text
stringlengths
11
513
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. ரிப்பன் குறித்த மதிப்பீடு இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராய்களிலேயே மிகவும் புகழ்மிக்கவர் ரிப்பன் பிரபு ஆவார். இந்தியர்களின் பிரச்சினைகளை கனிவுடனும் , பரிவுடனும் கையாண்ட காரணத்தால் அவரை ‘ ரிப்பன் தி குட் ' ( ரிப்பன் எங்கள் அப்பன் ) என்று இந்திய மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது , நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப் பெற்றது , தல சுய ஆட்சியை அறிமுகப்படுத்தியது , மைசூரைத் திரும்பி வழங்கியது
போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது. அவரது செயல்பாடுகளை நன்றியுடன் போற்றிய இந்தியர்கள் ரிப்பன் பதவி விலகியதற்காக மிகவும் வருத்தப்பட்டனர். கர்சன் பிரபு ( 1899-1905 ) பிரிட்டிஷ் இந்திய ஆட்சியாளர்களில் , வெல்லெஸ்லி பிரபு , டல்ஹவுஸி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். அவர் ஒரு முழுமையான பேரரசுக் கொள்கையாளர் , ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார். அவரது உள்நாட்டு நிர்வாகத்தை பின்வரும் தலைப்புகளில்
பார்க்கலாம். கல்வி சீர்திருத்தங்கள் கல்வி நிறுவனங்களில் கட்டுப்பாடும் , கல்வித்தரமும் குறைந்து வருவதை கர்சன் உணர்ந்தார். பல்கலைக்கழகங்கள் இந்திய அரசியல் புரட்சியாளர்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் என அவர் கருதினார். நாட்டில் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்கு 1902 ல் ஒரு பல்கலைக்குழுவை நியமித்தார். அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று , 1904 ஆம் ஆண்டு இந்திய பல்கலைக்கழகங்கள் சட்டத்தை கர்சன் பிரபு கொண்டுவந்தார். இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. கர்சன் பிரபு
காவல்துறை , ராணுவ சீர்திருத்தங்கள் திறமையிலும் கட்டுப்பாட்டிலும் கர்சன் நம்பிக்கையுடையவர். 1902 ல் சர் ஆண்ட்ரூ பிரேசர் தலைமையில் காவல்துறைக் குழு ஒன்றை அவர் நியமித்தார். அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்தினார். அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் பயிற்சிப்பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. மாகாண காவல் பணித்துறை அறிமுகப்படுத்தப்பட்டது. ராணுவத்தை சீரமைப்பதற்கு , இந்தியாவில் படைத்தளபதியாக இருந்த கிச்சனர் பிரபுவின் கையில் விடப்பட்டது. கல்கத்தா மாநகராட்சி சட்டம் ( 1899 ) 1899 ஆம் ஆண்டு கர்சன் கல்கத்தா மாநகராட்சி
சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன்படி , தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு , அதிகாரிகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும் , கல்கத்தா மாநகராட்சியில் இந்தியர்களைவிட , ஆங்கிலேயருக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. கர்சனது இந்த மக்கள் விரோத நடவடிக்கை இந்திய உறுப்பினர்களிடையே மனக்கசப்பை உண்டாக்கியது. தொல்பொருள் சின்னங்களை பாதுகாத்தல் சரி இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய சின்னங்களை பாதுகாப்பதில் கர்சன் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு முன்பும் சரி
பின்பும் எந்தவொரு வைஸ்ராயும் தொல்பொருள் சின்னங்களின்பால் இவ்வளவு அக்கறை காட்டியதில்லை. 1904 ஆம் ஆண்டு பண்டைய தொல்பொருள் சின்னங்கள் சட்டத்தை அவர் கொண்டுவந்தார். அதன்படி அரசாங்கமும் , உள்ளாட்சி அதிகாரிகளும் தங்கள் ஆட்சிப்பகுதியில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களை பாதுகாக்கவேண்டும். அவற்றை அழிப்பது குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது. வங்கப் பிரிவினை ( 1905 ) 1905 ஜூலை 4 ஆம் நாள் வங்காளத்தை இருமாநிலங்களாக பிரிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட கிழக்கு வங்காளத்தில் அஸ்ஸாம் ,
டாக்கா , ராஜகாஹி , சிட்டகாங் போன்ற பகுதிகள் அடங்கியிருந்தன. இதன் தலைநகர் டாக்கா. நிர்வாக வசதியை கர்சன் தமது வங்கப்பிரிவினைக்கு காரணமாகக் கூறினாலும் , வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்துவதாக இது அமைந்தது. இதனால் , நாடு முழுவதும் வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் தேசிய இயக்கம் மேலும் வலுப்பட்டது. கர்சன் பற்றிய மதிப்பீடு தனது நாற்பதாவது வயதில் கர்சன் பிரபு இந்த பதவியை ஏற்றார். அவர் தனது சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு , ஆய்வுக் குழுக்களை அமைத்து ,
அவற்றின் பரிந்துரைகளைக் கேட்டறிந்தார். இந்தியரின் பிரச்சினைகளை நன்கு ஆய்வு செய்தார். தொடக்கத்தில் அவர் புகழ்பெற்றிருந்தாலும் , வங்கப்பிரிவினை அவற்றை விரைவிலேயே மங்கச் செய்தது. கற்றல் அடைவுகள் இந்த பாடத்தை கற்றதனால் மாணவர் அறிந்து கொண்டது. 1. நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் , பஞ்சத்தைப் போக்க எடுத்த அரைகுறை நடவடிக்கை போன்ற லிட்டனின் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள். 2. ஆப்கானிய கொள்கையின் தோல்வி - பிரிட்டிஷ் அதிகாரிகள் கொலை. கல்வி , தலசுய ஆட்சி , தொழிலாளர் நலன் உள்ளிட்ட ரிப்பனின் தாராள சீர்திருத்தங்கள். 3.
நீதித்துறையில் இனப்பாகுபாட்டை போக்க அவர் எடுத்த முயற்சிகள் இல்பர்ட் மசோதா - தேசிய இயக்கத்திற்கு அது வித்திட்டது. கர்சனின் சீர்திருத்தங்கள் - வங்கப் பிரிவினை அதன் விளைவுகள் 5. சரியான விடையை தேர்வு செய்க. இந்தியாவின் முதல் வைஸ்ராய் அ. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆ. டல்ஹவுசி பிரபு. கானிங் பிரபு ஈ. ரிப்பன் பிரபு நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது ? அ. 1878 ஆ. 1882 இ. 1898 ஈ. 1902 பொருத்துக. படைக்கலச் சட்டம் உள்ளாட்சி அமைப்புகள் கல்விக் குழு வங்கப்பிரிவினை பயிற்சி பகுதி- அ கோடிட்ட இடத்தை நிரப்புக.
முதலாவது பஞ்ச நிவாரணக்குழு இந்தியப் பல்கலைக் கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 5. காவல்துறைக் குழு அ. ஆண்ட்ரு பிரேசர் கர்சன் பிரபு ரிப்பன் பிரபு வில்லியம் ஹண்டர் லிட்டன் பிரபு இ . தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. பாடம் – 13 சமூக , சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெரும் செய்திகள் : 1. பிரம்ம சமாஜமும் அதன் சேவைகளும் 2. ஆரிய சமாஜம் , ராமகிருஷ்ண இயக்கம் மற்றும் பிற அமைப்புகள் 3. இராஜா ராம்மோகன் ராய் , சுவாமி தயானந்த சரஸ்வதி , விவேகானந்தர் போன்ற சீர்திருத்தவாதிகளின் சேவைகள் 4. இந்திய
முஸ்லீம்களிடையே தோன்றிய சீர்திருத்த இயக்கங்கள் 5. சீக்கிய , பார்சி சீர்திருத்த இயக்கங்கள் 6. தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள் ராமலிங்க அடிகள் , வைகுந்த சுவாமி , ஈ.வெ.ரா. பெரியார் நவீன இந்திய வரலாற்றில் சமூக , சமய சீர்திருத்த இயக்கங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இராஜாராம் மோகன் ராய் , சுவாமி தயானந்த சரஸ்வதி , சுவாமி விவேகானந்தர் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலில் மக்களிடையே சமூக பண்பாட்டு விழிப்புணர்வு தோன்றியது. மேற்கத்திய தாராளச் சிந்தனைகள் பரவியதும் , சீர்திருத்த இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன.
இந்திய மக்களின் சமூக , சமய வாழ்க்கையில் இந்த இயக்கங்கள் குறிப்பிடத் தக்க மாறுதல்களை தோற்றுவித்தன. இராஜா ராம்மோகன் ராய் 1772 ல் வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் பிறந்த அவர் ஆற்றல்மிகு சுயசிந்தனையும் பகுத்தறியும் திறனும் மிக்கவராக விளங்கினார். விவிலியத்தையும் , இந்து மற்றும் முஸ்லீம் சமய நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலம் , சமஸ்கிருதம் , பாரசீகம் , அராபிக் , பிரஞ்சு , லத்தீன் , கிரேக்கம் , ஹூப்ரூ உள்ளிட்ட பல மொழிகளிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1815 ல் ஆத்மிய சபையை அவர் நிறுவினார். பின்னர் 1828 ல்
இந்த சபையே பிரம்ம சமாஜமாக வளர்ச்சி பெற்றது. இந்த அமைப்பின்மூலம் ‘ கடவுள் ஒருவரே ’ என்று ராம் மோகன் ராய் பிரச்சாரம் செய்தார். உபநிடதங்கள் , விவிலியம் , குர்ஆன் போன்ற சமய நூல்களின் ராஜா ராம்மோகன் ராய் கருத்துக்களை ஒன்றிணைத்து பல்வேறு சமயத்தினரிடம் ஒற்றுமையேற்படுத்த அவர் முயற்சித்தார். ஆத்மிய சபையின் பணியை மகரிஷி திபேந்திரநாத் தாகூர் மேற்கொண்டார். ( ரவிந்திரநாத் தாகூரின் தந்தை ). இவர்தான் பிரம்ம சமாஜம் என்று இச்சபைக்கு பெயர்மாற்றம் செய்தார். இந்தியாவின் தலைசிறந்த சமூக அமைப்பாக பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார்.
