text
stringlengths
11
513
தேநீர் விருந்து சட்டங்களை கொண்டு வந்தது. பிலடெல்பியா மாநாடு பிரிட்டிஷாருக்கெதிரான இப்போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதென அமெரிக்க குடியேற்றங்கள் முடிவு செய்தன. 1774 செப்டம்பரில் பிலடெல்பியாவில் முதலாவது கண்ட மாநாடு நடைபெற்றது. ஜார்ஜியா தவிர எஞ்சிய 12 குடியேற்றங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். தொழில் மற்றும் வாணிகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் அரசருக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுத்தது. தங்களது ஒப்புதலின்றி வரிவிதிக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டது.
1775 மே மாதம் இரண்டாவது கண்ட மாநாடு பிலடெல்பியாவில் கூடியது. இதில் 13 குடியேற்றங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தாமஸ் ஜெபர்சன் , பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற புகழ்மிக்க தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்கப்படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தளபதியாக தாமஸ்பெயின் நியமிக்கப்பட்டார். இறுதி முயற்சியாக பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் ஜார்ஜுக்கு ஒரு ஆலிவ் அனுப்பிவைக்கப்பட்டது. அவர் அதனை நிராகரித்தார். அமெரிக்க குடியேற்றங்கள் கிளர்ச்சியில் இறங்கியிருப்பதாக அரசர் அறிவித்தார். விடுதலை அறிக்கை கிளை விண்ணப்பம் 1776
ஜனவரியில் , தாமஸ் பெயின் என்ற அறிஞர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா வந்து தம்முடைய “ பொது அறிவு ” என்ற கட்டுரைக் குறிப்பை வெளியிட்டார். பரம்பரை முடியாட்சிக் கோட்பாட்டை அது எதிர்த்தது. மாறாக , மக்களாட்சி அரசின் நன்மைகளை அது எடுத்துரைத்தது. 50 பக்கங்கள் கொண்ட அந்தக் கையேடு ஒரு லட்சம் பிரதிநிதிகளுக்குமேல் அச்சிடப்பட்டு 13 குடியேற்றங்களிலும் விநியோகிக்கப்பட்டது. அமெரிக்கர்களிடையே போரிடும் தூண்டுவதாக அது அமைந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் ய உணர்வை தலைமையிலான ஐந்துபேர் மனித உரிமையின் குலத்திடமிருந்து உரிமை மற்றும்
மகிழ்ச்சியை நாடும் உரிமை ” ஆகியன விடுதலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தன. 1776 ஜூலை 4 ஆம் நாள் கண்ட மாநாட்டில் அமெரிக்க விடுதலை அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. தாமஸ் ஜெபர்சன் கொண்ட குழு அந்த அறிக்கையை தயாரித்தது. மாண்புகளை தாமஸ் ஜெபர்சன் அதில் குறிப்பிட்டிருந்தார். மனித பிரித்தெடுக்கமுடியாத மனித உரிமைகளான “ வாழ்வுரிமை சுதந்திர முக்கிய போர் நிகழ்வுகள் 1775 ஆம் ஆண்டு போர் தொடங்கியது. மாசசூசெட்ஸ் குடியேற்றத்தில் லெக்சிங்டன் என்ற இடத்தில் குடியேற்ற படைகளுக்கும் பிரிட்டிஷ் வீரர்களுக்கும் இடையில் முதல் மோதல்
நடைபெற்றது. அமெரிக்க குடியேற்றங்களின் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் படைத்தலைவராகப் பொறுப்பேற்றார். பங்கர் ஹில் போரில் பிரிட்டிஷ் படைத்தளபதி கேஜ் வெற்றி பெற்றார். 1776 ல் சர் வில்லியம் ஹோ என்பவரது தலைமையிலான பிரிட்டிஷ் படை லாஸ் அய்லாந்து என்றவிடத்தில் வாஷிங்டனை முறியடித்தது. 1777 அக்டோபரில் தளபதி கேட்ஸ் தலைமையிலான அமெரிக்கப்படைகள் சாரடோகா என்றவிடத்தில் பிரிட்டிஷ் துருப்புக்களை தோற்கடித்தது. சாரடோகா வெற்றி போரின் திருப்புமுனையாக அமைந்தது. அமெரிக்கப் படைகளுக்கு உதவியாக லபாயத் தலைமையிலான பிரஞ்சுப் படைகளும் வந்தன.
இறுதியில் 1781 ஆம் ஆண்டு யார்க்டவுன் என்ற இடத்தில் தளபதி காரன்வாலிஸ் தலைமையிலான பிரிட்டிஷ் படை வாஷிங்டனிடம் சரணடைந்தது. 1783 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கைப்படி போர் முடிவுக்கு வந்தது. அமெரிக்க விடுதலைப்போரின் முக்கியத்துவம் அமெரிக்க குடியேற்றங்கள் விடுதலை அடைந்தன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசு ஏற்படுத்தபட்டது. எழுதப்பட்ட அரசியலமைப்புடன்கூடிய உலகின் முதலாவது ஜனநாயக அடிப்படையிலான அரசு என்ற கனவு நினைவாயிற்று. உரிமைகள் மசோதா அமெரிக்க குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்திரவாதமாக அமைந்தது. பாடம் - 25
பிரஞ்சுப் புரட்சி ( 1789 ) கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்தைப் படிப்பதன் மூலம் மாணவர் அறியும் செய்திகள் 1. பிரஞ்சுப் புரட்சிக்கான காரணங்கள். 2. பிரஞ்சு சிந்தனையாளர்களின் பங்கு 3. பாஸ்டில் சிறையின் வீழ்ச்சியும் புரட்சியின் தொடக்கமும். 4. அரசியலமைப்புக் குழுவும் தேசிய பேரவையும் 5. ‘ பயங்கர ஆட்சி ’ 6. புரட்சியின் முடிவு பிரஞ்சுப்புரட்சி ஐரோப்பிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக அமைந்தது. மனிதகுல வரலாற்றிலும் அது ஒரு திருப்புனையாகும். பழமை வாய்ந்த எதேச்சாதிகார குடியாட்சி , நிலமானிய சட்டங்கள் , சமூக
அநீதி போன்றவற்றுக்கு அது முடிவுகட்டியது. “ சுதந்திரம் சமத்துவம் , சகோதரத்துவம் ” ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான குடியரசு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கருத்துக்கள் ஐரோப்பா மற்றம் உலகையே தன்வயப்படுத்தியது. பிரஞ்சுப்புரட்சிக்கான காரணங்கள் புரட்சி வெடிப்பதற்கு முன்பு பிரான்சில் நிலவிய அரசியல் , சமூக , பொருளாதார நிலைமைகளே பிரஞ்சுப்புரட்சிக்கு வழிவகுத்தன. அரசியல் காரணங்கள் பிரான்சு பூர்போன் வம்சத்தவரால் ஆளப்பட்டு வந்தது. அதன் அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்டிபாட்டில் அசையா நம்பிக்கை கொண்டிருந்தனர். அதன்படி ,
அரசர்கள் கடவுளின் பிரதிநிதிகள் , எனவே கடவுளுக்கு மட்டுமே பொறுப்பானர்வர்கள். பதினான்காம் லூயி பூர்போன் வம்சத்தின் வலிமையான ஆட்சியாளராகத் திகழ்ந்தார். அவர் செய்த போர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தன. அவரது வழித்தோன்றல்களான பதினைந்தாம் லூயி , பதினாறாம் லூயி ஆகியோர் ஆட்சித் திறமை குன்றியவர்களாக இருந்தனர். 16 - ம் லூயி பதினைந்தாம் லூயி தமது ஆட்சியின் முடிவில் கூறிய வார்த்தைகள் “ எனக்குப்பின் பிரளயம் ” என்பதாகும். அவரது வார்த்தைகள் உண்மையாயின. பதினாறாம் லூயி மிகவும் திறமையற்ற ஆட்சியாளராக இருந்தார். அவரது
துணைவியார் அரசிமேரி அண்டாய்னட் நிர்வாகத்தில் பெரிதும் தலையிட்டார். பிரஞ்சு மக்களின் துயரங்களைப் பற்றி சற்றும் அறியாதவராகவும் இருந்தார். ஆனால் , பிரஞ்சு உயர்குடியினரின் நலன்களை பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். உயர்குடியினர் மற்றும் குருமார்களின் நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நீதித்துறை சீர்திருத்தங்களையும் அவர் அனுமதிக்கவில்லை. சமூகக் காரணங்கள் சமத்துவமின்மையின் அடையாளமாக பிரஞ்சு சமுதாயம் இருந்தது. பிரான்சில் உயர் குடியினர் , குருமார்கள் , பொதுமக்கள் என மூன்று சமுதாயப் பிரிவுகள் இருந்தன.
