text
stringlengths 11
513
|
---|
பொது நிர்வாகத்தில் குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் மேம்பாட்டுத்திட்ட அமுலாக்கம் தொடர்பானவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக , ஒரு ஆய்வை மேற்கொள்ளவும் மற்றும் வழிமுறைகளைக் கூறவும் ஒரு ஓய்வு பெற்ற அகில இந்தியப் பணி அலுவலரான கோர்வாலா என்பவரை அந்த ஆணையம் வேண்டியது. பணியாளர்களின் நெறிமுறைத் தரம் இல்லாவிட்டால் பிரிட்டிஷ் மாதிரியான ஒரு அமைச்சர்குழு முறையுடன் கூடிய பாராளுமன்ற அரசாங்கம் இந்தியாவில் சிறப்பாக இருக்க முடியாது என்று அவர் குறிப்பாகப் பரிந்துரைத்தார். 3. அப்லிபி அறிக்கை , 1953 |
மற்றும் 1956 1952 - ஆம் ஆண்டின் இறுதியில் , இந்தியாவில் பொது நிர்வாகத்தின் ஓர் ஆய்வை மேற்கொள்வதற்கு அமெரிக்காவில் பொது நிர்வாகத்தில் சிறந்த ஆணையாளரான பால். எச். அப்லிபி என்பவரை அப்போதைய நிதியமைச்சர் சி. டி. தேஷ்முக் அழைத்தார். ஜனநாயகம் வழியாக மேம்பாட்டை கொண்டுவருவதற்கு உலகில் சிறந்த முயற்சியை இந்தியா செய்து கொண்டிருந்தது என்று அப்லிபி உணர்ந்தார். ஒற்றுமை மற்றும் வேற்றுமையை உருவாக்கும் காரணிகளை அவர் பகுத்தாய்ந்தார். திட்டங்களின் நிர்வாகத்திற்காக ஒரு பலமான மத்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார். இந்திய |
நிர்வாகத்தில் செயல் சிந்தனைப் பற்றாக்குறையும் சூழ்நிலைகளில் நடவடிக்கை எடுப்பதற்கு திறமைப் பற்றாக்குறையையும் அவர் குறை கூறினார். பணியாளர்கள் பயிற்சிக்காக ஒரு அகில இந்திய நிறுவனம் நிறுவப்பட்ட வேண்டும் என்று அவர் குறிப்பாகப் பரிந்துரைத்தார். நிர்வாகப் படிநிலையில் உள்ள மட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் பரிந்துரைத்தார். அதன் விளைவாக , மத்திய செயலகத்தில் ஒரு ' ஓ மற்றும் எம் ’ பிரிவு அமைக்கப்பட்டது மற்றும் 1954 - ல் புது டெல்லியில் இந்திய பொதுத்துறை ஆட்சியியல் கழகம் நிறுவனமும் |
ஏற்படுத்தப்பட்டது. 4. நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் ( 1966–70 ) ) இந்தியாவில் நிர்வாகச் சீர்திருத்தங்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான எல்லையாக நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் நியமனம் உள்ளது. ஐந்து உறுப்பினர்களுடன் மொரார்ஜி தேசாயின் தலைமையின் கீழ் ஜனவரி , 5 , 1966 - ல் அந்த ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 578 பரிந்துரைகள் அடங்கிய 20 அறிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது , இந்த ஆணையம் பின்வருகின்ற பொது நிர்வாகத்தின் பிரதான பத்து களங்களை ஆராய்ந்துள்ளது. 1. இந்திய அரசாங்க இயந்திரம் மற்றும் அதன் பணி |
வழிமுறைகள் 2. அனைத்து மட்டங்களின் திட்டமிடலுக்கான இயந்திரம் 3. மத்திய – மாநில உறவுகள் 4. நிதி நிர்வாகம் 5. பணியாளர் நிர்வாகம் 6. பொருளாதார நிர்வாகம் 7. மாநில நிர்வாகம் 8. மாவட்ட நிர்வாகம் 9. விவசாய நிர்வாகம் , மற்றும் 10. குடிமக்களின் குறைகளைக் களைவதற்கான நிர்வாகம். மேல் குறிப்பிட்டுள்ளவைகளைத் தவிர , இந்திய நிர்வாகத்தை சீர்திருத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பல எண்ணிக்கையுள்ள பிற குழுக்களையும் ஆணையங்களையும் அமைத்துள்ளன. இருப்பினும் , லஞ்சம் , காலதாமதம் , ஒருதலைப்பட்சம் , அரசியல் குறுக்கீடு , |
இனக்கொள்கை இன்னும் பல நிகழும் நிர்வாகப் பிரச்சனைகளாக உள்ளன. இவைகள் நிர்வாகப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் நிர்வாக நோய்களாகவும் உள்ளன. ஊழல் , அமைச்சர் எதிர் சிவில்பணியாளர் , பொதுப்பணியாளர் எதிர் சிறப்புப்பணியாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்பு ஆகியன இந்திய நிர்வாகத்தில் நான்கு பிரதான பிரச்சினைகளாக உள்ளன. 10.2 எதிர்காலத்திற்கான திட்டங்கள் இந்த அத்தியாயத்தின் மேலே கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களுடனான விபரங்களும் தகவலும் ஒரு தெளிவான தன்மையையும் மற்றும் இதுவரையில் தேசம் மேற்கொண்டுள்ள வளர்ச்சி நிலையையும் வழங்குகின்றன. இந்த |
அத்தியாயத்தின் இப்பகுதி என்ன செய்யப்படவுள்ளதை ஒரு சுருக்கமான ஆனால் தெளிவான கருத்தைத் தருகிறது. இது தொடர்பாக , தேசிய தலைவர்கள் , அவர்களின் எதிர்காலநோக்குகள் மற்றும் வழிகாட்டலுக்கான அவர்களின் பங்களிப்பு போன்றவைகளின் உதாரணங்களை கணக்கில் எடுத்துச்கொள்வது சரியாக உள்ளது. தாமஸ் மூர் என்பவரின் ‘ உடோப்பியா ' மற்றும் சிறந்த தமிழ் அறிஞரான முனைவர் மு.வரதராஜனின் ‘ கி.பி.2000 ' போன்ற புத்தகங்களின் மீதான சில வரிகளை ஆர்வமுள்ள மற்றும் படித்தறிந்த மாணவர்கள் படித்திருக்க முடியும். தூதுவராக மகாத்மா காந்தி தேசத் தந்தையென சரியான |
அழைக்கப்பட்டு ஞாபகப் படுத்தப்படுகிறார். யாராக அவர் இருந்தார் மற்றும் என்னவாக அவர் இருந்தார் போன்றவற்றின் ஒரு முழுமையான விளக்கத்தைக் கொடுப்பது கடினமாக உள்ளது. ஆனால் , ஒரு சிறந்த சமாதானத் எவ்வித விதிவிலக்குமின்றி ஒட்டுமொத்த மனித சமுதாயமும் அவரைக் கருதியது என்று சொல்ல முடியும் , பலம் வாய்ந்த ஆங்கிலேயர்களுடன் போராடி சுதந்திரத்தை பெற்றது அவரே. ஆனால் , சிக்கலான காலங்கள் வழியாக நாட்டை சீர்படுத்துவதற்கு அவர் நீண்டகாலம் வாழமுடியவில்லை. அவர் ஜனவரி 30 , 1948 - ல் சுட்டுக் கொல்லப்பட்டார். மகாத்மா காந்தி ( 1869-1948 ) |
மகாத்மா காந்தியின் கொள்கைகளும் பங்களிப்புக்களும் காந்தியக் கொள்கையாக அறியப்படுகின்றன. மிதவாதம் அல்லது அஹிம்சை , சத்தியாகிரஹம் மற்றும் சர்வோதயம் போன்றவைகள் காந்தியக் கொள்கையின் அடிப்படையான மையக் கருத்துக்களாகும். அமைதியான எதிர்ப்பு , ஹர்தால் மற்றும் புறக்கணிப்பு போன்றவை நோக்கங்களைச் சாதிப்பதற்கான அவரின் வழிமுறைகளாக இருந்தன. அவரின் வாழ்க்கைக் காலத்தில் பெண்கள் , குழந்தைகள் உழைப்பாளர்கள் மற்றும் ஒவ்வொருவரும் அமைதியாக வாழக்கூடிய ஒரு சமத்துவ சமுதாயத்தை வென்றெடுப்பதை நோக்கி செயல்பட நாட்டு மக்களை அவர் கடுமையாக |
தூண்டினார். அவர் சமதர்மத்தைச் சமநிலைக்கொள்கையுடன் ஒருங்கிணைந்தார். அவரின் மிகப்பெரிய பணியான ' சத்திய சோதனை ’ மற்ற எழுத்துக்கள் மற்றும் உரையாடல்களில் அவரது கொள்கைகள் உள்ளடங்கியுள்ளன. ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாக கருதப்படுகிறார். “ உலக வரலாற்றின் சுருக்கங்கள் ’ மற்றும் ' இந்தியாவின் கண்டுபிடிப்பு ’ போன்ற அவரின் சில புத்தகங்களில் , சுதந்திர இந்தியா மற்றும் தேசத்தை உருவாக்குவதற்கு கொள்கைகளும் சட்டங்களும் காணப்படுகின்றன. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக , விவசாயம் தன்னிறைவு நாடாக்குவதற்கு |
திட்ட அமைப்புகளையும் , மற்றும் தொழில் களங்களில் தேவையான சட்டங்களையும் இராஜேந்திரப்பிரசாத் , சர்தார் வல்லப்பாய்பட்டேல் , கே.காமாரஜ் , லால்பகதூர் சாஸ்திரி மற்றும் பிற சிறந்த தலைவர்களுடன் சேர்ந்து அவர் துவக்கினார். இந்தியாவின் அண்டை நாடுகளுடன் ஒரு நட்புறவுக் கொள்கைகளையும் உலகின் மற்ற நாடுகளுடனான உறவில் நடுநிலையையும் அவர் பன்டித ஜவஹர்லால் நேரு பின்பற்றினார். ( 1889-1964 ) காந்திஜி , நேருஜி மற்றும் வல்லபாய்ப் பட்டேல் ஆகிய மூம்மூர்த்திகளும் நாட்டின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாட்டினார்கள். அவர்களுடன் , புதிய |
கொள்கையையும் சீர்திருத்தத்தையும் தொடர்வதற்கு எதிர்காலத் தலைமை கட்டாயப்படுத்தப்படுகின்ற உலகமயத்தை நோக்கிய தற்போதைய மேம்பாட்டிற்கு அடிப்படையான பொருளாதாரம் , வர்த்தகம் மற்றும் வாணிபக் கொள்கைகளை 1991-1996 - க் காலத்தில் துவக்கிய மன்மோகன் சிங்கை ஒப்பிடலாம். தொழில் , வர்த்தகம் மற்று விவசாயம் போன்ற துறைகளில் மேலும் தொடர்படுகின்ற விதத்தில் நாட்டின் எதிர்காலம் உள்ளது. உள்நாட்டின் நுகர்வுக்காகவும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களின் தரம் மற்றும் தன்மையின் மீதே வெற்றி |
