text
stringlengths
11
513
காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். அவரது அரசில் கூட்டணிக் குழப்பங்கள் ஏற்பட்டதால் , 1990 ல் அவர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்ற சந்திரசேகர் 1990 நவம்பர் முதல் 1991 வி.பி.சிங் மார்ச் வரை அப்பதவியில் நீடித்தார். 1991 ஜூன் மாதத்தில் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக பதவியேற்றார். புதிய பொருளாதாரக் கொள்கைகளை அவர் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்தார். அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைப்பது ,
சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுவது , அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது போன்றவை நடைமுறைப் படுத்தப்பட்டன. இதில் அன்றைய நிதியமைச்சரான டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்கு முக்கியமானதாகும். இதன் விளைவாக , இந்தியா தாராளமயம் , தனியார்மயம் , உலக மயம் ஆகிய பாதைகளில் நடைபோடத் துவங்கியது. 1996 ஆம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு , பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிஹாரி வாஜ்பாய் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவரால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் பதவி துறக்க வேண்டியதாயிற்று. தேவ கவுடாவின் தலைமையில் கூட்டணி ஆட்சி
பதவிக்கு வந்தது. கர்னாடக மாநிலத்தைச் சேர்ந்த அவர் நாட்டின் 11 வது பிரதமராவார் ( 1996-97 ). பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றியினால் கவுடா அரசும் கவிழ்ந்தது. அவரைத் தொடர்ந்து 1997 ல் சிறிது காலம் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக பதவி வகித்தார். 1998 ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரானார். 1999 தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அடல் பிஹாரி வாஜ்பாய் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவரது ஆட்சியின்போது இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாகிஸ்தானுடன்
கார்கில் போர் நடைபெற்றது ; மற்றொன்று பொக்ரானில் அணு ஆயுத சோதனை நிகழ்த்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி அடல் மக்கள் 1947 ல் இந்தியா விடுதலையடைந்தபோது வறுமையில் உழன்றனர். வேலையில்லா திண்டாட்டமும் எழுத்தறிவின்மையும் எங்கும் காணப்பட்டது. வேளாண் உற்பத்தியில் தேக்கம் நிலவியது. தொழில் முன்னேற்றம் மெதுவாகவே இருந்தது. அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல தேசிய அளவில் பெரும் முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நவஇந்தியாவின் சிற்பியான ஜவஹர்லால் நேரு , சோவியத் நாட்டின்
திட்டமிட்ட பொருளாதாரத்தின் சாதனைகளைக் கண்டு வியந்தார். அதேசமயம் ஜனநாயக மரபுகள் போற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். சமத்துவத்தையும் , ஜனநாயத்தையும் இணைத்து அவர் வகுத்த கொள்கை ‘ ஜனநாயக சமத்துவம் ' என்றே அழைக்கப்பட்டது. விரைவான தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு அவர் திட்டமிடுதலை ஊக்குவித்தார். கனரகத் தொழில்களை வளர்ப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களை அவர் நிறுவினார். கலப்பு பொருளாதாரமே வளர்ச்சிக்கு அடிப்படை என்று அவர் நம்பினார். சுயேச்சையான தற்சார்பு பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே
அவரது அடிப்படை நோக்கமாகும். 1950 மார்ச் 15 ஆம் நாள் தேசிய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. பிரதமர் நேருவே அதன் தலைவராக பொறுப்பேற்றார். திட்டக்குழுவின் முக்கிய நோக்கங்களாவன 1. தேசிய மற்றும் தனிநபர் வருமானத்தை பெருக்குவது 2. முழுவேலை வாய்ப்பை உருவாக்குவது 3. வருமானம் மற்றும் செல்வ வளத்தில் காணப்படும் சமத்துவமின்மையை குறைத்தல். 4. சமத்துவம்மற்றும் நீதியை அடிப்படையாகக் சமுதாயத்தை உருவாக்குவது. கொண்ட சுரண்டலற்ற முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1951-56 ) ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த அகதிகள் மறுவாழ்வு போன்ற
பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தியது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில்தான் ( 1956–61 ) பொருளாதார மேதை பி.சி. மகாலா நோபிஸ் முக்கிய பங்காற்றினார். நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு இத்திட்டம் முன்னுரிமை அளித்தது. விரைவான தொழில் மயமாக்கம் , குறிப்பாக கனரகத் தொழில்களை வளர்ப்பது மூன்றாம் திட்டக்காலத்திலும் ( 1961 - 66 ) தொடர்ந்தது. இக்காலத்தில் , இரும்பு எஃகு , ரசாயன உரம் , கனரக இயந்திரங்கள் உற்பத்தி போன்றவற்றுக்கான தொழிற்சாலைகள் நாட்டின் பல பகுதிகளில் நிறுவப்பட்டன. நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ( 1969
74 ) நோக்கம் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பை எட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சி என்பதாகும். இத்திட்டத்தின் வரைவு அறிக்கை அசோக் மேத்தாவின் தலைமையில் 1966 ல் தயாரிக்கப்பட்டது. ‘ கரிபி ஹட்டாவோ ’ அல்லது வறுமையை ஒழிப்போம் என்பதே இக்காலத்தில் நிலவிய புகழ்பெற்ற பொருளாதார முழக்கமாகும். பணவீக்கத்தின் விளைவால் நாடு பெரும் பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தபோது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் ( 1974 79 ) அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்ரோலியப் பொருட்களின் விலையும் அதிகரித்தது. 1978 மார்ச்சில் திட்டத்தின் நான்காவது
ஆண்டில் ஜனதா அரசாங்கம் இத்திட்டத்தை கைவிட்டது. - ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1980 – 85 ) வேளாண்மை மற்றும் தொழில் துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவது , மக்களின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1985 90 ) உணவுப்பொருள் உற்பத்தி , வேலைவாய்ப்பை பெருக்குதல் , உற்பத்தி திறனை அதிகரிப்பது போன்றவற்றை வலியுறுத்துவதாக இருந்தது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது , மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்தல் , முழுவேலைவாய்ப்பு ,
வறுமை ஒழிப்பு , திட்டமிட்ட மக்கள் தொகைப்பெருக்கம் போன்ற நோக்கங்களை எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1992 - 97 ) குறிப்பிட்டது. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் ( 1997 2002 ) வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்தது. விலைவாசியை கட்டுப்படுத்துவது , ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு , மக்கள் தொகை கட்டுப்பாடு , பஞ்சாயத்து ஆட்சிமுறையை வளர்ப்பது மற்றும் மலைவாழ் இன , தாழ்த்தப்பட்ட இன மக்களின் முன்னேற்றம் போன்றவையும் இதன் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டன. 1966-69 , 1978-79 , 1979-80 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு அரசியல்
பொருளாதார காரணிகளால் ‘ ஆண்டு திட்டங்கள் ’ மட்டுமே செயல்படுத்தப்பட்டன. பசுமைப்புரட்சி 1950 ஆம் ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி அதிகரித்த போதிலும் , 1960 ஆம் ஆண்டுகளின் மத்தியில் உணவுப் பஞ்சம் தோன்றியது. மக்கள் தொகை அதிகரிப்பு , தொழில் உற்பத்திக்கான திட்டச்செலவுகள் உயர்வு போன்ற காரணங்களால் வேளாண் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. பல மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீனாவுடனும் ( 1962 ) , பாகிஸ்தானுடன் ( 1965 ) இருபோர்களில் இந்தியா ஈடுபட வேண்டியதாயிற்று. 1965 - 66 ஆம்
ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சி உணவு உற்பத்தியை பாதித்தது. இத்தகைய பின்னணியில்தான் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்காக இந்தியாவில் ‘ பசுமைப்புரட்சி ’ தொடங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி , உணவுத்துறை அமைச்சர் சி. சுப்ரமணியம் , சாஸ்திரிக்குப்பின் 1966 ல் பிரதமரான இந்திராகாந்தி வேளாண் உற்பத்தியை பெருக்க பெரும் முயற்சி எடுத்தனர். 1968 ல் இந்திய விவசாயிகள் கோதுமை உற்பத்தியில் வியத்தகு அளவை எட்டிய போது , அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் காட் என்பவர் ‘
பசுமைப்புரட்சி ’ என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தினார். வீரிய வித்துக்கள் , ரசாயன உரங்கள் , பூச்சிக்கொல்லிகள் , டிராக்டர்கள் , பம்ப் செட்கள் போன்றவற்றை பயன்படுத்தும் நவீன வேளாண் முறைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1980 களில் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது. பஞ்சாப் , ஹரியானா , மேற்கு உத்திர பிரதேசம் , ஆந்திரப் பிரதேசம் , கர்னாடகத்தின் ஒரு பகுதி மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பசுமைப்புரட்சியின் தாக்கம் நன்கு வெளிப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சுதந்திர இந்தியாவில் அறிவியல்
தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பெரும் வளர்ச்சி காணப்பட்டது. 1947 க்குப்பின் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய தேவையை பிரதமர் நேரு நன்கு உணர்ந்திருந்தார். இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடமாகிய ‘ தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் ’ நிறுவப்பட்டது. பல்வேறு துறைகளில் ஆய்வினை மேற்கொள்வதற்காக தொடர்ந்து அத்தகைய தேசிய ஆய்வுக் கூடங்கள் 17 ஏற்படுத்தப்பட்டன. அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகத்தின் தலைவராக நேருவே பொறுப்பு வகித்தார். மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை
முன்மாதிரியாகக் கொண்டு 1952 ல் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ( ஐ.ஐ.டி ) கோரக்பூரில் அமைக்கப்பட்டது. பின்னர் , சென்னை , பம்பாய் , கான்பூர் , டெல்லி ஆகிய இடங்களிலும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அறிவியல் ஆய்வுக்கும் , அறிவியல் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஆன செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ஏறத்தாழ 200 ஆய்வுக்கூடங்கள் இந்தியாவில் உள்ளன. 1971 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பத் துறை அறிவியல் கொள்கையை வகுக்கும் பொறுப்பை மேற்கொண்டு
வருகிறது. அணுசக்தி ஹோமி ஜே. பாபா அணுசக்தியின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே உணர்ந்த உலகின் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1948 ஆகஸ்டில் அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது. 1954 ல் அணுசக்தி துறை ஏற்படுத்தப்பட்டது. அணுசக்தி திட்டங்களை இது நிறைவேற்றுகிறது. 1956 ல் இந்தியாவில் முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டிராம்பேயில் அமைக்கப்பட்டது. அணுசக்தி துறையில் ஆய்வு மற்றும் வளர்ச்சிப்
பணிகள் மூன்று ஆய்வுக் கூடங்களில் நடைபெறுகின்றன. அவை , டிராம்பேயிலுள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையம் , தமிழ்நாட்டில் கல்பாக்கத்திலுள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் , சென்னையிலுள்ள உயர் தொழில் நுட்ப மையம் என்பனவாகும். விண்வெளி ஆய்வு விண்வெளி ஆய்விலும் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. 1962 ல் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுமம் அமைக்கப்பட்டது. தும்பாவில் ராக்கெட் ஏவுதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. ( முதல்படியாக ) நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முதல் தலைமுறை இந்திய விண்வெளி ஓடத்தை ( இன்சாட் – 1 )
இந்தியா ஏவியது. நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் வானியல் கோள் ஆய்வுக்கான தேவைகளை இன்சாட் 1A மற்றும் இன்சாட் 1B விண்வெளி ஓடங்கள் நிறைவேற்றி வருகின்றன. இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு விண்வெளி ஆராய்ச்சி , தொழில்நுட்பம் போன்றவற்றை நிறைவேற்றுகிறது. இஸ்ரோ மையங்களிலேயே மிகப் பெரியதான திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் விண்வெளி ஏவு தொழில்நுட்பத்தைப் பற்றி முதன்மை ஆய்வை மேற்கொள்கிறது. இந்திய விண்வெளி திட்டத்தின் பகுதியான விண்வெளி ஓடத் தொழில் நுட்பத்தை
பெங்களூரிலுள்ள இஸ்ரோ மையம் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளம் இஸ்ரோவின் முக்கிய ஏவுதளமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி என்ற இடத்தில் ராக்கெட் என்ஜின் தயாரிக்கப்பட்டு வருகிறது. நவீன ரஷ்யா தொழில் நுட்பத்தின்படி கிரையோ ஜெனிக் என்ஜின் தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றது வருகின்றன. இந்தியாவின் அயலுறவுக் கொள்கை 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா சுதந்திரமான அயலுறவுக் கொள்கையை பின்பற்றி வருகிறது. இதனை
வடிவமைத்தவர் இந்தியாவின் முதலாவது பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு ஆவார். இந்திய அயலுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகள் அவரால் உருவாக்கப்பட்டவையே. கெடுபிடிப் போர் காலத்தில் அணிசேரா இயக்கத்தை வடிவமைத்தவர் அவரேயாவார். குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகவும் அவர் ஆதரவுக்கரம் நீட்டினார். நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்த பஞ்சசீலம் அல்லது சமாதான சகவாழ்வுக்கான ஐந்து கொள்கைகளை அவர் வெளியிட்டார். அவையாவன : ஒருவருக்கொருவர் பிறரது பிரதேச ஒருமைப்பாட்டையும் இறைமையையும் மதித்து நடப்பது ஆக்கிரமிப்பை விலக்குதல் பிறரது
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் சமத்துவம் மற்றும் பரஸ்பர உதவி சமாதான சகவாழ்வு காமன்வெல்த் , ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளைக் கொண்ட அமைப்பான காமன்வெல்த்தில் இந்தியா உறுப்பினராக தொடரவேண்டும் என்று நேரு முடிவெடுத்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு படையிலும் இந்தியா தனது பங்கை ஆற்றியுள்ளது. கொரியா , இந்தோசீனா , சூயஸ் கால்வாய் , காங்கோ போன்ற இடங்களில் செயல்பட்ட
ஐ.நா. பாதுகாப்பு படைக்கு இந்தியா தனது துருப்புக்களை அனுப்பிவைத்தது. காஷ்மீர் சிக்கல் காரணமாக இந்தியா பாகிஸ்தானுடன் மூன்று முக்கிய போர்களில் ஈடுபட்டது ( 1965 , 1971 , 2000 ). கெடுபிடிப்போர் காலத்தில் உலகின் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியா நட்புறவையே கடைப்பிடித்தது. பங்களாதேஷ் குறித்த சிக்கல் தோன்றியபோது இந்திய சோவியத் யூனியனுடன் 1971 ஆம் ஆண்டு இந்தோ - சோவியத் நட்புறவு உடன்படிக்கையை செய்து கொண்டது. ஆசியாவின் முக்கிய நாடுகளாக இந்தியாவும் சீனாவும் விளங்குகின்றன. உலகின் மக்கள்
தொகை மிகுந்த நாடுகளாகவும் அவை உள்ளன. மேலும் , பண்டைக் காலந்தொட்டே நீண்ட வரலாற்றுப் புகழையும் பண்பாட்டுச் சிறப்பையும் இரண்டு நாடுகளும் பெற்றுள்ளன. 1949 ல் மாசேதுங் தலைமையில் சீன மக்கள் குடியரசு அமைக்கப்பட்போது அதை முதலில் ஆதரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் நட்புறவைப் பெற்றிருந்தபோதிலும் , 1962 ல் சீனா இந்தியா மீது படைபெடுத்தபோது தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவின் உதவியோடு பங்காளதேஷ் என்ற நாடு உதயமானது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாகும். மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு
பாகிஸ்தானுக்குமிடையே விடுதலை குறித்த சச்சரவு தோன்றியபோது இந்தியா கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தது. பங்களாதேஷ் விடுதலை அமைப்பான முத்திவாகினியுடன் இந்தியப் படைகள் இணைந்து போராடியதால் 1971 டிசம்பரில் பங்களாதேஷ் விடுதலை பெற்றது. 1971 ல் பங்களாதேஷ் விடுதலை பெற்றதிலிருந்தே இந்தியா அதனுடன் நட்புறவைப் பேணி வருகிறது. தனது அண்டை நாடுகளுடனும் இந்தியா நட்புடனேயே இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே சார்க் எனப்படும் தெற்காசிய பகுதி ஒத்துழைப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தியா , பாகிஸ்தான் ,
பங்களாதேஷ் , இலங்கை , நேபாளம் , பூடான் , மாலத்தீவுகள் ஆகியன இதில் உறுப்பு நாடுகள். உறுப்பு நாடுகளுக்கிடையே பரஸ்பர பொருளாதார , சமூக , பண்பாட்டு ஒத்துழைப்பை பெருக்குவதே சார்க் அமைப்பின் நோக்கமாகும். இந்த குறிக்கோளை எட்டுவதற்கு அவ்வப்போது மாநாடுகளும் கூட்டப்படுகின்றன. கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து மாணவர் கற்றவை : 1. இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள ஜனநாயக நெறிகள். 2. சுதேச அரசுகளை ஒருங்கிணைத்ததில் வல்லபாய் பட்டேலின் பங்கு. 3. மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு 4. நேருவின் பொருளாதார திட்டம் மற்றும்
ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கங்கள் 5. அணுசக்தி , விண்வெளி ஆய்வு போன்ற பல்வேறு துறைகளில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி 6. இந்திய அயலுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகள் மற்றும் உலக நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் , இந்தியா மேற்கொண்டுள்ள உறவுகள். 1. பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாகவும் , லத்தீன் மொழியின் தாயகமாகவும் இத்தாலி விளங்கியது. 2. அங்கிருந்த செல்வமிக்க நகர அரசுகளான பிளாரன்ஸ் மற்றும் வெனிஸ் போன்றவை கலை , இலக்கியத்தைப் போற்றி வளர்த்தன. மிகச்சிறந்த இத்தாலியக் கலைஞரான தாந்தே ( 1265-1321 ) தனது ‘ தெய்வீக
இன்பியல் ’ என்ற நூலை அங்கு தான் பதிப்பித்தார். இது பிளாரன்ஸ் நகரத்தில் மறுமலர்ச்சி இயக்கம் தோன்றுவதற்கு முன்னோடியாக விளங்கியது. பின்னர் , மறுமலர்ச்சி ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பரவி , 16 ஆம் நூற்றாண்டில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. பண்டைய இலக்கியங்கள் புத்துயிர் பெறுதல் பண்டைய கிரேக்க , லத்தீன் புத்துயிர் பெற்று தழைக்கத் தொடங்கியது தனிச்சிறப்பாகும். இலக்கியங்கள் மீண்டும் மறுமலர்ச்சி இயக்கத்தின் இந்த மொழிகளில் சிறந்த புலமை பெற்று விளங்கிய முயற்சிகளுக்கு 1374 ) என்ற அறிஞர் இத்தகைய திகழ்ந்தார். பிளாட்டோ ,
