text
stringlengths 11
513
|
---|
மாகாணங்களிலும் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காக மானிய உதவி அளிப்பதற்கான திட்டமும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் , இந்த குறிப்பு தொழிற்கல்வி , ஆசிரியர் பயிற்சி மற்றும் பெண் கல்வி ஆகியவற்றுக்கான பள்ளிகள் நிறுவப்படவேண்டியதன் வைத்தார். நிறுவப்பட்டது. மெக்காலே பிரபு அவசியத்தை வலியுறுத்தியது. அனைத்துக்கும் மேலாக , கல்கத்தா , பம்பாய் , சென்னை ஆகிய மூன்று மாகாணங்களிலும் லண்டன் பல்கலைக்கழகத்தை அடியொற்றி தலா ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் என்றும் கூறியது. இவற்றின் பலனாக , அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியக் கல்வி |
விரைவாக மேலை நாட்டுமயமாக்கப்பட்டது. சமூகக் கொள்கைகளும் சட்டங்களும் தொடக்கத்தில் , ஆங்கிலேயரின் கவனம் வாணிபத்தைப் பெருக்குவதிலும் , பொருளாதாரத்தை சுரண்டி அதிக லாபம் ஈட்டுவதிலுமே இருந்தது. ஆகவே , சமூக , சமய சீர்திருத்தங்களில் அவர்கள் அவ்வளவாக ஈடுபாடு காட்டவில்லை. மேலும் , இந்தியர்களின் சமூக , சமய பழக்கங்களிலும் , அமைப்புகளிலும் தலையிட்டால் தங்களது வணிக நலன்கள் பாதிக்கப்படலாம் என அவர்கள் அஞ்சினர். எனவே , மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் இந்திய சமூகப் பிரச்சினைகளில் பாராமுகத்துடனும் இருந்தனர். அதே சமயம் , |
இந்தியர்களின் பழக்க வழக்கங்களை விமர்சித்து வந்ததன் மூலம் , இந்தியர்களிடையே ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் அவர்கள் உருவாக்கினர் என்றும் கூறலாம். 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவில் தோன்றிய சமூக , சமய சீர்திருத்த இயக்கங்கள் வணிகக்குழு ஆட்சியின் கவனத்தை ஈர்த்தன. கிறித்துவ சமயப்பரப்பாளர்களின் பிரச்சாரம் படித்த இந்தியர்களிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது. மேலை நாட்டு கருத்துக்களும் கல்வியும் செய்தித்தாள்கள் மூலமாக சென்றடைந்து பொது மக்களிடையே போதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வில்லியம் பெண்டிங் பிரபு போன்ற |
ஒரு சில பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் தங்களது தனிப்பட்ட கவனத்தை இதில் செலுத்தினர். குறிப்பாக , பெண் விடுதலை குறித்தும் ஜாதிப்பாகுபாடு குறித்தும் சட்டங்கள் இயற்றப்பட்டன. மகளிர் குறித்த சமூக சட்டங்கள் பிரிட்டிஷார் தங்களது ஆட்சியை இந்தியாவில் நிறுவிய காலக்கட்டத்தில் பெண்களின் நிலைமை திருப்திகரமாக இல்லை. சதி என்ற உடன்கட்டையேறும் வழக்கம் , பர்தா அணியும் முறை , குழந்தைத் திருமணம் , பெண் சிசுக்கொலை , வரதட்சணை , பலதாரமணம் போன்ற சமூகக் கொடுமைகள் பெண்களின் வாழ்க்கையை சீரழித்தன. பெண் என்பவள் நான்கு சுவற்றுக்குள் அடைத்து |
வைக்கப்பட்டாள். கல்விக் கதவுகள் அவளுக்கு திறக்கப்படவில்லை. பொருளாதார ரீதியாகக்கூட அவளது நிலை பரிதாபமாகவே காணப்பட்டது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமூக. பொருளாதார சமத்துவம் காணப்படவில்லை. ஒரு இந்துப்பெண் சொத்துக்கு வாரிசாக வழியில்லை. மொத்தத்தில் , அவள் ஆண்களை நம்பியே வாழவேண்டியிருந்தது. சமூக சீர்திருத்தவாதிகள் , மனித நேயமிக்கவர்கள் , சில பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆகியோரின் தீவிர முயற்சிகளால் , இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் சில சட்டங்கள் இயற்றப்பட்டன. |
இவற்றில் முதலாவதாக வில்லியம் பெண்டிங் பிரபு ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சதிமுறை ஒழிப்பு சட்டத்தைக் கூறலாம். பெண் சிசுக்கொலை 19 ஆம் நூற்றாண்டின் பின் இந்திய சமுதாயத்தை உலுக்கிய பிரச்சனை மனிதாபிமானமற்ற கொடும் செயலான பெண்சிசுக் கொலையாகும். ராஜபுதனம் , பஞ்சாப் , வடமேற்கு மாகாணங்களில் இது பரவலாக காணப்பட்டது. கர்னல் டாட் , ஜான்சன் டன்கன் , மால்கம் போன்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெண் சிசுக்கொலை குறித்து விளக்கமாக ஆய்வு செய்தனர். குடும்பப் பெருமை , பெண்ணுக்கு ஏற்ற வரன் கிடைக்காது என்ற அச்சம் , வரப்போகும் |
மாமியாரிடம் பணிந்து போவதற்கு தயக்கம் போன்ற காரணங்களால் பெண்சிசுக்களை கொல்லும் வழக்கம் நிலவியதாக இவர்கள் கருதினர். பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே , அபினியை விழுங்கச் செய்தல் , கழுத்தை நெரித்தல் , வேண்டுமென்றே ஒதுக்குதல் போன்ற வழிமுறைகளைக் கையாண்டு அவற்றை கொன்றனர். 1795 , 1802 , 1804 பின்னர் 1870 ஆகிய ஆண்டுகளில் இந்த வழக்கத்தை தடை செய்து சில சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் , இந்த கொடிய சமூகத்தீங்கை சட்டங்களால் மட்டுமே முழுதும் ஒழிக்க முடியவில்லை. கல்வி மற்றும் பொதுக் கருத்தை உருவாக்குதல் போன்ற நடைமுறைகள் |
வாயிலாகவே படிப்படியாக இவ்வழக்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. பண்டைய இந்தியாவில் விதவைகள் மறுமணம் வழக்கத்திலிருந்தது என்பதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. காலப்போக்கில் இது கைவிடப்பட்டு , 19 ஆம் நூற்றாண்டில் விதவைகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் பெருகியது. எனவே , மீண்டும் விதவைகள் மறுமணத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டியது சமூக சீர்திருத்தவாதிகளின் முக்கிய கடமையாக இருந்தது. அக்கால பத்திரிகைகளிலும் , சஞ்சிகைகளிலும் விதவைகள் மறுமணம் குறித்து கட்டுரைகள் எழுதிய இவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். |
இராஜா ராம்மோகன் ராய் , ஈஸ்வர சந்திர வித்யா சாகர் இத்தகைய சீர்திருத்தவாதிகளில் குறிப்பிடத்தக்கவர்கள். புத்தகங்கள் , துண்டுப் பிரசுரங்கள் , பலர் கையெழுத்திட்ட விண்ணப்பங்கள் போன்ற பிரச்சார யுக்திகள் மூலமாக இவர்கள் விதவை மறுமணத்தை ஆதரித்து பெருமளவு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 1856 ஜூலையில் தலைமை ஆளுநர் ஆலோசனைக்குழு உறுப்பினரான ஜே.பி. கிராண்ட் என்பவர் விதவை மறுமணம் குறித்த சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தினார். 1856 ஜூலை 13 ம் நாள் இது நிறைவேற்றப்பட்டது. 1856 ஆம் ஆண்டு விதவை மறுமணச் சட்டம் என்று இது அழைக்கப்பட்டது. |
விதவைகள் மறுமணம் குழந்தை மணம் குழந்தை மணம் என்பது இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த மற்றொரு அநீதியாகும். கேசவ சந்திர சென் என்பவரது முயற்சியால் 1870 ல் இந்திய சீர்திருத்த கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ‘ மசாபாப் பாலவிவாகம் ' என்ற இதழை பி.எம். மலபாரி என்பவர் தொடங்கி குழந்தை மணத்துக்கு எதிராகப் போராடினார். 1846 ல் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்ணுக்கு 10 ஆக இருந்தது. 1891 ல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அது 12 ஆக உயர்த்தப்பட்டது. 1930 ஆண்டு சாரதா சட்டப்படி குறைந்தபட்ச வயது 14 ஆக உயர்த்தப்பட்டது. இந்திய |
விடுதலைக்குப்பிறகு அது 14 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. பர்தா முறை 19 , 20 ஆம் நூற்றாண்டுகளில் பர்தா அணியும் குரல்கள் எழுந்தன. குடியானவர்களிடையே இந்த வழக்கம் கடுமையானதாக இல்லை. தென்னிந்தியாவிலும் இவ்வழக்கம் பெருமளவு காணப்படவில்லை. தேசிய இயக்கத்தில் அதிக அளவிலான பெண்கள் கலந்து கொண்டனர். காலப்போக்கில் எந்தவொரு குறிப்பிட்ட சட்டமும் இயற்றப்படாமலேயே இவ்வழக்கம் மறைந்து போயிற்று. வழக்கத்துக்கெதிராக ஜாதி முறைக்கு எதிரான போராட்டமும் அது தொடர்பான சட்டங்களும் பெண்கள் விடுதலைக்கு அடுத்த நிலையில் சமூக |
சீர்திருத்தவாதிகள் ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான இயக்கங்களை முன்னின்று நடத்தினர். இந்திய சமுதாயத்தில் ஜாதிமுறை ஒரு பலவீனமாகவே திகழ்கிறது. அடிப்படையில் , பிராமணர் , ஷத்திரியர் , வைசியர் , சூத்திரர் என்று நான்காக சமுதாயம் பிரிக்கப்பட்டிருந்தது. சமுதாயத்தில் இந்த பிளவுகளால் வேறுபாடுகள் நிலவின. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பிறப்பால் அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு கிளை ஜாதிகளும் மலிந்திருந்தன. இதற்கிடையே சமூக விழிப்புணர்வு இந்திய மக்களிடையே தோன்றியது. 19 ஆம் நூற்றாண்டு சமூக , சமய சீர்திருத்த |
