட்ட கோட்டை, அவர் தாண்டுவதில்லை, என்று ஜனங்கள் சொல்கிறார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000101.wav
இரண்டு வருஷத்துக்கு முன்னால், அவர்களுக்கு இத்தனை செல்வாக்கு இல்லை அல்லவா, இல்லை.
0
data/tamil_tts_wavs/female_000102.wav
அவர்களைத் தட்டிப் பேசுவதற்கே யாரும் கிடையாது.
0
data/tamil_tts_wavs/female_000103.wav
சுந்தர சோழரின் உடம்பைப் பற்றி, எல்லாரும் சொல்லுகிறார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000104.wav
தெரியாமல் என்ன, சக்கரவர்த்திக்கிப் பக்கவாதம் வந்து, இரண்டு கால்களும், சுவாதீனம் இல்லாமல் போய் விட்டன.
0
data/tamil_tts_wavs/female_000105.wav
சேந்தன் அமுதன், தனது புதிய நண்பனைப் பிரிந்து, தளிக்குளத்தார் ஆலயத்தை நோக்கிச் சென்றான்.
0
data/tamil_tts_wavs/female_000106.wav
வந்தியத்தேவனோ, எத்தனையோ மனக்கோட்டைகளுடன், அந்தக் கோட்டை வாசலை நெருங்கினான்.
0
data/tamil_tts_wavs/female_000107.wav
அதிலிருந்து, எத்தனை எத்தனை முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்தன.
0
data/tamil_tts_wavs/female_000108.wav
அழகிய சிற்ப வேலைப்பாடுகள், அமைந்த கட்டிடங்கள்தான், ஆனாலும், பல பகுதிகள், இடிந்தும் சிதைந்தும் கிடந்தன.
0
data/tamil_tts_wavs/female_000109.wav
இந்தத் தஞ்சையின் தோற்றமோ நேர்மாறாக இருந்தது.
0
data/tamil_tts_wavs/female_000110.wav
ஆங்காங்கு, அரண்மனைத் தோட்டங்களில் வளர்ந்திருந்த விருட்சங்கள், செம்மண் பூமியின் சத்தை உண்டு, கொழுகொழுவென்று செழித்து ஓங்கியிருந்தன.
0
data/tamil_tts_wavs/female_000111.wav
குதிரைகளும், குதிரை பூட்டிய ரதங்களும், பூமி அதிரும்படி, சத்தமிட்டுக் கொண்டு சென்றன.
0
data/tamil_tts_wavs/female_000112.wav
அதோடு, ஆதித்த கரிகாலர் நேரில், வாய்மொழியாகத் தெரிவிக்கச் சொன்னதையும் சொல்ல வேண்டும்.
0
data/tamil_tts_wavs/female_000113.wav
விரைவிலேயே, அரண்மனை முகப்பை அடைந்துவிட்டான்.
0
data/tamil_tts_wavs/female_000114.wav
ஆகா, இது எத்தகைய அரண்மனை, தேவலோகத்தில் தேவேந்திரனுடைய அரண்மனையையும், உஜ்ஜயினி நகரத்து, விக்ரமாதித்யனுடைய அரண்மனையும் போல அல்லவா இருக்கிறது.
0
data/tamil_tts_wavs/female_000115.wav
ஆயினும் என்ன, இன்னும் எத்தனை காவல்கள் இப்படி உண்டோ, சின்னப் பழுவேட்டரையர் எங்கே இருக்கிறாரோ.
0
data/tamil_tts_wavs/female_000116.wav
சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று, சில ஏவலாளர், வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000117.wav
இந்த மோதிரத்தையும் அவர்தான் கொடுத்தனுப்பினார்.
0
data/tamil_tts_wavs/female_000118.wav
ஆகா இதனை நீ முன்னமே சொல்லவில்லை, கடம்பூரில் இரவு நீ தங்கியிருந்தாயா, இன்னும் யார் யார் வந்திருந்தார்கள், மழநாடு, நடுநாடு, திருமுனைப்பாடி நாடுகளிலிருந்து, பல பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000119.wav
இரு, இரு, பிறகு, சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன்.
0
data/tamil_tts_wavs/female_000120.wav
சக்கரவர்த்தி, ஓலையை வாங்கிக்கொண்டே, எங்கிருந்து வந்தாய், யாருடைய ஓலை, என்று ஈனஸ்வரத்தில் கேட்டார்.