சார்ந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் என்பவர் இந்தியாவில் பலதுறைகளில் செய்யப்படுகின்ற சிறந்த சாதனைகளின் அபிமானியாக அறியப்படுகிறார். இந்தியா இதுவரையில் சாதித்த சாதனைகளையும் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டியவைகளையும் ‘ அக்கினிச் சிறகுகள் ’ ( 1999 ) மற்றும் ' இந்தியா 2020 புதிய நூற்றாண்டிற்கான ஒரு பார்வை ’ ( 1998 ) ஆகிய அவரது இரண்டு புத்தகங்களும் கூறுகின்றன. 2020 ல் ஒரு சிறந்த பொருளாதார சக்தி மற்றும் பலமான அரசியல் கூற்றுடன் ஒரு சிறந்த சக்தியின் அந்தஸ்தை இந்தியா அடையும் என்று அவர் கணித்துள்ளார். |
அவரது கருத்துக்கிணங்க , இரண்டு எதிர்காலப் பார்வைகள் உள்ளன. காந்திஜி , நேருஜி , பட்டேல் மற்றும் பலருக்கிணங்க , சுதந்திரத்தைப் பெற்று இந்தியாவை பலமான நாடாக்குவது என்பது முதல் பார்வையாகும். நமது முன்னாள் ஜனாதிபதி Page 185 of 204 1. டாக்டர் இராஜேந்திர பிரசாத் ( 1884 1963 ) காந்தியவாதி சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர். பதவி வகித்த காலம் ( 1950-62 ) 1962 ம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர். டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் ( 1888 -1975 ) அறிஞர் , தத்துவஞானி , எழுத்தாளர். இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் |
தலைவர். இரண்டாவது குடியரசுத் தலைவர் ( 1962 - 67 ) இதற்கு முன்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். தலைவர் ஐ. நா. கல்வி சமூக மற்றும் பண்பாட்டுக் கழகம் , 1954 ல் பாரத ரத்னா விருது பெற்றவர். டாக்டர் ஜாகீர் உசேன் ( 1897 1969 ) தேசியவாதி மற்றும் கல்வியாளர். இரண்டாவது துணைக் குடியரசுத் தலைவர். மூன்றாவது குடியரசுத்தலைவர். ( 1967-69 ). 1963 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். வி. வி. கிரி. ( 1894-1980 ) தொழிற்சங்கவாதி , மூன்றாவது துணைக் குடியரசுத்தலைவர். நான்காவது குடியரசுத்தலைவர். ( |
1969-1974 ) குறுகிய காலம் ( மே - ஜூலை 1969 ) குடியரசுத்தலைவர் ( பொறுப்பு ) பாரதரத்னா 1975 ல் பெற்றார். எம். ஹிதயதுல்லா ( 1905-92 ) சட்ட வல்லுனர். துணைக்குடியரசுத் தலைவர் ( 1979–84 ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் இருந்தார். குறுகிய காலம் ( ஜூலை ஆகஸ்டு 1969 ) குடியரசுத்தலைவர். 6. பக்ருதீன் அலி அகமது ( 1905-77 ) ஐந்தாவது குடியரசுத்தலைவர் ( 1974–77 ) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். ஒரிஸ்ஸா. பி. டி. ஜாட்டி. ( பிறந்தது 1912 ) துணைக்குடியரசுத் தலைவர் ( 1974-79 ) குடியரசுத் தலைவர் ( |
பொறுப்பு ) - ( பிப்ரவரி ஜூலை 1977 ) முதல் அமைச்சர் மைசூர் மற்றும் ஆளுநர் 8. நீலம் சஞ்சீவ ரெட்டி ( 1913–96 ) குடியரசுத் தலைவர் ( 1977-82 ) முதல் அமைச்சர் ஆந்திர பிரதேசம். மத்திய அமைச்சர் மற்றும் மக்களவைத் தலைவர். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். 9. கியானி ஜெயில் சிங் ( 1916-94 ) குடியரசுத் தலைவர் ( 1982 -87 ) சுதந்திர போராட்ட வீரர். முதல் அமைச்சர் பஞ்சாப். 10. ஆர்.வெங்கட்ராமன் ( பிறந்தது 1910 ) குடியரசுத்தலைவர் ( 1987–92 ). துணைக்குடியரசுத் தலைவர் ( 1984-87 ). தொழிற்சங்கவாதி பாதுகாப்பு |
மற்றும் நிதித்துறை காபினெட் அமைச்சர் ஆக பணியாற்றியவர். 11. டாக்டர். சங்கர்தயாள் சர்மா ( பிறந்தது 1919 ) அறிஞர். சுதந்திர போராட்ட வீரர் , குடியரசுத் தலைவர் ( 1992 -97 ) துணைக்குடியரசுத் தலைவர் ( 1987-92 ) 12. கே. ஆர். நாராயணன் ( பிறந்தது 1921 ) ஜூலை 1997 ல் குடியரசுத் தலைவர் பதவி பொறுப்பேற்றார். துணைக்குடியரசுத் தலைவர் ( 1992 -97 ) லண்டன் , பொருளியல் பட்டம் பெற்று இந்திய வெளி உறவு பணித்துறையில் சேர்ந்தார். அரசியல் ஞானி மற்றும் கல்வியாளர் அயல்நாட்டு தூதுவர்ஆக சீனா –அமெரிக்காவில் பணியாற்றினார். 13. திரு. |
டாக்டர். எ.பி. ஜே. அப்துல் கலாம் 14. திருமதி பிரதிபா தேவிசிங் பட்டீல் 15. திரு. பிரணாப் முகர்ஜி |
இயல் ஒன்று சிவக சிந்தாமணி , வளையாபதி கற்றல் நோக்கங்கள் அமுதத் தமிழ் குண்டலகேசி. மணிமேகலை. " சிலப்பதிகாரம் " - செய்யுளைப் படித்து மையக்கருத்தை எடுத்து உரைத்தல் பழந்தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்கள் வரலாற்றை அறிதல் பேச்சுமொழி , எழுத்துமொழியின் நுட்பங்களை அறிதல் சொலவடைகளில் பொதிந்துள்ள சமூக உண்மைகளைக் கண்டறிதல் குற்றியலுகர , குற்றியலிகரச் சொற்களை அடையாளம் கண்டு அதன் வகைகளை அறிதல் பாடலின் பொருள் நம் தாய்மொழியாம் தமிழ் மொழி , அருள் நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது. அதுவே தமிழ்மக்களின் குரலாகவும் விளங்குகிறது. தமிழ் |
மொழியைக் கற்றோர் , பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார். கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு , எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும். நம் தமிழ்மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும் ; அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழி ஆகும். நூல் வெளி இப்பாடலின் ஆசிரியரை , நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். இவர் தமிழறிஞர் , கவிஞர் , விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை |
கொண்டவர். காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். மலைக்கள்ளன் , நாமக்கல் கவிஞர் பாடல்கள் , என்கதை , சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் 1. " எங்கள் தமிழ் " - பாடலை இசையுடன் பாடி மகிழ்க. 2. பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க. கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த |
மொன்று வருகுது சத்தி யத்தின் நித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர் !... ( கத்தியின்றி... ) கண்ட தில்லை கேட்ட தில்லை சண்டை யிந்த மாதிரி பண்டு செய்த புண்ணி யந்தான் இயல் ஒன்று நுழையும்முன் கவிதைப்பேழை ஒன்றல்ல இரண்டல்ல தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதே போல் தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர். இக்கருத்துகளை விளக்கும் பாடலை அறிவோம். ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் |
தமிழ்நாட்டில் ( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி... ) தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும் செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம் ( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி... ) பகைவென்ற திறம்பாடும் பரணிவகை - செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை வான் புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் - செம் = பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம் ( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி... ) சொல்லும் பொருளும் ஒப்புமை இணை அற்புதம் - வியப்பு முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி - வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி - கவிச் சொல்லுக்குத் தலைகொடுத்தான் |
அருள்மீறி - இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு ( ஒன்றல்ல இரண்டல்ல தம்பி... ) உடுமலை நாராயணகவி முகில் உபகாரி பாடலின் பொருள் தமிழ்நாட்டின் பெருமைகளைக் கூறினால் அவை ஒன்றிரண்டல்ல பலவாகும். அவை வேறு எவற்றோடும் இணைசொல்ல முடியாத விந்தைகளாகும். இங்கு வீசும் தென்றலில் தேன்மணம் கமழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும். பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம். அத்தோடு இசைப்பாடலான பரிபாடலும் கலம்பக நூல்களும் எட்டுத்தொகையும் வான்புகழ் |