இயக்கங்களில் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய பிரச்னையாக முன்னிறுத்தப்பட்டது. மகாத்மா காந்தி தனது அபிவிருத்தி திட்டத்தில் தீண்டாமை ஒழிப்பையும் ஒரு பகுதியாக சேர்த்திருந்தார். ' ஹரிஜன் ' என்ற செய்தி ஏட்டை நடத்திய அவர் ‘ ஹரிஜன் சேவக் சங் ’ என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார். டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்தார். இதற்காக அவர் 1924 ம் பம்பாயில் " பகிஷ்கிரிட் ஹிட்காரினி சபை " என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் , ஜாதிக் கொடுமையை எதிர்த்து ‘ அகில |
பாரதீய தலித் வர்க்க சபை ’ என்ற அமைப்பையும் தோற்றுவித்தார். மேற்கு இந்தியாவில் ஜோதிராவ் பூலே சத்ய சோதக் டாக்டர் அம்பேத்கர் சமாஜத்தையும் , கேரளாவில் ஸ்ரீ நாராயணகுரு ஸ்ரீ நாராயண பரிபாலனயோகம் என்ற அமைப்பையும் தோற்றுவித்து தாழ்த்தப்பட்ட மக்களிடையே சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தினர். நாராயண குரு 4. 5. கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து மாணவர்கள் புரிந்துகொண்டது. 1. பிரிட்டிஷாருக்கு முன்பு இந்தியாவில் நிலவிய கல்விமுறை. 2. 3. ஜோதிராவ் பூலே 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை மாகாணத்தில் ஈ.வெ.ரா.பெரியார் |
சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி நடத்தினார். ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து பல தனி நபர்களும் நிறுவனங்களும் போராடின. பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கத் தடை , கோயிலில் நுழையத் தடை , பள்ளிகளில் சேர தடை போன்ற ஹரிஜனங்களுக்கு இழைக்கப் பட்டுவந்த அநீதிகளை எதிர்த்து இப்போராட்டங்கள் நடைபெற்றன. 6. இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கு வணிகக்குழு பின்பற்றிய கொள்கை. மேலைக் கல்வி ஆங்கிலமொழி அறிமுகம்தொடர்பான கீழ்த்திசை வாசிகளுக்கும் , மேலைக்கல்வியாளருக்கும் நடைபெற்ற விவாதங்கள். கல்வி பற்றிய மெக்காலே குறிப்பு - உட் அறிக்கை சதிமுறை |
ஒழிப்பு , பெண் சிசுக்கொலை தொடர்பான சமூகத் தீங்குகளை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை , சட்டங்கள். இந்திய சமுதாயத்தில் பெண்கள் நிலைமை பெண் விடுதலைக்கு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய தொண்டு மற்றும் அது தொடர்பான சட்டங்கள். 7. ஜாதி வேறுபாடுகளைக் களைய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள். அம்பேத்கர் மகாத்மா காந்தி ஜோதிராவ் பூலே சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது கீழ்த்திசைவாதிகள் கீழ்த்திசை பாடங்களை இந்திய மொழிவழி கற்பிக்க வேண்டுமென வாதிட்டனர். 1829 ஆம் ஆண்டு விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது. ஸ்ரீ நாராயண |
தர்ம பரிபாலன யோகம் ஜோதிராவ் பூலேவால் நிறுவப்பட்டது. 1830 ல் சாரதாச் சட்டம் இயற்றப்பட்டது. ஈ. நாராயண குரு பெரியார் ஈ.வெ.ரா. V. 1. வாரன் ஹேஸ்டிங்ஸ் பம்பாயில் ஒரு மதரசாவை நிறுவினார். 2. ஆங்கில ஆதரவாளர்கள் மேற்கத்திய அறிவியல் ஆங்கில மொழிவழி பயிற்றுவிக்கவேண்டும் என்று வாதாடினர். ஈஸ்வர சந்திர வித்யா சாகர் , விதவை மறுமணத்தை பிரபலப்படுத்த பிரச்சாரத்தை மேற்கொண்டார். VI. சிறு குறிப்பு எழுதுக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) 1. மெக்காலேயின் குறிப்பு 2. பெண் சிசுக் கொலை பர்தா முறை குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) |
சார்லஸ் வுட் அறிக்கை பற்றி குறிப்பு எழுதுக. ஜாதி முறையின்கீழ் பின்பற்றப்பட்ட வேற்றுமைகளைக் களைய சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவாதிக்க. VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் ) 1. பிரிட்டிஷாரின் கல்விக் கொள்கையை ஆய்க. 2. மகளிர் விடுதலைக்காக இயற்றப்பட்ட சமூக சட்டங்களை தொகுத்து எழுதுக. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. மற்றும் இலக்கியத்தை பாடம் – 9 பாளையக்காரர் கிளர்ச்சி கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்தை படிப்பதால் மாணவர் அறிந்து கொள்வது. 1. தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறை 2. |
பிரிட்டிஷாருக்கு எதிரான கிளர்ச்சியில் புலித்தேவரின் பங்கு. 3. கட்ட பொம்மனின் எழுச்சியும் பிரிட்டிஷாருக்கெதிரான கிளர்ச்சியும். 4. மருது சகோதரர்களின் தலைமையில் இரண்டாவது கிளர்ச்சி. இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்றதைப் போலவே , தமிழ்நாட்டிலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால உணர்வுகள் உள்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்ற கிளர்ச்சிகள் எழுச்சிகள் மூலமாக வெளிப்பட்டன. அவற்றில் முக்கியமானது கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கு எதிராக பாளையக்காரர்கள் செய்த கிளர்ச்சியாகும். தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சி விரிவுபடுத்தப்பட்டபோது |
பாளையக்காரர் முறை வளர்ச்சி பெற்றது. பாளையம் என்று அழைக்கப்பட்ட ஒருசில கிராமங்களை உள்ளடக்கிய நிலப்பகுதிக்கு உரிமையாளர் பாளையக்காரர் என்று அழைக்கப்பட்டார். பாளையத்தை பெற்றதற்கு ஈடாக ராணுவ சேவையும் ஆண்டுக் கப்பமும் பாளையக்காரர் மன்னருக்கு செலுத்த வேண்டும். ஆனால் , சூழ்நிலைக்கேற்ப பாளையக்காரர்கள் தங்களது கடமைகளிலிருந்து தவறியதோடு அதிகாரத்தையும் பெருக்கிக் கொண்டனர். அவர்களது எண்ணிக்கை , பரந்த வலிமை , உள்நாட்டு செல்வாக்கு , சுயேட்ச்சையான செயல்பாடு போன்ற காரணிகளால் பாளையக்காரர்கள் தென்னிந்திய அரசியல் கட்டமைப்பில் |
மிகவும் சக்தி மிக்கவர்களாக விளங்கினார்கள். தங்களது பாளையத்திற்குள் சுதந்திரமான முழு அதிகாரம் உடையவர்களாக தங்களை கருதிக் கொண்டனர். தங்களுடைய நிலங்கள் 60 தலைமுறைகளாக தங்களுக்கு சொந்தம் என்று அவர்கள் கூறிக்கொண்டனர். இவற்றை கிழக்கிந்திய வணிகக்குழு நிராகரித்தது. பூலித்தேவர் பாளையக்காரர்களில் இரண்டு பிரிவினர் இருந்தனர். மேற்குப் பிரிவில் மறவர் பாளையக்காரர்களும் , தெற்குப்பிரிவில் தெலுங்கு பாளையக்காரர்களும் இருந்தனர். நெல்கட்டும் செவல் பாளையத்தின் பூலித்தேவர் மறவர் பிரிவுக்கும் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த |
கட்டபொம்மன் தெலுங்கு பிரிவுக்கும் தலைவர்களாகக் கருதலாம். இவ்விருவருமே நவாப்பிற்கு செலுத்த வேண்டிய இஸ்த் அல்லது கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அக்கம் பக்கம் இருந்த பாளையக்காரர்களும் ஏதோ ஒரு காரணத்தைக்காட்டி கப்பம் கட்டாமல் இருந்து வந்தனர். 1755 ல் மாபஸ்கான் பிரிட்டிஷ் படைத்தளபதி கர்னல் ஹெரான் தலைமையிலான படைகளின் உதவியோடு பாளையக்காரர்கள் மீது படையெடுத்தார். பூலித்தேவரும் மறவர் பாளையக்காரர்களும் பிரிட்டிஷாருக்கு எதிராக உறுதியுடன் இருந்தனர். கர்னல் ஹெரான் மறவர் குடும்பத்தவரை அடக்குவதில் தீர்மானமாக |
இருந்தார். தனது ராஜதந்திர முயற்சிகள் மூலம் பூலித்தேவரின் மனதை மாற்ற கர்னல் ஹெரான் முயற்சித்தார். படைபலத்தைக் காட்டி மிரட்டினார். அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. மேற்கிலிருந்த மறவர்களை ஒன்று சேர்த்து தனது நிலையை புலித்தேவர் மேலும் வலிமைப்படுத்திக் கொண்டார். பிரிட்டிஷாருக்கு எதிராக மைசூரின் ஹைதர் அலி மற்றும் பிரஞ்சுக்காரர்களின் உதவியையும் நாடினார். பிரிட்டிஷார் ராமநாதபுரம் , புதுக்கோட்டை அரசுகளிடமும் டச்சுக்காரர்களிடமும் ஆதரவு கோரினார். ஹைதர் அலி ஏற்கனவே மராட்டியருடன் மோதலில் ஈடுபட்டிருந்தமையால் |
பூலித்தேவருக்கு உதவ முடியவில்லை. பூலித்தேவரையும் அவரது கூட்டாளிகளையும் அடக்கும் பொறுப்பை பிரிட்டிஷார் யூசுப் கானிடம் ( கான்சாகிப் ) ஒப்படைத்தனர். பூலித்தேவர் மதுரையைத் தாக்கி மாபஸ்கானிடமிருந்து அதனைக் கைப்பற்றினார். புலித்தேவரின் இந்த ராணுவ வெற்றி மகத்தானதாகும். ஒரு இந்திய வீரர் பிரிட்டிஷாருக்கு எதிராக நின்று வெற்றி கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் அது வெளிப்படுத்தியது. ஆனால் மறுபடியும் மாபஸ்கான் மதுரையை மீட்டார். கிழக்கத்திய பாளையக்காரர்கள் மற்றும் திருவாங்கூர் |
அரசரின் உதவியோடு யூசுப்கான் பல வெற்றிகளைப் பெற்றார்.கடுமையான போருக்குப்பிறகு 1759 ல் நெல்கட்டும் செவல்மீது தாக்குதல் தொடர்ந்தது. 1767 ல் அது கர்னல் காம்ப்பெல் என்பவரால் கைப்பற்றப்பட்டது. பூலித்தேவர் அங்கிருந்து தப்பியோடினார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும் என்ற தனது எண்ணம் நிறைவேறாமலேயே அவர் இறந்தார். அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்த போதிலும் , தென்னிந்திய வரலாற்றில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கிய பெருமைக்குரியவராகிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் தனது தந்தை ஜெகவீர பாண்டியனின் மறைவுக்குப்பிறகு , |
