text
stringlengths
11
513
சுட்டிக்காட்டியது. அதற்குப்பதில் மாநில சுயாட்சியை இக்குழு பரிந்துரைத்தது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்திற்கு இக்குழுவின் அறிக்கை அடிப்படையாக விளங்கியது என்பதில் ஐயமில்லை. நேரு அறிக்கை ( 1928 ) இதற்கிடையில் இங்கிலாந்தின் அயலுறவுச் செயலாளர் பிர்கன் ஹெட் பிரபு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமா என்று கேட்டு இந்தியர்களுக்கு சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற காங்கிரஸ் 1928 பிப்ரவரி 28 ல் அனைத்துக் சட்சி கூட்டத்தைக் கூட்டியது. எதிர்கால இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரைவதற்கு
எட்டுபேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக மோதிலால் நேரு நியமிக்கப்பட்டார். இக்குழுவின் அறிக்கையே ‘ நேரு அறிக்கை ’ எனப்படுகிறது. இந்த அறிக்கையின் சிறப்புக் கூறுகளாவன நிலையாக டொமினியன் அந்தஸ்து வழங்கப்படுதல் மத்தியில் முழுப் பொறுப்பு வாய்ந்த அரசு மாகாணங்களுக்கு சுயாட்சி மத்திய மாகாண அரசுகளுக்கிடையே தெளிவான அதிகார பகிர்வு. மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம் முஸ்லிம் லீக் தலைவரான முகமது அலி ஜின்னா , நேரு அறிக்கை முஸ்லிம் மக்களின் நலனுக்கு எதிரானது என்று கருதினார்.அகில இந்திய முஸ்லீம்கள் மாநாட்டை
கூட்டிய ஜின்னா , தனது பதினான்கு அம்ச கோரிக்கைகளை வெளியிட்டார். சட்ட மறுப்பு இயக்கம் ( 1930-34 ) சலசலப்பான இந்த சூழ்நிலையில் 1929 டிசம்பர் மாதம் லாகூர் காங்கிரஸ் மாநாடு கூடியது. ஜவஹர்லால் நேரு இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தார். ‘ பூரண சுயராஜ்யம் ’ அல்லது ‘ முழுச் சுதந்திரம் ’ குறித்த தீர்மானம் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நேரு அறிக்கையை அரசு ஏற்க மறுத்தமையால் , காங்கிரஸ் சட்டம் மறுப்பு இயக்கத்தை தொடங்குவது என முடிவு செய்தது. 1930 ஜனவரி 26 ஆம் நாள் இந்திய சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது. அதுமுதல் ஜனவரி
26 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது. விடுதலைக்குப்பின் 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த தினமான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தண்டி யாத்திரை காங்கிரசின் இரண்டாவது கட்ட போராட்டத்துக்கான களம் தயாராக இருந்தது. 1930 மார்ச் 12 ஆம் நாள் காந்தி தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையை தொடங்கினர். அவரால் தெரிவு செய்யப்பட்ட 79 சீடர்கள் பின் தொடர உப்பு சட்டங்களை மறுப்பதற்காக அவர் புறப்பட்டார். 200 மைல்கள் நடந்து 1930 ஏப்ரல் 5 ஆம்
நாள் தண்டி கடற்கரையை சென்றடைந்தார். ஏப்ரல் 6 ஆம் நாள் உப்புச் சட்டங்களை மீறியதன் மூலம் சட்ட மறுப்பு இயக்கத்தை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார். தண்டியாத்திரை ஏப்ரல் 9 ஆம் நாள் மகாத்மா காந்தி இந்த போராட்டத்துக்கான செயல்திட்டங்களை வடிவமைத்தார். உப்புச் சட்டங்களை மீறும் வகையில் கிராமந்தோறும் உப்பு உற்பத்தி ; மதுக்கடைகள் , அபினி மற்றும் அந்நியத் துணிகள் விற்பனை நிலையங்கள் முன்பு பெண்கள் மறியலில் ஈடுபடுதல் ; அயல்நாட்டுத் துணிகளுக்கு தீவைத்தல் ; ராட்டைகள் மூலம் நூல் நூற்று துணி நெய்தல் ; தீண்டாமையை ஒழித்தல் , அரசு
வேலைகளையும் , பள்ளி கல்லூரிகளையும் புறக்கணித்தல் போன்றவை செயல்திட்டங்களில் முக்கியமானவையாகும். அனைத்துக்கும் மேலாக , அரசாங்கத்திற்கு வரிகட்ட வேண்டாம் என்று மக்களை காந்தி கேட்டுக்கொண்டார். விரைவில் இந்த இயக்கம் நாடு முழுவதும் பரவியது. மாணவர்கள் , தொழிலாளர்கள் , குடியானவர்கள் , பெண்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பிரிட்டிஷ் அரசாங்கம் காங்கிரசின் முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையிலடைத்தது. வட்டமேசை மாநாடுகள் ( 1930 – 1932 ) வட்டமேசை மாநாடுகளை கூட்டி பல்வேறு அரசியல் கட்சிகளை
அழைத்து பேச்சு வார்த்தை நடத்தும் சூழ்ச்சியை பிரிட்டிஷ் அரசு பின்பற்றியது. 1930 நவம்பரில் நடைபெற்ற முதல் வட்ட மேசை மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்தது. லண்டனில் 1931 ஜனவரியில் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு காங்கிரஸ் மீது விதித்திருந்த தடையை அரசு விலக்கியதோடு , தலைவர்களையும் சிறையிலிருந்து விடுதலை செய்தது. 1931 மார்ச் 8 ஆம் நாள் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்படி , மகாத்மா காந்தி சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவும்
ஒப்புக் கொண்டார். 1931 செப்டம்பரில் இரண்டாம் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. மகாத்மா காந்தி இதில் கலந்து கொண்டுவிட்டு பெருத்த ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார். முழு சுதந்திரம் , வகுப்பு பிரச்சினை போன்றவற்றுக்கான எந்த தீர்வும் இந்த மாநாட்டில் காணப்படவில்லை. 1932 ஜனவரியில் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி , சர்தார் பட்டேல் , போன்ற தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியும் தடை செய்யப்பட்டது. பூனா ஒப்பபந்தம் ( 1932 ) 1930 ஆம் ஆண்டு வாக்கில் , டாக்டர் அம்பேத்கர்
தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக போராடும் தேசிய அளவிலான தலைவராக உருவெடுத்தார். முதல் வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மை நிலையை எடுத்துரைத்த அம்பேத்கர் , அவர்களுக்கு தனித்தொகுதி ஒதுக்கப்படவேண்டும் என்று கோரினார். 1932 ஆகஸ்டு 16 ஆம் நாள் பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் தனது ‘ வகுப்புக் கொடை’யை அறிவித்தார். இதன்படி , தாழ்த்தப்பட்ட மக்கள் தனி வகுப்பினராகக் கருதப்பட்டு அவர்களுக்கு தனித்தொகுதி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ‘ வகுப்புக் கொடை’யை எதிர்த்து மகாத்மா காந்தி 1932 செப்டம்பர் 20
ஆம் நாள் எரவாடா சிறையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இறுதியில் டாக்டர் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுவே ‘ பூனா ஒப்பந்தம் ’ எனப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இதனை ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி , பல்வேறு மாகாண சட்டமன்றங்களில் 148 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் ஒதுக்கீடு செய்தது. வகுப்புக் கொடையின்படி 71 இடங்களே இவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 1932 ல் மூன்றாவது வட்டமேசை மாநாடு முடிவடைந்தது.மறுபடியும் காங்கிரஸ் இதனை புறக்கணித்தது.
