text
stringlengths 11
513
|
---|
பாராட்டிப் பேசிவிட்டு அவர் இங்கிருந்து சென்றுவிட்டார். பிறகு ஒருநாள் யானைக் கூட்டத்தை விரட்டிக் கொண்டு வந்த வனக்காவலர்கள் என்னுடைய இந்தக் காட்டைக் கண்டு வியந்தனர். அவர்களுடைய கணக்கெடுப்பு வரைபடத்தில் இல்லாத இந்தக் காட்டைக் கண்டு மகிழ்ந்தனர். அதன் பிறகு என்னுடைய காடு பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் செய்தி வெளிவந்தது. மிக்க மகிழ்ச்சி ஐயா. அடுத்து உங்களுடைய பணி என்ன ? இந்தத்தீவின் மற்றொரு பகுதியில் இன்னொரு காட்டை உருவாக்கத் தொடங்கியிருக்கிறேன். எப்படியும் அதற்கு முப்பது ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதற்கு உதவ |
என்னுடைய மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். ஆதலால் அங்கு உறுதியாக ஒரு காட்டை உருவாக்குவேன். உங்களுடைய இந்தத் திட்டத்தைக் கேட்கும் பொழுது உங்களை மிகவும் பாராட்டத் தோன்றுகிறது ஐயா. நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டுமெனில் , ஆளுக்கு இரண்டு மரக்கன்றுகளை நட்டு வளருங்கள். அதுவே எனக்குப் போதும். உறுதியாக ஐயா , உங்களோடு பேசிய பிறகு நானும் கட்டாயம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்குவேன். உங்கள் பணி மேலும் தொடரட்டும். இன்னும் சிறப்படைய வாழ்த்துகிறேன். நான் சென்று வருகிறேன் ஐயா ! நன்றி. ஜாதவ்பயேங் போன்று நாமும் ஒரு காட்டை |
உருவாக்க முயல்வோம் ; அதற்கு அடையாளமாக நம் வீட்டைச் சுற்றி ஒருசில மரங்களை நட்டு வளர்ப்போம். அதற்கு நாம் அனைவரும் உறுதி ஏற்போம். மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் ! நாட்டின் வளம் காப்போம் ! கற்பவை கற்றபின் உங்கள் பள்ளி அல்லது நீங்கள் வாழும் பகுதியில் மரக்கன்று ஒன்றை நடுங்கள். அதனை நாள்தோறும் பாதுகாத்து வாருங்கள். அதன் விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்யுங்கள். மதிப்பீடு ஜாதவ்பயேங் காட்டை எவ்வாறு உருவாக்கினார் ? கற்கண்டு இயல் இரண்டு நால்வகைக் குறுக்கங்கள் ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. |
இதை மாத்திரை என்பர். ஆனால் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை. சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம். ஐகாரக்குறுக்கம் ஐ , கை , பை என ஐகார எழுத்து , தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. வையம் , சமையல் , பறவை என சொற்களின் முதல் , இடை , இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து |
ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும். ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும். ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும். ROS ஔகாரக்குறுக்கம் ஔ , வௌ என ஔகார எழுத்து , தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. ஒளவையார் , வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஔகாரம் |
ஔகாரக்குறுக்கம் எனப்படும். ஒளகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது. மகரக்குறுக்கம் அம்மா , பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க. வாழை குருவி தயிர் கொய்யா விளையாட்டு கூட்டம் ( எ.கா. ) வாழை + காய் = வாழைக்காய் கூடு சோறு அவரை விடுகதைகளுக்கு விடை |
எழுதுக. 1. மரம் விட்டு மரம் தாவுவேன் ; குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு ; புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன் ; கிளி அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார் ? 2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார் ?. 3. வெள்ளையாய் இருப்பேன் ; பால் அல்ல. மீன் பிடிப்பேன் ; தூண்டில் அல்ல தவமிருப்பேன் ; முனிவரல்ல நான் யார் ? என் பொறுப்புகள்... 1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன். |
திடல் பழம் போட்டி நிற்க அதற்குத் தக... 2. இயற்கைச் சமநிலையைப் பேணிப் பாதுகாப்பேன். கலைச்சொல் அறிவோம். தீவு Island இயற்கை வளம் Natural Resource வன விலங்குகள் Wild Animals வனப் பாதுகாவலர் Forest Conservator உவமை காடு பாட்டு பறவை காய் இணையத்தில் காண்க இந்தியாவிலுள்ள வனவிலங்குக் காப்பகங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி வருக. Parable Jungle வனவியல் Forestry பல்லுயிர் மண்டலம் - Bio Diversity 27/02/2023 18:30:51 இயல் இரண்டு 1. அழுக்காறாமை 2. நுழையும்முன் 4. வாழ்வியல் என்று திருக்குறளின் பெருமையை ஒளவையார் |
போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி , அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம். திருக்குறள் " அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் " ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. பொருள் : ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும். அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் |
நினைக்கப் படும். பொருள் : பொறாமை கொண்டவருடைய செல்வமும் , பொறாமை இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும். புறங்கூறாமை 3. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். பொருள் : ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால் , அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. * பொருள் : பிறருடைய குற்றத்தைக் காண்பது போல் , தன்னுடைய குற்றத்தையும் காண்பவருடைய வாழ்வில் துன்பம் இல்லை. இயல் மூன்று நுழையும்முன் |
கவிதைப்பேழை D புலி தங்கிய குகை சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஒரும் புவிசேர்ந்து போகிய கல்அளை போல தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர். நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர். கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்ககாலத் தாய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறும் செய்தியை அறிவோம். ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே * -காவற்பெண்டு கவிநடை உரை எம் |
சிறுகுடிலின் அழகிய தூணைப் பற்றி நின்று என் மகன் எங்கே என்று வினவும் பெண்ணே ! அவனிருக்கும் இடம் யானறியேன் ; புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்ற வயிறு இங்குள்ளது ; ஒருவேளை அவன் போர்க்களத்தில் இருக்கக் கூடும் ! சொல்லும் பொருளும் சிற்றில் கல் அளை பாடலின் பொருள் ( சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று , ' அன்னையே ! உன் மகன் எங்கு உள்ளான் ? ' என்று கேட்டாள். ' சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு , ஏதும் அறியாதவள் போல நீ " உன் மகன் எங்கே ? " என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் |
என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக ' என்று புலவர் பதிலளித்தார். எங்கே பெற்றெடுத்த வயிறு நூல் வெளி காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர் , சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரே ஒரு |
பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை , நாகரிகம் , பண்பாடு , வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. இந்நூலில் 86 - ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் 1. சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக. 2. பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றைப் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ' யாண்டு ' என்னும் சொல்லின் பொருள் அ ) எனது ஆ ) எங்கு |
2. ' யாண்டுளனோ ? ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) யாண்டு + உளனோ ? யாண் + உளனோ ? 3. இ ) எவ்வளவு இ ) யா + உளனோ ? ஈ ) யாண்டு + உனோ ? ' கல் + அளை ' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ ) கல்லளை ஆ ) கல்அளை இ ) கல்லளை குறுவினா தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார் ? சிறுவினா தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக. சிந்தனை வினா தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச்சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன் ? 53 ஈ ) எது ஈ ) கல்லுளை இயல் மூன்று நுழையும்முன் கவிதைப்பேழை பாஞ்சை வளம் |
தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும். அது சமூகக்கதைப் பாடல் , வரலாற்றுக்கதைப் பாடல் , புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும். வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் கதைப்பாடலின் ஒரு பகுதியை அறிவோம். சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன் நாட்டு வளங்களைச் சொல்லுகிறேன் - பாஞ்சைக் கோட்டை வளங்களைக் கேளுமையா கோட்டைகளாம் சுத்துக் கோட்டைகளாம் - மதில் கோட்டைகள்தான் கெட்டி வேலைகளாம் சொல்லும் |