முப்பதாவது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக் காரராக பொறுப்பேற்றார். நடைபெற்ற பல்வேறு சம்பவங்களால் கட்டபொம்மனுக்கும் கிழக்கிந்திய வணிகக்குழுவிற்கும் சச்சரவுகள் தோன்றின. கப்பம் கட்டுவது சச்சரவுக்கு முக்கிய காரணமாயிற்று. 1792 ஆம் ஆண்டு கர்னாடக உடன்படிக்கைப்படி ஆர்க்காடு நவாப் இந்த உரிமையை ஆங்கிலேயருக்கு கொடுத்திருந்தார். எனவே , பாஞ்சாலங்குறிஞ்சி பாளையக்காரரான கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட வேண்டியிருந்தது. 1798 ல் கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பம் கட்டபொம்மன் நிலுவையிலிருந்தது. |
கலெக்டர் ஜாக்சன் தனக்கேயுரிய அகந்தையுடனும் முரட்டுத் தனத்துடனும் கட்டபொம்மனுக்கு மிரட்டல் கடிதங்களை அனுப்பினார். " வானம் பொழிகிறது , பூமி விளைகிறது எதற்காக நாங்கள் ஆங்கிலேயருக்கு வரி கட்ட வேண்டும் " என்று கட்டபொம்மன் கூறியதாக வழக்காறு உள்ளது. 1798 மே 31 ம் நாள் கணக்குப்படி கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பத்தொகை நிலுவை 3310 பகோடாக்களாகும் ( பகோடா என்பது ரூபாய் ). ஜாக்சன் தனது படையை கட்டபொம்மனுக்கு எதிராக அனுப்ப விரும்பினார். ஆனால் சென்னை அரசாங்கம் அனுமதிக்கவில்லை. 1798 ஆகஸ்ட் 18 ம் நாள் தம்மை ராமநாதபுரத்தில் |
வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு ஆணையனுப்பினார். இதற்கிடையில் , ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் திருக்குற்றாலத்திலும் , ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இருமுறை முயற்சித்தார். ஆனால் , அவமதிப்பே மிஞ்சியது. ராமநாதபுரத்தில்தான் கலெக்டரை சந்திக்கமுடியும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் , கட்டபொம்மன் ஜாக்சனைத் தொடர்ந்து அவர் சென்ற பாதையிலேயே 400 மைல்கள் சென்று செப்டம்பர் 19 ஆம் நாள் ராமநாதபுரத்தை அடைந்தார். ஜாக்சனை சந்திக்க அனுமதி கிடைத்தது. இச்சந்திப்பின்போது கட்டபொம்மனும் அவரது அமைச்சர் |
சிவசுப்ரமணியபிள்ளையும் கலெக்டர் முன்பு மூன்று மணி நேரம் நிற்க வைக்கப்பட்டனர். அதற்குப்பிறகும் அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. கட்டபொம்மன் ஜாக்சனுடைய திட்டத்தை உணர்ந்து கொண்டார். எனவே , அமைச்சருடனும் தம்பி ஊமைத் துரையுடனும் அங்கிருந்து தப்ப முயற்சித்தார். கோட்டை வாயிலில் மோதல்கள் நடந்தன. லெப்டினென்ட் கிளார்க் உள்ளிட்ட சிலர் கொல்லப்பட்டனர். சுப்ரமணியபிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பிச் சென்றார். தனது முறையீடு செய்தார். கேட்டுக்கொள்ளப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய கட்டபொம்மன் நடந்த |
உண்மைகளை விளக்கி சென்னை அரசாங்கத்துக்கு மேல் ஒரு குழுவின் முன்பு ஆஜராகுமாறு கட்டபொம்மன் இதற்கிடையே , அரசாங்கம் சிவசுப்ரமணியபிள்ளையை விடுதலை செய்தது. கலெக்டர் ஜாக்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எனவே , கட்டபொம்மன் வில்லியம் பிரவுன் , வில்லியம் ஆரம் , ஜான் காசாமேயர் ஆகியோர் அடங்கிய குழுவின் முன்பு ஆஜரானார். கட்டபொம்மன் குற்றமற்றவர் என்று குழு தீர்மானித்தது. ஜாக்சனுக்குப் பதில் எஸ்.ஆர்.லூஷிங்டன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார். பின்னர் , ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார். பாளையக்காரர்களின் கூட்டமைப்பு |
ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனின் குறையைப் போக்கினாலும் , தான்பட்ட அவமதிப்பை கட்டபொம்மன் மறக்கவில்லை. தமது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டதாக அவர் கருதினார். இச்சமயத்தில் சிவகங்கையைச் சேர்ந்த மருது பாண்டியர் பிரிட்டிஷாருக்கு எதிராக தென்னிந்திய கூட்டிணையை உருவாக்கினார். திருச்சிராப்பள்ளி அறிக்கை வெளியிடப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சிக்கும் தனது தூதுவர்களை மருதுபாண்டியர் அனுப்பி வைத்தார். இவ்வாறு கட்டபொம்மனுக்கும் மருதுபாண்டியனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் புதிய சிக்கலை உருவாக்கியது. 1798 ஆகஸ்டில் |
சிவகிரி பாளையக்காரரின் புதல்வரும் , ஆலோசகரும் பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சிவகிரி பாளையக்காரர் வணிகக்குழுவின் திறை செலுத்தும் பாளையம் என்பதால் சென்னை கவுன்சில் இந்த நடவடிக்கையை ஒரு சவாலாகக் கருதி , கட்டபொம்மனுக்கு எதிராக போர்தொடுப்பதாக அறிவித்தது. பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுப்பு 1799 மே திங்களில் , சென்னையிலிருந்த வெல்லெஸ்லி பிரபு , திருச்சிராப்பள்ளி , தஞ்சாவூர் , மதுரை போன்ற இடங்களிலிருந்த பிரிட்டிஷ் படைகளை திருநெல்வேலிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். மிகுந்த அதிகாரங்களைப் பெற்ற |
மேஜர் பானர்மேன் இந்த படையெடுப்புக்கு தலைமை வகித்தார். 1799 செப்டம்பர் முதல் நாள் கட்டபொம்மனை சரணடையுமாறு அவர் இறுதி எச்சரிக்கை விடுத்தார். 4 ம் தேதி பாளையங்கோட்டையில் வந்து சந்திக்குமாறும் கூறினார். நல்ல நாள் பார்த்து விட்டு வருவதாக கட்டபொம்மன் பதில் அனுப்பினார். பானர்மேன் இந்த பதிலை அலட்சியப்போக்கு என்று கருதி ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். செப்டம்பர் 5 ஆம் நாள் கட்டபொம்மனின் கோட்டை தாக்கப்பட்டது. 16 ஆம் நாள் பாளையங்கோட்டைக்கு மேலும் தளவாடங்கள் வந்து சேர்ந்தன. கோலார்பட்டியில் நடந்த மோதலில் |
பாளையக்காரர்படை பலத்த சேதமடைந்தது. சிவசுப்ரமணியபிள்ளை மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் புதுக்கோட்டைக்கு தப்பியோடினார். களப்பூர் காடுகளில் இருந்த கட்டபொம்மனை புதுக்கோட்டை ஆட்சியாளர் கைப்பற்றி பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். கட்டபொம்மனின் வீழ்ச்சி பானர்மேன் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை பாளையக்காரர் கூடியிருந்த சபையின் முன் நிறுத்தி பெயருக்கு ஒரு விசாரணை நடத்தி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். செப்டம்பர் 13 ஆம் நாள் சிவசுப்ரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். அக்டோபர் 16 ஆம் நாள் |
கயத்தாற்றில் கூடியிருந்த பாளையக்காரர்கள் முன்னிலையில் கட்டபொம்மன் மீது விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் , பானர்மேன் மரண தண்டனையை அறிவித்தார். அக்டோபர் 16 ஆம் நாள் கட்டபொம்மன் கயத்தாறு கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் தனது வாழ்வின் இறுதி நேரத்தை ஒரு வீரனுக்குரிய பெருமிதத்துடன் எதிர்கொண்டார். மருது சகோதரர்கள் 1799 ல் பாளையக்காரர்கள் கடுமையான வகையில் ஒடுக்கப்பட்ட போதிலும் , 1800 ல் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. இச்சமயம் , கிளர்ச்சி ஒன்றுபட்டதாகவும் இருந்தது. 1800 1801 ஆண்டு கிளர்ச்சி |
இரண்டாவது பாளையக்காரர் போர் என்று பிரிட்டிஷ் ஆவணங்களில் குறிக்கப்பட்டிருந்தாலும் , கிளர்ச்சியின் தன்மை முன்னதைவிட மேலும் பெரிதாகவே இருந்தது. சிவகங்கையைச் சேர்ந்த மருதுபாண்டியன் , திண்டுக்கல் கோபால நாயக்கர் , மலபாரின் கேரளவர்மா , மைசூரின் கிருஷ்ணப்ப நாயக்கர் மற்றும் துண்டாஜி ஆகியோர் அடங்கிய ஒரு பெரும் கூட்டிணைவு இக்கிளர்ச்சியை முன்னின்று நடத்தியது. 1800 ஜூன் மாதம் கோயம்புத்தூரில் வெடித்த கலகம் விரைவில் ராமநாதபுரம் , மதுரைப் பகுதிகளுக்கும் பரவியது. 1801 மே மாதத்தில் வடக்கு பகுதிகளிலும் கலகங்கள் தோன்றின. மருது |
பாண்டியன் , மேலப்பன் ஆகியோர் இதற்கு தலைமை வகித்தனர். கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரை முக்கிய தலைவராக எழுச்சி பெற்றார். 1801 பிப்ரவரியில் ஊமைத்துரையும் அவருடன் சென்ற 200 பேரும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சாமர்த்தியமாக கைப்பற்றினர். அந்த கோட்டை மீண்டும் புனரமைக்கப்பட்டு எழுச்சியின் மையமாக மீண்டும் உருவெடுத்தது. மருதுபாண்டியனால் அனுப்பிவைக்கப்பட்ட , மதுரை , ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3000 பேர் பாஞ்சாலங்குறிச்சி படைகளுடன் இணைந்து கொண்டனர். இருப்பினும் , பிரிட்டிஷ் படைகள் சுதாரித்துக்கொண்டு , பாஞ்சாலங்குறிச்சிப் |
