text
stringlengths
11
513
அல்லது பண மசோதாக்கள் ஆகிய அனைத்து மசோதாகளையும் தீர்மானித்தல். துறையை 12. அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரும் தொடர்புடைய மேற்பார்வையிடுகிறார் , கட்டுப்படுத்துகிறார் , மற்றும் ஒருங்கிணைக்கிறார். மற்றும் 13. வரவுசெலவுத்திட்டம் என அழைக்கப்படுகின்ற வருடாந்தர நிதிநிலை அறிக்கை அமைச்சரவையால் இறுதிசெய்யப்பட்டு நிலைபடுத்தப்படுகிறது. சட்டசபையின் மாநிலத்தில் சட்டத்துறையின் குறிப்பாக வழிகாட்டியாகவும் , எஜமானாகவும் அமைச்சரவை இருக்கிறது. அதுதவிர , மாநிலத்தின் பொதுக் கொள்கைகளை உருவாக்குபவர்களாகவும் , அமுல்படுத்துபவர்களாகவும்
அமைச்சர்கள் உள்ளனர். இருப்பினும் , அமைச்சரவைக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இயற்றும் உரிமையை மாநில சட்டசபைப் பெற்றுத்திகழ்கிறது. எனவே , மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது சீரிய விமர்சனத்திற்கு அமைச்சர்கள் உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் , இது வரையில் எந்த அமைச்சரவைக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதுவும் இயற்றப்படவில்லை. ஆனால் , 1963 - ல் காமராஜ் திட்டத்திற்கு இணங்க முதலமைச்சர் பதவியிலிருந்து கே. காமராஜ் இராஜினாமா செய்தார். விதி 356 - ன்படி மாநில அவசரநிலைப்
பிரகடனத்திற்கிணங்க 1980 - ல் எம்.ஜி.இராமச்சந்திரன் அமைச்சரவை கலைக்கட்டப்பட்டது. இதேபோல , 1991 ல் மு.கருணாநிதி அமைச்சரவை கலைக்கப்பட்டது. சுருக்கத்தில் , முதலமைச்சரை தலைவராகப் பெற்றுள்ள அமைச்சரவை மாநிலத்தில் மக்களின் நலனுக்காக எதையும் அல்லது ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது. 8.4 தமிழ்நாட்டில் சட்டமன்றம் ஒரு மாநில சட்டமன்றம் ஆளுநர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு சபைகளைப் பெற்றுள்ளது. ஒரு மாநில சட்டமன்றம் ஓரவையை உடையதாகவோ அல்லது ஈரவையை உடையதாகவோ இருக்கலாம். தற்போது பீகார் , கர்நாடகம் , மஹராஷ்ட்ரம் , உத்திரப்பிரதேசம் ,
ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற 5 மாநிலங்கள் மட்டும் ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றுள்ளன. ஒரு மாநிலத்தில் சட்டசபை என்பது கீழவை அல்லது முதலவை என்றும் மேலவை அல்லது இரண்டாம் அவை என்றும் இரு அவைகளைக் கொண்டிருக்கலாம். அல்லது முதலவை அல்லது கீழ் அவையை மட்டுமேயுடையதாகவும் இருக்கலாம். ஓரவை முறையில் சட்டசபை என்ற பெயர் நிலவுகிறது. 1986 - வரை தமிழ்நாடு சட்டமன்றம் ஈரவையைப் பெற்றிருந்தது. அந்த ஆண்டு முதலமச்சரான எம்.ஜி.இராமச்சந்திரனால் தலைமை வகித்த அஇஅதிமுக அரசாங்கத்தில் , மேலவை என்ற இரண்டாம் அவை ரத்து செய்யப்பட்டது. எனவே ,
தமிழ்நாட்டில் ஒரு சபை மட்டுமே இருப்பினும் , தமிழ்நாடு சட்டமன்றத்தின் இரண்டு அவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. 1. மேலவை மேலவை ஒரு அலங்கார சபையாக மட்டுமே உள்ளது. மேலும் அதன் மிகுந்த நிலைப்பாடு கீழவையின் விருப்பத்தைச் சார்ந்திருக்கிறது. அரசியலமைப்பின் விதி 169 - ன் படி , தொடர்புடைய மாநிலத்தின் பரிந்துரையின் மீது பாராளுமன்றத்தின் ஒரு சாதாரணச் சட்டத்தால் மேலவை ஏற்படுத்தப்படலாம். அல்லது ஒழிக்கப்படலாம். ஆனால் , மேலவையை உருவாக்குவதற்கு அல்லது ஒழிப்பதற்குச் சட்டசபையின் பரிந்துரை அவசியம். இப்பரிந்துரை
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும். அமைப்பு மேலவையின் உறுப்பினர்கள் சட்ட சபையின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் ஆனால் நாற்பதுக்குக் குறையாமலும் இருப்பார்கள். தமிழ்நாட்டின் மேலவை கலைக்கப்பட்டபோது கவுன்சில் 63 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. இயல்பாகவே , நேரடித் தேர்தல் , மறைமுகத் தேர்தல் மற்றும் நியமனம் போன்றவை அடங்கிய ஒரு கலப்பு பிரதிநிதித்துவத்தால் அது அமைக்கப்படுகிறது. மேலவைக்கான தேர்தல்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையால் ஒற்றை மாற்று
வாக்கு. முறையில் பின்வருகின்ற வகையில் நடத்தப்படுகின்றன ( விதி – 171 ). அ. 1/3 உறுப்பினர்கள் சட்டசபையால் தேர்ந்தெடுக்கப்படுவர். 1/3 உறுப்பினர்கள் பாராளுமன்றச் சட்டத்தால் குறிப்பிட்டதைப் போல , நகராட்சிகள் , மாவட்ட வாரியங்கள் மற்றும் பிற உள்ளாட்சி ஆணையங்கள் போன்றவற்றால் தேர்ந்தெடுக்கப்படுவர். 1/12 உறுப்பினர்கள் பட்டதாரிகள் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்படுவர். FF. 1/12 உறுப்பினர்கள் ஆசிரியர்கள் தொகுதிகளால் தேர்ந்தெடுப்படுவர். மற்றும் 1/6 உறுப்பினர்கள் இலக்கியம் , கலை , அறிவியல் , சமூகப்பணி மற்றும் கூட்டுறவு
இயக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். தகுதிகளும் , பதவிக்காலமும் அரசியலமைப்புக்கிணங்க , மேலவை உறுப்பினராவதற்கு ஒரு நபர் பின்வருகின்ற தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். 1. அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 2. அவர் 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மற்றும் 3. பாராளுமன்றத்தால் வரையறுக்கப்பட்டுள்ள மற்ற தகுதிகளையும் அவர் பெற்றிருக்க வேண்டும். மேலவையின் கலைப்பிற்கு உட்படாத ஒரு தொடரும் அமைப்பாக உள்ளது. பாராளுமன்றத்தின் இராஜ்ய சபையைப் போல , அதன் மூன்றில் ஒரு
பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஓய்வு பெறுகின்றனர். மேலவை உறுப்பினர் ஆறு வருட பதவிக்காலத்தைப் பெற்றுள்ளார். மேலும் அவர் கவுன்சிலுக்கு மறுமுறை தேர்ந்தெடுக்கப்படலாம். 4. பணிகள் மற்றும் அதிகாரங்கள் 1. சாதாரண மசோதாக்கள் அறிமுகப் படுத்தப்படலாம். 2. சட்ட சபையால் இயற்றப்பட்ட பண மசோதாக்களுக்கு அது ஒப்புதல் அளிக்கிறது. 3. சட்ட சபையால் இயற்றப்படுகின்ற பண மசோதாக்களை 14 நாட்களுக்கும் சாதாரண மசோதாக்களை 30 நாட்களுக்கும் அது தாமதப் படுத்தலாம். அதன் தலைவரும் துணைத் தலைவரும் அதன்
உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 5. பல்வேறு வகையான நடவடிக்கைகளுக்கான பல்வேறு குழுக்களை அது அமைக்கிறது. மற்றும் 6. ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்ட இடைக்காலச் சட்டங்களுக்கு அது ஒப்புதல் அளிக்கிறது. பொதுவாகவே , மேலவை ஒரு அலங்கார அவையாக மட்டுமே திகழ்கிறது. அதனால் , அது ஒரு நலிந்த அவையாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அல்லது அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களின் ஒப்புதலளிப்பில் அது பங்கேற்பதில்லை. சுருக்கத்தில் , கீழவையுடன் தொடர்புப் படுத்துகையில் , மேலவை அதிகாரமற்றதாக உள்ளது. மாநில
சட்டமன்றத்தின் இரண்டாம் அவை அல்லது மேலவை என்று அதை அழைப்பது பொருத்தமற்றதாக உள்ளது. முன்னர் குறிப்பிட்டதைப் போல் , தமிழ்நாட்டில் மேலவை தற்போது இல்லை. ஆகவே , தமிழ்நாடு ஓரவை சட்டமன்றத்தைப் பெற்றுள்ளது. 2. சட்டசபை ஒவ்வொரு மாநிலத்திலும் , பொதுவாக சட்டத்துறை என்பது சட்டசபை என பொருள்படும். மேலவையுள்ள மாநிலத்தில் கூட இதே நிலைதான். தமிழ்நாடு சட்டத்துறை சட்டசபை என்ற ஒரே ஒரு அவையை மட்டுமே பெற்றுள்ளது. அமைப்பு அரசியலமைப்பின் விதி 170 - க்கிணங்க , ஒரு மாநில சட்டசபை 500 - க்கு மிகாமலும் 50 - க்கு குறையாமலும்
உறுப்பினர்களைப் பெற்றிருக்கும். எனினும் , அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஒரு சட்டசபையின் குறைந்தபட்ச பலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டு சட்டசபை 235 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. இதில் 234 உறுப்பினர்களை வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மற்றுமுள்ள ஒரு உறுப்பினர் ஆங்கிலோ - இந்திய இனத்திலிருந்து ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இருப்பினும் , தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர்களுக்காக
அவையில் இடங்கள் ஒதுக்கப்படும். தகுதிகள் சட்டசபை உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் ஒரு நபர் பின்வருகின்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும். 1. அவர் ஒரு இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 2. அவர் 25 வயது அடைந்திருக்க வேண்டும். மற்றும் 3. பாராளுமன்றச் சட்டத்தால் வரையறை செய்யப்பட்ட மற்ற தகுதிகளையும் அவர் பெற்றிருக்க வேண்டும். பதவிக்காலம் இயல்பாகவே , சட்டசபையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால் , ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என்பது விதிவிலக்காகும். இருப்பினும் , விதி