0
data/tamil_tts_wavs/female_000121.wav
பிரபு, காஞ்சியிலிருந்து வந்தேன்.
0
data/tamil_tts_wavs/female_000122.wav
அவர் அருகில், திருக்கோவலூர் மலையமான் புதல்வியான சக்கரவர்த்தினி, வானமாதேவி வீற்றிருந்தாள்.
0
data/tamil_tts_wavs/female_000123.wav
ஆகா, இளவரசன் காஞ்சியில், பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம்.
0
data/tamil_tts_wavs/female_000124.wav
தேவி, உன் புதல்வன் செய்கையைப் பார்த்தாயா, என் பாட்டனார்.
0
data/tamil_tts_wavs/female_000125.wav
உலகமெல்லாம் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, அரண்மனையில் சேர்ந்திருந்த தங்கத்தையெல்லாம் அளித்துத், தில்லை அம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்து, பொன்னம்பலம் ஆக்கினார்.
0
data/tamil_tts_wavs/female_000126.wav
ஆனால், ஆதித்த கரிகாலன் இப்படிச் செய்திருக்கிறான், ஆகா, இந்தத் தெய்வ நிந்தனைக்கு என்ன பரிகாரம் செய்வது, என்றார்.
0
data/tamil_tts_wavs/female_000127.wav
ஆகையால், தாங்களும், தேவியும், வசிப்பதற்காகத் தங்கள் புதல்வர், பொன்மாளிகை கட்டியது முறைதானே, என்றார்.
0
data/tamil_tts_wavs/female_000128.wav
நம்முடைய ஆதித்தனுக்கு, இவனையொத்தவர்களின் உதவியிருந்தால், அவனைப்பற்றி, நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
0
data/tamil_tts_wavs/female_000129.wav
நெடுந்தூரப் பிரயாணத்தை மேற்கொள்ளுதல், இயலாத காரியம்.
0
data/tamil_tts_wavs/female_000130.wav
நாலு வார்த்தையில், சுருக்கமாக சொல்லிவிட வேண்டியது தான்.
0
data/tamil_tts_wavs/female_000131.wav
இவ்விதம், சில விநாடிப்பொழுதில், சிந்தித்து, முடிவு செய்து, சக்கரவர்த்தி, தயவு செய்யுங்கள், கருணை கூர்ந்து, என் விண்ணப்பத்தைக் கேளுங்கள்.
0
data/tamil_tts_wavs/female_000132.wav
அவருடைய முகத்தில், கோபக் கனல், ஜ்வாலை விட்டது.
0
data/tamil_tts_wavs/female_000133.wav
ஆஸ்தானப் புலவர்கள் பராக், பராக், இதோ, வருகிறார்கள், புலவர் பெருமக்கள்.
0
data/tamil_tts_wavs/female_000134.wav
அகத்தியனாரின் வழி வந்தவர்கள், தொல்காப்பியம், முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்.
0
data/tamil_tts_wavs/female_000135.wav
சிலப்பதிகாரம், முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள்.
0
data/tamil_tts_wavs/female_000136.wav
அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள், கோடானு கோடி கரையான்களுக்குப் பல்லாண்டு உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.
0
data/tamil_tts_wavs/female_000137.wav
கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க, பண்டித வத்ஸலராகிய பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க, என்று வாழ்த்தினார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000138.wav
எனினும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தமது நோயையும் மறந்து, வந்தவர்களை வரவேற்பதற்காக, எழுந்திருக்க முயன்றார்.
0
data/tamil_tts_wavs/female_000139.wav
உடனே, சின்னப் பழுவேட்டரையர் முன் வந்து, பிரபு, புலவர்கள் தங்களைத் தரிசித்து, மரியாதை செலுத்திவிட்டுப் போக வந்திருக்கிறார்களேயன்றித், தங்களுக்குச் சிரமம் கொடுக்க வரவில்லை.
0
data/tamil_tts_wavs/female_000140.wav
ஆம், ஆம், அரசர்க்கரசே, சக்கரவர்த்திப் பெருமானே, தங்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்க நாங்கள் வந்தோமில்லை, என்றார், புலவர்களின் தலைவராகிய நல்லன் சாத்தனார்.
0
data/tamil_tts_wavs/female_000141.wav
சில பாடல்கள் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்றார், தமிழன்பரான சக்கரவர்த்தி.
