text
stringlengths 11
513
|
---|
1814 ல் பிரிட்டிஷாருக்கும் கூர்க்காக்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றன. இறுதியில் நேபாளப் படையின் திறமைமிக்க படைத்தளபதியான அமர் சிங் தாபா சரணடைந்தார். 1816 மார்ச்சில் , சகௌலி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. தராய் பகுதியில் தாங்கள் கோரிய உரிமையை கூர்க்காக்கள் விட்டுக் கொடுத்தனர். மேலும் , குமான் , கார்வால் பகுதிகளையும் பிரிட்டிஷாருக்கு அளித்தனர். இதனால் , சிம்லாவைச் சுற்றியிருந்த பகுதிகள் பிரிட்டிஷாருக்கு கிடைத்தன. அவர்களது வடமேற்கு எல்லை இமாலயப் பகுதிகளைத் தொட்டது. சிக்கிமிலிருந்து வெளியேறிய |
கூர்க்காக்கள் , காத்மண்டுவில் ஒரு பிரிட்டிஷ் தூதரை வைத்திருக்கவும் ஆங்கிலேயரைத்தவிர வேறு எந்த உறுதியளித்தனர். மலைவாழிடங்களான சிம்லா , அயல்நாட்டவரையும் பணியில் ஒப்புக்கொண்டனர். அமர்த்துவதில்லை என்றும் அவர்கள் முசூரி , நைனிடால் , ராணிகட் போன்றவை பிரிட்டிஷார் வசமாகியது. அவற்றை சுற்றுலாத் தலங்களாகவும் நலவாழ்வு ஓய்விடங்களாகவும் பிரிட்டிஷார் மாற்றியமைத்தனர். கூர்க்காப் போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்சுக்கு மார்குயிஸ் பட்டம் வழங்கப்பட்டது. பிண்டாரிகளை ஒடுக்குதல் பிண்டாரிகளின் தோற்றம் பற்றி தெளிவான தகவல்கள் |
இல்லை. மராட்டியப் பகுதியில் படையெடுத்தபோதுதான் பிண்டாரி குறித்த தகவல் கிடைக்கிறது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பையோ அல்லது சமயத்தையோ சார்ந்தவர்களல்லர். ஊதியம் ஏதுமின்றி அவர்கள் ராணுவத்திலும் பணியாற்றுவதுண்டு. அதற்கு ஈடாக அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். முதலாம் பாஜிராவ் காலத்தில் மராத்திய ராணுவத்தில் குதிரை வீரர்களாக அவர்கள் பணிபுரிந்தனர். ஆனால் , அவர்கள் ஒருபோதும் ஆங்கிலேயருக்கு உதவியதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ராஜபுதனப் பகுதிகள் , மத்திய மாகாணங்கள் ஆகியன பிண்டாரிகளின் முக்கிய |
இருப்பிடங்களாகும். கொள்ளையடிப்பதே அவர்களது அடிப்படைத் தொழிலாகும். பிண்டாரிகளின் தலைவர்கள் இந்து மற்றும் முஸ்லிம் என்ற இரு இனத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் , வாசில் முகமது , சிட்டு , கரிம் கான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இவர்களது தலைமையை ஏற்று செயல்பட்டனர். 1812 ல் பிண்டாரிகள் மீர்சாபூர் , ஷாஹாபாத் மாவட்டங்களைத் தாக்கி கொள்ளையடித்தனர். 1815 ல் நிசாமின் ஆட்சிப் பகுதிகளை சூரையாடினர். 1816 ல் வடசர்க்கார் மாவட்டங்களில் புகுந்து கொள்ளயடித்தனர். எனவே , ஹேஸ்டிங்ஸ் பிரபு |
பிண்டாரிகளை ஒடுக்குவது என உறுதிபூண்டார். இதற்கென , 1,13,000 வீரர்கள் , 300 துப்பாக்கிகள் கொண்ட ஒரு பெரும்படையைத் திரட்டினார். நாற்புறமிருந்தும் இப்படை பிண்டாரிகளைத் தாக்கியது. வடக்கில் இப்படைக்கு ஹேஸ்டிங்சே தலைமை வகித்தார். தெற்கில் சர் தாமஸ் வாஸ்லாப் படை நடத்தினார். 1818 ஆம் ஆண்டு வாக்கில் பிண்டாரிகள் முழுதும் ஒடுக்கப்பட்டனர். அவர்களது கூட்டங்கள் கலைக்கப்பட்டன. உத்திரப்பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் கரீம்கானுக்கு ஒரு சிறிய பண்ணை கொடுக்கப்பட்டது. வாசில் முகமது சிந்தியாவிடம் தஞ்சமடைந்தார். ஆனால் , சிந்தியா |
அவரை பின்னர் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். வாசில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சித்து பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து காடுகளுக்கு தப்பியோடினார். அங்கு புலிக்கு இரையானார். 1824 ம் ஆண்டு வாக்கில் பிண்டாரிகளின் தொல்லை முழுவதுமாக முடிவுக்கு வந்தது. மராட்டியக் கூட்டிணைவின் வீழ்ச்சி மராட்டியக் கூட்டிணைவை முறியடித்தது ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் மூன்றாவது முக்கிய சாதனையாகும். மூன்றாம் பானிப்பட்டுப் போர் ( 1761 ) , அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஆங்கிலேய - மராட்டியப் போர்களினால் மராட்டியர்கள் வலிமை குன்றியிருந்தனர். |
ஆனால் , முற்றிலும் அழிக்கப்படவில்லை. தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டிருந்த அவர்கள் , வலிமையும் திறமையும் குன்றிய வாரிசுகளால் மேலும் பலம் இழந்தனர். மராட்டியத் தலைவர்களிலேயே சக்திமிக்கவர்களான போன்ஸ்லே , கெயிக்வார் , சிந்தியா , ஹோல்கர் மற்றும் பேஷ்வா ஆகியோருக்கிடையே ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் பொறாமையுடன் பூசல்கள் நிறைந்து காணப்பட்டனர். பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மராட்டியக் கூட்டிணைவின் தலைவராக விரும்பினார். அதே சமயம் , பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுதலை பெற முயற்சித்தார். அவரது முதலமைச்சரான |
திரிம்பக்ஜியும் இதனை ஊக்குவித்தார். வணிகக் குழுவின் ஆலோசனையின்படி , கெயிக்வார் தனது பிரதம அமைச்சர் கங்காதர் சாஸ்திரியை பேஷ்வாவுடன் சமரசம் பேச அனுப்பிவைத்தார். திரும்பும் வழியில் கங்காதர் சாஸ்திரி 1815 ஜுலையில் நாசிக்கில் திரிம்பக்ஜியின் ஆட்களால் கொல்லப்பட்டார். இது மராட்டியரிடையே மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரையும் வருத்தப்பட வைத்தது. திரிம்பக்ஜியை ஒப்படைக்குமாறு பேஷ்வாவை பிரிட்டிஷ் அரசு கேட்டுக் கொண்டது. பேஷ்வாவும் இதற்கு உடன்பட்டார். பிரிட்டிஷார் திரிம்பக்ஜியை தானா சிறையில் அடைத்தனர். ஆனால் , அவர் |
சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் , 1817 ஜூன் 3 ல் பிரிட்டிஷ் தூதுவர் எல்பின்ஸ்டன் பேஷ்வாவை வற்புறுத்தி பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு செய்தார். மராட்டியர்களின் தலைவராகும் ஆசையை பேஷ்வா துறக்கவேண்டியதாயிற்று. மூன்றாம் மராட்டியப் போர் ( 1817 – 1818 ) சிறிது நாட்களிலேயே இந்த உடன்படிக்கையை பேஷ்வா ரத்து செய்துவிட்டு 1817 நவம்பர் 5 ல் பிரிட்டிஷ் தூதரகத்தின்மீது தாக்குதல் தொடுத்தார். ஆனால் , கிர்கே என்னுமிடத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதேபோல் , போன்ஸ்லே தலைவர் அப்பாசாகிப் தாம் 1817 மே 17 ல் |
கையெழுத்திட்ட நாக்பூர் உடன்படிக்கையை ஏற்க மறுத்தார். இவ்வுடன்படிக்கைப்படி நாக்பூர் வணிகக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்பாசாகிப் 1817 நவம்பரில் பிரிட்டிஷாருடன் நடைபெற்ற சிதாபல்தி போரில் முறியடிக்கப்பட்டார். பேஷ்வா இச்சமயத்தில் ஹோல்கரின் உதவியை நாடினார். ஆனால் , பிரிட்டிஷார் 1817 டிசம்பர் 21 ல் டாவில் ஹோல்கரை முறியடித்தனர். இவ்வாறு , 1817 டிசம்பரில் மிகப்பெரும் மராட்டியக் கூட்டிணைவு என்ற கனவு தவிடுபொடியாகியது. 1818 ல் சிந்தியா பிரிட்டிஷாருடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேரிட்டது. இதன்படி , |
பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்த போபால் நவாப்புக்கு ஆஜ்மீரை விட்டுக் கொடுத்தார். பரோடாவின் கெயிக்வார் துணைப்படை ஒப்பந்தத்தை ஏற்று , அகமதாபாத்தின் ஒரு பகுதியை பிரிட்டிஷாருக்கு வழங்கினார். பிண்டாரிகளின் ஒடுக்குதலுக்குப் பிறகு இராஜபுத்திர அரசுகள் சுதந்திரமாக செயல்பட்டன. பல்வேறு அரசியல் சாதனைகள் 1818 ல் நடத்தப்பட்டதால் , பிரிட்டிஷாருக்கு அந்த ஆண்டு முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க நினைத்த மராட்டியரின் திட்டம் முற்றிலும் தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் தலைமைக்கு தடையாக இருந்த |
மராட்டியர்கள் வீழ்த்தப்பட்டனர். மராட்டியரின் வீழ்ச்சிக்கான காரணங்கள் ஆங்கிலேய மராட்டியப் போர்களில் மராட்டியர் தோல்வி அடைந்ததற்கு காரணங்கள் கூறலாம். அவற்றில் முக்கியமானவை : திறமையான தலைமை இல்லாதது - படைவலிமை இல்லாதது அவர்களுக்கிடையே நிலவிய உட்பூசல்கள் மற்றும் ஒற்றுமையின்மை தாங்கள் வென்ற பகுதிகளின் ஆதரவைப் பெறத் தவறியது. இந்தியாவில் ஆட்சிசெய்த மற்ற அரசர்கள் , நவாபுகளுடன் நட்புடன் இல்லை. பிரிட்டிஷார் அரசியல் மற்றும் ராஜதந்திரத்தை சரியாக மதிப்பிடத் தவறியது. ஹேஸ்டிங்சின் சீர்திருத்தங்கள் பல ஹேஸ்டிங்சின் |
பதவிக்காலத்தில் ஆட்சிப் பரப்பின் எல்லை பெருகியது மட்டுமல்லாமல் ஆட்சித் துறையிலும் முன்னேற்றம் காணப்பட்டது. சென்னை மாகாணத்தில் சர்தாமஸ் மன்றோ அறிமுகப்படுத்திய ரயத்துவாரி முறையை அவர் அங்கீகரித்தார். நீதித்துறையைப் பொறுத்தவரை காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பு சீரமைக்கப்பட்டது. வங்காளத்திலிருந்த காவல் அமைப்பு பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில் இந்திய முன்சீப்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. வருவாய் மற்றும் நீதித் துறைக்கு இடையே நிலவிய பகிர்வு கட்டாயமாக பின்பற்றப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் |