உயர்குடியினருக்கு அரசியல் அதிகாரம் இல்லாவிட்டாலும் அரசரின் அடிவருடிகளாக அவர்கள் திகழ்ந்தனர். பல்வேறு சலுகைகளைப் பெற்று ஆடம்பரமான வாழ்க்கையை அவர்கள் நடத்தி வந்தனர். பிரான்சில் ஐந்தில் ஒரு பங்கு நிலம் அவர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. வரிவிதிப்புகளிலிருந்தும் அவர்கள் விலக்குப் பெற்றிருந்தனர். குருமார்களின் உயர்வர்க்கத்தினர் பிரான்சின் மூன்றில் ஒரு பகுதி நிலத்திற்கு உடைமையாளராக இருந்தனர். பிரான்சில் அவர்களது எண்ணிக்கை சுமார் 5000 ஆகும். அரண்மனை போன்ற வீடுகளில் அவர்கள் வசித்தனர். வரிகளிலிருந்தும் விலக்கு
பெற்றிருந்தனர். ஆனால் , குருமார்களில் கீழ்வர்க்கத்தினர் இத்தகைய சலுகைகளைப் பெற்றிருக்கவில்லை. எனவே , புரட்சியின் போது அவர்கள் உயர்வர்க்கத்தினருக்கு எதிராகத் திரும்பினர். மொத்தத்தில் சமுதாயத்தின் முதலிரண்டு பிரிவினரான உயர்குடியினரும் , குருமார்களும் பொதுமக்கள் படும் துயரங்களைப் பொருட்படுத்தாது உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பிரான்சின் பெரும்பகுதி மக்கள் மூன்றாவது பிரிவில் இருந்தனர். வணிகர்கள் , வழக்குரைஞர்கள் , தொழிற்சாலை உரிமையாளர்கள் , அரசு ஊழியர்கள் , குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்
இப்பிரிவைச் சேர்ந்தவர்கள். உயர்குடியினரும் குருமார்களும் வரிவிலக்கு பெற்றுத் திகழ்ந்தபோது , பொது மக்களாகிய இவர்கள் அனைத்துவித வரிகளையும் செலுத்தி வந்தனர். ‘ பிரபுக்கள் சண்டையிடுவர் , குருமார்கள் தொழுவர் , மக்கள் அனைத்து வரிகளையும் செலுத்துவர் ” என்பதே பொதுவான வழக்காக இருந்தது. டெய்ல் எனப்பட்ட நிலவரியை குடியானவர்கள் செலுத்தவேண்டும். கேபேல் என்ற உப்பு வரி பொதுமக்களின் பெரும் சுமையாகும். குடும்பத்தலைவர் ஒவ்வொருவரும் தலைவரி செலுத்தவேண்டும். இத்தனைவித வரிகளையும் அரசனுக்கு செலுத்தும் அதே நேரத்தில் திருச்சபைக்கு
டைத் என்ற வரியையும் மக்கள் செலுத்தினர். பிறரைவிட குடியானவர்களின் சுமை அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் , அவர்கள் உயர்குடியினருக்கு சில கடமைகளை ஆற்றவேண்டியிருந்தது. பண்ணையிலிருந்து மாவு அரைக்கும் , மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை அதற்கேற்ற கட்டணத்தை செலுத்திவிட்டு கட்டாயமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வேறு பல நிலமானிய சேவைகளையும் குடியானவர்கள் உயர்குடியினருக்கு ஆற்றிவந்தனர். பொருளாதார காரணங்கள் பதினாறாம் ஆட்சிக்காலத்தில் நாட்டுக் கடன் பிரான்சின் எல்லைமீறிச் லூயி நிதிநிலைமை மோசமாகியது. சென்றது. தேசிய வருமானம்
செலவைவிட மிகக் குறைவாகவே இருந்தது. எனவே அரசாங்கத்தின் பதவிகளைப் பணத்துக்கு விற்று நிதியைத்திரட்ட அரசர் முற்பட்டார். இறுதியில் , டர்காட் , ஜேக்கஸ் நெக்கர் போன்ற நிதித்துறை வல்லுனர்களை நிதியமைச்சர்களாகவும் அவர் நியமித்தார். அவர்கள் அரசின் செலவுகளைக் குறைத்து அரசாங்கத்தின் வருவாயைப் பெருக்க முற்பட்டனர். ஆனால் , அவர்களது நடவடிக்கைகளை உயர்குடியினர் ஆதரிக்கவில்லை. உயர்குடியினரின் ஆலோசனையைக் கேட்டு அரசி மேரி அண்டாய்ன்ட் இருவரையும் பதவி ஜாகஸ் நெக்கர் நீக்கம் செய்தார். பின்னர் , நிதிநெருக்கடியை சமாளிக்க கலோன் என்பவர்
நியமிக்கப்பட்டார். புதிய வரிகளை விதிப்பதைத் தவிர வேறெந்த வழியும் அவருக்கு புலப்படவில்லை. எனவே , பதினாறாம் லூயி கிட்டத்தட்ட 175 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மே 5 , 1789 ல் ஸ்டேட்ஸ் ஜெனரல் என்ற நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டியதாயிற்று. பிரஞ்சு சிந்தனையாளர்கள் பிரஞ்சு சிந்தனையாளர்களின் எழுத்துக்களும் பிரச்சாரமும் பொது மக்களை புரட்சிக்கு தயார் படுத்தியது எனலாம். அவர்களில் மாண்டஸ்கியூ , வால்டேர் , ரூசோ ஆகிய மூவரும் குறிப்பிடத்தககவர்கள். மாண்டஸ்கியூ தனது ‘ சட்டத்தின் சாரம் ’ என்ற நூலில் தேவையை செம்மையாக மாண்டஸ் கியூ
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் வலியுறுத்தினார். மக்களாட்சி முறை செயல்படுவதற்கு , நிர்வாகம் , சட்டமியற்றுதல் , நீதி வழங்குதல் ஆகிய மூன்று அதிகாரங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துக் கூறினார். மூடப்பழக்கங்கள் பரம்பரை நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக வால்டேர் ஒரு நீண்ட போராட்டத்தையே தொடங்கினார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு கட்டுரைகள் , கவிதைகள் , நாடகங்களை அவர் எழுதினார். பகுத்தறிவின் சிறப்பை அவர் ஆதரித்தார். திருச்சபையில் காணப்பட்ட ஊழல்களை அவர் கேலி
செய்தார். வரம்புக்குட்பட்ட முடியாட்சி முறையே சிறந்தது என்றும் வால்டேர் கூறினார். பிரஞ்சுப்புரட்சியின் ‘ பைபிள் ’ என்றழைக்கப்பட்ட ‘ சமூக ஒப்பந்தம் ’ என்ற புகழ்மிக்க நூலின் ஆசிரியர் ரூசோ. ரூசோ அரசின் உண்மையான இறைமையதிகாரம் மக்களிடமே பொதிந்துள்ளது என்று ரூசோ கூறினார். “ மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ஆனால் பின்னர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு விடுகிறான் ” என்ற அவரது புகழ்மிக்க வாசகம் மக்களிடையே புரட்சியுணர்வைத் தூண்டியது. தீதரோ , டி ஆலம்பர்ட் ஆகியோர் ' என் சைக்ளோபீடியா ’ அல்லது கலைக் களஞ்சியத்தை வெளியிட்டனர்.
அதில் புரட்சி சிந்தனையாளர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. சிந்தனையாளர்களின் புரட்சிக் கருத்துக்கள் பிரான்ஸ் முழுவதும் பரவி மக்களிடையே புரட்சியுணர்வை தோற்றுவித்தன. ' சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் ’ என்ற முழக்கத்தை சிந்தனையாளர்களே உருவாக்கினர். 1789 புரட்சியின்போது வால்டேர் இவையே தாரகமந்திரங்களாக விளங்கின. அமெரிக்க விடுதலைப் போரின் தாக்கம் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலிருந்து அமெரிக்காவிலிருந்த 13 குடியேற்றங்கள் விடுதலைபெற்றது பிரான்சு மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. லபாயத்
தலைமையிலான பிரஞ்சுப்படைகள் குடியேற்றங்களுக்கு ஆதரவாகப் போரிட்டு அவர்களது அமெரிக்க அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தன. அனுபவங்கள் , மக்களாட்சியின் வெற்றி ஆகியன பிரஞ்சு மக்களிடையே உற்சாகத்தை தூண்டின. எனவே , பூர்போன் வம்ச கொடுங்கோலாட்சிக்கு முடிவுகட்ட பிரஞ்சு மக்கள் முடிவு செய்தனர். ஸ்டேட்ஸ் ஜெனரல் கூட்டப்படுதல் பிரஞ்சுக் கருவூலம் காலியானதே பிரஞ்சுப் புரட்சியின் தொடக்கத்திற்கு காரணமாக அமைந்தது.பதினாறாம் லூயி கடுமையான நிதிநெருக்கடிக்கு ஆளானார். புதிய வரிகளை விதிப்பதைத்தவிர அவருக்கு வேறு வழி ஏதும்
புலப்படவில்லை. எனவே 1789 , மே ஆம் நாள் பதினாறாம் லூயி ஸ்டேட்ஸ் ஜெனரலின் கூட்டத்தை கூட்டினார். மக்கள்மீது விதிக்கப்படவிருந்த புதிய வரிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காகவே ஸ்டேட்ஸ் ஜெனரல் கூட்டம் கூட்டப்பட்டது. நெக்கர் மீண்டும் நிதியமைச்சராக்கப்பட்டார். தேசிய மன்றம் ஸ்டேட்ஸ் ஜெனரல் மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும். முதலாவது பிரிவில் உயர்குடியினரும் , இரண்டாவது பிரிவில் குருமார்களும் மூன்றாவது பிரிவில் பொதுமக்கள் பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர். அரசர் கூட்டத்தை கூட்டியவுடன் பிரிவுகளும் மூன்று வழக்கம் போல் தனித் தனியே
அமர்ந்தன. ஆனால் , மூன்றாவது பிரிவினர் கூட்டுக் கூட்டம் என்றும் டென்னிஸ் மைதான உறுதிமொழி நடைபெறவேண்டும் ஒருவருக்கு ஒருவாக்கு என்ற முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதற்கு முதலிரண்டு பிரிவினரும் உடன்படாததால் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டது. 1789 ஜூன் 17 ஆம் நாள் மூன்றாவது பிரிவினர் தங்களை தேசிய மன்றமாக அறிவித்துக்கொண்டனர். அதிர்ச்சிக்குள்ளான அரசர் அவர்களை அவைக்குள் நுழையவிடாமல் தடுத்தார். ஆனால் தேசிய மன்ற உறுப்பினர்கள் அருகிலிருந்த டென்னிஸ் மைதானத்திற்கு சென்று புதிய அரசியலமைப்பை வரைவது என உறுதி