அரிஸ்டாட்டில் போன்றோரின் நூல்கள் அடங்கிய பண்டைய கையெழுத்துச் சுவடிகளை சேகரித்து அவற்றை பெட்ரார்க் ( 1304 முன்னோடியாகத் பெட்ரார்க் தொகுத்தது இவரது அரும்பணியாகும். இவரது சீடரான பொக்காசியோ என்பவரும் பண்டைய இலக்கியங்கள் கற்பிக்கப்படுவதை ஊக்குவித்தார். கான்ஸ்டான்டி நோபிளிலிருந்து வந்த பல கிரேக்க அறிஞர்களும் கிரேக்க இலக்கியத்தைப் போற்றி வளர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மேனுவல் கிரிசாலோரஸ் , இவர் பிளாரன்ஸ் நகரில் தங்கி பொக்காசியோ கிரேக்க மொழி மற்றும் இலக்கியத்தை கற்பித்தார். மற்றொரு அறிஞரான பிராசியோலினி
என்பவர் டேசிடஸ் , லிவி , சோபோகிளஸ் என்போரின் பண்டைய நூல்களைத்தேடி அவற்றை புதுப்பித்தார். பதினைந்தாம் நூற்றாண்டில் ஐந்தாம் நிக்கோலஸ் என்ற போப்பாண்டவர் வாட்டிகன் நூல் நிலையத்தை நிறுவினார். அங்கு ஏராளமான பண்டைய நூல்களின் கையெழுத்துப் பிரதிகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அறிஞர்கள் படித்து ஆய்வு செய்தனர். லத்தீன் மொழி இலக்கியங்களை எராஸ்மஸ் ( 1463 - 1536 ) என்றஅறிஞர் திருத்தி பதிப்பித்தார். அவர் ‘ புதிய ஏற்பாட்டை ’ கிரேக்க மொழியில் பதிப்பித்தார். லிவி ஜெர்மெனியைச் சேர்ந்த ஜான் குட்டன்பர்க் ( 1398 1468 )
என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தது மறுமலர்ச்சி கால இலக்கியம் பரவ பெரிதும் துணைபுரிந்தது. முதலில் அச்சிடப்பட்ட நூல் விவிலியமே ஆகும். இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சுக்கூடத்தை நிறுவினார். பின்னர் , ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலும் அச்சுக் கூடங்கள் நிறுவப்பட்டன. இதனால் மறுமலர்ச்சி இயக்கம் புதிய உத்வேகத்தைப் பெற்றது. குறைந்த விலையில் அச்சடிக்கப்பட்ட நூல்கள் கிடைத்தமையால் , மக்கள் அவற்றை வாங்கிப் படித்தனர். இதனால் , விழிப்புணர்வு அதிகரித்தது. எராஸ் மஸ் பண்டைய இலக்கியங்கள் புதுப்பிக்கப்
பட்டதோடு , கிரேக்க , லத்தீன் மற்றும் பல்வேறு உள்நாட்டு மொழிகளிலும் இக்காலத்தில் நூல்கள் எழுதப்பட்டன. தாந்தே தனது ‘ தெய்வீக இன்பியல் ’ என்ற நூலை இத்தாலிய மொழியிலேயே எழுதினார் என்பதை ஏற்கனவே கண்டோம். அதேபோல் , சாசர் தமது ‘ காண்டர்பரி கதைகள் என்ற இலக்கியத்தை ஆங்கிலத்தில் படைத்தார். சிறு கதைகளின் தொகுப்பான ' டெக்காமரான் ' என்ற நூல் பொக்காஷியோவின் படைப்பாகும். பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்த மாக்கியவல்லி ‘ பிளரான்ஸ் நகரின் வரலாற்றை ’ எட்டுத் தொகுதிகளாக எழுதி வெளியிட்டார். அவரது புகழ்பெற்ற ‘ இளவரசன் ' என்ற நூல் அரசியல்
அறிவியலில் மிகச்சிறந்த படைப்பாகும். தாந்தே மறுமலர்ச்சி காலத்தின் புகழ்மிக்க அறிஞர்களை இத்தாலி உருவாக்கியிருந்த போதிலும் , மறுமலர்ச்சிகால சிந்தனையை வெளிப்படுத்தும் பல்வேறு படைப்புகள் பிரான்ஸ் , இங்கிலாந்து , ஜெர்மனி , ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் உருவாயின. மாக்கியவல்லி இங்கிலாந்தில் சர்தாமஸ்மூர் தனது ‘ கற்பனை உலகம் ’ ( ' உடோபியா ” ) என்ற நூலை லத்தீன்மொழியிலேயேஎழுதினார். எனினும் ஆங்கில இலக்கியத்தின் மறுமலர்ச்சி ‘ எலிசபெத் மகாராணி’யின் காலத்திலிருந்தே தொடங்கியது. இக்காலத்தில் , வில்லியம் ஷேக்ஸ்பியர் , கிறிஸ்டோபர்
மார்லோ , சார்லஸ் வெப்ஸ்டர் போன்ற நாடக ஆசிரியர்கள் வாழ்ந்தனர். எட்மண்ட் ஸ்பென்சர் , சிட்னி , பென் ஜான்சன் போன்றவர்கள் கவிதைகளைப் படைத்தனர். ஹக்லயுத் இக்காலத்தில் எழுதிய பயணக் குறிப்புகள் போற்றத்தக்கதாகும். பிரெஞ்சு மொழி வல்லுனரான மான்டெய்ன் ( 1533-1592 ) மறுமலர்ச்சி கால இலக்கியத்திற்கு புகழ்பெற்றவராவார். மனித வாழ்க்கை தொடர்பான கருத்துக்களை இவரது படைப்புகள் வெளிப்படுத்தின. கல்வி குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் பல நூற்றாண்டுகள் நிலைத்திருந்தன. எழுத்திலும் , எண்ணத்திலும் இவர் வால்டேர் என்ற அறிஞருக்கு
முன்னோடியாகத் திகழ்ந்தார். சர்வாதிகார ஆட்சிக்கும் பழமைக்கும் எதிராக இவரது குரல் ஓங்கி ஒலித்தது. தாமஸ் மூர் இதனால் , மான்டெய்ன் ‘ நவீன மனிதர் ' எனப் போற்றப்பட்டார். ஜெர்மனியைச் சேர்ந்த மாட்டின் லூதர் விவிலியத்தை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். செபாஸ்டியின் பிராண்ட் என்பவர் ‘ முட்டாள்களின் கப்பல் ’ என்ற நூலை எழுதினார். ஸ்பானிய மொழியின் மிகச் சிறந்த காவியப்படைப்பான ‘ டான் குவிக்ஸோட் ’ என்ற இலக்கியத்தை செர்வான்டிஸ் படைத்தார். மறுமலர்ச்சிக் கால கலை ஷேக்ஸ் பியர் இடைக்காலத்தில் கலை என்பது கிறித்துவ
சமயம் மற்றும் திருச்சபையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மறுமலர்ச்சி காலத்தில் பண்டைய கலைவடிவங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றன. இயற்கையை நேசிப்பதாகவும் மனித வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் மார்டின் லூதர் மறுமலர்ச்சி காலத்தில் கலை விளங்கியது. ஆனால் மனிதப் பண்புகள் லியானார்டோ டாவின்சி அவரது காலப்பகுதியில் பல்திறம் கொண்டவராக லியானார்டோ டாவின்சி விளங்கினார். கலைஞர் கவிஞர் , இசைவாணர் , பொறியியல் வல்லுனர் என்று பல்வேறு பரிமாணங்களை அவர் பெற்றுத் திகழ்ந்தார். எனவே , அவரை ‘ மறுமலர்ச்சி கால மனிதர் ’ என்று
அழைக்கின்றனர். பிளாரன்ஸ் நகரில் பிறந்த அவர் பல நாடுகளையும் சுற்றித் திரிந்தார். மிலான் நகரத்து கோமகனால் ஆதரிக்கப்பட்டார். ‘ மோனோலிசா ’ மற்றும் ‘ இறுதி விருந்து ’ ஆகியன அவரது புகழ்பெற்ற ஓவியங்களாகும். ரபேல் காணப்பட்டாலும் மறுமலர்ச்சி காலத்திய பெரும்பாலான கலை வடிவங்களின்கருப்பொருள் மட்டும் கிறித்துவத்தையே பிரதிபலித்தது. மறுமலர்ச்சி கால ஓவியங்கள் இத்தாலியில் பிரகாசித்தன. லியானார்டோ டாவின்சி ( 1452- 1519 ) , மைக்கேல் ஆஞ்சலோ ( 1475-1564 ) ரபேல் ( 1483-1520 ) ஆகிய மூவரும் இக்காலத்திய ஓவியர்களுள் மிகவும்
புகழ்பெற்றவராவர். மைக்கேல் ஆஞ்சலோ ஒரு ஓவியராகவும் , சிற்பியாகவும் திகழ்ந்தார். பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்த அவரை மெடிசி குடும்பத்தினர் ஆதரித்துப் போற்றினர். பின்னர் , அவர் ரோமாபுரிக்குச் சென்றார். வாட்டிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயக் கூரையில் காணப்படும் பிரம்மாண்ட எண்ணெய் ஓவியம் அவரது அரிய பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. இதில் 145 காட்சிகளும் , 394 உருவங்களும் வரையப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சில பத்து அடி உயரம் வரை கூட அமைந்துள்ளது. ‘ இறுதித் தீர்ப்பு ’ என்ற அவரது ஓவியம் உலகத்திலேயே சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
மைக்கேல் ஆஞ்சலோ ரபேல் வரைந்த ஓவியங்கள் பக்திச்சுவையும் அழகுணர்வும் நிறைந்து காணப்படுகின்றன. அவர் 37 வது வயதிலேயே மறைந்து விட்டாலும் எண்ணற்ற ஓவியங்களை இவ்வுலகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார். அவற்றுள் ‘ மடோன்னா ’ என்ற ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும். மறுமலர்ச்சி கலையின் மதச்சார்பற்ற தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது வெனீஸ் நகரத்து கலைப்பணியாகும். உலக நடப்பை பிரதிபலிப்பதாகவே அவை அமைந்துள்ளன. திதியன் ( 1477–1576 ) பிரான்சிஸ் பேகன் மற்றும் டின்டோரெட்டோ ( 1518-1592 ) ஆகியோர் வெனீஸ் நகரத்தைச் லொரன்சோ
கிபர்ட்டி சேர்ந்த புகழ்மிக்க ஓவியர்களாவர். மறுமலர்ச்சி கால சிற்பங்கள் சிறந்து விளங்கியது. மறுமலர்ச்சி காலத்தில் சிற்பக்கலையும் துல்லியத்திற்கும் அழகுக்கும் அவை புகழ்பெற்றவை. மறுமலர்ச்சி கால சிற்பத்தின் முன்னோடியாக விளங்கியவர் லொரன்சோ கிபர்ட்டி ( 1378 1455 ) என்பவராவார். பிளாரன்ஸ் நகரத்தின் ஞானஸ்நான தேவாலயக் கதவுகள் அவரது கைவண்ணத்தில் உருவானவையே. சொர்க்கத்தில் வைக்கப்பட வேண்டிய கதவுகள் என அவற்றின் அழகை மைக்கேல் ஆஞ்சலோ வியந்து போற்றியுள்ளார். பிளாரன்ஸ் நகரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் சிலை மற்றும் வெனிஸ் நகரிலுள்ள
செயின்ட் மார்க் சிலை ஆகியவற்றை டோனடெல்லோ ( 1386-1466 ) என்ற சிற்பி வடித்துள்ளார். ஓவியரான மைக்கேல் ஆஞ்சலோ சிறந்த சிற்பியாகவும் திகழ்ந்தார். பிளாரன்ஸ் நகரத்து மெடிசி குடும்பத்தினருக்காக அவர் சிறந்த சிற்பங்களை படைத்துள்ளார். பிளாரன்சிலுள்ள டேவிட் சிலை அவரது படைப்பாகும். புரூனெசெல்லஜி , ரோபியா ஆகியோர் இக்காலத்தின் புகழ்பெற்ற சிற்பிகளாவர். ரோமாபுரியிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயம் மறுமலர்ச்சி கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அறிவியல் வளர்ச்சி கெப்ளர் நியூட்டன் மறுமலர்ச்சியுடன் இணைந்து
அறிவியல் உணர்வும் இக்காலத்தில் வெளிப்பட்டது. இடைக்காலத்தில் அறிவியல் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேரியக்கத்தை நடத்தியது. இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து நோக்கும் பண்பை மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. இத்தகைய கல்வியுணர்வு அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. பிரான்சிஸ் பேகன் ( 1561 1626 ) நவீன அறிவியலின் தந்தை எனக் கருதப்படுகிறார். உய்த்துணரும் முறையை சாடிய பேகன் அறிவியல் ஆய்வுக்கு தொகுப்பு வழிமுறையே சரியானது என்று வாதிட்டார். டெக்கார்த்தே ( 1596– 1650 ) எதனையும் சோதித்து அறிய வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.