1829 ல் வில்லியம் பெண்டிங் பிரபு சதி முறையை ஒழிக்க முன்வந்தபோது , ராஜா ராம்மோகன் ராய் அவருக்கு உறுதுணையாக நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். குழந்தை திருமணத்தையும் , பெண் சிசுக்கொலையும் அவர் கடுமையாக எதிர்த்தார். விதவைகள் மறுமணம் , பெண் கல்வி , பெண்களுக்கான சொத்துரிமை போன்றவற்றை அவர் ஆதரித்தார். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சாதிமுறை பெரும் தடைக்கல்லாக இருப்பதை அவர் உணர்ந்தார். மனித குலத்தின் சமத்துவத்தில் அவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். பிராமண புரோகிதர்களின் ஆதிக்கத்தில் அவருக்கு
நம்பிக்கையில்லை. கலப்பு திருமணத்தையும் அவர் ஆதரித்தார். தாமே ஒரு முஸ்லீம் குழந்தையை தத்து எடுத்துக்கொண்டார். 1817 ல் , சமயப்பரப்பாளரான டேவிட் ஹேர் என்பருடன் இணைந்து கல்கத்தாவில் இந்துக் கல்லூரியை ( இதுவே தற்போதைய கல்கத்தா மாநிலக் கல்லூரி ) நிறுவினார். பெண்களுக்கான பள்ளிகளையும் அவர் நிறுவினார். இராம்மோகன் ராய் வங்காள மொழியில் வெளிவந்த முதலாவது வார இதழான ' சம்வாத்கௌமுதி'யை தொடங்கினார். பாரசீக வார இதழான மீரத் - உல் - அக்பர் என்பதற்கும் ஆசிரியராகத் திகழ்ந்தார். 1833 ல் இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் என்ற இடத்தில்
அவர் மறைந்தார். ஹென்றி விவியன் டெரோசியோவும் இளம் வங்காள இயக்கமும் இளம் வங்காள இயக்கத்தை நிறுவியவர் ஹென்றி விவியன் டெரோசியோ ஆவார். 1809 ல் கல்கத்தாவில் பிறந்த அவர் கல்கத்தா இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1833 ல் காலரா நோய் கண்டு இளம் வயதிலேயே இறந்தார். அவரது சீடர்கள் டெரோசியன்கள் என்றும் அவரது இயக்கம் இளம் வங்காள இயக்கம் என்றும் அழைக்கப்ட்டது. பழமையான கண்மூடிப்போன பழக்கவழக்கங்களை இவர்கள் கடுமையாக தாக்கிப் பேசினர். பெண் உரிமை , பெண் கல்வியை பெரிதும் ஆதரித்தனர். உருவ வழிபாடு , ஜாதிமுறை , மூட
நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தியும் விவாதங்கள் நடத்தியும் சீர்திருத்தத்தில் ஈடுபட்டனர். தயானந்த சரஸ்வதி விவியன் டொராசியோ சுவாமி தயானந்த சரஸ்வதியும் ஆரிய சமாஜமும் 1875 ஆம் ஆண்டு பம்பாயில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தார். குஜராத்தின் கத்தியவார் பகுதியில் பிறந்த சுவாமி தயானந்தர் ( 1824-83 ) சிறந்த அறிஞர் , நாட்டுப்பற்று மிக்கவர் , சமூக சீர்திருத்தவாதி , மறுமலர்ச்சியாளர். வேதங்கள் தாம் உண்மையான அறிவுக்கு அடிப்படை என்று அவர் நம்பினார். " வேதகாலத்திற்கு
திரும்புங்கள் " என்பதே அவரது முழக்கமாகும். உருவ வழிபாடு , குழந்தை திருமணம் , பிறப்பின் அடிப்படையிலான ஜாதிமுறை போன்றவற்றை அவர் எதிர்த்தார். கலப்பு மணத்தையும் , விதவை மறுமணத்தையும் அவர் ஆதரித்தார். பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்களை மீண்டும் இந்து அமைப்புக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் அவர் ‘ சுத்தி ’ இயக்கத்தை தொடங்கினார். அவரது கருத்துக்களை ‘ சத்யார்த்த பிரகாஷ் ' என்னும் நூலையும் அவர் எழுதினார். உள்ளடக்கிய பம்பாயில் தோற்றுவிக்கப்பட்ட போதிலும் , ஆரிய சமாஜம் பஞ்சாபில் சக்திமிக்க இயக்கமாக வளர்ந்து இந்தியாவின் பல
பகுதிகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆரிய சமாஜம் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டது. 1886 ல் முதலாவது தயானந்த ஆங்கிலோ வேத பள்ளி ( டி.ஏ.வி ) லாகூரில் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் இந்தியாவின் பிறபகுதிகளில் மேலும் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த லாலாலஜபதி ராய் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரார்த்தனை சமாஜம் 1867 ல் பம்பாயில் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் என்பவரால் பிரார்த்தனை சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது. இது பிரம்ம
சமாஜத்திலிருந்து உதயமானதாகும். இந்து சமயத்திற்குள்ளேயே சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது இதன் நோக்கமாகும். சமபந்தி , கலப்பு மணம் , விதவைகள் மறுமணம் , பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு போன்றவற்றில் இந்த இயக்கம் அதிக கவனம் செலுத்தியது. 1870 ல் நீதிபதி எம்.ஜி.ரானடே , ஆர்.ஜி. பண்டார்க்கர் இருவரும் இதில் சேர்ந்து இந்த இயக்கத்திற்கு மேலும் வலிமை சேர்த்தனர். நீதிபதி ரானடே தக்காண கல்விக் கழகத்தையும் போற்றி வளர்த்தார். சுவாமி விவேகானந்தரும் ராமகிருஷ்ண இயக்கமும் உலகறியச்செய்தார். எம்.ஜி.ரானடே சுவாமி
விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா ( 1863–1902 ). ஸ்ரீ ராம் கிருஷ்ண பரமஹம்சரின் முக்கிய புகழ்பெற்ற சீடராக அவர் விளங்கினார். கல்கத்தாவில் செல்வமிக்க வங்காளக் குடும்பத்தில் பிறந்த நரேந்திர நாத் தத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பயின்றார். 1886 ல் நரேந்திரநாத் தத்தா துறவறம் பூண்டார். விவேகானந்தர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். வேதாந்த தத்துவத்தை அவர் போதித்தார். ஜாதிமுறையை சாடிய அவர் அப்போது இந்து சமயத்தில் ஊறிக்கிடந்த சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கண்டனம் செய்தார். 1893 செப்டம்பரில் சிகாகோ (
அமெரிக்கா ) வில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில் கலந்துகொண்ட சுவாமி விவேகானந்தர் இந்தியா மற்றும் இந்து சமயத்தின் புகழை விவேகானந்தர் வலிமை மற்றும் தன்னம்பிக்கையை தமது அடிப்படை கொள்கைகளாகக் கொண்டிருந்தார். ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையை மேம்படுத்த உழைக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார். மனிதனுக்கு செய்யும் சுவாமி விவேகானந்தர் சேவையே கடவுளுக்கு ஆற்றும் சேவை என்று அவர் திடமாக நம்பினார். 1897 ல் ஹவுராவிலுள்ள பேலூர் என்ற இடத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தை அவர் தோற்றுவித்தார். அது ஒரு சமூக சேவை மற்றும்
அறக்கொடை அமைப்பாகும். பள்ளிகள் , கல்லூரிகள் , மருத்துவமனைகள் , அனாதை இல்லங்கள் போன்றவற்றை நிறுவி , அவற்றின் மூலம் மக்களுக்கு உதவியும் சமூகத்திற்கு சேவையும் செய்வதே இந்த இயக்கத்தின் குறிக்கோளாகும். பிளாவட்ஸ்கி அம்மையார் பிரம்மஞான சபை 1875 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த பிளாவட்ஸ்கி அம்மையார் மற்றும் அமெரிக்கா கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் என்ற இருவராலும் நியூயார்க்கில் ( அமெரிக்கா ) பிரம்ம ஞான சபை நிறுவப்பட்டது. இன , நிற , சமயப்பாகுபாடுகள் இன்றி உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதும் பண்டைய சமயம் மற்றும் தத்துவங்களை
ஆய்வு செய்வதும் அவர்களது முக்கிய நோக்கங்களாகும். இந்தியாவிற்கு வந்த அவர்கள் 1882 ல் சென்னை , அடையாற்றில் தங்களது தலைமையிடத்தை நிறுவினர். பின்னர் 1893 ல் திருமதி. அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியாவிற்கு வந்து , ஆல்காட்டின் மறைவுக்குப்பின் இச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருமதி. அன்னி பெசன்ட் மதன் மோகன் மாளவியாவுடன் இணைந்து பனராசில் மத்திய இந்துப்பள்ளியை நிறுவினார். பின்னர் அது பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றது. பண்டித ஈஸ்வர சந்திர வித்யா சாகர் பண்டித ஈஸ்வர சந்திர வித்யா சாகர் ஒரு
சிறந்த கல்வியாளர் , மனித நேயமிக்கவர் , சமூக சீர்திருத்தவாதி. 1820 ல் வங்காளத்தில் மிட்னாபூரில் ஒரு கிராமத்தில் பிறந்தார். நன்கு படித்து வில்லியம் கோட்டை கல்லூரியில் வங்காள மொழித் துறையின் தலைமைப் பண்டிதரானார். இந்திய சமுதாயத்தில் கல்வியைப் பரப்புவதன் மூலமாகவே சீர்திருத்தம் கொண்டுவர முடியும் என்று அவர் கருதினார். பெண்களுக்காக பல பள்ளிகளை நிறுவினார். பெதூன் பள்ளியை நிறுவ ஜெ.டி. பெதூன் என்பவருக்கு உறுதுணையாக இருந்தார். கல்கத்தாவில் மெட்ரோ போலிடன் நிறுவனத்தை ஏற்படுத்தினார். குழந்தை திருமணத்தை கடுமையாக எதிர்த்த
அவர் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார். 1856 ஆம் ஆண்டு விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கல்வியைப் பரப்புவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் விதத்தில் அவருக்கு வித்யா சாகர் என்ற பட்டம் பண்டிட் வித்யா சாகர் வழங்கப்பட்டது. ஜோதிபா கோவிந்தா பூலே மகாராஷ்டிரத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோதிபா கோவிந்த பூலே. உயர்ந்த ஜாதி ஆதிக்கத்துக்கும் பிராமணிய சக்திகளுக்கும் எதிராக அவர் தனது வாழ்நாள் முழுவதும் நீண்ட போராட்டத்தை மேற்கொண்டார். 1873 ல் ஜாதிமுறையை எதிர்த்துப் போராட சத்யசோதக் சமாஜம்
என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். மகாராஷ்டிரத்தில் விதவைகள் மறுமண இயக்கத்திற்கு முன்னோடியாக அவர் செயல்பட்டார். கல்விக்காகவும் பாடுபட்டார். ஜோதிபா கோவிந்தா பூலே மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து 1851 ல் பூனாவில் முதலாவது பெண்கள் பள்ளியை நிறுவினர். பெண் முஸ்லிம் சீர்திருத்த இயக்கங்கள் தொடக்கத்தில் மேலை நாட்டுக் கல்வியை முஸ்லிம்கள் புறக்கணித்தமையால் , அவர்களிடையே சீர்திருத்த இயக்கங்கள் சற்று தாமதமாகவே தோன்றின.அத்தகைய முதல் முயற்சி 1863 ல் கல்கத்தாவில் தோற்றுவிக்கப்பட்ட முகமதிய இலக்கிய கழகம் Page 182 of 284
ஆகும். ஆங்கிலக் கல்வியையும் மேலை நாட்டு அறிவியலையும் பரப்புவதே இதன் முக்கிய நோக்கமாகும். வங்காளத்தில் இந்த அமைப்பு பல பள்ளிகளை நிறுவியது. அலிகார் இயக்கம் அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர் சர் சையது அகமது கான் ( 1817-98 ) ஆவார். முஸ்லீம்களின் சமூக மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக இது தோற்றுவிக்கப்பட்டது. இடைக்காலத்திய பிற்போக்குத் தன்மையை போக்கி , சமயத்தில் முற்போக்கு சிந்தனைகளை அவர் ஏற்படுத்தினார். முஸ்லிம்களிடையே தாராளக் கருத்துக்களைப் பரப்புவதற்காக 1866 ல் முகமதிய கல்விக் கழகத்தை தோற்றுவித்தார்.