எடுத்துக் கொண்டனர். இதுவே ‘ டென்னிஸ் மைதான உறுதிமொழி ' எனப்படுகிறது. தேசிய மன்றத்தை 1789 ஜூன் 23 ஆம் நாள் ஸ்டேட்ஸ் ஜெனரலின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. மூன்றாவது பிரிவினரின் நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது என பதினாறாம் லூயி அறிவித்தார். மூன்று பிரிவினரும் தனித்தனியாக கூடவேண்டும் என்றும் அவர் ஆணையிட்டார். மூன்றாவது பிரிவினர் அரசரது ஆணையை எதிர்த்தனர். எனவே , வேறு வழியின்றி பதினாறாம் லூயி மக்களின் பிரதிநிதியாகக் திகழ்ந்த மூன்றாவது பிரிவினரின் விருப்பத்துக்கு கட்டுப்பட்டார். மூன்று பிரிவுகளும் கூட்டாக
அமரும்படி அவர் கேட்டுக் கொண்டார். இதனால் , தேசிய மன்றம் முழுமையடைந்தது. பாஸ்டில் சிறை தகர்ப்பு அரசர் 5 அங்கீகரித்த முடிவு வெர்சாய் போதிலும் , அதனை ஒழித்துக்கட்ட அவர் செய்தார். ஏராளமான வீரர்கள் பாரிசிலும் , நகரிலும் குவிக்கப்பட்டனர். நிதியமைச்சர் பதவிநீக்கம் நெக்கர் செய்யப்பட்டார். இதைக் கேட்ட பாரிஸ் நகர மக்கள் வன்முறையில் இறங்கினர். அரசாங்கத்தின் சிறையான பாஸ்டில் சிறையைத்தாக்கிய அவர்கள் , பாதுகாவலர்களைக் கொன்று கைதிகளை பாஸ்டில் சிறைதகர்ப்பு விடுவித்தனர். பாஸ்டில் சிறை தகர்ப்பு சுதந்திரத்திற்கு கிடைத்த
வெற்றியாக பிரான்சு முழுவதும் கருதப்பட்டது. பாஸ்டில் சிறை வீழ்ச்சிக்குப்பின் , குடியானவர்கள் உயர்குடியினருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். செல்வந்தர்களுக்கெதிராக பிரான்சு முழுவதும் கலவரம் வெடித்தது. உயர்குடியினர் தாக்கப்பட்டனர். அவர்களது மாளிகைகள் உடைத்தெறியப்பட்டன. நிலமானிய ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 1789 ஆகஸ்ட் 4 ஆம் நாள் உயர்குடியினர் நிலமானிய முறைப்படி பெற்றிருந்த உரிமைகளையும் சலுகைகளையும் குடியானவரிடமே ஒப்படைத்தனர். சமத்துவக் கொள்கை நிலைநாட்டப்பட்டது. வர்க்கபேதம் உடைத்தெறியப்பட்டது. இதற்கிடையே
பாரிஸ் நகரில் ரொட்டிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அக்டோபர் 5 ஆம் நாள் ஏராளாமான பெண்கள் ஊர்வலமாக அணிவகுத்து வெர்சாய் அரச மாளிகைக்கு சென்று விண்ணப்பம் அளித்தனர். அரசியின் பதில் திருப்தி அளிக்காததால் , அரசன் , அரசி அவர்களது குழந்தை ஆகியோரை பாரிஸ் நகருக்கே அழைத்து வந்தனர். தேசிய மன்றத்தின் பணிகள் ( 1789 – 1791 ) ‘ மனித தேசிய மன்றம் தம்மை அரசியலைப்புக்குழுவாக மாற்றிக்கொண்டு , உரிமைகள் அறிவிப்பை ’ வரைந்து வெளியிட்டது. புதிய அரசியமைப்பு ஒன்றையும் தயாரித்தது. அதன்படி பிரான்சில் வரம்புக்குட்பட்ட முடியாட்சி
ஏற்படுத்தப்பட்டது. உயர்குடியினரின் பட்டங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. நீதித்துறை சீரமைக்கப்பட்டது. சித்ரவதை முறை ஒழிக்கப்பட்டது. புதிதாக மத்திய உள்ளாட்சி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருச்சபைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மடாலயங்கள் ஒடுக்கப்பட்டன. சமய சகிப்புத்தன்மை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டது. திருச்சபை வசூலித்துவந்த டைத் வரிகள் ஒழிக்கப்பட்டன. திருச்சபை , சொத்துக்களை தேசிய மயமாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய அரசிலமைப்பை எழுதியவுடன்
தேசிய மன்றம் 1791 ல் தாமாகவே கலைந்தது. அரசியல் குழுக்கள் டான்டன் பிரான்சின் பல்வேறு அரசியல் குழுக்கள் தோன்றின. அவற்றில் ஜாகோபியன் குழு , கார்டீலியர் குழு ஆகியன குறிப்பிடத்தக்கவை. ஜாகோபியர்களுக்கு ரோபஸ்பியர் தலைமை வகித்தார். இவர் ஒரு புரட்சிக்கர ஜனநாயகவாதியாவார். கார்டீலியர் குழுவிற்கு டான்டன் தலைமையேற்றார். படித்த இளைஞர்களின் இயக்கமாக கிராண்டியர்கள் திகழ்ந்தனர். குடியரசுத் தன்மையிலான அரசாங்கம் அமைய வேண்டும் என இவர்கள் பாடுபட்டனர். ரோலண்ட் அம்மையார் கிராண்டியர்களில் குறிப்பிடத்தக்கவர். சட்டமன்றம் புதிய
அரசியலமைப்பின்படி , 1791 ல் சட்டமன்றம் கூடியது. புரட்சி வெடித்தபோது பல்வேறு உயர்குடியினர் பிரான்சைவிட்டு தப்பியோடினர். அவர்கள் பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு , பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டத்தொடங்கினர். ஆஸ்திரியா , பிரஷ்யா போன்ற நாடுகள் அவர்களது உதவிக்கு வந்தன. இத்தகைய உயர்குடியினருக்கு எதிராக சட்டமன்றம் சில சட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. ஆனால் அரசர் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். ரோபஸ்பியர் ஆம் நாள் ஆஸ்திரிய அரசர் லியோபோல்டு 1791 ஆகஸ்ட் புரட்சியாளர்களுக்கெதிரான
புகழ்பெற்ற பில்னிட்ஸ் அறிக்கையை வெளியிட்டார். இதனால் 1792 ஆம் ஆண்டு புரட்சியாளர்களுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் போர்மூண்டது. புரட்சிப்படைகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்டெழுந்த புரட்சியாளர்கள் பிரஞ்சு அரசருக்கு எதிராகத் திரும்பினர். 1792 ஆகஸ்ட் 10 ஆம் நாள் டியூலரிஸ் நகரிலிருந்த அரசரது மாளிகை தாக்கப்பட்டது. அரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வேறு புதிய அரசியலமைப்பை எழுதுவதற்காக தேசியப் பேரவை அமைப்பதற்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து “ செப்டம்பர் படுகொலைகள் ” நடைபெற்றன. பாரிஸ் நகரிலிருந்த
டான்டன் தலைமையிலான புரட்சி அரசாங்கம் , பிரஞ்சு அரசரின் ஆதரவாளர்கள் என்று சந்தேகத்தின் பேரில் 1500 பேரை கொன்று குவித்தார். பின்னர் , பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியப் படைகளை வால்மி என்ற இடத்தில் முறியடித்தன. தேசிய பேரவை ( 1792 – 1795 ) 27 சட்டமன்றம் கலைக்கப்பட்டபிறகு , 1792 ஆம் ஆண்டு ‘ தேசியப் பேரவை ’ கூடியது. பிரான்சில் முடியாட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட பதினாறாம் லூயி மன்னர்மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்மீதான குற்றம் ஒருமனதாக நிரூபிக்கப்பட்டது. சிறிய அளவிலான வாக்கு
வித்தியாசத்தில் அவரது மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. 1793 ஜனவரி 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கில்லடின் மூலமாக அவரது தலை துண்டிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு அரசி மேரி அண்டாய்னட்டும் கில்லடினுக்கு இரையானார். பயங்கர ஆட்சி மன்னரை சிரச்சேதம் செய்வது தொடர்பாக தேசியப் பேரவையில் கருத்து வேறுபாடு தோன்றியது. பேரவையில் பெரும்பான்மை பலம் பெற்றிருந்த ஜாக்கோபியர்களின் கருத்தை மிதவாதிகள் ஏற்கவில்லை. எனவே , மிதவாதிகளைப் பழிவாங்குவதற்காக ஜாகோபியர்கள் புரட்சி விசாரணை மன்றத்தை தோற்றுவித்தனர். இதுவே பயங்கர ஆட்சியின்
தொடக்கமாகும். புரட்சியின் இறுதிக் கட்டமாகவும் இருண்ட கட்டமாகவும் இது அமைந்தது. லயன்ஸ் , மார்செல்ஸ் போன்ற நகரங்களில் கலவரங்கள் வெடித்தன. 1793 ல் புரட்சி அரசாங்கத்திற்கெதிராக ஐரோப்பிய நாடுகள் முதலாவது கூட்டணியை அமைத்தன. ஜாக்கோபியர்கள் அரசியலமைப்பை ரத்து செய்து விட்டு , நிலைமையை சமாளிப்பதற்கென பொது மக்கள் பாதுகாப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தினர். இக்குழுவின் தலைவராக ரோபஸ்பியர் விளங்கினார். நாட்டிற்குள் எஞ்சியிருந்த அரசரின் ஆதரவாளாகளின் கிளர்ச்சிகளை இது நசுக்கியது. அரசரின் ஆதரவாளர்கள் என சந்தேகத்தின்பேரில் பலர்
கொல்லப்பட்டனர். பிரான்சின் சர்வாதிகாரியாகவே ரோபஸ்பியர் மாறி விட்டிருந்தார். ஆனால் , அவரது எதிரிகளால் 1794 ல் கில்லட்டினுக்கு இரையாக்கப்பட்டார். புரட்சியின் முடிவு ரோபஸ்பியரின் வீழ்ச்சியோடு பயங்கர ஆட்சி முடிவுக்கு வந்தது. பொதுமக்களின் கருத்தும் பயங்கர ஆட்சிக்கு எதிராகத் திரும்பியது. புரட்சி விசாரணை மன்றமும் கலைக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்புக்குழுவின் பணிகளும் வரையறுக்கப்பட்டன. ஜாகோபியக்குழு மூடப்பட்டது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் தேசியப் பேரவை கவனம் செலுத்தியது.