கொண்ட திருக்குறளும் அகம் , புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்களும் எனத் தமிழின் இலக்கிய வளங்கள் ஒன்றிரண்டல்ல பலவாகும். முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் வேள்பாரி. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல். இவர்கள்போல் புகழ் பெற்று வாழ்ந்த வள்ளல்களின் வரலாறு ஒன்றிரண்டல்ல பலவாகும். நூல் வெளி பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். தமது |
பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர். இவரது பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது. இயல் ஒன்று நுழையும்முன் ரைநடை உலகம் பேச்சுமொழியும் எழுத்துமொழியும் தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சுமொழி , எழுத்துமொழி என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு ; வேற்றுமையும் உண்டு. பேச்சுமொழி , எழுத்துமொழி ஆகியவற்றின் நுட்பங்களை அறிவோம். தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு |
வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும். அஃது ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்து , செயல்பட உதவுகிறது. மொழியின் மூலமாகவே மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மொழி இல்லையேல் மனித சமுதாயம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது. தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியான ஒலிக் குறியீடுகளை உருவாக்கிக்கொண்டனர். இதன் காரணமாகவே மொழிகள் பல தோன்றின. மொழியின் வடிவங்கள் வாயினால் |
பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சுமொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை. கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழியாகும். இவ்வாறு எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை. நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது. மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கும் எழுத்துமொழியே காரணமாகின்றது. ஒலி வடிவில் அமையும் பேச்சுமொழியானது உடனடிப் பயன்பாட்டிற்கு உரியது. வரிவடிவில் அமையும் எழுத்து மொழியானது |
நீண்டகாலப் பயன்பாட்டிற்கும் உரியது. உலகில் சில மொழிகள் பேச்சுமொழியாக மட்டுமே உள்ளன. சில மொழிகள் எழுத்து மொழியாக மட்டுமே உள்ளன. ஆனால் தமிழ்மொழியில் பேச்சு , எழுத்து ஆகிய இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் உள்ளன. பேச்சுமொழி மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர். பேச்சுமொழி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும் ; அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி , ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும். |
பேச்சுமொழியில் பொருள் வேறுபாடு பேசப்படும் சூழலைப் பொருத்துப் பேச்சுமொழியின் பொருள் வேறுபடும். எடுத்துக்காட்டாகக் ' குழந்தையை நல்லாக் கவனிங்க ' என்று கூறும்போது ' கவனி ' என்னும் சொல் பேணுதல் என்னும் பொருளைத் தருகிறது. ' நில் , கவனி , செல் ' என்பதில் ' கவனி ' என்னும் சொல் நின்று , கவனித்துச் செல் என்னும் ' பாதுகாப்புப் பொருளைத் தருகிறது. அதுபோலவே ஒலிப்பதன் ஏற்ற இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும். எடுத்துக்காட்டாக என்னால் போக முடியாது என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும்போது மறுப்பை உணர்த்துகிறது. மென்மையாக |
ஒலிக்கும்போது இயலாமையை உணர்த்துகிறது. ஒரு தொடரில் எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்பப் பேச்சுமொழியில் பொருளும் வேறுபடும். எடுத்துக்காட்டாக ' நான் பறவையைப் பார்த்தேன் ' என்னும் தொடரில் ' நான் ' என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் , ' பறவையைப் பார்த்தது யார் ? ' என்னும் வினாவுக்கு விடையாக அமையும். ' பறவையை ' என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் ' நீ எதைப் பார்த்தாய் ? ' என்னும் வினாவுக்கு விடையாக அமையும். ' பார்த்தேன் ' என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால் ' நீ பறவையை என்ன செய்தாய் ? ' |
என்னும் வினாவுக்கு விடையாக அமையும். தெரிந்து தெளிவோம் ' பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி ; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு எண்ணப்படுவது , நினைக்கப்படுவது , கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் ' - மு.வரதராசனார் இவ்வாறு சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் , பொருள் வேறுபடும் என்பதை , " எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும் " என்னும் நன்னூல் நூற்பா உணர்த்துகிறது. |
வட்டாரமொழி பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர். எடுத்துக்காட்டாக ' இருக்கிறது ' என்னும் சொல்லை ' இருக்கு ' , ' இருக்குது ' , ' கீது ' என்று தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகச் சொல்லுவர். இத்தகைய வேறுபாடுகள் காரணமாகவே வட்டார வழக்குகள் தோன்றுகின்றன. கிளைமொழி ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்வதும் உண்டு. வாழும் இடத்தின் நில அமைப்பு , இயற்கைத் தடைகள் |
போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்படும். அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அவ்வாறு உருவாகும் புதிய மொழியைக் கிளைமொழி என்பர். கன்னடம் , தெலுங்கு , மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும். எழுத்துமொழி பேச்சுமொழிக்கு நாம் தந்த வரிவடிவமே எழுத்து மொழியாகும். ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் |
எழுத்து வடிவில் இருப்பதால்தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது. எழுத்துமொழியில் காலம் , இடம் ஆகியவற்றுக்கு ஏற்பச் சொற்கள் சிதைவதில்லை. ஆனால் வரிவடிவம் மாறுபடும். எடுத்துக்காட்டாக முற்காலத்தில் அண்ணா , காலை என்று எழுதியவற்றை இக்காலத்தில் அண்ணா , காலை என்று எழுதுகிறோம். பேச்சுமொழியும் எழுத்துமொழியும் பேச்சுமொழியை உலக வழக்கு என்றும் , எழுத்துமொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர். பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும். எழுத்துமொழியில் |
சொற்கள் முழுமையாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக ' நல்லாச் சாப்ட்டான் ' என்பது பேச்சுமொழி. ' நன்றாகச் சாப்பிட்டான் ' என்பது எழுத்துமொழி. தெரிந்து தெளிவோம் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி ( Diglossic Language ) எனப்படும். தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு , செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார். பேச்சுமொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். |
எழுத்துமொழியில் கூறுகள் குறைவு. உணர்ச்சிக் ' வந்து ' போன்றவற்றைச் சொற்களுக்கு இடையே பொருளின்றிப் பேசுவது உண்டு. ஆனால் எழுத்து முறையில் வை இடம் பெறுவதில்லை. உம் ' , பேச்சுமொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் இணைவதால் அஃது எழுத்துமொழியை விட எளிமையாகக் கருத்தை உணர்த்துகிறது. உடல்மொழி , குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்துமொழியில் இடமில்லை. எழுத்துமொழி சிந்தித்து எழுதப்படுவதாலும் பிழைகள் ஏற்பட்டால் திருத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாலும் திருத்தமான மொழிநடையில் அமைகிறது. ஆனால் பேச்சுமொழியில் |
சிந்திப்பதற்கான நேரம் குறைவு ; திருத்திக்கொள்ள வாய்ப்பும் இல்லை. எனவே பேச்சுமொழி திருத்தமான இலக்கிய நடையில் அமைவதில்லை. பேச்சுமொழி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமைவதால் விரைந்து மாற்றமடைந்து வருகிறது. எழுத்துமொழி பெரும்பாலும் மாறுவதில்லை. மேலும் பேச்சுமொழியில் பிறமொழிச் சொற்கள் மிகுதியாக இடம்பெறுகின்றன. ஆனால் எழுத்துமொழியில் பெரும்பாலும் மொழித்தூய்மை பேணப்படுகிறது. பேச்சுமொழியில் எழுத்துகளை மாற்றி ஒலிப்பதும் உண்டு. ' இ ' என்பதை ' எ ' என்றும் ' உ ' என்பதை ' ஒ ' என்றும் மாற்றி ஒலிப்பர். எடுத்துக்காட்டாக ' இலை ' |