356 - ன்படி மாநில அவசரநிலை என்று அழைக்கப்படுகின்ற ஜனாதிபதியின் பிரகடனப்படுத்தும் ஆணையின் விளைவாக , எந்த நேரமும் ஆளுநரால் சட்டசபை கலைக்கப்படலாம். விதி 352 - ன்படி தேசிய அவசரநிலையின் காரணமாக , சட்டசபையின் பதவிக்காலம் பாராளுமன்றத்தால் நீட்டிக்கப்படலாம். ஆனால் அது ஒரு வருடத்திற்கு மிகக் கூடாது. இருப்பினும் , அவசரநிலைப் பிரகடனம் வாபஸ் பெற்றபிறகு ஆறு மாதத்திற்குள் புதிய தேர்தல்கள் நடத்த வேண்டும். இவைதவிர , பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரை செய்வதற்கு , ஆளுநரிடம் முதலமைச்சர் தானாக
முன்வரலாம். அதிகாரங்களும் , பணிகளும் தமிழ்நாட்டில் சட்டசபை பல்வேறு பணிகளைச் செய்கின்ற ஒரு அரசியல் நிறுவனமாக உள்ளது. அது பின்வருகின்ற அதிகாரங்களையும் பணிகளையும் செயல்படுத்துகிறது. 1. அரசியலமைப்பால் விதிக்கப்பட்ட வரையரைகளைத்தவிர , மாநில அட்டவணை மற்றும் பொது அட்டவணை ஆகியவற்றின் எந்தப் பிரிவிலும் சட்டம் இயற்றுதல். 2. அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் ஒழித்தல். 3. மாநிலத்தின் நிதிகளைக் கட்டுப்படுத்துதல். 4. பண மசோதாக்களை அறிமுகப்படுத்தி அவைகளை நிறைவேற்றுதல். 5. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத்
திருத்த ஒப்புதலுக்காக வந்தால் அதற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது மறுத்தல். தமிழ்நாடு பொதுப்பணி ஆணையம் , பொதுக் கட்டுப்பாட்டாளர் தணிக்கையாளர் மற்றும் பிறரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளைப் பரிசீலித்தல். 7. பல்வேறு நடவடிக்கைகளுக்கான பல்வேறு குழுக்களை அமைத்தல் 8.5 உயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதித்துறை செயல்துறை மற்றும் சட்டத்துறை ஆகியவற்றைத் தொடர்ந்து , தமிழக அரசாங்கத்தின் மூன்றாவது கிளையாக நீதித்துறை இருக்கிறது. தமிழ்நாட்டின் நீதிமுறை உயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்கள் ஆகிய இரண்டு பிரிவான நீதிமன்றங்களைப்
பெற்றுள்ளது. சமீபத்தில் , சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் 2004 ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தின் அமைவிடம் சென்னையில் உள்ளது மற்றும் துணை நீதிமன்றங்களின் அமைவிடங்கள் மாவட்டத் தலைநகரங்களிலும் அவைகளுக்கு கீழ்நிலையிலும் உள்ளன. இங்கே , பொதுவாக தமிழ்நாட்டு நீதித்துறை பற்றிய விபரங்கள் அடுத்துத்தரப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் நீதித்துறையின் தலைமையாக உயர்நீதிமன்றம் திகழ்கிறது. அது ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் பல நீதிபதிகளையும் பெற்றுள்ளது. தலைமை நீதிபதி இந்திய
ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். மற்ற நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி , மாநில ஆளுநர் மற்றும் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோருடன் கலந்து ஆலோசித்தபின்பு ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர். இதைத்தவிர உயர்நீதிமன்றத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு மிகாமல் தற்காலிகப் பதவி வகிக்கக்கூடிய கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி அதிகாரம் பெற்றுள்ளார். மேலும் , உயர்நீதிமன்றத்தின் ஒரு நிரந்தர நீதிபதி தற்காலிகமாக பணிக்கு வராமலிருந்தாலோ அல்லது அவரின் கடமைகளைச் செய்ய
முடியாதிருந்தாலோ அல்லது தற்காலிகமாகத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாலோ அந்த இடத்தில் ஒரு செயல் நீதிபதியை நியமிக்க ஜனாதிபதி அதிகாரம் பெற்றுள்ளார். உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி 62 வயது முடியும் வரை பதவி வகிப்பார். நிரந்தர , கூடுதல் அல்லது செயல் நீதிபதி ஒவ்வொருவரும் பதவிக்காலம் முடிவதற்கு முன்பு பின்வரும் வழிகளில் பதவியை விட்டு விலகலாம். 1. ஜனாதிபதிக்கு எழுதி சமர்ப்பித்து இராஜினாமா செய்வதால். 2. ஜனாதிபதியால் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அல்லது ஒரு உய்ர்நீதிமன்றத்திலிருந்து வேறு
உயர்நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டால் , தகுதிகள் மற்றும் 3. துர்நடத்தை அல்லது திறமையின்மை காரணமாகப் பாராளுமன்றத்தின் ஈரவைகளில் ஜனாதிபதி உரைப்படி பதவி விலக்கப்பட்டால். உயர்நீதிமன்ற நீதிபதி நியமனத்திற்கு அரசியலமைப்பின் பின்வருகின்ற தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 1. அவர் ஒரு இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். 2. அவர் 62 வயது முடிந்தவராக இருத்தல் கூடாது. 3. இந்திய நிலப்பரப்பில் நீதித்துறையில் நீதிப்பணியை அவர் பெற்றிருந்திருக்க வேண்டும் ; அல்லது 4. குறைந்தது 10 வருடங்களாவது ஒரு உயர்நீதிமன்றத்தில் ஓர்
வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும். Page 1123 of 204 நீதிபதிகளின் சுதந்திரம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப்போல , உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சுதந்திரத்தை நிலைநிறுத்த பின்வரும் வழிகளினால் அரசியலமைப்பு நாடுகிறது. 1. உயர்நீதிமன்ற நீதிபதிகள் முக்கியமான அரசியலமைப்பு ஆணையுரிமையாளர்களாக உள்ளனர். 2. மாநிலத்தின் தொகுப்பு நிதியிலிருந்து நீதிபதிகளின் சம்பளங்களும் , படிகளும் வழங்கப்பட்டுகின்றன. 3. அரசியலமைப்பு விதி 360 - ன்படி நிதி அவசரநிலைக் காலத்தில் தவிர , ஒரு நீதிபதிக்கு வழங்கக்கூடிய சம்பளத்தையும் , படிகளையும் மற்றும்
அவரின் பணி ஓய்விற்குப் பின்னர் உள்ள உரிமைகளையும் சலுகைகளையும் பாராளுமன்றத்தால் குறைக்க அல்லது வேறுபடுத்த முடியாது. 4. உச்சநீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்கத்தைப் போல , உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவிநீக்கமும் ஒரு கடினமான வழிமுறையால் பின்பற்றப்படுகிறது. மற்றும் 5. ஒரு நீதிபதி தனது பணி ஓய்வுக்குப் பின்னர் எவ்வித வருவாய் தரும் பதவியையும் வகித்தல் கூடாது. அதிகாரவரம்பும் அதிகாரங்களும் அரசியலமைப்பின்படி சென்னை உயர்நீதிமன்றம் பின்வருகின்ற அதிகார வரம்பையும் , அதிகாரங்களையும் பெற்றுள்ளது. 1. ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பு
மும்பை , கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய மூன்று மாநில நகரங்களும் தங்களுடைய மாநில நகரங்களில் உருவாகும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் ஆரம்ப முறையீட்டு அதிகாரவரம்பைப் பெற்றிருந்தன. இருப்பினும் , 1973 ஆம் ஆண்டின் குற்ற வழிமுறைச் சட்டத்தால் உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப முறையீட்டு குற்ற அதிகார வரம்பு முழுவதும் எடுக்கப்பட்டது. சிவில் வழக்குகளை நடத்துவதற்கு நகர சிவில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் , உயர்நீதிமன்றத்தின் ஆரம்ப முறையீட்டு சிவில் அதிகாரவரம்பு ஒழிக்கப்படவில்லை. அதாவது , வழக்கின் மதிப்பீடு உயர்வின்
காரணமாக அது ஒழிக்கப்படவில்லை. 2. மேல் முறையீட்டு அதிகாரவரம்பு தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றம் தலையாய நீதிமன்றமாக உள்ளது. சிவில் மற்றும் குற்ற வழக்குகள் இரண்டிலும் மேல் முறையீட்டு அதிகாரவரம்பை அது பெற்றுள்ளது. சிவில் பகுதியில் , மாவட்ட நீதிபதியின் முடிவிலிருந்தும் , உயர் மதிப்பீட்டின் காரணமாகத் துணை நீதிபதியின் முடிவிலிருந்தும் நேரடியாக மேல்முறையீடுகள் உயர்நீதிமன்றத்திற்கு வருகின்றன. 3. நீதிப்பேராணை அதிகாரவரம்பு இந்திய அரசியலமைப்பு வடிவமைப்புக் குழுவின் தலைவரான பி.ஆர். அம்பேத்கரின் கருத்திற்கிணங்க , விதி -32
அரசியலமைப்பின் உயிரும் இதயமும் ஆகும். ஏனென்றால் , நீதிப்பேராணைகள் மூலமாக ஒவ்வொரு இந்தியக் குடிமகளின் உரிமைகள் , சுதந்திரம் மற்றும் சலுகைகள் போன்றவற்றை அது பாதுகாக்கிறது. அதேபோல , விதி 226 - ன் படி உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை அதிகார வரம்பைப் பெற்றுள்ளது. ஆட்கொணர்பேராணை , கட்டளைப்பேராணை , தடுப்புப்பேராணை , சான்றுபேராணை மற்றும் தகுதிவினாப் பேராணை போன்ற ஐந்து பேராணைகள் உள்ளன. 4. கண்காணிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றம் இராணுவத் தீர்ப்பாயங்களைத்தவிர , தனது அதிகார வரம்பின் பரப்பிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும்
மற்றும் தீர்ப்பாயங்களையும் கண்காணிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. உண்மையில் , அது பரந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளது. 5. மாநில நீதித்துறையின் தலைமையகம் மாநில நீதித்துறையின் தலைமையகமாக , உயர்நீதிமன்றம் தனது மேல்முறையீட்டு மற்றும் மேற்பார்வை அதிகார வரம்பைத்தவிர , சில குறிப்பிட்ட விவகாரங்களில் துணை நீதித்துறையின் மீது நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இவ்வாறாக , உயர்நீதிமன்றம் அதிகாரம் பொதிந்ததாக உள்ளது. மேலும் , அது பதிவு நீதிமன்றமாகவும் செயல்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக , மாநிலத்தின் மிகமுக்கியமான