இருப்பினும் , 1933 மார்ச்சில் பிரிட்டிஷ் அரசாங்கம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் வெள்ளை அறிக்கையின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரும் தேசிய இயக்கமும் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்ட விதிகளின்படி 1937 ல் தேர்தல்கள் நடந்தன. இந்தியாவின் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் அமைச்சரவைகள் அமைக்கப்பட்டன. 1939 செப்டம்பர் முதல் நாள் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. மக்களை கலந்து ஆலோசிக்காமலேயே பிரிட்டிஷ் அரசு இந்தியாவை போரில் ஈடுபடுத்தியது. காங்கிரஸ் இச்செயலை கடுமையாக
எதிர்த்தது. தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் 1939 டிசம்பர் 12 ஆம் நாள் மாகாணங்களில் பதவியிலிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகின. இதனை முஸ்லீம் லீக் ‘ விடுதலை நாளாகக் ’ கொண்டாடியது. 1940 மார்ச்சில் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தது. தனி நபர் சத்யாக்கிரகம் இரண்டாம் உலகப்போரின்போது இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் 1940 ஆகஸ்ட் 8 ஆம் நாள் ‘ ஆகஸ்டு சலுகை'யை அறிவித்தது. போருக்குப்பின் புதிய அரசியலமைப்பை வரைவதற்காக இந்தியப் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்
என்று அறிவிக்கப்பட்டது. காந்தி இதனை ஏற்க மறுத்து , தனி நபர் சத்யாகிரகத்தை தொடங்க முடிவு வினோபா பாவே செய்தார். தனி நபர் சத்யாகிரகம் என்பது , வன்முறையற்ற , குறைந்த அளவில் , ஒரு அடையாளமாக நடத்தப்பட்ட இயக்கமாகும். சத்யாகிரகத்தில் ஈடுபடுபவர்களை காந்தியே தேர்வு செய்தார். முதலில் தனிநபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டவர் ஆசார்ய வினோபா பாவே ஆவார். அவருக்கு மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்து ஜவஹர்லால் நேரு தனி நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட்டு 4 மாத சிறை தண்டனை பெற்றார். தனி நபர் சத்யாகிரகம் 15 மாதங்கள்
நீடித்தது. கிரிப்ஸ் தூதுக்குழு ( 1942 ) சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் இதற்கிடையில் , வைஸ்ராய் லின்லித்கோ பிரபு 1941 ஜூலையில் மேலும் நான்கு இந்தியர்களை தனது நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொண்டார். போர்க்காலத்தில் நிலவிய மோசமான சூழ்நிலையைக் கருதி இந்தியர்களின் ஒத்துழைப்பை பெறும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் 1942 மார்ச் 23 ஆம் நாள் சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. கிரிப்ஸின் முக்கிய பரிந்துரைகள் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும். பாதுகாப்பு சிறுபான்மையினர் சுதேச அரசுகள்
மற்றும் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசியலமைப்புக்குழு ஏற்படுத்தப்படும். பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள எந்த மாகாணமாவது இந்த அரசியலமைப்பை ஏற்க மறுக்கும் பட்சத்தில் தற்போதைய நிலையில் தொடரவோ அல்லது தங்களுக்கென தனி அரசியலமைப்பை வரைந்து கொள்ளவோ அனுமதிக்கப்படும். கிரிப்சின் யோசனைகளை நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. காந்தி கிரிப்சின் யோசனைகளை ‘ பின் தேதியிட்ட காசோலை ' என்று வர்ணித்தார். சுதேச அரசுகள் விரும்பினால் அரசியலமைப்பு குழுவிற்கு தனது பிரதிநிதிகளை அனுப்பலாம் அல்லது
இந்திய ஒன்றியத்திலிருந்து விலகியே இருக்கலாம் என்ற யோசனையை அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. பாகிஸ்தான் கோரிக்கை ஏற்கப்படாததால் முஸ்லீம் லீக் இதனை நிராகரித்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் ( 1942 – 44 ) கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி , இந்தியா மீது ஜப்பான் படையெடுக்கும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் பிரிட்டிஷாரை நாட்டைவிட்டு வெளியேறச் செய்யும் இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறினால் மட்டுமே ஓர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும். இந்து , முஸ்லீம் பிரச்சினைக்கு தீர்வு
காணமுடியும் என்று காந்தி கருதினார். 1942 ஆகஸ்ட் 8 ஆம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடி புகழ் வாய்ந்த ‘ வெள்ளையனே வெளியேறு ’ தீர்மானத்தை நிறைவேற்றியது. காந்தி “ செய் அல்லது செத்துமடி ” என்று அறைகூவலை விடுத்தார். 1942 ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆம் தேதகளில் காங்கிரசின் முக்கிய தலைவர்களை அரசாங்கம் கைது செய்தது. அரசின் இந்த திட்டமிட்ட நடவடிக்கையால் இந்திய மக்கள் இயக்கத்தை வழி நடத்த தலைவர்களின்றி விடப்பட்டனர். மகாத்மா காந்தி பூனா சிறையில் அடைக்கப்பட்டார். பண்டித ஜவஹர்லால் நேரு , அபுல் கலாம் ஆஸாத் போன்ற
தலைவர்கள் அகமது நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இத்தருணத்தில் , ராம் மனோகர் லோஹியா , அச்சுதன் , எஸ்.எம்.ஜோஷி போன்றோர் இயக்கத்தை தலைமையேற்று நடத்தினர். இந்த இயக்கத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் ஆற்றிய பங்கு சிறப்பானதாகும். பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் விட்டு வெளியேறி இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். இளைஞர்கள் பலர் நாட்டுப்பற்றுடன் இதில் பங்கெடுத்துக் கொண்டனர். நகரங்களில் வேலை நிறுத்தங்கள் , போராட்டங்கள் , பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கிராமப்புறங்களுக்கும் இந்த இயக்கம்
மெல்ல பரவத் தொடங்கியது. 1943 ல் இந்த இயக்கம் மேலும் வலுவடைந்தது. வங்காளம் , சென்னை போன்ற இடங்களில் அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. 1944 ல் மகாத்மா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சுபாஸ் சந்திரபோஸ் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டமாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் அடக்குமுறையை ஏவியது. 538 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. குறைந்தது 7000 பேர் கொல்லப்பட்டனர். 60,229 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். இந்த இயக்கம் இந்திய விடுதலைக்கு நேரடியாக இட்டுச் சென்றது.
இந்தியர்களிடையே வீரத்தையும் , உற்சாகத்தையும் , ஒட்டுமொத்த தியாக மனப்பாங்கையும் இந்த இயக்கம் தோற்றுவித்தது. இந்திய தேசிய ராணுவம் இரண்டாம் உலகப் போரின்போது ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. அத்தகைய நடவடிக்கைகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். 1943 ஜூலை 2 ஆம் நாள் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரை சென்றடைந்தார். இந்திய தேசிய ராணுவத்தை ‘ டெல்லி சலோ ’ என்று முழக்கமிட்டு உற்சாகப் படுத்தினார். இந்திய சுதந்திரக் கழக்த்தின் தலைவரான அவர் இந்திய தேசிய ராணுவத்தின் தளபதியாகவும்
பொறுப்பேற்றார். நாட்டிற்கு ‘ ஜெய்ஹிந்த் ’ என்ற முழக்கத்தை வழங்கியவர் அவரே. இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று பிரிவுகளுக்கும் சுபாஷ் பிரிவு , காந்தி பிரிவு , நேரு பிரிவு என்று பெயரிடப்பட்டன. ராணி லட்சுமி பாய் பெயரைக் கொண்ட பெண்கள் பிரிவையும் அவர் தொடங்கினார். கோஹிமாவில் வெற்றியைப் பெற்ற இந்திய தேசிய ராணுவம் இம்பாலை நோக்கி முன்னேறியது. 1945 ல் ஜப்பான் சரணடைந்த பிறகு அது தன் முயற்சிகளைக் கைவிட்டது. சுபாஷ் போஸ் தைவானுக்கு சென்றார். அங்கிருந்து டோக்கியோ செல்லும் வழியில் 1945 ஆகஸ்டு 18 ஆம் நாள் விமான விபத்தில் அவர்
உயிர் நீத்தார் என நம்பப்படுகிறது. டெல்லியிலுள்ள செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் மீதான விசாரணை நடைபெற்றது. பண்டித ஜவஹர்லால் நேரு , தேஜ் பகதூர் சாப்ரு வீரர்கள் அவர்கள் சார்பாக வாதிட்டனர். காபினட் தூதுக்குழு ( 1946 ) இரண்டாம் உலகப் போருக்குப்பின் , இங்கிலாந்து பிரதமராக அட்லி பிரபு பொறுப்பேற்றார். 1946 மார்ச் 15 ஆம் நாள் அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் சுயநிர்ணய உரிமையை ஏற்றதுடன் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு ஒப்புதலையும் வழங்கினார். பிரிட்டிஷ் அமைச்சரவையைச் சேர்ந்த மூன்று பேர் சர்