நிர்வாகம் 5 பேர் கொண்ட ஒரு இயக்குநர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 500 பேர் அடங்கிய சபையும். மூத்தோர் சபையும் இருந்தன. அப்போது பாரிஸ் நகரில் இருந்த நெப்போலியனிடம் தேசியப் பேரவையைப் பாதுகாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. பாரிஸின் புரட்சிக்கூட்டத்தை கலைத்து விரட்டிய நெப்போலியன் பேரவையைக் காப்பாற்றினார். அதுவே அவரது ஆற்றல்மிக்க வாழ்வின் தொடக்கமாகும். 1795 அக்டோபர் 26 ஆம் நாள் தேசிய பேரவை கலைந்தது. பிரஞ்சு அரசாங்கம் இயக்குநர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. புரட்சியின் விளைவுகள்
1789 ஆம் ஆண்டு பிரஞ்சுப் புரட்சி மனித குல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தது. சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் ஆகிய கருத்துக்கள் உலகம் முழுவதும் பரவின. பூர்போன் முடியாட்சி ஒழிக்கப்பட்டது. கொடுங்கோன்மை , தெய்வீக இறைமை , பிற்போக்குவாதம் , நிலமானிய அமைப்பு போன்றவற்றுக்கு இப்புரட்சி முடிவு கட்டியது. அதே சமயம் , இது பிரான்சில் ஒரு நிலையான குடியரசை ஏற்படுத்த தவறியது. பிரஞ்சுப் புரட்சி வன்முறைக்குத் திரும்பி இறுதியில் நெப்போலியனின் சர்வாதிகார ஆட்சிக்கு வித்திட்டது. கற்றல்அடைவுகள் சட்டம் மற்றும்
அதிகாரம் ஈரவை நெப்போலியன் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெற்ற அறிவு 1. பிரஞ்சுப் புரட்சிக்கான அரசியல் , சமூக பொருளாதார காரணங்கள் 2. வால்டேர் , ரூசோ , மான்டஸ்கியூ போன்ற பிரஞ்சு சிந்தனையாளர்களின் பங்கு 3. பாஸ்டில் சிறையின் வீழ்ச்சியும் புரட்சியின் தொடக்கமும். 4. அரசியலமைப்புக் குழுவும் புதிய அரசியலமைப்பும் 5. தேசியப் பேரவையின் நடிவடிக்கைகள் 6. ரோபஸ்பியரின்கீழ் பயங்கர ஆட்சி. 7. புரட்சியின் முடிவும் விளைவுகளும். பாடம் - 26 வேளாண்மைப்புரட்சியும் , தொழிற்புரட்சியும் கற்றல் நோக்கங்கள் இந்தப்பாடத்தைப் படிப்பதன்மூலம்
மாணவர் அறிந்து கொள்வது 1. வேளாண்மைப் புரட்சியின்போக்கு. 2. தொழிற்புரட்சியின் காரணங்கள் 3. தொழில் உற்பத்தியில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பங்கு. 4. தொழிற்புரட்சியின் நன்மை மற்றும் தீமைகள் வேளாண்மைப் புரட்சி 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தில் வேளாண்மை முறையில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களே வேளாண்மைப் புரட்சி எனப்படுகிறது. வேளாண் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பெருக்கம் காணப்பட்டது. பெருகி வந்த மக்கள் தொகையின் தேவையை அது நிறைவு செய்தது. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு முன்னோடியாக
வேளாண்மைப்புரட்சி திகழ்ந்தது. வேளாண்மைப் புரட்சியின்போது வேளாண் முறையில் நான்கு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன. நிலங்களுக்கு வேலியமைத்தல் , சாகுபடிக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துதல் , பயிற்சுழற்சிமுறை மற்றும் வளர்ப்பு பிராணிகளின் தேர்ந்தெடுத்த பெருக்கம் என்பவையே அந்த நான்கு முக்கிய மாற்றங்களாகும். வேளாண்மைப் புரட்சிக்கு முன்பு ஐரோப்பா முழுவதும் இடைக்காலத்தில் நிலவிய வேளாண்முறையே தொடர்ந்து நீடித்தது. திறந்த வயல்வெளி முறை என்பது நிலமானிய அமைப்பின் தன்மையையே கொண்டிருந்தது. பொதுவான நிலத்தில் குடியானவர்கள் சாகுபடி
செய்து விளைச்சலை தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொண்டனர். 12 ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரிட்டனில் பொது நிலங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வேலியிடப்பட்டன. இந்த வேலியிடும் முறை 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வேகமாகப் பரவியது. செம்மறியாடுகளின் வளர்ப்பு லாபகரமானதாக விளங்கியதால் வேலியிடும் முறை வேகமாகப் பின்பற்றப்பட்டது. இதனால் , பல குடியானவர்கள் வேலையிழந்தனர். 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் திருச்சபை வேலியிடும் முறையை கண்டித்தது. அதைத் தடுக்க சட்டங்களும் இயற்றப்பட்டன. இருப்பினும் , 18 ஆம் நூற்றாண்டில்
வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்தமையால் , வேலியிடப்பட்ட நிலங்களின் தேவை பெருகியது. இதற்காக அரசு பல சட்டங்களை இயற்றத் தொடங்கியது 1801 ஆம் ஆண்டு பொது வேலியிடும் சட்டம் இயற்றப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வேலியிடும் பணி நிறைவடைந்தது. இக்காலத்தில் சாகுபடிமுறையில் பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. விதைப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. டவுண்ஷெண்ட் என்பவரால் பயிர்சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நிலங்களின் வளம் அதிகரித்தது. பண்ணை விலங்குகளின் உற்பத்தியில்
நவீன அறிவியல் முறையை பிளாக்வெல் என்பவர் கொண்டுவந்தார். குதிரையால் இழுக்கப்பட்ட கலப்பைகள் , சமன்படுத்தும் கருவிகள் , இடத்துக்கு இடம் மாற்றி எடுத்துச் செல்லக்கூடிய கதிரடிக்கும் இயந்திரம் உரம் தெளிக்கும் இயந்திரம் , பல கலப்பைகளைக் கொண்ட இயந்திரம் , பால் உற்பத்திக்கான இயந்திரங்கள் போன்றவற்றின் பயன்பாட்டினால் வேளாண் உற்பத்தி முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் உணவு உற்பத்தி அதிகரித்தது. பிற வேளாண் பொருட்களின் உற்பத்தியும் பெருகியது. தொழிற்புரட்சி பிரான்சைச் சேர்ந்த ஜார்ஜ் மிஷ்லெட் மற்றும் ஜெர்மெனியின் பிரடரிக்
ஏங்கல்ஸ் ஆகிய ஐரோப்பிய அறிஞர்கள் ‘ தொழிற்புரட்சி ’ என்ற சொல்லை பயன்படுத்தினர். 1764 முதல் 1820 வரை இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியைக் குறிப்பிடுவதற்காக இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது. பின்னர் ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் , அமெரிக்காவிலும் அதேபோன்ற மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த நாடுகள் மற்றும் உலகின் இதர பகுதிகளிலும் கூட தொழிற்புரட்சி சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்காலத்தில் இங்கிலாந்தில் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட
மாற்றங்களில் புதிய வகை இயந்திரங்களுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. கைத்தொழில் மற்றும் கைத்தறித் தொழில்களுடன் ஒப்பிடும்போது பெருமளவு உற்பத்திக்கு இவை சாத்தியமாக இருந்தன. துணி மற்றும் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. பிரிட்டனின் தொழிற்சாலைகளில் நீராவியால் இயங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நீராவி சக்தியைப் பயன்படுத்தி கப்பல்களும் ரயில்களும் விரைவாக இயக்கப்பட்டன. தொழிற்புரட்சியில் ஒருசிலர் நன்மையடைந்த போதிலும் , தொடக்க காலங்களில் மகளிரும் , குழந்தைகளும் மோசமான வாழ்க்கை
மற்றும் பணி நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் எதிர்ப்புகள் தோன்றி , தொழிலாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கென அரசாங்கம் சட்டங்களை இயற்ற வேண்டியதாயிற்று. தொழிற்புரட்சிக்கான காரணங்கள் இங்கிலாந்தின் சாதகமான புவியியல் அமைப்பு வேளாண்மை புரட்சியின் தாக்கம் புதிய கண்டுபிடிப்புகளும் , இயந்திரங்களின் அறிமுகமும் தொழில் முனைவோர்களிடம் காணப்பட்ட ஆர்வம் இங்கிலாந்தில் ஏற்பட்ட முதலீட்டு வளர்ச்சி இங்கிலாந்திடம் இருந்த குடியேற்றங்கள் கச்சாப்பொருட்க களை உற்பத்தி செய்வதற்கும் , உற்பத்திப் பொருட்களுக்கு
சந்தையாகவும் இருந்தன. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஜவுளித் தொழில் தொழிற்புரட்சிக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளே அடிப்படையாக அமைந்தன. ஆரம்பகால இயந்திர கண்டுபிடிப்புகள் ஜவுளித் தொழில் சார்ந்தவையாக இருந்தன. 1733 ல் ஜான்கே என்பவர் கண்டுபிடித்த எறிநாடா நெசவுத் தொழிலை மேம்படுத்தியது. 1764 ல் ஹர்கிரீவ்ஸ் என்பவர் நூற்கும் ஜென்னியை கண்டுபிடித்தார். ஒரே சமயத்தில் எட்டு இழைகளை நூற்கக்கூடியதாக இது விளங்கியது. 1769 ல் ஆர்க்ரைட் என்பவர் நூற்கும் ஜென்னியில் மேலும் மாறுதல்களை செய்தார். 1779 ல் கிராம்டன் மேலும் அதனை
ஆற்றல்மிக்கதாக மாற்றினார். 1785 ல் கார்ட்ரைட் என்பவர் விசைத்தறியை கண்டுபிடித்தார். அமெரிக்கரான எலிவிட்னே பருத்தியிலிருந்து வேகமாக விதைகளைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். 1846 ல் எலியாஸ் ஹோவே என்பவரின் படைப்பான தையல் இயந்திரம் ஆடை உற்பத்தியை விரைவு படுத்தியது. இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளால் ஜவுளித் தொழில் மட்டுமல்லாமல் பிற தொழில்களும் வேகமாக முன்னேறின. தற்காலத்தில் காணப்படும் சிக்கல்மிகு இயந்திரங்களும் இவ்வாறு தான் பரிணாம வளர்ச்சி பெற்றன. நீராவி இயந்திரம் கனரக