0
data/tamil_tts_wavs/female_000142.wav
தரையில் விரித்திருந்த, ரத்தின ஜமக்காளத்தில், எல்லோரும் உட்கார்ந்தார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000143.wav
சந்தர்ப்பம் ஒரு வேளை கிடைத்தால், சொல்லிவிட்டுப் போகலாம் என்று, எண்ணி உட்கார்ந்தான்.
0
data/tamil_tts_wavs/female_000144.wav
இதைச் சின்னப்பழுவேட்டரையர் கவனித்தார், அவருடைய மீசை துடித்தது.
0
data/tamil_tts_wavs/female_000145.wav
பிறகு, அவன் அங்கே தம்முடைய கண்காணிப்பில் இருப்பதே நலம் என்று தீர்மானித்தார்.
0
data/tamil_tts_wavs/female_000146.wav
உங்களில் எவரேனும், புதிய பாடல் ஏதேனும், கொண்டு வந்திருக்கிறீர்களா, என்று சக்கரவர்த்தி, சுந்தர சோழர் கேட்டார்.
0
data/tamil_tts_wavs/female_000147.wav
உடனே ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று, பிரபு, உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும், சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து, அடியேன் வந்தேன்.
0
data/tamil_tts_wavs/female_000148.wav
சிவநேசச் செல்வராகிய தாங்கள், பௌத்த மடாலயத்துக்கு, நிவந்தம் அளித்து, உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000149.wav
தாங்கள் உடல் நோயுற்றிருப்பது, அறிந்தது முதல், பிக்ஷுக்கள் மிக்க கவலை கொண்டு, தங்கள் உடல் நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000150.wav
போதியந் திருநிழல் புனித, நிற் பரவுதம்மேதகு, நந்தபுரி மன்னர், சுந்தரச் சோழர் வண்மையும் வனப்பும்.
0
data/tamil_tts_wavs/female_000151.wav
திண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே, அந்நாளில், பழையாறை நகருக்கு, நந்திபுரி என்னும் பெயரும், உண்டு.
0
data/tamil_tts_wavs/female_000152.wav
சில காலத்துக்கு முன்பு, சோழ மண்டலம், பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த போது, நந்திபுரி என்னும் பெயர், பிரபலமாய் விளங்கியது.
0
data/tamil_tts_wavs/female_000153.wav
புத்தர்கள், இவ்வளவு, நன்றியுடையவர்களாயிருப்பது வியப்பு, என்றார் ஒரு வீர சைவக் கவிராயர்.
0
data/tamil_tts_wavs/female_000154.wav
சக்கரவர்த்தியின் வண்மைத் திறத்தை அனுபவித்தவர், யார் தான் என்றென்றைக்கும் நன்றி செலுத்திப் பாராட்டாதிருக்க முடியும்.
0
data/tamil_tts_wavs/female_000155.wav
இந்திரனும், சூரியனும், சிவபெருமானும் கூடத் தங்களுடைய, வண்மையின் பயனை அனுபவித்திருக்கிறார்கள், என்றார் மற்றோர் புலவர் சிரோமணி.
0
data/tamil_tts_wavs/female_000156.wav
இந்திரன் ஏறக் கரி அளித்தார், பரிஏ ழளித்தார், செந்திரு மேனித் தினகரற்கு, சிவனார், மணத்துப் பைந்துகிலேறப் பல்லக்களித்தார்.
0
data/tamil_tts_wavs/female_000157.wav
பழையாறை நகர்ச் சுந்தரசோழரை, யாவரொப்பார்கள் இத் தொன்னிலத்தே, பாடலைப் புலவர் படித்து முடித்ததும், சபையிலிருந்த மற்ற புலவர்கள் எல்லாரும், சிரக்கம்ப கரக்கம்பம் செய்தும்.
0
data/tamil_tts_wavs/female_000158.wav
அதற்கு இணையான வேறொரு யானை, எங்கே கிடைக்கும், என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான்.
0
data/tamil_tts_wavs/female_000159.wav
அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர், தாமே, ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார்.
0
data/tamil_tts_wavs/female_000160.wav
நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே, என்ற பீதி, இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து, வஜ்ராயுதத்தைவிட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்.
0
data/tamil_tts_wavs/female_000161.wav
பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம், ஒளி தரும், சூரிய பகவானுக்கும், ராகு என்னும் அரக்கனுக்கும், பெரும் போர் மூண்டது.