பொருளும் சூரன் பொக்கிஷம் சாஸ்தி விஸ்தாரம் வீட்டிலுயர் மணிமேடைகளாம் – மெத்தை வீடுகளா மதிலோடை களாம் பூட்டுங்கதவுகள் நேர்த்திகளாம் – பணப் பொக்கிஷ வீடும்பார் சாஸ்திகளாம் ஆசார வாசல் அலங்காரம் - துரை ராசன் கட்டபொம்மு சிங்காரம் ராசாதி ராசன் அரண்மனையில் - பாஞ்சை நாட்டரசன் கொலுவீற்றிருந்தான். விந்தையாகத் தெருவீதிகளும் - வெகு விஸ்தாரமாய்க் கடை வாசல்களும் நந்தவனங்களும் சந்தனச் சோலையும் அங்கே நதியும் செந்நெல் கமுகுகளும் , வாரணச் சாலை ஒருபுறமாம் - பரி வளரும் சாலை ஒருபுறமாம் தோரண மேடை ஒருபுறமாம் தெருச் சொக்கட்டான் |
சாரியல்ஒர் புறமாம் சோலையில் மாங்குயில் கூப்பிடுமாம் - வளம் சொல்லி மயில் விளையாடிடுமாம் அன்பு வளர்ந்தேறும் பாஞ்சாலநாட்டில் – சில அதிசயம் சொல்கிறேன் கேளுமையா முயலும் நாயை விரட்டிடுமாம் நல்ல முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே பசுவும் புலியும் ஒரு துறையில் - வந்து பால்குடிக்குந் தண்ணீர் தான் குடிக்கும். கறந்த பாலையுங் காகங் குடியாது - எங்கள் கட்டபொம்மு துரை பேரு சொன்னால் வரந்தருவாளே சக்க தேவி - திரு வாக்கருள் செய்வாளே சக்க தேவி வீரன் செல்வம் மிகுதி பெரும்பரப்பு வாரணம் பரி சிங்காரம் கமுகு யானை ! குதிரை அழகு பாக்கு |
பாடலின் பொருள் குறையில்லாத வீரனாகிய கட்டபொம்மன் இருந்து ஆட்சி செய்யும் பாஞ்சாலங்குறிச்சியின் வளங்களைக் கூறுகின்றேன். அந்நாட்டின் வளத்தையும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் வளத்தையும் கேளுங்கள். அந்நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும். வீடுகள்தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடிவீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தவையாகவும் இருக்கும். |
அரண்மனை வாயில் முறைப்படி அழகுபடுத்தப்பட்டு இருக்கும். அழகு மிகுந்த அரசனாகிய கட்டபொம்மன் அரசவையில் வீற்றிருப்பான். புதுமையான தெருவீதிகளும் பெரும்பரப்பில் அமைந்த கடைகளும் இருக்கும். பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும் பாக்குத் தோப்புகளும் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும். யானைக் கூடமும் குதிரைக் கொட்டிலும் ஒருபுறம் இருக்கும். தோரணங்கள் கட்டப்பட்ட மேடையும் தாயம் ஆடுவதற்கான இடமும் ஒருபுறம் இருக்கும். சோலைகளில் குயில்கள் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும். அன்பு வளரும் நாடாகிய |
பாஞ்சாலங்குறிச்சியில் நிகழும் சில விந்தைகளைச் சொல்கிறேன். வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும். பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும். மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது. சக்கமாதேவி பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருவாக்கு அருள்வாள். நூல் வெளி கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன. அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம் பாடப்பகுதி |
நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. கற்பவை கற்றபின் உங்கள் வீட்டில் உள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக்கதைப் பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க. 27/02/2023 18:30:55 இயல் மூன்று நுழையும்முன் உரைநடை உலகம் தேசியம் காத்த செம்மல் உ.முத்துராமலிங்கத்தேவர் பசும்பொன் தமது தாண்டால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த தலைவர்கள் பலர். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டோர் பலர். சமுதாயப் பணி செய்தோர் பலர். அரசியல் ஒருவரைப் பற்றி அறிவோம். பணி செய்தோர் |
பலர். இவை அனைத்தையும் ஒருசேரச் செய்து புகழ் பெற்ற தலைவர் தேசியம் உடல் , தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர். இவர் ' வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப்பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர் ; உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர் ; சுத்தத் தியாகி ' என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர். இளமைக்காலம் முத்துராமலிங்கத்தேவர் கி.பி. ( பொ.ஆ.பி ) 1908 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முப்பதாம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் |