ஸ்டாபோர்டு கிரிப்ஸ் , ஏ.வி. அலெக்சாந்தர் வைத்தார். இதுவே ' காபினட் தூதுக்குழு ’ என்ற காபினட் தூதுக்குழு இந்தியாவின் அரசியலமைப்பு சிக்கலுக்கு ஒரு தீர்வை முன் வைத்தது. இதன்படி மாகாணங்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி அரசியலமைப்புகளின் கீழ் இயங்கும். பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் , சுதேச அரசுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய ஒன்றியம் ஒன்றையும் அது முன்மொழிந்தது. இந்த ஒன்றியம் , அயலுறவுக் கொள்கை , பாதுகாப்பு , தகவல் தொடர்பு போன்றவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எஞ்சிய அதிகாரங்களை மாகாணங்களிடமே
ஒப்படைக்க வேண்டும். புதிய அரசியலமைப்பு எழுதப்பட்டு புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் வரை இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவும் யோசனை கூறப்பட்டது. முஸ்லிம் லீக் , காங்கிரஸ் இரண்டுமே இத்திட்டதை ஒப்புக் கொண்டன. மௌன்ட்பேட்டன் பிரபு பெதிக் லாரன்ஸ் , கொண்ட குழுவை இந்தியாவிற்கு அனுப்பி பெயரைப் பெற்றது. 1946 ஜூலையில் அரசியலமைப்புக் குழுவிற்கான தேர்தல்கள் நடைபெற்றன. 214 பொதுத் தொகுதிகளில் 205 ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.முஸ்லிம் லீக் 78 ல் 73 ல் வெற்றி பெற்றது. 1946 செப்டம்பர் 2 ஆம் நாள் ஜவஹர்லால் நேரு தலைமையில் இடைக்கால
அரசாங்கம் அமைக்கப்பட்டது. மௌன்ட்பேட்டன் திட்டம் ( 1947 ) 1947 பிப்ரவரி 20 ஆம் நாள் பிரதமர் அட்லி காமன்ஸ் அவையில் 1948 ஜூன் மாதத்திற்கு முன்பு இந்தியர்களிடம் ஆட்சி அதிகாரம் மாற்றப்படும் என்ற பிரிட்டிஷ் அரசின் திடமான எண்ணத்தை அறிவித்தார். இதனை நிறைவேற்றுவதற்கு , மௌன்ட் பேட்டன் பிரபுவை இந்தியாவின் வைஸ்ராயாக அனுப்புவது என்றும் அவர் முடிவு செய்தார். 1947 மார்ச் 24 ஆம் நாள் மிகுந்த அதிகாரங்களுடன் மவுன்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக பதவியேற்றார். இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்குவது என்பது தவிர்க்க
முடியாதது என்று அவர் கருதினார். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு 1947 ஜூன் 3 ஆம் நாள் இந்தியப் பிரிவினைக்கான தனது திட்டத்தை அவர் அறிவித்தார். காங்கிரசும் , முஸ்லீம்லீக்கும் இத்திட்டத்தை ஒப்புக்கொண்டன. இந்திய விடுதலைச்சட்டம் ( 1947 ) மௌன்ட்பேட்டன் திட்டத்தை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் 1947 ஜூலை 18 ஆம் நாள் இந்திய விடுதலை சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் முக்கிய கூறுகள் “ இந்திய விடுதலை இந்திய பாகிஸ்தான் பிரிவினை 1947 ஆகஸ்டு 15 முதல் நடைமுறைக்கு வரும். பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும்
இவ்விரண்டு நாடுகளிடமும் வழங்கும். பஞ்சாப் , வங்காளம் இவ்விரண்டு மாகாணங்களின் எல்லைகளை வரையறுப்பதற்கு எல்லை வரையறுக்கும் ஆணையம் ஏற்படுத்தப்படும். இவ்விரண்டு நாடுகளின் அரசியலமைப்பு குழுக்களுக்கு அரசியலமைப்பை உருவாக்கும் அதிகாரங்கள் வழங்கப்படும். ராட்கிளிப் தலைமையிலான எல்லை வரையறுக்கும் ஆணையம் இந்திய பாகிஸ்தான் எல்லைகளை வரையறுத்தது. 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியாவும் , ஆகஸ்டு 14 ஆம் நாள் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாயின.சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராக மௌன்ட்பேட்டன் பிரபு பொறுப்பு ஏற்றார்.பாகிஸ்தானின்
முதல் தலைமை ஆளுநராக முகமது அலி ஜின்னா பதவியேற்றார். 1948 ஜனவரி 30 ஆம் நாள் மிகவும் சோகமான நிகழ்ச்சியும் நடந்தேறியது.தேசத் தந்தை மகாத்மா காந்தியை அவர் வழிபாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றார். IV. சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது அ. ரௌலட் சட்டத்தின்படி சந்தேகத்தின்பேரில் எவரையும் கைது செய்யலாம். 1919 அக்டோபர் 29 ஆம் நாள் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டது. ஆ. ஒத்துழையாமை இயக்கம் குறித்த தீர்மானம் லாகூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. முஸ்லீம் லீக்கின் 14 கருத்துக்களை முகமது அன்சாரி முன்வைத்தார். ஈ. மௌன்ட்பேட்டன் திட்டம் குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றி குறிப்பு எழுதுக ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக. நேரு அறிக்கையின் கூறுகளை விவாதி பூனா ஒப்பந்தம் பற்றி குறிப்பு எழுதுக. 5. இந்திய விடுதலைச் சட்டத்தின் பிரிவுகளை ஆய்க VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் ) 1. 2. 3. சட்ட மறுப்பு இயக்கம் பற்றி தொகுத்து எழுதுக. இந்திய விடுதலை இயக்கத்தில் மகாத்மா காந்தியின்
பங்கினை மதிப்பிடுக. 1919 முதல் 1935 வரை இந்திய விடுதலை இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி விவரி. பாடம் – 17 இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர்கள் அறிந்த கொள்வது : 1. தமிழ்நாட்டில் ஆரம்பகால தேசிய எழுச்சிகள் 2. சுதேசி இயக்கம் 3. தமிழ்நாட்டில் தன்னாட்சி இயக்கம் 4. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக் கிரகம் 5. வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. 1857 ஆம் ஆண்டு பெருங்கலகத்துக்கு முன்பேகூட ,
பாஞ்சாலங்குறிச்சி கலகம் , 1801 ஆம் ஆண்டு நடைபெற்ற மருது சகோதரர்கள் தலைமையேற்ற தென்னிந்திய கலகம் , 1806 ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் கலகம் போன்ற பிரிட்டிஷாருக்கு எதிரான இயக்கங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. தேசியப் போராட்ட காலத்தில் , ஜி. சுப்ரமணிய அய்யர் , வ.உ.சிதம்பரம்பிள்ளை , சுப்ரமணிய பாரதி , சி.ராஜகோபாலாச்சாரி , தந்தை பெரியார் , கு.காமராஜ் போன்ற தலைவர்களையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்றதுபோல , தமிழ்நாட்டிலும் தேசிய இயக்கம் எழுச்சியுடன் காணப்பட்டது. தமிழ்நாட்டில் தேசிய
இயக்கத்தின் தொடக்கம் ஆரம்ப கால அரசியல் அமைப்பான , சென்னை சுதேசி சங்கம் 1852 ஜூலையில் தொடங்கப்பட்டது. லட்சுமிநரசு செட்டி மற்றும் சீனுவாச பிள்ளை ஆகியோரால் நிறுவப்பட்டது. வணிகக் குழுவின் ஆட்சி பின்பற்றிய கொள்கைகளை இச் சங்கம் கடுமையாக விமர்சித்தது. பின்னர் , 1884 ல் பி. அனந்தாச்சார்லு மற்றும் பி. ரங்கைய நாயுடு என்போரால் சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்டது. பின்னர் , சென்னை சுதேசி சங்கமும் இதனுடன் ஒன்றாக இணைந்தது. இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளை சென்னை மகாஜன சங்கம் தீவிரமாக ஆதரித்தது. மேலும் , சமூக
சீர்திருத்தத்திலும் அது கவனம் செலுத்தியது. 1889 டிசம்பரில் , ஜி.சுப்ரமணிய அய்யர் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். 1885 ஆம் ஆண்டு முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் முதலாவது தீர்மானத்தையும் இவர் கொண்டு வந்தார். ஆங்கிலத்தில் " தி இந்து " , தமிழில் " சுதேசமித்திரன் " போன்ற தேசிய இதழ்களையும் இவர் தொடங்கினார். தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வசித்த மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் சென்னை மாகாண சங்கம் ஒன்று 1892 ல் நிறுவப்பட்டது. 1887 ல் பக்ருதீன் தயாப்ஜி என்பவரது தலைமையில் இந்திய தேசிய காங்கிரசின்
மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இத்தகைய மாநாடுகள் பல சென்னை நகரில் பின்னரும் நடைபெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் வ.உ.சிதம்பரம் காரணமாக 1905 ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை தமிழ்நாட்டில் சுதேசிஇயக்கம் தோன்றுவதற்கு அமைந்தது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களில் வ.உ.சிதம்பரம்பிள்ளை , சுப்ரமணிய சிவா , சுப்ரமணிய பாரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1907 மே திங்களில் பாரதியார் காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான பிபின் சத்திரபால் என்பவரை
சென்னை நகருக்கு வரவழைத்து உரை செய்தார். 1907 ஆம் ஆண்டு சூரத் பிளவுக்குப் பிறகு மற்ற தேசியவாதிகளும் இணைந்து சென்னை ഇ நிகழ்த்தச் வ.உ.சியும் சங்கத்தை சுப்ரமணிய பாரதி தோற்றுவித்தனர். சுப்ரமணியபாரதி சிறந்த முற்போக்குவாதியாகவும் , பழமைவாதத்தை சாடுபவராகவும் , புரட்சிகரமான அரசியல் சமூக சிந்தனைகளைக் கொண்டவராகவும் விளங்கினார். அவர் ‘ இந்தியா ’ என்ற தமிழ்வார இதழின் ஆசிரியராகவும் இருந்தார். ‘ சுதேசி கீதங்கள் ' என்றழைக்கப்படும் தேசிய பாடல்களை அவர் எழுதினார். வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு வழக்குரைஞராக தமது வாழ்க்கையைத்