நீதிபதியாகவும் கடமையாற்றினார். சமயப் பரப்பாளர்களாலும் , பிறராலும் தாய்மொழிக் கல்விக் கூடங்கள் அமைக்கப்படுவதை ஹேஸ்டிங்ஸ் பிரபு ஊக்குவித்தார். ஆங்கிலம் மற்றும் மேலை நாட்டு அறிவியல் கல்விக்காக கல்கத்தாவில் பொது மக்களால் இந்துக் கல்லூரி 1817 ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் புரவலராக ஹேஸ்டிங்ஸ் பிரபு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை சுதந்திரத்தை அவர் ஊக்குவித்தார். 1799 ல் கொண்டுவரப்பட்ட தணிக்கை முறையை அவர் ரத்துசெய்தார். 1818 ல் சீராம்பூர் சமயப்பரப்பாளரான மார்ஷ்மேன் என்பவரால் ‘ சமாச்சார் தர்பன் ’ |
என்ற வங்காளமொழி வார இதழ் தோற்றுவிக்கப்பட்டது. மதிப்பீடு ஹேஸ்டிங்ஸ் பிரபு சிறந்த படைவீரராகவும் திறமைமிக்க ஆட்சியாளராகவும் திகழ்ந்தார். கல்வி , பத்திரிக்கை போன்ற துறைகளில் அவரது தாராளக்கொள்கை பாராட்டத்தக்கது. அவர் , பிண்டாரிகளை ஒடுக்கினார். மராட்டியரை வீழ்த்தினார் , கூர்க்காக்களின் கொட்டத்தை நசுக்கினார். Page 38 of 284 அவர் கைப்பற்றிய நிலப்பகுதிகளால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி மேலும் வலுவடைந்தது. பம்பாய் மாகாணத்தை உருவாக்கியவர் என்று அவர் போற்றப்பட்டார். வெல்லெஸ்லி பெற்ற வெற்றிகளை ஒன்றிணைத்து |
முழுமைப்படுத்தியவர் ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றால் மிகையாகாது. ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்குப்பின் ஆம்ஹர்ஸ்ட் பிரபு ( 1823-28 ) ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். அப்போது முதல் ஆங்கிலேய பர்மியப் போர் நடைபெற்றது. மத்திய இந்தியாவில் பிண்டாரிகளின் தொல்லை அவர்களை ஒடுக்க ஹேஸ்டிங்ஸ் மேற்கொண்ட முயற்சிகள். மராட்டியக் கூட்டிணைவின் பலவீனங்கள் பிரிட்டிஷாரின் வலிமை மற்றும் வெற்றி ஹேஸ்டிங்ஸ் பிரபு கொண்டுவந்த சீர்திருத்தங்கள். IV. சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது அ. ஹேஸ்டிங்ஸ் பிரபு தலையிடாக் கொள்கையை பின்பற்றினார். ஆ. |
1815 ல் சகௌலி உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது. பிண்டாரிகள் சீக்கிய இனத்தை சேர்ந்தவர்கள். கல்கத்தா இந்து கல்லூரியை ஹேஸ்டிங்ஸ் பிரபு ஆதரித்தார். V. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. 1. கூர்க்கா போருக்குப்பிறகு , காத்மண்டுவில் பிரிட்டிஷ் தூதரை நியமிக்க கூர்க்காக்கள் சம்மதித்தனர். 2. திரியம்பக்ஜி இரண்டாம் பாஜிராவின் முதலமைச்சராவார். VI. சிறு குறிப்பு எழுதுக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) 1. கூர்க்கா போர் 2. ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் சீர்திருத்தங்கள். VII. குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) 1. பிண்டாரிகளை |
ஒழிக்க ஹேஸ்டிங்ஸ் பிரபு மேற்கொண்ட நடவடிக்கைகளை - விவாதிக்க. 2. மராட்டிய கூட்டிணைவின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் குறிப்பிடுக. VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் ) 1. ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் ஆட்சியை மதிப்பிடுக. 2. மூன்றாம் மராட்டியப் போருக்கான காரணங்கள் மற்றும் விளைவுகளை ஆய்க. பாடம் - 5 வில்லியம் பெண்டிங் பிரபு ( 1828-1835 ) கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தில் மாணவர் அறிந்துகொள்வது : 1. சீர்திருத்தங்கள் குறித்து பெண்டிங்கின் அடிப்படை கருத்து. 2. இந்திய அரசுகள் மீதான அவரது கொள்கை 3. இரஞ்சித் சிங்குடன் அவர் |
கொண்டிருந்த நல்லுறவு 4. 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் , அதன் சிறப்பு. 5. பெண்டிங்கின் ஆட்சித்துறை , நீதித்துறை சீர்திருத்தங்கள். 6. சமூக சீர்திருத்தங்கள் - சதி ஒழிப்பு , தக்கர்களை ஒடுக்குதல் , பெண்சிசுக் கொலை தடுப்பு. 7. கல்வித்துறை சீர்திருத்தங்கள் 1828 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பிரபு தலைமை ஆளுநராக பதவி ஏற்றார். 1774 ல் பிறந்த அவர் ஒரு போர்வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். தனது 22 வது வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். 1803 ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது , சர் தாமஸ் மன்றோ |
செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார். 1806 ஆம் ஆண்டு வேலூர்க்கலகம் காரணமாக அவர் திருப்பியழைக்கப்பட்டார். இருப்பினும் , மீண்டும் அவரை தலைமை ஆளுநர் பதவிக்கு நியமனம் செய்தது அவரது புகழுக்கு தக்க சான்றாகும். தலைமை ஆளுநராக , பெண்டிங் ஒரு முற்போக்கு சீர்திருத்த சகாப்தத்தையே தொடங்கி வைத்தார் எனலாம். இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவில் ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை. இந்திய அரசுகள் மீதான கொள்கை வில்லியம் |
பெண்டிங் இந்திய அரசுகளைப் பொறுத்தவரை , ஆக்ரமிப்பு அற்ற , தலையிடாக் கொள்கையையே பின்பற்றினார். அப்படி அவர் இந்திய அரசுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டிருப்பாரானால் , அது அங்கு நிலவிய முறைகேடான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே தவிர , எந்த நிலப் பகுதியையும் இணைக்கும் எண்ணத்தில் அல்ல. வில்லியம் பெண்டிங் பிரபு மைசூரில் , வெல்லெஸ்லியால் இந்து அரசர் மூன்றாம் கிருஷ்ணராஜா பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார். தொடக்கத்தில் மைசூர் அரசர் அவரது திறமையான அமைச்சர் பூரணய்யாவின் வழிகாட்டுதலுடன் நன்கு ஆட்சி புரிந்தார். ஆனால் , |
முழு ஆட்சிப் பொறுப்பையும் அவர் மேற்கொண்ட போதுதான் அவரது திறமையின்மை வெளிப்பட்டது. அந்த அரசில் வாழ்ந்த குடியானவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தனர். அவற்றுக்கான தீர்வுகள் காணப்படவில்லை. எனவே , 1830 ல் குடியானவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். சென்னை ராணுவத்தின் துணை கொண்டு அக்கலகம் ஒடுக்கப்பட்டது. பின்னர் , பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மைசூரின் ஆட்சிப் பொறுப்பை தாமே மேற்கொண்டனர். மைசூரில் ஒரு ஆணையாளர் நியமிக்கப்பட்டார். அரசருக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டது. மைசூர் சர் மார்க் கப்பன் என்பவர் 1834 முதல் 1861 வரை |
ஆணையாளராக இருந்தபோது மைசூர் மக்கள் பல்வேறு பயன்களைப் பெற்றனர். பெங்களூரிலுள்ள கப்பன் பூங்கா இன்றும் மைசூருக்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவூட்டுவதாக உள்ளது. கச்சார் , ஜெயிந்தியா வடகிழக்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கச்சார் அரசு முதல் பர்மியப்போரின் இறுதியில் செய்து கொள்ளப்பட்ட யாண்டபூ உடன்படிக்கைப்படி பிரிட்டிஷ் பாதுகாப்பில் விடப்பட்டது. இந்த சிறிய நாட்டின் அரசர் 1832 ல் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வாரிசுகள் இல்லாமையால் , அந்த நாட்டு மக்களின் விருப்பப்படி பெண்டிங் கச்சார் ஆட்சியை இணைத்துக் கொண்டார். முதல் |
பர்மியர் போரின் முடிவில் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட மற்றொரு நாடு ஜெயிந்தியா. இச்சிறிய நாட்டின் ஆட்சியாளர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். காளி தேவதைக்கு பலிகொடுக்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷார் சிலரை இவர் கடத்தினார். இத்தகைய கொடுஞ்செயலை தவிர்க்கும் பொருட்டு தலைமை ஆளுநர் பெண்டிங் இந்நாட்டையும் இணைத்துக்கொண்டார். குடகை ஆட்சிப்புரிந்த அரசர் வீரராஜா கொடுங்கோலராகத் திகழ்ந்தார். மக்களை காட்டு மிராண்டித்தனமாக நடத்தியதுடன் , தனது உறவினர்களில் ஆண்பாலர் அனைவரையும் கொன்றார். வில்லியம் பெண்டிங் கர்னல் |
லிண்ட்சே என்பவரை குடகு தலைநகரான மெர்க்காராவுக்கு அனுப்பினார். 1834 ல் அரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு -கு இணைத்துக் கொள்ளப்பட்டது. இரஞ்சித் சிங்குடன் உறவு இந்தியாவுக்கு ரஷ்ய படையெடுப்பு என்ற அச்சம் இருப்பதை முதலில் ஊகம் செய்தவர் வில்லியம் பெண்டிங் பிரபு. எனவே , பஞ்சாப் அரசர் மகாராஜா இரஞ்சித் சிங் மற்றும் சிந்துப் பகுதியின் அமீர்கள் ஆகியோருடன் நட்புறவு மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார். இந்தியாவிற்கும் எந்தவொரு படையெடுப்பாளருக்கும் நடுவே ஆப்கானிஸ்தான் இடைப்படு நாடாக இருக்க வேண்டும் |