என்னும் ஊரில் செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். அவருடைய பெற்றோர் உக்கிர பாண்டியத்தேவர் இந்திராணி அம்மையார். இவர் இளமையிலேயே அன்னையை இழந்ததால் இசுலாமியத் தாய் ஒருவரால் பாலூட்டி வளர்க்கப்பட்டார். முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக்கல்வியைக் கமுதியிலும் உயர்நிலைக் கல்வியை மதுரை பசுமலைப் பள்ளியிலும் இராமநாதபுரத்திலும் பயின்றார். இவர் இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருந்தபோது அவ்வூரில் பிளேக் நோய் பரவியதால் அவரது படிப்பு பாதியில் நின்றது. அதன்பிறகு தாமாகவே நிறைய நூல்களைப் படித்துத் தமது அறிவையும் |
ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார். பல்துறை ஆற்றல் முத்துராமலிங்கத்தேவர் தமிழ் , ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். சிலம்பம் , குதிரை ஏற்றம் , துப்பாக்கிச்சுடுதல் , சோதிடம் , மருத்துவம் போன்ற பலதுறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார். முத்துராமலிங்கத்தேவர் இளமையிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். விடுதலைப் போராட்டத்தில் பங்கு முத்துராமலிங்கத்தேவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். தமது பேச்சாற்றலால் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சியை |
ஏற்படுத்தினார். மேடைகளில் அவர் ஆற்றிய வீர உரையைக் கேட்ட மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர். அதனால் அச்சமடைந்த ஆங்கில அரசு பலமுறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது. வடஇந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர். அவரைப்போலவே தென்னாட்டில் அச்சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவர் முத்துராமலிங்கத்தேவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விடுதலை வேட்கையை அறிந்த திரு. |
வி. கலியாணசுந்தரனார் தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியுள்ளார். நேதாஜியுடன் தொடர்பு வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவரைத் தமது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக் கி.பி. ( பொ.ஆ. ) 1939 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஆறாம் நாள் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார். நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர். விடுதலைக்குப்பின் நேதாஜி என்னும் பெயரில் வார |
இதழ் ஒன்றையும் நடத்தினார். பேச்சாற்றல் தமது பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தவர் முத்துராமலிங்கத்தேவர். அவர் முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் மூன்று மணிநேரம் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் பெருந்தலைவர் காமராசரும் இருந்தார். ' இது போன்ற ஒரு பேச்சை இதுவரை நான் கேட்டதில்லை ; முத்துராமலிங்கத்தேவரின் தெரிந்து தெளிவோம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவர் தோன்றி மறைந்த அக்டோபர் முப்பதாம் நாள் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழா |
எடுக்கப்படுகிறது. தமிழகச் சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு சார்பாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்திய நாடளுமன்ற வளாகத்திலும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் 1995 இல் தபால் தலை வெளியிடப்பட்டது. வீரம்மிக்க பேச்சு விடுதலைப் போருக்கு மிகவும் உதவும் ' என்று காமராசர் மகிழ்ந்தார். மேலும் , தலைவர்கள் பலர் முத்துராமலிங்கத்தேவரின் பேச்சாற்றலைப் பாராட்டியுள்ளனர். ' தென்னாட்டுச் சிங்கம் தேவரைச் சொல்லுகிறார்களே , அது சாலப்பொருந்தும் என அவரது முத்துராமலிங்கத்தேவர் |
உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது ; நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம் ' என்று மூதறிஞர் இராஜாஜி பாராட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் இவர் ஆங்கிலத்தில் பேசிய பேச்சு வெள்ளையர் காலத்தில் விட்டல் பாய் , வல்லபபாய் பட்டேல் போன்ற மேதைகள் பேசிய பேச்சைப் போல் இருந்ததாக வடஇந்திய இதழ்கள் பாராட்டின. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளை அனைவரும் பாராட்டினர். தேர்தல் வெற்றிகள் என்று |
தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். அவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது ' என்று அறிஞர் அண்ணாவும் அவரைப் புகழ்ந்துரைத்துள்ளார். மக்களின் பேராதரவு பெற்ற தலைவராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். 1937 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் அரசர் சண்முக ராஜேஸ்வர சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது இலண்டனில் பாரிஸ்டருக்குப் படித்துவந்த தோழர் கே. டி. கே. தங்கமணி , ' இந்தியத் தேர்தலில் இராமநாதபுரம் மன்னரை எதிர்த்துப் போட்டியிட்ட தேவர் அவர்களின் |