என்பதை ' எல ' என்றும் ' உலகம் ' என்பதை ' ஒலகம் ' என்றும் ஒலிப்பர். இம்மாறுபாடுகள் எழுத்துமொழியில் இல்லை. தெரிந்து தெளிவோம் கேட்டல் , பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது. படித்தல் , எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன. ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சுமொழியும் காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்துமொழியும் தேவைப்படுகின்றன. இவ்விரு வடிவங்களையும் சரியாக அறிந்து கொண்டால் மொழியின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள முடியும். தமிழில் பேச்சுமொழிக்கும் |
எழுத்துமொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர். மேடைப்பேச்சிலும் , வானொலி , தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் எழுத்துமொழியாகிய இலக்கியத்தமிழே தெரிந்து தெளிவோம் இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு இதன் காரணமாகப் பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செய்யப்படுகின்றன. பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் அந்நிலை பெரும்பாலும் மாறிவிட்டது ; பேச்சுத்தமிழ் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. |
நாளேடுகள் மற்றும் பருவ இதழ்களில் இன்றும் எழுத்துத் தமிழே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேச்சுத்தமிழில் காலந்தோறும் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தவிர்க்க யலாது. ஆனால் ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் திருத்தமான தமிழையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் தாய்மொழியைச் சிதையாமல் காக்க முடியும். எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில் , சிந்தனையில் புதிதுபுதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு தெளிவுறுத்தும் படங்களோடு சுவடிஎலாம் செய்து |
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். " என்பது பாவேந்தரின் ஆசை. அதன்படி நம் செந்தமிழ்மொழி செழுந்தமிழாய் விளங்கப் பாடுபடுவோம். கற்பவை கற்றபின் 1. உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சுவழக்குத் தொடர்களுக்கு ணையான எழுத்துவழக்குத் தொடர்களை எழுதி வருக. ( எ.கா. ) பேச்சுமொழி : அம்மா பசிக்கிது. எனக்குச் சோறு வேணும். எழுத்துமொழி : அம்மா ! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும். பேசும்போது சில நேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ' ஆ ' என்னும் எழுத்து இகரமாக மாறுவதும் உண்டு. அவ்வாறு |
ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்துவழக்குச் சொற்களையும் எழுதுக. ( எ.கா. ) சொல்லு சொல் நில்லு நில் ம் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மொழியின் முதல்நிலை பேசுதல் , அ ) படித்தல் ஆ ) கேட்டல் 2. ஒலியின் வரிவடிவம் அ ) பேச்சு ஆகியனவாகும். இ ) எழுதுதல் இ ) குரல் ஈ ) வரைதல் ஈ ) பாட்டு இயல் ஒன்று நுழையும்முன் விரிவானம் D சொலவடைகள் ( பொம்மலாட்டம் ) சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் |
கொண்டிருக்கும். பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை நாட்டுப்புற மக்களும் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பாகும். சொலவடைகளுடன் கூடிய நாட்டுப்புறக் கதை ஒன்றைப் பொம்மலாட்டமாகப் பார்ப்போம். கதைசொல்லி : பெரியோர்களே ! தாய்மார்களே ! குழந்தைகளே ! நாம இன்னிக்கு ' ஆளுக்கு ஒரு வேலை ' என்னும் கதையைப் பொம்மலாட்டமாப் பாக்கப் போறோம். இந்தப் பையன்தான் நம்ம கதைநாயகன். இவன் ஒழுங்காப் பள்ளிக்கூடம் போகாம ஊரைச் சுத்திக்கிட்டு வருவான். அவங்க அம்மா எவ்வளவோ |
சொல்லியும் அவன் கேட்கல. புண்ணுக்கு மருந்து போட முடியும் ; புடிவாதத்துக்கு மருந்து போட முடியுமா ? அவனோட புடிவாதத்தை யாராலும் மாத்த முடியல. ஒருநாள் அப்பா பையனக் கூப்பிடுறாரு. 14 அப்பா : அணை உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது. இப்ப நீ சரியா படிக்கலன்னா வாழ்க்கையில முன்னேற முடியாது. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயி படிக்கிற வேலையைப் பாரு. பையன் : படிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. கதைசொல்லி : வெளைச்சலுக்கும் வெள்ளாட்டுக்கும் சென்மப் பகைங்கிற மாதிரி இந்தப் பயகிட்ட போராடித்தான் படிக்க வைக்கணும். எறும்பு ஊரக் |
கல்லும் தேயுங்கிற மாதிரி இவனைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தணும்னு நினைக்குறாரு அவங்க அப்பா. பொறுமையா அறிவுரை சொல்றாரு. ஆனா பையன் கேக்கல. பையன் : போப்பா , பள்ளிக்கூடம் போற வேலையெல்லாம் எனக்கு ஒத்து வராது. கதைசொல்லி : அப்பாவுக்குக் கோபம் வருது. சத்தம் போடுறாரு. சத்தம் கேட்டு அம்மா வெளியே வராங்க. அம்மா : ராசா , உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள விலைபோகும். நீ படிக்கலன்னா ஊர்ல யாரும் மதிக்கமாட்டாங்க. அதனால நீ பள்ளிக்கூடம் போயி நல்லாப் படிச்சுக்க. கதைசொல்லி : அடை மழை விட்டாலும் செடி மழை விடாதுங்கிற மாதிரி அப்பா விட்டாலும் |
அம்மா விடமாட்டாங்க போல இருக்குன்னு நெனச்சுப் பையன் பள்ளிக்கூடத்துக்குப் போறான். அவனுக்குப் படிக்கப் பிடிக்கல.நினைச்சதாம் கழுதை எடுத்ததாம் ஓட்டமுங்கிற மாதிரிப் பள்ளிக்கூடத்தை விட்டு ஓட்டம் பிடிக்குறான். விளையாட யாராவது கிடைப்பாங்களான்னு பார்க்குறான். அங்கே எறும்பு ஒண்ணு போய்கிட்டு இருக்கு. பையன் : எறும்பே ! எறும்பே ! என் கூட விளையாட வர்றியா ? எறும்பு : போ ! போ ! உனக்குத் தான் வேலை இல்ல. குடல் கூழுக்கு அழுவுதாம் , கொண்டை பூவுக்கு அழுவுதாம். எனக்கு நெறைய வேல கிடக்கு. நான் எங்குழந்தைகளுக்குத் தீனி கொடுக்கணும். |
அரிசி , நொய் எல்லாம் சேகரிக்கணும். சொப்பனத்தில் கண்ட அரிசி சோத்துக்கு ஆகுமா ? நான் கிளம்புறேன். நீ அதோ பறக்குதே அந்தத் தேனீகூடப் போய் விளையாடு. பையன் : தேனீ ! தே m ! c என் கூட விளையாட வர்றியா ? தேனீ : நல்ல பாம்பு படம் எடுக்கலாம் ; நாக்கலாம் பூச்சி படம் எடுக்கலாமா ? உனக்குத்தான் வேலை இல்லை. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும். உன்னைப் போல ஒரு ஆளு இருந்தா எங்கக் கூட்டமே கெட்டுப் போயிடும். எனக்குத் தேன் எடுக்குற வேலை இருக்கு. போ ! போ ! பையன் : உங்க கூட்டத்தில ஆயிரம் தேனீ இருக்கே , நீ ஒரு ஆளு தேன் |
எடுக்கலன்னா என்ன கொறைஞ்சா போயிடும் ? தேனீ : ஆள் கூடுனா பாம்பு சாகுமா ? கைய ஊனித்தான் கரணம் போட முடியும். பூவெல்லாம் குறுகி மூடுறதுக்குள்ள நான் தேனெடுக்கப் போகணும். கதைசொல்லி : தேனீயும் போயிடுது. பையன் கொஞ்சம் தூரம் நடக்குறான். ஒரு வீட்டு வாசலில் பொதிமாடு ஒண்ணு நின்னுக்கிட்டு இருக்கு. பையன் : மாடே ! மாடே ! சும்மாதானே இருக்கே. ஏங்கூட விளையாட வாரியா ? மாடு : என்னது ! சும்மா இருக்கிறேனா ? காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும். இப்போ உனக்குத்தான் வேலை இல்லை. இருப்பவனுக்குப் புளியேப்பம் ; இல்லாதவனுக்குப் |
பசியேப்பம். நான் என் முதலாளிக்கு உப்புமூட்டை , புளிமூட்டை எல்லாம் சுமக்கணும். நான் வரல. நீ அதோ அந்த ஆமைகிட்ட போய் விளையாடு. பையன் : ஆமையே ! ஆமையே ! நாலு வீட்டில கல்யாணமாம். நாய்க்கு அங்கேயும் இங்கேயும் ஓட்டமாம் என்கிற மாதிரி எங்கே வேகமாகப் போயிட்டு இருக்கே ? ஏங்கூட விளையாட வாரியா ? ஆமை : என்னைவிட வேகமாக ஓடுற முயலோட போட்டி வச்சிருக்கேன். அவப்பொழுது போக்குவதிலும் ( வீணாகப் பொழுதுபோக்குதல் ) தவப்பொழுது நல்லதும்பாங்க. நான் கொஞ்ச நேரம் கூட வீணாக்காமல் நடந்தே ஆகணும். பையன் : பாடிப்பாடிக் குத்தினாலும் பதரு அரிசி |