படைகளை வீழ்த்தின. அரசாங்கத்தின் உத்திரவின் பேரில் கோட்டை தரைமட்டமாக்கப்பட்டு , உழவு செய்யப்பட்டு மீண்டும் குடிபுகாத வண்ணம் உப்பும் ஆமணக்கு எண்ணெயும் தூவப்பட்டது. எஞ்சியிருந்த கலகக்காரர்களையும் பிரிட்டிஷ் படைகள் முறியடித்தன. மருது சகோதரர்களும் அவர்களின் புதல்வர்களும் கொல்லப்பட்டனர். 1801 நவம்பர் 16 ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரை , செவத்தையா ஆகியோரின் தலைகள் பாடம் – 10 வேலூர் கலகம் கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தின்மூலம் மாணவர் அறிந்து கொள்ளப்போவது 1. வேலூர் கலகத்துக்கான காரணங்கள் 2. கலகத்தின் நோக்கங்கள் |
3. கலகம் ஒடுக்கப்படுதல் 4. பிரிட்டிஷாருக்கு எதிரான இந்த எழுச்சியின் தன்மை. தமிழ்நாட்டின் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் தலைநகர் வேலூர். தற்போது வேலூர் மாவட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இது கோட்டையுடன் கூடிய அழகிய நகரமாகும். வேலூர் கோட்டை இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சி விரிவடைந்த போது உள்நாட்டு அரசர்களும் அவர்களை அண்டியிருந்தவர்களும் துன்பத்திற்கு உள்ளானார்கள். ஒன்று அவர்கள் அடங்கிப் போனார்கள் அல்லது கிளர்ந்து எழுந்தார்கள். இத்தகைய கிளர்ச்சிகள் தொலைநோக்குப் பார்வையுடனோ கொள்கையுடனோ |
நடத்தப்படவில்லை. மாறாக , உள்நாட்டு அரசர்கள் தாங்கள் இழந்த பகுதியை மீட்கவும் , பழைய நிலமானிய அமைப்பை மீண்டும் கொண்டுவருவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். புலித்தேவர் , கான் சாகிப் , கட்டபொம்மன் , மருது சகோதரர்கள் போன்ற தனிநபர்களின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஈடு இணை கிடையாது. ஆனால் , இந்த தலைவர்கள் ஒன்றுபட்ட காரணத்துக்காக அல்லது கொள்கைக்காக சாமானிய மக்களை ஒன்று திரட்டத் தவறினார்கள். தேசியம் , அரசியல் விழிப்புணர்வு , ஒன்றுபட்ட போராட்டம் என்ற இந்த கருத்துக்கள் பிந்தைய நாட்களிலேதான் தென்பட்டன. 1806 ல் |
வேலூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சி இதற்கு முன்பு நடந்த கிளர்ச்சியிலிருந்து தன்மை ரீதியாக வேறுபடுகிறது. வேலூர்க் கலகம் சிப்பாய்களால் நடத்தப்பட்டது. முந்தைய கிளர்ச்சிகள் அந்தந்த பகுதியின் நலனுக்காக நடைபெற்றன. ஆட்சியாளர்கள் தங்களது பதவியைத் தக்க வைத்துக்கொள்ள கிளர்ந்தெழுந்தனர். ஆனால் , வேலூர்க்கலகம் வணிக்குழுவின்கீழ் பணியாற்றிய சிப்பாய்களிடமிருந்து இயற்கையாய் வெளிவந்த உணர்வுகளின் வெளிப்பாடாகும். இது வணிகக்குழுவிற்கு எதிராக சிப்பாய்கள் எழுப்பிய கண்டனக் குரலாகும். இந்த எதிர்ப்பு |
வருங்காலத்தில் எழவிருந்த கலகத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது. காரணங்கள் வேலூர் கலகத்தற்கு பல காரணங்கள் கூறுப்படுகின்றன. வணிகக் குழுவின் ராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. சுதேச அரசர்கள் அரசியல் களத்திலிருந்து மறையத் தொடங்கியதால் , சிப்பாய்கள் வணிகக்குழுவிடம் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கண்டிப்பான ஒழுக்கம் , நடைமுறை , புதியவகை ஆயுதங்கள் , புதிய வழிமுறைகள் , சீருடை போன்றவை சிப்பாய்களுக்கு புதியதாக தோன்றின. நீண்டகாலமாக பழைய பழக்கங்களில் ஊறித் |
திளைத்தவர்களுக்கு புதியன புகுதல் என்பது சற்று கடினமாகவும் தவறாகவும் புலப்படும் என்பது இயற்கையே. அப்போது சென்னை ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனுமதியோடு , படைத்தளபதி சர் ஜான் கிரடாக் தலைப்பாகையுடன் கூடிய புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார். இந்த தலைப்பாகை ஐரோப்பிய தொப்பியைப் போலவே இருந்தது. காதணிகளை அணிவதும் , சமய சின்னங்களை இட்டுக்கொள்வதும் தடை செய்யப்பட்டன. மேலும் சிப்பாய்கள் தங்களது முகத்தை நன்றாக மழித்து , மீசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டும் என்று விதிக்கப்பட்டனர். ஆனால் , இந்த |
நடவடிக்கைகளை தங்களது சமய மற்றும் சமூகப்பழக்க வழக்கங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக சிப்பாய்கள் கருதினார்கள். மேலும் , அவர்கள் அனைவரையும் கிறித்துவ சமயத்திற்கு மாற்றும் முயற்சிக்கு இது முன்னோடி என்ற பரவலான கருத்தும் நிலவியது. ஆங்கிலேயர்கள் இந்திய சிப்பாய்களை தாழ்ந்தவர்களாக நடத்தினர். இனப்பாகுபாடும் காணப்பட்டது. வணிகக்குழுவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சிப்பாய்களின் கிளர்ச்சிகளுக்கு இது மன ரீதியான காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னர் சிப்பாய்கள் தங்களது மண்ணின் மைந்தர்களான இந்து முஸ்லிம் |
ஆட்சியாளர்களிடம் பணிபுரிந்தனர். தற்போது அந்நியருக்கு பணியாற்றினாலும் , முதன்மையான நாட்டுப்பற்றை அவர்கள் மறந்துவிடவில்லை. அளிக்கப்படவில்லை. அல்லது வேலூர் கலகம் வெடிக்குமுன்பே , இந்திய சிப்பாய்கள் தங்களது எதிர்ப்புகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர். 1806 மே திங்களில் வேலூர்ப் படையின் ஒரு பிரிவினர் புதிய விதியை எதிர்த்தனர். ஆனால் , அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த சிப்பாய்களும் தண்டிக்கப்பட்டனர். 500 முதல் 900 கசையடிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும். ஜூன் 17 ம் தேதி 1806 ம் ஆண்டு முதல் படைப் |
பிரிவைச் சேர்ந்த இராணுவசிப்பாய் முஸ்தபா பெக் தன்னுடைய உயர் அதிகாரியான கர்னல் போர்ப்ஸிடம் இரகசியமாக ஐரோப்பிய இராணுவ அதிகாரிகளையும் , துருப்புகளையும் பூண்டோடு அழிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார். ஆனால் இச்செய்திக்கு முக்கியத்துவம் வேலூர் கலகம் உருவாகுவதற்கு முன் திப்புவினுடைய மூத்த மகன் பதே ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டணியை மராத்திய , பிரெஞ்சு உதவியுடன் அமைக்க முற்பட்டார். மேலும் பதே ஹைதர் இரகசிய தகவல்களை முகமது மாலிக் என்பவர் வாயிலாக பெற்றார். குறிப்பாக வேலூர் இராணுவப் |
புரட்சிக்கு பதே ஹைதர் மற்றும் மொய்சுதீன் இருவரும் இணைந்து திட்டம் தீட்டினர். மீண்டும் வேலூர்கலகம் , முறையாக திட்டமிடப்படாவிட்டாலும் , அப்பகுதியில் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. புலித்தேவர் , கான்சாகிப் , கட்டபொம்மன் , மருது சகோதரர்கள் , திப்பு சுல்தான் போன்றோருக்கு ஏற்பட்ட கதியை சிப்பாய்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே , பிரிட்டிஷாரைப்பற்றிய ஒரு கசப்புணர்வு அவர்களுக்கு இருந்தது. இத்தகைய காரணங்களால் , வேலூர்க்கலகம் மூண்டது. கலகத்தின் போக்கு ஜூலை 10 ம் நாள் விடியற்காலை முதல் |
மற்றும் 23 ம் படைப்பிரிவை நேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர். இப்படைப் பிரிவுகளின் இராணுவ அதிகாரி கர்னல் பான்கோர்ட் இக்கலகத்திற்கு முதல் பலியானார். 23 வது படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார். இக்கலகத்தின் போது அடுத்ததாக கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ்ராங் ஆவார். ஏறத்தாழ 12 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 14 வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் மைல்களுக்கு அப்பாலுள்ள இராணிப்பேட்டைக்கு விரைந்து சென்று |
அங்கிருந்த இராணுவத்தளபதி கர்னல் ஜில்லஸ்பியிடம் காலை 7 மணியளவில் வேலூர் புரட்சியைப் பற்றி தெரிவித்தார். சுமார் காலை 9 மணியளவில் ஜில்லஸ்பி இராணுவ படையுடன் வேலூர் கோட்டையை அடைந்தார். கிளர்ச்சியாளர்கள் திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் என்பவரை புதிய சுல்தானாக அறிவித்தனர். திப்பு சுல்தானின் புலிக்கொடியையும் பறக்கவிட்டனர். ஆனால் , இக்கிளர்ச்சி கர்னல் ஜில்லெஸ்பியினால் உடனடியாக அடக்கப்பட்டது. கோட்டைக்குள் மட்டும் 800 இந்திய சிப்பாய்கள் இறந்து கிடந்தனர். திருச்சியிலும் வேலூரிலும் 600 சிப்பாய்கள் |
சிறைப்படுத்தப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இக்கலகம் ரத்தக்களரியில் முடிவடைந்தது. திப்புவின் மகன் கல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். படைத்தளபதியும் , சென்னை ஆளுநரும் திருப்பியழைக்கப்பட்டனர். வேலூர்க்கலகம் தோல்வியடைந்தது. ஆனால் , பிரிட்டிஷ் ஆட்சியில் தோன்றிய சிப்பாய்களின் எதிர்ப்புகளுக்கு இது ஒரு தொடக்கமாக அமைந்தது. 18 ஆம் நூற்றாண்டு குறுகிய ஆட்சியாளர்களின் எதிர்ப்புக்கு பெயர் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் முதல் அறுபது ஆண்டுகள் சிப்பாய்களின் எதிர்ப்பை பிரிட்டிஷார் |