ஐயப்பாடு குறித்த கருத்தை அவர் முன்மொழிந்தார் , எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது , சோதித்து அறிவதற்கு ஐயப்பாடே அடிப்படையாக உள்ளது என்பதும் , அறிவியலுக்கு அதுவே அடிப்படை என்பதும் தற்கால அறிவியல் வளர்ச்சிக்கு வித்தாக இருந்தது. கோப்பர் நிகஸ் ( 1473-1543 ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்தை முன்வைத்தார். கோள்கள் யாவும் பூமியை வலம் கோபர் நிகஸ் உறுதிப்படுத்தினார். கலிலியோ உண்மையை வருவதில்லை என்றும் , அவை சூரியனை மையமாகக் கொண்டே வலம் வருகின்றன என்ற அவர் உறுதிப்படுத்தினார். கோபர் நிகசின் முடிவுகளை
உறுதிப்படுத்தும் விதத்தில் கெப்ளர் ( 1571–1630 ) பல்வேறு கணிதவிதிகளை வடிவமைத்தார். தொலைநோக்கியை கண்டறிந்த கலிலியோ ( 1564-1642 ) கோபர் நிகசின் கோட்பாடுகளுக்கு புதிய ஆதாரங்களை முன்வைத்து அவற்றை வானில் உள்ள பொருட்களனைத்தும் ஈர்ப்பு விசையினால் இயக்கப்படுகின்றன என்ற கோட்பாட்டை கண்டறிந்தவர் நியூட்டன் ( 1642 1727 ). அப்போது நிறுவப்பட்ட புதிய வான இயல் அறிவினை அடிப்படையாகக் கொண்டு போப் பதிமூன்றாம் கிரிகோரி 1582 ல் பழைய நிலையின் நாட்காட்டியை திருத்தியமைத்தார். மனிதன் குறித்த மறுமலர்ச்சி கால உணர்வுகளால் உந்தப்பட்டதால்
மருத்துவம் மற்றும் உடற்கூறு இயல் குறித்த ஆய்வுகளும் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. வெசாலியஸ் ( 1514-1564 ) என்ற நெதர்லாந்து நாட்டவர் மனித உடற்கூறுகள் பற்றி ஒரு விளக்கநூலை எழுதினார். வில்லியம் ஹார்வி ( 1578 1657 ) இரத்த ஓட்டத்தை கண்டறிந்தது மருத்துவ இயலுக்கு அவர் அளித்த கொடையாகும். மறுமலர்ச்சி காலத்தில்தான் வேதியியல் என்பது ஏறுவாதத்தற்கும் அப்பாற்பட்டது என்று உணரப்பட்டது. பாராசெல்சஸ் ( 1493 - 1541 ) என்பவர் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு வேதியியல் மாற்றங்களே காரணம் என்று கூறினார். வேதிப் பொருட்களை
மருந்துகள் தயாரிக்கவும் அவர் பயன்படுத்தினார். கார்டஸ் ( 1515 1544 ) என்பவர் கந்தக அமிலத்திலிருந்தும் எரிசாராயத்திலிருந்தும் ‘ ஈதர் ’ எனப்படும் மின்காந்த அலைகளை உருவாக்கினார். ஹெல்மாண்ட் ( 1577 1644 ) கரியமில வாயுவை வில்லியம் ஹார்வி கண்டறிந்தார். மறுமலர்ச்சியின் விளைவுகள் நவீனகால தொடக்கத்தின் அடையாளமாக மறுமலர்ச்சி விளங்குகிறது. கேட்டு அறியும் உணர்வு அதனால் விளைந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குலவாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின. திசை காட்டும் கருவி மற்றும் வான இயல் குறித்த புதிய நம்பிக்கை
புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. மக்களின் அரசியல் பொருளாதார வாழ்க்கையில் இந்த கண்டுபிடிப்புகளின் தாக்கம் மிகவும் ஆழமானதாகும். பகுத்தறியும் உணர்வினால் சமயசீர்திருத்த இயக்கம் தோன்றியது. சமயம் குறித்த மக்களின் கண்ணோட்டத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. மறுமலர்ச்சி கால முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இத்தாலியில் உள்ள பாதுவா பல்கலைக்கழகத்தில் மனித நலம் பற்றி போதிக்கப்பட்டது. ரோம் நகரில் பெட்ரார்கு அரசவைக் கவிஞர் பட்டம் வழங்கப்பட்டது. பிளாரன்ஸ் நகரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. ஜியாபெர்ரி சாசருடைய
கேன்டர்பரி கதைகள் வெளியிடப்பட்டன. புரூனல்ஷி பிளாரன்சிலுள்ள டுமோவை வடிவமைத்தார். கூட்டன்பர்க் அச்சு இயந்திரத்தை கொண்டு பைபிளை அச்சிட்டார். லியனார்டோ டாவின்ஸி கடைசி விருந்து ஓவிடத்தை தீட்டினார். மைக்கேல் ஏஞ்சலோ சிஸ்டைன் திருச்சபை ஓவியங்களை தீட்டினார். தாமஸ் மோர் உத்தோப்பியாவை வெளியிட்டார் ஆன்டிரியா வெசாலியஸ் மனித உடற்கூறுகள் எனும் நூலை வெளியிட்டார். 13 - ம் போப் கிரிகரி கிரிகோரியன் காலண்டரை அறிமுகப்படுத்தினார். வில்லியம் ஹார்வே இரத்த ஓட்டத்தை இதயத்துடன் தொடர்பு படுத்தி காட்டினார். ஐசக் நியூட்டனுடைய பிரின்சிபா
மேத்தமாட்டிகா வெளியிடப்பட்டது. பாடம் - 22 புவியியல் கண்டுபிடிப்புகள் 3. கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. புவியியல் கண்டுபிடிப்புகள் காரணங்கள். 2. புதிய கடல்வழிகளை கண்டறிந்ததில் போர்ச்சுகல் நாட்டின் பங்கு. 3. புதிய கண்டங்களை ஆய்வு செய்ததில் ஸ்பானியரின் பங்கு. பிற புவியியல் கண்டுபிடிப்புகள். நவீன உலக வரலாற்றில் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட புவியியல் கண்டுபிடிப்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன. கீழைப்பகுதிகளுக்கு புதிய கடல்வழிகளைக் கண்டுபிடித்தது மற்றும்
அமெரிக்கா போன்ற புதிய கண்டங்களை ஆய்வு செய்ததும் வரலாற்றின் போக்கையே பெரிதும் மாற்றியமைத்தன. பார்த்தலோமியோ டயஸ் , கிறிஸ்டோபர் கொலம்பஸ் , பெர்டினாண்ட் மெகல்லன் போன்றோரின் துணிச்சல் மிக்க உணர்வுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன. இந்த கண்டுபிடிப்புகளுக்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். புவியியல் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்கள் 4. 5. புவியியல் கண்டுபிடிப்புகளின் தாக்கம். 1. கீழைப் பகுதிகளுக்கு முக்கிய வாணிபத்தடமாக விளங்கிய கான்ஸ்டான்டி நோபிள் பட்டணத்தை 1453 ஆம் ஆண்டு ஆட்டோமன்
துருக்கியர்கள் கைப்பற்றினர். இதனால் கீழை நாடுகளுடனான ஐரோப்பிய வாணிபம் துருக்கியர்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. அவர்கள் பொருட்களின்மீது ஏராளமான வரிகளை விதித்தனர். மற்றொரு புறம் , அராபிய வாணிகர்கள் இந்தியக் கடற்கரைப்பகுதிகள் வழியாக தங்களது வாணிபத்தை தொடர்ந்து நடத்தி ஏராளமான லாபத்தை ஈட்டி வந்தனர். எனவே , கீழை நாடுகளுக்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டது. மறுமலர்ச்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் புவியியல் கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன.