முஸ்லிம்களுக்கு ஆங்கிலக் கல்வி புகட்டுவதற்காக 1875 ல் அலிகாரில் அவர் ஒரு பள்ளியை நிறுவினார். இதுவே பின்னர் முகமதிய ஆங்கிலேய கீழ்த்திசைக் கல்லூரியாகவும் , தற்போதைய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமாகவும் வளர்ச்சி அடைந்தது. முஸ்லிம் உலேமாக்களின் வைதீக பிரிவினரால் தோற்றுவிக்கப்பட்டதே தியோபாண்ட் இயக்கமாகும். இது ஒரு மறுமலர்ச்சி இயக்கமாகும். இதன் இரண்டு முக்கிய குறிக்கோள்கள் : 1 ) குர்ஆன் மற்றும் ஹாடிஸ் இல் உள்ளவாறு இஸ்லாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது. 2 ) அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உரிமைப்
போராட்டத்தை தொடர்வது. முகமது உல் ஹாசன் என்ற புதிய தியோபாண்ட் இயக்க தலைவர் இப்பிரிவின் சமய கருத்துக்களில் அரசியல் மற்றும் அறிவார்ந்த சிந்தனைகளைப் புகுத்தினார். இஸ்லாமின் தாராளமான விளக்கங்கள் இவ்வியக்கத்தினரிடையே ஒரு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சீக்கிய சீர்திருத்த இயக்கம். இந்தியாவின் பிற இடங்களைப் போலவே பஞ்சாபிலும் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றின. பாபா தயாள் தாஸ் என்பவர் நிரங்காரி இயக்கத்தை தோற்றுவித்தார். கடவுளை உருவமற்றவராக ( நிரங்கார் ) வழிபடவேண்டும் என்று அவர் கூறினார். பாமா ராம் சிங் நாம்தாரி
இயக்கத்தை நிறுவினார். இவரது சீடர்கள் வெள்ளை உடை அணிந்து , புலால் உண்பதை தவிர்த்தனர். 1870 ல் லாகூர் மற்றும் அமிர்தசரசில் துவக்கப்பட்ட சிங் சபாக்கள் சீக்கிய சமுதாயத்தை சீர்திருத்த முற்பட்டன. 1892 ல் அமிர்தசரசில் கால்சா கல்லூரி நிறுவப்படுவதற்கு இந்த சபாக்கள் உறுதுணையாக இருந்தன. குருமுகி மற்றும் பஞ்சாபி இலக்கியத்தை இவை ஆதரித்தும் போற்றின. சீக்கிய குருத்வாரக்களிலிருந்து ஊழல்மிக்க மகர்த்களை ( பூசாரிகளை ) நீக்குவதற்கு 1920 ல் அகாலிகள் ஒரு இயக்கத்தை தொடர்பான தோற்றுவித்தனர். இது சட்டங்களை இயற்ற பிரிட்டிஷ்
அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது. பின்னர் , அகாலிகள் தங்களை ஒரு அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டனர். சுயமரியாதை இயக்கமும் ஈ.வெ.ரா பெரியாரும் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாவார். 1921 கள்ளுக்கடை மறியலின்போது , தன் சொந்தத் தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். 1924 ல் அவர் வைக்கம் அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார். கேரளாவில் , வைக்கம் என்ற இடத்தில் ஆலயத்துக்கு அருகில் இருந்த சாலையில் தீண்டத்தகாதவர்கள் நடந்து செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து இந்த போராட்டம்
நடத்தப்பட்டது. வ.வே.சு. ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை அவர் எதிர்த்தார். 1920 முதல் 1925 வரை பெரியார் காங்கிரசில் இருந்து கொண்டே வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையைக் காங்கிரஸ் ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். தந்தை பெரியார் பின்னர் , 1925 ல் அவர் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். திராவிடர்களின் முன்னேற்றம் , பிராமணீய ஆதிக்கத்தற்கு எதிர்ப்பு , இந்து சமய மக்களின் வாழ்வில் அவர்கள் ஏற்படுத்தியிருந்த கட்டுபாடுகளை உடைத்தெரிதல் போன்றவையே சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
ஜாதிமுறை , குழந்தைகள் திருமணம் , கட்டாயப்படுத்தப்பட்ட விதவை முறை போன்றவற்றை அவர் கடுமையாக சாடினார். கலப்புத் திருமணங்களை அவர் ஆதரித்தார். சடங்குகள் இல்லாத பல திருமணங்களை அவரே முன்னின்று நடத்தி வைத்தார். அத்தகைய திருமணம் சுயமரியாதை திருமணம் என்று அழைக்கப்பட்டது. பிறந்த குழந்தைகளுக்கு சமய சார்பற்ற பெயர்களையும் அவர் சூட்டினார். இந்து சமுதாயத்தின் சமூக அடிப்படையான ஜாதிமுறையைப் பற்றிய விளக்க ஏடான மனுதர்ம சட்டங்களை அவர் கடுமையாக எதிர்த்தார். குடியரசு , புரட்சி , விடுதலை போன்ற தமிழ் ஏடுகளைத் தொடங்கி அவற்றின் மூலம்
தனது கருத்துக்களை பெரியார் பரப்பி வந்தார். பெரியாரின் அரும்பணியைப் பாராட்டி தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 1938 ஆம் ஆண்டு ஈ.வெ.ராவுக்கு “ பெரியார் ” பட்டம் வழங்கப்பட்டது. 27.06.1970 ஆம் ஆண்டு ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரை ‘ தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் ’ என பாராட்டி போற்றியது. கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து மாணவர் அறிந்து கொண்டவை : 1. இராஜா ராம் மோகன்ராய் மற்றும் பிரம்ம சமாஜம் 2. சுவாமி தயானந்த சரஸ்வதி , ஆரிய சமாஜத்தின் சேவைகள் 3. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை , கொள்கைகள் , இராமகிருஷ்ண
இயக்கத்தின் சேவைகள் 4. தியோபாண்ட் , அலிகார் இயக்கம் போன்ற முஸ்லீம் சீர்திருத்த இயக்கங்கள் , 5. சீக்கியர்களிடையே தோன்றிய நிரங்காரி , நாம்தாரி இயக்கங்கள் பார்சி சீர்திருத்த இயக்கம். 6. இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் , வைகுண்டசாமியின் அய்யாவழி , பெரியாரின் சுய மரியாதை இயக்கம். அ. மதுரை இ. வடலூர் பின்வருபவர்களில் அலிகார் இயக்கத்தை தொடங்கியவர் யார் ? அ. சர் சையது அகமது கான் இ. முகமது அலி ஜின்னா சத்திய ஞானசபை நிறுவப்பட்ட இடம் பொருத்துக. ஆத்மிய சபை இளம் வங்காள இயக்கம் ஆ. இராமேஸ்வரம் ஈ. சிதம்பரம்
ஆல்காட் இராஜா ராம்மோகன் ராய் பாபா தயாள் பிரார்த்தனை சமாஜம் நிரங்காரி இயக்கம் பிரம்மஞான சபை சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது 1815 ல் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆத்மிய சபையை நிறுவினார். இராஜா ராம்மோகன் ராய் வங்காளத்தின் முதல் வார இதழான சம்வத்குமுதி துவக்கினார். ஹென்றி விவியன் டெரோசோ ஆத்மாராம் பாண்டுரங் இளம் வங்காள இயக்கத்தை தோற்றுவித்தவர் தாசவர் ஆவார். 1867 ல் பம்பாயில் பிரார்த்தனை சமாஜம் நிறுவப்பட்டது. V. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று குறிப்பிடுக. 1. ‘ வேத காலத்திற்கு திரும்புங்கள் ’
என்பது சுவாமி தயானந்த சரஸ்வதியின் கொள்கையாகும். 2. இராமகிருஷ்ணரின் உண்மையான பெயர் நரேந்திரநாத் தத்தா. 3. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் விதவை மறுமணத்தை எதிர்த்தார். 1. ஆரிய சமாஜம் 2. 4. இராமலிங்க அடிகள் திருஅருட்பாவை இயற்றினார். VI. சிறு குறிப்பு எழுதுக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) சுவாமி விவேகானந்தர் ஜோதிராவ் பூலே 3. 4. ஸ்ரீ வைகுண்ட சுவாமிகள் VII. 1. குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) இராமலிங்க அடிகளின் கொள்கைகளை விவரி. 2. இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களை ஆய்க. VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் )
1. ‘ இராஜா ராம்மோகன் ராய் இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ’ வாதிடுக. 2. 19 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் தோன்றிய சமூக - சமய சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவத்தை ஆய்க. பாடம் – 14 இந்திய தேசிய இயக்கம் ( 1885 – 1905 ) கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்தைப் படிப்பதன் மூலம் மாணவர் அறிவது : 1. இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 2. இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம் 3. தொடக்க கால தேசிய இயக்கத்தின் நோக்கங்களும் நடைமுறைகளும் 4. இக்கால தலைவர்கள் 5. மிதவாதிகளின் சாதனைகள் இந்தியாவில் தேசியம் வளர்ந்தமைக்கான காரணங்கள்
இந்தியாவில் தேசியம் தோன்றி வளர்ச்சி பெற்றதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம். 1. அரசியல் ஒற்றுமை : இந்தியாவின் பல்வேறு பகுதிகளும் அரசியல் அடிப்படையிலும் ஆட்சியடிப்படையிலும் முதன்முறையாக ஒரு குடையின்கீழ் ( பிரிட்டிஷ் ஆட்சி ) கொண்டுவரப்பட்டது. ஒரே சீரான சட்டமும் அரசும் அறிமுகப்படுத்தப் பட்டன. 2. தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வளர்ச்சி ரயில் பாதைகள் , தந்தி , அஞ்சல் சேவைகள் மற்றும் சாலைகள் கால்வாய்கள் மூலமாக போக்குவரத்து வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்களிடையே தகவல் தொடர்பு எளிதாகியது.