என்றும் பெண்டிங் விரும்பினார். பஞ்சாபின் தலைநகர் லாகூர். தலைமை ஆளுநரின் இருப்பிடம் கல்கத்தா. நல்லதொரு தொடக்கமாக இவ்விருவருக்கும் இடையே பரிசுப் பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து 1831 அக்டோபர் 25 ல் பெண்டிங் பிரபுவும் இரஞ்சித் சிங்கும் சட்லஜ் நதிக்கரையிலிருந்த ரூபார் என்ற இடத்தில் முதன் முதலாக சந்தித்தனர். மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சந்திப்பின்போது பெண்டிங்க் இரங்சித் சிங்குடன் தனது நட்பை உறுதி செய்து கொண்டார். இருவருக்குமிடையே சிந்து நதி படகுப் போக்குவரத்து உடன்படிக்கை |
செய்து கொள்ளப்பட்டது. இதன்படி , சட்லஜ் நதி போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. மேலும் , வணிகத் தொடர்புடைய உடன்படிக்கை ஒன்றுக்கும் இரஞ்சித் சிங்குடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சிந்துவின் அமீர்களிடமும் இத்தகைய நட்பு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டத்தில் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு வணிகக் குழுவின் பட்டயம் புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே , 1793 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வணிகக் |
குழுவின் ஆயுட்காலத்தை மேலும் இருபது ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்த இச்சட்டம் ஆட்சியில் சில சிறு மாறுதல்களையும் செய்தது. 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் , இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக வணிகக் குழு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கவேண்டும் என்று விதித்தது. மேலும் இருபது ஆண்டுகளுக்கு வணிகக் குழுவின் பட்டயம் புதுப்பிக்கப்பட்டது. 1833 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பட்டயச் சட்டம் முக்கியத்துவம் பெற்றதாகும். கிழக்கிந்திய வணிகக் குழுவின் அதிகார வரம்பெல்லையை இது வரையறை செய்தது. இச்சட்டத்தின் விதிகள் பெந்தாம் என்பவரின் |
தாராள மற்றும் பயன்பாட்டு தத்துவங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இதன் முக்கிய பிரிவுகளாவன 1. ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழு இந்தியாவில் தனது வாணிகத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. இனி , அது பிரிட்டிஷ் அரசரின் அரசியல் முகவராக மட்டும் செயல்படும் என்று தெளிவாக்கப்பட்டது. 2. வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் இனிமேல் இந்தியாவின் தலைமை ஆளுநர் என்று அழைக்கப்படுவார். இதனால் , இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் என்று கூட கூறலாம். 3. தலைமை ஆளுநரின் ஆலோசனைக் குழுவில் சட்ட உறுப்பினர் ஒருவர் |
நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் டி.பி. மெக்காலே என்பவராவார். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் மேதகு மன்னரின் குடிமக்களாக எவரும் , தங்களது மயம் , பிறப்பிடம் , குடிவகை அல்லது நிறம் காரணமாக எவ்வித பதவி அல்லது பணியில் இருப்பதை தடை செய்யக்கூடாது என இச்சட்டம் தெளிவாக வரையறுத்துக் கூறியது. பொது ஆட்சிப் பணிகள் இந்தியமயமாக்கப்படுவதற்கு இச்சட்டம்தான் அடிகோலியது எனலாம். இருபது ஆண்டுகளுக்குப்பிறகு 1853 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதுவே பட்டயச் சட்டங்கள் வரிசையில் இறுதியானதாகும். |
வில்லியம் பெண்டிங் பிரபுவின் சீர்திருத்தங்கள் பட்டயச் சட்டம் இந்திய வரலாற்றில் வில்லியம் பெண்டிங் பிரபுவின் வருகை பலவிதத்தில் ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்தது எனலாம். அவரது ஆட்சி ஏழு ஆண்டுகளே நீடித்தது என்ற போதிலும் , பல்வேறு நிலையான சீர்திருத்தங்கள் அப்போது மேற்கொள்ளப்பட்டன. இவற்றை நிதித்துறை , ஆட்சித்துறை , சமூகம் மற்றும் கல்வி என்ற தலைப்புக்களாக வரையறுக்கலாம். நிதித்துறை சீர்திருத்தங்கள் 1828 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் பதவியேற்றபோது இந்தியாவின் நிதி நிலைமை திருப்திகரமாக இல்லை. கருவூலம் காலியாக |
இருந்தது. அரசின் நிதிநிலை அறிக்கை ஒரு மில்லியன் ரூபாய் பற்றாக்குறையுடன் காணப்பட்டது. எனவே உடனடியாக நிதிநிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் தலைமை ஆளுநருக்கு இருந்தது. அதற்காக பெண்டிங் பல நடவடிக்கைகளை எடுத்தார். அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவந்த ஊதியம் மற்றும் படிகள் குறைக்கப்பட்டதோடு அதிகப்படியான பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இராணுவத்துறையில் நடைமுறையிலிருந்த பணிக்காலத்தின்போது வழங்கப்பட்ட இரட்டைப்படி ( பேட்டா ) முறையை ஒழித்தார். இத்தகைய சீர்திருத்தங்களினால் , அவர் திரும்பிச் செல்லும்போது , |
கருவூலத்தில் 1.5 மில்லியன் ரூபாய் உபரியாக இருந்தது. ஆட்சித் துறை சீர்திருத்தங்கள் பெண்டிங் அறிமுகப்படுத்திய ஆட்சித் துறை சீர்திருத்தங்கள் அவரது அரசியல் முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பறை சாற்றியது. நீதித்துறையில் , காரன்வாலிஸ் கொண்டு வந்த மாகாண மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் அகற்றப்பட்டன. பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் இருந்தமைக்கு இந்த நீதிமன்றங்களே காரணமாக இருந்தன. அரசின் செலவு குறைந்தமையால் இயக்குநர்கள் இந்த நடவடிக்கையை உடனடியாக ஒப்புக்கொண்டனர். கீழ்மட்ட நீதிமன்றங்களில் அந்தந்தப் பகுதியின் மொழிகளிலேயே |
வழக்குகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது பெண்டிங்கின் மற்றொரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். மேலும் உயர்மட்ட நீதிமன்றங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருவாய்த் துறையிலும் பெண்டிங் தனது முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றார். ஆர்.எம்.பெர்ட் தலைமையில் வடமேற்கு மாகாணத்தில் வருவாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. நில உடமையாளர்கள் அல்லது நிலத்தை பயிரிடுபவர்களிடம் 30 ஆண்டுகால ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. சமுக சீர்திருத்தங்கள் வில்லியம் பெண்டிங் கொண்டு வந்த சமூக சீர்திருத்தங்கள் பிரிட்டிஷ் |
இந்திய வரலாற்றில் அவரது பெயரை நிலைபெறச் செய்தன. சதிமுறை ஒழிப்பு , தக்கர்களை ஒடுக்குதல் , பெண் சிசுக்கொலை தடுப்பு போன்றவை இவற்றில் அடங்கும். சதிமுறை ஒழிப்பு கணவரின் சிதையிலேயே விதவையைத் தள்ளி கொன்றுவிடும் பண்டைய ‘ சதி ’ என்ற வழக்கம் , இந்தியாவில் பல காலமாக பின்பற்றப்பட்டு வந்தது. மனிதாபிமானமற்ற இச்செயல் வட இந்தியாவில் , குறிப்பாக வங்காளத்தில் பரவலாக காணப்பட்டது. வங்காளத்தில் ஒரேயாண்டில் அத்தகைய 800 நிகழ்வுகள் நடைபெற்றன என்ற செய்தி கேட்ட பெண்டிங் அதிர்ச்சியடைந்தார். இயற்கை நியதிக்கு மாறான இச்செயலை குற்றம் |
என்று கருதிய பெண்டிங் அவ்வழக்கத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார். 1829 டிசம்பர் 4 ஆம் நாள் ‘ விதிமுறை 17 ’ என்ற சட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ‘ சதி ' என்ற உடன்கட்டையேறும் வழக்கம் சட்டப்படி ஒழிக்கப்பட்டது. சதிமுறையைப் பின்பற்றுவோர் சட்டப்படி நீதிமன்றத் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் என இச்சட்டம் கூறியது. 1830 ஆண்டு இச்சட்டம் சென்னை , பம்பாய் மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தக்கர்களை ஒடுக்குதல் பெண் சிசுக்கொலை மக்களின் அன்றாட வாழ்வில் நிம்மதியேற்படுத்தும் விதத்தில் பெண்டிங் பிரபு மேற்கொண்ட |
பாராட்டத்தக்க நடவடிக்கை தக்கர்கள் என்னும் வழிப்பறி கொள்ளையர்களை ஒடுக்கியதாகும். 50 அல்லது 100 பேர் கொண்ட குழுக்களாக செயல்பட்ட தக்கர்கள் , வணிகர்களாகவோ , யாத்ரீகர்களாகவோ மாறுவேடம் அணிந்து , பயணிகளின் கழுத்தை நெரித்துக்கொன்று வழிப்பறியில் ஈடுபடுவது வழக்கம் , முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு , மத்திய , வட இந்தியாவில் நிலவிய குழப்பத்தினால் இத்தகைய கொள்ளையர்களின் எண்ணிக்கை பெருகியது. 1830 ஆம் ஆண்டு தக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையை கர்னல் சீலிமேன் என்பவர் தொடங்கினார். ஐந்து ஆண்டுக்காலத்தில் கிட்டத்தட்ட 2000 |