திசை காட்டும் கருவி கண்டுபிடிக்கப்பட்டதோடு , கப்பல் கட்டும் கலையும் பெரிதும் வளர்ச்சியடைந்தது. வானஇயல் மற்றும் அறிவியல் துறையில் காணப்பட்ட முன்னேற்றம் மாலுமிகளின் புதிய கடல்வழிகண்டு பிடிப்புகளுக்கு புதிய நம்பிக்கை ஊட்டின. சீனா , இந்தியா , போன்ற நாடுகளைப் பற்றி மார்க்கோபோலோ , நிக்கோலோ போலோ ஆகியோரின் பயணக் குறிப்புகள் கீழை நாடுகளில் செல்வ வளத்தைப் பற்றிய பிரமிப்பை ஏற்படுத்துவதாக அமைந்தன. கடல் பயணங்கள் குறித்த பிற நூல்களும் கடலாய்வை ஊக்குவிப்பதாக இருந்தன. ‘ வணிகர்களின் கையேடு ' என்ற நூல் ஐரோப்பாவிற்கும்
தூரக்கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான கடல்வழிகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தது. அதேபோல் நம்பிக்கையுள்ள ‘ ஆய்வாளரின் ரகசியங்கள் ' என்ற நூல் ஆசிய நகரங்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 4. துணிச்சல் போர்ச்சுகல் உணர்வு , புதிய நிலப்பகுதிகளைப் பெரும் ஆர்வம் , ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் ஆய்வுக்கான போட்டாபோட்டி போன்ற பிற காரணங்களாலும் ஆய்வாளர்கள் புதிய கடல்வழிகளைத் தேடிப்புறப்பட்டனர். கண்டறிந்தனர். மாலுமி ஹென்றி கடலாய்வின் முதலாவது தொடர் பயணங்களை போர்ச்சுகல் மேற்கொண்டது. அதன் ஆட்சியாளரான ஹென்றி ( 1394
– 1460 ) ' மாலுமி அரசர் ’ என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். அவரது முயற்சிகளின் விளைவாகவே மெடீரா மற்றும் அசோர் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியை ஆய்வு செய்வதே அவரது முக்கிய செயல்திட்டமாக இருந்தது. அவரது மாலுமிகள் எவர்டி தீவுகள் முனையை 1460 ல் ஹென்றி மறைந்துவிட்ட போதிலும் , தணியாத ஆர்வம் போர்ச்சுகல் நாட்டின் எதிர்கால ஆய்வுகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தை அளிப்பதாக இருந்தது. 1487 ஆம் ஆண்டு பார்த்தலோமியோ டயஸ் ஆப்ரிக்காவின் தெற்குமுனையை அடைந்தார். அங்கு அவர் அனுபவித்த புயல் காற்றின்
சீற்றத்தினால் அந்த முனைக்கு ‘ புயல் முனை ' என பெயரிட்டார். இந்தியப் பெருங்கடலை அதன் வழியாக சென்று அடையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் , பின்னர் ' நன்னம்பிக்கை முனை ' என அதற்கு பெயரிடப்பட்டது. இந்த வழியைப் பயன்படுத்தியே 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவை வந்தடைந்தார். வாஸ் கோடகாமாவின் இந்தியாவிற்கான புதிய கடல்வழி கண்டுபிடிப்பு ஐரோப்பிய மற்றும் ஆசிய வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஸ்பெயின் கொலம்பஸ் அவரது பார்த்தலோமியோ டயஸ் போர்ச்சுகலுக்கு அடுத்தபடியாக கீழை நாடுகளுக்கு புதிய கடல்வழியைக்
கண்டுபிடிக்கும் பணியில் ஸ்பெயின் ஈடுபட்டது. ஜெனீவா நகரைச் சேர்ந்த மாலுமியான கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்குநோக்கி பயணம் செய்து கீழை நாடுகளை அடைவதற்கான திட்டத்தை வைத்திருந்தார். ஸ்பானிய அரசர் பெர்டினாண்ட் , அரசி இசபெல்லா ஆகியோரின் பொருள் உதவியுடன் 1492 ல் அட்லான்டிக் பெருங்கடலில் வாஸ்கோடாகாமா தமது பயணத்தை தொடங்கினார். நீண்ட கடுமையான பயணத்திற்குப் பிறகு 1492 அக்டோபர் 12 ஆம் நாள் பஹாமா தீவுகளை அடைந்தார். தாம் இந்தியாவின் கடற்கரையை சென்று அடைந்து விட்டதாக அவர் நம்பினார். எனவே , அங்கு வாழ்ந்த பழங்குடிகளை இந்தியர்கள்
என்றே அழைத்தார். மேலும் மூன்று பயணங்களை மேற்கொண்ட அவர் கரீபியன் தீவுகளையும் , மத்திய அமெரிக்காவையும் ஆய்வு செய்தார். இத்தீவுகளே தற்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் எனப்படுகின்றன. அமெரிகோ வெஸ்புகி 1493 ஆம் ஆண்டு , புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளிலும் , ஆய்வுகளிலும் ஸ்பெயின் , போர்ச்சுகல் ஆகிய நாடுகளுக்கிடையே நிலவிய போட்டியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் போப் ஆறாம் அலெக்சார்தர் ஒரு ஆணையை வெளியிட்டார். அது ‘ போப்பின் ஆணை ' என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அதன்படி உலகை கிழக்கு , மேற்கு என இரண்டாகப் பிரித்து
ஒரு கற்பனைக்கோடு வரையப்பட்டது. இக்கோட்டின் மேற்குப் பகுதியில் உரிமை கொண்டாட ஸ்பெயினுக்கும் , கிழக்குப் பகுதியில் உரிமை கொண்டாட போர்ச்சுகல் நாட்டிற்கும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நன்னம்பிக்கை வழியாக கிழக்கிந்திய தீவுகளை அடைவதற்கு ஸ்பெயினுக்கு தடங்கல் ஏற்பட்டது. பின்னர் 1501 ஆம் ஆண்டு , இத்தாலி மாலுமியான அமெரிகோ வெஸ்புகி என்பவர் ஸ்பானிய அரசரின் ஆதரவைப் பெற்று தென் அமெரிக்கப்பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போதுதான் கொலம்பஸ் கண்டுபிடித்தது இந்தியா அல்ல என்றும் அது ஒரு ‘ புதிய கண்டம் ’ என்றும் முடிவு செய்தார்.
இதனால் , அந்த புதிய கண்டத்திற்கு அமெரிக்கா என்ற பெயரே வழங்கலாயிற்று இருப்பினும் , அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்றே கருதப்படுகிறார். எனவே , ஸ்பெயின் மேற்கு நோக்கி பயணம் செய்து கீழை நாடுகளை அடைய திட்டமிட்டது. 1519 ஆகஸ்டு 10 ஆம் நாள் பெர்டினாண்ட் மெகல்லன் ஐந்து ஸ்பானியக் கப்பல்களோடு ( அவற்றின் பெயர் டிரினிடாட் , சான் அந்தோனியோ , கன்சப்சியன் , விக்டோரியா , சான்டியாகோ என்பதாகும் ) செவில்லா துறைமுகத்திலிருந்து தமது பயணத்தை துவங்கினார். மெகல்லனது கப்பல்கள் தென் அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலுள்ள 373
மெகல்லன் " மைல்கள் நீளமுள்ள நீண்ட ஜலசந்தியைக் கடந்து சென்றது. இதற்கு ‘ மெகல்லன் ஜலசந்தி ’ எனப் பெயரிடப்பட்டது. அதற்கப்பால் இருந்த பெருங்கடல் அட்லான்டிக் பெருங்கடலைவிட அமைதியாக இருந்தமையால் அதற்கு மெகல்லன் ‘ பசிபிக் பெருங்கடல் ’ என்று பெயரிட்டார். பசிபிக் பெருங்கடலைக் கடந்தபோது அப்பயணிகள் உணவின்றியும் குடிநீர் இன்றியும் சொல்லாவொணாத் துயரத்திற்கு ஆளாயினர். இறுதியில் 1521 மார்ச் 6 ஆம் நாள் அவர்கள் பிலிப்பைன்ஸ் தீவுகளைச் அங்கிருந்த பழங்குடியினரால் மெகல்லன் சென்றடைந்தனர். கொல்லப் பட்டார். ஒரு சில மாலுமிகள்
மட்டும் எஞ்சிய ஒரே கப்பலான விக்டோரியாவில் தொடர்ந்து நன்னம்பிக்கை முனை வழியாக பயணித்து 1522 செப்டம்பர் 9 ஆம் நாள் தாங்கள் புறப்பட்ட செவில்லா துறை முகத்தை வந்தடைந்தனர். உலகை வலம் வந்த முதல் பயணம் பிற புவியியல் கண்டுபிடிப்புகள் 1497 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசர் ஏழாம் ஹென்றி , ஜான் கேபட் என்பரை கடல் அவர் ஆய்வுக்காக அனுப்பிவைத்தார். நியூபவுண்ட்லாந்தை கண்டறிந்தார். தமது இரண்டாவது பயணத்தின் போது , அமெரிக்காவை ஆய்வு செய்தார். இந்த பயணத்தின் காரணமாகத்தான் இங்கிலாந்து வடஅமெரிக்கா நிலப்பகுதிகளில் உரிமை கோரியது. 1534 ஆம்
ஆண்டு பிரான்ஸ் நாட்டின் சார்பில் ஜேக்கஸ் ஜான் கேபட் அமெரிக்கா சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அரசர் பெர்டினான்டு பொதுவாக ‘ மாலுமி ’ என்று இங்கிலாந்தைச் அப்பகுதிகளை ஆராய்ந்தார். V. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. 1. 1598 ல் வாஸ்கோடகாமா இந்தியாவை வந்தடைந்தார். பஹாமாத் தீவுகள் நியூ பவுண்ட்லாந்து புயல் முனை அழைக்கப்படுகிறார். 1487 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா ஆப்பிரிக்காவின் தென்முனையான ‘ புயல் முனை'யை அடைந்தார். பெர்டினான்டு மெகல்லன் தனது பயணத்தின் பொழுது
அமைதியான கடல் பகுதியை பசிபிக் பெருங்கடல் என்று பெயரிட்டார். 2. இத்தாலிய மாலுமியான அமெரிக்கோ வெஸ்புகி ஸ்பெயின் நாட்டு அரசரின் உதவியுடன் தென் அமெரிக்கா பகுதிகளை ஆராய்ந்தார். சிறு குறிப்பு வரைக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) ‘ மாலுமி ’ ஹென்றி சேர்ந்த ஜான் கேபாட் வட அமெரிக்காவிற்கு சென்று 1. புதிய கடல்வழிகளைக் கண்டுபிடித்ததில் போர்ச்சுகல்லின் பங்கினை விவாதி பெர்டினாண்ட் மெகல்லன் சுருக்கமான விடை தருக. ( 100 வார்த்தைகள் ) 2. புவியியல் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களை ஆய்க. VIII. விரிவான விடை தருக. ( 200
வார்த்தைகள் ) 1. புதிய நாடுகளைக் கண்டுபிடித்ததில் ஸ்பெயினின் பங்களிப்பை தொகுத்து எழுதுக. புவியியல் கண்டுபிடிப்புகளின் தாக்கத்தை ஆய்க. சமய சீர்திருத்தம் மற்றும் எதிர்சமய சீர்திருத்த இயக்கம் 2. கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. சமய சீர்திருத்தத்திற்கான காரணங்கள் 2. சமய சீர்திருத்த இயக்கத்திற்கு மார்ட்டின் லூதரின் பங்கு. 4. 3. உல்ரிச் ஸ்விங்ளி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் சமயசீர்திருத்தம். ஜான் கால்வின் - சமய சீர்திருத்த இயக்கத்தில் அவரது பங்கு எதிர் சமயசீர்திருத்த இயக்கம் 5. 6. சமய
சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகள் இயக்கத்தை பகுதிகளிலும் இதனால் , 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஒரு பெரும் சமயசீர்திருத்த இயக்கம் என்று அழைக்கிறோம். ஐரோப்பாவின் பல்வேறு கிறிஸ்துவ திருச்சபைக்கு எதிராக பெரும் எதிர்ப்பு தோன்றியது. புராட்டஸ்டண்ட் கிறித்துவ சமயம் எழுச்சி பெற்றது. இந்த சமய சீர்திருத்த இயக்கம் சமயத்தில் ஏற்பட்ட பெரிய மாறுதலை குறிப்பதோடு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் பறை சாற்றுகிறது. ஜெர்மனியில் தோன்றிய சமயசீர்திருத்தம் பின்னர் பிறநாடுகளுக்கும் பரவியது. சமய சீர்திருத்தத்திற்கான
காரணங்கள் சமய சீர்திருத்த இயக்கத்திற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். 1. போப்பாண்டவரின் தலைமையின்கீழ் இயங்கிய கிறித்துவ திருச்சபை தொடக்கத்தில் மக்களின் பேராதரவுடன் திகழ்ந்தது. ஆனால் , இடைக் காலத்தில் அது ஒரு நிலமானிய நிறுவனமாக வளர்ந்து ஏராளமான நிலங்களையும் செல்வத்தையும் உடையதாக திகழ்ந்தது. போப்பாண்டவர்கள் அரசியல் செல்வாக்குப் பெற்று , அரசியல் விவகாரங்களில் அதிகம் தலையிடத் தொடங்கினர். இதனால் , அவர்கள் தங்களது ஆன்மீகக் கடமைகளை புறக்கணிக்கத் தொடங்கினர். போப்பாண்டவரும் குருமார்களும் ஆடம்பர வாழ்க்கையிலும் ஈடுபடத்
தொடங்கினர். 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆறாம் அலெக்சாந்தர் , இரண்டாம் ஜூலியஸ் , பத்தாம் லியோ போன்ற போப்பாண்டவர்கள் திருச்சபையின் மதிப்பையும் கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டனர். மறுமலர்ச்சி இயக்கம் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. விவிலியத்தை அவர்கள் படிக்கத் தொடங்கினர். திருச்சபை மற்றும் குருமார்களின் செயல்பாடுகள் புனித நூல்களில் குறிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளிலிருந்து மாறுபட்டுள்ளதை அவர்கள் உணரத் தொடங்கினர். சமயசீர்திருத்த இயக்கத்திற்கு முந்தைய காலத்திலேயே ,
பல்வேறு எழுத்தளார்கள் திருச்சபையில் காணப்பட்ட ஆடம்பர போப்பாண்டவரின் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் அதிகாரத்தையும் பிற ( 1466 வாழ்க்கை மற்றும் மூடநம்பிக்கைகளை கண்டித்தனர். வைக்ளிப் ( 1330 1384 ) என்ற அறிஞர் குறைபாடுகளையும் விமர்சித்தார். விவிலியத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ‘ சமய சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி ' என்று அவர் போற்றப்பட்டார். எராஸ்மஸ் 1536 ) தனது ‘ முட்டாள்களின் கப்பல் ' என்ற நூலில் குருமார்கள் பின்பற்றி வந்த மூடப்பழக்கங்களைச் சாடினார். 1509 ஆம் ஆண்டு இந்நூல் பதிப்பிக்கப்பட்டது.