தொடங்கினார். 1905 ல் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். பால கங்காதர திலகரின் சீடராக அவர் திகழ்ந்தார். 1908 ல் தூத்துக்குடியில் நடைபெற்ற பவழ ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார். 1906 ல் தூத்துக்குடியில் சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தை நிறுவினர். எனவே , ‘ கப்பலோட்டிய தமிழன் ’ என்று அவர் அழைக்கப்பட்டார். சுதேசி நீராவிக்கப்பல் கழகத்திற்கும் பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்திற்குமிடையே கடுமையான போட்டி நிலவியது. பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்தை புறக்கணிக்குமாறு வ.உ.சி. பிரச்சாரம்
செய்தார். இதனால் 1908 மார்ச் திங்களில் திருநெல்வேலி கலகம் நடைபெற்றது. இவருக்கு உறுதுணையாக செயல்பட்டவர் சுப்ரமணிய சிவா. இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆறு ஆண்டு காலம் கடும் சிறைவாசத்தை இருவரும் அனுபவித்தனர். சிறைக்குள் அவர்கள் கடுமையான தண்டனைகளுக்குட்படுத்தப்பட்டனர். செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளானதால் , வ.உ.சி. ‘ செக்கிழுத்தச் செம்மல் ’ என்று அழைக்கப்பட்டார். தேசியத் தலைவர்கள் அடைக்கப்பட்டது , சிறைக்குள் சித்ரவதைகளுக்குட்படுத்தப்பட்டது , சுதேசி கப்பல் கழகத்தின் சிதைவு போன்ற காரணங்களால்
சினந்தெழுந்த சிலர் பாரதமாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பை ஏற்படுத்தினர். இதில் , நீலகண்ட பிரம்மச்சாரியின் பங்கு மகத்தானதாகும். இச்சங்கத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் 1911 ஜூன் மாதத்தில் ராபர்ட் வில்லியம் டி.ஆஷ். என்ற வன்செயலுக்கு பெயர்பெற்ற பிரிட்டிஷ் அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார். சிறைக்குள் தமிழ்நாட்டில் தன்னாட்சி இயக்கம் சுப்ரமணிய சிவா 1916 முதல் 1918 ஆம் ஆண்டு வரை சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கி நடத்தினார். 1915 செப்டம்பர் மாதத்திலேயே ‘ நியூ இந்தியா ’ என்ற
தனது இதழில் அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்கப் போவதற்கான முடிவை அறிவித்திருந்தார். 1915 டிசம்பரில் பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் அதற்கான காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பையும் கோரினார். திலகரும் இவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார். முதல் உலகப்போர் காலத்தில் தன்னாட்சி இயக்கம் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. ஒத்துழையாமை இயக்கம் 1921 முதல் 1923 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கமும் தீவிரமாக நடைபெற்றது. அந்நியரின் விதிமுறைக்களுக்கு எதிரான போராட்டங்கள் 1921 மார்ச்சில் தொடங்கின. மாகாணத்தின் பல
பகுதிகளிலும் மது அருந்ததுவதற்கு எதிரான இயக்கங்கள் 1921-22 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன. குறிப்பாக மது அருந்துவதற்கு எதிரான போராட்டம் மதுரையில் தீவிரமாக நடைபெற்றது. பொதுவாகவே , தமிழ்நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் பரவலாக நடைபெற்றது. இதன் முக்கிய தலைவர்களாக சி. ராஜகோபாலாச்சாரி , எஸ்.சத்தியமூர்த்தி , ஈ. வெ. ராமசாமி நாயக்கர் போன்றோர் செயல்பட்டனர். அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியின் செயல்திட்டங்களில் சட்டசபை புறக்கணிப்பே
முக்கியமானது என்று சி. ராஜகோபாலாச்சாரி வலியுறுத்தினார். ஆனால் , கஸ்தூரிரங்க அய்யங்கார் , சீனுவாச அய்யங்கார் , வரதராஜூலு நாயுடு , விஜயராகவாச்சாரி போன்ற தலைவர்கள் இதனை ஏற்கவில்லை. இதற்கிடையில் பெரியார் ஈ.வெ.ரா.கேரளத்தில் வழக்கத்திலிருந்த சமூகப் பாகுபாட்டைக் கண்டித்து வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினார். அன்னிபெசன்ட் அம்மையார் கு.காமராஜ் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வி.வி.எஸ். அய்யர் நடத்தி வந்த சேரன் மாதேவி குருகுலத்தில் சமூகப்பாகுபாடு நிலவுவதைக் கண்டித்த பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.சத்தியமூர்த்தியும் விடுதலைப்போராட்ட வீரர்களில் முக்கியமானவர். 1929 ல் சைமன் குழு தமிழ்நாட்டுக்கு வந்தபோது , சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். விருதுநகரைச் சேர்ந்த கு. காமராஜ் மற்றொரு விடுதலை வீரர் ஆவார். 1924 ல் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதின் மூலம் அவர் தேசிய இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 1929 ல் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் , பொருளாளராகவும் அவர் விளங்கினார். ஆரம்பத்திலிருந்தே காமராஜர்
மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். எளிமையான நடையில் அவர் பேசுவார். நுண்ணறிவும் , செயல்திறனும் மிக்கவராக அவர் திகழ்ந்தார். தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களின் பல்வேறு பிரச்சினைகளை அவர் புரிந்து கொண்டார். தமிழ்நாட்டிலிருந்த ஒருவராக அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தை கொண்டு சென்றவர் காமராஜ் என்று கூறலாம். சாமானியர்களில் உப்பு சத்தியாக்கிரகம் சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். 1930 ல் அவர் தண்டி
யாத்திரையை மேற்கொண்டார். 1930 ஏப்ரல் மாதத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக் கிரக நடைப்பயணத்தை அவர் மேற்கொண்டார். திருச்சியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த வேதாரண்யம் கடற்கரைக்கு நடைப்பயணம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று ( ஏப்ரல் 13 ) பயணம் தொடங்கப் பட்டது. 1930 ஏப்ரல் 28 ஆம் நாள் இப்பயணம் வேதாரண்யத்தில் முடிவடைந்தது. இரண்டு
நாட்கள் கழித்து உப்புச் சட்டங்களை மீறியதற்காக ராஜகோபாலாச்சாரி கைது செய்யப்பட்டார். வி.எஸ். எஸ். ராஜன் , சர்தார் வேதரத்தினம் பிள்ளை , சி. சுவாமிநாத செட்டி மற்றும் கே.சந்தானம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் சி.ராஜகோபாலாச்சாரி வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்குபெற்றனர். கொடியேந்தி போராட்டம் நடத்திய திருப்பூர் குமரன் தடியடிக்கு ஆளானார். கொடியை கையில் பிடித்து போராடிய அந்த மாவீரன் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்பட்டார். இவரது நினைவைப் போற்றி இந்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்
பிள்ளையின் எழுச்சிமிக்க பாடல்களால் தேசிய இயக்கம் மேலும் வலிமை பெற்றது. விடுதலை இயக்கத்தில் காந்திய நெறிகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை அவரது பாடல்கள் எடுத்துக் கூறின. “ கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது ” என்று அவர் பாடினார். பிரிட்டிஷாருக்கு எதிரான அகிம்சைப் போராட்டத்தின் கொள்கையை விளக்குவதாக இந்த வரிகள் அமைந்தன. திருப்பூர் குமரன் வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1935 ஆம் ஆண்டு சட்டப்படி 1937 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடந்தன. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில்
அமைச்சரவை பதவியேற்றது. அவரது அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இருந்தனர். 1937 ஜூலை முதல் 1939 அக்டோபர் வரை இந்த அமைச்சரவை பதவியில் நீடித்தது. இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகியபோது ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையும் பதவி விலகியது. இரண்டாம் உலகப் போரின்போது , கிரிப்ஸ் தூதுக்குழு பரிந்துரைகள் தோல்வியடையவே , காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஆலைத் தொழிலாளர்கள் , மாணவர்கள் , பொது மக்கள் ஏராளமாக கலந்து
கொண்டனர். இது நாடுதழுவிய போராட்டமாக அமைந்தது. பக்கிங்ஹாம் கர்னாடிக் ஆலை , துறைமுகப் பொறுப்புக் கழகம் , டிராம்வே ஆகியவற்றின் தொழிலாளர்கள் என உழைக்கும் வர்க்கத்தினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். வடஆர்க்காடு , மதுரை , கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளையனே வெளியேறு பாடம் – 18 நீதிக்கட்சியின் ஆட்சி கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் அறிந்துகொள்வது : 1. சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கம் எழுச்சி பெற்றதற்கான காரணங்கள் 2. நீதிக்கட்சியின் தோற்றம் 3. நீதிக்கட்சியின் ஆட்சி 4.