வெற்றியையும் பொப்பிலி அரசரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.வி.கிரி அவர்களின் வெற்றியையுமே இந்திய மாணவர்கள் எதிர்பார்த்திருந்தோம் ' எனக் குறிப்பிட்டிருந்தார். 1946 இல் போட்டியின்றி வெற்றிபெற்றார். 1952 , 1957 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற , நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். 1962 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக , பரப்புரை செய்ய இயலாதபோதிலும் தேர்தலில் வெற்றிபெற்றார். குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு ஆங்கில ஆட்சியில் மக்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு |
வரப்பட்டது குற்றப்பரம்பரைச் சட்டம் ஆகும். பிறப்பாலேயே ஒருவரைக் குற்றவாளியாகக் கருதும் அச்சட்டத்தை நீக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பலவேறு போராட்டங்களை நடத்தினார் முத்துராமலிங்கத்தேவர். 1934 ஆம் ஆண்டு மே 12 , 13 ஆகிய தேதிகளில் கமுதியில் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். அவரது தொடர் போராட்டத்தால் 1948 ஆம் ஆண்டு அச்சட்டம் நீக்கப்பட்டது. பேச்சு ஆலய நுழைவுப் போராட்டம் அக்காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல ஒரு சாராருக்குத் தடை இருந்தது. அத்தடையை எதிர்த்து 1939 ஆம் ஆண்டு ஜூலைத் |
திங்கள் எட்டாம் நாள் மதுரை வைத்தியநாத ஐயர் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். அதனை எதிர்த்து அர்ச்சகர்கள் ஆலயப்பணியைப் புறக்கணித்தனர். தேவர் திருச்சுழியில் இருந்து அர்ச்சகர்கள் இருவரை அழைத்துவந்து ஆலய நுழைவுப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்தார். விவசாயிகள் தோழர் ஜமீன் விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தி விவசாயிகள் துயர்துடைக்கப் பாடுபட்டார். உழுபவர்களுக்கே நிலம் என்றார். தமக்குச் சொந்தமாக 31 சிற்றூர்களில் இருந்த விளைநிலங்களைக் குத்தகை இல்லாமல் உழுபவர்க்கே பங்கிட்டுக் கொடுத்தார். அவற்றை ஒடுக்கப்பட்ட |
மக்களுக்கும் அளித்து மகிழ்ந்தார். கூட்டுறவுச் சிந்தனையாளர் கமுதியில் வியாபாரிகள் விவசாய உற்பத்திப் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். பாரதமாதா கூட்டுறவுப் பண்டகசாலையை ஏற்படுத்தி விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்கச்செய்தார். தொழிலாளர் தலைவர் 1938 காலக்கட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார். மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப. ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் |
நடத்தினார். அதற்காக ஏழு திங்கள் சிறைத் தண்டனை பெற்றார். உழவர்களின் நலன் காக்க இராஜபாளையத்தில் மிகப் பெரிய அளவிலான மாநாடு ஒன்றை நடத்தினார். பெண்தொழிலாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வேண்டும் என்று போராடினார். சிறை வாசம் சுதந்திரப் போராட்டத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அலிப்பூர் , அமராவதி , தாமோ , கல்கத்தா , சென்னை , வேலூர் போன்ற சிறைகளில் சிறைவைக்கப்பட்டிருந்தார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மத்திய பிரதேசத்தின் தாமோ என்னும் நகரில் உள்ள இராணுவச்சிறையில் |
அடைக்கப்பட்டுப் போர் முடிந்தபிறகுதான் விடுதலை செய்யப்பட்டார். தெரிந்து தெளிவோம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இம்மண்ணுலகில் வாழ்ந்த நாள்கள் 20,075. சுதந்திரப் போராட்டத்திற்காகச் சிறையில் கழித்த நாள்கள் 4000. தம் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்த தியாகச் செம்மல் முத்துராமலிங்கத்தேவர் ஆவார். தெரிந்து தெளிவோம் முத்துராமலிங்கத்தேவரின் சிறப்புப் பெயர்கள் தேசியம் காத்த செம்மல் , வித்யா பாஸ்கர் , பிரவசன கேசரி , சன்மார்க்க சண்டமாருதம் , இந்து புத்தசமய மேதை. பெண்களைத் தெய்வமாக மதித்துப் போற்றியவர் |
