text
stringlengths 11
513
|
---|
கைப்பற்றினர். அனைத்து ரஷ்ய சோவியத்துக்ககளின் பேரவை அன்றே கூடி அனைத்து அரசியல் அதிகாரங்களையும் தம் வசம் எடுத்துக் கொண்டது. 1917 அக்டோபர் 25 ஆம் நாள் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. எனவே இதனை அக்டோபர் புரட்சி என்று கூறினர். பொது அவை பன்னாட்டுக் கழகத்தின் உச்ச அதிகாரம் படைத்த பொது அவையில் அதன் உறுப்பு நாடுகள் அங்கம் வகித்தன. ஒரு நாட்டுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை பின்பற்றப்பட்டது. ஆனால் , எந்தவொரு முடிவும் ஒருமனதாக எடுக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டது. பன்னாட்டு சட்டமன்றம் என்று இந்த அவையைக் கூறுலாம். நிர்வாக சபை |
தொடக்கத்தில் நான்கு நிரந்தர உறுப்பினர்களும் , பொது அவையால் தேர்ந்தெடுக்கப் பட்ட வேறு நான்கு உறுப்பினர்களும் நிர்வாக சபையில் இடம் பெற்றிருந்தனர். 1926 ல் ஜெர்மனியும் இதில் நிரந்தர உறுப்பினராகியது. நிரந்தரமல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து அதிகபட்சம் பதினொன்றாகியது. இவ்விரண்டு உறுப்புகளில் பொது அவையே வலிமை பெற்று விளங்கியது. செயலகம் பன்னாட்டு நீதிமன்றம் இது ஜெனீவா நகரில் அமைந்திருந்தது. இதன் பொதுச் செயலர் நிர்வாக சபையால் நியமிக்கப்பட்டார். பொது அவையும் இவரது நியமனத்தை ஏற்கவேண்டும். |
பொது செயலர் , நிர்வாக சபையின் ஆலோசனையின்பேரில் செயலகத்தின் இதர பணியாளர்களை நியமித்தார். செயலகத்தின் செலவுக்கான நிதியை உறுப்பு நாடுகள் வழங்கின. பன்னாட்டு கழகத்தின் அமைப்பு பன்னாட்டு நீதிமன்றம் விளக்கங்களையும் முக்கிய தீர்ப்புகளையும் இந்த நீதிமன்றம் வழங்கியது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒன்பது ஆண்டுப் பதவிக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பன்னாட்டு தொழிலாளர் சங்கம் ஜெனீவாவை தலைநகராகக் கொண்ட இந்த அமைப்பு பன்னாட்டு சங்கத்துடன் இணைந்த ஒன்றாகும். இதன் முக்கியக் குறிக்கோள் உலகத் தொழிலாளர்களின் நலன்களை |
பாதுகாப்பது ஆகும். இதன் நிர்வாகச் சபையில் முக்கிய உறுப்பினர்கள் அரசாங்கம் , தொழிலதிபர்கள் , தொழிலாளர்கள் ஆகியோர் ஆவர். மேன்டேட் முறை இந்த முறையை பன்னாட்டுக் கழகம் ஏற்படுத்தியது. ஜெர்மனி போன்ற ஒப்பந்த நாடுகள் மற்றும் துருக்கியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகள் திரும்பவும் அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக , அப்பகுதிகளின் நிர்வாகம் பன்னாட்டு கழகத்தின் மேற்பார்வையின் கீழ் பல்வேறு நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பன்னாட்டுக் கழகத்தின் சாதனைகள் ஆலந்து தீவுகள் இந்த தீவுகள் ஸ்வீடனுக்கும் பின்லாந்துக்கும் |
இடையில் உள்ளன. முன்னர் ஆலந்து தீவுகள் ஸ்வீடனின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆலந்து தீவுகள் யாருக்கு உரிமையானது என்பது குறித்த சர்ச்சை ஸ்வீடனுக்கும் பின்லாந்துக்கும் இடையே 1920 ல் தோன்றியது. பன்னாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு சிறப்புக்குழு ஆய்வு செய்து , ஆலந்து தீவுகளை பின்லாந்திடம் ஒப்படைத்தது. மொசூல் எல்லைச்சிக்கல் கிரேட் பிரிட்டனின் பாதுகாப்பில் விடப்பட்டிருந்த ஈராக் மற்றும் துருக்கி நாட்டிற்கும் இடையே எழுந்த எல்லைச் சிக்கல் மொசூல் எல்லைச்சிக்கல் எனப்படுகிறது. எண்ணெய் வளம் மிகுந்த மொசூல் தமக்கே உரித்தானது |
என்று இரண்டு தரப்பும் கூறின. இருதரப்பு எல்லை குறித்து எந்தவொரு உடன்பாட்டுக்கும் வரவில்லை. எனவே , பன்னாட்டுகழகம் தனது இறுதி முடிவை அறிவித்தது. ஈராக் , துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் பிரஸ்ஸல்ஸ் எல்லைக்கோடு நிரந்தர எல்லையாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் 1926 ஜூனில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைப்படி கிரேட் பிரிட்டன் துருக்கிக்கு மொசூலின் ஒரு சிறு பகுதியை விட்டுக் கொடுத்தது. திருத்தப்பட்ட எல்லைக் கோடு இறுதியாக்கப்பட்டது. மொசூல் எண்ணெய் வயல்களுக்கு ஈடாக சன்மானத்தையும் துருக்கி பெற்றது. யூபென் மற்றும் மால்மடி |
1920 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளில் யூபென் , மால்மடி பகுதிகள் பெல்ஜியத்திற்கு வழங்கப்பட்டன. இதனை எதிர்த்து ஜெர்மனி பன்னாட்டு சங்கத்திடம் முறையிட்டது. 1920 செப்டம்பரில் கழகத்தின் நிர்வாக சபை இது குறித்து விவாதித்தது. யூபென் , மால்மடி பகுதிகளை பெல்ஜியத்திற்கு வழங்கியது இறுதியான முடிவு என்று ஜெர்மனி அரசுக்கு தகவல் அனுப்பியது. செர்பு நிகழ்ச்சி 1923 ஆகஸ்டில் ஒரு இத்தாலிய தளபதியும் இரண்டு அதிகாரிகளும் கிரேக்கத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாலியர்கள் இந்த குற்றத்திற்க்ான இழப்பீட்டையும் மன்னிப்பையும் கோரினர். |
இத்தாலியின் கோரிக்கையை கிரேக்கம் மறுத்தது. எனவே , செர்பு தீவை இத்தாலி ஆக்ரமித்துக் கொண்டது. இந்த பிரச்சினையில் இங்கிலாந்தும் பிரான்சும் தலையிட்டு இத்தாலி கிரேக்க நாடுகளுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தியது. கிரீஸ் மற்றும் பல்கேரியா இடையிலான பிரச்சனை கிரிஸ் பல்கேரியா நாடுகளுக்கிடையே எல்லைத்தகராறு இருந்து வந்தது. 1925 ல் ஒரு கிரேக்கத்தளபதி படுகொலை செய்யப்பட்டார். இதனால் , கிரேக்க ராணுவம் பல்கேரியாவுக்குள் நுழைந்தது. பன்னாட்டுக் கழக நிர்வாக சபை இந்த பிரச்சினையைப் பற்றி விசாரிப்பதற்காக பிரிட்டனையும் பிரான்சையும் |
கேட்டுக்கொண்டது. கிரேக்கப்படைகள் திருப்பியழைக்கப்பட்டன. பல்கேரியாவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. கிரேட் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பிரச்னை டியூனிஸ் மற்றும் மொராக்கோ தேசியம் குறித்து கிரேட் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் பிரச்னை தோன்றியது. பன்னாட்டு நீதிமன்றத்தின்முன்பு இந்த பிரச்சினை எடுத்து செல்லப்பட்டது. இருப்பினும் இரு நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அரசியல் சார்பற்ற பணிகள் பன்னாட்டுக் கழகம் பல்வேறு அரசியல் சார்பற்ற பணிகளையும் |
ஆற்றியுள்ளது. 1925 ல் ஜெனீவா நகரில் அடிமை முறை குறித்த மாநாடு நடைபெற்றது. 1932 ல் ஒரு நிரந்தர அடிமைமுறை ஆணையம் நிறுவப்பட்டது. பன்னாட்டுக் கழகத்தின் நிதி ஆணையம் ஆஸ்திரியா , ஹங்கேரி , கிரீஸ் போன்ற நாடுகளுக்கு கடனுதவி வழங்கியது. 1923 ல் பன்னாட்டுக் கழகம் ஒரு சுகாதார அமைப்பை ஏற்படுத்தியது. மலேரியா , அம்மை , நாய்க்கடி , வெறிநோய் , புற்றநோய் , காசநோய் , இதயநோய் போன்ற நோய்களை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது , பல்வேறு நாடுகளின் தேசிய சுகாதாரத்தை மேம்படுத்த இந்த ஆணையம் உதவியது. பல்வேறு மாநாடுகளையும் இது |
கூட்டியது. போதைப் பொருள்தடுப்பு. குடியானவர் முன்னேற்றம் போன்றவற்றில் பன்னாட்டுக் கழகம் பெரும்பணிகளை ஆற்றியுள்ளது. பன்னாட்டுக் கழகத்தின் தோல்விக்கான காரணங்கள் உலக அமைதியை ஏற்படுத்தும் தலையாய் கடமையில் பன்னாட்டுக் கழகம் தோல்வி கண்டது. இருபதாண்டுகள் பன்னாட்டுக் கழகம் அமைதிக்கான முயற்சிகளை எடுத்தபோதிலும் , 1939 ல் மீண்டும் உலகப் போர் தோன்றியது. பன்னாட்டுக் கழகத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். அமெரிக்கா , சோவியத்ரஷ்யா போன்ற பெரும் நாடுகள் இதில் உறுபிப்பினராக இல்லை. இது முக்கிய குறைபாடாகும். |
பன்னாட்டுக் கழகத்தின் சட்ட ஆவணம் அமைதி ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது மிகவும் துரதிர்ஷ்டமானதாகும். அவையிரண்டும் தனித்தனியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வெர்சேல்ஸ் உடன்படிக்கையை பல நாடுகள் பழிவாங்கும் உடன்படிக்கை என்று கருதி அதனை ஏற்க மறுத்தன. உடன்படிக்கையை ஏற்காததால் பன்னாட்டுக் கழகத்தில் உறுப்பினராக முடியவில்லை. பெரிய நாடுகள் உறுப்பினராகாததால் கழகம் பலவீனமடைந்தது. ஜப்பான் , ஜெர்மனி , இத்தாலி ஆகிய நாடுகள் கழகத்தைவிட்டு வெளியேறின. இதனாலும் கழகம் வலிமையிழந்தது. முதல் உலகப்போரில் வெற்றிபெற்ற |
நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து , பிரான்சு ஆகியவை கழகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக உலக நாடுகளிடையே பரவலான கருத்து இருந்தது. எனவே , பன்னாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளை அந்த நாடுகள் சந்தேகத்துடன் நோக்கின. ஜெர்மனி போன்ற நாடுகளை வெற்றிபெற்ற நாடுகள் அவமானப் படுத்தின. பொருளாதார சீர்குலைவில் சிக்கித்தவித்த தருணத்தில் ஜெர்மனி போர் இழப்பீட்டை செலுத்தும்படி கட்டாயப் படுத்தப்பட்டது. எனவே , அமைதிக்கான சந்தர்ப்பம் ஏதும் காணப்படவில்லை. முதல் உலகப் போருக்குப்பின்பு இத்தாலி , ஜப்பான் , ஜெர்மனி ஆகிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகள் |