0
data/tamil_tts_wavs/female_000162.wav
ஆனால், சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும், ராகுவின் காலகோடி விஷத்தினால், தாக்கப்பட்டு இறந்தன.
0
data/tamil_tts_wavs/female_000163.wav
சூரியன், தன் பிரயாணத்தை, எப்படித் தொடங்குவது, என்று திகைத்து நிற்கையில், அவனுடைய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தரசோழர், ஏழு புதிய குதிரைகளுடன், சூரிய பகவானை அணுகி.
0
data/tamil_tts_wavs/female_000164.wav
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி, கலீர், என்று சிரித்தார்.
0
data/tamil_tts_wavs/female_000165.wav
கோட்டைத் தளபதி, சின்னப் பழுவேட்டரையர், இத்தனை நேரமும் நின்று கொண்டேயிருந்தவர், சக்கரவர்த்தியைக் கைக் கூப்பி வணங்கி, பிரபு, நான் பெரிய தவறு செய்து விட்டேன், பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும் என்றார்.
0
data/tamil_tts_wavs/female_000166.wav
ஆ, தளபதியா பேசுகிறது, நீர் என்ன பிழை செய்தீர், எதற்காக மன்னிப்பு.
0
data/tamil_tts_wavs/female_000167.wav
ஒரு வேளை, இந்திரனுக்கு நான் அளித்த வெள்ளை யானையையும், சூரியனுக்கு அளித்த குதிரைகளையும், திரும்பப் பறித்துக் கொண்டு வந்து விட்டீரோ.
0
data/tamil_tts_wavs/female_000168.wav
இத்தனை காலமும், நான் இவர்களைப் போன்ற புலவர் சிகாமணிகளைத் தங்களிடம், வரவொட்டாமல், தடை செய்து வைத்திருந்தேன்.
0
data/tamil_tts_wavs/female_000169.wav
ஆனால், இப்போது, அது பிழை என்று உணர்கிறேன்.
0
data/tamil_tts_wavs/female_000170.wav
இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாய் விட்டுச் சிரித்தீர்கள்.
0
data/tamil_tts_wavs/female_000171.wav
அந்தக் குதூகலச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு, உடைய பிராட்டியின், பட்டத்து அரசியை உடைய பிராட்டி, என்று குறிப்பிடுவது, அக்காலத்து மரபு முகமும், தாதியரின் முகங்களும் மலர்ந்தன.
0
data/tamil_tts_wavs/female_000172.wav
நானும் மகிழ்ந்தேன்.
0
data/tamil_tts_wavs/female_000173.wav
நன்று சொன்னீர், தளபதி, இப்போதாவது இதை நீர் உணர்ந்தீர், அல்லவா.
0
data/tamil_tts_wavs/female_000174.wav
புலவர்கள் அத்தனைபேரும் அவன் பக்கமாகப் பார்த்து, நன்று, நன்று, என்று உற்சாகத்துடன், ஆர்ப்பரித்தார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000175.wav
ஏற்கனவே, அவருடைய சிரஸின் பேரில், தூக்க முடியாத கனமுடைய, சோழ சாம்ராஜ்ய மணிமகுடம், உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருக்கிறது.
0
data/tamil_tts_wavs/female_000176.wav
ஆசிரியரின் கற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை, என்று இவ்விதம், ஏதாவது ஒரு வகை இலக்கணம் கூறி, ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
0
data/tamil_tts_wavs/female_000177.wav
புலவர் தலைவரான, நல்லன் சாத்தனார், பிரபு, அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி, என்று தயங்கினார்.
0
data/tamil_tts_wavs/female_000178.wav
இன்னும் சிலர், தங்களுடைய மனோநிலை இன்னதென்று, தங்களுக்கே தெரியாமல், கல்லாய்ச் சமைந்திருந்தார்கள், சுந்தர சோழர் கூறினார்.
0
data/tamil_tts_wavs/female_000179.wav
நான் இவருக்கு அதைக் கொடுத்தேன், அவருக்கு இதை அளித்தேன், என்றெல்லாம் பாடினார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000180.wav
அது, நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
0
data/tamil_tts_wavs/female_000181.wav
விந்தை, விந்தை, என்றும், அற்புதம், அற்புதம், என்றும் புலவர்கள் கூறி மகிழ்ந்தார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000182.wav
குந்தவை, என்ற பெயரைக் கேட்டதுமே, வந்தியத்தேவனுக்கு மெய்சிலிர்த்தது.