இந்தியர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாயினர். மேலும் , அகில இந்திய அடிப்படையில் தேசிய இயக்கம் தோன்றவும் இது வழிவகுத்தது. 3. ஆங்கில மொழியும் மேலைநாட்டுக் கல்வியும் நாட்டில் தேசியம் வளர ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது. ஆங்கிலம் கற்ற இந்தியர்கள் தேசிய இயக்கத்தை வளர்த்து தலைமை தாங்கி நடத்திச் சென்றனர். மேலை நாட்டுக்கல்வி மூலம் , சுதந்திரம் , சமத்துவம் , விடுதலை , தேசியம் போன்ற மேலைநாட்டு கருத்துக்கள் இந்தியாவில் பரவி தேசியம் தோன்றலாயிற்று. 4. பத்திரிக்கைகளின் பங்கு இந்தியாவில் வெளியான ஆங்கிலம் மற்றும் நாட்டு மொழி
பத்திரிக்கைகள் தேசியச் சிந்தனையைப் பரப்பின. 5. 19 ஆம் நூற்றாண்டு சமூக , சமய சீர்திருத்த இயக்கங்கள் பிரம்ம சமாஜம் , இராமகிருஷ்ண இயக்கம் , ஆரிய சமாஜம் , பிரம்ம ஞான சபை போன்ற அமைப்புகள் தாய்நாட்டின் பெருமைகளை மக்களிடையே எடுத்துரைத்து நாட்டுப்பற்று குறித்த உணர்வைத் தூண்டின. 6. பிரிட்டிஷாரின் பொருளாதாரச் சுரண்டல் இந்தியாவை ஆட்சிபுரிந்த பிரிட்டிஷாரின் பொருளாதாரக் கொள்கை மக்களிடையே பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது. இந்திய வணிகத்தையும் கைத்தொழிலையும் ஆங்கிலேயர் திட்டமிட்டு அழித்தனர். எனவே , பிரிட்டிஷாரின்
பொருளாதாரச் சுரண்டல் இந்திய தேசியம் தோன்றுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். 7. இனப்பாகுபாடு 1857 ஆம் ஆண்டு கலகம் பிரிட்டிஷாருக்கும் இந்தியருக்கும் இடையே தீராத வெறுப்புணர்வையும் , பரஸ்பர சந்தேக உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. ஆங்கிலேயரின் உயர்வு மனப்பான்மை மேலும் பெருகியது. இந்தியாவும் , இந்திய மக்களும் பல்வேறு அவமானங்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் உட்படுத்தப்பட்டனர். 8. லிட்டனது நிர்வாகம் லிட்டன் பிரபு , இந்தியாவின் பெரும்பகுதி பஞ்சத்தினால் துன்பத்தில் துவண்டு கிடந்தபோது டெல்லி தர்பாரை நடத்தினார்.
நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தையும் கொண்டுவந்து இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்கினார். ஆயுதங்கள் சட்டம் இந்தியர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கு தடை விதித்தது. லிட்டனின் இத்தகைய நடவடிக்கைகள் இந்தியரிடையே பரவலான வெறுப்பை ஏற்படுத்தியது. 9. இல்பர்ட் மசோதா சச்சரவு ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் மத்திய சட்டசபையில் இல்பர்ட் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் ஐரோப்பிய நீதிபதிகளுக்கும் இந்திய நீதிபதிகளுக்கும் இடையே நிலவிய இன வேறுபாட்டை களைவதற்காக இம்மசோதா கொண்டுவரப்பட்டது , இந்தியாவில்
வாழ்ந்த பிரிட்டிஷார் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இது திரும்பப் பெறப்பட்டது. இத்தகைய பல்வேறு காரணங்களால் இந்தியாவில் தேசியம் தோன்றியது. இந்திய தேசிய காங்கிரசும் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பகால அரசியல் கழகங்கள் பிரிட்டிஷ் இந்தியக் கழகம் பம்பாய் கழகம் கிழக்கு இந்திய கழகம் சென்னை சுதேசி சங்கம் பூனா சர்வஜனச் சபை சென்னை மகாஜன சங்கம் 1851 வங்காளம் 1852 , தாதாபாய் நவ்ரோஜி 1856 , லண்டன் 1852 1870 1884 இந்திய தேசிய காங்கிரஸ் ( 1885 ) பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர்
ஒரு அகில இந்திய அமைப்பை தோற்றுவிக்க முயற்சிகள் எடுத்தார். அதன் விளைவாக , இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்டு அதன் முதல் கூட்டம் 1885 ல் பம்பாயில் நடைபெற்றது. டபிள்யூ.சி. பானர்ஜி அதற்கு தலைமை வகித்தார். இந்தியா முழுவதிலுமிருந்து 72 பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர். இவர்கள் பல்வேறு சமயப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. சமய , ஜாதி , மொழி மற்றும் பிராந்திய வேறுபாடுகள் இன்றி அனைத்து இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடை பெற்றன. எனவே , இந்திய தேசிய காங்கிரஸ் தொடக்கத்திலிருந்தே
இந்திய சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய சமய சார்பற்ற இயக்கமாகவே செயல்பட்டது. காங்கிரசின் இரண்டாவது கூட்டம் 1886 ல் கல்கத்தாவிலும் , மூன்றாவது கூட்டம் 1887 ல் சென்னையிலும் நடைபெற்றது. தேசிய இயக்கத்தின் வரலாற்றை மூன்று முக்கிய நிலைகளாக அறிந்து மிதவாதி தேசியம் ( 1885 விசுவாசமாகவே செயல்பட்டது. 1905 ) இக்காலத்தில் காங்கிரஸ் பிரட்டிஷாருக்கு 1906 முதல் 1916 வரையிலான காலத்தில் சுதேசி இயக்கம் , தீவிரவாத தேசியம் , தன்னாட்சி இயக்கம் போன்றவை நடைபெற்றன. 1917 முதல் 1947 வரையிலான காலத்தை காந்தி காலம்
எனப்படுகிறது. மிதவாத தேசியம் தேசிய இயக்கத்தின் தொடக்க காலமான இந்த கட்டத்தில் ஏ.ஓ.ஹியூம் , டபிள்யூ. சி. பானர்ஜி , சுரேந்திரநாத் பானர்ஜி , தாதாபாய் நௌரோஜி , பெரோஸ் ஷா மேத்தா , கோபால கிருஷ்ண கோகலே , பண்டிட் மதன்மோகன் மாளவியா , பக்ருதீன் தியாப்ஜி , நீதிபதி ரானடே , ஜி. சுப்ரமணிய அய்யர் போன்றவர்கள் முக்கிய தலைவர்களாக இருந்து வழி நடத்திச் சென்றனர். சுரேந்திரநாத் பானர்ஜி இந்தியாவின் ‘ பர்க் ’ என்று அழைக்கப்பட்டார். வங்கப் பிரிவினையை அவர் கடுமையாக எதிர்த்தார். 1876 ல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராடுவதற்காக
இந்தியக் கழகம் ஒன்றை தோற்றுவித்தார். அவர் நிறுவிய இந்திய தேசியப் பேரவை ( 1883 ) பின்னர் 1886 ல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. கோகலே ஜி. சுப்ரமணிய அய்யர் சென்னை மகாஜன சபை மூலம் தேசியத்தை பரப்பினார். ‘ தி இந்து ’ , ‘ சுதேச மித்ரன் ' போன்ற பத்திரிக்கைகளையும் அவர் நிறுவினார். தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவிற்கான அதிகாரபூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் இவர் கருதப்பட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் இவரே ஆவார்.