நீதிக்கட்சியின் சாதனைகள் 5. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் முடிவு சென்னை மாகாணத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் ஆட்சி தென்னிந்திய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நீதிக்கட்சியின் கொள்கையும் நோக்கங்களும் தனித்தன்மையுடையதாகவும் , காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளிலிருந்து மாறுபட்டதாகவும் காணப்பட்டன. நீதிக்கட்சி பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு , பணித்துறை மற்றும் கல்வித்துறை போன்றவற்றில் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு சமூகப்புரட்சியை உருவாக்கியது. நீதிக்கட்சியின்
தோற்றம் பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் பிரதிநிதியான நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். பிராமணர் அல்லாதார் இயக்கம் தோன்றியதற்கான முக்கிய காரணம் சமூகத்தில் பிராமணரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததேயாகும். சிவில் பணித்துறையிலும் , கல்வி நிறுவனங்களிலும் அவர்கள் அதிக சதவிகித இடங்களில் அங்கம் வகித்தனர். மேலும் , சென்னை சட்ட மன்றத்திலும் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு பிராமணர் அல்லாதார் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்தது. பத்திரிகைத்துறையிலும் பிராமணர்கள் முற்றுரிமை பெற்றிருந்தனர். தமிழ்மொழி
மற்றும் தமிழ் இலக்கியம் ஆகியன இருளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதால் பிராமணர் அல்லாதோர் பெரும் உற்சாகம் அடைந்தனர். குறிப்பாக 1856 ஆம் ஆண்டு மறைத்திரு. ராபர்ட் கால்டுவெல் எழுதிய ‘ திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம் ' என்ற நூல் திராவிடர் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது. பின்னர் , ஆறுமுக நாவலர் , சி.வை.தாமோதரம் பிள்ளை , உ.வே. சாமிநாத அய்யர் போன்ற தமிழ் அறிஞர்களின் முயற்சியால் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மீட்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன. வி. கனகசபை பிள்ளையின் 1800 ஆண்டுக்கு முன் தமிழர்கள்
என்ற நூலில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே தமிழர்கள் மிகச் சிறந்த நாகரீகத்தை படைத்திருந்தனர் என்பதை சுட்டிக் காட்டினார். பிராமணர் அல்லாதோர் மத்தியில் திராவிட உணர்வுகளை இது மேலும் வளர்த்தது. மேற்கூறிய காரணங்களின் ஒட்டுமொத்த விளைவாக பிராமணர் அல்லாதார் இயக்கமும் நீதிக்கட்சியும் தோன்றின. நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும். இது 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பை வளர்ப்பதற்கு டாக்டர் சி. நடேச முதலியார் முக்கிய பங்காற்றினார். 1916 ஆம் ஆண்டு பிராமணர்
அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ‘ தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ' தோற்றுவிக்கப்பட்டது. பிட்டி தியாகராய செட்டி , டாக்டர் டி.எம்.நாயர் , பி. ராமராய நிங்கர் ( பனகல் அரசர் ) மற்றும் சி. நடேச முதலியார் போன்ற தலைவர்கள் இந்த அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தனர். தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ‘ ஐஸ்டிஸ் ’ ( நீதி ) என்ற பெயரில் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாளை நடத்தி வந்தது. இதனால் இந்த அமைப்பு நீதிக்கட்சி என்றே அழைக்கப்பட்டது. நீதிக்கட்சியை ஆதரித்த மற்றொரு தமிழ்ப் பத்திரிகை திராவிடன் ஆகும்.
மேலும் ஜஸ்டிஸ் கட்சி பல பொதுக்கூட்டங்கள் , மாநாடு , சொற்பொழிவுகள் வாயிலாக பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை மக்களிடையே பரப்பியது அது போலவே ஜஸ்டிஸ் கட்சி மாவட்ட அமைப்புகளை உருவாக்கியது. மற்றும் பிராமணர் அல்லாத இளைஞர் அணியை தோற்றுவித்தது. நீதிக்கட்சியின் ஆட்சி மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1920 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று நீதிகட்சி ஆட்சிக்கு வந்தது. சென்னை சட்ட சபையில் 98 ல் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. பிட்டி தியாகராய செட்டி அமைச்சரவைக்கு தலைமையேற்க
மறுத்துவிட்டதால் ஏ. சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. 1923 ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்ய கட்சியை எதிர்த்து போட்டியிட்டது. மீண்டும் பெரும்பான்மை இடங்களைப்பிடித்த நீதிக்கட்சி பனகல் அரசர் தலைமையீன்கீழ் அமைச்சரவையை அமைத்தது. 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சியில் ஒற்றுமை குலைந்ததால் , ஒட்டுமொத்த காங்கிரசை எதிர்த்து பெரும்பான்மை பெறமுடியவில்லை. எனவே , சுயேச்சை வேட்பாளர் ஏ. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை சுயராஜ்ய கட்சியின் ஆதரவுடன் பதவிக்கு வந்தது. 1930 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும்
நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்றது. பி. முனுசாமி நாயுடு தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. 1932 ல் பொப்பிலி அரசர் தலைமை அமைச்சரானார். 1934 ல் இரண்டாவது முறையாக பொப்பிலி அரசர் அமைச்சரவைக்கு தலைமையேற்றார். 1937 ஆம் ஆண்டுவரை அவரது ஆட்சி தொடர்ந்தது. நீதிக்கட்சியின் சாதனைகள் மொத்தம் 13 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தது. சமூக நீதியும் , சமூக சீர்திருத்தங்களுமே இந்த ஆட்சியின் சிறப்புகளாகும். அரசப் பணியிடங்களில் பிராமணர் அல்லாத சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவத்தை நீதிக்கட்சி வழங்கியது. கல்வி சீர்திருத்தங்கள்
மூலம் தாழ்த்தப்பட்டோர் நிலை உயர்வதற்கு அது பாடுபட்டது. நீதிக் கட்சி கல்வித்துறையில் பின்வரும் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தியது. 1. கட்டணமில்லாத கட்டாயக் கல்வி முதன் முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தப் பட்டது. 2. ஏறத்தாழ 3000 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு மீன்வளத்துறையின் மூலமாக இலவச மீன் பிடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 3. சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளில் இலவச மத்திய உணவு அளிக்கப்பட்டது. 4. 1934 ம் ஆண்டு சென்னை துவக்க கல்வி சட்டம் திருத்தப்பட்டு 1935 ல் துவக்க
கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டது. 5. பெண் கல்வி நீதிக் கட்சியின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டது. 6. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி தொழிலாளர் நலத்துறையினரிடம் ஒப்படைக்கப் பட்டது. 7. ஆயுர்வேதா , சித்தா , யுனானி மருத்துவக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட முன்சீப்புகளை நியமிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டது. 1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு அரசாணைகள் , உள்ளாட்சி அமைப்புகளிலும் , கல்வி நிறுவனங்களிலும் பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு
வழிவகுத்தன. 1924 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகமே , 1929 ல் பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக இத்தகைய அமைப்பு சென்னையில்தான் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆலய நிர்வாகங்களில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீதிக்கட்சி பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தயது.
தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக 1922 ம் ஆண்டு சென்னை அரசாங்க தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது பல புதிய தொழிற்சாலைகள் உருவாக காரணமாயின. உதாரணமாக சர்க்கரை தொழிற்சாலைகள் , பொறியாளர் பணிகள் , தோல் பதனிடும் தொழிற்சாலைகள் , அலுமினியம் , சிமெண்ட் தொழிற்காலைகள் , எண்ணெய் தொழிற்சாலைகள் உருவாயின. இந்த உதவிச்சட்டம் , தொழிற்சாலைகளுக்கு நிலம் , நீர்பாசன வசதிகள் வழங்க வழிவகை செய்தது. அதுபோலவே நீதிக்கட்சி கிராமப்புற வளர்ச்சிக்காகவும் , வேளாண் மக்களுக்கு உதவிட திட்டங்களை அறிமுகப்படுத்தியது. நோய்களை தடுக்க
பொது சுகாதாரத் திட்டங்களை கொண்டு வந்தது. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென்னையில் நகர மேம்பாட்டு குழுவாயிலாக சென்னை மாநகராட்சி குடிசைகளை மாற்றி வீடு கட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. சமுதாய நல நடிவடிக்கைகளாக நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரிசு நிலங்களை வழங்கியது. பெண்களை இழிவுபடுத்தும் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் செயல்முறைகள் சீரமைக்கப்பட்டன. நீதிக் கட்சி ஆட்சியின்போதுதான் , 1926 ல் ஆந்திரப் பல்கலைக்கழகமும் , 1929 ல் அண்ணாமலை
பல்கலைக்கழகமும் நிறுவப்பட்டன. நீதிக்கட்சி ஆட்சியின் முடிவு 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் , தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் இந்திய அமைச்சர்களிடமே மாகாணத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு என்ற நிலை தோன்றியது. இந்த தருணத்தில் நீதிக்கட்சியின் தலைவராக கே.வி.ரெட்டி நாயுடுவும் , காங்கிரஸ் தலைவராக சி. ராஜகோபாலாச்சாரியும் பொறுப்பு வகித்தனர். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டசபைக்கு இடங்களில் 152 காங்கிரஸ் வெற்றிபெற்றது. சட்டமேலவையின் 46 இடங்களில் பாடம் – 19
அரசியலமைப்பின் வளர்ச்சி ( 1858–1947 ) கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் அறியும் செய்திகள் : 1. 1858 ஆம் ஆண்டு முதல் 1935 வரை அரசியலமைப்பு வளர்ச்சியின் வரலாறு. 1861 மற்றும் 1892 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட இந்திய கவுன்சில் சட்டங்களின் முக்கியத்துவம். மின்டோ - மார்லி சீர்திருத்தங்களின் முக்கிய கூறுகள். 3. 4. 1919 ஆம் ஆண்டு சட்டத்தின் சிறப்புத் தன்மைகள். 5. 1935 ஆம் ஆண்டு சட்டத்தின் முக்கியத்துவம். 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச்சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து இந்திய அரசியலமைப்பின் வரலாறு
தொடங்குகிறது. 1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம் மற்றும் 1793 முதல் 1853 வரை இயற்றப்பட்ட பட்டயச் சட்டங்கள் கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாகும். 1857 ஆம் ஆண்டு கலகம் , இந்தியாவில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி , இங்கிலாந்து அரசரின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. விக்டோரியா அரசியின் அறிக்கை
இந்தியர்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும் என்ற உறுதியினையும் அளித்தது. அதன்பிறகு , நடைபெற்ற இந்திய தேசிய இயக்கத்தின் பின்னனியில் இந்திய அரசியலமைப்பில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 1858 ஆகஸ்டு 2 ஆம் நாள் அரச அனுமதியையும் இச்சட்டம் பெற்றது. இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள் : கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் ஆட்சி அரசியின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது.
இங்கிலாந்தில் , இயக்குநர்கள் குழுவும் , கட்டுப்பாட்டு வாரியமும் கலைக்கப்பட்டன. அவற்றுக்குப்பதில் , இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டார் ; அவருக்கு ஆலோசனை வழங்க ‘ இந்தியா கவுன்சில் ’ என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. அயலுறவுச் செயலர் பிரிட்டிஷ் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பார். இந்தியாவுக்கான முதல் அயலுறவுச் செயலராக சர் சார்லஸ் வுட் நியமிக்கப்பட்டார். இந்தியா கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்தியாவின் தலைமை ஆளுநர் இந்தியாவின் வைஸ்ராய் ( அரசுப் பிரதிநிதி ) என்ற
பொறுப்பையும் வகிப்பார். இந்தியாவின் முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டவர் கானிங் பிரபு ஆவார். இச்சட்டம் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டது. விக்டோரியா அரசியின் அறிக்கை 1858 நவம்பர் 1 ஆம் நாள் விக்டோரியா அரசியின் அறிக்கையை அலகாபாத் நகரில் கானிங் பிரபு அறிவித்தார். இந்த அரச அறிக்கை இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல்வேறு முக்கிய இடங்களில் பொது மக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. இந்தியாவில் வணிகக் குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்ததையும் , அரசியார் ஆட்சிப் பொறுப்பை தாமே
மேற்கொண்டதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்திய அரசர்களுடன் வணிகக்குழு செய்து கொண்டிருந்த உடன்படிக்கைகளை ஒப்புக்கொண்டதுடன் , அவர்களது உரிமைகள் , கண்ணியம் , மதிப்பு ஆகியவற்றை மதித்து நடப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. சமமான மற்றும் பாரபட்சமற்ற சட்டப்பாதுகாப்பு தங்களது சமய மற்றும் சமூக பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கான உரிமை ஆகியன இந்திய மக்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிக்கை கூறியது. விக்டோரியா அரசியின் அறிக்கை 1858 ஆம் ஆண்டு சட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதாக அமைந்தது. இந்திய கவுன்சில்கள் சட்டம் ( 1861
) 1861 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவிலிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தியது. மேலும் , தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழு மத்திய சட்டமன்றமாக விரிவுபடுத்தப்பட்டது. ஆறு முதல் பன்னிரண்டு ' கூடுதல் உறுப்பினர்கள் ’ தலைமை ஆளுநரால் நியமிக்கப்படுவர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அலுவலர் அல்லாதவர்களாக இருப்பர். இதனால் சட்டமன்றத்தில் இந்தியர்களை சேர்ப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களின் பணி சட்டமியற்றுவது மட்டுமே என்று தெளிவாகக்
கூறப்பட்டது. நிர்வாகக் குழுவின் செயல்பாடுகளில் தலையிட இவர்களுக்கு உரிமையில்லை. நிர்வாகம் மற்றும் நிதி குறித்த அதிகாரங்கள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. மாகாணங்களிலும் இதேபோல் சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களில் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு முதல் எட்டாக நிர்ணயிக்கப்பட்டது. முதன்முதலாக இந்தியர்களுக்கு சட்டமியற்றும் பணியில் பங்ககெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் அரசியலமைப்பின் வளர்ச்சியில் இச்சட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் சட்டமியற்றும் முறை மெதுவாகத் தொடங்கி , 1892 மற்றும்
1909 ஆம் ஆண்டு சட்டங்களின் மூலம் மேலும் வளர்ச்சிபெற்றது. இந்திய கவுன்சில்கள் சட்டம் ( 1892 ) 1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய கவுன்சில்கள் சட்டத்தை இந்திய தேசிய காங்கிரசுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கருதலாம். மத்திய சட்டமன்றத்திலிருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இச்சட்டம் மேலும் உயர்த்தியது. அவர்களது எண்ணிக்கை குறைந்தது பத்து என்றும் அதிகபட்சம் பதினாறு என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அலுவலர் அல்லாதோரின் விகிதமும் அதிகரிக்கப்பட்டது. 16 பேரில் 6 பேர் அலுவலர்கள் , பேர் அலுவலர் அல்லாதவர்கள் , அரசின்
வரவு - செலவு அறிக்கை மற்றும் நிதிக்கொள்கை பற்றி விவாதிக்க கூடுதல் உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் மாகாண சட்டமன்றங்களிலும் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கூடுதல் அதிகாரமும் வழங்கப்பட்டது. மின்டோ - மார்லி சீர்திருத்தங்கள் ( 1909 ) 1909 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் மின்டோ மார்லி சீர்திருத்தங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் மார்லி பிரபு , இந்தியாவின் தலைமை ஆளுநர் மின்டோ பிரபு , இவ்விருவரும் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு காரணமாக
இருந்தனர். காங்கிரசிலிருந்து மிதவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள் : 1. மத்திய சட்டசபையிலிருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 60 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகும். மீதமுள்ள நியமிக்கப்பட்டவர்கள் 33 பேரில் 28 பேர்களுக்குமேல் , அதிகாரிகள் இருக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டது. 2. சட்டமன்றங்களுக்கு தேர்தல் என்ற கருத்து சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் , முஸ்லீம்களுக்கு சாதகமாக
இருக்கும் பொருட்டு முதன்முறையாக வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் பெரிய மாகாணங்களின் சட்டமன்றங்களில் இருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டது. வரவு - செலவு அறிக்கை மற்றும் பொதுமக்கள் நலன் குறித்த விவகாரங்களைப்பற்றி விவாதிக்கவும் , நிறைவேற்றவும் சட்டமன்றங்களுக்கு தீர்மானங்கள் வழங்கப்பட்டது. ஆனால் , வரவு ஆளுநர் அனுமதி அளிக்க மறுக்கலாம். உரிமை செலவு அறிக்கை மீதான விவாதத்திற்கு தலைமை தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்