தேவர் 1936,1955 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை பர்மா சென்றிருந்தார். பர்மாவில் புத்த பிட்சுகளில் உயர்ந்தவர்களுக்குப் பெண்கள் தங்கள் கூந்தலை நடைபாதையாக விரித்து வரவேற்பு அளிப்பது வழக்கம். தேவர் பர்மா சென்றிருந்தபோது அவருக்கும் அத்தகைய வரவேற்பு அளிக்க முன்வந்தனர். " இது பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது " என்று கூறி , அதனை ஏற்க மறுத்துவிட்டார். நாடு போற்றும் நன்மகன் பொதுத்தொண்டுக்கு இடையூறாக இருக்கும் எனக் கருதித் திருமணம் செய்துகொள்ளாமல் தியாக வாழ்வு வாழ்ந்தார் முத்துராமலிங்கத்தேவர். அவர் விவேகானந்தரின் தூதராக , |
நேதாஜியின் தளபதியாக , சத்தியசீலராக , முருகபக்தராக , ஆன்மிகப் புத்திரராக , தமிழ்பாடும் சித்தராக , தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக , நீதிவழுவா நேர்மையாளராக , புலமையில் கபிலராக , வலிமையில் கரிகாலனாக , கொடையில் கர்ணனாக , பக்தியில் பரமஹம்சராக , இந்தியத் தாயின் நன்மகனாக விளங்கினார். இத்தகைய பெருமை வாய்ந்த முத்துராமலிங்கத்தேவர் கி.பி. ( பொ.ஆ. ) 1963 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முப்பதாம் நாளில் இவ்வுலகை விட்டு நீங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். கற்பவை கற்றபின் நாட்டுக்கு உழைத்த சிறந்த பிற தலைவர்களைப் |
பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ஆ ) காரைக்குடி இ ) சாயல்குடி அ ) தூத்துக்குடி 2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர் அ ) இராஜாஜி ஆ ) நேதாஜி இ ) காந்திஜி ஈ ) நேருஜி 3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் அ ) இராஜாஜி குறுவினா 1. 2. பெரியார் இ ) திரு.வி.க. ஈ ) மன்னார்குடி முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது ? முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு |
வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடைவிதிக்கப்படக் காரணம் யாது ? 3. முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக. சிறு வினா ஈ ) நேதாஜி 1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புபற்றி எழுதுக. 2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை ? சிந்தனை வினா சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள் ? 62 இயல் மூன்று நுழையும்முன் தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் |
சிதம்பரனார். அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி , நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரனார். ஒரு நாள் மாலைப்பொழுது துறைமுகத்தின் அருகே உலாவச் சென்றார். பழைய நினைவுகள் எல்லாம் அவர் மனத்திலே படர்ந்தன. அக்கடற்கரையில் நின்று அவர் பேசியிருந்தால் என்ன |
பேசியிருப்பார் ? இதோ அவர் வாயாலேயே கேட்போம் ! விரிவானம் கப்பலோட்டிய தமிழர் " தென்னாட்டுத் துறைமுகமே ! முந்நூறு ஆண்டுகளாக நீயே இம்முத்துக் கரையில் முதன்மை பெற்று விளங்குகின்றாய் ! முன்னாளில் வளமுற்றிருந்த கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் நீயே என்று உணர்ந்து உன்னை வணங்குகின்றேன் ; வாழ்த்து கின்றேன். ஆயினும் , அக்காலத் துறைமுகத்தின் மாட்சியையும் இக்காலத்தில் காணும் காட்சியையும் நினைத்துப் பார்க்கும் பொழுது என் நெஞ்சம் குமுறுகின்றதே ! பார் அறிந்த கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி உயர்ந்து |
பறந்தது. கொற்கைக்கடல் முத்துவளம் கொழித்தது. பழங்குடிகளாகிய பரதவர் மரக்கல வணிகத்தால் வளம்பெற்று மாடமாளிகையில் வாழ்ந்தார்கள். இது , சென்ற காலத்தின் சிறப்பு. இன்று , மீனக்கொடி எங்கே ? ஆங்கில நாட்டுக் கொடியன்றோ இங்குப் பறக்கின்றது ? பரங்கியர் கப்பலன்றோ எங்கும் பறந்து திரிகின்றது ? கொள்ளை இலாபம் அடைகின்ற வெள்ளையர் கப்பலில் , கூலி வேலை செய்கின்றனர் நம் நாட்டு மக்கள் ! சொந்த நாட்டிலே வந்தவருக்கு அடிமைசெய்து வயிறு வளர்ப்பது ஒரு வாழ்வாகுமா ? வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் வாய்மொழியை மறக்கலாமா ? வளமார்ந்த |
துறைமுகமே ! இந்த வசையை ஒழிப்பதற்காக இந்நகரில் சுதேசக் கப்பல் கம்பெனி ஒன்று உருவாயிற்று. பாரதநாட்டுச் செல்வரும் அறிஞரும் அந்தக் கம்பெனியில் பங்குகொண்டார்கள். பழங்காலப் பாண்டியரைப் போல் மதுரை மாநகரிலே தமிழ்ச் சங்கம் அமைத்துப் புலவர் பாடும் புகழ் உடையவராய் விளங்கிய பாண்டித்துரையார் அக்கம்பெனியின் தலைவர் ஆயினார். அதன் செயலாளனாக அமைந்து பணி செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது. கம்பெனியார் வாங்கிய சுதேசக் கப்பல் உன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அக்கப்பல் இங்கிருந்து கொழும்புத் துறையை நோக்கிப் |