இயந்திரங்கள் எரிசக்தியின்றி இயங்கமுடியாது. இதற்குத் தீர்வாகத்தான் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. 1765 ல் ஜேம்ஸ் வாட் நீராவி சக்தியை இயந்திரங்களுக்கு பொருத்திப் பார்த்தார். முன்னும் பின்னும் இயக்குகிற பிஸ்டன் பொருத்திய நீராவி இயந்திரம் அவரால் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஜவுளித் துறையில் நீராவி இயந்திரம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்து வளர்ச்சி ஜேம்ஸ் வாட் தொழில்துறையின் வளர்ச்சிக்கும் போக்குவரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கச்சாப்பொருட்களை தொழில்சாலைகளுக்கு கொண்டுவரவும் , உற்பத்தி
செய்யப்பட்ட பொருட்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவும் போக்குவரத்து இன்றியமையாததாகும். 17 ஆம் நூற்றாண்டுவரை கூட பெருவழிச்சாலைகள் மோசமாகவே காணப்பட்டன. குதிரை பூட்டிய வாகனங்கள் மட்டுமே சாலைகளில் ஓரளவு வேகமாக செல்லக்கூடியதாக இருந்தன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஜான் மெக்காடம் ( 1756 – 1836 ) என்பவர் கெட்டியான மேற்பரப்பு கொண்ட சாலையை அமைத்தார். சேற்றுக்குப்பதிலாக தார்க்கலவை கொண்ட கற்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இங்கிலாந்தின் இந்த வழிமுறையை பிரான்சும் பின்பற்றியது. அரசின் ஆதரவுடன் பல
பெருவழித்தடங்கள் அமைக்கப்பட்டன. பெருவழித்தடங்களை அமைப்பதற்கும் பராமரிக்கவும் பெரும் செலவு பிடித்தது. இது உள்நாட்டு நீர் வழிப்போக்குவரத்து வளர்ச்சிக்கு வித்திட்டது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் இங்கிலாந்து , பிரான்ஸ் , அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரக் கணக்கான மைல்கள் தூரத்திற்கு செயற்கையான கால்வாய்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. 1761 ல் இங்கிலாந்தின் வொர்ஸ்லி என்ற இடத்திலிருந்து மான்செஸ்டர் வரை வெட்டப்பட்ட கால்வாய் , நிலக்கரியை
எரிஉலைக்குக் கொண்டு சுரங்கத்திலிருந்து செல்ல பயன்பட்டது. ஜார்ஜ் ஸ்டீவன்சனின் ரயில் இயந்திரம் நதி மற்றும் கால்வாய் போக்குவரத்திலும் பெரும்குறைகள் காணப்பட்டன. பயணம் மெதுவாக இருந்ததோடு பராமரிப்பு செலவும் அதிகமாக இருந்தது. புவியியல் காரணங்களால் குறிப்பிட்ட பகுதிகளில்மட்டுமே கால்வாய் போக்குவரத்து சாத்தியமானதாக இருந்தது. இப்பிரச்னைகளுக்கு தீர்வாகத் தான் ரயில்பாதைகள் உருவாக்கப்பட்டன. முதலில் மரங்களால் அமைக்கப்பட்ட பாதைகளில் குதிரைகளால் இழுக்கப்பட்ட வண்டிகள் செலுத்தப்பட்டன. பின்னர் இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டு
நீராவி இயந்திரத்தால் இயங்கும் ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இது போக்குவரத்தில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது. 1814 ல் ஜார்ஜ் ஸ்டீவன்சன் முதலாவது ரயில் இயந்திரத்தை உருவாக்கி இயக்கினார். 1825 ல் இங்கிலாந்தில் ஸ்டாக்டன் மற்றும் டார்லிங்டன் என்ற இடங்களுக்கிடையே ரயில்போக்குவரத்து தொடங்கப்பட்டது. ரயில்பாதைக்காலம் இவ்வாறுதான் தொடங்கியது. செய்தித் தொடர்பு போக்குவரத்தும் , தொழில் தற்கால நிறுவனங்களும் விரைவான மற்றும் ஆற்றலுடன் கூடிய தகவல் தொடர்பின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. தந்திமுறை செயல்பாட்டுக்கு
வருவதற்கு முன்னர் புறாக்கள் மூலமே தகவல்கள் விரைவாக அனுப்பப்பட்டன. பாரடே , வோல்டா , ஆம்பியர் மற்றும் பிராங்க்லின் ஆகியோரது அடிப்படையான ஆய்வுகளின் காரணமாகவே முதலாவது மின்னணு தந்தி முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. இது ஜெர்மனி , இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தனித்தனியாக முறையே ஸ்டீன்ஹில் , வீட்ஸ்டோன் மற்றும் மார்ஸ் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 1845 ஆம் ஆண்டுக்குப் பிறகு தந்தி சாதனங்கள் பரவலாக நிறுவப்பட்டன. கிரஹாம் பெல் 1866 ல் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கும்
தந்திக்கம்பி அமைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் , உலகின் முக்கிய வர்த்தக மையங்கள் அனைத்தும் தொலைத் தொடர்புகளால் இணைக்கப்பட்டன. 1840 ல் அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது. 1875 ல் அனைத்துலக அஞ்சல் குழுமம் ஏற்படுத்தப்பட்டதால் பன்னாட்டு அஞ்சல் போக்குவரத்து எளிதாகியது. 1876 ல் கிரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். மின் விளக்குகள் தொழிற்சாலைகள் , போக்குவரத்து , நடவடிக்கைகள் , எடிசன் பொழுதுபோக்கு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு செயற்கையான விளக்கொலி முக்கிய பங்காற்றுகிறது. 1784 ல் எண்ணெய்
விளக்குகளுக்கு ஏற்ற பர்னர் உருவாக்கப்பட்டது. பின்னர் அது கெரசின் விளக்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் செயற்கை வெளிச்சத்திற்கு எரிவாயுக்கள் பயன்படுத்தப்பட்டன. 1821 ல் டேவி என்பவர் மின்சார வளையத்தைக் கண்டுபிடித்தார். 1879 ல் எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்தார். சமூக இரும்பு எஃகு மரம் , நீர் , காற்று போன்றவற்றினாலான பழைய தொழில் நுட்பங்களை நிலக்கரி மற்றும் இரும்புத் தொழில் மாற்றியமைத்தது. ஜான் ஸ்மீட்டன் சுழற்காற்றாடியுடன் கூடிய உருக்கு உலையை வடிவமைத்தார்.புதிய வகை இயந்திரங்களுக்கு தரமான
இரும்பு தேவைப்பட்டது. ஹென்றி கார்ட் மற்றும் பீட்டர் ஆனியன்ஸ் என்பவர்கள் 1784 ல் இரும்பு உருக்காலைகளை அறிமுகப்படுத்தினர். 1740 ல் எஃகு உற்பத்தியை ஷன்ட்ஸ்மேன் என்பவர் ஷெப்பீல்டில் தொடங்கினார். பின்னர் , ஹென்றி பாஸ்மர் என்பவர் மலிவான , விரைவான எஃகு உற்பத்தி முறையைக் கண்டுபிடித்தார். 1777 ல் முதலாவது இரும்புப் பாலம் அமைக்கப்பட்டது. 1790 ல் முதலாவது இரும்பிலான கப்பல் கட்டப்பட்டது. தொழிற்புரட்சியின் நன்மைகள் நகரமயமாக்கம் தொழிற்புரட்சி அறிமுகப்படுத்திய தொழிற்சாலை முறைகளினால் நகரங்கள் உருவாயின. மான்செஸ்டர் ,
பர்மிங்ஹாம் , லீட்ஸ் மற்றும் ஷெப்பீல்ட் போன்ற நகரங்கள் இங்கிலாந்தில் தோன்றின. ஆயிரக்கணக்கான மக்கள் கிராமப்புறங்களை விட்டு வெளியேறி வேலைதேடி நகரங்களில் குடியேறத் தொடங்கினர். அரைநூற்றாண்டு காலத்திற்குள் மான்செஸ்டரின் மக்கள்தொகை ஆறு மடங்கு அதிகரித்தது. இயந்திரங்கள் சக்திவாய்ந்த இயந்திரங்களின் அறிமுகத்தால் பொருள் உற்பத்தி விரைவாக அதிகரித்தது. அறிவாற்றல் இயக்கம் மக்களின் அறிவுத்திறன் அதிகரித்தது. பஸ்கள் , கல்லூரிகள் செய்தித்தாள்கள் , நூலகங்கள் , வானொலி போன்றவை முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் வேகமாக வளர்ந்தன.
காரல் மார்க்ஸ் செயின்ட் சைமன் போன்ற அறிஞர்கள் ‘ தொழிற்புரட்சி ’ குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். வேலை வாய்ப்பு பெருக்கம் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால் ஆண் , பெண் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பெருகியது. தொழிற்புரட்சியினால் விளைந்த தீமைகள் புதிய சமூக சிக்கல்கள் தொழிற்சாலை நகரங்களின் பெருக்கத்தால் எழுந்த பிரச்னைகளுக்கு சுலபமான தீர்வுகள் காணப்படவில்லை. குடியிருப்பு வசதிகள் , சுகாதாரம் , சுற்றுப்புறத் தூய்மை போன்றவை போதுமான அளவுக்கு ஏற்படுத்தப்படவில்லை. நோய்களும் , குற்றங்களும் பெருகின. குறைந்த
ஊதியத்திற்கு மகளிரும் , சிறாரும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் நாளுக்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்தனர். முதலாளித்துவம் தொழிற்சாலை முறையினால் பணப்புழக்கம் அதிகரித்தது. ஆனால் , செல்வம் ஒரு சிலரிடமே குவிந்ததால் முதலாளித்துவம் வளர்ந்தது. வர்க்கபேதம் தொழிற்புரட்சியினால் சமுதாயத்தில் பூர்ஷ்வா எனப்பட்ட நடுத்தர செல்வந்தர்கள் என்ற வர்க்கமும் , தொழிலாளர் வர்க்கமும் தோன்றின. உற்பத்தியாளர்கள் , வர்த்தகர்கள் , பாடம் – 27 முதல் உலகப்போர் கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் அறிந்து கொள்வது. 1.
குடியேற்றக் கொள்கை , பேராதிக்கக் கொள்கை என்ற கோட்பாடுகளுக்கான விளக்கம் மற்றும் அவற்றின் தாக்கம். குடியேற்றக் கொள்கை 2. முதல் உலகப்போருக்கான காரணங்கள் 3. முதல் உலகப் போரின் போக்கு 4. முதல் உலகப் போரின் முடிவும் விளைவுகளும் குடியேற்றக் கொள்கை என்பது ஒரு நாடு தனது இறைமையைதன் எல்லையைக் கடந்து பிற பகுதிகளின்மீது செலுத்துவதாகும். குடியேற்றங்களை ஏற்படுத்துபவர்கள் பொதுவாக , தாங்கள் குடியேறிய பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள் , தொழிலாளர் திறன் , சந்தைகள் போன்றவற்றின்மீது ஆதிக்கம் செலுத்துவர். மேலும் , தங்களின் சமூக
பண்பாட்டுக் கூறுகள் , சமய மற்றும் மொழி ஆகியவற்றை குடியேற்றங்களில் வாழும் மக்களின்மீது திணிப்பார்கள். 15 ஆம் நூற்றாண்டில் ' கண்டுபிடிப்புகளின் காலம் ’ தொடங்கிய பின் ஐரோப்பிய குடியேற்றக் கொள்கை தொடங்கியது. அமெரிக்க கண்டத்தையும் , ஆப்ரிக்கா , மத்திய கிழக்கு , இந்தியா மற்றும் கிழக்காசியாவின் கடற்கரைப் பகுதிகளிலும் போர்ச்சுகீசியரும் ஸ்பானியரும் ஆய்வுகளை மேற்கொண்டனர். 17 ஆம் நூற்றாண்டுவாக்கில் இங்கிலாந்து , பிரான்சு மற்றும் ஹாலந்து ஆகிய நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு கடல்கடந்த பேரரசுகளை உருவாக்கினர்.