வழக்குகளைத் தீர்த்துவைப்பதற்கு அமர்வு அதிகாரவரம்பையும் அது பெற்றுள்ளது. துணை நீதிமன்றங்கள் சிவில் வழிமுறை சட்டத்துடன் தொடர்புள்ள சிவில் நீதிமன்றங்கள் மற்றும் குற்ற வழிமுறைச் சட்டத்துடன் தொடர்புள்ள குற்றவியல் நீதிமன்றங்கள் போன்ற இரண்டு வகைகளாகத் துணை நீதிமன்றங்கள் பிரிக்கப்படுகின்றன. அகில இந்திய நீதிபதிகள் சங்கத்தின் வழக்கிற்கிணங்க , ( 1989 ) நாடு முழுவதும் துணை நீதித்துறையின் நீதி அலுவலர்களில் ஒரேமாதிரியான பதவிநிலை கொண்டுவர உச்சநீதிமன்றம் வலியுறுத்துகிறது. அதாவது , சிவில் பக்கத்தில் மாவட்ட நீதிபதி , கூடுதல்
மாவட்ட நீதிபதி , சிவில் நீதிபதி ( முதுநிலைப் பிரிவு ) மற்றும் சிவில் நீதிபதி ( இளநிலைப் பிரிவு ) என்ற படிநிலையும் , குற்றவியல் வழிமுறைச் சட்டம் வரையறுத்தபடி குற்றவியல் பக்கத்தில் செசன்ஸ் நீதிபதி , கூடுதல் செசன்ஸ் நீதிபதி , முதன்மை நீதித்துறை நடுவர் மற்றும் நீதித்துறை நடுவர் என்ற படிநிலையும் இருக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. கீழே வருகின்ற அட்டவணை துணை நீதிமன்றங்களின் படிநிலையைக் காண்பிக்கிறது. துணை நீதிமன்றங்களின் படிநிலையைக் காட்டும் அட்டவணை சிவில் பக்கம் குற்றவியல் பக்கம் 1. மாவட்ட நீதிபதி
செசன்ஸ் நீதிபதி T + 2. கூடுதல் மாவட்ட நீதிபதி கூடுதல் செசன்ஸ் நீதிபதி + முதன்மை நீதித்துறை நடுவர் இத்துடன் , சிறு காரண நீதிமன்றங்களும் உள்ளன. பிராந்திய சிறு காரணங்கள் சட்டத்தின்படி இவ்வகையான நீதிமன்றங்கள் மாவட்ட அளவிலோ அல்லது மாநில சிறு காரணங்கள் நீதிமன்ற சட்டத்தின்படி மாநகரங்களிலோ அமைக்கப்படுகின்றன. மாநில உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையுடன் ஆளுநரால் ஒரு மாவட்ட நீதிபதி நியமிக்கப்படுவார் என்றும் , பணிநியமனம் , இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு போன்றவைகளும் இதே வகையில் இருக்கும் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது. மாநில
நீதிப் பணியின் பிற எந்தப் பதவியின் பணிநியமனம் தொடர்பாக , மாநில பொதுப்பணி ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றத்துடன் ஆலோசித்து உருவாக்கிய விதிகளின்படி ஆளுநரால் நியமனம் செய்யப்படும் என்று அரசியலமைப்பு கூறுகிறது. விதி 235 க்கிணங்க , துணை நீதிப்பணி உறுப்பினர்கள் மீதான நிர்வாகக் கட்டுப்பாடு உயர்நீதிமன்றத்துடன் உள்ளது. குடும்ப நீதிமன்றங்கள் முறையான நீதிமன்றங்களின் படிநிலைகளுடன் , இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குடும்ப நீதிமன்றங்களும் அமைக்கப்படுகின்றன. 1984 ஆம் ஆண்டின் குடும்ப நீதிமன்றங்கள் சட்டத்திற்கிணங்க , அதிகச்
செலவினம் இல்லாமல் வழக்குகளைத் தீர்ப்பது மற்றும் முறையான நீதிமன்றங்களில் அதிகச் செலவு ஏற்படுவது போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக்கொண்டு , திருமணங்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு இவ்வகையான நீதிமன்றங்கள் அதிகாரங்களையும் , அதிகார வரம்பையும் பெற்றுள்ளன. குடும்பம் , விவாகரத்து , வரதட்சணை போன்றவற்றின் பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்களும் இவ்வித நீதிமன்றங்களால் கவனிக்கப்படுகின்றன. இவ்வித நீதிமன்றங்கள் சிவில் வழிமுறைச் சட்டத்தைப் பின்பற்றுகின்றன. 8.6 செயலகம் இந்தியாவில் ஒவ்வொரு
மாநிலமும் அதன் சொந்த செயலகத்தைப் பெற்றுள்ளது. அது மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலமாக இருக்கிறது. அது அரசாங்கத்தின் பல்வேறு துறைகளைப் பெற்றுள்ளது. ஒரு துறையின் அரசியல் தலைவராக அமைச்சரும் , அத்துறையின் நிர்வாகத் தலைவராகச் செயலரும் உள்ளனர். ஒரு செயலர் ஒன்று அல்லது இரண்டு துறைகளுக்குத் தலைவராக இருக்கின்ற வேளையில் , தலைமைச் செயலர் ஒட்டுமொத்த செயலகத்தின் தலைவராக இருக்கிறார். செயலர் என்பவர் வழக்கமாக ஒரு மூத்த அகில இந்தியப்பணி அலுவலராகவும் பொது நிர்வாகியாகவும் உள்ளார். இந்த விதிக்கு விதிவிலக்காக பொதுப்பணித் துறை
ஒரு சிறப்பு நிர்வாகியான தலைமைப் பொறியாளரால் தலைமை வகிக்கிப்படுகிறது. தமிழ்நாட்டில் செயலகம் தலைமைச் செயலகம் என்று அழைக்கப்படுகிறது. அது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. துறைகள் பொதுவாகவே , செயலகத்தில் துறைகளின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அது 15 துறைகளிலிருந்து துறைகள் வரை உள்ளது. தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தில் உள்ளடங்கியுள்ள துறைகள் பின்வருகின்றன. 1. பொதுநிர்வாகம் 2. உள்துறை 9. சட்டசபை உறுப்பினர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற சட்டத்துறைக்கு அமைச்சர்கள்
செய்யும் பொறுப்புகளுக்கு அது உதவிபுரிகிறது. 10. துறைகளின் தலைவர்களை அது நியமிக்கிறது மற்றும் சம்பளம் போன்ற அதுதொடர்பான பணிகளைக் கவனிக்கிறது. 11. பணிவிதிகள் மற்றும் அவைகளின் திருத்தங்களுக்கு அது ஒப்புதல் அளிக்கிறது. 12. மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அது ஆராய்கிறது. 13. மாநில அரசாங்கத்தின் ஒரு சிந்தனைக் களஞ்சியமாக அது பணிபுரிகிறது. 14. செயலகத்தின் முறையான செயல்பாட்டில் தலைமைச் செயலருக்கு அது உதவுகிறது. மற்றும் 15. மக்களிடமிருந்து புகார்கள் , விண்ணப்பங்கள் மற்றும் முறையீடுகளைப்
பெற்று அவைகளை அது தீர்த்துவைக்கிறது. தலைமைச் செயலர் பிரதான பணிகள் 1. தலைமைச் செயலர் மாநிலச் செயலகத்தின் செயல்துறைத் தலைவராக உள்ளார். மாநில நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவராக அவர் உள்ளார் மற்றும் மாநில நிர்வாகப் படிநிலையின் உச்சத்தில் நிற்கிறார். உண்மையில் , அவர் அனைத்து செயலர்களின் தலைவராக இருந்து அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்துகிறார். அவர் மாநிலத்தில் மிகவும் மூத்த சிவில் பணியாளராக இருக்கிறார். மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட செயல் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களையும் பணிகளையும் அவர்
பெற்றுள்ளார். மேலும் , மரபுகளிலிருந்தும் சில அதிகாரங்களை அவர் பெறுகிறார். அவர் பின்வருகின்ற பிரதான பணிகளையும் , மற்ற பணிகளையும் செய்கிறார். முதலமைச்சருக்கு ஒரு ஆலோசகராக , மாநில அமைச்சர்களால் அனுப்பப்படும் முன்வரைவுகளின் நிர்வாக உள்ளடக்கங்களை தலைமைச் செயலர் விளக்குகிறார். அமைச்சர் குழுவிற்கு செயலராக , அமைச்சர்குழு கூட்டங்களுக்கான நிகழ்ச்சிநிரலை அவர் தயாரிக்கிறார். மற்றும் அதன் செயல்பாடுகளின் பதிவுகளைப் பாதுகாக்கிறார். சிவில் பணியின் தலைவராக , மூத்த மாநில சிவில் பணியாளர்களின் நியமனம் , இடமாற்றம் மற்றும் பதவி
உயர்வு தொடர்பானவற்றை அவர் கவனிக்கிறார். தலைமை ஒருங்கிணைப்பாளராக , துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணப்பை நோக்கி அவர் பணிபுரிகிறார். துறைகளுக்கிடையேயான சிக்கல்களைப் போக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அவர் இருக்கிறார். 5. சில குறிப்பிட்ட துறைகளின் தலைவராக , அவைகளை மேற்பார்வையிடுகிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார். மற்றும் சிக்கல் தீர்க்கும் நிர்வாகியாக , வெள்ளம் , வறட்சி , இனக் கலவரங்கள் போன்ற சிக்கலான நேரங்களில் மிகவும் முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார். மற்ற பணிகள் 1. துறைகளுக்குள்
அடங்காத அனைத்து விவகாரங்களையும் தலைமைச் செயலர் கவனிக்கிறார். 2. ஒட்டுமொத்த செயலகத்தின் மீதான பொது மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டை அவர் செயல்படுத்துகிறார். 4. 3. தொடர்புடைய மாநில உறுப்பினராக உள்ள மண்டலக் கவுன்சிலின் செயலராக சுழற்சி முறையில் அவர் செயல்படுகிறார். செயலகக் கட்டிடம் , அமைச்சர்களுடன் தொடர்புடைய பணியாளர்கள் , செயலக நூலகம் மற்றும் செயலகத்துறைகளின் பணியாளர்கள் மீதான நிர்வாகக் கட்டுப்பாட்டை அவர் பெற்றுள்ளார். 6. 5. மாநில அரசாங்கம் , மத்திய அரசாங்கம் மற்றும் பிற மாநில அரசாங்கங்கள் போன்றவைகளுக்கிடையே