பொஹிமியாவைச் சேர்ந்த ஜான் ஹஸ் ( 1369 1415 ) என்பவர் திருச்சபையை சீர்திருத்துவதற்காக பாடுபட்டார். ஆனால் , அவரது எழுத்துக்கள் கடுமையாக கண்டிக்கப்பட்டதுடன் , திருச்சபைக்கெதிரான குற்றங்களுக்காக அவர் உயிருடன் கொளுத்தப்பட்டார். இத்தகைய முதல் முயற்சிகள் 16 ஆம் நூற்றாண்டு பிற்பட்ட சமய சீர்திருத்த இயக்கத்திற்கு வித்தாக அமைந்தன. மார்ட்டின் லூதர் ( 1483 – 1546 ) ஜெர்மனியில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் மார்ட்டின் லூதர் ஆவார். 1483 நவம்பர் 10 ஆம் நாள் அய்ல்பென் என்ற ஊரில் மார்ட்டின் லூதர்
பிறந்தார். எர்பர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற லூதர் 1508 ஆம் ஆண்டு சமயத்துறவியானார். 1510 ல் அவர் ரோமாபுரிக்கு சென்றிருந்தார். ரோமானிய குருமார்கள் அங்கு நடத்திவந்த உலகந்தழுவிய வாழ்க்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 1512 ல் அவர் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் சமயக் கல்விக்கான முனைவர் மார்ட்டின் லூதர் பட்டத்தைப் பெற்றார். பின்னர் , அதே பல்கலைக் கழகத்தில் சமயவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்போது , திருச்சபையின் தீமைகளை எதிர்த்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். 1517 ஆம் ஆண்டு , ரோமாபுரியிலிருந்த
புனித பீட்டர் தேவாலயத்தை புதுப்பிக்க வேண்டிய பணம் திரட்டும் நோக்கத்துடன் ஜான் டெட்சல் எனபவரை பாவ மன்னிப்பு சீட்டுகளை விற்பதற்காக போப் பத்தாம் லியோ ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தார். பாவமன்னிப்பு என்னும் கோட்பாடு கிறித்துவ சமயத்தில் ஒருவர் தாம் செய்த தவறுக்காக வருந்தி மனம் திருந்துவாரேயானால் அவருக்கு வழங்கப்படும் மன்னிப்பைக் குறிப்பதாகும். ஆனால் போப் பத்தாம் லியோ அதனை பணம் திரட்டும் வழியாகப் பயன்படுத்தினார். எனவே லூதர் பாவமன்னிப்பு சீட்டுக்கள் விற்பதை கடுமையாக எதிர்த்தார். ஜான் டெட்சல் விட்டன்பர்க்
பல்கலைக்கழகத்தற்கு வந்தபோது , லூதர் தமது எதிர்ப்பை 95 கருத்துக்களாக எழுதி அவற்றை தேவாலயக் கதவுகளில் ஆணிகள் கொண்டு அறைந்தார். இதனைக் கண்ட போப் பத்தாம் லியோ அதிர்ச்சியடைந்து , 1521 ல் லூதரை மதவிலக்கம் செய்தார். அந்த ஆணையை லூதர் மக்கள் முன்னிலையில் தீயிட்டுக்கொளுத்தினார். ஜான் டெட்சல் போப் பத்தாம் லியோ பின்னர் , போப்பாண்டவர் , அப்போது புனித ரோமானியப் பேரரசராக இருந்த 5 ஆம் சார்லசிடம் , திருச்சபைக்கெதிரான நடவடிக்கைகளுக்காக லூதருக்கு தக்க தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் , லூதருக்கு ஜெர்மானிய
சிற்றரசர்களின் என ஆதரவு இருந்தது. இருப்பினும் , 1521 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓம்ஸ் டயட் சபையில் பேரரசர் ஐந்தாம் சார்லஸ் அவையில் லூதர் குற்றவாளி முடிவெடுக்கப்பட்டது. ஆனால் , லூதர் கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரது நண்பர்களின் துணையுடன் அழைத்துச் செல்லப்பட்டு வார்ட்பர்க் கோட்டையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டார். அங்கிருந்த போதுதான் லூதர் கிரேக்க மொழியிலிருந்த மூல நூலான புதிய ஏற்பாட்டை ஜெர்மானிய மொழிக்கு மொழி பெயர்த்தார். 1529 ல் தனது புகழ்பெற்ற ' சிறுவினாவிடை ’ என்ற நூலை பதிப்பித்தார். 1546 ஆம் ஆண்டு தாம்
இறக்கும்வரை லூதர் தனிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். 5 - ம் சார்லஸ் இத்தகைய சமய எதிர்ப்பில் ஜெர்மானியக் குடியானவர்கள் கலந்து கொண்டபோது. அது குடியானவர்களின் போராக ( 1524-25 ) மாறியது. குடியானவர்களின் கிளர்ச்சி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. பல குடியானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1526 ஆம் ஆண்டு கூட்டப்பட்ட ஸ்பெயர்ஸ் டயட் சபையில் மீண்டும் சமயம் குறித்த பிரச்சனையை ஜெர்மானிய சிற்றரசர்கள் எழுப்பினர். சிற்றரசர்கள் தாம் விரும்பிய சமயத்தைப் பின்பற்றிக் கொள்ளலாம் என டயட் சபை அமைதியளித்தது. ஆனால் , 1529 ல் பேரரசர்
சார்லஸ் இந்த அனுமதியை ரத்து செய்தார். இதனை ஜெர்மானிய சிற்றரசர்கள் எதிர்த்தனர். எனவே , அவர்கள் எதிர்ப்பாளர்கள் அல்லது புரோட்டஸ்டன்டுகள் என அழைக்கப்பட்டனர். 1555 ஆம் ஆண்டு ஆக்ஸ்பர்க் அனுமதி உடன் படிக்கையில்தான் சிற்றரசர்கள் கத்தோலிக்க அல்லது புரோட்டஸ்டன்டு பிரிவை பின்பற்றுவதற்கான அனுமதி பேரரசரால் முறையாக வழங்கப்பட்டது. லூதரின் சமயப்பிரிவுக்கு மட்டுமே இந்த உடன்படிக்கை அங்கீகாரம் அளித்தது. கால்வீனிய சமயமோ , ஸ்விங்ளியின் சமயப்பிரிவோ அங்கீகரிக்கப்படவில்லை. உல்ரிச் ஸ்விங்ளி ( 1484–1531 ) வழிவகுத்தவர்
ஸ்விட்சர்லாந்து நாட்டில் சமயசீர்திருத்தத்தற்கு உல்ரிச் ஸ்விங்ளி என்பவராவார். மார்ட்டின் லூதரின் சமகாலத்தவரான அவர் ஸ்விட்சர்லாந்தின் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். 1502 ஆம் ஆண்டு சூரிச் கான்டனில் கிறித்துவப் பாதிரியானார். பாவமன்னிப்பு சீட்டு விற்பனை போன்ற திருச்சபையின் முறைகேட்டை அவர் கண்டித்தார். உல்ரிச் ஸ்விங்லி விவிலியத்தின் கொள்கைகளை குருமார்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் பாவமன்னிப்பு சீட்டுகளை விற்பதற்காக போப்பாண்டவர் சாம்சன் என்பவரை சூரிச் நகருக்கு அனுப்பிவைத்தார். இதனை
ஸ்விங்ளி கடுமையாக எதிர்த்தார். அதன்பிறகு , போப்பாண்டவரின் தலைமையை ஸ்விங்ளி எதிர்க்கத் தொடங்கினார். குருமார்களைப் போற்றி புகழ்வதையும் , பிரம்மச்சரிய பாதிரி முறைமையையும் கூட அவர் கண்டித்தார். பிரம்மச்சரியத்திற்கு எதிரான ஸ்விங்ளியின் கொள்கையை பிஷப் ஆட்சேபித்தார். சூரிச் நகரசபை ஸ்விங்ளியின் கருத்தை ஏற்றுக்கொண்டு பிஷப்பின் எதிர்ப்பை நிராகரித்தது. இதன்மூலம் சீர்திருத்தத்தை சூரிச் ஏற்றுக்கொண்டது. 1523 ல் போப்பாண்டவர் ஸ்விங்ளியை சமயவிலக்கம் செய்தார். ஆனால் , சூரிச் கான்டன் திருச்சபையிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
இதனால் , ஐந்து கான்டன்கள் ஒன்றுசேர்ந்து சூரிச்மீது போர் தொடுத்தன. இப்போரில் 1531 ல் ஸ்விங்ளி கொல்லப்பட்டார். இறுதியில் ஒவ்வொரு கான்டனும் தாங்கள் விரும்பிய சமயத்தைப் பின்பற்றலாம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர். ஜான் கால்வின் ( 1509 – 1564 ) சமய சீர்திருத்தவாதியான கால்வின் பிரான்சில் பிறந்தவர். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் சட்டம் பயின்றார். 1532 ல் சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றார். ரோமானிய தத்துவ அறிஞர் செளீகாவின் டி கிலிமன்னீயா என்ற நூலுக்கு விளக்கவுரையை அவர் எழுதி
வெளியிட்டார். 1536 ல் அவர் ஜெனிவா சென்று தங்கினார். சமய நம்பிக்கையைப் பொறுத்தவரை விஷயமே இறுதியானது என்பது அவரது கருத்தாகும். ஆண்டவன் அருளாலேயே மனித வாழ்க்கைக்கு மேன்மை நிலை கிடைக்கும் என்றும் அவர் கூறினார். எட்டாம் ஹென்றி எதிர்சமய சீர்திருத்த வருவதை முன்கூட்டியே அறியும் கோட்பாடு மற்றும் கடவுளே இறுதி முடிவெடுப்பவர் என்ற நம்பிக்கை ஆகியவற்றை கால்வின் வலியுறுத்தினார். தமது சமய கருத்துக்களை ‘ கிறித்துவ சமயத்தின் கோட்பாடுகள் ' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். அவரது சமயப்பிரிவு ‘ கால்வீனியம் ’ என அழைக்கப்பட்டது.