பேர் பிடிபட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தக்கர்களை ஒடுக்கும் பணியினை திறமையுடன் செய்த காரணத்தால் , சர் வில்லியம் சீலீமேன் ‘ தக்கீ சிலீமேன் ' என்று அழைக்கப்பட்டார். பெண் சிசுக்கொலை என்ற இந்த வன்மையான மனித நேயமற்ற செயலை சில நாகரீகமுள்ளவர்களும் செய்து வந்தனர். ராஜபுதனம் , பஞ்சாப் , மாளவம் , கட்ச் போன்ற பகுதிகளில் பெண் குழந்தைகளைக் கொல்லும் இந்த வழக்கம் பரவியிருந்தது. வங்காளத்தில் சவுகர் தீவில் நடைபெற்ற குழந்தை பலி சடங்கை |
ஒழிப்பதற்கு பெண்டிங் தீவிர நடவடிக்கையெடுத்தார். பெண் சிசுக்கொலையையும் தடை செய்தார். அதனை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார். ஆங்கிலக் கல்விமுறையை அறிமுகப்படுத்துதல் வில்லியம் பென்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். கல்வி வளர்ச்சி குறித்து பரிந்துரைகள் செய்வதற்கு மெக்காலே பிரபு தலைமையில் அவர் குழுவை நியமித்தார். தனது அறிக்கையில் , ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியலை இந்திய மக்களுக்கு ஆங்கில வழியில் கற்பிக்க வேண்டும் என்று மெக்காலே வலியுறுத்தினார். இந்த |
பரிந்துரையை வில்லியம் பெண்டிங் முழுமனதுடன் ஏற்றார். 1835 ஆம் ஆண்டு அரசின் தீர்மானம் ஆங்கிலத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் அறிவித்தது. அதே ஆண்டில் பெண்டிங் கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். வில்லியம் பெண்டிங் பற்றிய மதிப்பீடு வில்லியம் பெண்டிங் நேர்மையான , விருப்பு வெறுப்பற்ற , தாராள குணமுடைய , பகுத்தறிவுள்ள மனிதராகத் திகழ்ந்தார். சதி ஒழிப்பு , பெண் சிசுக்கொலை தடுப்பு போன்ற தனது சமூக சீர்திருத்தங்கள் மூலம் இந்து சமுதாயத்தில் காலம் காலமாக நிலவி வந்த கொடுமைகளை ஒழித்துக் |
கட்டினார். மற்றவர்கள் சொல்லால் மட்டும் கூறிவந்ததை பெண்டிங் தமது செயலால் நடத்திக் காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சதி ஒழிப்பு குறித்த அரசு தீர்மானத்தை நிறைவேற்றும் போது தனது பதவிக்கு ஆபத்து வருவதைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை. அத்தகைய மனோதிடமும் நேர்மையும் அக்காலத்திய ஆட்சியாளர்களிடம் அரிதாகவே காணப்பட்டது. அவரது கல்வி சீர்திருத்தங்களால் இந்தியா ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்தது எனலாம். வில்லியம் பெண்டிங்கைத் தொடர்ந்து ஆக்லாந்து பிரபு ( 1836-1842 ) தலைமை ஆளுநராக பதவியேற்றார். அவரது |
ஆட்சிக்காலத்தில் முதல் ஆப்கானியப் போர் ( 1836-1842 ) நடைபெற்றது. அவரது ஆப்கானியக் கொள்கை தோல்வியடையவே , பதவியிலிருந்து 1842 ல் திருப்பியழைக்கப்பட்டார். பின்னர் ஆட்சி பொறுப்பேற்ற எல்லன்பரோ பிரபு ஆப்கானியப் போரை முடிவுக்கு கொண்டு வந்தார். சிந்துப்பகுதியை அவர் இணைத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பதவிக்குவந்த ஹார்டிஞ்ச் பிரபு ( 1844-48 ) காலத்தில் முதல் ஆங்கிலேய சீக்கியப்போர் நடைபெற்றது. லாகூர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெற்ற செய்தி : 1. வில்லியம் பெண்டிங் , |
தலையிடாக் கொள்கையை பின்பற்றிய போது மைசூர் போன்ற அரசுகளை இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2. அவர் பஞ்சாப் அரசர் இரஞ்சித்சிங்குடன் நட்புடன் பழகி அமிர்தசரஸ் உடன்படிக்கையை செய்துகொண்டார். 3. 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின் சிறப்பு. 4. நிதித்துறை , ஆட்சித்துறை சீர்திருத்தங்கள் மூலம் பெண்டிங் திறமையான ஆட்சிக்கு வழிவகுத்தார். 5. பென்டிங் சமூக சீர்திருத்தங்களின் காலத்தை தொடங்கிவைத்தார். சதி ஒழிப்பு , தக்கர்களை ஒடுக்கியது , பெண் சிசுக்கொலை தடுப்பு ஆகியன அவற்றில் அடங்கும். 6. அவரது கல்வி சீர்திருத்தங்கள் |
இந்தியாவை நவீனப் படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தன. பாடம் – 6 டல்ஹவுசி பிரபு ( 1848 – 1856 ) கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்தில் மாணவர் அறியப் போவது : 1. டல்ஹவுசி பின்பற்றிய இணைப்புக்கொள்கை. 2. 3. பஞ்சாப் மற்றும் கீழ் பர்மா இணைக்கப்படுதல் வாரிசு இழக்கும் கொள்கை இந்திய அரசுகள்மீது நடைமுறைப் படுத்தப்படுதல். 4. முறைகேடான ஆட்சியை காரணம் காட்டி அயோத்தியை இணைத்தல். 5. டல்ஹவுசியின் உள்நாட்டு சீர்திருத்தங்கள் ரயில்வே மற்றும் தந்தி அறிமுகம். 6. கல்வி மற்றும் பிற சீர்திருத்தங்கள். பதவிவகித்த தலைமை 1848 ஆம் ஆண்டு டல்ஹவுசி |
பிரபு பதவியேற்றபோது அவர்தான் இந்தியாவில் ஆளுநர்களிலேயே இளைய வயதுடையவராயிருந்தார். அவரது ஆரம்பகால வாழ்க்கை சிறப்புமிக்கதாகும். ஆக்ஸ்போர்டிலுள்ள கிறிஸ்து கல்லூரியில் கல்வி பயின்றவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். இங்கிலாந்து பிரதமர் சர் ராபர்ட் பீல் என்பவரின் நம்பிக்கையைப் பெற்றுத் திகழ்ந்தார். வணிக வாரியத்தின் தலைவராக பொறுப்பு வகித்தபோது ரயில்பாதை வளர்ச்சிக்கு பாடுபட்டார். 1847 ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் தலைமை ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. அதை ஏற்று 1848 ஜனவரியில் இந்தியாவுக்கு வந்தார். இணைப்புக் |
கொள்கை டல்ஹவுசி பிரபு டல்ஹவுசி ஆட்சிக்காலத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அவர் நடத்திய ‘ இணைப்பு’களேயாகும். வணிகக் குழுவின் எல்லைகளை அவர் விரிவுபடுத்தியதற்கு அரசியல் ஆதிக்கம் , பேரரசு விரிவாக்கம் , வணிக மேம்பாடு , நிதி ஆதாரத்தைப் பெருக்குதல் போன்ற நோக்கங்கள் இருந்தன. தனது இணைப்புகளுக்கு அவர் வெவ்வேறு காரணங்களைக் கூறினாலும் , இணைக்கப்பட்ட நாடுகளில் நிலவிய முறைகேடான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே அவரது முதன்மையான நோக்கமாக இருந்தது. குறிப்பாக அயோத்தி இணைப்பிற்கு இதுவே காரணமாகும். இணைக்கப்பட்ட நாடுகளில் |
நல்லாட்சியை ஏற்படுத்துவதில் அவர் உறுதியாக இருந்தார். அதே சமயம் , இத்தகைய இணைப்புகளால் பேரரசுக்கு பாதுகாப்பு , வணிகம் மற்றும் நிதி ஆதாயங்கள் போன்ற நன்மைகளையும் அவர் கருத்தில் கொண்டிருந்தார். டல்ஹவுசி இந்தியாவிற்கு வரும்போதே இணைப்புக் கொள்கையை பின்பற்றியாகவேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தார் என்றும் கூறமுடியாது. Page 49¹ bf 284 ஆனால் , இணைப்புக் கொள்கையை பின்பற்றியதன் மூலம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை மேலும் வலிமைப்படுத்தினார். பஞ்சாப் , கீழ்பர்மா , மத்திய மாகாணத்தின் பெரும்பகுதி , அயோத்தி போன்றவை அவரால் |
இணைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். பஞ்சாப் இணைப்பு 1849 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலேய சீக்கியப்போரின் முடிவில் டல்ஹவுசி பஞ்சாபை இணைத்துக் கொண்டார். பஞ்சாபின் நிர்வாகத்தை அவர் திறமையான வகையில் சீரமைத்தார். அம்மாகாணம் சிறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. அவர்கள் துணை ஆணையர்கள் அழைக்கப்பட்டனர். இந்த துணை ஆணையர்கள் தமது உதவியாளர்கள் மூலம் என மக்களுடன் நெருங்கிய நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். வருவாய் மற்றும் நீதித்துறைகள் |
ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் அதிகாரத்துடன் கூடிய பொறுப்பு உறுதி செய்யப்பட்டது. மக்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப சட்டங்களும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டன. பஞ்சாபின் முழு ஆட்சியதிகாரமும் முதன்மை ஆணையரிடம் வழங்கப்பட்டது. உண்மையில் , தலைமை ஆளுநரே பஞ்சாபின் ஆட்சியாளராகத் திகழ்ந்தார். பஞ்சாபின் ஆட்சியில் லாரன்ஸ் சகோதரர்கள் ஆற்றிய சேவைகள் சிறப்பானவையாகும். மூன்றே ஆண்டுகளுக்குள் அந்த மாகாணத்தில் முழு அமைதி ஏற்படுத்தப்பட்டது. உள்நாட்டு , அயல்நாட்டு பகைவர்களிடமிருந்தும் அது பாதுகாக்கப்பட்டது. 1859 ல் , சர்ஜான் |
லாரன்ஸ் பஞ்சாபின் துணை ஆளுநராகப் பதவியேற்றார். இரண்டாவது பர்மியப் போரும் கீழ்பர்மா இணைக்கப்படுதலும் 1852 ஆம் ஆண்டு ரங்கூனில் ஏற்பட்ட வாணிகப் பூசல்களே பிரிட்டிஷாருக்கும் பர்மியருக்கும் இடையே மீண்டும் பகைமை தோன்ற காரணமாகும். இரண்டாம் பர்மியப் போரின் முடிவில் ( 1852 ) டல்ஹவுசி ‘ பெகு ’ என்ற இடத்தை தலைநகராகக் கொண்ட கீழ் பர்மாவை இணைத்துக்கொண்டார். மேஜர் ஆர்தர் பைரே என்பவர் புதிய மாகாணத்துக்கு ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது நிர்வாகம் திறமையானதாக விளங்கியது. கீழ் பர்மாவை இணைத்துக் கொண்டதால் பிரிட்டனுக்கும் மிக்க |