இப்போட்டியில் ஸ்பெயின் , போர்ச்சுகல் நாடுகளும் கலந்துகொண்டன. ஆனால் , புதிய உலகில் தங்களது குடியேற்றங்களை இழந்தபிறகு ஸ்பெயினும் போர்ச்சுகல்லும் பலவீனமடைந்தன. பழைய உலகம் எனக் கூறப்பட்ட குறிப்பாக தென் ஆப்ரிக்கா , இந்தியா , தென்கிழக்காசியப் பகுதிகளில் பிரிட்டன் , பிரான்சு , ஹாலந்து ஆகிய நாடுகள் தங்களது குடியேற்றங்களை அமைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தொழிற்புரட்சியின் காரணமாக ‘ புதிய வகை பேராதிக்கம் ’ தோன்றியது. புதிய குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் அவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் ஐரோப்பிய
நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போட்டி முதல் உலகப்போருக்கு இட்டுச் சென்றது. பேராதிக்கக் கொள்கை குடியேற்ற நாடுகளின்மீது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது பேராதிக்கம் எனப்படுகிறது. ஒரு நாடு தொலைதூரப் பகுதிகளில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதைக் குறிப்பதற்கு இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. பேராதிக்க காலம் என்பது , 1860 ஆம் ஆண்டு தொடங்கி பெரிய ஐரோப்பிய நாடுகள் பிற கண்டங்களில் குடியேற்றங்களை அமைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து தொடங்குகிறது. 1500 களின் மத்தியவாக்கில் பிரிட்டனும் பிரான்சும் ஆப்ரிக்க மற்றும் அமெரிக்க கண்டங்களில்
தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியதை குறிக்கவே ‘ பேராதிக்கம் ’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பேராதிக்கம் என்பது முதலாளித்துவத்தின் Page உச்ச கட்டம் என்றும் கூறப்படுகிறது. புதிய சந்தைகளும் , கச்சாப் பொருட்களும் இக்காலத்தில் பேராதிக்க நாடுகளுக்கு தேவைப்பட்டன என்பதை இது உணர்த்துகிறது. லெனின் , ரோஸா லக்சம்பர்க் போன்றவர்கள் முதலாளித்துவம் தங்களது நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் எவ்வாறு விரிவுபடுத்தப்படுகிறது என்பதைக் கூறியுள்ளனர். பொருளாதார சந்தை தொழிற்புரட்சியின் விளைவாக , ஐரோப்பிய நாடுகள் தங்களது உற்பத்தி
பொருட்களுக்கான புதிய சந்தைகளைத் தேடவேண்டி வந்தது. அதேபோல் , அவர்களது தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருட்களும் தேவைப்பட்டன. இத்தகைய இரட்டைத் தேவைகளினால் , ஆசியா , ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பகுதிகளில் அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டன. தொலைத்தொடர்பு வளர்ச்சி அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது. நீராவிக்கப்பல்கள் , ரயில்பாதைகள் , சாலைகள் மேம்படுத்தப்பட்டன. வெல்லப்பட்ட நாடுகளின்மீது
பேராதிக்கம் நன்கு வலுப்படுவதற்கு இவை பேருதவியாக அமைந்தன. தீவிர தேசியத்தின் எழுச்சி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை தீவிர தேசியக்காலம் என்று கூறலாம். பல நாடுகள் பிறமக்களைவிட தாமே உயர்ந்தவர் என்ற உயர்வு மனப்பாங்கை வளர்த்துக்கொண்டன. தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் , வலிமையை பெருக்கிக் கொள்ளவும் மேலும் குடியேற்றங்கள் தேவை என்பதை அந்த நாடுகள் உணர்ந்தன. இங்கிலாந்து , பிரான்சு , ஜெர்மனி ஆகிய நாடுகளின் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் பேராதிக்கக் கோட்பாட்டை வளர்க்க நிறுவனங்களை ஏற்படுத்தினர். தங்களது பகுதிகளை
பேரரசுகள் என கூறிக்கொள்வதில் ஐரோப்பிய நாடுகள் பெருமிதம் கொண்டன. ‘ நாகரீகத்தூதுக்குழு ' ஐரோப்பியர் பலரின் எண்ணத்தில் பேராதிக்கத்தின் விரிவாக்கம் என்பது ஒரு புனிதச் செயலாகவே இருந்தது. உலகின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களை நாகரீகப்படுத்தும் வழியாகவே அவர்கள் பேராதிக்கத்தை கருதினர். புதிய நிலப்பகுதிகளைக் கண்டறிந்தவர்கள் , சமயப் பரப்பாளர்கள் ஆகியோர் பேராதிக்கத்தை பரப்புவதில் பங்கேற்றனர். முதல் உலகப் போர் ( 1914 – 1918 ) காரணங்கள் உடன்படிக்கைகள் முதல் உலகப்போருக்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். ரகசிய
ஒப்பந்தங்களை செய்துகொள்ளும் முறையே அவற்றில் முக்கியமானதாகும். 1914 ஆம் ஆண்டுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகள் இரு அணிகளாக காணப்பட்டன. முதல் உலகப் போருக்கு முன்பு ஐரோப்பிய அரசியலில் இத்தகைய பிளவை ஏற்படுத்தியது ஜெர்மனியே ஆகும். பிரான்சை தனிமைப்படுத்துவதற்காக , ஆஸ்திரியாவுடன் ஜெர்மனி ஒப்பந்தம் செய்து கொண்டது ரஷ்யாவுடன் மற்றொரு உடன்படிக்கையை செய்து கொண்டதன் மூலம் பிஸ்மார்க் மூன்று பேரரசர்கள் கழகத்தை உருவாக்கினார். பின்னர் , ஜெர்மனி ரஷ்யாவை பொருட்படுத்தவில்லை. எனவே , ரஷ்யா இக்கூட்டிலிருந்து வெளியேறியது. ஆனால் ,
ஜெர்மனி ஆஸ்திரியாவுடன் தொடர்ந்து உறவு கொண்டிருந்தது. இதற்கு இருவர் உடன்படிக்கை என்று பெயர். இத்தாலி இவர்களுடன் சேர்ந்தபிறகு அது முக்கூட்டு உடன்படிக்கை எனப்பட்டது. இதற்கிடையில் , ரஷ்யா , பிரான்சின் பக்கம் திரும்பியது. ஏற்கனவே , 1894 ல் ஆஸ்திரிய ஜெர்மனி கூட்டுறவுக்கு எதிராக பிரான்ஸ் ரஷ்ய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அப்போது இங்கிலாந்து தனித்திருத்தல் கொள்கையை பின்பற்றி வந்தது. தனிமையை விட்டு ஜெர்மனியுடன் இணைய இங்கிலாந்து விரும்பியது. அந்த முயற்சி தோல்வியடையவே , 1904 ல் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1907 ல் ரஷ்யாவும் இக்கூட்டில் சேர்ந்தது. இது ‘ மூவர் நட்புறவு ’ எனப்பட்டது. இவ்வாறு ஐரோப்பா இரண்டு அணிகளாகியது. இந்த ஒப்பந்தங்களின் ரகசியத்தன்மையே , 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போருக்கு வழிவகுத்தது. ராணுவக் குவிப்பு ஐரோப்பிய நாடுகள் தங்களது தரைப்படை மற்றும் கடற்படைகளை தொடர்ந்து பெருக்கிக்கொண்டே வந்தன. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் மற்றவற்றுக்கு எதிரான , பயம் , வெறுப்பு மற்றும் சந்தேகம் கொள்ள ஆயுதக்குவிப்பு காரணமாயிற்று. இங்கிலாந்தும் ஜெர்மனியும் கடற்படையில் வலிமை பெற்று விளங்கின. கடற்படை ஆயுதங்களை பெருக்குவதில்
இருநாடுகளுக்கும் இடையே போட்டி நிலவியது. ஜெர்மனியில் கட்டப்படும் ஒரு கப்பலுக்கு பதில் இங்கிலாந்து இரண்டு கப்பல்களைக் கட்டியது. குறுகிய நாட்டுப்பற்றும் இப்போருக்கு மற்றொரு காரணமாகும். ஒரு நாட்டின்மீது பற்று என்பது மற்றொரு நாட்டின் மீது காட்டப்படும் வெறுப்பு என்று உணரப்பட்டது. எடுத்துக்காட்டாக ஜெர்மனியை நேசிக்கவேண்டுமானால் பிரான்சை வெறுக்கவேண்டும். அதேபோல பிரஞ்சுக் காரர்களும் ஜெர்மனியரை வெறுத்தனர். கிழக்கு ஐரோப்பாவில் குறுகிய நாட்டுப்பற்று தீவிரமாக பின்பற்றப்பட்டது. செர்பியர்கள் ஆஸ்திரியா ஹங்கேரியை வெறுத்தனர்.