தகவலின் பிரதான வழியாக அவர் இருக்கிறார் , சட்டம் மற்றும் ஒழுங்கு , திட்டமிடல் போன்ற நிர்வாகத்தில் ஒரு முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார். மற்றும் 7. மாநில அரசாங்கத்தின் ஒரு பேச்சாளராக அவர் செயல்படுகிறார். 8. தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார். 9. மாநில அரசாங்கத்தின் தலைமை பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார். 10. அரசியலமைப்பு விதி 356 - ன்படி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படும் போது , மத்திய ஆலோசகர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும்போது ஆளுநருக்கு முதன்மை
ஆலோசகராக அவர் செயல்படுகிறார். இவ்வாறாக , மொத்தத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலமாக இருக்கிறது. இதேபோல , தமிழ்நாட்டில் அனைத்துச் செயலர்களின் தலைவராக உள்ள தலைமைச் செயலர் குறிப்பாகச் செயலக நிர்வாகத்தின் நரம்பு முறைமையாக இருக்கிறார். 8.7 கீழ்நிலையிலுள்ள கிராம அலுவலர் ( VAO ) வரையிலான மாவட்ட நிர்வாக அமைப்பும் அவைகளின் பணிகளும் இந்தியாவில் நிர்வாகத்தின் அடிப்படை அலகாக மாவட்டம் உள்ளது. “ தனி நிர்வாக நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பே மாவட்டம் ” என்று ஆக்ஸ்போர்டு ஆங்கிலச்
சொல்லகராதி இலக்கணப்படுத்துகிறது. ஒரு மாவட்டம் பொதுவாக பெரிய நகரத்தின் மீது பெயரிடப்படுகிறது. ஆதலால் , படிநிலை நிர்வாகத்தின் ஒரு நிர்வாக அலகாக மாவட்டம் உள்ளது. அந்தப் படிநிலை நிர்வாகமானது கிராமங்கள் , சிறு நகரங்கள் மற்றும் பெருநகரங்கள் போன்ற பூகோளப் பரப்பளவு களங்களின் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. எனவே , ஒரு மாவட்டமாக சட்டப்படியாக அறிமுகமான ஒரு களமாக இருப்பதால் , ' மாவட்ட நிர்வாகம் ’ என்ற வார்த்தைஅரசாங்கப் பணிகளின் மேலாண்மை எனப் பொருள்படுகிறது. இந்தியாவில் ஊரக மாவட்டம் , நகர மாவட்டம் , தொழில் மாவட்டம் , பின்னிலை
மாவட்டம் மற்றும் மலை மாவட்டம் என்று ஐந்து வகைகள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் தன்மைகள் பொதுவாகவே , மாவட்ட நிர்வாகம் பின்வருகின்ற தன்மைகளைப் பெற்றுள்ளது. 1. மாவட்ட அளவில்தான் மாநில அரசாங்கம் மக்களுடன் தொடர்புகொள்ள வருகிறது. 2. ஆலோசனைச் செயலி அல்லது செயலகப் பணிகளுக்கு பதிலாக மாவட்ட நிர்வாகம் ஒரு களப்பணியாக உள்ளது. 3. மாவட்ட பிரச்சினைகள் மாவட்டம் தொடர்பான ஸ்தலசுய தன்மையானவைகளாக உள்ளன. 4. மாவட்ட அளவில் கொள்கை உருவாக்கம் முடிவடைந்து அமுலாக்கம் தொடங்குகிறது. 5. மாநில அரசாங்கத்தின் இறுதி முகவராகவும் , மாவட்டத்தில்
எந்தச் செயல்பாடு அல்லது நிகழ்வுக்கான ‘ அவ்விட மனிதன் ' என்றும் மாவட்ட அலுவலர் இருக்கிறார். மற்றும் மாவட்டத்தில் அலகுகளின் பணிச்செயல்பாடு ஒட்டுமொத்தமாக உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள துறைகள் மாவட்ட அளவில் தங்களது கள முகமைகளைப் பெற்றுள்ளன. மாவட்ட அளவிலான பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியாளர் உள்ளார். 1772 ல் வருவாய் வசூலித்தல் மற்றும் நீதி வழங்குதல் ஆகிய இரட்டை நோக்கத்திற்காக , முதல்முதலில் வாரன்ஹேஸ்டிங்ஸ் என்பவரால் மாவட்ட ஆட்சியாளர் பதவி உருவாக்கப்பட்டது. சரியாகக் கூறினால் , ஆரம்பத்தில்
நிலவருவாய் வசூலிப்பதற்காக மட்டுமே மாவட்ட ஆட்சியாளர் இருந்தார். ஆனால் , தற்போது மாவட்ட ஆட்சியாளருக்கு மிகுதியான பணிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியாளரின் பொதுவான பங்குகளும் பணிகளும் பின்வருமாறு. 1. மாவட்ட ஆட்சியாளராக , நில வருவாயை வசூலிப்பதற்கு அவர் கடமைப்பட்டவர். 2. மாவட்ட நீதிபதியாக , மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க அவர் கடமைப்பட்டுள்ளார். 3. மாவட்ட அலுவலராக , மாவட்டத்திற்குள் சம்பளம் , இடமாற்றம் போன்ற பணியாளர் விசயங்களை கவனிக்க அவர் கடமைப்பட்டவர். 4. மேம்பாட்டு அலுவலராக , ஊரக மேம்பாட்டுத்
திட்டங்களின் அமுலாக்கத்திற்கு பொறுப்புடையவராக அவர் உள்ளார். 5. தேர்தல் அலுவலராக , மாவட்டத்தில் பாராளுமன்றம் , மாநிலச் சட்டசபை மற்றும் உள்ளாட்சி அரசாங்கம் ஆகியவைகளுக்கு நடத்தப்படும் தேர்தல்களுக்கு அவர் தலைவராக இருக்கிறார். எனவே , மாவட்டத்தில் தேர்தல் பணிகளை அவர் ஒருங்கிணைக்கிறார். 6. மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலராக பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை அவர் நடத்துகிறார். 7. தலைமைப் பாதுகாப்பு அலுவலராக , மாவட்டத்தில் மிக முக்கியமானவர்களின் சுற்றுலா மற்றும் தங்குதலில்
பாதுகாக்க அவர் கடமைப்பட்டவர். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக , துறைகளையும் அவர் மேற்பார்வையிடுகிறார். 9. மாவட்ட திட்ட அமுலாக்க குழுவிற்கு அவர் தலைமை வகிக்கிறார். 10. மாவட்டத்தில் பொது விழாக்களின் போது மாநில அரசாங்கத்தின் அலுவலகப் பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார். அளவிலான மற்ற பணியாளர்களையும் 11. மாநில அரசாங்கத்தின் பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார். 12. இயற்கைச் சீற்றத்தின் போதும் மற்ற அவசர நிலைகளின் போதும் சிக்கல் தீர்க்கும் தலைமை நிர்வாகியாக அவர் செயல்படுகிறார். 13. உள்ளாட்சி அரசாங்க நிறுவனங்களை
அவர் மேற்பார்வையிடுகிறார் மற்றும் கட்டுப்படுத்துகிறார். 14. சிவில் , பாதுகாப்புத் தொடர்பான பணிகளை அவர் மேற்கொள்கிறார். மற்றும் 15. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சிவில் விநியோகங்களுக்கு அவர் பொறுப்புடையவராக இருக்கிறார். எனவே , மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியாளர் பல்வேறு பணிபுரியும் பணியாளராக உள்ளார். உண்மையில் , மக்களுக்காக அதிக எண்ணிக்கையுள்ள திட்டங்களை அமுல்படுத்தக் கடமைப்பட்டுள்ள அரசாங்கத்தின் பொதுநல அரசுக் கொள்கைக்கேற்ப , ஒரு மாவட்ட ஆட்சியாளருக்கு அதிகமான பணிப்பளுச் செயல்பாடுகள் உள்ளன. நடைமுறையில் ,
மாவட்ட ஆட்சித் தலைவர் பதவி மிக அதிக மதிப்புள்ளதாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நாயகனாக மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளார். மாவட்ட அளவிலான மற்ற முக்கிய பணியாளர்கள் பின்வருகின்றனர். 1. காவல் கண்காணிப்பாளர் 2. மாவட்ட மருத்துவ அலுவலர் 3. மாவட்ட சுகாதார அலுவலர் 4. மாவட்ட வன அலுவலர். 5. கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் 6. மாவட்ட விவசாய அலுவலர் 7. மாவட்ட தொழில்கள் அலுவலர் 8. மாவட்ட நீதிபதி 9. பின்னிலை வகுப்பு நல அலுவலர் 10. சிறைகள் கண்காணிப்பாளர் 11. மாவட்ட தொழிலாளர் அலுவலர் கோட்ட அளவு தமிழ்நாட்டில் , குறிப்பாக
வருவாய் நிர்வாகத்திற்கும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் கோட்ட நிர்வாகத் தலைவராக வருவாய் கோட்ட அலுவலர் உள்ளார். ஆனால் , கோட்ட அளவிலான மேம்பாட்டு நிர்வாகம் உதவி இயக்குனர் ( மேம்பாடு ) என்பவரால் தலைமை Page 130 of 204 வகிக்கப்படுகிறது. ( முன்னர் கோட்ட மேம்பாட்டு அலுவலர் - DDO ). உதவி இயக்குனர் ( மேம்பாடு ) என்ற அலுவலரின் கீழ் விவசாயம் , கூட்டுறவு , தொழில் , கல்வி , விலங்கு பராமரிப்பு மற்றும் சுகாதாரம் போன்றவைகளுக்கான விரிவாக்க அலுவலர்கள் பணியாளர்களாக உள்ளனர். தாலுகா அளவு தமிழ்நாட்டில் தாலுகா அளவிலான
நிர்வாகத்தின் தலைவராகத் தாசில்தார் என்ற வட்டாட்சியர் உள்ளார். இங்கே , தாலுகா என்பது வட்டம் என்று பொருள்படும். வட்ட அளவில் வட்டாட்சியருக்கு உதவி புரிவதற்குத் துணை வட்டாசியர்கள் உள்ளனர். மேம்பாட்டு நிர்வாகத்திற்காக ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய ஆணையர் அல்லது பிளாக் மேம்பாட்டு அலுவலர் ( BDO ) அதன் தலைவராக இருக்கிறார் மற்றும் அவருக்குக்கீழ் விவசாயம் , சுகாதாரம் , கூட்டுறவு , விலங்கு பராமரிப்பு , கல்வி மற்றும் தொழில் போன்றவைகளுக்கான விரிவாக்க அலுவலர்களும் உள்ளனர். பிர்க்கா அளவு பிர்க்கா அளவிலான
வருவாய் நிர்வாகத்தின் தலைவராக வருவாய் ஆய்வாளர் உள்ளார். பிர்க்கா என்பது துணை வட்டம் என்று பொருள்படும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தாலுகாவும் பல பிர்க்காக்களாகப் பிரிக்கப்படுகிறது. ஆனால் , இதன் பெயர் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. கிராம அளவு கிராம அளவிலான நிர்வாகத்தின் தலைவராக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார். களத்தில் குறிப்பாக கிராமத்தில் மிக முக்கியமான பணியாளராக அவர் உள்ளார். அவருக்குக்கீழ் கிராம மட்டத்திலான பணியாளர்கள் உள்ளனர். வருவாய் , காவல் மற்றும் பொது நிர்வாகக் கடமைகளை அவர் செய்கிறார். கிராம அளவில்
அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் அவர் செயல்படுகிறார். I. கோடிட்ட இடங்களை நிரப்புக. 1. இந்திய அரசியலமைப்பின் விளக்கப்படுகிறது. 2. ஆளுநர் மாநில செயல்துறையின்_ 3. மாநிலத்தில் அமைச்சரவை_ 4. 1963 ல் கே. காமராஜ் இராஜினாமா செய்தார். பயிற்சி பகுதி அ 5. மாநில சட்டத்துறையின் மேலவையாக 6. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பகுதியில் மாநில அரசாங்கம் தலைவராக உள்ளார். க்கு பொறுப்புடையதாக உள்ளது. க்கிணங்க தனது முதலமைச்சர் பதவியை உள்ளது. ஆல் நியமிக்கப்படுகின்றனர். 11. விதி 370 12. விதி 153 13. விதி 163 14. விதி 170 15. விதி 171 16. விதி
352 7. சட்டக் கவுன்சில் உறுப்பினர்களின் பதவிக்காலம் 8. செயலகத்தில் ஒரு துறையின் நிர்வாகத் தலைவர் 9. நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை 10. மாவட்ட நிர்வாகம் பின்வருபவற்றை பொருத்துக. நிர்வாகமாக உள்ளது. ஆளுநர் முதலமைச்சர் மேலவை ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய அவசரநிலை சட்டசபை ஆகும். 20. கிராம நிர்வாக அலுவலர் பற்றி குறிப்பெழுதுக. பகுதி 21. தமிழ்நாட்டின் சட்டத்துறையைப் பற்றி எழுதுக. 22. உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புகள் யாவை ? 23. தலைமைச் செயலரின் பணிகள் என்ன ? பகுதி ஈ பகுதி ஆ 17. ஆளுநரின் அரசியலமைப்பு நிலையை எழுதுக. 18.
அமைச்சரவையின் பணிகளை விளக்குக. 19. சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் யாவை ? ஆக உள்ளது. ஆவார். 24. ஆளுநரின் அதிகாரங்களையும் பணிகளையும் விவாதிக்க. 25. முதலமைச்சரின் பங்கினையும் பணிகளையும் விளக்குக. 26. மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கினையும் பணிகளையும் விவரிக்க. அத்தியாயம் 9 தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம் ( Local Self Government ) சிறப்பு அம்சங்கள் உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் ரிப்பன் பிரபுவால் அறிமுகம் செய்யப்பட்ட கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள்
பின்வரும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன. 1. உள்ளாட்சி அரசாங்கம் நன்றாக வரையறை செய்யப்பட்டுள்ள ஓர் அதிகார எல்லையைப் பெற்றுள்ளது. அது கிராமம் அல்லது மாவட்டம் போன்ற உறுதியானதோர் நிலைவரையைப் பெற்றுள்ளது. அதனுடைய குறிக்கோள் , அந்த நிலப்பகுதிக்குள் அல்லது எல்லைக்குள் நிலவும் தனிப்பட்ட தன்மை வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதாகும். 2. உள்ளாட்சி அரசாங்கம் , அவ்வட்டாரத்திற்குள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் ஆட்சி செய்யப்படுகின்றது. அவர்கள் வட்டாரத்து வாக்காளர்களுக்குப் பொறுப்பானவர்கள். மைய மாநில அரசாங்கங்களின்
தேவையற்ற தலையீடின்றி வட்டாரத்து அலுவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிர்வாகம் செய்கின்றனர். 3. வட்டார மக்களின் தேவைகளை மேம்படச் செய்வது உள்ளாட்சி அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும். 4. உள்ளாட்சி அரசாங்கம் தனது நிதி நிலை அறிக்கையினை தயாரிப்பதிலும் , நிதி ஆதாரங்களைத் திரட்டுவதிலும் சுதந்திரம் பெற்றுள்ளது. இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 26 ம் நாளன்று நடைமுறைக்கு வந்தது. தொன்மை சுயாட்சி முறையைப் புதுப்பிப்பதற்கென , நமது அரசியலமைப்பு 40 ம் அங்கம் “ அரசு கிராம பஞ்சாயத்துகளை அமைப்பதற்கும்
, தன்னாட்சி அமைப்பு கூறுகளாக அவை இயங்குவதற்காக தேவைப்படும் அதிகாரங்களையும் அதிகார அடைவடையும் அவற்றுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என விதித்துள்ளது. இதற்கிணங்க 1956 - ல் பல்வந்தராய் மேத்தா குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 1957 ல் சமர்பித்தது. பல்வந்தராய் மேத்தாவின் அறிக்கை பஞ்சாயத்து இராச்சிய முறையின் மகா சாசனம் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கப்பட்டுள்ளது. மக்களாட்சியை உறுதி செய்யும் பொருட்டு மூன்றடுக்கு முறையான கிராமப்புற உள்ளாட்சி அரசாங்கத்தை பல்வந்தராய்
மேத்தா குழு பரிந்துரை செய்தது. இம்மூன்று அடுக்கு முறையில் கிராம மட்டத்தில் பஞ்சாயத்தும் வட்டார அளவில் பஞ்சாயத்து சமிதியும் அல்லது பஞ்சாயத்து ஒன்றியமும் மாவட்ட நிலையில் ஜில்லா பரிஷத்தும் ( மாவட்ட பஞ்சாயத்து ) இடம் பெற்றுள்ளன. பஞ்சாயத்து இராச்சியம் 1959 - ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 - ம் நாளன்று பண்டிதர் ஜவஹர்லால் நேருவினால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து இராச்சிய நிறுவனங்களை அறிமுகம் செய்த முதல் மாநிலங்கள் ஆந்திர பிரதேசமும் , ராஜஸ்தானும் ஆகும். மேகாலயா மிஜோரம் மற்றும் நாகலாந்து மாநிலங்களும் ஒன்றிய
நிலப்பரப்புகளிலும் பஞ்சாயத்து இராச்சிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இவ்வாறு பஞ்சாயத்து இராச்சியம் ஆரவாரமற்ற துவக்கத்தை மேற்கொண்டது. 1977 - ல் அசோக் மேத்தா தலைமையில் பஞ்சாயத்து இராச்சிய நிறுவனத்தின் மீதான ஒரு குழு அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பட்டது. பஞ்சாயத்து இராச்சிய நிறுவனங்களின் செயல்பாட்டை விசாரிப்பதற்கும் அவைகளை வலிமையாக்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கவும் அது நிறுவப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை 1978 - ல் சமர்பித்தது. மட்டங்களில் இக்குழுக்களின் அறிக்கைகள் , பஞ்சாயத்து இராச்சிய
நிறுவனங்களின் மூலமாக ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவத்தை வழங்கின. அவை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுவதை வலியுறுத்தின. தன்னாட்சி நிறுவனங்களாகப் பஞ்சாயத்துக்களை உருவாக்க முயலவில்லை. மேலும் , நகர்ப்புற ஊராட்சி அரசாங்கங்களின் எதிர்கால அக்கறைகளைப் பற்றி பல்வந்தராய் மற்றும் அசோக் மேத்தா குழுக்கள் கவலை கொண்டிருக்கவில்லை. இச்செய்திகளைக் கருத்தில் கொண்டும் , கிராமப்புற மற்றும் நகர்ப்புற உண்மையான “ மக்கள் சக்தியை ” நிறுவும் பொறுட்டும் , அரசியலமைப்பு 64 மற்றும் 65 வது சட்டதிருத்த முன்வரைவுகள் 1989 - ல் மக்கள் அவையில்
அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இம்மசோதாக்கள் விரிவானவையாகும். தேவையான அதிகாரங்களுடன் , ஒரே மாதிரியான அமைப்புகளுடன் அடிமட்ட நிறுவனங்களை சீரமைக்க அவை வழிவகுத்தன. மக்களவையால் நிறைவேற்றப்பட்ட போதிலும் , போதிய பெரும்பான்மை இல்லதாததால் மாநிலங்களின் அவையில் இம்மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில் , மாநில அரசாங்கங்களின் நெருக்கமான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிரமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் , வெற்றிகரமாகச் செயல்பட முடியவில்லை. அவை நிதி வகையிலான இன்னல்களைப் பெற்றிருந்தன. பல
ஆண்டுகளாகத் தொடர்ந்து அவைகளுக்குத் தேர்தல்கள் கூட நடத்தப்படவில்லை. இக்குறைகளைச் சரிசெய்யும் பொருட்டு , அரசியலமைப்பு ( 73 - வது மற்றும் 74 வது திருத்தங்கள் ) சட்டங்கள் நாடாளுமன்றத்தால் 1992 - ல் நிறைவேற்றப்பட்டன. அரசியலமைப்புச் ( 73 வது மற்றும் 74 வது திருத்தங்கள் ) சட்டங்கள் , 1992 அவை அரசியலமைப்பின் 73 - வது மற்றும் 74 வது திருத்தங்கள் 1992 - ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன. 1993 ஆம் ஆண்டு , ஏப்ரல் திங்கள் 24 - ம் நாள் முதல் இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. அவை பஞ்சாயத்துக்களையும் , நகராட்சி
அமைப்புகளையும் அரசியலமைப்பு முறைமைகளாக்கி உள்ளன. சுயாட்சி அரசாங்க நிறுவனங்களாகச் செயல்படும் ஆணையுரிமைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் பொருட்டும் , 73 - வது மற்றும் 74 - வது திருத்தங்கள் மாநில சட்டமன்றங்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளன. பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களை தயாரித்தல் , அரசியலமைப்பின் 11 மற்றும் 12 - வது இணைப்பு பட்டியல்களில் கண்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய நீதி பற்றிய திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகிய கடும்பணிகள் அவைகளிடம்
ஒப்புடைவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விணைப்புப் பட்டியல்கள் ஒரு புறம் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் மறுபுறம் பஞ்சாயத்துக்கள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வினை செய்துள்ளன. 73 - வது திருத்ததின் கீழ் 11 - வது இணைப்பு பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின் மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன. 12 - வது இணைப்பு பட்டியல் 18 வகை அதிகாரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கென கொண்டுள்ளது. இவை அவற்றின் சம்பந்தப்பட்ட பணிகளையும் சுட்டி காட்டுகின்றன.