ஆகுமா ? நீ ஓடி ஓடிப் பார்த்தாலும் முயலை முந்த முடியுமா ? ஆமை : அதிர அடிச்சா உதிர விளையும். அது மாதிரி முயற்சி செஞ்சா எல்லாம் முடியும். நீ வேணும்னா அதோ அங்கே படுத்திருக்கிற முயல் கூடப் போய் விளையாடு. கதைசொல்லி : பையன் கொஞ்ச தூரத்தில் படுத்திருகிற முயல் கிட்டப் போறான். பையன் : முயலே ! முயலே ! குத்துக்கல்லுக்கு என்ன குளிரா வெயிலாங்கிற மாதிரி கவலையே இல்லாம படுத்திருக்கியே , வா விளையாடலாம். முயல் : அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்னு சொல்லுற மாதிரி , நிழலில் படுத்துத் தூங்கினதால போனதடவை ஆமையிடம் தோத்துப் |
போய்ட்டேன். இந்தத் தடவையாவது நான் முந்தி ஆகணும். அதனால நான் வேகமா ஓடணும். நீ வேணும்னா அதோ அங்கே இருக்குற குட்டிச்சுவருகூடப் போய் விளையாடு. கதைசொல்லி : அந்தப் பையன் கார்த்திகை மாசம் பிறைய கண்ட மாதிரி விளையாட ஆள் கிடைச்சிடுச்சுனு நினைச்சு அந்தக் குட்டிச்சுவரு மேலே ஏறிக் குதிச்சுக் குதிச்சு விளையாடுறான். அது ரொம்பப் பழைய சுவரு. மழையிலவேற நல்லா ஊறி இருக்கு. இவன் ஏறிக் குதிச்சதும் பொல பொலன்னு இடிஞ்சு விழுது. அதுல இருந்த பூச்சி , எறும்பு , வண்டு எல்லாம் வெளியில வருது. எறும்பு : அடப்பாவி , நாங்களே அதை விட்டாலும் |
கதி இல்ல , அப்பால போனாலும் விதி இல்லனு நினைச்சு தட்டிப் போட்ட ரொட்டிக்குப் புரட்டிப் போட ஆளு இல்லாம இருக்கோம். உனக்குத்தான் வேலை இல்லைன்னா நாங்க பாடுபட்டுச் சேர்த்து வச்ச பொருளை எல்லாம் இப்படிப் போட்டு உடைச்சிட்டியே ! கதைசொல்லி : எறும்பு , பூச்சி எல்லாம் கோபத்தோட அவன் கையில கால்ல ஏறி நறுக்கு நறுக்குன்னு கடிக்குதுக. அள்ளுறவன் பக்கத்துல இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்துல இருக்கக் கூடாதுன்னு அந்தப் பையன் வலி பொறுக்க முடியாம கத்திக்கிட்டு ஓடுறான். அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான் என்கிற |
மாதிரி காட்டுலயும் மேட்டுலயும் ஏறி விழுந்து வீட்டுக்கு ஓடி வந்து சேருறான். பையன் : அம்மா ! அம்மா ! ஊரு உலகத்துல எல்லாரும் அவங்க அவங்க வேலையப் பாக்குறாங்க.ஈ எறும்பு கூடச் சும்மா இல்லாம வேலை செய்யுதுக. எனக்கு இப்பத்தான் புத்தி வந்தது. என்னோட வேல படிக்கிறதுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. இனிமே நானும் சும்மா இருக்காம , ஒழுங்காப் பள்ளிக்கூடம் போயிப் படிப்பேன். கதைசொல்லி : அதுக்குப்பிறகு அந்தப் பையன் நல்லபடியா படிக்கத் தொடங்கறான். ஆளுக்கு ஒரு வேலைன்னு எல்லாருக்கும் புரிய வைக்கிறான். இத்தோட கதை முடியுது. இதுவரைக்கும் |
பொறுமையா இருந்து பொம்மலாட்டத்தைப் பார்த்த உங்கள் எல்லாருக்கும் நன்றி... நன்றி... நன்றி ! கற்பவை கற்றபின் 1. உங்கள் பகுதியில் வழங்கி வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக. 2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள சொலவடைகளில் எவையேனும் ஐந்தனைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக. ( எ.கா. ) குத்துக்கல்லுக்குக் குளிரா வெயிலா என்பது போல் என் நண்பன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்து வந்தான். மதிப்பீடு பாடப்பகுதிப் பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக. இயல் ஒன்று கற்கண்டு குற்றியலுகரம் , குற்றியலிகரம் நினைவு |
கூர்க தமிழ் எழுத்துகளை முதலெழுத்து , சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர். உயிர் பன்னிரண்டு , மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்து பத்து வகைப்படும். அவை உயிர்மெய் , ஆய்தம் , உயிரளபெடை , ஒற்றளபெடை , குற்றியலுகரம் , குற்றியலிகரம் , ஐகாரக்குறுக்கம் , ஒளகாரக்குறுக்கம் , மகரக்குறுக்கம் , ஆய்தக்குறுக்கம் என்பனவாகும். சார்பெழுத்துகளில் ஒன்றான குற்றியலுகரம் பற்றி இனிக் காண்போம். குற்றியலுகரம் குழந்தை , வகுப்பு , பாக்கு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள். மூன்று சொற்களிலும் |
' கு ' என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம். அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. கு , சு , டு , து , பு , று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது , ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். ( எ.கா. ) காசு , எஃகு , பயறு , |
பாட்டு , பந்து , சால்பு தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும். வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும். இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர். ( எ.கா. ) புகு , பசு , விடு , அது , வறு , மாவு , ஏழு தெரிந்து தெளிவோம் தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம் , கான் , காரம் , கேனம் ஆகிய எழுத்துச் சாரியைகளைப் பயன்படுத்துகிறோம். குறில் எழுத்துகளைக் குறிக்க ' கரம் ' ( எ.கா. ) அகரம் , இகரம் , உகரம் , |
ககரம் , மகரம் நெடில் எழுத்துகளைக் குறிக்க ' கான் ' ( எ.கா. ) ஐகான் , ஔகான் குறில் , நெடில் எழுத்துகளைக் குறிக்க ' காரம் ' ( எ.கா. ) மகாரம் , ஏகாரம் , ஐகாரம் , ஔகாரம் ஆய்த எழுத்தைக் குறிக்க ' கேனம் ' ( எ.கா. ) அஃகேனம் தமிழின் சிறப்பைப் பற்றிய அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்க. கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக. நான் அறிந்த பழமொழிகள். சொல்லக் கேட்டு எழுதுக. 1. நமது தாய்மொழி தமிழாகும். 2. தமிழ்மொழி இனிமை , வளமை , சீர்மை மிக்கது. 3. தமிழுக்குத் தலைகொடுத்தவன் குமணவள்ளல். மொழியை ஆள்வோம் ! 4. |
தமிழ்மொழி பேச்சுமொழி , எழுத்துமொழி என்னும் இரண்டு கூறுகளை உடையது. 5. பேச்சுமொழியை உலகவழக்கு என்றும் கூறுவர். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக. வினா அறிந்து பயன்படுத்துவோம் கோதை எதைப் படித்தாள் ? கவிதையைப் படித்தது யார் ? கோதை கவிதையை என்ன செய்தாள் ? கோதை கவிதையைப் படித்தாள். திணை இரண்டு வகைப்படும். அவை 1. உயர்திணை 2. அஃறிணை. ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர். அழுத்தம் தர வேண்டிய சொல் பறவைகள் , விலங்கினங்கள் , தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை |
அஃறிணை என்பர். படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக. இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக. ( எ.கா. ) அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும். ஏட்டில் எழுதுவது வரி வடிவம். மழலை பேசும் இனிமைத் தமிழ் நீ அறிந்ததைப் பிறருக்குச் எழுத்துகள் தொடர்ந்துநின்று பொருள் தருவது உழவர்கள் நாற்று குழந்தையை மெதுவாக நீதி மன்றத்தில் தொடுப்பது ' நீச்சத் தண்ணி குடி ' என்பது பேச்சு கலைச்சொல் அறிவோம். ஊடகம் அழகு. மொழியியல் ஒலியியல் இதழியல் எமது. என் பொறுப்புகள்... 1. கடிதங்கள் , கட்டுரைகள் போன்றவற்றை எழுதும்போது திருத்தமான மொழி |
நடையையே கையாள்வேன். பொம்மலாட்டம் , தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகளைப் போற்றுவேன். வயலுக்குச் செல்வர். என்போம். நிற்க அதற்குத் தக... பழகும். பருவ இதழ் பொம்மலாட்டம் எழுத்திலக்கணம் உரையாடல் இணையத்தில் காண்க சிறந்த மேடைப் பேச்சாளர்களின் பெயர்களை இணையத்தில் தேடித் தொகுத்து வருக. இயல் இரண்டு கற்றல் நோக்கங்கள் அணிநிழல் காடு செய்யுளின் வருணனைப் பகுதிகளைப் படித்துச் சுவைத்தல் காடுகளும் காட்டு உயிர்களும் நாட்டின் உயிர்நாடி என்பதைப் புரிந்துகொள்ளுதல் காட்டு உயிர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பைக் |
குறித்துப் புரிந்துகொள்ளுதல் நேர்காணல் வடிவத்தில் அளிக்கப்பட்ட கருத்துகளைப் படித்துணரும் திறன் பெறுதல் எழுத்துகள் குறுகி ஒலிக்கும் இடங்களை அறிந்து பயன்படுத்துதல் இயல் இரண்டு நுழையும்முன் கவிதை வழி அறிவோம். காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை. ஒரு நாட்டின் வளம் , அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் ' காட்டின் வளமே நாட்டின் வளம் ' என்று அறிஞர்கள் கூறுகின்றனர். காட்டையும் காட்டின் குளிர்ச்சியையும் காட்டு விலங்குகளின் |