அல்சேஸ் லொரேன் பகுதியை திருப்பவும் பெறவேண்டும் என பிரான்சு விரும்பியதும் முதல் உலகப் போருக்கு காரணமாக அமைந்தது. 1871 ல் பிஸ்மார்க் அல்சேஸ் லொரேன் பகுதிகளை பிரான்சிடமிருந்து கைப்பற்றி ஜெர்மனியுடன் இணைத்தார். அதிலிருந்தே இருநாடுகளுக்கும் இடையே பகைமை வளர்ந்து வந்தது. இந்த காரணத்தினால் தான் , பிரான்சை தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் ஜெர்மனி பிறநாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டது. ஜெர்மானியப் பேரரசரான இரண்டாம் வில்லியமும் முதல் உலகப்போர் தோன்ற காரணமாக இருந்தார். ஜெர்மனியை ஒரு வலிமைமிக்க நாடாக உருவாக்க அவர்
விரும்பினார். பன்னாட்டு விவகாரங்களில் எந்தவொரு சமரசத்திற்கும் அவர் தயாராக இல்லை. கிரேட் பிரிட்டனின் வலிமை குறித்தும் அவர் தவறானதொரு கணிப்பையே கொண்டிருந்தார். இரண்டாம் வில்லியம் பிரிட்டிஷாரின் குணாதிசயம் பற்றி கொண்டிருந்த கருத்தே முதல் உலகப் போருக்கு இட்டுச் சென்றது. ஜெர்மனியரிடம் காணப்பட்ட ‘ பிரஷ்ய உணர்வு ’ போருக்கு வழிவகுத்தது. உலகில் போர் புரிவது என்பது சட்டபூர்வமானதே என்று பிரஷ்யர்கள் கற்பிக்கப்பட்டிருந்தனர். போர் என்பது பிரஷ்யாவின் தேசியத் தொழில் எனக் கூறலாம். போர்குறித்த இத்தகைய தத்துவங்கள் ஜெர்மானிய
இளைய தலைமுறையிடம் ஆழமாகப் பதிந்திருந்தது. ஆஸ்திரியா - ஹங்கேரியிடமிருந்து டிரன்டினோ மற்றும் டிரியஸ்டி துறைமுகப் இத்தாலி விரும்பியது. இப்பகுதிகளில் பகுதிகளை திரும்பப் பெற்வேண்டும் இத்தாலியர்கள் அதிகம் வசித்துவந்தனர். ஆனால் , அவை ஆஸ்திரியா. ஹங்கேரி வசம் இருந்தன. ஏட்ரியாடிக் கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதில் இத்தாலிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆஸ்திரியா இத்தகைய போட்டிக்கு ஆயத்தமாக இல்லை என்பதால் இருநாடுகளுக்கும் இடையே வெறுப்புணர்வு அதிகரித்தது. என கீழைச்சிக்கலும் போருக்கு முக்கிய
காரணமாக அமைந்தது. பால்கன் பகுதியில் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. துருக்கியின் முறைகேடான ஆட்சி வெறுப்புணர்வை மேலும் அதிகரித்தது. மாசிடோனியாவைக் கட்டுப்படுத்துவதற்காக கிரீஸ் , செர்பியா , பல்கேரியா ஆகிய நாடுகள் போட்டி போட்டன. போஸ்னியா சிக்கலின்போது ரஷ்யா , செர்பியாவை ஆதரித்தது. அனைத்து ஸ்லாவ் உணர்வு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. அல்சேஸ் லொரேன் பிரச்னைபோலவே , பால்கன் பகுதியில் போஸ்னியா ஹெர்சிகோவினா பற்றிய சிக்கல் நிலவியது. 1878 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் மாநாட்டின் முடிவுகளின்படி ஹெர்சிகோவினா பகுதிகள்
ஆஸ்திரியா ஹங்கேரிக்கு கொடுக்கப்பட்டன. இதனை செர்பியா கடுமையாக எதிர்த்தது. போஸ்னியா ஆஸ்திரியா ஹங்கேரியிடமிருந்து அவற்றை பிரித்து செர்பியாவுடன் இணைக்கும் நோக்கத்துடன் செர்பியாவில் பலத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் , செர்பியா மற்றும் ஆஸ்திரியா ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கிடையே பகைமை மூண்டது. 1909 ஆம் ஆண்டுக்குப்பின் பகைமை கொழுந்து விட்டெரிந்தது. ரஷ்யாவின் ஆதரவு செர்பியாவுக்கு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இருவரும் ஸ்லாவ் இனத்தவர்களேயாகும். உடனடிக்காரணம் ஆஸ்திரிய அரியணைக்கு வாரிசான இளவரசன் ஆர்ச்டியூக் பிரான்சிஸ்
பெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டதே முதல் உலகப் போருக்கு உடனடிக் காரணமாகும். 1914 ஜூன் 28 ஆம் நாள் போஸ்னிய தலைநகர் சிராஜிவோ நகரில் செர்பிய இளைஞன் ஒருவனால் ஆர்ச்டியூக் பிரான்சிஸ் பெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை பல நாடுகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. ஏற்கனவே இருநாடுகளுக்கும் இருந்த பகையால் , இந்த நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்தக் கொள்ள ஆஸ்திரியா - ஹங்கேரி நினைத்தது. தங்களது இளவரசனும் அவனது மனைவியும் கொல்லப்பட்டதற்காக சில நிபந்தனைகளை விதித்து செர்பியாவுக்கு இறுதி எச்சரிக்கை ஒன்றை ஆஸ்திரியா
அனுப்பியது. செர்பியாவின் பதில் ஆஸ்திரியாவுக்கு திருப்தியளிக்கவில்லை. ஜெர்மனியின் பக்கபலத்துடன் ஆஸ்திரியா – ஹங்கேரி செர்பியா மீது போர் தொடுத்தது. செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் தனது படைகளைக் குவித்தது. இவ்வாறு முதல் உலகப்போர் தொடங்கியது. ஆர்ச் டியூக் பெர்டினாண்ட் போரின் போக்கு போரின்போது , ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும் ' கூட்டுறவு நாடுகள் ’ எனவும் , இங்கிலாந்தும் அதன் நட்பு நாடுகளும் ‘ நேச நாடுகள் ’ எனவும் அழைக்கப்பட்டன. ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக ஜெர்மனி போரில் இறங்கியது. விரைவில் இரு அணியிலிருந்த
நாடுகளும் அவரவர் அணிக்காக களம் இறங்கின. துருக்கியும் பல்கேரியாவும் ஜெர்மனிக்கு ஆதரவாகப் போரிட்டன. முக்கூட்டணியை விட்டு வெளியேறிய இத்தாலி எதிரணியில் சேர்ந்து ஆஸ்திரியாவின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை திரும்பவும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் போரிட்டது. இங்கிலாந்து ஜெர்மனிக்கெதிராகப் போரில் இறங்கியது. பிரெஞ்சு மண்ணில்தான் பெரும்போர்கள் நடைபெற்றன. வெர்டூன் போரில் நேச நாடுகள் வெற்றிபெற்றன. ஜெர்மனி , தமது நீர்மூழ்கிக்கப்பல்களை பெருமளவு பயன்படுத்தத் தொடங்கியது. கப்பற்படையின் பன்னாட்டு விதிகள் அனைத்தும்
காற்றில் விடப்பட்டன. 1917 ஆம் ஆண்டுவரை ரஷ்யா நேச நாடுகளின் பக்கம் போரிட்டது. புதிதாகப் லிடோவிஸ்க் என்ற பதவியேற்ற போல்ஷ்விக் அரசாங்கம் ஜெர்மனியுடன் பிரஸ்ட் உடன்படிக்கை செய்து கொண்டதால் ரஷ்யா போரிலிருந்து விலகியது. ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்களால் லூசிடானியா கப்பல் தாக்கப்பட்டது. அதில் பயணம் செய்த அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். எனவே , அமெரிக்கா ஜெர்மனிமீது போர் தொடுத்தது. பெருமுயற்சி செய்தும் ஜெர்மனியால் தொடர்ந்து போரிட முடியாததால் 1918 நவம்பரில் நேச நாடுகளிடம் சரணடைந்தது. ஜெர்மானியப் பேரரசர் கெய்சர் வில்லியம்
வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்தார். அவர் தமது அரியணையைத் துறந்துவிட்டு ஹாலந்துக்கு தப்பியோடினார். 1918 நவம்பர் 11 ஆம் நாள் ஜெர்மனி கெய்சர் வில்லியம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஜெர்மனியின் கூட்டாளி நாடுகளும் நேசநாடுகளின் படைகளால் முறியடிக்கப்பட்டன. போரின் விளைவுகள் முதல் உலகப் போர் பெருத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தயது. 10 மில்லியன் பேர் இறந்திருக்கலாம் என்றும் 20 மில்லியன் மக்கள் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிள் வாழும் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு
ஆளாயினர். மக்களின் சொத்துக்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. போருக்கான நேரடி செலவு 200 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாகவும் , மறைமுக செலவு 150 பில்லியன் டாலர்களுக்கு மேலும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தீயைக்கக்கும் குண்டுகள் , எறி குண்டுகள் , விஷவாயு போன்ற கொடூரமான ஆயுதங்கள் இப்போரில் பயன்படுத்தப்பட்டன. கனரக டாங்குகள் , நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆகாய விமானங்களும் இப்போரில் ஈடுபடுத்தப்பட்டன. போரில் பங்குபெற்ற நாடுகளின் பொருளாதாரத்தை இந்த போர் சின்னாபின்ன மாக்கியது. போரின் தொடக்கத்திலேயே சுமார் 25
நாடுகள் நேசநாடுகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. போர் முடியுமுன்பே , வெற்றி பெற்ற நாடுகள் போர் ஏற்படுத்திய அழிவை உணரத் தொடங்கின. இந்த நாடுகள் அனைத்திலும் தேசியக் கடன்கள் அதிகரித்தன. உலகப் பொருளாதாரமே சீர்குலைந்தது. 1919 ஜூன் 28 ஆம் நாள் ஜெர்மனி , வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திடும் படி வற்புறுத்தப்பட்டது. அது ஒரு திணிக்கப்பட்ட கற்றல் நோக்கங்கள் பாடம் - 28 1917 ஆம் ஆண்டு ரஷ்யப்புரட்சி இந்தப்பாடத்தை கற்பதன் மூலம் மாணவர் அறிந்து கொள்வது 1. ரஷ்யப் புரட்சிக்கான காரணங்கள் 2. ரஷ்யாவில் சோஷலிஸ்டுகளின் எழுச்சி
3. ரஷ்யப் புரட்சியின் போக்கு 4. புரட்சியின் முடிவும் , விளைவுகளும் 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சி 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வாகும். காரர்ல் மார்க்சின் சமத்துவக் கொள்கையும் , உழைப்பாளர் புரட்சியும் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ரஷ்யா மிகப்பெரிய , வலிமை வாய்ந்த நாடாகும். 1812 ல் நெப்போலியன் போனபார்ட்டால் கூட ரஷ்யாவைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் , 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யா தனது வலிமையை இழந்தது. இத்தருணத்தில் ரோமனாவ் வம்சம் ரஷ்யாவை ஆட்சிபுரிந்தது. புரட்சியின்போது இரண்டாம் சார்
நிக்கோலஸ் ரஷ்யாவின் அரசராக இருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் ரஷ்யா பல்வேறு உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் விளைவாக 1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சியினால் , சார் மன்னரின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி புரட்சியை முன்னின்று நடத்தியது. புரட்சியின் பயனாக சோவியத் சோஷலிச குடியரசுகளின் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அது 1991 ஆம் ஆண்டுவரை நீடித்தது. ரஷ்யப் புரட்சிக்கான காரணங்கள் அரசியல் காரணங்கள் 1904 - 05 ஆம்
ஆண்டுகளில் ரஷ்யா ஜப்பானுடன் போரிட்டது. இ சிறிய ஆசிய நாடான ஜப்பான் , பெரிய ஐரோப்பிய நாடான ரஷ்யாவை ஜப்பான் போரில் முறியடித்தது. இதனால் , ரஷ்யாவின் புகழ் உள்நாட்டிலும் , பன்னாட்டு அரங்கிலும் மங்கியது. ரஸ்புடீன் சார் இரண்டாம் நிக்கோலஸ் சார் மன்னர்கள் தெய்வீக இறைமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இரண்டாம் சார் நிக்கோலஸ் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தார். மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். டூமாஸ் என்ற ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் தாராள சீர்திருத்தங்களை மேற் கொள்ளுமாறு மன்னரை வேண்டினர். ஆனால் , சார்
மன்னர் அதற்கு உடன்படவில்லை. இதற்கிடையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தங்களது குறைகளைக் களையக் கோரி , சார் மன்னரின் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று விண்ணப்பம் ஒன்றை அவர்கள் அளித்தனர். அவர்களுக்கு கேபன் என்பவர் தலைமை வகித்தார். மாளிகையை நெருங்கும்போது ஊர்வலத்தினர்மீது காவலாளிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். 1905 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற்றதால் , இதற்கு ‘ குருதி ஞாயிறு ’ எனப் பெயரிடப்பட்டது. 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்கு
இது முன்னோடியாக விளங்கியது. சார் மன்னரின் அரசவை , ரஸ்புடீன் என்ற தீயவரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. சார் மன்னரின் மனைவி அவரின் செல்வாக்கின் கீழ் இருந்தார். நிர்வாகமும் அவரது விருப்பப்படியே நடைபெற்றது. இதனால் , பிரபுக்கள் ரஸ்புடீனுக்கு விஷம் வைத்துக் கொன்றனர். பொருளாதாரக் காரணங்கள் ரஷ்யப் காரல்மார்க்ஸ் சற்று பின்தங்கியிருந்தமையே பொருளாதாரம் பொருளாதாரக் காரணங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. தனிப்பட்ட குடியானவர்களின் கட்டுப்பாட்டிலேயே ரஷ்ய வேளாண்மை இருந்தது. நவீன இயந்திரங்கள் ஏதும் அவர்கள் பெற்றிருக்கவில்லை.