கருதப்பட்டவர். 1908 ல் கோபால கிருஷ்ண கோகலே காந்தியின் குருவாக அவர் இந்தியப் பணியாளர் கழகத்தை தோற்றுவித்தார். நாட்டிற்காக தொண்டு செய்ய இந்தியர்களுக்கு பயிற்சியளிப்பதே இக்கழகத்தின் நோக்கமாகும். முதல் சில ஆண்டுகள் காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்தது. 1885 முதல் 1905 வரை காங்கிரஸ் தலைவர்கள் மிதவாதிகளாக இருந்தனர். அவர்களது கோரிக்கைகள் மிதமாகவே இருந்தமையால் , மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் , தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க அமைதியான , அரசியல் சட்ட நெறிமுறைகளின் வழிமுறைகளையே
மிதவாதிகள் பின்பற்றினர். மிதவாதிகளின் முக்கிய கோரிக்கைகள் சட்டசபைகளை விரிவாக்குதல் , சீர்திருத்துதல் ஐ.சி.எஸ். தேர்வுகளை ஒரேசமயத்தில் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் நடத்தி உயர் பதவிகளில் இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல் நிர்வாகத் துறையிலிருந்து நீதித்துறையை பிரித்தல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்கள் வழங்குதல் நிலவரியைக் குறைத்தல் குடியானவர்களை பாதுகாத்தல் உப்பு வரி , சர்க்கரை வரியை ஒழித்தல் ராணுவ செலவுகளைக் குறைத்தல் பேச்சுரிமை , எழுத்துரிமை மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை கோருதல்
நியாயமற்ற நில உடைமையாளரிடமிருந்து மிதவாதிகளின் வழிமுறைகள் பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாயத்தில் மிதவாதிகள் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தனர். உற்சாகத்திற்கும் , வழிகாட்டுதலுக்கும் அவர்கள் இங்கிலாந்தை எதிர்நோக்கியிருந்தனர். கோரிக்கை மனுக்களை அளித்தல் , தீர்மானங்கள் போடுதல் , கூட்டங்கள் நடத்துதல் , துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் , தூதுக்குழுக்கள் மூலம் பேச்சு நடத்துதல் போன்ற வழிமுறைகளையே மிதவாதிகள் பின்பற்றினர். படித்தவர்கள் மட்டுமே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அரசியல் உரிமைகளையும் தன்னாட்சியையும்
படிப்படியாக அடைவதே அவர்களது குறிக்கோளாகும். ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்தை வரவேற்றது. 1886 ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் உறுப்பினர்களுக்கு தலைமை ஆளுநர் டப்ரின் பிரபு தேநீர் விருந்தளித்தார். அரசாங்க அதிகாரிகளும் காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்டனர். காங்கிரசின் கோரிக்கைகள் அதிகரிக்க அதிகரிக்க , அரசாங்கம் அதற்கு எதிராகத் திரும்பியது. முஸ்லிம்களை காங்கிரசிலிருந்து விலகியிருக்குமாறு ஊக்குவித்தது. இந்த காலக்கட்டத்தில் பிரிட்டிஷாரால் நிறைவேற்றப்பட்ட காங்கிரசின்
கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். அது 1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய கவுன்சில்கள் சட்டமாகும். மிதவாதிகளின் சாதனைகள் 1. மக்களிடையே பரந்த தேசிய விழிப்புணர்வை மிதவாதிகளால் உருவாக்க முடிந்தது. 2. ஜனநாயகம் , சிவில் உரிமைகள் , பிரநிதித்துவ நிறுவனங்கள் போன்ற சித்தாந்தங்களை அவர்கள் பிரபலப்படுத்தினார்கள். 4. " இந்தியாவில் 3. பிரிட்டிஷார் எவ்வாறு இந்தியர்களைச் சுரண்டுகிறார்கள் என்று அவர்கள் மக்களுக்கு புரியவைத்தனர். தாதாபாய் நௌரோஜி எழுதிய வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் ” என்ற நூலில் “ செல்வச் சுரண்டல் ”
கோட்பாட்டை விளக்கியிருந்தார். இந்தியாவின் செல்வம் எந்தெந்த வழிகளில் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை பட்டியலிட்டுக் காட்டினார். ( அ ) ஊதியங்கள் ( ஆ ) சேமிப்பு ( இ ) ஓய்வூதியங்கள் ( ஈ ) இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கான செலவினங்கள் ( உ ) பிரிட்டிஷ் வணிக நிறுவனங்களின் லாபம் என்பவை அந்தப் பட்டியலில் அடங்கியிருந்தன. இதைப்பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் வெல்பி குழுவை நியமித்தது. அதில் முதல் இந்திய உறுப்பினராக தாதாபாய் நியமிக்கப்பட்டார். 5. ரானடே , கோகலே போன்ற ஒரு சில மிதவாதிகள் சமூக
சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்தினர். குழந்தை திருமணம் , விதவைகளின் அவலம் போன்றவற்றை அவர்கள் எதிர்த்தனர். 1892 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் வாயிலாக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதும் மிதவாதிகளின் சாதனையாகும். 5. கற்றல் அடைவுகள் மாணவர்கள் இந்த பாடத்திலிருந்து அறிந்து கொண்டவை. 1. இந்திய தேசியத்தின் வளர்ச்சிக்கான காரணங்கள். 2. இந்திய தேசிய காங்கிரசின் தோற்றமும் வளர்ச்சியும். 3. மிதவாத தேசியம் குறித்த சுருக்கமான தகவல் 4. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள்.
இந்தியப் பொருளாதாரத்தை பிரிட்டிஷார் எவ்வாறு சுரண்டினர் என்பதும் செல்வச் சுரண்டல் கோட்பாடும். பாடம் – 15 இந்திய தேசிய இயக்கம் ( 1905 – 1916 ) இந்திய தேசிய இயக்கத்தில் 1905 ஆம் ஆண்டு தொடங்கி தீவிரவாத காலம் தொடங்கியது. தீவிரவாதிகள் அல்லது தீவிர தேசியவாதிகள் துணிச்சலான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றிபெறமுடியும் என்று நம்பினர். பாலகங்காதர திலகர் , லாலாலஜபதிராய் , பிபின் சந்திரபால் ஆகிய மூவரும் தீவிரவாத தலைவர்களில் முக்கியமானவர்கள். தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள் கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்தைப் படிக்கும் மாணவர்
அறிந்து கொள்வது 1. இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரவாதம் தோன்றியதற்கான காரணங்கள். 2. தீவிரவாதிகளின் நோக்கங்களும் வழிமுறைகளும் 3. திலகர் , பிபின் சந்திரபால் , லாலாலஜபதிராய் போன்ற தீவிரவாத தலைவர்கள் , 4. தேசிய இயக்கத்தில் வங்கப் பிரிவினையின் தாக்கம் 5. சுதேசி இயக்கமும் தீவிரவாதிகளின் சாதனைகளும் 6. முஸ்லீம் லீகின் தோற்றம் 7. தன்னாட்சி இயக்கம் 1896-97 ஆண்டு தோன்றிய பஞ்சத்தினாலும் , பிளேக் நோயினாலும் நாடு முழுவதிலும் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாயினர். 3. மக்களின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகியது. 1892 ஆம் ஆண்டு
இந்திய கவுன்சில் சட்டப்படி சட்டசபை விரிவாக்கம் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க வெற்றியையும் மிதவாதிகள் பெறத்தவறினர். 5. 4. நிறவெறி காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டனர். 1904-05 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஷ்ய - ஜப்பானியப் போரில் ஐரோப்பிய நாடான ரஷ்யாவை ஜப்பான் வென்றது. இதனால் , ஐரோப்பிய நாடான பிரிட்டனை இந்தியர்களாலும் வெல்லமுடியும் என ஊக்கம் பிறந்தது. கர்சன் பிரபுவின் பிற்போக்கான ஆட்சி தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது. அவர் கல்கத்தா மாநகராட்சி சட்டத்தை ( 1899 ) கொண்டு வந்து
இந்தியரின் அதிகாரத்தை குறைத்தார். பல்கலைக்கழகங்கள் சட்டம் ( 1904 ) பல்கலைக்கழக அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சித் தன்மை குறைக்கப்பட்டது.அவை அரசின் துறைகளாக மாற்றப்பட்டன. இராச துரோகக் குற்றம் ( Sedition ) சட்டம் , அதிகாரிகள் ரகசிய காப்புச் சட்டம் மக்களின் உரிமைகளைப் பறித்தது. அவரது மோசமான நடவடிக்கை வங்கப் பிரிவினையாகும் ( 1905 ). தீவிரவாதிகளின் முதன்மை குறிக்கோள் தீவிரவாதிகளின் தலையாய குறிக்கோள் சுயராஜ்யம் அல்லது முழு விடுதலையே தவிர வெறும்
தன்னாட்சி அல்ல. தீவிரவாதிகள் பின்பற்றிய வழிமுறைகள் பிரிட்டிஷாரின் நீதியுணர்வில் தீவிரவாதிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எப்படி பிரிட்டிஷார் பலவந்தமாக இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர். அரசியல் உரிமைகளை போராடித்தான் பெறவேண்டும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். தன்னம்பிக்கையும் தன் முனைப்பும் அவர்களது உணர்வில் ஊறியிருந்தன. அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள் வருமாறு : 1. அரசு நீதிமன்றங்களையும் , பள்ளிகளையும் , கல்லூரிகளையும் புறக்கணிப்பதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு
ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது. 2. சுதேசிப் பொருட்களை ஆதரிப்பது ; அந்நியப் பொருட்களை வாங்க மறுப்பது. 3. தேசியக் கல்வியை அறிமுகப்படுத்தி வளர்ப்பது. தீவிரவாதிகளின் தலைவர்கள் பால கங்காதர திலகர் , லாலா லஜபதி ராய் , பிபின் சந்திரபால் , அரவிந்த கோஷ் போன்ற தலைவர்கள் தீவிரவாத தேசிய இயக்கத்தை முன்னின்று நடத்தினர். இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு முழுமையான இயக்கத்தை தோற்றுவித்தவர் பால கங்காதர திலகர் ஆவார்.அவரை ' லோக மான்ய திலகர் ’ என்றும் அழைப்பர். மராட்டா மற்றும் கேசரி என்ற வார இதழ்களின் வாயிலாக பிரிட்டிஷாரின்
கொள்கைகளைச் சாடினார். தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டதற்காக பிரிட்டிஷாரால் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் , 1908 ல் 6 ஆண்டு கால சிறை வாசத்திற்காக மாண்ட்லே கொண்டு செல்லப்பட்டார். 1916 ல் பூனாவில் தன்னாட்சி கழகத்தை அமைத்தார். சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன் ' என்று முழங்கினார். திலகர் லாலா லஜபதி “ பஞ்சாபின் சிங்கம் ” என்று பலராலும் அறியப்பட்டவர். சுதேசி இயக்கத்தில் இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. அமெரிக்காவில் 1916 ல் தன்னாட்சி கழகத்தை லஜபதி ராய் தோற்றுவித்தார்.அரசுக்கெதிரான