எழுச்சி பெற்றன. தூரகிழக்குப்பகுதியில் ஜப்பான் மஞ்சூரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் நிலையில் பன்னாட்டுக் கழகம் இல்லை. கண்டித்தால் கழகத்தைவிட்டு வெளியேறவும் ஜப்பான் தயாராக இருந்தது. இத்தாலியிலும் பாசிச சர்வாதிகாரம் தோன்றியது. குறுகிய தேசிய உணர்வை மக்களிடம் பரப்பியது. இத்தாலி அபிசீனியாவைக் கைப்பற்றியது. இதனை பன்னாட்டுக்கழகம் தட்டிக் கேட்டபோது , இத்தாலி அதிலிருந்து வெளியேறியது. வெர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி நடந்து கொள்ள ஜெர்மனியும் தயாராக இல்லை. அங்கு நாசிச சர்வாதிகாரம் எழுச்சி |
பெற்றது. போலியானதொரு தேசப்பற்றை ஹிட்லர் போதித்தார். பிற இனங்களைவிட ஜெர்மானிய இனம் உயர்ந்தது என்றும் அவர் கூறினார். ஆஸ்திரியா , போலந்து ஆகியவற்றின்மீது ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று கூறி அவற்றை ஹிட்லர் கைப்பற்றினார். இந்த செயலைத் தட்டிக் கேட்டதால் , ஜெர்மனி பன்னாட்டுக் கழகத்திலிருந்து வெளியேறியது. பன்னாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளில் சிறிய நாடுகள் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. பெரும் நாடுகள் மேற்கொண்டுவந்த ஆக்ரமிப்புகளை தட்டிக்கேட்கும் ஆற்றல் பன்னாட்டுக் கழகத்திற்கு இல்லை என அவை உணர்ந்தன. பொருளாதார |
சிக்கலில் இருந்த ஜெர்மனியை போர் இழப்பீட்டைத் தருமாறு பிரான்ஸ் வற்புறுத்தியதால். அந்நாட்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. வெய்மார் குடியரசு வீழ்ச்சியடைந்தது. இதனால் , ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். பன்னாட்டுக் கழகத்தின் தோல்விக்கு அவரது நடவடிக்கைகள் காரணமாயின. முதல் உலகப்போரின் முடிவில் பன்னாட்டுக் கழகம் உதயமானதை உலக நாடுகள் வரவேற்றன. ஆனால் அதன் உறுப்புநாடுகள் போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை. எனவே , தனது குறிக்கோளை கழகம் எட்டவில்லை. இரண்டாம் உலகப்போர் வெடித்தது. பன்னாட்டு கழகத்தின் |
சிதைவுக்குப்பிறகு ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்டது. பாடம் – 30 பாசிச , நாசிச கொள்கைகளின் எழுச்சி கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்தி 1. இத்தாலியில் பாசிசத்தின் எழுச்சியும் அதற்கான காரணங்களும். 2. முசோலினியின் அயல்நாட்டுக் கொள்கை 3. ஜெர்மனியில் நாசிசத்தின் எழுச்சியும் அதற்கான காரணங்களும் 4. ஹிட்லரின் அயல்நாட்டுக் கொள்கையும் அதன் விளைவுகளும். முசோலினியும் பாசிச இத்தாலியும் இத்தாலியில் பாசிசம் கொள்கை வளரக் காரணங்கள் பாரிஸ் அமைதி மாநாட்டில் இத்தாலி பெரும் எதிர்பார்ப்புகளோடு கலந்துகொண்டது. |
1915 ஆம் ஆண்டு நேச நாடுகளுடன் இத்தாலி ரகசியமாக செய்து கொண்ட லண்டன் உடன்படிக்கை அதற்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்தது. பாரிஸ் மாநாட்டில் , இத்தாலிய அமைச்சர் ஆர்லாண்டோ தமது கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் , அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன் லண்டன் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டார். ஏட்ரியாடிக் கடல்பகுதியிலிருந்த தீவுகள் , சில துருக்கிய மாகாணங்கள் மற்றும் பால்கன் பகுதியிலிருந்த அல்பேனியா ஆகியவற்றை இத்தாலி தமக்கு வேண்டுமென கோரியிருந்தது. இவையனைத்தும் நிராகரிக்கப்பட்டன. எனவே , பாரிஸ் அமைதி மாநாட்டில் இத்தாலிக்கு எந்த |
பயனும் கிட்டவில்லை. “ இத்தாலி போரில் வென்றது : ஆனால் அமைதியை இழந்தது. ” பொருளாதார நிலை முசோலினி முதல் உலகப்போரின்போது இத்தாலி தனது தேசிய வருமானத்தைவிட அதிகமாகவே பெருந்தொகையை செலவிட்டது. இதனால் அதன் பொருளாதாரம் சீர்குலைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இத்தாலிய அரசாங்கமே இதற்கு காரணம் என்று மக்கள் நம்பினார்கள். எனவே , மாற்று அரசாங்கத்தை அமைக்க அவர்கள் தயாராக இருந்தனர். இத்தகைய அதிருப்தியினால்தான் பாசிச கட்சி இத்தாலியில் தோன்றியது எனலாம். சோஷலிசம் பரவுதல் வேலையில்லாத திண்டாட்டம் , வறுமை , பணவீக்கம் |
, போன்ற காரணங்களால் சோஷலிச கருத்துக்கள் இத்தாலிய மக்களிடையே வேகமாகப் பரவியது. மார்க்சீய கோட்பாட்டாளர்கள் ‘ இத்தாலிய சோஷியல் டெமாகிரட் ’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வந்தனர். 1919 ஆம் ஆண்டு தேர்தலில் இக்கட்சி மொத்தமிருந்த 574 இடங்களில் 156 இடங்களில் வெற்றி பெற்றனர். இக்கட்சி இத்தாலியில் பாசிசம் வளர பேருதவியாக இருந்தது. முசோலினியின் எழுச்சி பாசிசக் கொள்கையை வகுத்தவர் பெனிடோ முசோலினி ஆவார். 1883 ஆம் ஆண்டு ஒரு இரும்புத் தொழிலாயிளின் மகனாகப் பிறந்த அவர் சோஷலிச கொள்கையை பெரிதும் கடைப்பிடித்தார். சிறுவயது |
முதலே சோஷலிச சித்தாந்தத்தில் அவர் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் பள்ளி ஆசிரியராகவும் , தொழிற்சங்கவாதியாகவும் பின்னர் பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். புரட்சி கருத்துக்களை பரப்பியதற்காக முசோலினி 1908 இல் சிறைப்படுத்தப்பட்டார். 1912 ல் சோஷலிச பத்திரிகையான அவந்தி என்ற ஏட்டின் பதிப்பாளரானார். முதல் உலகப்போர் தொடங்கியபோது இத்தாலிய அரசாங்கம் போரில் பங்கு பெறுவதில்லை என முடிவெடுத்தது. ஆனால் , இத்தாலி நேசநாடுகளுக்கு ஆதரவாக போரில் இறங்க வேண்டும் என முசோலினி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அதற்காக அவர் |
தண்டிக்கப்பட்டார். பின்னர் , நேச நாடுகளுக்கு ஆதரவாக இத்தாலி போரில் இறங்க வேண்டியதாயிற்று. இதனால் , முசோலினியின் புகழ் அதிகரித்தது. ஒரு வீரனாக முசோலினியும் போரில் கலந்துக்கொண்டார். 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சி நடைபெற்றது. ரஷ்ய புரட்சி இத்தாலிய மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இத்தாலிய கம்யூனிஸ்ட்களும் ஒரு பெரும்புரட்சிக்கு திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். போல்ஷ்விக்குளை கடுமையாக எதிர்த்த முசோலினி , கம்யூனிசத்துக்கு எதிராக ஒரு அரசியல் கட்சி தொடங்க முடிவுசெய்தார். 1919 மார்ச்சில் முசோலினியின் |
தலைமையில் பாசிச கட்சி தொடங்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் கருஞ்சட்டை அணிந்ததோடு கையில் ஆயுதமும் ஏந்தினர். கட்சிக்கொடியும் உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் உறுப்பினர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்களாக இருந்ததோடு முசோலினியை தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டனர். மிலானில் நடைபெற்ற பாசிச கட்சியின் முதலாவது மாநாட்டில் முசோலினி கட்சியின் சாசனத்தையும் திட்டங்களையும் அறிவித்தார் அவையாவன : - தொழிற்சாலைகளை தேசிய மயமாக்குதல் முதலாளித்துவவாதிகளிடமிருந்த அதிகப்படியான செல்வத்தை பறிமுதல் செய்தல். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை. - |
திருச்சபை சொத்துக்களை பறிமுதல் செய்தல் தொழிற்சாலைகளில் எட்டு மணி நேர வேலை ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல். பாசிச கட்சியின் இந்த கோரிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை வேகமாகப் பெருகியது. 1919 ல் , 17000 பேர் மட்டுமே பாசிச கட்சியில் உறுப்பினர்களாயிருந்தனர். 1922 ல் அது மூன்று லட்சம் பேராக அதிகரித்தது. சோஷலிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை பாசிச கட்சியினர் வலிந்து கைப்பற்றினர். 1922 அக்டோபரில் பாசிச கட்சி நேபிள்ஸ் நகரில் கட்சி மாநாட்டைக் கூட்டியது. அதில் |
கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமைச்சரவையில் பாசிச கட்சி உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளவேண்டும் ; சட்டமன்றங்களுக்கு புதிதாக தேர்தல் நடத்தவேண்டும் ; தீவிர அயலுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதே இந்த கோரிக்கைப்பட்டியலின் முக்கிய அம்சங்கள். இதனை இத்தாலிய அரசாங்கம் ஏற்க மறுத்தது. எனவே , முசோலினியின் தலைமையில் ரோம் நோக்கி மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. பேரணியினர் அனைத்து அரசு அலுவலகங்களையும் கைப்பற்றினர். இத்தாலியில் ராணுவ ஆட்சியைக் கொண்டுவருமாறு அரசர் மூன்றாம் விக்டர் இம்மானுவேலை |