பயனுடையதாக இருந்தது. இப்போரின் போது கைப்பற்றப்பட்ட ரங்கூன் ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். வாரிசு இழக்கும் கொள்கை அமைதி வழியில் நாடுகளை இணைப்பதற்கு ஏதேனும் தருணம் கிடைக்குமானால் அதை டல்ஹவுசி தக்க வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக்குழு வலிமை பெற்ற அரசாக உருவெடுத்து வந்தது. இந்திய ஆட்சியாளர்களுடன் அது பல ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அவர்களையும் அவர்களது வாரிசுகளையும் ஆதரிப்பதாக உறுதிகொடுத்து அதற்குப்பதில் பல சலுகைகளை வணிகக் குழுவின் ஆட்சி பெற்று வந்தது. இத்தகைய |
ஒப்பந்தங்களை பிரிட்டிஷார் விரும்பியதால் , டல்ஹவுசி மேலும் வலிமை பெற விரும்பினார். இந்து சட்டப்படி ஒருவர் தனக்கு ஆண் வாரிசு இல்லையெனில் , ஒரு புதல்வரை தத்தெடுத்துக்கொண்டு தனது சொத்துக்களை அவருக்கு உரிமையாக்கலாம். ஆனால் , தலைமை அரசால் ( பிரிட்டிஷ் அரசு ) பாதுகாக்கப்பட்டுவரும் ஒரு இந்து அரசர் தனக்குப் பிறகு அரச பதவியேற்பதற்கு ஒரு ஆண்வாரிசை தத்து எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. பொதுவாக , பிரிட்டிஷ் அரசின் அனுமதியோடுதான் அவ்வாறு தத்து எடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. டல்ஹவுசியின் கொள்கைப்படி பிரிட்டிஷ் |
அரசு அவ்வாறு தத்து எடுப்பதற்கு அனுமதி மறுக்குமானால் , அந்த அரசுக்கு வாரிசு இல்லாமல் போகும். எனவே , வாரிசு இல்லா அரசு பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்று டல்ஹவுசி கருதினார். ஒரு தனி நபர் தத்து எடுத்து தனது தனிப்பட்ட சொத்துக்களுக்கு அவரை வாரிசு ஆக்குவதற்கும் , தத்து எடுக்கப்பட்டவர் நாட்டை ஆளும் உரிமை பெறுவதற்கும் வேறுபாடு உள்ளது என்று டல்ஹவுசி வாதிட்டார். டல்ஹவுசியின் இக்கொள்கை வாரிசு இழப்புக் கொள்கை என அழைக்கப்படுகிறது. டல்ஹவுசி தனது வாரிசு இழக்கும் கொள்கையை பயன்படுத்தி 1848 ல் ‘ சதாரா’வை |
பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியுடன் இணைத்துக் கொண்டார். ஜான்சி , நாக்பூர் ஆகியன 1854 ல் இணைத்துக் கொள்ளப்பட்டன. இவற்றை இணைத்துக் கொண்டதால் , மத்திய மாகாணங்களின் பெரும்பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்த புதிய மாகாணம் 1861 ஆம் ஆண்டிலிருந்து ஒரு முதன்மை ஆணையரின் தலைமையில் நிர்வகிக்கப்பட்டது. வாரிசு இழக்கும் கொள்கை சட்டத்துக்கு புறம்பானது என்று கூற முடியாவிட்டாலும் , அக்கொள்கையை டல்ஹவுசி நடைமுறைப்படுத்தியதே கவலையளிக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பாகும். சதாரா , ஜான்சி , நாக்பூர் இணைப்புகளால் |
பிரிட்டிஷாருக்கு பெருத்த நன்மை விளைந்தது. எனினும் , வாரிசு இழக்கும் கொள்கையை தமது நாடிணைக்கும் கொள்கைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தியதற்கு டல்ஹவுசி மீது குற்றம் சாட்டப்பட்டது. 1857 ஆம் ஆண்டு பெரும் கலகத்திற்குப்பிறகு வாரிசு இழக்கும் கொள்கை திரும்பப் பெறப்பட்டது. 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தின்போது இக்கொள்கையால் பாதிக்கப்பட்ட ஜான்சி ராணி லட்சுமிபாய் பிரிட்டிஷாருக்கு எதிராக தீவிரமாகப் போரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தி இணைப்பு பிரிட்டிஷாருக்கும் அயோத்தி அரசுக்கும் இடையிலான உறவு 1765 ஆம் ஆண்டு |
மேற்கொள்ளப்பட்ட அலகாபாத் உடன்படிக்கையிலிருந்தே தொடங்குகிறது. வாரன் ஹேஸ்டிங்ஸ் தொடங்கி பல தலைமை ஆளுநர்கள் தனது நிர்வாகத்தை மேம்படுத்துமாறு அயோத்தி நவாப்பிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டனர். ஆனால் , அயோத்தியில் நிர்வாகம் மோசமானதாகவே இருந்து வந்தது. அயோத்தி நவாப் பிரிட்டிஷாருக்கு மிகவும் கடமைப்பட்டவராக இருந்தமையால் அயோத்தியை அவர்கள் இணைத்துக் கொள்ளாமல் இருந்தனர். 1851 ஆம் ஆண்டு , லக்னோவில் தூதுவராக இருந்த வில்லியம் சீலீமேன் தனது அறிக்கையில் ‘ மக்கள் படும் துன்பங்களையும் உணர்வுகளற்ற ஆட்சி சீர்கேடுகளும் அயோத்தியில் |
நிலவுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் , அயோத்தியை இணைக்கும் கொள்கைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அயோத்தியின் நிலைமையை ஆய்வு செய்த டல்ஹவுசி 1856 ல் அதனை இணைத்துக் கொண்டார். நவாப் வாஜித் அலி என்பவருக்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இணைக்கப்பட்ட பகுதி ஒரு முதன்மை ஆணையரின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. டல்ஹவுசி மேற்கொண்ட இணைப்புகளிலேயே இறுதியானது அயோத்தி இணைப்பாகும். இதனால் , பெரும் அரசியல் ஆபத்து உருவாயிற்று. அயோத்தி இணைப்பு Page 51 முஸ்லிம்களிடையே பெருத்த எரிச்சலை |
ஏற்படுத்தியது. மேலும் , பிரிட்டிஷ் படையிலிருந்த இந்திய வீரர்கள் பெரும்பாலோர் அயோத்தியைச் சேர்ந்தவர்கள். இணைப்புக்கு முன்பு அவர்கள் சிறப்பானதொரு நிலையைப் பெற்றிருந்தனர். அயோத்தி இணைப்பினால் , அவர்கள் தங்களது கவுரவத்தை இழந்துவிட்டதாக கருதினர். சிப்பாய் கலகத்தின் போது அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரும்பினர். இவ்வாறு பல்வேறு வழிகளில் அயோத்தி இணைப்பு 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்துக்கு வழிவகுத்தது. டல்ஹவுசி மேற்கொண்ட உள்நாட்டு சீர்திருத்தங்கள் டல்ஹவுசி கைப்பற்றிய நிலப்பகுதிகளால் இந்தியாவின் வரைபடமே மாற்றம் |
பெற்றது எனலாம். அவர் ஒரு படையெடுப்பாளர் மட்டுமல்ல சிறந்த ஆட்சியாளரும்கூட. வங்காளத்துக்கென தனியாக துணை ஆளுநர் நியமிக்கப்பட்டதால் , டல்ஹவுசி தனது முழு கவனத்தை நிர்வாகத்தில் செலுத்த முடிந்தது. புதிய மாகாணங்களை செம்மைப்படுத்தி ஒரு நவீன அரசாக அவற்றை மாற்றியது அவரது மிகப்பெரும் சாதனையாகும். புதிதாக வெல்லப்பட்ட பகுதிகளை மத்திய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் " சீரமைக்கப்படாத அமைப்பு " ( Non - Regulation System ) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்படி , புதிதாக வெல்லப்பட்ட பகுதி ஒவ்வொன்றிலும் ஒரு ஆணையர் |
நியமிக்கப்பட்டார். இந்த ஆணையர்களை தமது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். வங்காள தரைப்படையின் தலைமையகத்தை கல்கத்தாவிலிருந்து மீரட்டுக்கு மாற்றினார். சிம்லா பிரிட்டிஷ் ராணுவத்தின் நிரந்தர தலைமையிடமாக இருந்தது. ரயில் பாதைகள் அறிமுகம் இந்தியாவில் ரயில்பாதைகள் அறிமுகத்தால் பொருளாதாரத்தில் ஒரு புதிய சகாப்தமே தோன்றியது. பிரிட்டிஷார் அதிக அக்கரையுடன் செயல்பட்டு விரைவாக ரயில்பாதைகளை அமைக்க முற்பட்டதற்கு மூன்று முக்கிய காரணங்களைக் கூறலாம். முதலாவது வாணிப வசதி , இரண்டாவது நிர்வாக வசதி , மூன்றாவது பாதுகாப்பு வசதி. |
கலகம் போன்ற குழப்பங்களின் போது துருப்புகளை அனுப்புவதற்கு ரயில் பாதைகள் பெரிதும் பயன்பட்டது. ரயில்பாதை வளர்ச்சிக்கு டல்ஹவுசியின் பங்களிப்பு போற்றத்தக்கதாகும். 1853 ல் அவர் ' ரயில்வே அறிக்கை ' ஒன்றை தாமே தயாரித்தார். இந்தியாவின் எதிர்கால ரயில்பாதை கொள்கையை இது வடிவமைத்தது. " உத்திரவாத முறை " யின் கீழ் அவர் ரயில்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். இதன்படி , ரயில்பாதைகளில் முதலீடு செய்தவர்களுக்கு குறைந்தபட்சம் 54 சதவீத வட்டி உறுதியளிக்கப்பட்டது. ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ரயில்பாதைகளை திரும்ப வாங்கிக் |
கொள்ளும் உரிமையை அரசு தக்க வைத்துக்கொண்டது. பம்பாயிலிருந்து தாணே வரை செல்லும் முதல் ரயில்பாதை 1853 ல் தொடங்கப்பட்டது. கல்கத்தாவையும் ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கத்தையும் இணைக்கும் ரயில்பாதை 1854 ஆம் ஆண்டிலும் , மற்றும் சென்னை அரக்கோணம் இடையிலான ரயில்பாதை 1856 ஆம் ஆண்டிலும் தொடங்கப்பட்டன. உலகின் முதல் ரயில்பாதை 1825 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. அஞ்சல் துறை தற்கால அஞ்சல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் டல்ஹவுசி பிரபு ஆவார். 1854 ல் ஒரு புதிய அஞ்சலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் , தூரத்தைக் கணக்கில் |
எடுக்காமல் , இந்தியா முழுவதும் செல்லக்கூடிய ஒரே மாதிரியாக அரை அணா அஞ்சல் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் தலைகளும் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன. கல்வி வளர்ச்சியிலும் டல்ஹவுசி தனது கவனத்தை செலுத்தினார். சர் சார்லஸ் உட் என்பவரின் 1854 ஆம் ஆண்டு ‘ கல்வி அறிக்கை ’ ‘ இந்தியாவின் அறிவுப்பட்டயம் ’ எனக் கருதப்படுகிறது. தொடக்கக்கல்வி , இடைநிலைக்கல்வி , உயர்கல்வி என்ற அனைத்து நிலை கல்வி வளர்ச்சிக்கும் ஒரு செயல் திட்டத்தை இது அளித்தது. சார்லஸ் உட் கருத்துக்கள் முழுவதையும் டல்ஹவுசி ஒப்புக்கொண்டு அவற்றை |
நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். கல்வித் துறைகள் சீரமைக்கப்பட்டன. கல்கத்தா , பம்பாய் , சென்னைப் பல்கலைக் கழகங்கள் 1857 ஆம் ஆண்டு நிறுவப்பட்டன. பொதுப் பணித்துறை டல்ஹவுசி காலத்திற்கு முன்பு பொதுப் பணித்துறையின் அலுவல்களை ராணுவ வாரியம் கவனித்து வந்தது. டல்ஹவுசி தனியாக ஒரு பொதுப் பணித்துறையை ஏற்படுத்தி , கால்வாய்கள் வெட்டுவதற்கும் , சாலைகள் அமைப்பதற்கும் கூடுதல் நிதியை ஒதுக்கினார். 1854 ல் மேல் கங்கைக் கால்வாய் பணி நிறைவடைந்தது. பல பாலங்கள் கட்டப்பட்டன. பொதுப்பணித் துறையை நவீனப்படுத்தியன் மூலம் இந்தியாவின் |
பொறியியல் பணித்துறைக்கு டல்ஹவுசி அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். டல்ஹவுசி பற்றிய மதிப்பீடு 1856 ல் டல்ஹவுசி இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பினார். அடுத்த ஆண்டிலேயே சிப்பாய் கலகம் வெடித்தது. அதற்கு அவரது இணைப்புக் கொள்கையே காரணம் என விமர்சிக்கப்பட்டது. இந்தியாவில் ஓயாமல் பணி செய்தமையால் , நோய்வாய்ப்பட்ட டல்ஹவுசி 1860 ல் இறந்தார். அவர் ஒரு திறமையான ஆட்சியாளர் , தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் இந்தியாவின் பரப்பை விரிவுபடுத்தி வலிமையை ஏற்படுத்தினார். பலதுறைகளிலும் வளர்ச்சிக்கான |
சகாப்தத்தை அவர் தொடங்கி வைத்தார். ரயில் பாதை மற்றும் தந்தித் துறைகளின் தந்தை என்று அவரைத் கருதலாம். இந்தியாவில் நவீன மயமாக்கலை அவர் தொடங்கி வைத்தார். ‘ நவீன இந்தியாவை உருவாக்கியவர் ’ என்றும் அவர் புகழப்படுகிறார். இணைப்புக்கொள்கை அங்கு நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டது. பஞ்சாப் , கீழ்பர்மா மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளை அவர் இணைத்துக் கொண்டது பிரிட்டிஷ் பேரரசை விரிவுபடுத்தும் கொள்கையின் அடிப்படையில்தான். தனது இணைப்புக் கொள்கைக்கு வாரிசு இழப்புக் கொள்கையை ஒரு கருவியாக டல்ஹவுசி பயன்படுத்திக் கொண்டார். நல்லாட்சியை |
ரயில் பாதைகள் , தந்தி போன்ற நவீன தகவல் தொடர்பு முறைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் டல்ஹவுசி ஒரு முற்போக்கு சீர்திருத்த வாதியாகத் திகழ்கிறார். டல்ஹவுசி பற்றிய கொடுக்க இயலும். ஆ.1849 ஈ. 1856 தலைப்பட்சமற்ற மதிப்பீட்டை மாணவர் பயிற்சி பகுதி – அ சரியான விடையைத் தேர்வு செய்க. டல்ஹவுசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு அ. 1839 இ. 1853 எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் சேவையாற்றினார்கள் ? அ. பர்மா ஆ. பஞ்சாப் இ. வங்காளம் ஈ. மைசூர் கோடிட்ட இடத்தை நிரப்புக. பம்பாய் | - தாணாவை இணைத்த முதல் ரயில்பாதை திறக்கப்பட்ட |
ஆண்டு நவீன அஞ்சல் முறையை தொடங்கி வைத்தவர். பாடம் – 7 வருவாய் நிர்வாகம் , பிரிட்டிஷாரின் பொருளாதாரக் கொள்கை கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்தில் மாணவர் அறிந்துகொள்ளப் போவது : 1. பிரிட்டிஷாரின் வேளாண் கொள்கை 2. பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய பல்வேறு நிலவருவாய் திட்டங்கள் 3. வருவாய் நிர்வாகத்தின் நிறை குறைகள் 4. கைத்தொழில்கள் மீதான பிரிட்டிஷாரின் கொள்கை 5. இந்திய கைத்தொழில்கள் அழிவுக்கான காரணங்கள் பிரிட்டிஷாரின் வேளாண் கொள்கை வேளாண்மையை இந்தியா வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்ததே ! |
பெரும்பான்மை மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். மகசூல் நன்றாக இருந்தால் செல்வம் செழிக்கும். இல்லையேல் பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும். 18 ஆம் நூற்றாண்டுவரை , இந்தியாவில் வேளாண்மைக்கும் குடிசைத் தொழில்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகளைவிட இந்தியா வேளாண்மையில் செழித்திருந்தது. அதேபோல் கைத்தொழில் உற்பத்தியிலும் உலகின் முக்கிய இடத்தை அது பெற்றிருந்தது. ஆனால் , பிரிட்டிஷார் கைத்தொழிலை நசுக்கியதோடு , புதிய நில உடைமை முறைகள் , வருவாய் கொள்கையை அறிமுகப்படுத்தி வேளாண் |
கட்டமைப்பையே மாற்றியமைத்தனர். இந்தியாவின் தேசிய வருமானம் , அயல்நாட்டு வாணிபம் , தொழில் விரிவாக்கம் போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளும் நாட்டின் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. ஆனால் பிரிட்டிஷாரின் கொள்கைகள் நிலவரியை எப்படி வசூலிப்பது என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. இந்தியக் குடியானவர்களின் நலன்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. காலங்காலமாக பின்பற்றப்பட்டு வந்த வருவாய் முறை புறக்கணிக்கப்பட்டது. அதற்குப் பதில் வருவாய் திரட்டுகின்ற இரக்கமற்ற கொள்கையை அவர்கள் பின்பற்றினார்கள். தங்களது |
வருகைக்குப்பின் , பிரிட்டிஷார் மூன்று வகை நிலஉடைமை முறைகளை பின்பற்றினர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மொத்த நிலப்பரப்பில் சுமார் சதவிகிதம் ஜமீன்தாரி முறை அல்லது நிலையான நிலவரித் திட்டத்தின்கீழ் இருந்தது. வங்காளம் , பீகார் , காசி , வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் நடுப்பகுதி , வடக்கு கர்னாடகம் ஆகிய பகுதிகள் இவற்றில் அடங்கும். சுமார் 30 சதவீகித நிலப்பரப்பில் மகல்வாரி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் பெரும்பகுதி , மத்திய மாகாணங்கள் , பஞ்சாப் ஆகிய பகுதிகளில் ஒரு சில மாற்றங்களுடன் |
இம்முறை பின்பற்றப்பட்டது. எஞ்சிய 51 சதவிகித நிலப்பரப்பில் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை , பம்பாய் மாகாணங்கள் , அஸ்ஸாம் , பிரிட்டிஷ் இந்தியாவின் பிற பகுதிகள் இம்முறையின் கீழ் வந்தன. நிலையான நிலவரித்திட்டம் காரன்வாலிஸ் பிரபுவின் மிக முக்கியமான நிர்வாக சீர்திருத்தம் அவர் வங்காளத்தில் அறிமுகப்படுத்திய நிலையான நிலவரித் திட்டமாகும். பின்னர் , இது பீகார் , ஒரிசா பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவருக்கு ஆண்டுக் குத்தகை விடும் முறையை அறிமுகப்படுத்தியது |
நமக்கு நினைவிருக்கும். இதனால் , நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டது. காரன்வாலிஸ் நியமனத்தின்போது , வணிகக்குழு மற்றும் சாகுபடியாளர்கள் ஆகிய இருவரது நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நிலவருவாய் திட்டத்தில் நிலவும் சிக்கல்களுக்கு நிறைவான , நிலையான தீர்வு காணும்படி இயக்குநர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். எனவே , தலைமை ஆளுநர் பொறுப்பேற்றவுடன் அவர் வங்காளத்தில் நிலவிய நிலஉடைமை மற்றும் குத்தகை ஆகிய விவரங்களை ஆய்வு செய்தார். இதற்கு மூன்றாண்டு காலம் பிடித்தது. தனது சக பணியாளர்களான சர் ஜான் ஷோர் , ஜேம்ஸ் கிரான்ட் போன்றோருடன் நீண்ட |
விவாதம் நடத்திய பிறகு அவர் ஆண்டுக் குத்தகை விடும் முறையை இரத்து செய்வது என முடிவெடுத்தார். அதற்குபதில் பத்து ஆண்டுகளுக்கு குத்தகை என்ற முறையை நடைமுறைப்படுத்தினார். இதுவே , பின்னர் நிரந்தரமாக அறிவிக்கப்பட்டது. நிரந்தர நிலவரித் திட்டத்தின் முக்கிய கூறுகள் : 1. வங்காளத்தின் ஜமீன்தார்கள் , அவர்கள் முறையாக கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கு வரி செலுத்தும் காலம் வரை , நிலத்துக்கு உடைமையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். வணிகக் குழுவிற்கு ஜமீன்தார்கள் செலுத்த வேண்டிய வரி நிலையாக நிர்ணயிக்கப்பட்டு , அது எந்த |
சூழ்நிலையிலும் உயர்த்தப்பட மாட்டாது என்றும் உறுதியளிக்கப்பட்டது. அதாவது கிழக்கிந்திய வணிகக்குழு மொத்த வருவாயில் 89 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டு எஞ்சியதை ஜமீன்தார்களுக்கு விட்டுக் கொடுத்தது. 3. நிலத்தை உழுத குடியானவர்கள் குத்தகையாளர்களாகக் கருதப்பட்டனர். 4. இத்திட்டத்தின்படி , ஆட்சித்துறை , நீதித்துறை பொறுப்புகளிலிருந்து ஜமீன்தார்கள் விடுவிக்கப்பட்டார்கள். மிகவும் அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதற்காக , காரன் வாலிசின் நிலையான நிலவரித்திட்டம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. நிலங்களை அளக்கவோ அல்லது அவற்றின் |