பிரச்சாரத்துக்காக மாண்ட்லே சிறையில் வைக்கப்பட்டார். சைமன் குழுவிற்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடியில் காயமடைந்து 1928 நவம்பர் 17 ல் உயிர் நீத்தார். லாலா லஜபதி ராய் பிபின் சந்திரபால் ஒரு மிதவாதியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தீவிரவாதியாக மாறியவர். சுதேசி இயக்கத்தில் பங்கு கொண்டு முக்கிய பங்காற்றினார்.தனது அனல் பறக்கும் பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் தேசியத்தை நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரப்பினார். மற்றொரு தீவிர தேசியவாதியான அரவிந்த கோஷ் சுதேசி இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அதற்காக
சிறைப்படுத்தப்பட்டார். விடுதலையான பிறகு பிரஞ்சுப் பகுதியான பாண்டிச்சேரியில் தங்கி ஆன்மீக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். வங்கப் பிரிவினையும் தீவிரவாத எழுச்சியும் இந்திய தேசிய இயக்கத்தில் தீவிரவாதம் தோன்றுவதற்கு 1905 ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை ஒரு தீப்பொறியாக அமைத்தது. கர்சனது உண்மையான குறிக்கோள்கள் ; இந்திய தேசியத்தின் அடித்தளமாக விளங்கிய வங்காளத்தில் வளர்ந்துவரும் தேசியத்தின் வலிமையை முறியடித்தல். வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைப்பது. தான் நினைத்ததை சாதித்து பிரிட்டிஷ் அரசின்
வலிமையை வெளிப்படுத்துவது. அரவிந்த கோஷ் 1905 அக்டோபர் 16 ஆம் நாள் வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்தது.அன்றே வங்காள மக்கள் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தி அன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்தனர். வங்காளத்தின் அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இந்தியாவில் உண்மையான விழிப்புணர்வு வங்கப் பிரிவினைக்குப் பின்புதான் தோன்றியது என்று காந்தி எழுதினார்.பிரிவினை எதிர்ப்பு போராட்டம் சுதேசி இயக்கமாக வலுப்பெற்று , இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தீவிர தேசியவாதிகளின் செயல்பாடுகள் மிதவாதியான தாதா பாய்
நௌரோஜியையே 1906 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுயராஜ்யம் குறித்து பேசவைத்தது. தாதாபாய் நௌரோஜி அந்த மாநாட்டில் சுதேசி , அந்நியப் பொருட்களுக்கு தடை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மிதவாதிகள் இதனால் களிப்படையவில்லை. மாறாக , அரசியலமைப்பு ரீதியாகத்தான் சுயராஜ்யம் வெல்லப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர். இத்தகைய கருத்து மோதல்களால்தான் 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. இதுவே சூரத் பிளவு எனப்படுகிறது. திலகர் தலைமையில் தீவிரவாதிகள் மாநாட்டை விட்டு வெளியேறினர்.
சுதேசி இயக்கம் சுதேசி இயக்கம் பல்வேறு திட்டங்களைக் கொண்டதாகும்.அரசுப் பணி , நீதிமன்றங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் ஆகியவற்றை புறக்கணித்தல் , அந்நியப் பொருட்களை வாங்க மறுத்து சுதேசிப் பொருட்களை வாங்கி ஆதரித்தல் , தேசியப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி தேசியக் கல்வியை வளர்த்தல் ஆகியன இத்திட்டங்களில் அடங்கும். சுதேசி இயக்கம் ஒரு அரசியல் பொருளாதார இயக்கமாகும். வங்காளத்தில் பெரும் சுதேசி இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றது. நிலச்சுவான்தார்களும் இதில் பங்கேற்றனர். மகளிரும் , மாணவரும் மறியலில் ஈடுபட்டனர். அந்நிய
காகிதத்தாலான கையேடுகளை மாணவர்கள் மறுத்தனர். சுதேசி இயக்கத்தை ஒடுக்குவதற்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதற்காக பல சட்டங்களையும் இயற்றியது. சுதேசி தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். வந்தே மாதரம் முழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் தங்களின் மாணவர்கள் இதில் கலந்து கொள்ளாமலிருக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டன. இல்லையென்றால் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது. சிலர் தங்களது அரசு பணிகளை இழந்தனர். தீவிரவாத தலைவர்களான பாலகங்காதர திலகர் , லாலா லஜபதி
ராய் , பிபின் சந்திரபால் , அரவிந்த கோஷ் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தீவிரவாதிகளின் சாதனைகள் தீவிரவாதிகளின் சாதனைகளாக பின்வருவனவற்றை தொகுத்துக் கூறலாம். 1. சுயராஜ்யத்தை பிறப்புரிமையாக முதலில் கோரியவர்கள் தீவிரவாதிகளேயாவர். 2. விடுதலை இயக்கத்தில் மக்களை பெருமளவில் ஈடுபடுத்தியது மற்றொரு சாதனையாகும். தேசிய இயக்கத்தின் சமூக அடிப்படை மேலும் விரிவாக்கப்பட்டது. 3. முதன் முதலில் அனைத்து இந்திய அரசியல் இயக்கத்தை ( சுதேசி இயக்கம் ) அமைத்து நடத்தியது போற்றத்தக்கதாகும். முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்படுதல் ( 1906 )
1906 டிசம்பரில் இந்தியாவெங்கிலுமிருந்து முஸ்லீம்கள் முஸ்லிம் கல்வி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்கா நகரில் கூடியிருந்தனர். இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட டாக்காவைச் சேர்ந்த நவாப் சலி முல்லா என்பவர் முஸ்லீம்களின் நலன்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்டார். இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1906 டிசம்பர் 30 ஆம் நாள் அகில இந்திய முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசைப் போலவே , அவர்களும் ஆண்டு தோறும் மாநாடுகள் நடத்தி பிரிட்டிஷ் அரசுக்கு தங்களது
கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர். தொடக்கத்தில் பிரிட்டிஷார் இதற்கு ஆதரவு காட்டினர். மின்டோ- மார்லி சீர்திருத்தங்களின்போது முஸ்லிம்களுக்கென தனித்தொகுதியை கேட்டுப்பெற்றது அவர்களது முதலாவது சாதனையாகும். லக்னோ ஒப்பந்தம் ( 1916 ) 1916 ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டின்போது இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரிந்த காங்கிரஸ் மிண்டும் ஒன்றிணைந்தது.1916 ஆம் ஆண்டு லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்படி காங்கிரசும் முஸ்லீம் லீகும் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. லக்னோ
ஒப்பந்தம் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகும். தன்னாட்சி இயக்கம் ( 1916 ) 1916 ஆம் ஆண்டு இரண்டு தன்னாட்சி கழகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏப்ரல் மாதத்தில் பூனாவில் திலகர் தன்னாட்சி கழகத்தை தொடங்கினார். செப்டம்பரில் அன்னி பெசன்ட் அம்மையார் சென்னையில் மற்றொரு தன்னாட்சி கழகத்தை நிறுவினார். தன்னாட்சி இயக்கத்தின் முக்கிய குறிக்கோள் பிரிட்டிஷ் பேரரசுக்குள்ளேயே இந்தியாவுக்கு தன்னாட்சி பெறுவதாகும். சுதந்திரம் என்பது அனைத்து நாடுகளுக்கும் உள்ள இயற்கையான உரிமை என்று இருவருமே நம்பினர்.மேலும்
, இந்தியாவின் வளங்கள் அதன் முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று தன்னாட்சி இயக்கத் தலைவர்கள் கருதினர். இரண்டு தன்னாட்சி கழகங்களுமே தங்களுக்குள் கூட்டுறவு மனப்பான்மையோடு நடந்து கொண்டன. காங்கிரசுடனும் , முஸ்லிம் லீக்குடனும் சேர்ந்து போராடின. திலகரின் தன்னாட்சி இயக்கம் மகாராஷ்டிரத்தில் கவனத்தை செலுத்தியது. அன்னி பெசன்டின் இயக்கம் இந்தியாவின் இதர பகுதிகளில் செயல்பட்டது. தன்னாட்சி இயக்கம் இந்திய தேசிய இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தது எனலாம். சுதேசி இயக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.பெண்கள் அதிக
எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். 1917 ஆகஸ்டு 20 ஆம் நாள் இங்கிலாந்து அயலுறவு அமைச்சர் மான்டேகு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். இந்தியாவின் எதிர்கால அரசியல் சீர்திருத்தங்கள் பற்றி இந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்தியாவில் படிப்படியாக தன்னாட்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.இந்த ஆகஸ்டு அறிக்கை தன்னாட்சி இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. புரட்சிகர இயக்கங்கள் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளம் , மகாராஷ்டிரம் , பஞ்சாப் , சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத
குழுக்கள் தோன்றின.மிதவாத , தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே , பல ரகசிய புரட்சி அமைப்புகளை அவர்கள் தோற்றுவித்தனர். வங்காளத்தில் ‘ அனுசிலான் சமிதி ’ , ஜூகந்தர் ’ ஆகிய ரகசிய இயக்கங்கள் நிறுவப்பட்டன. மகாராஷ்டிரத்தில் சவார்க்கர் சகோதரர்களால் ‘ அபினவ பாரத் சங்கம் ’ தோற்றுவிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தில் நீலகண்ட பிரம்மச்சாரி ‘ பாரத மாதா ’ சங்கத்தை தோற்றுவித்தார். பஞ்சாபில் , இளைஞர்களிடையே புரட்சிக் கருத்துக்களை பரப்புவதற்கு அஜித் சிங் ஒரு ரகசிய அமைப்பை ஏற்படுத்தனார். லண்டனிலிருந்த
இந்தியா ஹவுசில் , ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா இந்திய தேசியவாதிகளான மதன்லால் திஸ்ரா , சவார்க்கர் , வி.வி.எஸ். அய்யர் , டி.எஸ்.எஸ்.ராஜன் போன்றோரை ஒன்று திரட்டினார். அமெரிக்காவில் லாலா ஹர் தயாள் என்பவர் காதர் கட்சியைத் தோற்றுவித்து இந்தியாவிற்கு வெளியே புரட்சியாளர்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தார். கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெற்ற அறிவு ; 1. வங்கப்பிரிவினை 3. போன்ற தீவிரவாதத்திற்கு வித்திட்டன. 2. தீவிரவாதிகளின் குறிக்கோளும் செயல்பாடுகளும் மிதவாதிகளிடமிருந்து வேறுபட்டவை. 1. சரியான விடையைத் தேர்வு