அரசாங்கம் கேட்டுக் கொண்டது. இறுதியில் ஆட்சியமைக்குமாறு முசோலினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இத்தாலிய பிரதமராக முசோலினி முசோலினி செயல்திறம் படைத்த பிரதமராகத் திகழ்ந்தார். ஆட்சியை சீரமைக்க பல நடவடிக்கைகளை அவர் எடுத்தார் ; நேபிள்ஸ் , சிசிலி போன்ற பகுதிகளிலிருந்த கொள்ளையர்கள் நசுக்கப்பட்டனர். தொழிலாளர்களின் சமூக , பொருளாதார நிலைமைகள் மேம்பட்டன. தொழிற்சங்கள் கலைக்கப்பட்டன நாடாளுமன்றத்தின் அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டன. தலைவருக்கு நம்பிக்கையானவர்கள் மட்டுமே அமைச்சர்களாகவும் , அதிகாரிகளாகவும் |
நியமிக்கப்பட்டனர். திருத்தப்பட்ட புதிய சட்டங்களின்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன. தேசிய நாடாளுமன்றத்தில் பாசிச கட்சி அருதிப் பெரும்பான்மை பெற்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு எதிரிகளை ஒடுக்க முசோலினி சில நடவடிக்கைகளை எடுத்தார். உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பாசிச வழக்குரைஞர்கள் மட்டுமே வழக்குகளில் வாதாட அனுமதிக்கப்பட்டனர். 1926 ல் அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன. அமைச்சரவை அரசாங்க முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரம் |
வழங்கப்பட்டது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சர்வாதிகாரியாக முசோலினி ஒரே கட்சி , ஒரே தலைவர் என்பது பாசிச கட்சியின் அடிப்படைக் கொள்கையாகும். முசோலினிக்கு மக்களாட்சி முறையிலோ , பெரும்பான்மை ஆட்சியிலோ நம்பிக்கையில்லை. அரசின் எதேச்சாதிகாரத்தையே அவர் பெரிதும் நம்பினார். தனிமனித உரிமை என்பது ஏதும் இல்லை. மாறாக , அரசின் அதிகாரத்தையே தனிமனிதன் அங்கீகரித்து நடக்க வேண்டும் என்று அவர் கருதி , அதன்வழியாக தனது சர்வாதிகாரத்தை நிலைப்படுத்தினார். ஜெர்மனியில் நாசிசம் முதல் உலகப்போருக்குப்பின்பு ஜெர்மனி |
மற்றும் பிற முறியடிக்கப்பட்ட நாடுகள்மீது அமைதி உடன்படிக்கைகள் திணிக்கப்பட்டன. இதன் விளைவாக ஜெர்மனியில் தீவிர தேசியம் பொங்கியெழுந்தது. பொருளாதார சீர்குலைவும் அதைத்தொடர்ந்து எழுந்த சோஷலிச சக்திகளும் ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கும் நாசிச கொள்கைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. இத்தாலியிலும் , ஜப்பானிலும்கூட அதே நிலைமைகள் நிலவின. இதனால் தான் இந்த மூன்று நாடுகளுக்குமிடையே அச்சு ஒன்று உருவாகியது. ஹிட்லரின் ஆக்ரமிப்பு நோக்கம் கொண்ட அயலுறவுகொள்கை இரண்டாம் உலகப்போருக்கு இட்டுச் சென்றது. முதல் உலகப் போரின் முடிவில் |
ஜெர்மனி முதல் உலகப்போரின் இறுதிக்கட்டத்தல் ஜெர்மானிய அரசர் வில்லியம் தனது பதவியைத் துறந்தார். ஜெர்மனி ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. சோஷலிச டெமாகிரடிக் கட்சியின் தலைவரான எல்பர்ட் ஒரு தற்காலிக அரசை அங்கு அமைத்தார். பின்னர் அரசியலமைப்பு குழுவிற்கான தேர்தல் நடைபெற்றது. வெய்மார் நகரில் அரசியலமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே வெய்மார் அரசியலமைப்பு எனப்படுகிறது. அரசு ஆதரவாளர்களின் கிளர்ச்சி வெர்சேல்ஸ் உடன்படிக்கை ஜெர்மனியை தண்டிக்கும் விதத்திலும் , அவமானப்படுத்தும் |
விதத்திலும் அமைந்திருந்தது. ஜெர்மனி தனது நிலப்பகுதியில் பலவற்றை இழந்தது. ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. போர் இழப்பீட்டுத்தொகை பலமடங்கு நிர்ணயிக்கப்பட்டது. உலகப் போருக்கு ஜெர்மனியே காரணம் என்றும் கூறப்பட்டது. இதனால் , ஜெர்மானியரின் உணர்வுகள் பெரிதும் புண்பட்டன. வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதையே ஜெர்மனியின் ஒரு பிரிவினர் கடுமையாக எதிர்த்தனர். 1920 மார்ச் திங்களில் , டாக்டர் காப் என்பவரது தலைமையில் அரச ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் , இக்கிளர்ச்சி தோல்வியில் முடிந்தது. |
அரச ஆதரவாளர்கள் குடியரசு அரசாங்கத்திடம் சரணடைந்தனர். பின்னர் , லுடன்டார்ப் என்பவரது தலைமையில் இரண்டாவது கிளர்ச்சி நடைபெற்றது. இவருக்கு ஹிட்லர் பக்கபலமாக இருந்தார். லூடன்டாப் , ஹிட்லர் இருவருமே கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சிறை வாசத்தின் போதுதான் ஹிட்லர் தனது புகழ்பெற்ற ‘ மெய்ன் காம்ப் ’ அல்லது ‘ எனது போராட்டம் ’ என்ற நூலை எழுதினார். பிற்காலத்தில இந்த நூலே நாசிச கட்சியின் புனித நூலாகத் திகழ்ந்தது. பொருளாதார சிக்கல் போருக்குப் பிந்தைய காலத்தல் ஜெர்மனி கடும் |
நிதிநெருக்கடிக்கு ஆளாகியது. போர் இழப்பீட்டை செலுத்துவதற்காக அரசாங்கம் பெருந்தொகை கடன் வாங்க வேண்டியிருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வணிகம் முடங்கிப்போயிற்று. வரிச்சுமை அதிகரித்தது. நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கம் காகிதப் பணத்தை மேலும் அச்சிட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் , பணவீக்கம் ஏற்பட்டு பணத்தின் மதிப்பு குறைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது போர் இழப்பீடு வெர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி , போருக்குக்காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட ஜெர்மனி போர் நஷ்டஈடாக பெரும்தொகையை செலுத்த |
வேண்டியிருந்தது. போர் இழப்பீட்டுத் தொகை 660 மில்லியன் பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஜெர்மனியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. முதல் உலகப்போருக்கு ஜெர்மனி காரணம் இல்லை என்றும் போர் இழப்பீடாக இவ்வளவு பெரிய தொகையை ஜெர்மனி செலுத்த வேண்டியதில்லை என்றும் எதிர்பாளர்கள் வாதாடினர். டாஸ் திட்டம் ஜெர்மனியில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாக , போர் இழப்பீட்டை குறைக்க வேண்டும் என்று வெய்மார் குடியரசு நேச நாடுகளை கேட்டுக் கொண்டது. இதனால் அமெரிக்க நிதி நிர்வாக வல்லுனரான டாஸ் என்பவரின் தலைமையில் பத்து உறுப்பினர்கள் |
கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு வெர்சேல்ஸ் உடன்படிக்கையின் பிரிவுகளின் ஒருசில திருத்தங்களை செய்தது. ஜெர்மனியின் நிதிச்சுமை ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு மீண்டும் போர் இழப்பீட்டுப் பிரச்சினை தோன்றியபோது யங் குழு அறிவித்த திட்டத்தின்படி அதற்கு தீர்வு காணப்பட்டது. ஹிட்லரும் நாசிச ஜெர்மனியும் அடால்ப் ஹிட்லர் 1889 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். வறுமையின் காரணமாக அவர் முறையான கல்வி கற்க வாய்ப்பில்லாமல் போயிற்று. அவரை ஒரு அரசாங்க ஊழியராக்க வேண்டும் என |
அவரது தந்தை விரும்பினார். ஆனால் , ஹிட்லர் சிறுவயது முதலே கலையில் ஆர்வம் காட்டினார். தனது 18 வது வயதில் ஓவியம் மற்றும் கட்டிடக்கலை பயில்வதற்காக வியன்னா நகருக்கு சென்றார். வியன்னாவில் அவர் இருந்தபோது அங்கு வாழ்ந்த யூதர்களின் பழக்கவழக்கங்களை பார்க்க நேர்ந்தது. தனிப்பட்ட ஆளுமை , தேசியம் , இனவாதம் போன்றவற்றுக்கு யூதர்கள் தார்மீகமான எதிரிகள் என அவர் உணர்ந்தார். ஹிட்லர் மேலும் , யூதர்கள் மார்க்சீய கொள்கையை ஆதரிப்பதாகவும் கருதினார். இளம் வயதிலேயே ஹிட்லரிடம் யூத எதிர்ப்பு கருத்துக்கள் வேரூன்றின. ஜனநாயகத்தை எதிர்த்த |
ஹிட்லர் ஜெர்மானிய இனத்தின் மேன்மையில் அசையாத நம்பிக்கை கொண்டார். முதல் உலகப்போரின்போது , ஹிட்லர் ராணுவத்தல் சேர்ந்து போரில் பங்குபெற்றார். போரில் ஆற்றிய வீரச் செயல்களுக்காக ‘ இரும்புச் சிலுவை ’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. யூதர்களும் , கம்யூனிஸ்டுகளுமே ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் என ஹிட்லர் நம்பினார். தோல்விக்கு பழிவாங்கும் திட்டங்கள் அவர் மனதில் உதிக்கத் தொடங்கின. நாசிச கட்சி தனது திட்டங்களை செயல்படுத்துவதற்காக , ஹிட்லர் தேசிய சோஷலிச கட்சி அல்லது நாசிச கட்சியைத் தொடங்கினார். நாசிச கட்சியின் சின்னம் |
ஸ்வஸ்திகா 1932 ஆம் ஆண்டு வாக்கில் நாசிச கட்சியின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது. தனது கட்சியில் இளைஞர்களை கவர்ந்திழுப்பதற்கு ‘ ஹிட்லர் இளைஞர் கழகம் ’ என்ற அமைப்பையும் ஹிட்லர் தோற்றுவித்தார். இரண்டு ராணுவ அமைப்புகளையும் அவர் ஏற்படுத்தினார். பழுப்பு நிற சட்டை அணிந்த ஒரு அமைப்பினர் கைப்பட்டையில் சிகப்பு நிறத்தல் ஸ்வஸ்திகா சின்னத்தை பொறித்திருந்தனர். மற்றொரு பிரிவினர் ‘ கருஞ்சட்டையினர் ’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் நாசிச கட்சியின் தலைவர்களுக்கு பாதுகாவலர்களாக இருந்தனர். 1932 ல் ஹிட்லர் அதிபர் பதவிக்கு |