கொண்டாட்டங்களையும் கார்த்திகை தீபமெனக் கவிதைப்பேழை 2 காடு காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடீ கிளியே பார்வை குளிருமடீ ! காடு பொருள்கொடுக்கும் காய்கனி ஈன்றெடுக்கும் கூடிக் களித்திடவே - கிளியே குளிர்ந்த நிழல்கொடுக்கும் குரங்கு குடியிருக்கும் கொம்பில் கனிபறிக்கும் மரங்கள் வெயில்மறைக்கும் கிளியே வழியில் தடையிருக்கும் * பச்சை மயில்நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் நச்சர வங்கலங்கும் - கிளியே நரியெலாம் ஊளையிடும் அதிமது ரத்தழையை யானைகள் தின்றபடி புதுநடை போடுமடீ - கிளியே பூங்குயில் கூவுமடி ! சிங்கம் புலிகரடி |
சிறுத்தை விலங்கினங்கள் எங்கும் திரியுமடீ - கிளியே இயற்கை விடுதியிலே ! * - சுரதா சொல்லும் பொருளும் ஈன்று கொம்பு அதிமதுரம் பாடலின் பொருள் கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும். |
தந்து கிளை மிகுந்த சுவை $ பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக்கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக் கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடை போடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம் , புலி , கரடி , சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும். எடுத்துத் தரப்பட்டுள்ளது. களித்திட நச்சரவம் விடுதி நூல் வெளி சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் |
பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பாரதிதாசனின் இயற்பெயர் ' சுப்புரத்தினம் '. எனவே தம் பெயரைச் சுப்புரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும் தேனும் , தேன்மழை , துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இப்பாடல் தேன்மழை என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து மகிழ்ந்திட விடமுள்ள பாம்பு தங்கும் இடம் இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது. |
கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை ' கிளிக்கண்ணி ' ஆகும். தெரிந்து தெளிவோம் கா , கால் , கான் , கானகம் , அடவி , அரண் , ஆரணி , புரவு , பொற்றை , பொழில் , தில்லம் , அழுவம் , இயவு , பழவம் , முளரி , வல்லை , விடர் , வியல் , வனம் , முதை , மிளை , இறும்பு , சுரம் , பொச்சை , பொதி , முளி , அரில் , அறல் , பதுக்கை , கணையம். இயல் இரண்டு நுழையும்முன் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதைப்பேழை நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித |
வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன. கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம். அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையா என்பதை விளக்கும் கவிதை ஒன்றை அறிவோம். ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில் பார்த்தபோதும் இப்படியேதானிருந்தது ஐம்பதைத் தாண்டி இன்றும் அப்படியேதான் தாத்தாவின் தாத்தா காலத்தில் நட்டு வளர்த்த மரமாம் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன் பச்சைக்காய்கள் நிறம் மாறிச் செங்காய்த் தோற்றம் கொண்டதுமே சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும் |
பளபளக்கும் பச்சை இலைகளூடே கருநீலக் கோலிக்குண்டுகளாய் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும் பார்க்கும்போதே நாவில் நீரூறும் காக்கை குருவி மைனா கிளிகள் இன்னும் பெயரறியாப் பறவைகளுடன் அணில்களும் காற்றும் உதிர்த்திடும் சுட்ட பழங்கள் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும் வயதுவந்த அக்காக்களுக்காய் கையில் பெட்டியுடன் ஓடிஓடிப் பழம் பொறுக்கும் தங்கச்சிகள் இரவில் மெல்லிய நிலவொளியில் படையெடுத்து வரும் பழந்தின்னி வௌவால் கூட்டம் தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும் மரத்தின் குளிர்ந்த நிழலிலே கிளியாந்தட்டின் சுவாரசியம் புளியமிளாறுடன் |
அப்பா வரும்வரை நேற்று மதியம் நண்பர்களுடன் என் மகன் விளையாடியதும் அந்த மரத்தின் நிழலில்தானே பெருவாழ்வு வாழ்ந்த மரம் நேற்றிரவுப் பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டதாமே விடிந்தும் விடியாததுமாய் துஷ்டி கேட்கும் பதற்றத்தில் விரைந்து செல்கிறார் ஊர்மக்கள் குஞ்சு குளுவான்களோடு எனக்குப் போக மனமில்லை என்றும் என்மன வெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் குன்றுகளின் நடுவே மாமலைபோல ராஜமார்த்தாண்டன் இயல் இரண்டு நுழையும்முன் ரைநடை உலகம் விலங்குகள் உலகம் வளம் நிறைந்த நிலம் , அடர்ந்த மரம் , செடி கொடிகள் , நன்னீர் , |
நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள் , விலங்குகள் , தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும். காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிரிகள் உதவுகின்றன. மனிதனின் முதல் இருப்பிடம் காடுதான். அதன் மரபுத் தொடர்ச்சியாகத்தான் காட்டைப்பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும் அறியும் ஆர்வம் மனிதர்களிடம் இன்றும் தொடர்கிறது. காட்டு விலங்குகளின் உறைவிடமான முண்டந்துறை புலிகள் காப்பகத்துள் ஓர் உலா வருவோமா ! களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் புடன் வரவேற்கிறது பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ஆதினி தன் |
அம்மாவுக்காகக் காத்திருந்தாள். பணியில் இருந்து வீடு திரும்பிய அம்மாவிடம் ' அம்மா ! எனக்குக் காட்டு விலங்குகள் பற்றிய புகைப்படத் தொகுப்பு ஒன்று தயாரிக்க வேண்டி இருக்கிறது. அதற்குத் தாங்கள்தான் உதவ வேண்டும் ' என்று கூறினாள். ' அப்படியா ! எனக்குத் தெரிந்த வனஅலுவலர் ஒருவர் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் பணியாற்றுகிறார். அவரிடம் முன் இசைவு பெற்று நாளை நாம் அங்குச் செல்லலாம். வன அலுவலர் நம்மைக் காட்டுக்குள் அழைத்துச் செல்வார் ; அப்பொழுது நீ காட்டு விலங்குகளைப் புகைப்படம் எடுக்கலாம் ; அவற்றைப் பற்றிய தகவல்களையும் |
தெரிந்து கொள்ளலாம். என்ன மகிழ்ச்சிதானே ! ' என்றார் அம்மா. மறுநாள் ஆதினியும் அவளது தாய் மலர்விழியும் முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குச் சென்றனர். அங்கு வன அலுவலர் ( வனவர் ) அவர்களை வரவேற்றார். அவர்கள் இருவரையும் பாதுகாப்பு ஊர்தியில் ஏற்றிக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார். அப்போது... ஆதி Q : ஆ ! எவ்வளவு பெரிய அடர்ந்த காடு ! பார்க்கவே வியப்பாக உள்ளதே ! மாமா இந்தக் காட்டைப் பற்றிச் சொல்லுங்களேன் ! வனவர் : மனித முயற்சியின்றி வளர்ந்த மரங்கள் , செடிகள் , கொடிகள் , புல் , புதர்கள் , பூச்சியினங்கள் , பறவைகள் , |
விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம்தான் இக்காடாகும். இடை இடையே காட்டாறுகளும் , நீரோடைகளும் இருக்கும். மலர்விழி : காடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்தப் புலிகள் காப்பகம் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளலாமா ஐயா ? வனவர் : இது தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம். 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு யானை , புலி , சிறுத்தை , மான் , கரடி , காட்டுமாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன. அவற்றை எல்லாம் பார்க்கலாம். ஆதினி : இன்று எல்லா விலங்குகளையும் பார்க்க முடியுமா மாமா ? வனவர் : அப்படிச் |