புறப்பட்ட நாளில் , இன்ப வெள்ளம் என் உள்ளத்திலே பொங்கி எழுந்தது ; கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. வாணிக மாமணியே ! அன்றுமுதல் சுதேசக் கப்பல் வாணிகம் வளர்ந்தது ; வெள்ளையர் வாணிகம் தளர்ந்தது. அதுகண்டு அவர் உள்ளம் எரிந்தது. வெறுக்கத்தக்க சூழ்ச்சிகளை அன்னார் கையாளத் தலைப்பட்டனர் ; சுதேசக் கம்பெனி வேலையினின்றும் நான் விலகிக்கொண்டால் நூறாயிரம் ரூபாய் கையடக்கம் தருவதாக மறைமுகமாகக் கூறினர். எனக்கு உற்ற துணையாக நின்று ஊக்கம் தந்த நண்பர்களைப் பலவாறு பயமுறுத்தினர் ; இவையெல்லாம் பயனற்று ஒழிந்த நிலையிலே அடக்குமுறையைக் |
கையாளக் கருதி அரசாங்கத்தின் உதவியை நாடினர். பரங்கியர் ஆளும் துறையே ! ஆங்கில அரசாங்கம் சர்வ வல்லமையுடையது என்றும் , அதை அசைக்க எவராலும் ஆகாதென்றும் அப்போது பொதுமக்கள் எண்ணியிருந்தார்கள். அதனால் அடிமைத்தனம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்நாட்டு மக்களிடையே வளர்ந்தது. துரைத்தனத்தார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசாமல் , ' சார் , சார் ' என்று சலாமிட்டும் , ' புத்தி , புத்தி ' என்று வாய் பொத்திச் ' சரி , சரி ' எனச் சம்மதித்துத் தாளம் போடும் போலி அறிஞர்கள் , பட்டங்களும் பதவிகளும் பெற்று உயர்ந்தார்கள். |
அரசாங்கம் ஆட்டுவித்தால் அப்பதுமைகள் ஆடும் ; எப்போதும் , ' அரசு வாழ்க ' என்று பாடும். இத்தகைய சூழ்நிலையிலே எழுந்தது சுதந்தர நாதம் ! வந்தே மாதரம் என்ற சுதேச மந்திரம் வங்க நாட்டிலே பிறந்தது ; காட்டுக்கனல் போல் எங்கும் பரவிற்று. சுதந்தரம் எனது பிறப்புரிமை ; அதை அடைந்தே தீருவேன் என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றார் மராட்டிய வீரர் ஒருவர். அவரே பாரதநாடு போற்றும் பாலகங்காதர திலகர். தென்னாட்டிலே தோன்றினார் நாவீறுடைய நண்பர் பாரதியார். அவர் அஞ்சாத நெஞ்சினர். செஞ்சொற்கவிஞர் ; வந்தே மாதரம் என்போம் , எங்கள் மாநிலத்தாயை |
வணங்குதும் என்போம் என்று அழகிய பாட்டிசைத்து , நாட்டிலே ஆர்வத்தைத் தட்டி எழுப்பினார். தெரிந்து தெளிவோம் ' சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் , பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும் ' சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று. புதுமைகண்ட துறைமுகமே ! அந்நாளில் வந்தேமாதரம் என்றால் வந்தது தொல்லை. அந்த வாசகத்தில் ஒரு வஞ்சகம் இருப்பதாக ஆங்கில அரசாங்கம் கருதிற்று. பொதுக்கூட்டங்களிலும் |
தொழிலாளர் கூட்டங்களிலும் நான் பேசும்பொழுது ' வந்தே மாதர'த்தை அழுத்தமாகச் சொல்வது வழக்கம். அதைக்கேட்டு நாட்டு மக்கள் ஊக்கமுற்றார்கள் ; உணர்ச்சி பெற்றார்கள். உள்ளதைச் சொன்னால் கள்ளமுடையவர் உள்ளம் எரியும் அல்லவா ? எரிவுற்ற அரசாங்கம் என்னை எதிரியாகக் கருதிற்று ; என் மீது பல வகையான குற்றம் சாட்டிற்று. நாட்டின் அமைதியை நான் கெடுத்தேனாம் ! நல்ல முதலாளிமாருக்குத் தொல்லை வெள்ளையர் மீது வெறுப்பை ஊட்டினேனாம் ! வீரசுதந்திரம் பெற வழிகாட்டினேனாம் ! கொடுத்தேனாம் ! வெள்ளையர் கோர்ட்டிலே இக்குற்ற விசாரணை விறுவிறுப்பாக |
நடந்தது. இரட்டைத் தீவாந்தர தண்டனை எனக்கு விதிக்கப்பட்டது. அப்பீல் கோர்ட்டிலே சிறைத் தண்டனையாக மாறிற்று அத்தீர்ப்பு. ஆறாண்டு கோவைச் சிறையிலும் கண்ணனூர்ச் சிறையிலும் கொடும்பணி செய்தேன். என் உடல் சலித்தது. ஆயினும் , உள்ளம் ஒருநாளும் தளர்ந்ததில்லை ; சிறைச்சாலையை தவச்சாலையாக நான் கருதினேன் ; கைவருந்த மெய் வருத்தச் செய்த பணிகள் எல்லாம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் புரிந்த அருந்தவம் என்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தேன். சிறையில் சிதம்பரனார் இழுத்த செக்கு செல்வச் செழுந்துறையே ! சிறைச்சாலையில் என்னைக் கண்காணித்தவர் பலர். |
கடும்பணி இட்டவர் பலர். அவரை நான் எந்நாளும் வெறுத்ததில்லை. ஆனால் , முறைதவறி நடந்தவர்களை எதிர்த்தேன். வரைதவறிப் பேசியவர்களை வாயால் அடக்கினேன். ஒரு நாள் மாலைப்பொழுது ; உடல் நலிந்து , உள்ளம் தளர்ந்து சிறைக்கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். அங்கே வந்தான் ஒரு ஜெயிலர் ; அதிகாரத் தோரணையில் நீட்டி நிமிர்ந்து நின்றுகொண்டு எனக்குச் சில புத்திமதிகளைச் சொல்லத் தொடங்கினான். அப்போது என் மனத்தில் கோபம் பொங்கி எழுந்தது. ' அடே மடையா ! நீயா எனக்குப் புத்திமதி சொல்பவன் ? மூடு வாயை ! உனக்கும் உன் அப்பனுக்கும் புத்தி சொல்வேன் நான். |