போட்டியிட்டார். ஆனால் ஹிண்டன்பர்க் என்பவருக்கு எதிராக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சி நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் , அரசியலமைப்பு விதிகளின்படி ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நாசிச கட்சி ஆட்சியில் அமர்ந்தது. விரைவில் ஹிட்லர் நாசிச கட்சியின் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டு அதன் தலைவர்கள் கைது |
செய்யப்பட்டனர். மக்களின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. வெய்மார் குடியரசு முடிவுக்கு வந்தது. ஹிட்லர் மூன்றாவது ‘ ரெய்ச் ’ அமைக்கப்பட்டதாக அறிவித்தார். நாசிச கட்சியின் கொடியே தேசியக் கொடியாயிற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன் அதிகாரங்கள் ஹிட்லருக்கு மாற்றப்பட்டன. யூதர்களுக்கு எதிரான கொள்கை தங்களது செல்வ வளத்தாலும் , கல்வித் தகுதியாலும் யூதர்கள் ஜெர்மனியில் சலுகைபெற்ற வர்க்கத்தினராக வாழ்ந்து வந்தனர். ஹிட்லர் அவர்களை தேச விரோதிகள் எனக் கருதினார். யூதர்களை ஒடுக்க பல நடிவடிக்கைகளை அவர் எடுத்தார். |
யூதருக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன. ஜெர்மானிய குடியுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. யூதர்களை பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியில் புறக்கணிப்பதற்காக அவர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றினார். ராணுவ சீர்திருத்தங்கள் ஜெர்மானிய தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிட்லர் ராணுவத்தை சீரமைத்தார். ஜெர்மானிய இனத்தவர் மட்டுமே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஒரு எதேச்சாதிகார தன்மையுடன்கூடிய அரசை ஏற்படுத்தி அதன்மூலம் ஆக்ரமிப்பு நோக்கமுள்ள அயலுறவுக்கொள்கையை பின்பற்றத் தொடங்கினார். ஹிட்லரின் அயலுறவுக் கொள்கை |
ஹிட்லர் , வெர்சேல்ஸ் உடன்படிக்கையை ஏற்க மறுத்தார். அது ஒரு திணிக்கப்பட்ட உடன்படிக்கை என்பதால் அவமானச் சின்னமாகக் கருதினார். ஹிட்லரது இக்கருத்தை ஜெர்மானிய மக்களும் ஆதரித்து , அவரையே தங்களது தலைவராக ஏற்றனர். அவரது அயலுறவுக் கொள்னையின் முக்கிய அம்சங்களாவன. பன்னாட்டுக் கழகத்தைவிட்டு வெளியேறுதல் 1932 பிப்ரவரி 3 ஆம் நாள் பன்னாட்டுக் கழகத்தின் ஆயுதக் குறைப்பு மாநாட்டிலிருந்த வெளியேறிய ஹிட்லர் பன்னாட்டுக் கழகத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். ஜெர்மனியின் ராணுவத்தை மீண்டும் பெருக்கத் தொடங்கினார். ஆயுதங்களைப் |
பெருக்குதல் 1935 மார்ச் 16 ஆம் நாள் ஜெர்மானியர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தார். இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு இணையானதொரு விமானப் படையை ஜெர்மனி பெறவேண்டும் என்று அவர் கருதினார். சுய பாதுகாப்புக்காகவே ராணுவ வலிமையை பெருக்குவதாக அவர் கூறிக்கொண்டார். ரைன்லாந்துப் பகுதியை ராணுவ மயமாக்குதல் வெர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி , ரைன்லாந்துப் பகுதி ராணுவமற்ற பகுதியாகப் பராமரிக்கப்பட வேண்டும். 1936 மார்ச் 7 ஆம் நாள் ஹிட்லர் ரைன்லாந்தின் மையப்பகுதிக்கே ராணுவத்தை அனுப்பியதோடு அங்கு |
ராணுவக் கட்டுமானங்களையும் ஏற்படுத்த தொடங்கினார். ஜெர்மனியின் இந்த நடவடிக்கையை பிரான்சு எதிர்த்தது. ஆனால் , இங்கிலாந்து அமைதியுடன் ஹிட்லரின் நடிவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தது. இதனால் , பிரான்சும் இங்கிலாந்தும் இணைந்து ஹிட்லரின் ஆக்ரமிப்பு நடவடிக்கைக்கு முடிவு கட்டுவதற்கான வாய்ப்பை நழுவ விட்டன. ஸ்பானிய உள்நாட்டுப்போர் 1931 ஆம் ஆண்டு ஸ்பெயினில் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது. 1936 ல் ஜெனரல் பிராங்கோ என்பவரது தலைமையில் பழமைவாதிகள் குடியரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரைத் தொடங்கினார்கள். ஜெர்மனியும் , |
இத்தாலியும் பிராங்கோவை ஆதரித்தன. குடியரசை ரஷ்யா ஆதரித்தது. குடியரசு வீழ்த்தப்பட்டு பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. ஸ்பானிய உள்நாட்டுப் போரின் விளைவாக ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே நட்புறவு மேலும் நெருக்கமடைந்து உடன்படிக்கைக்கும் இட்டுச் சென்றது ரோம் – பெர்லின் டோக்கியோ அச்சு 1936 அக்டோபரில் இவ்விரு நாடுகளும் ஒரு உடன்படிக்கையை செய்துகொண்டனர். இதன்படி , இத்தாலியின் அபிசினியா ஆக்ரமிப்பை ஜெர்மனி ஏற்றது. ஜெர்மனி ஆஸ்திரியாவை இணைத்துக் கொண்டதை இத்தாலி ஏற்றது. ஹிட்லர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை |
வெறுத்தார். எனவே , ரஷ்யாவின் எதிரியான ஜப்பானுடன் 1936 நவம்பரில் கம்யூனிச எதிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். 1937 நவம்பரில் இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டது. இந்த மூவர் கூட்டிணைவே ரோம் பெர்லின் டோக்கியோ அச்சு என அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து , பிரான்சு , ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்த அச்சு அமைக்கப்பட்டது. இதுவே , இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. அவர் திருச்சபையை பெரிதும் ஆதரித்தார். பாசிச கட்சியின் சின்னமாக ஸ்வஸ்திகா இருந்தது. பாசிச கட்சி உறுப்பினர்கள் சிவப்பு வண்ண சட்டை |
அணிந்தனர். 1. ஹிட்லரின் ஆக்ரமிப்பான அயலுறவுக்கொள்கை இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்தது. ‘ மெய்ன் கேம்ப் ’ என்ற நூலை ஹிட்லர் எழுதினார். டாக்டர் காப் என்பவரது தலைமையில் ஸ்பானிய உள்நாட்டுப்போர் தொடங்கியது. சிறு குறிப்பு வரைக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) பாசிசம் நாசிசம் ரோம் - பெர்லின் டோக்கியோ அச்சு சுருக்கமான விடை தருக. ( 100 வார்த்தைகள் ) இத்தாலியின் பாசிசம் தோன்றி வளர்ந்ததற்கான காரணங்களைக் கூறுக. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கான காரணங்கள் யாவை ? ஹிட்லரின் அயல்நாட்டுக் கொள்கையை விவாதி. கற்றல் |
நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் அறிந்து கொள்வது பாடம் – 31 இரண்டாம் உலகப்போர் ( 1939-1945 ) 1. இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் 2. சர்வாதிகாரத்தின் எழுச்சியும் போருக்கான பிற காரணங்களும். 3. இரண்டாம் உலகப் போரின் போக்கு 4. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் பாரிஸ் ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டன. 1918 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் முடிவுக்கு வந்தது. 1919 அமைதி மாநாடு நடைபெற்றது. வெர்சேல்ஸ் உடன்படிக்கை உள்ளிட்ட பல உடன்படிக்கைகள் இம்மாநாட்டிற்கு வெற்றிபெற்ற நாடுகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன என்பது |
குறிப்பிடத்தக்கது. போரின் லாபத்தை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு வெற்றி பெற்ற நாடுகள் கூட்டிய கூட்டமாகவே இம்மாநாடு திகழ்ந்தது. தோல்வியடைந்த நாடுகள் மிக மோசமாக நடத்தப்பட்டன. உலகில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் முயற்சியால் உலக நாடுகளுக்கிடையே எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு பன்னாட்டுக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் உலக அமைதியை நிலைநாட்ட பன்னாட்டுக் கழகம் தவறியது. இதனால் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் போன்ற நாடுகளில் சர்வாதிகார |
அரசுகள் தோன்றின. ரோம் , பெர்லின் , டோக்கியோ அச்சு உருவாகி இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்தது. இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. பாரிஸ் அமைதி மாநாட்டுக்கு அது அழைக்கப்படவில்லை. கடுமையான மற்றும் அவமானகரமான உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி அது வற்புறுத்தப்பட்டது. ஜெர்மானிய நிலப்பகுதிகள் பல அதனிடமிருந்து பறிக்கப்பட்டன. அதன் குடியேற்றங்களும் பறிமுதல் கடற்படை முற்றிலும் கலைக்கப்பட்டது. ராணுவ வலிமை பெரிதும் குறைக்கப்பட்டது. ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த வெய்மார் குடியரசு |