சந்தித்தனர். வேலூர்க்கலகம் 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்துக்கு வழிவகுத்தது என்ற கூற்றை கே.கே. பிள்ளை என்ற வரலாற்று ஆசிரியர் மறுக்கிறார். 1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு வேலூர் கலகம் முன்னோடி என்று சவார்க்கர் கருதுகின்றார். இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்று என். சஞ்சீவி கூறியுள்ளார். காலனியாதிக்கத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர்க் கலகம் என்று கே. ராசய்யன் என்ற வரலாற்று அறிஞர் கூறுகிறார். கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து |
மாணவர்கள் அறிந்து கொண்டவை 1. வேலூர் சிப்பாய் கலகத்துக்கான பல்வேறு காரணங்கள் 2. பிரிட்டிஷார் ராணுவத்தில் நடைமுறைப்படுத்திய பல்வேறு விதிமுறைகளும் , சிப்பாய்களின் குறைகளும். 1. சரியான விடையைத் தேர்வு செய்க. 1. பின்வருவனவற்றுள் வேலூர் கலகத்திற்கான காரணம் எது ? அ. வாரிசு இழக்கும் கொள்கை ஆ. கப்பம் வசூலித்தனர் புதிய ஆயுதங்களையும் சீருடைகளையும் அறிமுகப்படுத்தியது. ஈ. பிரிட்டிஷ் ஆட்சியின் பொருளாதார சுரண்டல். கலகம் அடக்கப்பட்டது. இந்த கலகத்தின் தன்மை. கோடிட்ட இடத்தை நிரப்புக. வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி பயிற்சி |
பகுதி– அ சென்று உதவியை நாடினார். பொருத்துக. பதே ஹைதர் கர்னல் பான்கோர்ட் கோட்டைக்கு வெளியே இருந்துகொண்டு இராணிப்பேட்டைக்கு அ. சென்னை ஆளுநர் ஆ இ கலகத்தை அடக்கியவர் 3. வில்லியம் பெண்டிங் திப்புவின் மகன் 4. கர்னல் ஜில்லெஸ்பி கலகத்தில் கொல்லப்பட்டவர் IV. சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது அ. வேலூர் கலகத்திற்கு புதிய இராணுவ விதிமுறைகள் முக்கிய காரணம். ஆ. வேலூர் கோட்டையில் திப்புவின் குடும்பம் சிறை வைக்கப்படவில்லை. திப்புவின் மகன் பிரான்சின் உதவியை நாடவில்லை. கலகத்திற்குப் பின் திப்புவின் |
மகன்கள் பெனாங்கிற்கு கைதிகளாக அனுப்பப்பட்டனர். பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. 1. வேலூர் கலகத்தைப் பற்றி இந்திய சிப்பாயான முஸ்தபா பெக் முன் எச்சரிக்கை செய்தார். வேலூர் கலகத்தின்போது ஆங்கிலேய இராணுவ அதிகாரிகள் ஒருவர் கூட 2. கொல்லப்படவில்லை. VI. சிறு குறிப்பு எழுதுக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) சர் ஜான் கிரடாக் கர்னல் ஜில்லஸ்பி VII. குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) 1. வேலூர் கலகத்தின் போக்கினை விவரி VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் ) 1. 1806 ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் கலகத்துக்கான |
காரணங்களை ஆய்க. பாடம் – 11 1857 ஆம் ஆண்டு பெருங்கலகம் கற்றல் நோக்கங்கள் மாணவரை பின்வருவனவற்றை அறியும்படி செய்தல் : 1. 1857 ஆண்டு பெருங்கலகத்தின் தன்மை. 2. கலகத்திற்கான அடிப்படைக் காரணங்கள். 3. கலகம் வெடித்ததற்கு உடனடிக் காரணம் 4. கலகத்தின் போக்கு 5. கலகம் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் 6. கலகத்தின் விளைவுகள் இந்திய மக்களின் ஆழ்மனதில் ஊறிக்கிடந்த தேசியத்திற்கான விதைகளை 1857 ஆம் ஆண்டு கலகம் ஊன்றியது. 1947 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற இடைவிடாத போராட்டத்தின் துவக்கமாக இக்கலகம் இருந்தது. எனவே , 1857 ஆம் ஆண்டு |
பெருங்கலகத்தின் தன்மை , பண்பு மற்றும் காரணங்களை நன்கு ஆய்வதன்மூலம் அதற்குப்பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நன்கு புரிந்துகொள்ளலாம். கலகத்தின் தன்மை 1857 ஆம் ஆண்டு கலகத்தின் பண்பினை பிரிட்டிஷ் அறிஞர்களுடைய வரலாற்று ஏடுகள் குறைத்தே மதிப்பிடுகின்றன. சர் ஜான் லாரன்ஸ் இக்கலகத்தை வெறும் ராணுவப் புரட்சி என்றும் , பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிய நடத்தப்பட்ட சதி அல்ல என்றும் கருதுகின்றார். ஆனால் , இந்திய அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு கலகத்தை புகழ்ந்து எழுதியுள்ளனர். வீரசவார்க்கர் இதனை முதல் இந்திய விடுதலைப் போர் என்று |
குறிப்பிட்டுள்ளார். ஆர். சி. மஜும்தார் , எஸ்.என். சென் என்ற இரண்டு இந்திய வரலாற்று அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு கலகத்தை ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளனர். இவ்விருவருமே தங்களது கருத்துக்களில் மாறுபடுகின்றனர். எஸ்.என். சென் 1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி என்று கருதுகிறார். ஆர்.சி. மஜீம்தார் 1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றவை என்றும் , பின்னர் அவை 1857 ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்சவடிவம் பெற்றது என்றும் குறிப்பிடுகிறார். கலகத்துக்கான |
காரணங்கள் அரசியல் காரணங்கள் மக்களின் மனக்குறையும் எதிரான கலகங்களாக வெடித்தன. அமைதியின்மையும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இவை ஆட்சியாளர்கள் மற்றும் அரச குடும்பங்களை மட்டும் சார்ந்தது எனக் கூறமுடியாது. மாறாக , எந்தவொரு பகுதியில் பிரிட்டிஷ் அரசு காலூன்றினாலும் பிரிட்டிஷ் ஆட்சியை அப்பகுதி மக்கள் விரும்பவில்லை. குறிப்பாக , பிரிட்டிஷ் பேரரசுடன் நீதிக்குப்புறம்பான வகையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பர்மா , அஸ்ஸாம் , குடகு , சிந்து , பஞ்சாப் போன்ற பகுதிகளில் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வு அதிகமாக காணப்பட்டது. வாரிசு இழப்பு |
கொள்கையும் அதனை டல்ஹவுசி பிரபு நடைமுறைப்படுத்திய விதமும் , அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட இந்திய ஆட்சியாளர்களிடையே தீராத மனக்குறையையும் அச்சத்தையும் தோற்றுவித்தது. பொருளாதார காரணங்கள் செல்வச் சுரண்டல் , தொழில் நலிவு , அதிகரிக்கப்பட்ட நிலவரி ஆகியவையே 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காணப்பட்ட பொதுவான இந்தியப் பொருளாதார நிலையாகும். கிழக்கிந்திய வணிகக்குழு அரசியல் சக்தியாக மாறிய பிறகு , இந்தியர்களின் நலனுக்கு குந்தகமாக , அதனை தங்களது வணிக முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக் கொண்டது. பிரிட்டனில் இந்தியப் பொருட்களின் |
மீது அதிக வரிகளை விதித்து இந்திய வணிகத்தையும் தொழிலையும் ஒருபுறம் அழித்தனர். இந்தியாவிற்குள் பெருமளவு பிரிட்டிஷ் பொருட்களை கொண்டுவந்து குவித்து இந்தியத் தொழிலை மேலும் சீரழித்தனர். இங்கிலாந்தில் தொழிற்புரட்சியின்போது கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் , கூடவே இயந்திரத் தொழில்கள் வளர்ச்சியடைந்தமையால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால் , இந்தியாவில் கைத்தொழில் நசிந்து ஆயிரக்கணக்கான கைவினை கலைஞர்கள் வேலையிழந்து தவித்தபோது , புதிய தொழிலமைப்புகள் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
1833 ல் இந்தியாவில் புதிய பண்ணை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் , குடியானவர்கள் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளானார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் புதிய பண்ணைகளை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். வங்காளம் , பீகார் பகுதிகளில் அவுரிச்செடி பண்ணைகளிலிருந்த குடியானவர்கள் இந்த பண்ணை முறையில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சமூகக் காரணங்கள் இந்தியர்கள்மீது ஆங்கிலேயர் காட்டிய அகந்தையும் , தாறுமாறான தாக்குதல்களும் பொதுமக்களை பெரிதும் பாதித்தன. கிறித்துவ சமயப்பரப்பாளர்களின் நடவடிக்கைகள் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களிடையே |
பெரும் அச்சத்தை தோற்றுவித்தன. அவர்கள் ஏற்படுத்திய கல்விக் கூடங்களில் கீழ்த்திசை பாடங்களுக்குப் பதில் மேலை நாட்டுக்கல்வியும் பண்பாடும் பின்பற்றப்பட்டன. இந்தியக் குடிமக்கள் தங்களது சமுதாய அடையாளங்களை இழந்து வருவதாகக் கருதினர். ராணுவ காரணங்கள் பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த இந்திய வீரர்களிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறைந்த ஊதியம் , பதவி உயர்வுக்கான சாத்தியக் கூறுகள் இல்லாமை ஆகியவற்றால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இந்திய சிப்பாய்களின் சமூகப் |