6. இந்நிறுவனங்களின் நிதி வலிமையை உறுதி செய்யும் பொருட்டு ஒரு நிதி ஆணையம் அமைக்கப்படல் , இந்த ஆணையம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்தல் வேண்டும். 7. உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கென ஏற்பாடு செய்தல். 8. ஏதேனும் உள்ளாட்சி அமைப்பு கலைக்கப்படுமேயானால் ஆறுமாத காலத்திற்குள் கட்டாயமாகத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு செய்தல். கட்சி வேட்பாளர்களாகவோ அல்லது சுயேச்சை நபர்களாகவோ உள்ளாட்சி தேர்தல்களில் 9. போட்டியிடலாம். 9.2 நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள்
நகர்ப்புற அல்லது ஊரக மக்கட்தொகை மிக வேகமாக நம் நாட்டில் பெருகி வருகின்றது. அதன் பிரச்சினைகளும் சிக்கல் மிகுந்தவையாய் உள்ளன. அவைகளைத் நிறைவேற்றும் பொருட்டு , நகர்ப்புற அல்லது ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வமைப்புகள் நகராட்சி அமைப்புகள் என்றும் அறியப்படுகின்றன. அமைப்பு , அதிகாரங்கள் மற்றும் பிறவற்றை இந்திய செய்துள்ளது. அவைகளுடைய பணிகள் 12 வது இணைப்புப்பட்டியலில் கூறப்பட்டுள்ளன. அரசியலமைப்பானது மாநகராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துக்கள் அரசியல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர நகரியங்கள் , இராணுவக் கூட வாரியங்கள் , குறிக்கப்பட்ட பகுதிகளின் குழுக்கள் போன்ற வேறு சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் உள்ளன. 9.2.1 மாநகராட்சி நகராட்சி அமைப்பில் மாநகராட்சி மிக உயர்ந்த வகையைச் சார்ந்ததாகும். மாநாகராட்சி அதிகப்படியான அதிகாரங்களைப் பெற்றுள்ளது. ஏனைய வட்டார அமைப்புகளுடன் ஒப்பிடும்போது , அது விரிவான பணிகளையும் , அதிக நிதித்தன்னாட்சியையும் அனுபவிக்கின்றது. மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்படும் சிறப்பு நகராட்சிச் சட்டங்களின் கீழ் மாநகராட்சிகள் பெரிய நகரங்களில் நிறுவப்படுகின்றன.
நாடாளுமன்றத்தின் சட்டத்தினால் யூனியன் பிரதேசங்களின் மாநகராட்சிகள் அமைக்கப்படுகின்றன. அரசியலமைப்பு உறுதி சாதாரணமாக 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கட்தொகையைக் கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சிகளாக அமைக்கப்படுகின்றன. அவைகளுடைய ஆண்டு வருமானம் பொதுவாக ஒரு கோடியாகும். உதாராணமாக சென்னை , மும்பை , கொல்கத்தா , டில்லி , ஹைதராபாத் , பெங்களுர் மாநகராட்சிகள் இந்தியாவின் மிகப் பெரிய மாநகராட்சிகளாய் உள்ளன. அவை அதிக மக்கட்தொகையையும் சீரிய வருவாயையும் பெற்றுள்ளன. எனினும் இரண்டு இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையை
கொண்டுள்ள நகரங்களிலும் மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் ஆண்டு வருமானம் ரூ 50,000 மேற்படுவதில்லை. சந்தர்ப்பச் சூழலைப் பொறுத்து , மாநகராட்சியை நிறுவ அரசே முடிவெடுக்கும். காலம் மாறும்போது , அதன் முக்கியத்துவம் மாறலாம். சென்னையையும் சேர்த்து , மதுரை , கோயம்புத்தூர் , திருச்சி , திருநெல்வேலி , திருப்பூர் , திண்டுக்கல் , ஈரோடு , தஞ்சாவூர் , வேலூர் , சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. மாநகராட்சிகள் அனைத்தும் சில பொதுப்படையான சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளன. 1. மாநிலச் சட்ட
மன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்டம் ஒன்றினால்தான் மாநகராட்சியொன்று நிறுவப்படுகின்றது. 2. மாநகராட்சி நிர்வாகப்பணியால் தனிப்பட்ட அவசியமானப் பணிகளை ஆதாரமாக கொண்டுள்ளது. 3. மாநில அரசாங்கம் நகராட்சிமன்றத்தை மேற்பார்வை செய்யவும் , கட்டுப்படுத்தவும் , கலைக்கவும் அதிகாரங்களைப் பெற்றுள்ளது. 4. பொதுவாக , ஒரு மாநகராட்சி அதிக மக்கட் தொகையைக் கொண்டுள்ள நகர்ப்புறப் பகுதிகளில் அமைக்கப்படுகின்றது. 5. ஒரு மாநகராட்சி குறிப்பிட்ட அதிகார வரம்பிற்குள் பணியாற்றுகின்றது. மாநகராட்சி பணிகள் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போன்று
நகராட்சி அமைப்புகள் சுயாட்சி அரசாங்க நிறுவனங்களாகச் செயல்பட வேண்டி உள்ளன. பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பினை அவை பெற்றுள்ளன. பன்னிரண்டாவது இணைப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள 18 அம்சங்கள் குறித்து பணிகளை மேற்கொள்வதோடு , செயல் திட்டங்களையும் அவை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இதன்படி மாநிலச் சட்டமன்றத்தின் சட்டங்களால் பின்வரும் பணிகள் நகராட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். 1. நகர திட்டமிடலுடன் ஊரகத் திட்டத்தையும் தீட்டுதல். 2. கட்டிடங்கள் கட்டுதல்
மற்றும் நிலத்தைப் பயன்படுத்துதல் அவற்றை ஒழுங்குமுறைப் படுத்துதல். 3. பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் திட்டமிடுதல். 4. சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் பராமரித்தல். 5. குடிநீர் விநியோகம் செய்தல். 6. பொதுச்சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல். 7. தீயணைப்புப் படை ( பணிகள் ) 8. ஊரகக்காடு மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல். 9. ஊனமுற்றோர் மற்றும் சிந்தை மந்தமுற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய , சமுதாயத்தின் நலிவுற்ற வகுப்புனரின் நலன்கள் பாதுகாத்தல். 10. சேரி
முன்னேற்றம் செய்தல். 11. ஊரக வறுமை நீக்கம் செய்தல் , 12. கல்வி மற்றும் கலாச்சார அம்சங்களின் வளர்ச்சிக்கு பாடுபடுதல். 13. பூங்காக்கள் , தோட்டங்கள் , விளையாட்டு மைதானங்கள் போன்ற நகர்புற வசதிகளுக்கு ஏற்பாடு செய்தல். 14. இடுகாடு மற்றும் சுடுகாடு , மைதானங்கள் பராமரித்தல். 15. கால்நடைக் குட்டைகளை அமைத்தல் மற்றும் மிருக வதையைத் தடை செய்தல். 16. பிறப்பு , இறப்பு ஆகியவற்றின் பதிவுடன் கூடிய மிக முக்கியமான புள்ளி விவரங்களைத் திரட்டல். 17. பேருந்து நிறுத்துமிடங்கள் , கழிவறை , சாலை விளக்கு போன்ற பொது வசதிகளைச் செய்து
கொடுத்தல். 18. இறைச்சித் தொட்டிகள் , தோல் பதனிடல் ஆகியவற்றை ஒழுங்குமுறை படுத்துதல். மேற்கண்ட அம்சங்கள் சம்பந்தமாக , மாநகராட்சியையும் உட்கொண்ட நகராட்சி அமைப்புகள் அனைத்தும் பல பணிகளை ஆற்றுகின்றன. இவற்றோடு , தோப்பு , பண்ணை மற்றும் சாலையோர மரங்கள் ஆகியவற்றை கவனித்தல் , உடைமையாளர் இல்லாத நாய்கள் , சுற்றித் திரியும் பன்றிகள் மற்றும் தொந்தரவளிக்கும் விலங்குகளைத் தடுப்புக் காவல் வைத்தல் அல்லது கொன்று அழித்தல் , சுற்றுலாக்களையும் , கண்காட்சிகளையும் அமைத்து மேலாண்மை செய்தல் போன்ற தன் விருப்பப் பணிகள் சிலவற்றையும் அவை
செயலாற்றுகின்றன. மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் மாநகராட்சியின் வருவாய் ஆதாரங்கள் ( அ ) வரி விதிப்பு மூலம் பெறப்படும் வருவாய் ( ஆ ) வரிவிதிப்பில்லாத வகையிலிருந்து வரும் வருமானம் என இரு தன்மைகளை உடையனவாக உள்ளன. வரி விதிப்பைச் சாராத வருவாய் கட்டணங்கள் , தண்டனைப் பணங்கள் மாநில அரசாங்கத்திலிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் மற்றும் கடன்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்றன. வரிகளின் மூலம் கிடைக்கப்பெறுவது தலையாய வருவாய் ஆதாராமாகும். பொதுவாகக் கீழே பட்டியல் செய்யப்பட்டுள்ளவாறு வரி விதித்து வசூலித்துக் கொள்ள ஓர்
மாநகராட்சி அதிகாரம் பெற்றுள்ளது. 1. கட்டிடங்கள் மற்றும் நிலங்களின் மீதான வரி. 2. வாகனங்கள் மற்றும் கால்நடைகள் மீதான வரி. 3. கொட்டகை ( நாடகம் , சினிமா ) வரி. 4. நகரத்திற்குள் மக்களுக்குக் காட்சியளிக்கும் பொருட்டு செயல்படும் விளம்பரங்கள் மீதான வரி. 5. தொழில் , வர்த்தகம் மற்றும் வாழ்க்கைப் பணி மீதான வரி. 6. கேளிக்கை வரி. 7. மின்சார நுகர்வு மற்றும் விற்பனை மீதான வரி. 8. நில மதிப்புகள் உயர்வதின் மீது விதிக்கப்படும் மேம்பாட்டு வரி. 9. சந்தை வரி அல்லது பாதை வரி. மாநகராட்சியின் வருவாய் பெறுதல்கள் யாவும் மாநகராட்சி (
பொது ) நிதியில் செலுத்தப்படுகின்றன. இந்நிதியிலிருந்து அதன் செலவினத்திற்குத் தேவையான பணம் விடுவிக்கப்படுகின்றது. மாநகராட்சி மன்றம் கவுன்சிலர்களை மாநகராட்சி முக்கிய அங்கமாக மாநகராட்சி மன்றம் உள்ளது. நிலப்பரப்பு மக்கட்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் , ஒரு மாநகராட்சி பல வட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது , ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் , வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுவார். இப்பிரதிநிதிகள் அல்லது உறுப்பினர்கள் , ' கவுன்சிலர்கள் ' என்று அழைக்கப்படுகின்றனர். அவ்வாறு
தேர்ந்தெடுக்கப்படும் உட்கொண்டது தான் மாநகராட்சியின் மன்றம் , பஞ்சாயத்து இராச்சிய அமைப்புகளும் உள்ளதைப்போன்று , மாநகராட்சிகளிலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் , பழங்குடியினர் , பெண்கள் ஆகியோர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற பின்தங்கிய வகுப்பினர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்ய சட்டமன்றம் அதிகாரம் கொண்டுள்ளது. பஞ்சாயத்து இராச்சிய அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு உண்டான வயது , தகுதிகள் மற்றும் தொடர்பானவைகள் மாநகராட்சிக் கவுன்சிலர்களுக்கும் பொருந்துவனவாய் உள்ளன. நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைத்
தவிர்த்து , மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் மாநகராட்சி மன்றகூட்டங்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது. நகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் கொண்டுள்ள நபர்களை மாநகராட்சி மன்றத்திற்கு மாநில அரசாங்கம் நியமனம் செய்யலாம். ஆனால் மன்றத்தில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது. மாநகராட்சி மன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் , வேறுபட்டுக் காணப்படுகின்றது. சென்னை மாநகராட்சி 200 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது.