மதிப்பை ஆய்வு செய்யவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது இத்திட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகும். ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வந்த வரிகளின் அடிப்படையில் ஏறத்தாழ அரைகுறையாகவும் வரி மதிப்பீடு செய்யப்பட்டது. ஜமீன்தார்களும் , உழவர்களும் இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டனர். இத்திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரித் தொகை மிகவும் அதிகமாக இருந்தமையால் பல ஜமீன்தார்கள் வரி கட்டத் தவறினர். அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களது நிலை மோசமாகியது. அதே சமயம் பணவசதி மிக்க ஜமீன்தார்கள் ஆடம்பர வாழ்க்கை |
நடத்தினர் , கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். வரி வசூலிக்கும் பொறுப்பை தங்களது முகவர்களிடம் விட்டுச் சென்றதால் , உழவர்களை அவர்கள் கசக்கிப் பிழிந்து சட்டத்துக்குப் புறம்பான வரிகளை அவர்களிடமிருந்து வசூலித்தனர். இதனால் , குடியானவர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர். காரன்வாலிஸ் கொண்டுவர எண்ணிய நட்புமிக்க நிலப்பண்ணை முறை தோல்வியடைந்தது என்றே கூறவேண்டும். ஜமீன்தாரி வர்க்கம் உழவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று பேடன் பவுல் குறிப்பிடுகின்றார். தொடக்கத்தில் , வணிகக் குழுவிற்கு நிதியளவில் |
பயன்கிடைத்த போதிலும் , தொலைநோக்கில் வணிகக் குழுவிற்கு பெருத்த நட்டமே ஏற்பட்டது. நிலங்களில் உற்பத்தி பெருகினாலும்கூட நிலவரி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதால் வருவாய் சொற்பமாகவே இருந்தது. பிரிட்டிஷாருக்கு முன்பு இருந்த முறைப்படி விளைச்சலில் ஒரு பங்கு நிலவரியாக நிர்ணயிக்கபட்டிருந்ததை நாம் இங்கே நினைவு கூறவேண்டும். இருப்பினும் , வங்காள அரசுக்கும் ஜமீன்தார்களுக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. சீரான வருமானம் கிடைத்ததால் வணிகக் குழுவின் அரசாங்கம் நிலையாக இயங்க முடிந்தது. ஜமீன்தார்கள் |
குத்தகைதாரர்களின் உழைப்பில் செல்வச் செழிப்பில் திளைத்தனர். இரயத்துவாரி முறை சென்னை , பீகார் , பம்பாய் , அஸ்ஸாம் பகுதிகளில் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சர் தாமஸ் மன்றோ சென்னை மாகாணத்தில் இதனைக் கொண்டு வந்தார். இந்த முறையின்கீழ் குடியானவரே நிலத்தின் உடைமையாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். குடியானவருக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஜமீன்தார் போல எந்தவொரு இடைத்தரகரும் இல்லை. குடியானவர் தொடர்ந்து வரிசெலுத்தும் காலம் வரை அவர் நிலத்திலிருந்து அப்புறப்படுத்தபட மாட்டார். மேலும் , நிலவரி 20 முதல் 40 ஆண்டுகளுக்கு |
நிர்ணயம் செய்யப்பட்டது. ஒவ்வொரு குடியானவரும் அரசாங்கத்திற்கு தாமே நேரடியாக வரி செலுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இருப்பினும் , இந்த திட்டமும் தோல்வியிலேயே முடிந்தது. ஒரு ஒழுங்கான முறையில் வரிவசூலிப்பது கடினமாக இருந்தது. வரி கட்டாவிட்டாலோ , தாமதமானாலோ , வருவாய் அதிகாரிகள் கடுமையான முறைகளைப் பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகல்வாரி முறை பஞ்சாப் , மத்திய மாகாணங்கள் , வடமேற்கு மாகாணங்களில் சில பகுதிகள் ஆகியவற்றில் 1833 ஆம் ஆண்டு மகல்வாரி முறை அறிமுகம் செய்யப்பட்டது. இம்முறையின்படி , கிராமம் |
அல்லது ஓரிரு கிராமங்கள் அடங்கிய மகல் அரசுக்கு வரி செலுத்தும் பொறுப்பை மேற்கொள்ளும் கிராமத்திலுள்ள நிலங்கள் கிராம சமுதாயத்துக்கே சொந்தம் என்பதால் , அரசாங்கத்துக்கு வரிசெலுத்த வேண்டிய பொறுப்பும் கிராமத்தையே சார்ந்தது என்று விதிக்கப்பட்டது. வரி நிர்ணயம் செய்வதற்கு முன்பு கிராம நிலங்கள் அனைத்தும் அளக்கப்பட்டன. மகல்வாரி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட வரியும் அதிகபட்சமாகவே காணப்பட்டது. இத்திட்டத்தின்படி கிராம சமுதாயத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தரகர்கள் எவரும் இல்லை. சில இடங்களில் நீர்ப்பாசன வசதிகளும் |
செய்து கொடுக்கப்பட்டன. ஆனால் , அவற்றின் பலன்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கைத்தொழில்கள்மீது பிரிட்டிஷாரின் கொள்கை 16 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு ஐரோப்பிய வணிகக் குழுக்கள் இந்தியாவிற்கு வரத்தொடங்கின. தொடக்கத்தில் அவர்களுக்குள் பலத்த வாணிகப் போட்டி நிலவியது. இந்திய வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவர்கள் ஒவ்வொருவரும் பாடுபட்டனர். ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழுவும் அத்தகைய நோக்கத்தோடுதான் செயல்பட்டது. தனது முற்றுரிமையை நிலைநாட்டி மொத்த லாபத்தையும் தாமே |
பெறவேண்டும் என அது பாடுபட்டது. அதில் வெற்றியும் பெற்றது. 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் இந்தியாவில் வணிகக் குழுவின் வணிகத்துக்கு முடிவு கட்டிய பிறகும் , இந்தியாவின் செல்வத்தை சுரண்ட வேண்டும் என்ற கொள்கையை மட்டும் அது தொடர்ந்து பின்பற்றி வந்தது. இதற்கு முன் இந்தியாவில் ஆட்சி செய்தவர்களிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி இந்த விதத்தில் மாறுபட்டிருந்தது. பரம்பரையாக கைத்தொழில் உற்பத்தியிலும் , கலைச்சின்னங்கள் செய்வதிலும் இந்தியா உலகின் ஏனைய நாடுகளைவிட முதலிடம் வகித்து வந்தது. இந்தியத் தொழில்களிலேயே மிகவும் முக்கியமானது |
ஜவுளி உற்பத்தியாகும். டாக்கா மஸ்லின் , லாகூர் கம்பளம் , காஷ்மீர் சால்வை , பனாரஸ் கைப்பின்னல் போன்றவை உலகப் புகழ் பெற்றவையாகும். தந்தத்திலான பொருட்கள் , மரவேலைப்பாடுகள் , அணிகலன்கள் போன்ற இந்தியப் பொருட்களை மக்கள் பெரிதும் விரும்பி வாங்கினர். மஸ்லின் துணிக்குப் பெயர் பெற்ற டாக்கா தவிர , கிருஷ்ணா நகர் , சந்தேரி , ஆரணி , பனாரஸ் போன்ற ஜவுளி உற்பத்தி மையங்கள் புகழ் பெற்றவை. அகமதாபாத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி , துப்பட்டா , லக்னோ சிகான் , நாக்பூர் சரிகைப் பட்டுப்புடவை போன்றவையும் உலகப்புகழ் பெற்றவை. |
வங்காளத்திலிருந்த மூர்ஷிதாபாத் , மால்டா தவிர , பிற சிறு நகரங்களும் பட்டுத்துணிக்கு பெயர் பெற்றவையாகும். காஷ்மீர் , பஞ்சாப் , மேற்கு ராஜஸ்தான் கம்பளித் துணிக்கு பெயர் பெற்றவையாகும். ஜவுளித் தொழில் தவிர , கப்பல் கட்டுதல் , தோல் மற்றும் உலோக உற்பத்தியும் இந்தியாவின் சிறந்த தொழில்களாகும். பளிங்கு கற்களை வெட்டி வழவழப்பாக்குவது , தந்த வேலை , சந்தன சிற்பங்கள் இந்திய தொழில்களில் குறிப்பிடத்தக்கவையாகும். பித்தளை , செம்பு , வெண்கலப் பாத்திரங்களுக்கு மொராதாபாத் , காசி ஆகிய நகரங்கள் பிரசித்தி பெற்றவை. நாசிக் , பூனா , |
ஹைதராபாத் , தஞ்சாவூர் சிறந்த உலோக வேலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. கண்ணாடித் தொழில் கோல்ஹாபூர் , சதாரா , கோரக்பூர் , ஆக்ரா , சித்தூர் , பாலக்காடு போன்ற இடங்களில் சிறந்து விளங்கியது. கட்ச் , சிந்து , பஞ்சாப் ஆகிய இடங்களில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தங்கம் , வெள்ளி , வைர நகைகள் உற்பத்தி இந்தியாவின் பல இடங்களில் நடைபெற்றன. இந்தியப் பொருளாதாரம் சுறுசுறுப்பாக இயங்கியது என்பதற்கு இத்தகைய கைத்தொழில்கள் சான்றாகும். இத்தகைய உலகப் புகழ்பெற்ற இந்திய கைத்தொழில் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சரியத் தொடங்கியது. |
இதற்கு பல காரணங்களைக் கூறலாம். முதலாவதாக , ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக்குழுபின்பற்றிய கொள்கை இந்திய கைத்தொழிலுக்கு கேடு விளைவிப்பதாக இருந்தது. தொழிற்புரட்சியின் விளைவாக , இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட விலை மலிந்த பொருட்கள் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டன. இதனால் , இந்திய பொருட்களின் விற்பனை உள்நாட்டிலும் , அயல் நாட்டிலும் பெருமளவு குறைந்தது. 1769 ல் வணிகக்குழு Page 66 of 284 வங்காளத்தில் பட்டு இழை உற்பத்திக்கு ஆதரவளித்தது. ஆனால் பட்டுத்துணி விற்பனைக்கு பல தடைகளை விதித்தது. 1813 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் |
பொருட்களை இந்தியாவில் விற்பதற்கேற்ற வகையில் வணிகக்குழு பல்வேறு திட்டங்களை தீட்டியது. இதற்காக , வரிக்கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. எடுத்துக்காட்டாக , 1835 ல் , பிரிட்டிஷ் பருத்தி துணிக்கு இறக்குமதி வரி 2.5 சதவிகிதம் என்று புதிய கடல் வாணிக விதிமுறைகள் நிர்ணயித்தன. அதேபோல் , இங்கிலாந்து பொருட்கள் இங்கிலாந்து நாட்டு கப்பல்களில் மட்டுமே கொண்டுவரப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இத்தகைய கொள்கைகளால் , இந்திய பருத்தி ஆடைகள் இங்கிலாந்து சந்தைக்கு செல்ல இயலவில்லை. அதே சமயம் , இங்கிலாந்து பொருட்கள் இந்திய |