பழக்கவழக்கங்களுக்கும் , சமய உணர்வுகளுக்கும் பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் சற்றும் மதிப்பளிக்கவில்லை. பொதுவாக , தங்கள் எஜமானர்களுக்கு நம்பிக்கையானவர்களாக அவர்கள் இருந்தபோதிலும் , இத்தகைய காரணங்களால் அவர்கள் கலகத்தில் ஈடுபடும்படி ஆயிற்று. 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு முன்னோடியாக விளங்கிய 1806 ஆம் ஆண்டு வேலூர்க் கலகம் பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனப்பாங்கை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அயல்நாடுகளில் சென்று பணியாற்றும்போது அளிக்கப்பட்டு வந்த இரட்டைப்படி ( பேட்டா ) ரத்து செய்யப்பட்டதும் சிப்பாய்களின் அதிருப்தி |
மேலோங்குவதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஆகும். எனவே , பிரிட்டிஷாருக்கு எதிரான வெறுப்பு பரவலாகவே காணப்பட்டது. 1857 ஆம் ஆண்டு குமுறிக்கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறுவதற்கு தயாராக இருந்தது. நெருப்பை கொழுந்துவிட்டு எரியச் செய்வதற்கு ஒரு தீப்பொறி மட்டுமே தேவைப்பட்டது. கலகத்தின் தோற்றம் கொழுப்பு தடவிய தோட்டக்கள் 1857 ஆம் ஆண்டு கலகத்துக்கு உடனடி காரணமாக அமைந்தன. இந்திய ராணுவத்தில் புதிய வகை என்பீல்டு துப்பாக்கிகள் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் தோட்டாக்களில் கொழுப்பு தடவப்பட்டிருந்தன. |
துப்பாக்கிகளுக்குள் பொருத்தப்படுவதற்கு முன்பு சிப்பாய்கள் அதனை வாயால் கவ்வி உறைகளை அகற்ற வேண்டியதாக இருந்தது. அதில் தடவப் பட்டிருந்த கொழுப்பு மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து எடுக்கப்பட்டவையாகும். இதனால் , இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்களின் சமய உணர்வுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசாங்கம் வேண்டுமென்றே தங்களது சமய மற்றும் கலாச்சார அடையாளங்களை அழிக்க முற்படுகிறது என சிப்பாய்கள் எண்ணினர். எனவே , அவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். 1857 மார்ச் 29 ஆம் நாள் பாரக்பூரில்தான் முதலில் கலகம் வெடித்தது. மங்கள் |
பாண்டே என்ற சிப்பாய் கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த மறுத்து , தன்னந்தனியாகவே தனது அதிகாரியைத் தாக்கி அவரைக் கொன்றான். இதற்காக , மங்கள்பாண்டே தூக்கிலிடப்பட்டான். அவனது படைப்பிரிவும் கலைக்கப்பட்டது. கிளர்ச்சிக்கு காரணமாக இருந்த சிப்பாய்களும் தண்டிக்கப்பட்டனர். பிரிட்டிஷாரின் இந்த நடவடிக்கை பதட்டத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. தொடர் நிகழ்ச்சிகளுக்கும் வித்திட்டது. 1857 மே திங்களில் 3 வது படைப்பிரிவைச் சேர்ந்த 85 சிப்பாய்களுக்கு , அவர்கள் கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தமைக்காக , |
நீண்டகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனவே , மே 10 ஆம் நாள் அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு , தங்களது அதிகாரிகளைக் கொன்றுவிட்டு , சிப்பாய்களை விடுதலை செய்தனர். பின்னர் , டெல்லி நோக்கி புறப்பட்டனர். மீரட்டிலிருந்த தளபதி ஹுவட் என்பவரால் இதனைத் தடுக்க முடியவில்லை. இரண்டாம் பகதூர் ஷா மறுநாள் காலை , கிளர்ச்சியாளர்கள் டெல்லியை அடைந்தனர். 1857 மே 12 ம் நாள் டெல்லியைக் கைப்பற்றினர். டெல்லியிலிருந்து படையதிகாரி லெப்டிணன்ட் வில்டாஷ்பி என்பவரால் கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முகலாய வம்சத்தைச் சேர்ந்த வயதான |
, பெயரளவுக்கே பேரரசராக இருந்த இரண்டாம் பகதூர்ஷா என்பவரை இந்தியாவின் பேரரசராக அறிவித்தனர். வடக்கு மற்றும் மத்திய இந்தியாவிலிருந்த லக்னோ , அலகாபாத் , கான்பூர் , பனாரஸ் , பீகாரின் சில பகுதிகள் , ஜான்சி போன்ற இடங்களிலும் கலகம் வேகமாகப் பரவியது. டெல்லியில் பகதூர் ஷா பெயரளவுக்கே கலகத்துக்கு தலைமை வகித்தார். உண்மையில் பகத்கான் என்ற தளபதி கலகக்காரர்களை வழி நடத்தினார். பிரிட்டிஷ் தரப்பில் , நிக்கல்சன் , வில்சன் , பெய்ர்ட் ஸ்மித் , நெவில் சாம்பர்லின் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் 1857 செப்டம்பரில் |
கலகக்காரர்களிடமிருந்த மீட்கப்பட்டது. இரண்டாம் பகதூர்ஷா சிறைப்பிடிக்கப்பட்டு ரங்கூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1862 ல் அங்கேயே அவர் இறந்தார். டெல்லி கான்பூர் கடைசி பேஷ்வா , இரண்டாம் பாஜிராவின் தத்துப் புதல்வரான கான்பூரில் நானா சாகிப் நடைபெற்ற கலகத்துக்கு தலைமையேற்றார். அங்கிருந்த ஆங்கிலேயரை விரட்டியடித்து விட்டு தம்மை பேஷ்வாவாக அறிவித்துக் கொண்டார். நானா சாகிப் நானா சாகிப்புக்கு பக்கபலமாக தாந்தியா தோப் மற்றும் அசிமுல்லா என்ற தாந்தியா இருவரும் இருந்தனர். 1857 ஜூன் 27 அன்று கான்பூர் படைப்பிரிவின் தோப் |
பிரிட்டிஷ் தளபதி சர் ஷோ வீலர் கலகக்காரர்களிடம் சரணடைந்தார். ஆனால் , பிரிட்டிஷ் தளபதி சர்காலின் காம்ப்பெல் என்பவரால் கான்பூர் விரைவில் மீட்கப்பட்டது. லக்னோ லக்னோவில் நடைபெற்ற கலகத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது அயோத்தி பேகம் ஆவார். சிப்பாய்கள் , ஜமீன்தார்கள் , குடியானவர்கள் ஆகியோரின் உதவியோடு , அயோத்தி பேகம் பிரிட்டிஷாருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார். முதன்மை ஆணையர் ஹென்றி லாரன்ஸ் பிரிட்டிஷாரைக் காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் நடைபெற்ற மோதலின்போது ஒரு வெடி விபத்தில் அவர் கொல்லப்பட்டார். சர் காலின் |
கேம்ப்பெல் லக்னோவிற்கு விரைந்து வந்து கலகத்தை ஓடுக்கி பிரிட்டிஷ் துருப்புக்களை விடுவித்தார். ஜான்சி அயோத்தி பேகம் ஜான்சியைச் சேர்ந்த , கங்காதர்ராவின் விதவையான , ராணி லட்சுமிபாய் இக்கலகத்தில் பெரும்பங்கு வகித்தார். டல்ஹவுசியின் வாரிசு இழப்புக் கொள்கையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் , ராணி லட்சுமிபாய். தாந்தியா தோப் அவருடன் சேர்ந்து கொண்டார். ராணியும் , தாந்தியா தோப்பும் சேர்ந்து குவாலியரைக் கைப்பற்றினர். ஆனால் , 1858 ஏப்ரல் 3 ஆம் நாள் சர் ஹோ ரோஸ் தாந்தியா தோப்பை முறியடித்து ஜான்சியை வீழ்த்தினார். பின்னர் , |
குவாலியரையும் கைப்பற்றினார். 1858 ஜூன் 17 ல் ஜான்சி ராணி போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தார். தாந்தியா சிறைப்பிடிக்கப்பட்டு , கிளர்ச்சியில் ஈடுபட்டது மற்றும் கான்பூர் தோப் ராணி லட்சுமி பாய் படுகொலை ஆகிய குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார். பீகார் அயோத்திக்கு அருகிலிருந்த ஜக்தீஷ்பூரின் ஜமீன்தார் கன்வர்சிங் பிரிட்டிஷ் ஆட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டார். பீகாரில் நடைபெற்ற கலகத்தை வழிநடத்தியவர் இவரேயாவார். பிரிட்டிஷாருடன் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த இவர் ஜக்தீஷ்பூரில் 1858 ஏப்ரல் 27 ல் இறந்தார். இறுதியாக , 1857 |
ஆண்டு கலகம் ஒடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் வெற்றி பெற்றனர். அரசப் பிரதிநிதி கானிங் பிரபு இந்தியா முழுவதும் அமைதியை அறிவித்தார். கலகத்தின் தோல்விக்கான காரணங்கள் இக்கலகத்தின் தோல்விக்கு தலையாய் காரணம் , ஒட்டுமொத்த இந்தியாவும் பங்கெடுக்கவில்லை என்பதாகும். சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரான , வட்டிக்கு கடன் கொடுப்போர் ( Money lenders ) , வியாபாரிகள் , படித்த இந்தியர்கள் ஆகியோர் இக்கலகத்தை ஆதரிக்கவில்லை. அறிவு ஜீவிகள் இக்கலகத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மேலும் , பிரிட்டிஷ் பேரரசின் வலிமை கலகக்காரர்களைவிட |
பன்படங்கு அதிகமாகும். அதேபோல் , கிளர்ச்சியாளர்களிடம் ஒரு பொதுவான திட்டமோ , அல்லது திட்டம் வகுத்து செயல்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு மத்திய அமைப்போ காணப்படவில்லை. மாறாக , பிரிட்டிஷாரிடம் நல்ல போர்த் தளவாடங்கள் இருந்தன. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளான தந்திமுறை , அஞ்சல் தொடர்புகள் அவர்களுக்கு கலகத்தை அடக்குவதற்கு பேருதவியாக இருந்தன. இதனால் , பிரிட்டிஷார் இந்தியாவின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பு கொள்ளவும் , துருப்புக்களை தேவைக்கேற்ப ஆங்காங்கே உடனுடக்குடன் அனுப்பி வைக்கவும் ஏதுவாக இருந்தது. இத்தகைய காரணங்களால் |
1857 ஆம் ஆண்டு கலகம் தோல்வியடைந்தது. பிரிட்டிஷார் வெற்றி பெற்றனர். கலகத்தின் முக்கியத்துவம் மற்றும் விளைவுகள் 1857 ஆம் ஆண்டு கலகம் ஒடுக்கப்பட்ட போதிலும் , அது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்தது. பிரிட்டிஷாருக்கு பரவலான எதிர்ப்பு இருப்பதை இது புலப்படுத்தியது. இந்திய சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சிலிர்த்து எழுந்தனர். பொதுமக்களும்கூட ஆங்காங்கே ஆயுதமேந்தி போரிட்டனர். ஈட்டி , கோடரி , வில் , அம்பு , கழி , கம்பு போன்ற கையில் கிடைத்த |
ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்தினர். ஆனால் , இத்தகைய பொதுமக்களின் பங்கு நாடு முழுவதும் காணப்படவில்லை. ஓரிரு இடங்களில் அவ்வப்போது மட்டுமே மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் , இந்த மக்களின் பங்களிப்பு 1857 ஆம் ஆண்டு கலகத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது. இக்கலகத்தில் காணப்பட்ட இந்து – முஸ்லிம் ஒற்றுமையும் மற்றொரு சிறப்புக் கூறாகும். இக்கலகத்தினால் பல முக்கிய விளைவுகளும் ஏற்பட்டன. இந்திய ஆட்சியில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 1858 |
நவம்பர் 1 ஆம் நாள் பேரரசியின் அறிக்கைப்படி பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இந்திய தலைமை ஆளுநர் அரசப்பிரதிநிதி ( வைஸ்ராய் ) என்று அழைக்கப்பட்டார். 1858 ஆண்டு சட்டப்படி கானிங் பிரபு இந்தியாவின் தலைமை ஆளுநராகவும் , முதல் அரசுப் பிரதிநிதியாகவும் செயல்படும் நல்வாய்ப்பை பெற்றார். பேரரசியின் அறிக்கைப்படி 1858 நவம்பர் முதல் நாள் அலகாபாத்தில் கானிங் பிரபு புதிய அரசாங்கத்தை முறைப்படி அறிவித்தார். பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் ‘ மேக்னா கார்ட்டா ’ ( உரிமை சாசனம் ) என்று அழைக்கப்படுகிறது. புதிய |
பகுதிகள் இணைக்கப்படமாட்டாது , சமய சகிப்புத்தன்மை பின்பற்றப்படும் , இந்திய அரசர்களின் உரிமைகள் மதிக்கப்படும் , தனது குடிமக்களான ஐரோப்பியர் , இந்தியர் அனைவரும் சமமாக நடத்தப்படுவர் என்று பல வாக்குறுதிகளை இந்த அறிக்கை வழங்கியது. 1857 ஆம் ஆண்டு கலகம் ஒரு சகாப்தம் முடிந்து மற்றொன்று தொடங்கியதைக் குறிப்பிடுகிறது. இந்திய வரலாற்றில் இரண்டு முக்கிய காலக் கட்டங்களை வேறுபடுத்திக்காட்டும் நிகழ்வாக இந்தக் கலகம் விளங்குகிறது. கலகத்துக்கு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் தலைமைப் பண்பு வெளிப்பட்டது. கலகத்துப்பின் , 19 ஆம் |
நூற்றாண்டின் பிற்பகுதியில் , இந்திய தேசியத்தின் வளர்ச்சி முக்கிய வரலாற்று நிகழ்வாகும். முன்பு கற்றல் அடைவுகள் இந்த பாடத்திலிருந்து மாணவர்கள் அறிந்து கொண்டவை 1. 1857 ஆம் ஆண்டு கலகத்தின் இருவேறுபட்ட தன்மைகள் 2. அடிப்படைக் காரணங்கள் அரசியல் , பொருளாதார , சமூக மற்றும் ராணுவத் தொடர்பானவை. உடனடிக் காரணம் , சிப்பாய்களின் தனிப்பட்ட குறைகள் கலகத்தின் போக்கு - ஒரே சமயத்தில் நடைபெறவில்லை. ஆங்காங்கே , அவ்வப்போது பொது மக்களும் பங்கேற்றனர். 3. 4. 5. மேம்பட்ட வலிமை கொண்ட பிரிட்டிஷார் கலகத்தை ஒடுக்கினர். 6. கலகத்தின் தோல்வி |
இந்திய சிப்பாய்கள் மற்றும் கலகத் தலைவர்களின் பலவீனம் வெளிப்பட்டது. 7. கலகத்தின் விளைவுகள் மற்றும் முக்கியத்துவம். பாடம் – 12 1858 ஆம் ஆண்டுக்குப்பின் பிரிட்டிஷ் இந்தியா : லிட்டன் பிரபு ( 1876-1880 ) , ரிப்பன் பிரபு ( 1880-1884 ) கர்சன் பிரபு ( 1899–1905 ) கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் அறிந்து கொள்ளப்போவது : 1. லிட்டன் பிரபுவின் கொள்கைகள் பஞ்சக் கொள்கை , இந்தியப் பத்திரிகைகள் , வாணிபம். 2. இரண்டாம் ஆப்கானியப் போர் 3. கல்வி , உள்ளாட்சி அமைப்புகள் குறித்த ரிப்பன் பிரபுவின் சீர்திருத்தங்கள். 4. |
இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சையும் , இந்தியர்கள் நலனில் ரிப்பன் பிரபு காட்டிய பரிவும். 5. கர்சன் பிரவுவின் சீர்திருத்தங்களும் , வங்கப் பிரிவினையும் 1857 ஆம் ஆண்டு கலகத்திற்குப்பின் இந்தியாவை ஆட்சிபுரியும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கமே எடுத்துக் கொண்டது. 1858 ல் கானிங் பிரபு முதல் அரசப் பிரதிநிதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டமும் , பேரரசியின் அறிக்கையும் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை காட்டுகின்றன. இந்தியாவில் பிரிட்டிஷார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றிய கொள்கைக்கு |
பேரரசியின் அறிக்கையே அடிப்படையாக அமைந்தது. இக்காலத்தில் , லிட்டன் பிரபு , ரிப்பன் பிரபு , கர்சன் பிரபு ஆகியோரது நிர்வாக நடவடிக்கைகள் முக்கியமானவையாகும். லிட்டன் பிரபு ( 1876-1880 ) லிட்டன் பிரபு ஒரு அனுபவம் மிகுந்த ராஜதந்திரி , திறமையும் ஆற்றலும் பெற்று விளங்கியவர். எனவே , பிரிட்டிஷ் பிரதமர் டிஸ்ரேலி அவரை இந்திய வைஸ்ராயாக நியமித்தார். அவர் பதவியேற்றபோது இந்தியாவில் நிலவிய பஞ்சமும் , வடமேற்கு எல்லைப்புறத்தில் காணப்பட்ட அரசியல் பதட்டங்களும் பிரிட்டிஷாருக்கு பெரும் கவலையை அளிப்பதாக இருந்தன. பஞ்சக் கொள்கை |
தொடர்ந்து இரண்டு பருவமழைகள் பொய்த்துப் போனதால் 1876- 78 ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சம் தலை விரித்தாடியது. 2,50,000 சதுர மைல்கள் பரப்பில் வாழ்ந்த 58 மில்லியன் மக்கள் இந்த பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டனர். சென்னை , மைசூர் , ஹைதராபாத் , பம்பாய் , மத்திய இந்தியா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 5 மில்லியன் மக்கள் மடிந்தனர். காலரா மற்றும் கடும் சுரத்தால் மக்கள் பட்ட துன்பங்கள்விக்டோரியா பேரரசி மேலும் அதிகரித்தன. நிலைமையை சமாளிப்பதில் லிட்டன் அரசாங்கம் பெரும் தோல்வி கண்டது. |
அரசாங்கத்தில் நிவாரண நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. சர் ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி தலைமையில் முதலாவது பஞ்சக்குழு ( 1878–80 ) ஏற்படுத்தப்பட்டது. போற்றத்தக்க பல பரிந்துரைகளை இக்குழு அரசாங்கத்துக்கு அளித்தது. ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பஞ்ச நிவாரணத்திற்கும் கட்டமைப்பு வேலைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று இக்குழு வலியுறுத்தியது. 1883 ஆம் ஆண்டிலிருந்து பஞ்சங்கள் குறித்த சட்டத் தொகுப்பு நடைமுறைப் படுத்தப்பட்டது. நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் , மற்றும் ஆயுதங்கள் சட்டம் ( 1878 ) லிட்டன் பிரபு 1878 ஆம் ஆண்டு |
நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒரு நாட்டுமொழி செய்தித்தாளின் ஆசிரியர் , பதிப்பாளர் மற்றும் அச்சக உரிமையாளர் ஆகியோரிடம் , ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராக ஏதும் பிரசுரிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியை ஒரு நீதிபதி கேட்டுப் பெறுவதற்கு வகை செய்யப்பட்டது. உறுதிமொழி மீறப்பட்ட குற்றத்திற்காக , அச்சகத்தின் சாதனங்களை பறிமுதல் செய்யவும் இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டது. இந்த சட்டம் இந்தியப் பத்திரிக்கைகளின் சுதந்திரத்தை நசுக்கியது. இச்சட்டத்தினால் , பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான பொதுக் கருத்து |
உருவாயிற்று. அதே ஆண்டில் , ஆயுதங்கள் சட்டமும் இயற்றப்பட்டது. சரியான உரிமங்கள் இன்றி இந்தியர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு இச்சட்டம் தடைவிதித்தது. இச்சட்டத்தை மீறுவது கிரிமினல் குற்றமாகும். ஆனால் , ஐரோப்பியரும் , ஆங்கிலோ – இந்தியரும் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தனர். பிற சீர்திருத்தங்கள் பிரிட்டிஷ் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான உப்பு வரியை லிட்டன் பிரபு அறிமுகப்படுத்தினார். மேலும் , அவர் பல்வேறு இறக்குமதி வரிகளை ரத்து செய்தார். தடையற்ற வணிகக் கொள்கையை அவர் ஆதரித்தார். இது இந்தியப் |
பொருளாதார நலன்களை பெரிதும் பாதித்தது. மேயோ பிரபு ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நிதி பன்முகப்படுத்தும் கொள்கை லிட்டன் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டது. நிலவரி , சுங்கவரி , பத்திரங்கள் , சட்டம் ஒழுங்கு போன்ற துறைகளில் செலவிட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் , மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. வருவாய் வசூலிப்பதில் மாகாணங்கள் பெரும் பங்கு ஆற்றவேண்டும் என்று லிட்டன் விரும்பினார். அப்போதுதான் மாகாணங்களின் நிதிநிலைமை வலுப்படும் என்று அவர் கருதினார். 1878 ஆம் ஆண்டு |
இந்தியருக்கென தனி சட்டப்படியிலான ஆட்சிப் பணித்துறை நிறுவப்பட்டது. பின்னர் , இது கலைக்கப்பட்டது. லிட்டனும் இரண்டாம் ஆப்கானியப் போரும் ( 1878–80 ) இந்தியா மீது ரஷ்யா படையெடுக்கும் என்ற அச்சமே பிரிட்டிஷாரின் ஆப்கானியக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்தது. முதல் ஆப்கானியப் போர் ( 1838-42 ) இந்தியாவிலிருந்த பிரிட்டிஷாருக்கு பெரும் துன்பமாக முடிவடைந்தது. லிட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக நியமிக்கப்பட்டபோது , முற்போக்குக் கொள்கையைப் பின்பற்றுமாறு தாய்நாட்டு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டார். ஆப்கானிஸ்தானத்திற்கு ஒரு |