செய்க. 1. பின்வருவனவற்றுள் தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணம் இல்லாதது எது ? ஆ. கல்கத்தா மாநகராட்சி சட்டம் ஈ. வங்காளப் பிரிவினை பிரிட்டிஷாரின் அரசு பள்ளிகள் , கல்லூரிகளைப் புறக்கணித்த சுதேசி இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாகவே மாறியது. 4. தொடக்கத்தில் முஸ்லிம்களை பிரிட்டிஷார் ஆதரித்தனர். 5. தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம் 6. இந்திய தேசியத்தில் புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் அ. இல்பர்ட் மசோதா இ. பல்கலைக்கழகங்கள் சட்டம் பயிற்சி பகுதி– அ முஸ்லீம் லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு அ. 1906 இ. 1916 கொள்கைகளே ஆ. 1909 ஈ.
1926 கோடிட்ட இடத்தை நிரப்புக. சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு அன்னி பெசன்ட் அம்மையர் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கினார். 3. பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர் டத்தில் 4. காதர் கட்சி பாலகங்காதர திலகர் 5. அபிநவ பாரத் லாலா லஜபதி ராய் IV. சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது அ. தீவிரவாதிகளின் தலைவராக கோகலே விளங்கினார். ஆ. பிரிட்டிஷாரின் நீதியுணர்வில் தீவிரவாதிகள் நம்பிக்கை கொள்ளவில்லை. இ தீவிரவாதிகள் அஹிம்சை கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அரசியலைப்பு நெறிகளின்படி அவர்கள்
சுயராஜ்யத்தை அடைய விரும்பினர். தீவிரவாதிகளுக்கும் , மிதவாதிகளுக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடுகளினால் லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் பிளவுண்டது. V. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. கர்சன் பிரபுவின் பிற்போக்கு கொள்கையே தீவிரவாதிகளின் எழுச்சிக்கு உடனடி காரணமாக இருந்தது. மகாராஷ்டிரம் முஸ்லிம் லீக் லாலா ஹர் தயாள் ஈ. 1905 ல் அகில இந்திய முஸ்லீம் லீக் நிறுவப்பட்டது. சிறு குறிப்பு எழுதுக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) வங்கப் பிரிவினை 2. முஸ்லீம் லீக் 4. குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) இந்திய
தேசிய இயக்கத்தில் தீவிரவாதம் தோன்றியது பற்றி குறிப்பு வரைக 2. சுதேசி இயக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக 3. விடுதலை இயக்கத்தில் தன்னாட்சி இயக்கத்தின் பங்கினை விளக்குக. VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் ) 1. 1905 முதல் 1916 வரை நடைபெற்ற இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க சுயராஜ்யத்தை பிறப்புரிமையாக கருதி முதலில் கோரிக்கை எழுப்பியவர்கள் தீவிரவாதிகளே ஆவர். சூரத் பிளவு லக்னோ ஒப்பந்தம் 1. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் இந்திய விடுதலை இயக்கத்தில் அவரது ஈடுபாடு. 2.
தேசிய இயக்கத்தில் ஜாலியன் வாலா பாக் படுகொலையின் தாக்கம். 3. கிலாபத் இயக்கம் - ஒத்துழையாமை இயக்கம் 4. சட்ட மறுப்பு இயக்கம் - உப்பு சத்தியாக்கிரகம் 5. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - இந்திய விடுதலை இயக்கத்தில் அதன் தாக்கம். மௌன்ட்பேட்டன் பிரபுவின் வருகையும் இந்தியப் பிரிவினையும் காந்தியின் வருகை தேசிய இயக்கத்தின் மூன்றாம் நிலை ( 1917-47 ) காந்தி காலம் எனப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய இயக்கத்தின் தன்னிகரற்றத் தலைவராக விளங்கினார். அவரது கொள்கைகளான அகிம்சை மற்றும் சத்தியாக்கிரகம் பிரிட்டிஷ்
அரசாங்கத்துக்கு செயல்படுத்தப்பட்டன. தேசிய இயக்கத்தை காந்தி மக்கள் இயக்கமாக மாற்றினார். எதிராக மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி 1869 அக்டோபர் 2 ஆம் நாள் குஜராத்தில் போர்பந்தர் என்ற ஊரில் பிறந்தார்.இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார்.1891 ல் இந்தியா திரும்பினார். 1893 ல் தென் ஆப்ரிக்கா சென்ற அவர் அங்கு நிலவிய இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் 20 ஆண்டுகள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இறுதியாக , 1915 ல் இந்தியா திரும்பினார். பின்னர் , இந்திய தேசிய இயக்கத்தில் முழுமையாக பங்கேற்று வழி நடத்திச் சென்றார்.
மகாத்மா காந்தி 1917 ல் பீகாரில் சம்ப்ரான் என்ற இடத்தில் ஐரோப்பிய அவுரிச்செடி பண்ணையாளர்களுக்கெதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் , அங்குதான் தனது சத்யா கிரகம் என்ற அறப்போர் முறையை முதன்முதலாக இந்திய மண்ணில் பரிசோதித்துப் பார்த்தார். அதற்கு அடுத்த ஆண்டில் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் மற்றொரு சத்யா கிரக போராட்டத்தை நடத்தினார். மோசமான விளைச்சலால் பாதிக்கப்பட்ட குடியானவர்களுக்கு நிலவரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போதுதான் சர்தார் வல்லபாய் படேல்
காந்தியின் நம்பிக்கைக்குரிய சீடர்களில் ஒருவராக Page 1238f 284 எழுச்சி பெற்றார். 1918 ல் அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஆதரித்து சாகும்வரை உண்ணா விரதத்தை காந்தி மேற்கொண்டார். இறுதியாக ஆலை அதிபர்கள் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். சம்ப்ரான் , கேடா , அகமதாபாத் போன்ற சிறிய அளவிலான போராட்டங்கள்தாம் மகாத்மா காந்தியை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சென்றன. அவர்களது பிரச்சினைகளை காந்தியும் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு , காந்தி மக்களின் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்தார். ரௌலட் சட்டம் (
1919 ) அரசுக்கு எதிரான சதி வேலைகளை ஆய்வு செய்வதற்காக சர் சிட்னி ரௌலட் என்பவரது தலைமையில் 1917 ல் ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கைப்படி , 1919 மார்ச் திங்களில் ரௌலட் சட்டம் மத்திய சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி சந்தேகத்தின் பேரில் எவரையும் கைது செய்யலாம். இத்தகைய கைதுகளை எதிர்த்து விண்ணப்பமோ அல்லது மேல்முறையீடோ செய்ய முடியாது. இச்சட்டம் கருப்புச் சட்டம் என்று கருதப்பட்டது.இச்சட்டத்திற்கு பலத்த எதிர்ப்புகள் தோன்றின. 1919 ஏப்ரல் 6 ஆம் நாள் இந்தியா முழுவதிலும் ( ஹர்த்தால் ) மறியல்
போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. டெல்லிக்கு அருகில் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார். பஞ்சாபின் முக்கிய தலைவர்களான டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிச்லு இருவரும் அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் படுகொலை ( 13 ஏப்ரல் 1919 ) 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் நடைபெற்ற ஜாலியன் வாலா பாக் படுகொலை இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையாகும். ரௌலட் சத்யாக் கிரகப் போராட்டத்திற்கு பஞ்சாபில் பெருத்த ஆதரவு திரண்டது. வன்முறையை எதிர்நோக்கிய பஞ்சாப்
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஜெனரல் டையர் தலைமையிலான ராணுவத்திடம் ஒப்படைத்தது. அவர் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதித்து அரசியல் தலைவர்களை கைது செய்தார். ஏப்ரல் 13 ஆம் நாள் பைசாகி என்ற அறுவடைத் திருநாளன்று ஜாலியன் வாலா பாக் பூங்காவில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.டையர் தனது படையுடன் அங்கு சென்று எவ்வித முன்னறிவிப்புமின்றி கூட்டத்தின்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச் சூடு 10 முதல் 15 நிமிடங்கள் நீடித்தது. துப்பாக்கி தோட்டாக்கள் தீர்ந்த பிறகுதான் அது நிறுத்தப்பட்டது. அதிகாரப்பூர்வ
தகவலின்படி 379 பேர் கொல்லப்பட்டனர் ; 1137 பேர் படுகாயமடைந்தனர். இந்த படுகொலையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ரவீந்திரநாத்தாகூர் தனது ‘ நைட் ’ பட்டத்தை துறந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை விடுதலை இயக்கத்திற்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை கிலாபத் இயக்கம் முதல் உலகப் போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இக்கத்திற்கு முக்கிய காரணமாகும். செவெரஸ் உடன்படிக்கையும் ( 1920 ) முஸ்லிம்களுக்கு பெருத்த அவமானமாகப்பட்டது. உலக முஸ்லீம்களின் சமயத்தலைவராக ( காலிப் ) துருக்கி
சுல்தானை கருதியதே இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக விளங்கியது. பிரிட்டன் துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லிம்களை புண்படுத்துவதாக இருந்தது. எனவே , அவர்கள் கிலாபத் இயக்கத்தை தொடங்கினர். மெளலானா அபுல் கலாம் ஆசாத் , எம்.ஏ. அன்சாரி , சைபுதீன் கிச்லு , அலி சகோதர்கள் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்கள். கிலாபத் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.1919 அக்டோபர் 19 ஆம் நாள் கிலாபத் தினம் அனுசரிக்கபட்டது. நவம்பர் 23 ஆம் நாள் மகாத்மா காந்தியின் தலைமையில் இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து கொண்ட ஒரு மாநாடு கூடியது.