சந்தையில் குவிந்து கிடந்தன. இரண்டாவதாக. இந்தியாவில் பிரிட்டிஷாரின் அரசியல் செல்வாக்கு அதிகரித்த பிறகு , இந்திய ஆட்சியாளர்கள் வீழ்ச்சியடையத் தொடங்கினார்கள். இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த அரச உடைகள் , ஆயுதங்கள் , கலைப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கான தேவைகளும் குறையத் தொடங்கின. மூன்றாவதாக , பரம்பரை அரச வம்சங்கள் , பிரபுக்கள் , செல்வந்தர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்தனர். அவர்கள் பயன்படுத்திவந்த பரம்பரை ஆடம்பரப் பொருட்களின் தேவையும் பெருமளவு குறைந்தன. நான்காவதாக , தொழிற்புரட்சியின்போது ஐரோப்பாவில் |
புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைத்தறிகளுக்குப் பதில் விசைத்தறிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் இயந்திரங்கள் சிறிது சிறிதாக கொண்டுவரப்பட்டதால் , கைத்தொழில் நசிந்தது. இயந்திரத்தைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மலிவான விலையில் கிடைத்தன. குறைந்த நேரத்தில் அதிக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஐந்தாவதாக , புதிய தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளும் பொதுமக்கள் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தின. முன்பு , மாட்டு வண்டிகளும் படகுகளும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன. ஆனால் , |
பின்னர் ரயில்பாதைகளும் நீராவிப் படகுகளும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. நாட்டின் உட்பகுதிகளை இணைக்கும் வகையில் சாலைகளும் போடப்பட்டன. இங்கிலாந்திலிருந்து எளிதாக உற்பத்திப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தியர் பலர் வேலையிழந்தனர். இந்திய கைத்தொழில் வல்லுநரும் , கலைப்பொருட்கள் செய்வோரும் வாழ்வாதாரத்தை இழந்தனர். கற்றல் அடைவுகள் இப்பாடத்தைக் கற்று மாணவர் பெற்ற தகவல்கள் : 1. பிரிட்டிஷாரின் வேளாண் கொள்கையின் நோக்கங்கள். 2. நிலையான நிலவரித்திட்டம் , ரயத்துவாரி முறை , மகல் வாரி முறை. 3. பிரிட்டிஷாரின் |
நிலவருவாய் நிர்வாகத்தால் ஏற்பட்ட விளைவுகள் 4. இந்திய கைத்தொழில்களும் அவற்றின் சிறப்பும். 5. பிரிட்டிஷாரின் சுரண்டல் கொள்கை 6. இங்கிலாந்தில் நடைபெற்ற கைத்தொழில் நலிந்த விதம். 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய கைத்தொழில்கள் நசியத் தொடங்கின. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி இந்திய கைத்தொழில்களை ஊக்குவித்தது. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு நிலத்தை ஏலத்துக்கு விட்டு ஆண்டுக்குத்தகை முறையை அறிமுகப்படுத்தினார். 2. பூவேலைப்பாடுகளுக்கு பனாரஸ் புகழ்பெற்று விளங்கியது. 3. இந்திய |
வணிக நலன்களுக்கு ஏற்றவாறு கிழக்கிந்திய வணிகக்குழு தனது சுங்க வரிக் கொள்கைகளை மாற்றியமைத்தது. சிறு குறிப்பு எழுதுக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) மகல்வாரி முறை இரயத்துவாரி முறை பனாரஸ் தஞ்சாவூர் டாக்கா லாகூர் பட்டு கம்பள விரிப்புகள் உலோக வேலைப்பாடுகள் சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது நிலையான நிலவரித்திட்டம் ஜமீன்தார்களிடமிருந்து நீதித்துறை பணிகளை திரும்பப் பெற்றது. இடையே ஈ. இரயத்துவாரி முறையின்கீழ் குடியானவருக்கும் அரசுக்கும் ஜமீன்தார்கள் போன்ற இடைத்தரகர்கள் இருந்தார்கள். பாடம் – 8 |
கல்வி , சமுதாய சீர்திருத்தங்கள் கற்றல்அடைவுகள் இந்தப் பாடத்தை பயில்வதால் மாணவர்பெறும் தகவல்கள் : 1. பிரிட்டிஷாரின் கல்வி மற்றும் மொழிக்கொள்கை. 2. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி அறிமுகம் பற்றிய விவாதம். 3. இந்தியாவில் சமூக சீர்திருத்தங்கள் செய்யப்படுதல். 4. மகளிர் தொடர்பான சட்டங்கள். 5. ஜாதி முறைக்கு எதிரான போராட்டமும் , ஜாதி பாகுபாட்டைப் போக்குவதற்கு கொண்டுவரப்பட்ட சட்டங்களும். மொழி மற்றும் கல்விக் கொள்கை ஆரம்ப காலத்தில் கிழக்கிந்திய வணிகக்குழு கல்வி தொடர்பான நடவடிக்கைகிளில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. 1757 ல் |
ஆங்கிலேயர் வங்காளத்தைக் கைப்பற்றியபோதும் , கல்வியைப் புகட்டும் பொறுப்பு இந்தியர்களிடமே இருந்தது. அரபி , பாரசீகம் , வடமொழி ஆகியவற்றில் எழுதப்பட்ட நூல்களே கற்பிக்கப்பட்டு வந்தன. 1781 ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கல்கத்தாவில் ஒரு மதரஸாவை நிறுவி அங்கு அரபி , பாரசீக மொழிகள் உட்பட முஸ்லீம் சட்டங்கள் கற்பிக்கப்படுவதை ஊக்குவித்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு 1791 ல் பிரிட்டிஷ் தூதுவரான ஜோனாதன் டங்கன் என்பவரது சீரிய முயற்சியால் காசியில் ஒரு வடமொழிக் கல்லூரி நிறுவப்பட்டது. இங்கு , இந்துச் சட்டங்கள் மற்றும் தத்துவம் போன்றவை |
கற்பிக்கப்பட்டன. இதனால் , 19 ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று பத்தாண்டுகளில் பாரம்பரிய கல்வி முறைகளும் , கல்விக்கூடங்களுமே கல்வியைப் பரப்பி வந்தன என்பது தெளிவாகும். வங்காளத்தில் மட்டும் ஏறத்தாழ 80,000 பாரம்பரிய கல்விக்கூடங்கள் செயல்பட்டு வந்ததாக அரசாங்க மற்றும் திருச்சபை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது , அந்த மாகாணத்தில் மட்டும் குறைந்தபட்சம் 400 பேருக்கு ஒரு கல்விச்சாலை என்ற விகிதத்தில் செயல்பட்டன. இதுவே , கீழ்த்திசை கல்விமுறையின் சிறப்பாகும். சென்னை , பம்பாய் , பஞ்சாப் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட |
ஆய்வும் இத்தகைய கல்வி நிலை இருந்ததையே உறுதிப்படுத்துகிறது. அன்றைய இந்தியாவில் கிராமந்தோறும் பள்ளிகள் இருந்தன. கிழக்கிந்திய வணிக்குழுவின் ஆட்சி , கல்வியைப் பொறுத்தவரை ஒருவித இரட்டை நிலைக்கொள்கையைப் பின்பற்றியது. நடைமுறையிலிருந்த கீழ்த்திசை கல்விமுறையை ஊக்குவிக்க மறுத்தது. மாறாக , ஆங்கில மொழிக்கும் மேலை நாட்டுக் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்தது. 1813 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கென அரசு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒதுக்க வகை செய்தது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டபோதே இது |
குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. சட்டம் இயற்றப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியும் இது குறித்த புதிய விவாதங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. எனவே , கல்விக்கென அரசு சல்லிக்காசும் செலவிடவில்லை. அக்காலத்தில் பிரிட்டிஷ் அறிஞர்கள் இந்தியாவில் கல்வி வளர்ச்சி குறித்து இருவேறு கருத்துக்களை கொண்டிருந்தனர். கீழ்த்திசைவாதிகள் ( ஓரியண்டலிஸ்ட் ) என்றழைக்கப்பட்ட குழுவினர் இந்திய மொழிகளும் கீழ்த்திசை பாடங்களும் வளர்க்கப்பட வேண்டும் என வாதிட்டனர். மற்றொரு பிரிவினரான , ஆங்கிலவாதிகள் ( ஆங்கிலிசிஸ்ட் ) மேலை நாட்டு அறிவியலும் |
இலக்கியமும் ஆங்கில மொழிவழி கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறினர். 1828 ல் தலைமை ஆளுநராக பதவியேற்ற வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவில் ஆங்கில மொழி வழிக்கல்வி வேண்டும் என வலியுறுத்தினார். 1835 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கல்விக் குழுவில் இடம் பெற்றிருந்த 10 உறுப்பினர்களும் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். குழுவின் தலைவர் மெக்காலே பிரபு உள்ளிட்ட ஐந்து பேரும் ஆங்கில மொழி வழிக்கல்வியை ஆதரித்தனர். எஞ்சிய ஐந்து பேர் கீழ்த்திசை மொழிகளுக்காக வாதாடினார். இந்த முட்டுக்கட்டை நிலை பிப்ரவரி 2 ம் நாள் வரை தொடர்ந்தது. |
அன்றுதான் , குழுவின் தலைவரான மெக்காலே பிரபு ஆங்கில மொழி வழிக்கல்வியை ஆதரித்த தனது புகழ்பெற்ற குறிப்பை அறிவித்தார். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் மீறி 1835 மார்ச் 7 ஆம் நாள் பெண்டிங் பிரபு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த தீர்மானத்தின்படி , இனிமேல் மேலை நாட்டு அறிவியல் மற்றும் இலக்கியங்களை ஆங்கிலமொழி வழியில் பயிற்றுவிப்பதற்கே அரசு நிதி செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கல்வித்துறை 1854 ஆம் ஆண்டு சர் சார்லஸ் உட் என்பவர் தனது பிரமாண்டமான கல்விக் கொள்கையடங்கிய அறிக்கையை அனுப்பி ஐந்து |