தகுந்த காரணங்களுக்காக மாநகராட்சி மன்றம் முன்கூட்டிக் கலைக்கப்படுமாயின் , ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். மாநகராட்சி மன்றம் ஒர் விவாத அமைப்பாகத் திகழ்கின்றது. உள்ளூர் சட்டப்பேரவையைப் போன்ற அது செயல்படுகின்றது. மக்களின் விருப்பத்தை நகரத்தின் சட்டங்களாக அது மாற்றுவிக்கின்றது. மேயர் மற்றும் துணை மேயர் மேயர் மாநகராட்சியின் அரசியல் ரீதியிலான தலைவர் ஆவார். அவர் நகரத்தின் முதற்குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுகின்றார். மேயரை மக்களே நேரடியாகத் தேர்நதெடுக்கின்றனர். கவுன்சிலர்கள்
தமக்குள்ளிலிருந்து ஒருவரை துணை மேயராக தேர்ந்தெடுக்கின்றனர் அவர்களுடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். மாநகராட்சியின் மேயர் மாநகராட்சி சட்டதிட்டங்களுக்கு முரணாக செயல்படநேரிட்டால் , மாநகராட்சியின் மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் எழுத்துமூலமாக மாநகராட்சி ஆணையருக்குத் தெரிவித்து , அதன் மீது ஐந்தில் நான்கு பகுதியினர் மேயருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்படவேண்டும். மேற்படி தீர்மானத்தை அரசு பரிசீலித்து மேயரின்விளக்கத்தினைப் பெற வேண்டும். மேயரின் விளக்கம் அரசுக்கு ஏற்புடையதாக இல்லை
எனில் , அரசு மேயரை நீக்குவதற்கு ஆணையிடலாம். இதில் அரசின் முடிவே இறுதியானது. மேயர் ஒரு விழாத் ( அலங்கார ) தலைவராகத் திகழ்கின்றார். விழாக்களில் அவர் மாநகரின் சார்பில் பங்கேற்கிறார். மன்றக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கி , ஒழுங்கையும் , அமைதியையும் பராமரிக்கின்றார். தீய நடத்தையின் பொருட்டு அவர் உறுப்பினர்களை சபை நீக்கம் செய்யலாம் அல்லது வெளியேற்றலாம். மன்றத்தின் நடவடிக்கைகளிலிருந்து தடை செய்யப்படுவற்குரிய எப்பகுதியினையும் அவர் ஒதுக்கலாம் அல்லது நீக்கலாம். மன்றத்தின் சிறப்புக் கூட்டங்களைக் கூட்டுவிக்க மேயர்
அதிகாரம் படைத்துள்ளார். மாநகரத்தின் நிர்வாகம் பற்றிய எப்பொருள் மீதும் அவர் ஆணையரிடம் இருந்து தகவலைக் கோரமுடியும். மன்றத்தின் முடிவுகள் சரிவர நிறைவேற்றப்பட்டு வருவதை அவர் கவனித்துக் கொள்கிறார். எழுத்து மூலமாக மேயர் , துணை மேயருக்கு தனது அதிகாரங்கள் சிலவற்றை ஒப்படைவு செய்யலாம். மாநில அரசாங்கத்திற்கும் மாநகராட்சிக்கும் இடையிலான ‘ தகவல் தொடர்பு ’ அனைத்தும் மேயரின் வாயிலாக செல்ல வேண்டும். எனினும் , மேயர் அதை நிறுத்தி வைக்க முடியாது. குழுக்கள் மாநகராட்சியின் குழுக்கள் மன்றத்தின் பல்வேறு நடவடிக்கைகளைக் கவனித்துக்
கொள்வதில் முக்கியமானதோர் பங்குப்பணியை ஆற்றுகின்றன. மாநகராட்சியின் பணிகளின் திறமையான செயல்பாட்டிற்கு அவை துணை புரிகின்றன. இக்குழுக்களான நிலைக்குழு , பள்ளிகள் குழு , மருத்துவமனைகள் குழு , மின் விநியோகம் மற்றும் போக்குவரத்துக் குழு , மாநகர மேம்பாட்டுக் குழு , சுகாதார குழு , வரிவிதிப்பு மற்றும் நிதிகுழு , மாநகர நீர் மராமத்துக் குழு மற்றும் இன்னும்பிற. குழுக்கள் அனைத்திலும் தலையாயது நிலைக்குழுவாகும். இக்குழு செயலாக்க மேற்பார்வை , நிதி மற்றும் பணியாளர் குழாம் ஆகியவற்றின் மீது தேவையான அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
மாநகராட்சி ஆணையர் ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிருவாகி ஆவார். மாநகராட்சி மன்றத்தால் இயற்றப்படும் கொள்கைகளைச் செயல்படுத்துவது அவருடைய தலையாயப் பொறுப்பாகும். ஆணையர் பெரும்பாலும் இந்திய ஆட்சித்துறை பணியாளர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார். ஆணையாளரின் அதிகாரங்கள் மாநகராட்சி சட்டத்தின்படியும் மாநகராட்சி கவுன்சில் மற்றும் நிலைக்குழுக்களின் ஆலோசனையின் படியும் அவர் செயல்படுகிறார். மாநகராட்சிப் பணியாட்கள் மேற்பார்வையினையும் கட்டுப்பாட்டையும் அவர் செலுத்துகின்றார்.