0
data/tamil_tts_wavs/female_000183.wav
சோழகுலத்தில் பிறந்த அந்த இணையில்லாப் பெண்ணரசியின், எழிலையும், புலமையையும், அறிவுத்திறனையும் பற்றி, அவன் எவ்வளவோ கேள்விப்பட்டதுண்டு.
0
data/tamil_tts_wavs/female_000184.wav
அத்தகைய அதிசய அரசகுமாரியைப் பெற்றெடுத்த பாக்கியசாலியான தந்தை இவர், தாய், அதோ பக்கத்தில் அமர்ந்திருக்கும் மூதாட்டி.
0
data/tamil_tts_wavs/female_000185.wav
ஏனெனில், குந்தவைப் பிராட்டிக்கு, அவன் கொண்டு வந்திருந்த ஓலை, அச் சுருளுக்குள் இருந்தது.
0
data/tamil_tts_wavs/female_000186.wav
தடவி பார்த்த கை, திகைப்படைந்து, செயலிழந்து நின்றது அவனுடைய உள்ளம், திக்பிரமை கொண்டது.
0
data/tamil_tts_wavs/female_000187.wav
ஒருவேளை, பழையாறை திருமேற்றளி ஆலயத்தின், ஈசான்ய பட்டாச்சாரியாரிடம் சொல்லியிருக்கலாம்.
0
data/tamil_tts_wavs/female_000188.wav
பிரபு, தாங்களே பாடியிருந்தால் என்ன, பாடல் அற்புதமான பாடல்தான், சந்தேகமே யில்லை.
0
data/tamil_tts_wavs/female_000189.wav
ஆயினும், இச்சமயம் அதே பாடலை நான் பாடியிருந்தால், இன்னொரு கொடையையும் சேர்த்திருப்பேன்.
0
data/tamil_tts_wavs/female_000190.wav
அந்த எருமைக் கடாவின் பேரில் ஏறிக்கொண்டு, தான் யமன், இப்போது ஜாம் ஜாம் என்று என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான்.
0
data/tamil_tts_wavs/female_000191.wav
நமது தஞ்சைக் கோட்டைத் தளபதி, சின்னப் பழுவேட்டரையரால் கூட, யமதர்ம ராஜனையும், அவனுடைய எருமைக்கடா வாகனத்தையும், தடுத்து நிறுத்திவிட முடியாது அல்லவா.
0
data/tamil_tts_wavs/female_000192.wav
அங்கிருந்த புலவர்கள் பலர், விம்மி அழத் தொடங்கிவிட்டார்கள்.
0
data/tamil_tts_wavs/female_000193.wav
புலவர்களே, நமனை அஞ்சோம் என்று தமிழகத்தின், தவப்புதல்வர் ஒருவர் பாடினார் அல்லவா, என்றார் சக்கரவர்த்தி.
0
data/tamil_tts_wavs/female_000194.wav
ஒரு புலவர் எழுந்து, அப்பாடலைப் பாடினார், நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், நடலையல்லோம், எமாப்போம் பிணியறியோம்.
0
data/tamil_tts_wavs/female_000195.wav
சக்கரவர்த்தி இந்த இடத்தில் குறுக்கிட்டு, ஆஹா, இறைவனைப் பிரத்யட்சமாகத் தரிசித்த மகானைத் தவிர, வேறு யாரால் இவ்வளவு துணிச்சலாகப் பாட முடியும்.
0
data/tamil_tts_wavs/female_000196.wav
புலவர் தலைவர் எழுந்து கூறினார், அரசே, தங்களுடைய முன்னோர்களில், மிகப் பிரபலமானவர் கரிகால் பெருவளத்தார்.
0
data/tamil_tts_wavs/female_000197.wav
பூம்புகாரின், செல்வப் பெருக்கையும், வளத்தையும், வர்ணிக்கும் சங்கப் புலவர் ஒருவர், இன்னின்ன நாட்டிலிருந்து, இன்னின்ன பொருள்கள் வந்தன என்பதைத், தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
0
data/tamil_tts_wavs/female_000198.wav
அதை நான் அறிவதற்காகத்தானே, இப்புலவர்களை அழைத்து வந்தீர், ஆம், அரசே, என்று கோட்டைத் தளபதி கூறியது, சிறிது ஈனஸ்வரத்தில் கேட்டது.
0
data/tamil_tts_wavs/female_000199.wav