போருக்குப்பின் செய்யப்பட்டன. தோன்றிய பிரச்சினைகள் எதையும் சமாளிக்க இயலாமல் தடுமாறியது. ஜெர்மனிக்கு நேர்ந்த அவமானத்தை துடைத்தெறிய அதன் மக்கள் துடித்தனர். எனவே , இரண்டாம் உலகப்போரை பழிவாங்குவதற்கான ஊன்றப்பட்டிருந்தன. போர் கூறலாம். இரண்டாம் உலகப் விதைகள் வெர்சேல்ஸ் என்றும் போருக்கான உடன்படிக்கையில் வெர்சேல்ஸ் உடன்படிக்கை சர்வாதிகாரத்தின் எழுச்சி சர்வாதிகார இரு உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் அரசுகள் தோன்றின. இக்காலத்தை சர்வாதிகாரிகளின் காலம் என்றும் அழைத்தனர். ஜெர்மனி , இத்தாலி , ஸ்பெயின் |
மற்றும் ஆசியாவில் ஜப்பான் ஆகிய நாடுகளில் சர்வாதிகாரம் வேரூன்றியது. ஜெர்மனியில் வெய்மார் குடியரசு பலவீனமாகவே காணப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நாசிசக்கட்சியின் தலைவரான ஹிட்லர் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார். ஆக்கிரமிப்பு கொள்கையைப் பின்பற்றிய அவர் ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேகியா நாடுகளை கைப்பற்றினார். பின்னர் அவர் போலந்தை தாக்கியபோது இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இத்தாலியிலும் கிட்டத்தட்ட இதே நிலைமை காணப்பட்டது. பாரிஸ் அமைதி மாநாட்டில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக |
இத்தாலி கருதியது. முசோலினி தனது பாசிச கட்சியை அங்கு தொடங்கி 1922 ல் ஆட்சியைக் கைப்பற்றி தனது சர்வாதிகார ஆட்சியை நிறுவினார். அவரும் ஆக்கிரமிப்பான அயலுறவுக் கொள்கையையே பின்பற்றினார். ஸ்பெயின் மற்றும் ஜப்பானிலும் சர்வாதிகார உணர்வு தலையெடுத்தது. ஸ்பெயினில் தளபதி பிராங்கோ அங்கிருந்த குடியரசு ஆட்சியை கவிழ்த்துவிட்டு தனது சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தனார். இதற்கு ஹிட்லர் மற்றும் முசோலினியின் படைகள் அவருக்கு பக்கபலமாக இருந்தன. ரோம் பெர்லின் டோக்கியோ அச்சு உடன்படிக்கையை உருவாக்கியதன் மூலம் ஜப்பான் , ஹிட்லருக்கும் |
முசோலினிக்கும் நண்பனாயிற்று. இந்த உடன்படிக்கை உலக அமைதிக்கு கேடு விளைவித்து இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கும் காரணமாயிற்று. ராணுவ மயமாக்கல் முதலாம் உலகப் போருக்குப்பிறகு ஆயுதக் குறைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காததால் புதிய போர் மூண்டது. பாரிஸ் அமைதி மாநாட்டில் ஜெர்மனியின் படைபலம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. அதேசமயம் , வெற்றிபெற்ற நாடுகளின் படைபலத்தையும் குறைக்குமாறு ஜெர்மனி கேட்டுக்கொண்டது. அதற்கு நேச நாடுகள் உடன்படாமல் போகவே , ஹிட்லர் தமது ஆட்சிக்காலத்தில் ஜெர்மனியின் படைவலிமையைப் |
பெருக்கினார். ஆயுதங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதாலும் , ராணுவ மயமாக்கத்தாலும் இரண்டாம் உலகப்போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பேரரசுக் கொள்கை இரண்டாம் உலகப்போருக்கு பேரரசுக் கொள்கையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. முதல் உலகப் போரில் காணப்பட்ட பேரரசு ஆதிக்க உணர்வே இப்போதும் காணப்பட்டது. நேச நாடுகளைவிட பேரரசு ஆதிக்க உணர்வை அதிகம் பெற்றிருந்த ஜெர்மனியும் இத்தாலியும் பாரிஸ் அமைதி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை துச்சமெனக் கருதின. எல்லைகளை இரு நாடுகளும் தங்களது நாட்டின் குறிக்கோளாகக் கொண்டு |
செயல்பட்டன. ரைன்லாந்து , ஆஸ்திரியா , மெமல் , செக்கோஸ்லோவேகியா போன்ற பகுதிகளை ஹிட்லர் ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார். ஜப்பான் மஞ்சூரியாவைத்தாக்கி அதனை சீனாவிடமிருந்து அபகரித்துக் விரிவுபடுத்துவதையே கொண்டது. அபிசீனியாவைக் கைப்பற்றிய முசோலினி தொடர்ந்து ஆக்ரமிப்பு நடவடிக்கைகளையே பின்பற்றினார். குடியேற்றக் கொள்கை ஐரோப்பிய நாடுகள் , தங்களது தொழில் வளர்ச்சிக்காக , கச்சாப் பொருட்களைப் பெறுவதற்கும் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகள் வேண்டும் என்பதற்காகவும் குடியேற்றங்களை ஏற்படுத்தும் போட்டியில் ஈடுபட்டனர். முதல் |
உலகப் போருக்குப் பின்பும்கூட இந்தப்போக்கு நீடித்தது. பாரிஸ் அமைதி மாநாட்டில் ஜெர்மனியின் குடியேற்றங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நேச நாடுகளின் இந்த நடவடிக்கையை இத்தாலியும் விரும்பவில்லை. ஆசியாவில் வலிமைமிகுந்த நாடாக விளங்கிய ஜப்பானும் தனது வளங்களைப் பெருக்க முனைந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் மூன்றும் ஆக்ரமிப்பை அடிப்படையாகக் கொண்ட அயலுறவுக் கொள்கையை பின்பற்றின. அவர்களது ஆக்ரமிப்பு நடவடிக்கைகள் இறுதியில் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டன. பன்னாட்டுக் கழகத்தின் தோல்வி முதல் உலகப் |
போருக்குப் பிறகு உலக அமைதியைக்காக்கவும் , நாடுகளுக்கிடையே எழும் சிக்கல்களை சுமூகமாகத் தீர்க்கவும் பன்னாட்டுக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் , கழகத்தின் உறுப்பு நாடுகளே அதன் கோட்பாடுகளை மதித்து நடக்கவில்லை. கழகத்தின் விதிகளை மீறிய நாடுகள் , எவ்வித தண்டனையுமின்றி கழகத்தைவிட்டு வெளியேறவும் செய்தன. எடுத்துக்காட்டாக , மஞ்சூரியாவை ஜப்பான் தாக்கியபோதோ , அபிசீனியாமீது இத்தாலி படையெடுத்தபோதோ பன்னாட்டுக் கழகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஹிட்லரது நடவடிக்கைகள் கழகத்துக்கு பெரும் சவாலாகவே அமைந்தன. ஆக்ரமிப்பு |
நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாடுகளைத் தட்டிக்கேட்க முடியாத பன்னாட்டு கழகத்தின் தோல்வியே இரண்டாம் உலகப் போருக்கு முக்கிய காரணமாயிற்று. தேசிய சிறுபான்மையினரின் மனக்குறை நேச நாடுகள் தங்களை சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பாதுகாவலர்களாகக் கூறிக்கொண்ட போதிலும் , அவற்றை அந்த நாடுகள் மதித்து நடக்கவில்லை. மத்திய ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகளில் தேசிய சிறுபான்மையினர் பிரச்சனை நீடித்தது. இந்த சிறுபான்மையினரின் வெறுப்பும் மனக்குறையுமே பூசல்களுக்கு வழிவகுத்தன. தேசிய சிறுபான்மையினரை ஒன்று சேர்க்கும் விதத்தில்தான் ஜெர்மனி , |
ஆஸ்திரியா , சுடட்டன்லான்ந்து நாடுகளை இணைத்துக் கொண்டதோடு , பின்னர் போலந்தின்மீதும் தாக்குதல் நடத்தியது. தேச நாடுகளுக்கிடையிலான வேறுபாடுகள் நேச நாடுகளுக்கிடையேயும் கூட்டுறவு நிலவவில்லை. ஜெர்மனியை சமாதானப் படுத்துவதையே இங்கிலாந்து நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. ஜெர்மனி குறித்த பிரான்சு கொண்டிருந்த அச்சத்தை இங்கிலாந்து ஏற்கவில்லை. பன்னாட்டுக் கழகம் உருவாகக் காரணமாக இருந்த அமெரிக்கா அதில் உறுப்பினராகச் சேரவில்லை. நேச நாடுகளுக்கிடையே நிலவிய இத்தகைய வேறுபாடுகளால் வலிமைபெற்று வந்த சர்வாதிகாரிகளைக் கட்டுப்படுத்த |
முடியாமல் போயிற்று. போரின் போக்கு பாரிஸ் அமைதி மாநாட்டு முடிவுகளின்படி போலந்து சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. கிழக்கு பிரஷ்யா ஜெர்மனியிடமிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால் ஹிட்லர் கிழக்கு பிரஷ்யாவை மீண்டும் ஜெர்மனியுடன் இணைக்க விரும்பினார். இதனால் , 1939 செப்டம்பர் 1 - ஆம் நாள் ஹிட்லர் போலந்துமீது தாக்குதல் தொடுத்தார். செப்டம்பர் 3 ஆம் நாள் இங்கிலாந்து ஜெர்மனி மீது போர் அறிவித்தது. இவ்வாறு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அட்லாண்டிக் மாக்கடல் இரண்டாம் உலகப்போரின் போது நார்வே ஐரோப்பா போர்ச்சுகல் வடகடல் ஆலாந்து |
பிரான்ஸ் ) ஸ்பெயின் | டென்மார்க் ஜர்மனி போலந்து சோவியத் சமதர்ம குடியரசு செக்கஸ்லோவாக்கியா ஆஸ்திரியர் அங்கேரி ரூமேனியா யூக்கோசலேவியா. மைய நிலக்கடல் PMG கரியங் கருங்கடல் ஜெர்மனி நடுநிலை நாடுகள் ஜெர்மனியின் சார்பு நாடுகள் அச்சு நாடுகளால் கைப் 21111 பற்றப்பட்ட இடங்கள் ஜெர்மனியின் எதிர்ரப்பு நாடுகள் 1940 ஏப்ரலில் ஜெர்மனி டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளைக் கைப்பற்றியது. 1940 மே மாதத்தில் ஹாலந்தும் பெல்ஜியமும் வீழ்ந்தன. 1940 ஜீன் மாதம் ஜெர்மனி பிரான்சைத் தாக்கி அதனையும் கைப்பற்றியது. வட ஆப்ரிக்காவில் இத்தாலி |