நிதி நிலை அறிக்கையைத் தயாரிப்பது ஆணையரின் பொறுப்பாகும். 74 - வது , அரசியல் அமைப்புச் சட்டத்திற்குமுன் தேர்தல் நடத்தும் பணிகளை அவர் பெற்றிருக்கவில்லை. மீது மாநகராட்சியின் நிர்வாகத்தில் அச்சாணியாக ஆணையர் திகழ்கின்றார். மாநகராட்சியின் மன்றத்திலும் பல்வேறு குழுக்களின் கூட்டங்களிலும் கலந்து கொண்டு உரையாற்றும் உரிமையை அவர் பெற்றுள்ளார். கவுன்சிலர்களுக்கு தேவையான தகவல்களையும் விளக்கங்களையும் அவர் வழங்குகின்றார். அவர்கள் வாதங்கள் புரிவதற்கு வழித்துணையாக இருந்து மாநகராட்சியின் இன்றியமையா பங்குப் பணியினை ஆணையர்
ஆற்றுகின்றார். 9.2.2 நகராட்சிகள் நகர உள்ளாட்சி அமைப்புகளில் அடுத்து வருவது நகராட்சிகளாகும். ‘ நகராட்சி ’ எனும் சொல் , சுயாட்சியுள்ள நகரத்தை குறிப்பிடுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் நகராட்சிகளின் எண்ணிக்கை வேறுபடுகின்றது. நமது நாட்டில் 1500 க்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன. மாநில அரசுகள் இயற்றும் நகராட்சிச் சட்டங்களால் நகராட்சிகள் நிர்வகிக்கப்படுகின்றன. எந்த ஒரு சிறிய ஊரக அல்லது நகர்ப்புற பகுதியினையும் நகராட்சியென அறிவிக்கும் உரிமையை மாநில அரசு பெற்றுள்ளது. ஒரு நகராட்சியை அமைப்பதற்குக் குறைந்த பட்சமாக
மக்கட்தொகை 5000 த்திலிருந்து 50,000 க்கு இடைப்பட்டதாக இருத்தல் வேண்டும். நகரங்களில் மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட தொழில்கள் பெரும்பாலும் விவசாயச் சார்பற்றவையாக உள்ளன. மக்கட்தொகை மற்றும் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் நகராட்சிகள் 3 அல்லது 4 வகையான பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. பணிகள் நகராட்சிகளின் பணிகள் ஏறத்தாழ மாநகராட்சிப் பணிகளுக்கு இணையாக உள்ளன. அவை அரசியலமைப்பின் பன்னிரண்டாவது இணைப்புப்பட்டியலின் அமைப்புக் கூட்டின் கீழ் வருகின்றன. எனினும் , நகராட்சிப் பணிகளைக் கட்டாயப் பணிகள் , தன் விருப்பப் பணிகள்
எனவும் வகைப்படுத்தலாம். கட்டாயமான பணிகள். 1. தூய்மையான குடிநீர் விநியோகம் செய்தல். 2. பொதுச் சாலைகள் அமைத்துப் பராமரித்தல். 3. தெருக்களில் விளக்கு மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்தல். 4. தெருக்களை சுத்தம் செய்து கழிவுப் பொருட்களை அகற்றுதல். 5. அபாயமிக்க வர்த்தகங்களையும் செயல்களையும் ஒழுங்கு முறைப்படுத்தல். 6. மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் பராமரித்தல். 7. பிறப்பு , இறப்புகளைப் பதிவு செய்தல். 8. பொதுச் சாலைகள் , பாலங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் தோன்றும் தடைகளையும் , நீட்டிக் கொண்டிருப்பவைகளையும்
அகற்றுதல். சாலைகளுக்குப் பெயரிட்டு , இல்லங்களுக்கு எண் வழங்குதல். 9. 10. பொதுச் சுகாதாரம் , துப்புரவு , ஆபத்தான வியாதிகளைத் தடை செய்தல் மற்றும் பல்வேறு வகையிலான இறப்பினங்களை அடக்கம் செய்வதற்குரிய இடங்களை ஒழுங்குமுறைப் படுத்தல் போன்றவை சம்பந்தமான அனைத்துக் காரியங்களையும் செய்தல். 11. தீயணைப்புப் படைகளுக்கான ஏற்பாடு செய்தல். ஆகியோரும் நகராட்சி மன்றங்களில் கலந்து கொள்ள ஏற்பாடு உள்ளது. நகராட்சி நிர்வாகத்தில் அனுபவம் அல்லது சிறப்பான அறிவு கொண்ட நபர்களை நகராட்சி நிர்வாகத்தில் மாநில அரசாங்கம் நியமனம் செய்யலாம்.
ஆனால் , இவ்வுறுப்பினர்கள் மன்றத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. நகர மக்கட் தொகையின் அடிப்படையில் நகராட்சி மன்றத்தின் அளவு அமைந்துள்ளது. ஒவ்வொரு கவுன்சிலரும் , நியமன உறுப்பினரும் , தனது இருக்கையில் அமர்வதற்கு முன் , இந்திய அரசியலமைப்பிற்கு நேர்மை அல்லது பற்றுடன் இருக்கவும் , இந்தியாவின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்யவும் , தனது கடமையை நேர்மையுடன் ஆற்றவும் ஓர் உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். நகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அது முன்கூட்டியே நீக்கப்படுமாயின் ஆறு
மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று , இராஜினாமா , பதவி நீக்கம் அல்லது தகுதி இழப்பு போன்ற காரணத்தால் ஒரு உறுப்பினர் இடம் காலியாயின் அது ஆறு மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும். தனது பணிகளை மேற்கொண்டு செயலாற்றுவதில் நிலைக்குழு மற்றும் பிற குழுக்கள் நகராட்சி மன்றத்திலும் துணை செய்கின்றன. நகராட்சியின் தலைவர் கவுன்சிலர்கள் ஒவ்வொரு நகராட்சி மன்றமும் ஒரு தலைவரையும் , ஒரு துணைத்தலைவரையும் பெற்றுள்ளது. நகராட்சி மன்றத்தலைவர் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். துணைத்தலைவரை
தேர்ந்தெடுக்கின்றனர். நகராட்சித் தலைவரும் , துணைத்தலைவரும் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிக்கின்றனர். தலைவர் அல்லது துணைத்தலைவர் , மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரைப் போன்று பதவியிலிருந்து அகற்றப்படலாம். தலைவர் நகராட்சி மன்ற கூட்டங்களைக் கூட்டுவித்து கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கின்றார். பல்வேறு நடவடிக்கைகளை ஒழுங்கப்படுத்துகின்றார். நகராட்சியின் நிதி மற்றும் செயலாக்க நிர்வாகத்தை அவர் மேற்பார்வை செய்கின்றார். நகராட்சியின் பதிவுகள் அல்லது ஆவணங்கள் அனைத்தையும் அவர் பார்வையிடும் உரிமைகளை பெற்றுள்ளார். நகராட்சி
நிர்வாகம் சம்பந்தமான எந்த தகவலையும் அவர் கோர முடியும். சுருக்கமாகக்கூறின் , நகராட்சிச் சட்டத்தினால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் அதிகாரங்களையும் அவர் செயல்படுத்த வேண்டும். தலைவர் இல்லாத நேரத்தில் , துணைத்தலைவர் தலைவருக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்தல் வேண்டும். நிர்வாக அலுவலர் ஆணையர் ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒரு நிர்வாக அலுவலர் உள்ளார். அவர் ஆணையர் என்று அழைக்கப்படுகின்றார். அவர் மாநிலப் பணித்துறையைச் சேர்ந்தவர். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார். ஆணையர் எத்தருணத்திலும்
இடப்பெயர்வு செய்யப்படலாம். பல்வேறு நகராட்சிகளிலும் பெருமளவிற்கு ஆணையர்களின் அதிகாரங்களும் பணிகளும் ஒத்திருப்பவையாக உள்ளன. சுருக்கமாகக் கூறின் மன்றத்தின் தீர்மானங்களையும் முடிவுகளையும் நகராட்சி ஆணையர் செயலாக்கம் செய்கின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தீர்மானங்களின் நகல்களை அவர் அனுப்பி வைக்கின்றார். அவர் ஒப்பந்தங்களைச் செய்கின்றார். சில அறிவிக்கைகள் , உரிமங்கள் , அனுமதிகள் போன்றவற்றைப் பிறப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பில் தலைவருக்கு துணைபுரிகிறார். அவர் நகராட்சியின் நிலை அறிக்கையை தயார்செய்து
செயலாக்கம் செய்கிறார். உயர்தணிக்கைக்கு நிர்வாக அறிக்கையை அனுப்பி வைக்கிறார். நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதிஇழப்புகள் மற்றும் கையாடல் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அவர் தலைவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார் அல்லது கொண்டு வருகின்றார். அவர் மன்ற கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம். மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோரிடையே நட்பும் சுமுகமாகவும் இசைவானதுமான உறவுகளைப் பெரிதும் சார்ந்துதான் நகராட்சியின் வெற்றிகரமான பணிச்செயல்பாடு அமையும். நகரப் பஞ்சாயத்து 1992 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் ( 74 வது திருத்தம் )
சட்டம் புதியதோர் ஊரக உள்ளாட்சி அமைப்பு முறையை நம் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இது நகரப் பஞ்சாயத்து என அறியப்படுகிறது. இந்த உள்ளாட்சி அமைப்பானது ஒரு கிராமப்புற எல்லையிலிருந்து ஊரக இடப்பெயர்விலுள்ள ஒரு பகுதிக்கென அமையப்பெறுகின்றது. எல்லைக்கு இக்குறிக்கோளுக்கென ஒன்று அல்லது இரண்டு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ள ஒரு உள்ளூர்ப் பகுதி பஞ்சாயத்து நகரமாக அமைக்கப்படுகின்றது. ஒரு பஞ்சாயத்து நகரம் குறைந்தது 5000 பேர்களை மக்கட் தொகையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதன் பெருவாரியான மக்கள் வேளாண்மைச் சாராத செயல்களில்
ஈடுபட்டுள்ளவர்களாய் இருத்தல் வேண்டும். ஒரு பஞ்சாயத்து நகரத்தின் ஆண்டு வருமானம் ஒரு இலட்ச ரூபாய்க்கு குறைவாகஇருத்தல் கூடாது. ஒவ்வொரு பஞ்சாயத்து நகரத்திலும் ஒரு நகரப் பஞ்சாயத்து நிறுவப்படுகின்றது. இதற்கென , பஞ்சாயத்து நகரம் பல வார்டுகளாகக் கொண்டதாய் பிரிக்கப்படுகின்றது. ஒரு உறுப்பினர் ஒன்றுக்கு மேற்பட்ட நகரப் பஞ்சாயத்தில் உறுப்பினராய் இருத்தல் முடியாது. மற்றபடி , நகரப்பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் நகராட்சிக் கவுன்சிலர்கள் கொண்டுள்ளதற்கு இணையாக தகுதிகள் , பணிகள் , சலுகைகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். நகரப்
பஞ்சாயத்தின் உறுப்பினர்கள் தமக்குள்ளிருந்து , ஒரு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். அவர் 5 ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கின்றார். நகராட்சித் தலைவர் கொண்டுள்ள அதிகாரங்கள் , சலுகைகள் போன்றவற்றை அனுபவிக்கின்றார். ஏனைய உள்ளூராட்சி அமைப்புகளுக்கு உள்ளதைப் போன்று நகரப் பஞ்சாயத்தின் வருவாய் ஆதாரங்கள் , செலவினங்கள் , மற்றும் பிற செய்திகள் , நகரப் பஞ்சாயத்திற்கும் அமைந்துள்ளன. பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய நீதிக்குரிய பணிகளை ஆற்றுவதற்கு தனக்கு தேவையான குழுக்களை அது அமைத்துக் கொள்ளலாம். 9.2.3. நகரீயம் பெருவாரியான
பொதுத்துறை வர்த்தக ரீதியிலான நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கென நகரீயங்கள் ( Township ) நிறுவியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீட்டில் பதினோரு விழுக்காடு நகரீயங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. கிராமப்புற பகுதிகளில் அல்லது அருகாமையிலுள்ள நகரப்பகுதிகளில் இந்நகரீயங்கள் நிறுவப்பட்டன. நகரீயங்களின் முக்கிய அம்சங்களாவன. 1. நகரீயங்கள் முழுமையாகத் திட்டமிடப்பட்டவை. 2. நகராட்சி அமைப்புகளால் பொதுவாக வழங்கப்படுவதை விட உயர்தரத்திலான குடியியல் பணிகளையும் இவை வழங்கி பராமரிக்கின்றன. 3. மக்களுக்கு பலவகையிலான வேலை