கடும்குளிர் அந்நாட்டு வேளாண்மையை மிகவும் பாதித்தது. ஆண்டுக்கு நான்கு முதல் ஆறுமாத காலமே அங்கு வேளாண்மை செய்வதற்கு உகந்த காலமாக இருந்தது. 1891 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும்பாலான குடியானவர்களை வறுமைக்குட்படுத்தியது. பஞ்சம் அதிவிரைவாக ஏற்பட்ட தொழிற்புரட்சியினால் நகரங்களில் மக்கள் தொகை பெருகியது. நகரங்களில் வாழ்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரமும் மோசமாகவே இருந்தது. 1890 – 1910 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தலைநகர் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கின் மக்கள் தொகை 10,33,600 லிருந்து 19,05,600 ஆக உயர்ந்தது. அதேபோல்
மாஸ்கோவிலும் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரித்தது. 1904 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி , செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குடியிருப்பு ஒன்றில் சராசரியாக 16 பேரும். ஒரு அறையில் 6 பேர் என்ற விகிதத்திலும் மக்கள் குடியிருந்தனர். சுத்தமான தண்ணீர் கிடையாது. மனிதக்கழிவின் பெருக்கம் பெருத்த சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. இதனால் , தொழிலாளர் சுகாதாரம் பாதிக்கப்பட்டது. பொதுவாகவே , தொழிலாளர்கள் ஒரு திருப்திகரமற்ற சூழ்நிலையிலேயே வாழ்ந்து வந்தனர். சோஷலிச கட்சியின் எழுச்சி _ ஜார்ஜ் பிளக்னேவ் சோஷலிச இயக்கத்தின் வரலாற்றில் , 1804 ஆம் ஆண்டு
பன்னாட்டு உழைப்பாளர் சங்கம் அமைக்கப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். இதுவே முதலாவது பன்னாட்டு அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ( பர்ஸ்ட் இன்டர்நேஷனல் ) மிகக் குறைந்த காலத்திலேயே , ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கங்களிடையே பன்னாட்டு அமைப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1789 பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டான 1889 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் நாள் இரண்டாவது பன்னாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டது. பல நாடுகளிலும் இருந்த சோஷலிச கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு பன்னாட்டு அமைப்பை உருவாக்குவதற்காகவே இந்தப் பேரவை நடைபெற்றது. சோஷலிச
வரலாற்றில் இரண்டாவது பன்னாட்டு அமைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ரஷ்யாவில் தொழிலாளர் அமைப்புகள் மார்க்சீய உருவான போது , அவை மார்க்சின் கருத்துக்களையே பெரிதும் ஏற்றுக்கொண்டன. கோட்பாட்டாளரான ஜார்ஜ் பிளக்னோவ் என்பவர் 1883 ல் ரஷ்ய சோஷியல் டெமாகிரடிக் கட்சியைத் தொடங்கினார். வேறு சில சோஷலிச அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்டு 1898 ல் இது ரஷ்ய சோஷியல் டெமாகிரடிக் உழைப்பாளர் கட்சி என்ற பெயரைப் பெற்றது. இருப்பினும் , கொள்கை மற்றும் அமைப்புரீதியாக இக்கட்சி பிளவுபட்டது. சிறுபான்மை பிரிவினர் கொண்ட குழு மென்ஷ்விக் (
ரஷ்ய மொழியில் சிறுபான்மை என்று பொருள் ) என்றும் , பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர். போல்ஷ்விக்குகளின் தலைவராக விளாடிமிர் இலயிச் உலயநோவ் விளங்கினார். லெனின் என்பது இவரது புகழ்வாய்ந்த பெயராகும். மார்க்ஸ் , ஏங்கல்ஸ் ஆகியோருக்குப் பிறகு சோஷலிச இயக்கத் தலைவர்களில் பிரபலமாக விளங்கியவர் இவரேயாகும். புரட்சியை முன்னின்று நடத்தவல்ல ஒரு பேரியக்கமாக போல்ஷ்விக் கட்சியை லெனின் உருவாக்கினார். 1917 ஆம் ஆண்டு புரட்சிக்கு லெனின் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். இரண்டாவது பன்னாட்டு அமைப்பிலும் பிளக்னோவ்
மற்றும் லெனின் போன்ற ரஷ்ய சோஷலிஸ்டுகள் பெரும் பங்கு வகித்தனர். தொழிலாளர் வர்க்கத்தினரின் கட்சிகளாக விளங்கிய மென்ஷ்விக் , போல்ஷ்விக் கட்சிகளைத்தவிர , குடியானவரின் குரலை ஒலிக்கச் செய்வதற்கு சோஷலிஸ்ட் புரட்சி கட்சி ஒன்றும் ரஷ்யாவில் இருந்தது. முதல் உலகப்போர் ரஷ்யப் படைகளின் வரலாற்றில் தோல்வியென்பது சாதாரணமான ஒன்று. முதல் உலகப் போருக்கு முன்பு 1904 -1905 ல் நடைபெற்ற ரஷ்ய ஜப்பானிய போரில் ரஷ்யா , ஜப்பானியப் படைகளிடம் தோல்வியடைந்தது. அந்தப் போரில் ரஷ்ய கப்பல்கள் பல மூழ்கடிக்கப்பட்ன. 1914 ல் ஆஸ்திரியா - ஹங்கேரிக்கு
எதிரான போரில் ரஷ்யப் படைகள் தொடக்கத்தில் வெற்றி பெற்றாலும் பின்னர் தோல்வியடைந்தது. நவீன கருவிகள் இல்லாமை , நவீன தொழில்நுட்பம் இல்லாமை ( ஆகாய விமானங்கள் , தொலைபேசிகள் ) ரஷ்ய தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. முதல் உலகப் போரின் தொடக்கத்திலேயே ரஷ்யா தோல்விகளை சந்தித்தது. 1914 ல் நடைபெற்ற டேனன்பர்க் போரில் 1,20,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் , ஜெர்மனி 20,000 வீரர்களை மட்டுமே இழந்தது. போரின் தொடக்கத்தில் ரஷ்ய அரசாங்கம் பெற்றிருந்த மக்களின் ஆதரவு குறையத் தொடங்கியது. 1915 ல் மன்னர் நிக்கோலஸ் தாமே
படைத்தலைமையை ஏற்றார். ஜெர்மானியப்படை போதுமான தளவாடங்களில்லாத ரஷ்யப் படையைவிட ஆற்றல்மிக்கதாகவே விளங்கியது. 1916 அக்டோபர் மாத வாக்கில் ரஷ்யா சுமார் 1.8 மில்லியன் வீரர்களை இழந்தது. 2 மில்லியன் வீரர்கள் சிறைப்பட்டனர். மேலும் ஒரு மில்லியன் வீரர்கள் காணாமல் போயினர். இத்தகைய பெரும் சேதத்திற்காளான ரஷ்யப் படையின் வீரர்கள் கலகத்தில் ஈடுபடத் தொடங்கினர். இத்தகைய இழிநிலைக்கு நிக்கோலசே பொறுப்பு என குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு எதிர்ப்பு வலுக்கவே , டூமா என்ற நாடாளுமன்றம் அரசியலமைப்புக்குட்பட்ட ஆட்சியை அமைக்குமாறு
எச்சரிக்கை விடுத்தது. ஆனால் , நிக்கோலஸ் அக்கோரிக்கையை நிராகரித்தார். எனவே , 1917 பிப்ரவரி மாதம் நடைபெற்ற புரட்சியின் போது ரஷ்யாவில் சார்மன்னரின் ஆட்சி கவிழ்ந்தது. பிப்ரவரி புரட்சி மேற்குறிப்பிட்ட அரசியல் , சமூக , பொருளாதார காரணங்களால் பிப்ரவரி புரட்சி வெடித்தது. பிப்ரவரி புரட்சி வெடிக்கும் தருவாயில் தலைநகரில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் சார்மன்னரின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டன. பிப்ரவரி மாதம் பீட்டர்ஸ்பர்க் நகரில் மக்கள் கலகத்தில்
ஈடுபட்டனர். வன்முறை தலைவிரித்தாடியது. காவல்துறை மற்றும் ராணுவத்தோடு மக்கள் மோத ஆரம்பித்தனர். பீட்டர்ஸ்பர்க்கிலிருந்த ராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் மக்களுடன் சேர்ந்து கொண்டனர். 1917 மார்ச் 12 ஆம் நாள் தலைநகர் பீட்டர்ஸ்பர்க் புரட்சியாளர்களின் வசமாயிற்று. பின்னர் , அவர்கள் மாஸ்கோவையும் கைப்பற்றினர். இரண்டாம் சார் நிக்கோலஸ் அரியணையைவிட்டு வெளியேறினார். மார்ச் 15 ஆம் நாள் தற்காலிக அரசாங்கம் ஏற்படுத்தப் பட்டது. சார் மன்னரின் வீழ்ச்சியே பிப்ரவரி புரட்சி எனப்படுகிறது. கெரன்சிகியின் தற்கால அரசாங்கம் புரட்சியின்போது
மக்கள் அரசாங்கத்தின் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் நான்கு அமைதி ஏற்படுத்துதல் , உழுதவருக்கே நிலத்தை உரிமையாக்குதல் , தொழிற்சாலைகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல் மற்றும் ரஷ்யர் அல்லாத குரு மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குதல். கெரன்ஸ்கி தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற தற்காலிக அரசாங்கம் இவை எதனையும் நிறைவேற்றவில்லை. எனவே , விரைவில் மக்களின் ஆதரவை இழந்தது. கெரன்ஸ்கி பிப்ரவரி புரட்சியின்போது ஸ்விட்சர்லாந்தில் இருந்த லெனின் , ஏப்ரலில் ரஷ்யாவுக்கு திரும்பி தனது ' ஏப்ரல் வாக்குறுதிகளை ’ வெளியிட்டார். இது
மக்களது தேவைகளை நிறைவேற்றுவதாக இருந்தது.அவரது தலைமையிலான போல்ஷ்விக் கட்சி போரை முடிவுக்கு கொண்டுவருதல் , குடியானவர்களுக்கு நிலவுரிமைகளை மாற்றுதல் போன்ற தனது கொள்கைளை தெளிவாக மக்களிடம் கூறியது. அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே என்று முழக்கம் செய்தது. லெனினும் , அவரது நம்பிக்கைக்குரிய தோழர் லியோன் டிராட்ஸ்கியும் இணைந்து அக்டோபர் புரட்சியை வழி நடத்திச் சென்றனர். 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி ரன்ஸ்கி அரசாங்கத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் சரிந்தது. அது அமைந்திருந்த வின்ஸ்டர் மாளிகையை வீரர்கள்