ஜெனிவா திருச்சபையின் தலைவராக அவர் இருந்தார். கல்வியைப் பரப்புவதற்காக பல பள்ளிகளையும் அவர் நிறுவினார். ஜெனிவா பல்கலைக்கழகமும் அவரால் நிறுவப்பட்டதேயாகும். ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் கால்வீனிய சமயப்பிரிவு பரவியது. இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம் ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி தொடக்கத்தில் மாட்டின் லூதருக்கெதிராக போப்பாண்டவரை ஆதரித்தார். இதனால் அவர் ‘ சமயக்காவலர் ’ என்று போப் பத்தாம் லியோவினால் போற்றப்பட்டார். ஆனால் , விரைவில் போப்பாண்டவருடனான அவரது நல்லுறவு போப்பாண்டவரின் முறிந்தது. அரசியை
மணவிலக்கு செய்துவிட்டு , ஆன்பொலின் என்பவரை எட்டாம் ஹென்றி திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு போப் அனுமதி வழங்கவில்லை. எனவே , பாராளுமன்றத்திடம் கூறி ஆதிக்கச்சட்டம் ஒன்றை இயற்றச் செய்தார். இதன்படி மன்னரே இங்கிலாந்து திருச்சபைக்கும் தலைவர் என்று அறிவிக்கப்பட்டது. கட்டுப்பாட்டிலிருந்து விலகிய இந்த திருச்சபை ஆங்கிலிக்கத் திருச்சபை என எட்டாம் ஹென்றி கத்தோலிக்க கோட்பாடுகளில் எவ்வித முக்கிய மாற்றத்தையும் செய்யவில்லை. ஆறாம் எட்வர்ட் ( 1547 ஆட்சிக்காலத்தில்தான் ஆங்கிலிக்க திருச்சபை புரோட்டஸ்டன்ட் சமயமாக
மாறியது. தொழுகை விதிகள் ஆங்கிலத்தில் மொழி அழைக்கப்பட்டது. 1553 ) ஜான் கால்வின் பெயர்க்கப்பட்டன. புதிய இயக்கம் சமய சீர்திருத்த இயக்கத்தின் வெற்றி ரோமானிய கத்தோலிக்க திருச்சபையில் ஒருவித வியப்பையும் பெரும் அச்சத்தையும் தோற்றுவித்தது. நிலைமை மேலும் மோசமாவதற்குள் புரோட்டஸ்டன்ட் சமயம் பரவுவதை தடுத்து நிறுத்துவதற்காகவும் , திருச்சபைக்குள்ளேயே சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவே எதிர் சமய சீர்திருத்த இயக்கம் எனப்படுகிறது. இக்னேஷியஸ் லயோலா ( 1491 – 1556 ) என்பவர் ஒரு
ஸ்பானிய வீரர் , ஒரு போரில் அவர் தனது கால்களை இழந்தார். அதன்பிறகு , ரோமானிய கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சிக்கு தமது ஆற்றலை பயன்படுத்த அவர் முடிவு செய்தார். 1534 ல் ‘ ஏசு சபை ’ என்ற அமைப்பை அவர் நிறுவினார். இதற்கு போப்பாண்டவரும் ஒப்புதல் வழங்கினார். கத்தோலிக்க திருச்சபையின் இழந்த புகழை மீட்பதும் , சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதும் இந்த சபையின் முக்கிய நோக்கங்களாகும். இந்த சபையின் உறுப்பினர்கள் ‘ ஜெசூட்டுகள் ’ அழைக்கப்பட்டனர். தங்களது தன்னலமற்ற தொண்டினால் கத்தோலிக்க திருச்சபைக்கு நற்பெயரை அவர்கள்
ஏற்படுத்திக் கொடுத்தனர். உலகின் பல பகுதிகளிலும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினர். சமயத்தை பரப்புவதில் அவர்கள் ஈடு இணையற்ற வெற்றியைப் பெற்றனர். கத்தோலிக்க சமயத்திற்கும் போப்பாண்டவருக்கும் அவர்கள் விசுவாசமாக இருந்தனர். இக்னேஷியஸ் லயோலா டிரன்ட் கவுன்சில் ( 1545 1563 ) கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. குருமார்களிடம் காணப்பட்ட சீர்கேடுகள் ஒழிக்கப்பட்டன. பிரம்மச்சரியம் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. பதவிகளை விலைக்கு விற்பதும் நிறுத்தப்பட்டது. பாவ மன்னிப்பு சீட்டுகள்
விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. குருமார்கள் தங்களது கடமைகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். சமயத்தைப் பொறுத்தவரையில் போப்பாண்டவரே உச்ச அதிகாரம் படைத்தவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டார். கத்தோலிக்க சமயத்துக்கு எதிரான புத்தகங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டது. கத்தோலிக்கர்கள் இந்த புத்தகங்களை படிக்க தடைவிதிக்கப்பட்டது. என அதேபோல் , இடைக்காலத்தல் வழக்கத்திலிருந்த இன்குசிஷன் என்ற சமய விசாரணை நீதிமன்றங்கள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டன. சமய விரோதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.