நியமிக்கப்பட்டார். அவ்வாறு நிமயமிக்கப்பட்ட முதல் இந்தியர் எஸ்.பி. சின்ஹா என்பவராவார். பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கை 2 லிருந்து 4 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியர்களை இப்பதவிகளுக்கு நியமிக்கும் வழக்கமும் தொடங்கியது. 7. இங்கிலாந்திலிருந்த இந்தியா கவுன்சிலிலும் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றனர். இந்தியாவில் ஒரு நாடாளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தும் நோக்கம் மின்டோ – மார்லி சீர்திருத்தங்களுக்கு கிடையாது. இருப்பினும் , இது தாராளமான நடவடிக்கையே என்று கருதிய மிதவாதிகள் இந்த
சீர்திருத்தங்களை வரவேற்றனர். தனித்தொகுதிகளை ஒதுக்குதல் என்ற கோட்பாடு 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்கு இட்டுச் சென்றது. மான்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் ( 1919 ) முதல் உலகப் போர் காலத்தில் நடைபெற்ற தன்னாட்சி இயக்கம் போன்ற அரசியல் நடவடிக்கைகளின் பலனாக ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது. 1917 ஆகஸ்டு 20 ஆம் நாள் இந்தியாவிற்கான அயலுறவுச் செயலர் மான்டேகு , காமன்ஸ் சபையில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். இந்தியாவில் படிப்படியாக பொறுப்புள்ள அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவரது அறிக்கையில்
உறுதியளிக்கப்பட்டது. அதன் முதல் தவணையாக இங்கிலாந்து நாடாளுமன்றம் 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டமே மான்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் என அழைக்கப்படுகிறது. அப்போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் செம்ஸ்போர்டு பிரபு ஆவார். இச்சட்டத்தின் முக்கிய கூறுகளாவன : 1. மாகாணங்களில் இரட்டையாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. மாகாண அதிகாரங்கள் யாவும் ‘ ஒதுக்கப்பட்ட துறைகள் ’ எனவும் ‘ மாற்றப்பட்ட துறைகள் ’ எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட துறைகளின்கீழ் காவல்துறை ,
சிறைச்சாலைகள் , நிலவருவாய் , நீர்பாசனம் , வனங்கள் போன்ற துறைகளும் , மாற்றப்பட்ட துறைகளின் கீழ் , கல்வி , உள்ளாட்சி அமைப்புகள் , பொது சுகாதாரம் , துப்புரவு , வேளாண்மை மற்றும் தொழில்கள் போன்ற துறைகளும் இருந்தன. ஒதுக்கப்பட்ட துறைகள் ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் நிர்வாகத்தில் இயங்கின. மாற்றப்பட்ட துறைகளை ஆளுநரும் அவரது அமைச்சர்களும் நிர்வகித்தனர். 105 மத்தியில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டது. மாநிலங்களவை என்றும் சட்டப்பேரவை என்றும் இவை அழைக்கப்பட்டன. சட்டப்பேரவையில் இருந்த மொத்தம்
145 உறுப்பினர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் எஞ்சிய 40 பேர் நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். மாநிலங்களைவையிலிருந்த அதிகபட்ச உறுப்பினர்களான 60 பேரில் 34 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எஞ்சிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டவர்கள். பேர் 3. இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கான ஊதியம் இனி பிரிட்டிஷ் வருவாயிலிருந்தே அளிக்கப்படும். இதுவரை , இந்திய வருவாயிலிருந்தே அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4. லண்டனில் , இந்தியாவுக்கான உயர் ஆணையர் ( தூதர் )
ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு , மாகாணங்களில் கொண்டுவரப்பட்ட இரட்டையாட்சி முறையின்கீழ் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதேயாகும். 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் சைமன் குழு அளித்த அறிக்கை , வட்டமேசை மாநாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் 1933 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 1935 ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1919 ஆம் ஆண்டு சட்டத்தில் இந்த சட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இச்சட்டத்தின் சிறப்புக் கூறுகள் வருமாறு : 1.
பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த மாகாணங்கள் மற்றும் சுதேச அரசுகள் அடங்கிய அனைத்திந்திய கூட்டாட்சி ஒன்று மத்தியில் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. ( சுதேச அரசுகள் இதற்கு உடன்பட மறுத்தமையால் கூட்டாட்சி உருவாக்கப்படவில்லை ). 3. மத்தியில் இரட்டையாட்சி கொண்டு வரப்பட்டது. ஒதுக்கப்பட்ட துறைகள் தலைமை ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தன. மாற்றப்பட்ட துறைகள் அமைச்சரவையின் பொறுப்பில் விடப்பட்டன. மத்திய அரசின் அதிகாரங்கள் மூன்று பட்டியல்களாக பிரிக்கப்பட்டது கூட்டாட்சிப் பட்டியல் , மாகாண பட்டியல்
மற்றும் பொதுப் பட்டியல். 6. மாகாணங்களில் இரட்டையாட்சி சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண நிர்வாகக்குழுவின் தலைவராக ஆளுநர் இருப்பார். அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் அவர் நிர்வாகத்தை நடத்துவார் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பில் எனவே மாகாண விடப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டப்பேரவைக்கு அவர்கள் பொறுப்புள்ளவர்களாவர். ஒழிக்கப்பட்டு , மாகாண 5. வங்காளம் , சென்னை , பம்பாய் , ஐக்கிய மாகாணம் , பீகார் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றங்கள்
ஏற்படுத்தப்பட்டன. சீக்கியர்கள் , ஐரோப்பியர்கள் , இந்திய கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் தனித்தொகுதி முறை விரிவு படுத்தப்பட்டது. 7. ஒரு தலைமை நீதிபதி , ஆறு நீதிபதிகள் கொண்ட கூட்டாட்சி நீதிமன்றம் டெல்லியில் நிறுவப்பட்டது. மாகாண சுயாட்சி பல இடங்களில் வெற்றிகரமாக செயல்படவில்லை அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆளுநர் கட்டாயமாக கேட்டு நடக்க வேண்டியதில்லை என்ற நிலையே இதற்குக் காரணம். மாகாண அரசின் உண்மையான அதிகாரம் ஆளுநரிடமே இருந்தது. இத்தகைய குறைபாடுகள் இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சி நடக்கவிருந்த மாகாண
சட்டமன்றத் தேர்தல்களில் கலந்து கொள்வது என முடிவெடுத்தது. முந்தைய சட்டங்களைவிட இச்சட்டம் இந்தியர்களுக்கு முற்போக்கானதாக காணப்பட்டது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி 1937 பிப்ரவரியில் மாகாண சட்ட மன்றங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரஸ் இத்தேர்கல்களில் மகத்தான வெற்றி பெற்றது. 1937 ஜூலை 7 ஆம் நாளன்று தலைமை ஆளுநர் லின்லித்கோ பிரபு அளித்த ஒத்துழைப்பை அடுத்து ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவைகளை அமைத்தது. பாடம் – 20 விடுதலைக்குப்பின் இந்தியா கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்தை படிப்பதனால் மாணவர்
அறிந்துகொள்வது : 1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள். 2. இந்திய அரசுகளை ஒருங்கிணைத்தல் 3. மொழிவாரி மாநிலங்களை சீரமைத்தல் 4. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார வளர்ச்சி 5. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி 6. விடுதலைபெற்ற இந்தியாவின் அயலுறவுக் கொள்கை 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியத் தலைவர்கள் ஆற்ற வேண்டியிருந்த அவசரப் பணிகள் இரண்டு. முதலாவதாக , இந்தியாவுக்கென ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது ; மற்றொன்று இந்திய ஒன்றியத்தில் சுதேச அரசுகளை ஒருங்கிணைப்பது. மேலும் , இந்தியாவை பொருளாதார மற்றும்
அறிவியல் ரீதியாக நவீனப்படுத்த வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. நீண்டகாலத் திட்டங்களாக , நாட்டில் நிலவிய வறுமையை ஒழித்து , மக்களிடையே கல்வியைப் பரப்ப வேண்டிய பொறுப்பையும் அவர்கள் மேற்கொண்டனர். இந்தியாவின் அரசியலமைப்பு டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1946 டிசம்பர் 9 ஆம் நாள் அரசியலமைப்புக்குழு தனது பணியினைத் தொடங்கியது. அரசியலமைப்புக் குழுவின் தலைவராக டாக்டர் ராஜேந்திரபிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். நீண்ட விளக்கமான
விவாதங்களுக்குப்பின் , 1949 நவம்பர் 26 ஆம் நாள் இந்திய அரசியலமைப்பை இக்குழு ஏற்றுக் கொண்டது. 1950 ஜனவரி 26 ஆம் நாள் முதல் , அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அது முதல் இந்த தினம் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை , பாராளுமன்ற முறை , அடிப்படை உரிமைகள் , அரசு நெறிமுறைக் கோட்டுபாடுகள் போன்ற அம்சங்களை இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளாகக் கொள்ளலாம். மத்தியில் ஒருமுகத்தன்மையும் கூட்டாட்சித் தன்மையும் கலந்த ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின்
அதிகாரங்கள் மிகத் தெளிவாக மத்திய , மாநில , பொது ஆகிய மூன்று பட்டியல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவராகவும் , பிரதம அமைச்சர் நிர்வாகத் தலைவராகவும் செயல்படுகின்றனர். மக்களவையின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இந்திய நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டுள்ளது - ராஜ்ய சபை அல்லது மேலவை , லோக் சபை அல்லது கீழவை. ஒவ்வொரு மாநில அரசும் முதலமைச்சரின்கீழ் இயங்குகிறது. மாநில சட்டப்பேரவையின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சித் தலைவர் முதலமைச்சராகிறார். எனவே ,
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி புரிகின்றன. முறையான காலங்களில் தேர்தல்கள் நடைபெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பாதுகாவலராக நீதித்துறை விளங்குகிறது. இந்திய நீதித்துறை அமைப்பில் மத்தியில் உச்ச நீதிமன்றமும் , மாநில அளவில் உயர் நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. மாநிலத்திலுள்ள கீழ் நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் விடுதலையின் போது இந்தியாவில் 11 பிரிட்டிஷ் மாகாணங்களும் ஏறத்தாழ 566 சுதேச அரசுகளும் இருந்தன.
பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு அகன்றபிறகு இந்திய அரசுகள் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்தன. தனது ஆற்றல் மற்றும் அரசியல் வெல்திறன் காரணமாக சர்தார் வல்லபாய் பட்டேல் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பே இந்திய சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்தில் இணையும்படி செய்தார். ஜுனாகத் , ஜம்மு காஷ்மீர் , ஹைதராபாத் ஆகிய மூன்று சுதேச அரசுகள் மட்டும் அவ்வாறு சேர மறுத்தன. ஜூனாகத் அரசின் ஆட்சியாளர் தமது மக்களின் விருப்பத்துக்கு மாறாக பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். எனவே , பட்டேல் இந்திய துருப்புக்களை அங்கு அனுப்பி மக்களிடம்
கருத்துக்கணிப்பு நடத்தினார். அதன்படி ஜுனாகத் இந்தியாவில் இணைந்தது. வல்லபாய் பட்டேல் ஜம்மு காஷ்மீர் அரசு இந்திய பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது. அதன் அரசர் ராஜா ஹரிசிங் , தொடக்கத்தில் அவர் சுதந்திர அரசராக தம்மைக் கருதிக்கொண்டார். பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட பட்டாணியர்கள் காஷ்மீர்மீது படையெடுத்தபோது , ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே , இந்தியா பன்னாட்டுச் சட்டப்படி துருப்புக்களை உதவிக்கு அனுப்ப முடியும் என்று பிரதமர் நேரு எடுத்துக்
கூறினார். ஆகவே 1947 அக்டோபர் 26 ஆம் நாள் ராஜா ஹரிசிங் இணைப்புறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டார். இதன்படி காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாயிற்று. தனது ஹைதராபாத் ஆட்சியாளர் நிசாம் இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்தார். பலமுறை எடுத்துக் கூறியும் நிசாம் பணிய மறுத்தமையால் 1948 ல் இந்திய துருப்புக்கள் ஹைதராபாத்துக்குச் சென்றது. நிசாம் சரணடைந்தார். இறுதியாக , ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. மொழிவாரி மாநிலங்கள் சீரமைக்கப்படுதல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு
செய்வதற்காக எஸ்.கே. தார் தலைமையிலான முதலாவது மொழிவாரி மாகாண ஆணையம் 1948 ல் அரசியலமைப்புக்குழுவால் ஏற்படுத்தப்பட்டது. இக்குழு அத்தகைய சாத்தியக்கூறுகள் இல்லை எனக் கூறியது. அதேயாண்டில் , ஜவஹர்லால் நேரு , வல்லபாய் பட்டேல் , பட்டாபி சீதாராமையா ஆகியோர் அடங்கிய ஜேவிபி குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்தது. இந்தக் குழுவும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை. ஆனால் , நாட்டின் பல பகுதிகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரி மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. குறிப்பாக , ஆந்திராவில் இத்தகைய இயக்கம் தீவிரமடைந்தது.
ஆகவே 1953 ஆம் ஆண்டு ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே சமயம் சென்னை மாநிலமும் ( தமிழ்நாடு ) தமிழ்பேசும் மாநிலமாக ஏற்கப்பட்டது. இத்தருணத்தில் , திருத்தணியை சென்னை மாநிலத்துடன் தக்க வைப்பதற்காக ம.பொ.சிவஞானம் தலைமையேற்று நடத்திய இயக்கம் தமிழக வரலாற்றில் , நினைவில் கொள்ளத்தக்கதாகும். ஆந்திர இயக்கம் பெற்ற வெற்றி பிறமொழி பேசும் மக்களின் தனி மாநிலப் போராட்டங்களை மேலும் ஊக்குவித்தது. 1953 ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நீதிபதி பசல் அலி தலைமையிலான மாநிலங்கள் சீரமைப்புக் குழுவை நியமித்தார். இக்குழுவில் பண்டிட்
ஹிருதயநாத் குன்ஸ்ரூ , சர்தார் கே.எம். பணிக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். 1955 செப்டம்பர் 30 ல் இக்குழு தனது அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில் 1956 ல் நாடாளுமன்றம் மாநிலங்கள் சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றியது. 16 மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் இச்சட்டத்தில் இடம் பெற்றிருந்தன. தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. மலபார் மாவட்டத்தை திருவாங்கூர் கொச்சியுடன் இணைத்து புதிய கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. திருவாங்கூர் பகுதியில் வசித்த தமிழ் மொழி பேசுவோர் தங்கள் பகுதியை ( கன்னியாகுமரி )
தமிழ்நாட்டுடன் இணைக்குமாறு போராட்டங்கள் நடத்தி வெற்றிபெற்றனர். இந்திய அரசியல் ( 1947 – 2000 ) இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்று கருதப்படுகிறார். நாட்டின் ஒற்றுமையைக் காத்து , மக்களாட்சி நிறுவனங்களைப் போற்றி வளர்த்து இந்தியாவின் சுதந்திரத்தை மேலும் நிலைப்படுத்தினார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் , திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் வித்திட்டார். சுதந்திரமான அயலுறவுக் கொள்கையை பின்பற்றிய நேரு இந்தியாவை வலிமையான நாடாக உருவாக்கினார். 1964 ல் அவர் மறைந்தார்.
ஜவஹர்லால் நேரு நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். பொது வாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாக அவர் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானியப் போரை , 1966 ஜனவரியில் செய்து கொண்ட தாஷ்கண்ட் ஒப்பந்தப்படி முடிவுக்கு கொண்டுவந்தார். அவரது அகால மரணம் நாட்டிற்கு பேரிழப்பாகும். 1975 ல் 1966 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நேருவின் மகளான இந்திரா காந்தி அப்போது நாட்டின் பெரும் சவால்களாக விளங்கிய உணவுப் பற்றாக்குறை , 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் சிக்கல் போன்றவற்றை திறமையுடன்
எதிர்கொண்டார். அவரது ஆட்சிக்கு எதிர்ப்புகள் வலுக்கவே , நாட்டில் அவசர நிலை ஆட்சியைக் கொண்டு வந்தார். இது இந்தியாவின் ஜனநாயக மரபுக்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இருப்பினும் 1977 ல் பொதுத் தேர்தலை அறிவித்ததன் மூலம் மீண்டும் ஜனநாயம் மலர அவர் வித்திட்டார். இத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். பின்னர் , 1980 ல் ஜனநாயக வழியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். இவரது ஆட்சியில் 1983 ஆம் ஆண்டு பஞ்சாப் , அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நீல நட்சத்திர நடவடிக்கையை இந்திய ராணுவத்தைக் கொண்டு எடுத்தார். இச் செயல் காரணமாக
துரதிஷ்டவசமாக அவரது பாதுகாவலர்களாலேயே இந்திராகாந்தி 1984 ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தி 1977 முதல் 1980 வரை நடைபெற்ற ஜனதா கட்சியின் ஆட்சியின்போது இந்தியாவின் பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவி வகித்தார். விடுதலைக்குப் பிறகு பதவியேற்ற முதலாவது காங்கிரஸ் அல்லாத அரசு இதுவேயாகும். ஜனதா கட்சி தலைவர்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மையின் காரணமாக ஜனதா கட்சி அரசு கவிழ்ந்தது. 1984 ல் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அவரது புதல்வர் ராஜீவ் காந்தி பிரதமரானார். அந்நிய முதலீட்டை அவர் ஊக்குவித்தார். புதிய
கல்விக் கொள்கையையும் அறிமுகப்படுத்தினார். இலங்கையில் நடைபெற்ற இன அடிப்படையிலான வன்முறைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் இந்திய அமைதிப் படையை அங்கு அனுப்பி வைத்தார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற அடுத்த தேர்தல் வரை அவர் பிரதமராக இருந்தார். பின்னர் 1991 மே திங்களில் இலங்கை தமிழ் தீவிரவாதிகளால் மனித வெடிகுண்டு மூலம் திரு பெரும்புதூரில் மொராஜி தேசாய் கொல்லப்பட்டார். 1989 முதல் 1990 ஆம் ஆண்டுவரை வி.பி.சிங் பிரதமராக இருந்தார். ஜனதா தளம் என்ற காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டணி அரசுக்கு அவர் தலைமை வகித்தார். அவர் தனது ஆட்சிக்