பிரிட்டிஷ் துருப்புக்களை எதிர்கொண்டது. ஜெர்மனியின் உதவியுடன் முசோலினி கிரீஸ் நாட்டைத் தாக்கி கைப்பற்றிக் கொண்டார். யுகோஸ்லேவியா மற்றும் கிரீட் ஜெர்மானியரால் கைப்பற்றப்பட்டது. பிரான்ஸ் வீழ்ச்சியடைந்தபின் பிரிட்டன் தனித்து விடப்பட்டது. ஜெர்மனி பிரிட்டன்மீது தொடர்ந்து குண்டுமழை பொழிந்தது. ஆனால் வின்ஸ்டன் சர்ச்சிலின் சீரிய தலைமையினால் பிரிட்டன் காப்பாற்றப்பட்டது. ஜெர்மனியால் பிரிட்டனைக் கைப்பற்ற முடியவில்லை. இத்தருணத்தில் , போர் மறுப்பு ஒப்பந்தத்தையும் மீறி , ஜெர்மனி , சோவியத் யூனியன்மீது தாக்குதல் நடத்தி |
மாபெரும் தவறிழைத்தது. ஸ்டாலின் கிராட் நகரில் நடைபெற்ற போர் மிகமுக்கியமானது. ஐந்து மாதங்கள் அப்போர் நீடித்தது. இரண்டு மில்லியன் மக்கள் , 2000 ராணுவ டாங்குகள் , 2000 போர் விமானங்கள் இதில் ஈடுபட்டன. இருப்பினும் ஜெர்மனியின் படைகள் விரட்டப்பட்டன. 1943 பிப்ரவரியில் சுமார் 90,000 ஜெர்மானிய வீரரர்கள் சரணடைந்தனர். இது போரின் முக்கியமான தொரு திரும்புமுனையாகும். உயர் இதனால் , 1941 டிசம்பரில் ஜப்பான் , அமெரிக்க கப்பல் படைத் தளமான பெர்ல் ஹார்பரைத் தாக்கியது. அமெரிக்காவும் போரில் இறங்கியது. பசிபிக் பகுதியின் படைத்தளபதியாக |
ஜெனரல் மெக் ஆர்தர் தென்கிழக்கு ஆசியப் பகுதியின் நியமிக்கப்பட்டார். தளபதியான மவுண்ட்பேட்டன் பிரபு ஜப்பானியப் படைகளை பர்மாவை விட்டு விரட்டியடித்தார். பெர்ல் துறைமுகம் ஆப்ரிக்க முனையில் , அமெரிக்கா அபிசீனியாவைக் கைப்பற்றியது. இத்தாலிக்கு மான்ட்கோமரி சொந்தமான சோமாலியாலாந்தும் கைப்பற்றப்பட்டது. பிரிட்டிஷ் படைத்தளபதி ஜெனரல் ஜெர்மனியரிடமிருந்து லிபியாவைக் கைப்பற்றினார். மேலும் , அவர் டிரிபோலியைக் கைப்பற்றி டினிசியாவுக்குள் நுழைந்தார். 1942 ல் அல்ஜீரியா வீழ்ந்தது. 1943 ல் பிரிட்டிஷ் அமெரிக்கப் படைகள் சிசிலியைக் |
கைப்பற்றின. வட ஆப்ரிக்காவிலிருந்து ஜெர்மானிய இத்தாலியப் படைகள் விரட்டப்பட்டன. பின்னர் இத்தாலி மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதற்குள் இத்தாலியில் கலகம் வெடித்தது. முசோலினி கைது செய்யப்பட்டார். ஆனால் ஜெர்மனியரின் உதவியுடன் அவர் தப்பினார். 1943 செப்டம்பரில் இத்தாலி நிபந்தனை ஏதுமின்றி சரணடைந்தது. 1945 ஏப்ரலில் முசோலினி இத்தாலியர்களாலேயே பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 1944 ல் நேச நாடுகளின் படைகள் பிரான்சுக்குள் நுழைந்து அங்கிருந்த ஜெர்மானியப் படைகளை விரட்டியடித்தன. பின்னர் , தென்மேற்கிலிருந்து ஜெர்மனியை நேச |
நாடுகளின் படைகள் தாக்கின. கிழக்கிலிருந்து ரஷ்யா ஜெர்மனிமீது தாக்குதல் தொடுத்தது. 1945 மே இரண்டாம் நாள் ரஷ்யப் படைகள் பெர்லின் நகருக்குள் நுழைந்தன. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஜெர்மனி சரணடைந்தது.ஜெர்மனி சரணடைந்தபிறகும் கூட ஜப்பான் போரைத் தொடர்ந்து நடத்தியது. 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமாவிலும் , ஒன்பதாம் நாள் நாகசாகியிலும் அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசியது. இதனைத் தொடர்ந்து 1945 ஆகஸட் 14 ஆம் நாள் ஜப்பான் சரணடைந்தது. இத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. இப்போரில் 13 மில்லியன் ஐரோப்பியர்கள் |
கொல்லப்பட்டனர். 17 மில்லியன் சிவிலியன்கள் இறந்தனர். பெரும் நகரங்கள் அழிக்கப்பட்டன. வேளாண்மை சீர்குலைந்தது. உலகமே பல்வேறு நேரடி அல்லது மறைமுகமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் இரண்டாம் உலகப் போரின் முக்கிய விளைவு குடிறயேற்றங்கள் விடுதலையாகும். ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமான குடியேற்றங்கள் விடுதலையடைந்தன. பல துருவ உலகம் என்ற கோட்பாடு மறைந்து இரு அணிகளாக உலக நாடுகள் பிரிந்தன. அமெரிக்காவும் , சோவியத் யூனியனும் வல்லரசுகளாயின. இதனால் , |
கெடுபிடிப்போர் என்ற கோட்பாடுப் போர் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையே தொடங்கியது. பாடம் – 32 ஆசிய நாடுகளின் வளர்ச்சி : சீனாவும் ஜப்பானும் கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. நவீன சீனாவின் எழுச்சி. 2. சீன மக்கள் குடியரசின் தோற்றம் 3. நவீன ஜப்பானின் எழுச்சி 4. பெரும் பொருளாதார வலிமை பெற்ற நாடாக ஜப்பான் உருவாதல். நவீன சீனாவின் எழுச்சி ஆசியக் கண்டம் , தெற்காசியா , தென்கிழக்கு ஆசியா , கிழக்காசியா , மேற்காசியா என பொதுவாகப் பிரிக்கப்படுகிறது. சீனாவும் ஜப்பானும் கிழக்காசியாவில் |
அமைந்துள்ளன. 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள மிகப் பெரிய நாடு. உலகில் நான்காவது பெரிய நாடாகவும் இது விளங்குகிறது. ஆசியாவிலுள்ள 14 நாடுகள் இதன் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. உலகின் மிகப் பழைய நாகரீகங்களில் ஒன்றாக சீனா திகழ்ந்தது. சீனாவை பல்வேறு அம்சங்கள் ஆட்சிபுரிந்தன. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் சீனாவை மஞ்சு வம்சம் ஆட்சி செய்தது. மஞ்சுவம்ச ஆட்சியின்போது சீனா தனது வலிமையை இழந்தது. ஆசியாவின் நோயாளி என்றும் அது அழைக்கப்படலாயிற்று. மேற்கத்திய நாடுகளின் குடியேற்றமாகவும் |
அது மெல்ல மாறியது. சீனா ஐரோப்பியர்களை ‘ சிகப்பு காட்டுமிராண்டிகள் ’ என அழைத்தது. ஐரோப்பிய வணிகர்கள்மீது சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஐரோப்பிய வணிகத்தை கட்டுப்படுத்திய சீன வணிகர்கள் கோஹாங் என்று அழைக்கப்பட்டனர். இதனை ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு வணிகர்கள் விரும்பவில்லை. எனவே , சீன வணிகர்களிடையே அபினிப்பழக்கத்தை மெல்ல மெல்ல ஐரோப்பிய வணிகர்கள் புகுத்தினர். காலப்போக்கில் சீனாவில் அபினியை பெருமளவு இறக்குமதி செய்யத் தொடங்கினர். அபினிப்பழக்கம் சீனாவில் பரவியது. இதனைக் கட்டுப்படுத்த சீன அரசு கடும் நடவடிக்கை |
எடுத்தது. அபினி வர்த்தகம் தடை செய்யப்பட்டது. சீன அதிகாரி லின்சேசு என்பவரது கடும் நடிவடிக்கைகளால் முதல் அபினிப்போர் ( 1839 1842 ) ஏற்பட்டது. இதில் இங்கிலாந்து சீனாவை முறியடித்தது. இப்போர் நான்கிங் உடன்படிக்கைப்படி முடிவுக்கு வந்தது. 1856 ல் இரண்டாம் அபினிப்போர் நடைபெற்றது. இப்போரில் , இங்கிலாந்து , பிரான்ஸ் , அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சீனாவுக்கு எதிராகப் போரிட்டன. 1860 ல் ‘ டியன்ட்சின் உடன்படிக்கைப்படி ’ இப்போர் முடிவுக்கு வந்தது. லின்சேசு இவ்வாறு , மேற்கத்திய நாடுகள் சீனாவில் தங்களது ஆதிக்கத்தை |
ஏற்படுத்தின. சீனாவின் பகுதிகள் மேற்கத்திய நாடுகளால் பல பொருளாதார மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. இதனையே “ சீன முலாம்பழம் துண்டுகளாக்கப்பட்டதாகக் ” கூறுவர். மஞ்சு வம்சத்தின் தோல்வி சீனாவின் தைப்பிங் கலகம் ( 1851 - 1864 ) ஏற்படுவதற்கு காரணமாயிற்று. இதற்குத் தலைமையேற்றவர் சியூ சுவான். ஆனால் , கலகம் ஒடுக்கப்பட்டது. 1860 முதல் 1908 ஆண்டு அவர் மறையும் வரை சீனா பேரரசி சுசீயின் கட்டுப்பாட்டில் இருந்தது. சுசீயின் பிற்போக்கான ஆட்சி சீனாவில் புரட்சி இயக்கங்கள் தோன்ற காரணமாயிற்று. 1894 - 1895 ல் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் |
இடையே போர் மூண்டது. இது முதல் சீன - ஜப்பானியப் போர் எனப்படுகிறது. கொரியாவை யார் கட்டுப்படுத்துவது என்பதற்காக இப்போர் நடந்தது. இப்போரில் சீனா தோல்வியைத் தழுவியது. இதனால் பாக்சர் கலகம் தோன்றியது. சீனாவில் அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இக்கலகம் நடைபெற்றது. மேலை நாடுகளின் உதவியுடன் இக்கலகமும் நசுக்கப்பட்டது. இத்தருணத்தில்தான் சீனாவின் தனிப்பெரும் தலைவராக அறிவாற்றால் மிக்க டாக்டர் சன்யாட்சென் தோன்றினார். சீனாவின் ' விடிவெள்ளி ' என இவர் போற்றப்பட்டார். இளம் புரட்சியாளர்களை இவர் ஒன்று திரட்டி 1911 ஆம் ஆண்டு |
சீனப் புரட்சிக்கு வழிவகுத்தார். இப்புரட்சியின் விளைவாக , சீனாவில் மஞ்சுவம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய கொடி , புதிய நாட்காட்டி நடைமுறைக்கு வந்தன. முதன்முறையாக சீனா ஒரு குடியரசாகியது. யுவான் ஷிகாய் என்பவர் சீனக்குடியரசின் அதிபராகப் பதவியேற்றார். டாக்டர் சன்யாட்சென் முதல் உலகப் போரின்போது , சீனாவிடமிருந்து ஷான்டுங் மாகாணத்தை ஜப்பான் கைப்பற்றியது. போருக்குப்பின் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் ஷான்டுங் மாகாணத்தை திரும்பவும் பெற்றுத்தருமாறு சீனா கோரிக்கை விடுத்தது. ஆனால் , நேச நாடுகள் ஷான்டுங் மாகாணத்தை |