தூதுக்குழுவை அனுப்பிவைக்க ரஷ்யா முயற்சியெடுத்தது. இதுவே இரண்டாம் ஆப்கானியப் போருக்கு முக்கிய காரணமாகும். 1878 ல் போர் தொடங்கியவுடன் , பிரிட்டிஷ் படைகள் காபூல் மற்றும் காண்டகார் இடையிலான பகுதியை கைப்பற்றின. ஆப்கானிய ஆட்சியாளர் ஷெர் அலி நாட்டைவிட்டு ஓடி , 1879 ல் இறந்தார். அவரது மகன் யாகூப்கான் அடுத்து ஆட்சிக்கு வந்தார். அவருடன் பிரிட்டிஷார் கண்டமக் உடன்படிக்கையை செய்து கொண்டனர். காபூலுக்கு ஒரு பிரிட்டிஷ் தூதர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் , பிரிட்டிஷ் தூதரையும் அவருடனிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளையும் ஆப்கானிய |
கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்தனர். பிரிட்டிஷ் படைகள் மீண்டும் காபூலை கைப்பற்றியபோதிலும் , ஆப்கானிய கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளினால் , அதனைத் தக்கவைத்துக் கொள்வது பெரும் பிரச்சினையாக இருந்தது. 1780 ல் , திடீர் திருப்பமாக லிட்டன் தனது பதவியிலிருந்து விலகும்படி பணிக்கப்பட்டார். இங்கிலாந்தில் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. லிட்டனது ஆப்கானியக் கொள்கை மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. காபூலில் பிரிட்டிஷ் தூதரும் அதிகாரிகளும் கொல்லப்பட்டதற்கு அவரே பொறுப்பு என்றும் கருதப்பட்டது. |
அவரது ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பஞ்சத்தினால் மடிந்தனர். அவர் கொண்டு வந்த நாட்டு மொழி செய்தித் தாள் சட்டம் லிட்டனுக்கு தீராத அவப்பெயரைத் தேடிக் கொடுத்தது. ரிப்பன் பிரபு ( 1880-84 ) தல சுய ஆட்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ரிப்பன் பிரபு ஒரு தாராள மக்களாட்சி வாதியாவார். இங்கிலாந்தின் லிபரல் கட்சி பிரதமரான கிளாட்ஸ்டன் என்பவரால் ரிப்பன் இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். லிட்டன் பின்பற்றிய ஆப்கானிய கொள்கையை திரும்பப் பெறும்படி ரிப்பனுக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே , அவர் இந்தியாவுக்கு |
வந்தவுடனேயே பிரிட்டிஷ் கவுரவத்துக்கு எந்த இழப்பும் ஏற்படாத வகையில் ஆப்கானிஸ்தானத்துடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார். காபூலில் பிரிட்டிஷ் தூதரை நியமிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது. மைசூரில் ஒரு இந்து அரசரை மீண்டும் நியமித்தது ரிப்பனின் மற்றொரு வரவேற்கத்தக்க நடிவடிக்கையாகும். மேலும் , ரிப்பன் நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை ரத்துசெய்து இந்திய மக்களிடையே பெரும்புகழ் பெற்றார். பின்னர் , இந்திய ஆட்சியமைப்பை தாராளமயமாக்குவதில் ரிப்பன் தமது கவனத்தை செலுத்தினார். ரிப்பன் பிரபு தல சுய ஆட்சியை |
அறிமுகப்படுத்துதல் ( 1882 ) கழகங்கள் போன்ற உள்ளாட்சி அரசியல் பண்புகளில் மிகவும் உயரிய மற்றும் செம்மையான பண்பு தலசுய ஆட்சி என்பது ரிப்பன் பிரபுவின் நம்பிக்கையாகும். ஆகவே , நகரங்களில் நகரசபை குழுக்கள் , தாலுக்காக்கள் மற்றும் கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகளை அவர் போற்றி வளர்த்தார். நகரசபைகளின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டன. அவற்றின் தலைவர்கள் அதிகாரிகள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். சுகாதாரம் , கழிவுநீர் சுத்திகரிப்பு , குடிநீர் வழங்குதல் , தொடக்கக்கல்வி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நிர்வகிக்கும் |
பொறுப்பு நகரசபைகளிடம் வழங்கப்பட்டது. மாவட்ட மற்றும் தாலுக்கா கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கழகங்களின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதிகாரிகள் அல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முழு உள்ளாட்சி அமைப்புகள் தங்களிடமிருந்த நிதி ஆதாரங்களைப் பொறுத்தவரை அதிகாரம் பெற்று விளங்கின. இந்தியாவின் ஆட்சியதிகாரம் படிப்படியாக படித்த இந்தியர்களின் கைக்கு மாற்றப்பட வேண்டும் என்பது ரிப்பனின் விருப்பமாக இருந்திருக்கலாம். அரசாங்க நியமனங்களுக்குப் பதில் உள்ளாட்சி கழகங்களுக்கு தேர்தல்கள் மூலம் உறுப்பினர்கள் |
தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று ரிப்பன் வலியுறுத்தினார். நிர்வாகத்தில் திறமையைப்புகுத்துவது ரிப்பனின் முக்கிய நோக்கமல்ல ; மாறாக நிர்வாகம் பரவலாக்கப்பட்டு மக்களுக்கு நெருக்கமானதாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் கருதினார். தல சுய ஆட்சியே ரிப்பனின் மகத்தான சாதனையாகும். இன்று நாட்டில் காணப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்தவர் ரிப்பன் பிரபு ஆவார். கல்வி சீர்திருத்தங்கள் வில்லியம் பெண்டிங் பிரபுவைப் போலவே , ரிப்பன் பிரபுவும் இந்தியர்களின் கல்விக்காக பாடுபட்டார். உட்ஸ் அறிக்கையின் அடிப்படையில் இந்தியக் |
கல்விமுறையின் செயல்பாட்டை ஆய்வு செய்ய ரிப்பன் முடிவு செய்தார். கல்வியமைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக 1882 ல் சர் வில்லியம் ஹண்டர் தலைமையிலான குழு ஒன்றை நியமித்தார். இதுவே ஹண்டர் கல்விக்குழு என்று அழைக்கப்படுகிறது. மக்களின் தொடக்கக் கல்வியை மேம்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என இக்குழு பரிந்துரைத்தது. இடைநிலைக் கல்வி இரண்டு கோணங்களில் மேம்படுத்தப்படவேண்டும் என்று இக்குழு கூறியது. அவை பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு இட்டுச் செல்லக்கூடிய இலக்கியக் கல்வி , மற்றும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் |
தொழிற்கல்வியாகும். பெண் கல்வியின் பிற்போக்கு நிலை குறித்தும் இக்குழு குறிப்பிட்டது. தொடக்கக் கல்வியை கிராமங்களிலும் , நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிப்பதை இக்குழு ஊக்குவித்தது. இந்தப் பரிந்துரைகளால் , இந்தியாவில் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. முதல் தொழிற்சாலைச் சட்டம் ( 1881 ) இந்தியாவின் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் பணிநிலைமைகளை மேம்படுத்துவதற்காக ரிப்பன் பிரபு 1881 ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். ஏழு வயதுக்கு குறைவான குழந்தைகளை |
தொழிற்சாலைகளில் வேலைக்கு நியமிப்பதை இச்சட்டம் தடைசெய்தது. குழந்தைகளின் வேலை நேரத்தையும் இது குறைத்தது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக , அபாயகரமான இயந்திரங்களைச் சுற்றி கட்டாயமாக வேலியமைக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறியது. இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை ( 1884 ) இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி , ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. |
நீதிமன்றங்களில் பதவியிலிருந்து இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883 ல் நீதித்துறையில் காணப்பட்ட இந்த பாகுபாட்டைப் போக்குவதற்காக ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால் , ஐரோப்பியர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இம்மசோதாவை எதிர்த்துப் போராட பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்த அவர்கள் போராட்ட நிதியாக ஒன்றரை லட்ச ரூபாயையும் திரட்டினர். ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகளின் விசாரணைக்கு உட்படுத்துவதைவிட , இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை |
முடிவுக்கொண்டு வருவதே மேல் என்று அவர்கள் கூறினர். இங்கிலாந்து பத்திரிக்கைகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்தன. எனவே , இங்கிலாந்திலும் இந்தியாவிலும் இருந்த ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார். இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை இந்திய தேசியம் வளருவதற்கு பெரிதும் உதவியது. இந்திய தேசிய இயக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த சர்ச்சையால் பெரிதும் மனமுடைந்த ரிப்பன் தனது பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இந்த நிகழ்வின் உடனடி விளைவாக , 1885 ஆம் ஆண்டு |