நாட்டின் விடுதலைக்கு இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்த வேண்டியதன் கட்டாயத்தை மகாத்மாகாந்தி உணர்ந்திருந்தார். பின்னர் , கிலாபத் இயக்கம் 1920 ல் மகாத்மாகாந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்துடன் ஒன்று கலந்தது. ஒத்துழையாமை இயக்கம் ( 1920–1922 ) ரௌலட் சட்டம் , ஜாலியன் வாலா பாக் படுகொலை , கிலாபத் இயக்கத்தை தொடர்ந்து மகாத்மா காந்தி தனது ஒத்துழையாமை இயக்கம் பற்றிய திட்டத்தை அறிவித்தார். 1920 டிசம்பரில் நடைபெற்ற நாக்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடும் இதனை ஏற்றது. செயல்திட்டங்கள் ஒத்துழையாமை இயக்கத்திற்கான
செயல்திட்டங்கள் வருமாறு : - பட்டங்களையும் சிறப்புத் தகுதிகளையும் துறத்தல். உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுதல் 1919 ஆம் ஆண்டு சட்டப்படி நடைபெறவிருந்த தேர்தல்களை புறக்கணித்தல் அரசு விழாக்களை புறக்கணித்தல் நீதிமன்றங்கள் , அரசு பள்ளிகள் , கல்லூரிகள் ஆகியவற்றை புறக்கணித்தல். அயல்நாட்டுப் பொருட்களை புறக்கணித்தல் தேசிய பள்ளிகள் , கல்லூரிகள் , தனியார் பஞ்சாயத்து நீதிமன்றங்கள் போன்றவற்றை நிறுவுதல். சுதேசி பொருட்களையும் கதர் துணிகளையும் மக்களிடையே பிரபலப்படுத்துதல். மகாத்மாகாந்தி தனக்கு பிரிட்டீஷ்
அரசு கொடுத்த சிறப்பு பட்டங்களைத் துறந்து இந்த இயக்கத்தை தொடங்கிவைத்தார். மற்ற தலைவர்களும் சமுதாயத்தில் செல்வாக்கு மிக்கவர்களும் தங்களது சிறப்புத் தகுதிகளையும் , பட்டங்களையும் துறந்தனர். மாணவர்கள் அரசாங்கப் பள்ளிகளைவிட்டு வெளியேறினர். காசி வித்யா பீடம் , பீகார் வித்யா பீடம் , ஜாமியா மிலியா போன்ற தேசிய கல்விக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டின் முக்கிய தலைவர்கள் தங்களது அதிக வருமானம் தரக்கூடிய வழக்குரைஞர் தொழிலைக் கைவிட்டனர். சட்டமன்றங்களும் புறக்கணிக்கப்பட்டன. காங்கிரஸ் தலைவர் எவரும் சட்டமன்ற தேர்தலில்
போட்டியிட முன்வரவில்லை. 1921 வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வந்தபோது மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. சுதேசி கருத்துக்கள் நாடெங்கும் பரவின. பெரும்பாலான குடும்பங்களில் ராட்டைகள் சுழன்றன. உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள சௌரி சௌரா என்ற இடத்தில் நடைபெற்ற சம்பத்தை தொடர்ந்து 1922 பிப்ரவரி 11 ஆம் நாள் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி இடையிலேயே நிறுத்திவைத்தார். முன்னதாக பிப்ரவரி 5 ஆம் நாள் சௌரி சௌரா காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஒரு கூட்டம் அதற்கு தீ வைத்தது. 22
காவலர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இதுவே சௌரி சௌரா நிகழ்ச்சி எனப்படுகிறது. ஒத்துழையாமை இயக்கம் திடீரென நிறுத்திவைக்கப்பட்டதை அறிந்து நாட்டின் பல தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 1922 மார்ச் 10 ஆம் நாள் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார். ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவம் 1. குடியானவர்கள் , தொழிலாளர்கள் , மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெண்கள் போன்ற சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் பங்கேற்ற முதலாவது மக்கள் இயக்கமாக இது திகழ்ந்தது. 2. இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேசியம் பரவ இது வழிவகுத்தது. 3.
கிலாபத் இயக்கமும் இதனுடன் ஒன்றிணைக்கப்பட்டதால் , இந்து , முஸ்லிம் ஒற்றுமையின் உச்சகட்டமாக இது திகழ்ந்தது. 4. இந்திய மக்களுக்கு எத்தகைய துன்பத்தையும் தாங்கும் சக்தி உண்டு என்பதையும் , எவ்வித தியாகத்திற்கும் அவர்கள் தயாராக உள்ளனர் என்பதையும் இது எடுத்துக் காட்டியது. சுயராஜ்ய கட்சி ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து 1922 டிசம்பரில் நடைபெற்ற கயா காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. மோதிலால் நேரு , சித்தரஞ்சன் தாஸ் போன்ற தலைவர்கள் காங்கிரசுக்குள்ளேயே 1923 ஜனவரி 1 ஆம் நாள் சுயராஜ்ய
கட்சியை தோற்றுவித்தனர். சுயராஜ்ய கட்சியினர் , சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு , உள்ளிருந்துகொண்டே அரசாங்கத்தை நிலை குலையச் செய்ய முடிவு செய்தனர். 1923 நவம்பரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் சுயராஜ்ய கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது. மத்திய சட்டமன்றத்தில் மோதிலால் நேரு கட்சித் தலைவராகவும் வங்காள சட்டமன்றத்தில் சி.ஆர். தாஸ் கட்சித் தலைவராகவும் மோதிலால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் சுயராஜ்ய கட்சி பல முக்கிய பணிகளை மேற்கொண்டது. 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் பல
மாறுதல்களைக் கொண்டு வந்து இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் நடைபெற வந்து இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் நடைபெற இக்கட்சி பாடுபட்டது. அரசின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக பல தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.உள்துறைக்கான உறுப்பினர் அலெக்சாந்தர் முட்டிமான் இரட்யைாட்சி முறையை போற்றி புகழ்ந்தபோது , மத்திய சட்டசபையில் அதற்கு எதிரான தீர்மானத்தை சுயராஜ்ய கட்சி கொண்டு வந்தது.1925 ஜூனில் சி.ஆர்.தாஸ் மறைந்தபிறகு , சுயராஜ்ய கட்சி பலவீனமடைந்தது. சைமன் குழு ( 1927 ) 1919 ஆம் ஆண்டு சட்டம் பத்து ஆண்டுகளுக்குப்
பிறகு அதன் செயல்பாடுகள் மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என்று விதித்திருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே , 1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் மறு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவின் தலைவரான சர் ஜான் சைமன் என்பவரது பெயராலேயே ‘ சைமன் குழு ' என்று இது அழைக்கப்பட்டது. இதில் இடம்பெற்றிருந்த ஏழு உறுப்பினர்களும் ஆங்கிலேயர்களாவர். இதில் ஒரு இந்திய உறுப்பினர்கூட இடம் பெறாமையால் , இந்தியாவுக்கு வந்தடையும் முன்பே இக்குழுவிற்கு பலத்த எதிர்ப்புகள் தோன்றின.காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இக்குழுவை எதிர்த்தன.
1928 பிப்ரவரி 3 ஆம் நாள் இக்குழு பம்பாய் வந்திறங்கியபோது நாடு முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. சென்ற இடமெல்லாம் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களும் , ‘ சைமனே திரும்பிப்போ ' என்ற முழக்கங்களும் இக்குழுவை அதிர வைத்தன. 1928 அக்டோபர் 30 ஆம் நாள் லாகூரில் லாலா லஜபதி ராய் தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற போலீஸ் தடியடியில் லஜபதிராய் படுகாயமடைந்தார். ஒரு மாதம் கழித்து அவர் உயிர் பிரிந்தது. 1930 மே மாதம் சைமன் குழு அறிக்கை வெளியிடப்பட்டது.இரட்டையாட்சியின் குறைபாடுகளை இது