ஜப்பானுக்கே கொடுத்தது. இதன் விளைவாக சீனாவில் ‘ மே நான்காம் நாள் இயக்கம் ’ தொடங்கியது. மீண்டும் டாக்டர் சன் யாட்சென் சீனாவை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். கோமிண்டாங் கட்சியை அவர் தொடங்கினார். ரஷ்யாவின் உதவியுடன் சீனாவில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர விரும்பினார். இந்த காலக்கட்டத்தில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. மாசேதுங் மற்றும் சூயன்லாய் ஆகியோர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களாவர். 1924 ல் டாக்டர் சன் யாட் சென் மறைந்தார். கோமின்டாங் கட்சியின் தலைமைப் பொறுப்பை சியாங் கே |
ஷேக் ஏற்றார். தொடக்கத்தில் கோமின்டாங் கட்சிக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் நல்லுறவு இருந்தது. ஆனால் , விரைவில் இருவரும் எதிரிகளாயினர். சியாங் கே ஷேக் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியை ஒழிக்க விரும்பினார். மாவோ வட சீனாவிற்கு நெடும் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கம்யூனிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினார். 1945 ல் கோமின்டாங் கட்சியினருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது. இறுதியில் 1949 அக்டோபரில் மாவோ சீன மக்கள் குடியரசை நிறுவினார். சியாங்கே ஷேக் தைவானுக்கு தப்பியோடினார். தைவான் |
தேசிய சீனா என்று அழைக்கப்பட்டது. கெடுபிடிப்போர் காலத்தில் அமெரிக்கா தேசிய சீனாவை ஆதரித்தது. எனவே , தேசிய சீனா 1971 ஆம் ஆண்டுவரை ஐ.நா. சபையில் உறுப்பினராக இருந்தது. 1971 ல் தான் சீனா மக்கள் குடியரசு ஐ.நா.வில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டது. XG மாசேதுங் மாசே துங் சீனாவில் பெரும் பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். இதற்கு - 1966 ல் , மாவோ பண்பாட்டுப் புரட்சியைத் தொடங்கிவைத்தார். பண்பாட்டுப் புரட்சியின்போது மாவோவுக்கு எதிரானவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு |
சிறைப்படுத்தப்பட்டனர். 1976 ல் மாவோ இறந்த பிறகு , நால்வர் குழுவினர் சிறைப்படுத்தப்பட்டனர். டெங் சியோபிங் , மாவோவின் பின் தோன்றலான ஹுவா குவோபெங் என்பவரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். டெங் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து சீனப் பொருளாதாரத்தில் காணப்பட்ட அரசுக் கட்டுப்பாடுகளை தளர்த்தினார். திட்டமிட்ட பொருளாதாரத்தைவிட்டு சீனா கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றத் தொடங்கியது. சீனாவில் ஏற்பட்டுவரும் இந்த பொருளாதார மாற்றத்தினால் 2001 ல் அது உலக வர்த்தக அமைப்பிலும் உறுப்பினராகியது. நவீன ஜப்பானின் |
எழுச்சி ஐரோப்பியார்களால் குடியேற்றங்கள் அமைக்கப்படாத நாடு ஆசியாவில் ஜப்பான் மட்டுமே. புவியியல் ரீதியாக , ஜப்பான் சிறிய நாடாக இருந்தபோதிலும் , அது வலிமை மிக்க நாடாக உருவாகியது. மேற்கத்திய நாடுகளைப் போலவே , ஜப்பான் ஆசியாவில் பேரரசுக் கொள்கையைப் பின்பற்றியது. ராணுவ பலமும் அதனிடம் இருந்தது. இன்றைய ஜப்பான் ஒரு பொருளாதார வலிமைமிக்க நாடாகத் திகழ்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் தனித்திருக்கும் கொள்கையையே கடைப்பிடித்து வந்தது. 1853 ஜூலை எட்டம் நாள் அமெரிக்காவைச் சேர்ந்த கம்மோடர் பெர்ரி என்பவர்தான் இதனை |
உடைத்தெறிந்தார். அவரது தூதுக்குழு ஜப்பான் மேலை நாடுகளுடன் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வழிவகுத்தது. இந்த தருணத்தில் ஜப்பானை தோகுகவா ஷோகன்கள் கட்டுப்படுத்தி வந்தனர். பெர்ரியின் வருகையால் ஜப்பானிய அரசரிடம் மீண்டும் முழு அதிகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதுவே மெய்ஜி முன்னிலை மீட்சி எனப்படுகிறது. மெய்ஜி முன்னிலை மீட்சியினால் ஜப்பானில் பல்வேறு சீர்திருத்தங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. நிலமானிய முறை ஒழிக்கப்பட்டது. மேற்கத்திய சட்டமுறை செயல்படுத்தப்பட்டது. பிரிட்டனில் இருந்ததைப் போல அரசியலமைப்புக்குட்பட்ட |
முடியாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மெய்ஜி அரசியலமைப்பு இதற்கு வழிவகுத்தது. இவ்வாறு ஜப்பான் முழுவதுமாக நவீனமயமாக்கப்பட்டது. பின்னர் ஜப்பான் தனது வலிமையைப் பெருக்கியதோடு பேராதிக்ககொள்கையையும் கடைப்பிடிக்கத் தொடங்கியது. 1894-95 போரில் ஜப்பான் சீனாவை முறியடித்தது. பின்னர் 1904-05 ஆண்டு நடைபெற்ற போரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவையும் ஜப்பான் முறியடித்தது. முதல் உலகப்போரின்போது , ஜெர்மனிக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த சீனப்பகுதியான ஷான்டுங் மாகாணத்தை ஜப்பான் கைப்பற்றியது. சீனாவின்மீதான இருபத்தியொரு |
கோரிக்கைகளையும் ஜப்பான் திணித்தது. இவ்வாறு , முதல் உலகப் போரின் முடிவில் ஜப்பான் ஒரு ராணுவ வலிமைமிக்க நாடாக எழுச்சி பெற்றது. எனவே , ஜப்பானின் கடலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 1921-22ல் வாஷிங்டன் கடற்படை மாநாடு கூட்டப்பட்டது. ஆனால் இது ஒரு தற்காலிகத் தீர்வாகவே அமைந்தது. ராணுவ 1933 ல் ஜப்பான் மஞ்சூரியாவைத் தாக்கி கைப்பற்றி அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்தியது. 1937 ல் ஜப்பான் மீண்டும் ஒருமுறை சீனாவைத் தாக்கியது. இறுதியில் , ஜப்பான் , ஜெர்மனி மற்றம் இத்தாலியுடன் சேர்ந்து அச்சு ஒப்பந்தத்தையும் |
செய்து கொண்டது. 1941 ல் ஜப்பான் அமெரிக்கக் கப்பற்படை தளமான ‘ பெர்ல் ஹார்பர் ’ துறைமுகத்தை தாக்கியது. இதனால் , பிரிட்டன் , பிரான்ஸ் , ரஷ்யா போன்ற நேச நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இரண்டாம் உலகப்போரில் இறங்க வேண்டியதாயிற்று. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகளை வீசியது. இதனால் , ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது. ஜெனரல் மெக்ஆர்தர் மற்றும் பேரரசர் ஷிரோ ஹிட்டோ போர் முடிந்தபின் ஜப்பான் தளபதி ஜெனரல் மெக் ஆர்தரின் கட்டுப்பாட்டில் |
விடப்பட்டது. 1947 மே மூன்றாம் நாள் அங்கு புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1951 செப்டம்பரில் அமெரிக்கா மற்றம் 45 நேச நாடுகள் சான் பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இவ்வுடன்படிக்கைப்படி , ஜப்பான் மீண்டும் சுதந்திர நாடாகியது. 1950 முதல் 1980 வரையிலான ஜப்பானிய வரலாறு அங்கு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியை குறிப்பதாகவே உள்ளது. அமெரிக்கா , ஜப்பானுக்கு அதிநவீன தொழில்நுட்ப உதவியை அளித்தது. இதனால் , ஜப்பான் மிகவிரைவாக கனரக தொழிற்சாலைகளை மீண்டும் அமைத்தது. எஃகு , கார் மின்னணு சாதனங்கள் |
ஆகியவற்றின் உற்பத்தி போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார வலிமைபெற்ற நாடுகளில் மெக் ஆர்தர் ஒன்றாக ஜப்பான் எழுச்சி பெற்றது. பொருள் உற்பத்தியாளர்கள் , வினியோகிப்பவர்கள் மற்றும் ‘ கெய்ரட்சு ’ எனப்பட்ட வங்கியாளர்கள் ஆகியோருக்கிடையே நிலவிய கூட்டுறவே ஜப்பானிய பொருளாதாரத்தின் தனிச் சிறப்பாகும். மிட்ஷு H ஷி , சுமிடோமோ , ஃபுயோ , மிட்சியூ , டெய்இச்சி காங்யோ மற்றும் சான்யோ போன்ற ஆற்றல்மிக்க நிறுவங்களை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். அரசியல்ரீதியாக , ஜப்பானில் லிபரல் |
டெமாகிரடிக் கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அக்கட்சியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறது. 1989 ல் பேரரசர் ஹிரோஹிட்டோ இறந்தபிறகு , அவரது மகன் அகிஹிட்டோ அரசனாகப் பதவியேற்றார். 21 ஆம் நூற்றாண்டிலும் ஜப்பான் ஒரு பொருளாதார வலிமைமிக்க நாடாகவே திகழ்கிறது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் குழுவான G8 ல் இடம் பெற்றுள்ள ஒரே ஆசிய நாடு ஜப்பான் மட்டுமே. பாடம் – 33 ஐக்கிய நாடுகள் அவை கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் அறிவது 1. ஐ.நா. நிறுவப்படுதல் 2. ஐ.நா. வின் நோக்கங்கள் ஐ.நா. அவையின் |
அமைப்பு 3. 4. ஐ.நா.வின் சாதனைகள் 5. ஐ.நா.வின் அரசியல் சார்பற்ற நடவடிக்கைகள் முதல் உலகப் போரைவிட இரண்டாம் உலகப் போர் மனித குலத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியது. முதன் முறையாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அத்தகைய போர்கள் எதிர்காலத்தில் நிகழுமானால் உலகம் என்ன ஆகும் என்ற அச்சம் உலக மக்கள் மனதில் எழுந்தது. சச்சரவுகளில் ஈடுபடும் நாடுகளை சமாதான பேச்சு வார்த்தைக்கு இட்டுச் செல்ல ஒரு உலக அமைப்பு தேவை என அமெரிக்கா , சோவியத் ரஷ்யா மற்றும் கிரேட் பிரிட்டன் போன்ற நாடுகள் உணர்ந்தன. முதல் உலகப் போரின்போது |
ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தோல்வியில் முடிந்தபோதிலும் , மீண்டும் அத்தகைய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் தீவிரமாக இறங்கின. இம்முயற்சியின் பயனால் விளைந்ததே ‘ ஐக்கிய நாடுகள் அவை ’ யாகும். ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்படுதல் ஐ.நா. அவை நிறுவப்படுவதற்கு முன்பே அட்லாண்டிக் சாசனம் , யால்டா மாநாடு மற்றும் 1944 ல் அமெரிக்காவில் உள்ள டம்பார்ட்டன் ஒக்ஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து மாநாடுகள் கூட்டப்பட்டன. இவற்றில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பலனாக ஐ.நா. அவை உருவாக்கப்பட்டது. 1945 ஜூன் 26 ஆம் நாள் சான் பிரான்சிஸ்கோ |
நகரில் 51 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐ.நா. சாசனத்தில் கையெழுத்திட்டனர். நீண்ட விவாதங்களுக்குப்பிறகே , இந்த சாசனம் 51 நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1945 அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்டது. ஐ.நா. வின் தலைமையகம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐ.நா.வின் நோக்கங்கள் ஐ. நா. சாசனத்தில் அதன் அடிப்படை நோக்கங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. 1. பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரித்தல். 2. நாடுகளுக்கிடையே நட்புறவையும் அமைதியையும் ஏற்படுத்துதல். 3. அனைத்து |
நாடுகளுக்கும் சமஉரிமைகளையும் , சுய நிர்ணய உரிமைகளையும் வழங்குதல். 4. பன்னாட்டு ஒத்துழைப்புடன் பொருளாதார , சமூக , பன்னாட்டு மற்றும் மனிதகுல பிரச்சினைகளை தீர்ப்பது. ஆங்கிலம் , பிரஞ்சு , ஸ்பானிஷ் , ரஷ்யா , சீன மற்றும் அராபிய மொழிகள் உள்ளன. ஆண்டு அளவில் ஐ.நா.வில் 192 உறுப்பு நாடுகள் உள்ளன. பாதுகாப்பு சபை 2006 ஆம் ஐ.நா.வின் முக்கிய நிர்வாக அமைப்பு அதன் பாதுகாப்பு சபையேயாகும். இதில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். ரஷ்யா , சீனா , அமெரிக்கா , பிரான்ஸ் மற்றும் கிரேட் பிரிட்டன் ஆகிய நாடுகள் இதில் நிரந்தர உறுப்பினர்களாக |
உள்ளன. இந்த நாடுகளுக்கு சிறப்பு ரத்து அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதே பாதுகாப்பு சபையின் முக்கிய பணியாகும். ஐ.நா. சட்ட திட்டங்களை மீறுபவர்கள்மீது பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையை பாதுகாப்பு சபை மேற்கொள்ள முடியும். பொருளாதார , சமூக சபை இந்த சபையில் 18 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். தற்போது 27 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சபையின் உறுப்பினர்கள் அனைவரும் பொது அவையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே , இந்த சபை பொது அவைக்கே நேரடியாக பொறுப்புள்ளதாக |
அமைந்துள்ளது. மனித உரிமைகளுக்கு அனைத்துலக அங்கீகாரத்தை ஏற்படுத்துவதும் , உலக சமூகத்தில் உயரிய பண்பாட்டை உருவாக்குவதும் இந்த சபையின் அடிப்படை நோக்கங்களாகும். மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தி அதன்வழி அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும் இச்சபையின் குறிக்கோளாகும். மக்களின் வாழ்க்கை தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்துவதன் மூலமே உலக அமைதியை நிலைநாட்டமுடியும் என்பது ஐ.நா.வின் உயரிய நம்பிக்கையாகும். பல்வேறு சிறப்புக்குழுக்கள் மற்றும் அமைப்புகள் மூலமே பொருளாதார , சமூக சபை தனது பணிகளை திறம்பட செய்து |
வருகிறது. யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி , அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் , ஐ. நா. உதவி மற்றும் புனர்வாழ்வு ஆணையம் , உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் , பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு , உலக வங்கி , உலக சுகாதார நிறுவனம் போன்றவை பொருளாதார , சமூக சபைக்கு உரிய ஒத்துழைப்பை அளிக்கின்றன. 1945 ஆம் ஆண்டிலிருந்தே இந்த சபை மனித குலத்திற்கு அரிய சேவைகளை ஆற்றிவருகிறது என்பதில் ஐயமில்லை. தர்மகர்த்தா சபை பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தர்மகர்த்தா சபையில் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர , குடியேற்றங்களை |
நிர்வகித்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரும் இதன் உறுப்பினர்களாவர். தனது கட்டுப்பாட்டில் விடப்பட்டுள்ள பகுதிகளின் நலன்களை பாதுகாப்பதே தர்மகர்த்தா சபையின் முக்கிய பணியாகும். ஐ.நா.வின் கட்டுப்பாட்டிலுள்ள நாடுகளை நன்கு நிர்வகிக்கவும் பொது அவைக்கு தர்மகர்த்தா சபை ஒத்துழைப்பு அளிக்கிறது. பன்னாட்டு நீதிமன்றம் ஐ.நா.வின் நீதிமன்றமாக பன்னாட்டு நீதிமன்றம் செயல்படுகிறது. பொது அவையாலும் , பாதுகாப்பு சபையாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நீதிபதிகள் இதில் இடம்பெற்றுள்ளனர். ஐ.நா.வின் |
உறுப்பு நாடுகளுக்கிடையே எழும் சட்டரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே இதன் முக்கிய பணியாகும். ஐ.நா.வின் பணியாளர்களை உள்ளடக்கியதே அதன் செயலகமாகும். இதன் தலைவராக பொதுச் செயலாளர் செயல்படுகிறார். பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஐ.நா. பொது அவையால் இவர் நியமிக்கப்படுகிறார். ஐ.நா.வின் அனைத்து உறுப்புகளும் சரிவர இயங்குவதற்கு உதவியாக இருப்பதே செயலகத்தின் முக்கிய பணியாகும். ஐ.நா.வின் சாதனைகள் தொடக்கத்திலிருந்தே , பன்னாட்டு அளவில் தோன்றி வரும் பிரச்சினைகள் மற்றும் மோதல்களை ஐ.நா. அவை திறம்பட சந்தித்து அவற்றை |
முடித்து வைக்க பாடுபட்டுவருகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபை இதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் , பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தங்களிடமுள்ள ரத்து அதிகாரத்தை தாராளமாக பயன்படுத்துவதால் இத்தகைய முயற்சிகளுக்கு அவ்வப்போது தடங்கல்கள் ஏற்படுகின்றன. 1946 - 47 ஆம் ஆண்டுகளில் மட்டும் சோவியத் ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தை 22 முறை பயன்படுத்தியது. இத்தகைய தடங்கல்களையும் மீறி ஐ.நா. அவை பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளைக்கண்டு சாதனை படைத்து வருகிறது. அத்தகைய சாதனைகளில் ஒருசிலவற்றை பின்வருமாறு காணலாம். |
குடியேற்ற நாடுகளின் விடுதலை செயலகம் ஆசியா , ஆப்ரிக்கா , லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளிலிருந்த குடியேற்ற நாடுகள் விடுதலை பெறுவதற்கு ஐ.நா. உதவிக்கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது. குடியேற்றங்களின் விடுதலை ஐ.நா. அவை அமைக்கப்பட்ட பிறகு வேகமாக நடைபெற்றது. அமைதியை நிலைநாட்டுதல் உலக அமைதியை பராமரித்தலே ஐ.நா. அவையின் முக்கிய பணியாகும். ஐ.நா. தலையிட்டு அமைதியை ஏற்படுத்திய மோதல் சம்பவங்கள் சிலவற்றை இப்போது காணலாம். ஈரான் சிக்கல் 1946 ஜனவரி முதல் நாள் ஈரான் ஐ.நா. அவையில் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை வைத்தது. |
ஈரானியப்பகுதியில் ரஷ்யா தனது துருப்புக்களை நிறுத்திவைத்திருந்ததே அக்குற்றச்சாட்டாகும். ஐ.நா. அவையின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து ரஷ்யா நீண்டகாலமாக ஈரானியப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த துருப்புக்களை விலக்கிக்கொண்டது. ஐ.நா. அவையின் முதலாவது பெரும்சாதனை என்று இதனைக் கூறலாம். சிரியா மற்றும் லெபனான் இதேபோன்ற குற்றச்சாட்டை சிரியாவும் லெபனானும் ஐ.நா. அவையின் கவனத்துக்கு கொண்டுவந்தது. தங்களது நிலப்பகுதிகளிலிருந்து பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் உடனடியாக விலக்கப்படவேண்டும் என ஐ.நா. அவையிடம் இந்த |
நாடுகள் முறையிட்டன. பாதுகாப்பு சபையின் தீவிர முயற்சிகளால் , பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு துருப்புகள் ஆக்ரமிப்பு பகுதிகளிலிருந்து பின்வாங்கின. இந்தோனேசியா இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்தோனேசியாவின் தேசியவாதிகள் அங்கு ஒரு குடியரசை நிறுவினார். ஆனால் , ஜாவா மற்றும் சுமத்ரா பகுதியில் வாழ்ந்து வந்த டச்சுக்காரர்கள் தேசியவாதிகளுக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஐ.நா. பாதுகாப்பு சபை தலையீட்டின் காரணமாக அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டது. இந்தோனேசியாவிற்கு முழு சதந்திரம் வழங்குவதற்கு டச்சுக்காரர்கள் உடன்பட்டனர். |
Subsets and Splits