சொல்ல முடியாது. நாம் பயணம் செய்யும் பாதைக்கு அருகில் வரக்கூடிய விலங்குகளைத்தான் பார்க்க முடியும். மலர்விழி : அவை இருக்கும் இடங்களுக்குச் சென்று பார்க்க முடியாதா ஐயா ? வனவர் : எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. காட்டு விலங்குகளுக்குத் துன்பம் தருவது சட்டப்படி குற்றமாகும். நாம் அரசு அனுமதித்துள்ள தூரம் வரை சென்று வரலாம். கவலை வேண்டாம். அவ்விடத்திற்குள்ளேயே அனைத்து விலங்குகளையும் நம்மால் பார்க்க முடியும். ( அப்போது தூரத்தில் யானைக் கூட்டம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஆதினி ' யானை ! யானை ! ' என்று |
மகிழ்ச்சியுடன் கைதட்டினாள். பின்பு அந்த யானைகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். ) ஆசிய யானை ஆப்பிரிக்க யானை ஆதினி : மாமா ! யானையைப் பற்றிப் புதிய தகவல்கள் ஏதாவது சொல்லுங்களேன் ? வனவர் : உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஒன்று ஆசிய யானை ; இன்னொன்று ஆப்பிரிக்க யானை. ஆதினி : அவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு மாமா ? மலர்விழி : எனக்குத் தெரியும். ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை. ஆனால் ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு. சரிதானே ஐயா ? வனவர் : சரியாகச் |
சொன்னீர்கள் ! அது மட்டுமன்றி அவற்றின் உயரம் , நிறம் , நகம் ஆகியவற்றிலும் சில வேறுபாடுகள் உள்ளன. ஆதினி : மாமா ! யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் இருக்குமா ? வனவர் : ஆம் ஆதினி. யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும். யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர் , உணவு ஆகியவற்றிற்காக இடம்பெயர்ந்துகொண்டே இருக்கும். ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல் , இலை தழைகளை உணவாக உட்கொள்ளும். அதற்குக் குடிக்க அறுபத்தைந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படும். யானை மிகுந்த |
நினைவாற்றல் கொண்ட விலங்கு. அது பாசம் நிறைந்த விலங்கும் கூட. மலர்விழி : ஆனால் யானைகள் மனிதர்களைத் தாக்குவதாகச் செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றனவே ஐயா ? வனவர் : யானைகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவது இல்லை. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடும்போதுதான் மனிதர்களைத் தாக்குகின்றன. மேலும் யானைக்குக் கண்பார்வை குறைவு ; கேட்கும் ஆற்றலும் மோப்ப ஆற்றலும் மிகுதி. ( அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் யானைகள் அவ்விடத்தைக் கடந்து சென்றன. ஊர்தி தொடர்ந்து மேலே சென்றது. ) தெரிந்து தெளிவோம் தமிழ்நாட்டில் வனக்கல்லூரி |
அமைந்துள்ள இடம் மேட்டுப்பாளையம் ( கோவை மாவட்டம் ) கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் ( BSc. Forestry ) , முதுநிலை வனவியல் ( MSc. Forestry ) ஆகிய படிப்புகள் உள்ளன. வனவர் : அதோ ! அந்த மரத்தின் மீது இருப்பது என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம் ? ஆதி Q : ஆ ! எவ்வளவு பெரிய கரடி. கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா ? வனவர் : கரடி ஓர் அனைத்துண்ணி. அது பழங்கள் , தேன் போன்றவற்றை உண்பதற்காக மரங்களில் ஏறும். உதிர்ந்த மலர்கள் , காய்கள் , கனிகள் , புற்றீசல் ஆகியவற்றையும் தேடி உண்ணும். கறையான் அதற்கு |
மிகவும் பிடித்த உணவு. மலர்விழி : தேன்கூட்டைக் கலைக்கும்போது தேனீக்கள் அதைக் கொட்டிவிடாதா ஐயா ? வனவர் : கரடியின் உடலைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த முடிகள் தேனீக்களிடமிருந்து அதனைக் காப்பாற்றி விடும். நன்கு வளர்ந்த கரடி 160 கிலோ எடை வரை இருக்கும். ( ஆதினி தன் அலைபேசியில் கரடியைப் புகைப்படம் எடுத்துக்கொண்டாள். ' இன்னும் ஒரு புலிகூட நம் கண்ணில் படவில்லையே ! ' என்று ஆதினி சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது வனவர் ஊர்தியை நிறுத்தினார். சற்றுத் தொலைவில் புல்வெளி மீது புலி ஒன்று படுத்திருந்தது. வனவர் அதை அனைவருக்கும் |
காட்டினார். ) ஆதினி : எனக்கு அச்சமாக உள்ளது. புலி நம்மைத் தாக்கிவிட்டால் என்ன செய்வது ? வாருங்கள் திரும்பிவிடலாம். வனவர் : அச்சம் வேண்டாம் ஆதினி ! புலி மனிதர்களைத் தாக்குவதில்லை. இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்டது. ஆதினி : அப்படியா ! நான் இங்கிருந்தபடியே புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். மாமா இங்கு ஒரே ஒரு புலி தானே இருக்கிறது. வனவர் : ஆமாம். புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது. கருவுற்ற புலியானது தொண்ணூறு |
நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து வரும். அவை வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும். ஆதினி : அரிய தகவலாக இருக்கிறதே ! வனவர் : ஆம். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு. புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை. எனவே , அதனைப் பண்புள்ள விலங்கு என்று நாங்கள் கூறுவோம். சரி காட்டுக்குள் நமக்கு அனுமதிக்கப்பட்ட இடம் வரைக்கும் வந்து விட்டோம். இனி நாம் அலுவலகம் |
செல்வோம். மகாதல் ஆதினி : ' காட்டுக்கு அரசன் ' என்று சிங்கத்தைச் சொல்கிறார்களே ! அதுபற்றிச் சொல்லுங்கள் மாமா. வனவர் : உலகில் ஆசியச் சிங்கம் , ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள் வாழ்கின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ' கிர் சரணாலயத்தில் ' மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன. நீளம் , உயரம் , பருமன் , எடை , பலம் , வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே இயற்கை விஞ்ஞானிகள் புலியையே காட்டுக்கு அரசன் என்கிறார்கள். ( ஊர்தி அலுவலகம் நோக்கி விரையும் வழியில் ஒரு புள்ளிமான் தன் |
குட்டியுடன் புல்தரையில் நின்றுகொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் ஆதினி ஊர்தியை நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டாள். ) வனவர் I ஆதினி , இவை புள்ளிமான்கள். இந்திய ாவில் சருகுமான் , மிளாமான் , வெளிமான் எனப் பல வகையான மான்கள் உள்ளன. எல்லாவகை ம ான் களிலும் நம் நாட்டுப் புள்ளிமான்களே அழகில் சிறந்தவை என்பர். ( ஆதினியும் அவள் தாய் மலர்விழியும் வனஅலுவலர்க்கு நன்றி கூறி விடை பெற்றனர். ஆதினி , தன் படத்தொகுப்பிற்குத் தேவையான புகைப்படங்களும் குறிப்புகளும் கிடைத்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள். ) |
கற்பவை கற்றபின் 1. விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக. ( எ.கா. ) புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. 2. காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக. இயல் இரண்டு நுழையும்முன் உருவாக்கியுள்ளார். விரிவானம் இந்திய வனமகன் ஓர் அடர்ந்த காடு. காட்டின் நடுவில் மூங்கிலால் அமைந்த வீடு. வீட்டினுள் சிலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். மனித முயற்சியின்றி உருவாகிய வானளாவிய மரங்களும் அடர்ந்த செடி கொடிகளும் நிறைந்த இடமே காடாகும். ஆனால் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் அமைந்த இந்தக் |
காடு சற்று வேறுபட்டது. மணல் தீவுகளில் மூங்கில் மட்டுமே வளர வாய்ப்புண்டு என்பர். ஆனால் பல்வகை மரங்கள் நிறைந்த இந்தக் காட்டை ஒரு தனி மனிதர் அவரைச் சந்திப்போம். யானைகள் அப்போது பிளிறும் ஓசை கேட்கிறது. வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த குடும்பத்தலைவர் வெளியில் வந்து பார்க்கின்றார். நள்ளிரவு நேரம் என்பதால் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் ( நேர்காணல் ) சில யானைகள் அவர் வீட்டை நோக்கி வருவதைத் தனது நுண்ணறிவால் தெரிந்து கொள்கிறார். உடனே வீட்டுக்குள் சென்று மற்றவர்களை எழுப்பி , வீட்டை விட்டு வெளியேற்றிப் |
பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். யானைகள் அவருடைய மூங்கில் வீட்டை அடித்து உடைக்கின்றன. தூரத்திலிருந்து இக்காட்சியைப் பார்த்த குடும்பத்தலைவர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றார். யானைகள் தனது வீட்டை அடித்து நொறுக்குவதைக் கண்ட ஒருவரால் மகிழ்ச்சி அடைய முடியுமா ? ஆம். அவ்வாறு மகிழ்ச்சி அடைந்தவர்தான் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதவ்பயேங். அவர் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கியவர். |
அக்காட்டிலேயே தமது வாழ்வைக் கழித்துக் கொண்டிருப்பவர் ; யானைகளின் வருகையைத் தமது உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகக் கருதியவர் ; ' இந்தியாவின் வனமகன் ' என்று அழைக்கப்படும் அவருடன் உரையாடுவோம். வணக்கம் ஐயா. உங்களுக்கு இந்தக் காட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது ? பிரம்மபுத்திரா ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். 1979 ஆம் ஆண்டும் அது போன்று ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஏராளமான பாம்புகள் , மரங்கள் இல்லாத இத்தீவில் கரை ஒதுங்கின. அவற்றுள் சில பாம்புகள் இறந்து |
கிடந்தன. பல பாம்புகள் வெப்பம் தாங்காமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இந்தக்காட்சி என்னை மிகவும் பாதித்தது. ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் இதைப் பற்றிப் பேசினேன். ' தீவில் மரங்கள் இல்லை , அதனால்தான் பாம்புகள் மடிந்து போகின்றன. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது ' என்று கூறி விட்டனர். ' மரங்கள் இல்லாததால்தான் பாம்புகள்இறந்தன எனில் , உலகில் உள்ள மரங்கள் முழுவதும் அழிந்து விட்டால் மனிதனும் இப்படித்தானே இறந்து போவான் ' என்று எண்ணிய எனக்கு உடல் நடுங்கியது. அப்பொழுதே இந்தத்தீவு முழுவதும் மரங்களை வளர்க்க |
வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் ஆழப்பதிந்து விட்டது. உங்கள் எண்ணத்திற்கு ஊர் மக்கள் எப்படி உதவி செய்தார்கள் ? ஊர் மக்களிடம் , ' அத்தீவில் மரங்கள் வளர்க்கலாம் ' என்று நான் கூறிய பொழுது அதை யாரும் ஏற்கவில்லை. ' அத்தீவில் மரங்களை வளர்க்கவே முடியாது. போய் உன் வேலையைப் பார் ' என்று கூறிவிட்டனர். பிறகு என்ன செய்தீர்கள் ஐயா ? நான் கைகளில் கிடைத்த விதைகளை எடுத்துக் கொண்டு இந்தத்தீவிற்கு வந்தேன். இங்கு அவற்றை விதைத்து நாள்தோறும் தண்ணீர் ஊற்றி வந்தேன். ஆயினும் ஒரு விதைகூட முளைக்கவில்லை. பிறகு வனத்துறையினரை அணுகி |
என்ன செய்யலாம் என்று கேட்டபோது அவர்கள் , ' அத்தீவில் மூங்கில் மரம் மட்டுமே வளரும் ' என்று கூறினர். எனக்கு உடனே உற்சாகம் பிறந்துவிட்டது. மூங்கில்களைக் கொண்டு வந்து அவற்றை இங்கு நட்டு வளர்க்கத் தொடங்கினேன். அவை விரிந்து வளரத் தொடங்கின. இனிமேல் இத்தீவில் மரம் வளர்ப்பது ஒன்றே எனது வேலை என்று அப்போதே முடிவு செய்து விட்டேன். மூங்கில் மட்டுமே நட்டதாகக் கூறுகிறீர்கள். ஆனால் இந்தக் காடு முழுவதும் பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளனவே ! எப்படி ஐயா ? எங்கள் பகுதியில் அரசு சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் ஒன்றைச் |
செயல்படுத்தியது. அதில் என்னை நான் இணைத்துக் கொண்டேன். அவர்களுடன் இணைந்து இத்தீவு முழுவதும் பல்வேறு மரங்களை நடத் தொடங்கினேன். அந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் முடிந்துவிட்டது. நான் மட்டும் இங்கேயே தங்கி இருந்து அனைத்து மரக்கன்றுகளையும் பாதுகாத்து வந்தேன். ஆனால் மூங்கிலைத் தவிர வேறு எந்த மரமும் வளரவில்லை. அப்போதுதான் அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாதுநாத் அவர்களின் நினைவு எனக்கு வந்தது. சிறுவயதிலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவரிடம் சென்று என்னுடைய மரம் வளர்க்கும் திட்டம் பற்றிக் கூறினேன். உடனே |
அவர் , ' மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டுமெனில் , மண்ணின் தன்மையை அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். அதற்கு மண்புழுக்கள் மட்டுமன்றிச் சிவப்புக் கட்டெறும்புகளும் உதவும் ' என்று கூறினார். கட்டெறும்புகளா ? அவை கடித்தால் உடம்பில் கடுமையான எரிச்சல் ஏற்படுமே ? ஆமாம். ஆனால் என்ன செய்வது ? மண்ணின் தன்மையை மாற்ற வேண்டுமே அதற்காகத் நாள்தோறும் நூற்றுக்கணக்கான எறும்புகளைக் கொண்டுவந்து இங்கு விட ஆரம்பித்தேன். கட்டெறும்புகள் ஊர்ந்து செல்லச் செல்ல மண்ணின் தன்மை சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. காடுகளில் ஆங்காங்கே பச்சைப் |
பசும்புற்கள் தலைகாட்டத் தொடங்கின. அப்பொழுது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன் பின்பு நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன. இவ்வளவு மரங்களை வளர்ப்பதற்கு விதைகளும் உரமும் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன ? கால்நடைகள் வளர்ப்பதுதான் என்னுடைய வேலை. அவற்றின் சாணத்தை ஒரு துளி கூட வீணாக்காமல் இயற்கை உரம் தயாரிக்கத் தொடங்கினேன். ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை வீசி எறியாமல் விதையாகச் சேர்த்து வைப்பேன். பிறகு மழைக்காலம் தொடங்குவதற்கு முன் விதைகளை எடுத்து இத்தீவில் தூவத்தொடங்கி விடுவேன். இப்படி ஒவ்வோர் |
ஆண்டும் நான் தூவிய விதைகள்தாம் இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இக்காடு. மழை இல்லாத காலங்களில் செடிக்கு எப்படித் தண்ணீர் ஊற்றினீர்கள் ? ஆற்றின் கரையோரம் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதில் எனக்குச் சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் தொலைவில் இருந்த செடிகளுக்கு நீர் ஊற்றுவது சற்றுக் கடினமான செயலாக இருந்தது. அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன். செடியைச் சுற்றி மூங்கில் குச்சிகளை நட்டுவைத்து அதில் ஒரு பானையைப் பொருத்தினேன். அதில் ஒரு சிறுதுளை இட்டு , நீர் சொட்டுச் சொட்டாக வடிவதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். |
பிறகு அதில் நீர் நிரப்பினால் ஒரு வாரத்திற்குச் சிக்கல் இருக்காது. இப்படித்தான் மற்ற செடிகளை வளர்த்து வந்தேன். சரி , உங்கள் வீட்டிற்கு யானை வந்த கதையைக் கூறுங்களேன் ! நான் நட்ட செடிகள் முழுவதும் மரங்களாக வளரத் தொடங்கியபோது அவற்றில் பறவைகள் வந்து தங்கின. பறவைகளின் எச்சத்தால் பரவிய விதைகள் இந்தக் காடு வளர மேலும் துணைபுரிந்தன. பிறகு முயல் , மான் , காட்டு மாடுகள் என விலங்குகள் பலவும் தெரிந்து தெளிவோம் வரத்தொடங்கின. அப்படித்தான் ஒருநாள் யானைக் கூட்டம் ஒன்று வந்தது. யானைகள் தங்கியிருக்கும் காடுதான் வளமான காடு என்று |
பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நான் வளர்த்த காட்டுக்கு யானைகள் வந்த நாள் என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. அதன் பிறகு இங்கு பாம்புகள் , கழுகுகள் , காண்டா மிருகங்கள் போன்ற காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கின. நிறைவாகக் ' காட்டின் வளம் ' என்று குறிக்கப்படும் புலிகளும் வந்து தங்கத் தொடங்கின. 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு ' இந்திய வனமகன் ( Forest Man of India ) ' என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது. கௌகாத்தி |
பல்கலைக்கழகம் ' மதிப்புறு முனைவர் ' பட்டம் வழங்கியுள்ளது. புலிகளும் இந்தக் காட்டில் உள்ளனவா ? உங்களுக்கு அச்சமாக இல்லையா ? இல்லை. புலிகள் வந்த பிறகுதான் இக்காட்டின் உணவுச்சங்கிலி நிறைவடைந்தது. நான் புலிகளுக்குத் தொல்லையில்லாமல் எனது பாதைகளை வகுத்துக்கொண்டு இக்காட்டைப் பாதுகாத்து வருகிறேன். இது மிகக் கடினமான பணி. மற்றவர்களுக்கு எப்படித் தெரிந்தது ? ஜிட்டுகலிட்டா என்னும் வனவிலங்கு ஆர்வலர் என்னுடைய காட்டைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தார். நான் இந்தக் காட்டை உருவாக்கிய முறையை அவரிடம் கூறினேன். என்னைப் |
Subsets and Splits