திருச்சபைக்கு எதிரானவர்களுக்கு உயிரோடு கொளுத்துதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. 1492 புரோட்டஸ்டன்ட் சமயம் வேகமாகப் பரவுவது தடைப்பட்டதிலிருந்தே எதிர்சமய சீர்திருத்த இயக்கத்தின் வெற்றியை உணரமுடியும். தெற்கு ஜெர்மனி , பிரான்சு , போலந்து , ஸ்விட்சர்லாந்தின் சில கான்டன்கள் மற்றும் சவாய் ஆகியன மீண்டும் கத்தோலிக்க பிரிவுக்கு மாறின. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளிலிருந்து புரோட்டஸ்டன்ட் சமயம் விரட்டியடிக்கப்பட்டது. இன்றைய உலகிலும்கூட ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு பெரிய சமய அமைப்பாக நீடித்திருப்பது
குறிப்பிடத்தக்கது. மறுமலர்ச்சி காலத்தில் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் ஸ்பெயின் நாட்டிற்காக கொலம்பஸ் பஹாமா மற்றும் கியூபா தீவுகளை கண்டறிந்தார். 95 ஆய்வு கட்டுரைகளை மார்டின் லூதர் எழுதினார். பைபிளை லூதர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். ஜெர்மனியில் குடியானவர் எழுச்சி இங்கிலாந்தில் ஆங்கிலேய திருச்சபை அரசர் / அரசியை தலைவராக கொண்டு நிறுவப்பட்டது Page 1¹86 of 284 சமய சீர்திருத்தத்தின் விளைவுகள் சமய சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய விளைவுகள் : 1. கிறித்துவ சமயத்தில் கத்தோலிக்கர்கள் , புரோட்டஸ்டன்டுகள் என இரண்டு
பிரிவினர் உருவாயினர். இந்தப் பிரிவினால் சமய வேற்றுமைகளும் , ஜெர்மனி மற்றும் ஜரோப்பாவில் சமய அடிப்படையிலான போர்களும் தோன்றின. 3. 2. விவிலியத்தைப் படித்து சமயக்கருத்துக்களின் பயன்பாடுகளை மக்கள் உணர்ந்தனர். விவிலியத்துக்கான விளக்கங்களை புரோட்டஸ்டன்டுகள் தங்கள் விருப்பம்போல் புரிந்து கொண்டதால் சுயசிந்தனை வளர வழியேற்பட்டது. இதனால் , கலை , இலக்கியம் , அறிவியல் வளர்ந்தன. திருச்சபையில் , கொண்டுவரப்பட்ட ஜனநாயக நடைமுறை தேசியம் மற்றும் ஜனநாயக கருத்துக்கள் வளர் வழிவகுத்தன. நாடுகள் தங்களுக்கென திருச்சபைகளை தோற்றுவித்துக்
கொண்டன. போப்பாண்டவரின் இடத்தை தேசிய திருச்சபைகள் ஆக்ரமித்தன. 4. புரோட்டஸ்டன்டு சமயம் எதிர்சமய சீர்திருத்த இயக்கம் ஆகிய இரண்டும் விரைவாகப் பரவியதால் திருச்சபை தூய்மைப்பட்டது. கத்தோலிக்கர்களும் , புரோட்டஸ்டன்டுகளும் சமயசீர்திருத்தத்திற்குப் பிறகு உயரிய ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்கத் தொடங்கினர். கத்தோலிக்கர்கள் திருச்சபை நிறுவனங்களை சீரமைத்து சமுதாயத்தில் ஒழுக்க நெறிகளை போதித்தனர். கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெற்ற அறிவு மார்ட்டின் லூதரின் வாழ்க்கை மற்றும் ஜெர்மானிய சீர்திருத்த இயக்கத்தில் அவரது
பங்கு. சமயசீர்திருத்த இயக்கத்தில் ஜான்கால்வின் , உல்ரிச் ஸ்விங்ளி ஆகியோரது பங்கு. எதிர்சமய சீர்திருத்த இயக்கமும் , இக்னேஷயஸ் லயோலாவின் பங்களிப்பும் சமயசீர்திருத்தத்தின் விளைவுகள் பாடம் - 24 அமெரிக்க விடுதலைப்போர் ( 1776 1783 ) கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்தி : 1. அமெரிக்கா விடுதலைப்போருக்கான அடிப்படைக் காரணங்கள் 2. போருக்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிகள் 3. அமெரிக்க விடுதலை அறிக்கை போரின் முக்கிய நிகழ்வுகள் 4. 5. போரின் முக்கியத்துவம் அமெரிக்காவின் ஆங்கிலேய குடியேற்றங்கள் அமெரிக்கக்
கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து மக்கள் ஐரோப்பாவிலிருந்து புதிய உலகிற்கு தொடர்ந்து குடியேறிய வண்ணம் இருந்தனர். தென் அமெரிக்காவில் ஸ்பானிய குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. வட அமெரிக்காவில் ஆங்கிலேயரும் , பிரெஞ்சுக்காரரும் தங்களது குடியேற்றங்களை அமைத்தனர். 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அட்லான்டிக் கடற்கரைப் பகுதியில் 13 ஆங்கிலேயக் குடியேற்றங்கள் நன்கு வேரூன்றியிருந்தன. நிலமில்லாக் குடியானவர்கள் , சமயசுதந்திரம் வேண்டி நின்றோர் , வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு குடியேறியிருந்தனர். தொடக்கத்தில் இந்த
குடியேற்றங்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் இடையே நல்லுறவு இருந்தது. இந்தக் குடியேற்றங்கள் ஆளுநர்கள் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும் , அவை அரசியல் சுதந்திரம் பெற்று விளங்கின. ஒவ்வொரு குடியேற்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருந்தது. உள்நாட்டைப் பொறுத்தவரையிலான சட்டங்களை அது இயற்றியது. ஆனால் , தாய்நாட்டு அரசாங்கம் ( பிரிட்டன் ) பின்பற்றிய சில கொள்கைகளினால் மோதல்கள் உருவாயின. இது அமெரிக்க விடுதலைப் போருக்கு வழிவகுத்தது. இறுதியில் 13 குடியேற்றங்களும் விடுதலை பெற்றன. இந்தப் போருக்கு
பல்வேறு காரணங்களைக் கூறலாம். அடிப்படைக் காரணங்கள் பிரிட்டிஷ் அரசாங்கம் குடியேற்ற வாணிபக் கொள்கையைப் ( மெர்கன்டலிசம் ) பின்பற்றியது. இதன்படி , குடியேற்றங்கள் தாய்நாட்டின் நலன்களுக்காவே அமைந்துள்ளன. கச்சாப்பொருட்களை அனுப்பிவைப்பதோடு தாய்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கும் நல்ல சந்தையாக குடியேற்றங்கள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. மேலும் , தங்களது பொருட்களை பிரிட்டிஷாருக்கு சொந்தமாக கப்பல்களில்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இத்தகைய வழிகளில் தாய்நாட்டின் செல்வத்தைப்
பெருக்குவதற்கு குடியேற்றங்கள் செயலாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. குடியேற்றக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பல்வேறு சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. அமெரிக்க குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் நாவாய் சட்டங்களை பிரிட்டிஷ் நாடளுமன்றம் இயற்றியது. இச்சட்டங்களின்படி அனைத்து பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியன இங்கிலாந்துக் கப்பல்கள் மூலமாகவே நடைபெறவேண்டும் என அறிவிக்கப்பட்டது. நாவாய் சட்டங்களை நடைமுறைப்படுத்த குடியேற்றங்களில் சுங்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் ,
அமெரிக்க குடியேற்றங்கள் இந்த சட்டங்கள் தங்களது உரிமைகளைப் பறிப்பதாகக் கருதின. வெல்லப்பாகு சட்டம் அமெரிக்க குடியேற்றங்களுக்கு இறக்குமதி செய்யப்படும் வெல்லப்பாகு மற்றும் சர்க்கரை ஆகியவற்றின்மீது அதிக வரிகளை விதித்தது. இதனைத்தவிர , குடியேற்றங்களின் வணிகத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வணிகச்சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. எடுத்துக்காட்டாக , 1732 ஆம் ஆண்டின் தொப்பி சட்டம் ஒரு குடியேற்றத்திலிருந்து மற்றொன்றிற்கு தொப்பிகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு தடை விதித்தது. 1750 ஆம் ஆண்டு இரும்பு சட்டம் குடியேற்றங்களில் பெருமளவு
இரும்பு உற்பத்தி செய்யப்படுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இத்தகைய சட்டங்களை குடியேற்றங்கள் எதிர்த்தன. இந்த கட்டுப்பாடுகளினால் தாய்நாட்டு அரசுக்கும் குடியேற்றங்களுக்கும் இடையே வெறுப்பு தோன்றியது. பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கேற்ற தருணத்தை குடியேற்றங்கள் எதிர்பார்த்து காத்திருந்தன. விடுதலைப் போருக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் ஏழாண்டுப் போரின் விளைவு 1763 ஆம் ஆண்டு ஏழாண்டுப் போரின் முடிவில் கனடா பகுதியை பிரான்ஸ் இங்கிலாந்துக்கு விட்டுக்கொடுத்தது. இதனால் அமெரிக்கர்களுக்கு
இருந்த பிரஞ்சு அச்சம் நீங்கியது. ஒருவேளை பிரஞ்சுக்காரர்கள் தாக்குதல் தொடுத்தால் தாய்நாட்டின் உதவியை நாடவேண்டிய நிர்ப்பந்தம் தற்போது இல்லாமல் போயிற்று. எனவே , பிரிட்டிஷாரின் குடியேற்ற ஆதிக்கக் கொள்கையை துணிச்சலுடன் எதிர்கொள்வது என அமெரிக்க குடியேற்றங்கள் தீர்மானித்தன. கிரன்வெல் நடவடிக்கைகள் கிரன்வெல் என்பவர் இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது அமெரிக்க குடியேற்றங்களின் நலன்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்தார். 1763 ஆம் ஆண்டு அறிவிப்பின்படி அமெரிக்க குடியேற்றத்தைச் சேர்ந்தவர்கள் அப்பலாச்சிய
மலைத்தொடருக்கு அப்பால் நிலப்பகுதிகளை வாங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டது. 1764 ஆம் ஆண்டு சர்க்கரைச் சட்டம் சர்க்கரை மீதான சுங்கவரியை உயர்த்தியது. இது குடியேற்றங்களின் நலன்களை பெரிதும் பாதித்தது. 1765 ஆம் ஆண்டு முத்திரைத்தாள் சட்டம் குடியேற்ற வணிக மற்றும் சட்டபூர்வமான ஆவணங்களில் பிரிட்டிஷ் முத்திரைத்தாள்கள் பயன்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியது. படைவீரர் தங்குமிடச்சட்டம் , ஆங்கிலேய படைவீரர்களுக்கு உணவும் இருப்பிடமும் குடியேற்றங்கள் ஏற்படுத்தித்தர வேண்டும் எனக் கூறியது. இந்த நடவடிக்கைகளை குடியேற்றங்கள் கடுமையாக
எதிர்த்தன. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தங்களுக்கும் பிரிதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் “ பிரதிநிதித்துவம் இல்லையேல் வரியில்லை ” என்ற முழக்கத்தை குடியேற்றத்தைச் சேர்ந்த மக்கள் எழுப்பினர். தெருக்களில் வன்முறை வெடித்ததால் முத்திரைத்தாள் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. டவுண்ஷெண்ட் சட்டங்கள் கண்ணாடி , ஆனால் , இங்கிலாந்து நிதியமைச்சர் சார்லஸ் டவுண்ஷெண்ட் காகிதம் , தேயிலை போன்ற பொருட்களின்மீது 1767 ல் புதிய வரிகளை விதித்தார். இவை டவுண்ஷெண்ட் சட்டங்கள் எனப்படுகின்றன. அமெரிக்கர்கள்
இவற்றைப் புறக்கணித்ததோடு பிரிட்டிஷ் பொருட்களையும் வாங்க மறுத்தனர். 1770 மார்ச் 5 ஆம் நாள் பாஸ்டன் நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பிரிட்டிஷ் வீரர்கள் ஐந்து அமெரிக்கர்களை சுட்டுக் கொன்றனர். இதுவே பாஸ்டன் படுகொலை எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு டவுண்ஷெண்ட் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன. பாஸ்டன் தேனீர் விருந்து 1773 ஆம் ஆண்டு தேயிலை இறக்குமதியின் மீது வரிவிதிக்கும் புதிய சட்டமான தேயிலை சட்டம் கொண்டுவரப்பட்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு குடியேற்றங்கள் மீது வரிவிதிக்க உரிமை உண்டு என்பதற்கு
அடையாளமாக இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் , அமெரிக்கர்கள் இதனை எதிர்த்தனர். செவ்விந்தியர்கள் போல வேடம் தரித்த அமெரிக்கர்கள் சிலர் பாஸ்டன் துறைமுகத்திலிருந்த கப்பல்களில் ஏறி அங்கிருந்த தேயிலைப் பெட்டிகளை கடலில் வீசியெறிந்தனர். 1773 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ‘ பாஸ்டன் தேநீர் விருந்து ' என அழைக்கப்படுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன் அமெரிக்கர்களுக்கெதிரான பொறையின்மைச் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1774 ல் ஜெபர்சன் பாஸ்டன்