உன்னுடைய கவர்னருக்கும் மன்னருக்கும் புத்தி சொல்வேன் நான் ' என்று வேகமுறப் பேசினேன். மானமிழந்து வாயிலிலிருந்து மறைந்தான் ஜெயிலர். தமிழ்ப் பெருந்துறையே ! உன் தாழ்விலும் வாழ்விலும் எந்த நாளிலும் என் தமிழ்த் தாயை நான் மறந்தறியேன். இந்த நகரத்தில் வக்கீல் வேலை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் வள்ளல் பாண்டித்துரையோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றேன். அதனால் நான் அடைந்த நன்மைக்கு ஓர் அளவில்லை. சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழன்றோ ? கைத்தோல் உரியக் கடும்பணி புரிந்தபோது என் கண்ணீரை மாற்றியது |
கன்னித் தமிழன்றோ ? தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களையெல்லாம் வென்றேன். ஆங்கில மொழியில் ஆலன் என்பவர் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்று தமிழில் மொழிபெயர்த்தேன். உயர்ந்த நூல்களில் கண்ட உண்மைகளை இளைஞரும் எளிதில் அறிந்து கொள்ளுமாறு மெய்யறிவு , மெய்யறம் என்ற சிறு நூல்களை இயற்றினேன். இவற்றை என் தமிழ்த்தாயின் திருவடிகளில் கையுறையாக வைத்தேன். சிறையில் இருந்து இயற்றிய நூல்களையும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு செந்தமிழ்த்தாயின் திருவருளை |
வேண்டுகிறேன். வருங்காலப் பெருவாழ்வே ! காலம் கடிது சென்றது. என் சிறைவாழ்வு முடிந்தது. இந்நகரை வந்தடைந்தேன். என் அருமைக் குழந்தைகளைக் கண்டு ஆனந்தமுற்றேன். ஆயினும் என் ஆசைக்குழந்தையை - தேசக் கப்பலை இத்துறைமுகத்தில் காணாது ஆறாத் துயருற்றேன். ' பட்ட பாடெல்லாம் பயனற்றுப் போயிற்றே ' என்று பரிதவித்தேன். ' என்று வருமோ நற்காலம் ' என்று ஏங்கினேன். இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் சுதந்தரம் வந்தே தீரும். வீரசுதந்தர வெள்ளம் புறப்பட்டு விட்டது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் ஆகும் பாரதநாட்டிலே ? பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் |
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம் என்று நாம் பாடும் நாள் எந்நாளோ ? " என்று உருக்கமாகப் பேசிக் கடற்கரையை விட்டு அகன்றார் வீர சிதம்பரனார். நூல் வெளி இரா.பி.சேது தமிழறிஞர் , எழுத்தாளர் , வழக்குரைஞர் , மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர். செய்யுளுக்கே உரிய எதுகை , மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர். இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும். ஆற்றங்கரையினிலே , கடற்கரையினிலே , தமிழ் விருந்து , |
தமிழகம்- ஊரும் பேரும் , மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் பாரதியார் , கொடிகாத்த குமரன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவராக உங்களைக் கற்பனை செய்து கொண்டு வகுப்பில் உரையாற்றுக. * மதிப்பீடு வ.உ. சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக. இயல் மூன்று எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை |
என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ , அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர். இயல்பு வழக்கு , தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும். கற்கண்டு 9 வழக்கு இயல்பு வழக்கு ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். 1. இலக்கணமுடையது 2. இலக்கணப்போலி 3.மரூஉ 1. இலக்கணமுடையது நிலம் , மரம் , வான் , எழுது ஆகிய சொற்களை நோக்குங்கள். இவை தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன. இவ்வாறு இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் |
இலக்கணமுடையது ஆகும். 2. இலக்கணப்போலி இல்லத்தின் முன் பகுதியை இல்முன் எனக் குறிக்க வேண்டும். ஆனால் அதனை நம் முன்னோர் முன்றில் என மாற்றி வழங்கினர். கிளையின் நுனியைக் கிளைநுனி எனக் கூறாமல் நுனிக்கிளை எனக் குறிப்பிடுகிறோம். இவ்வாறு இலக்கண முறைப்படி அமையாவிடினும் , இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும். தெரிந்து தெளிவோம் இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும். எனவே , இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர். |
வாயில் - வாசல் இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் ( இல்லத்தின் வாய் ) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும். வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும். ( எ.கா. ) புறநகர் , கால்வாய் , தசை , கடைக்கண். 3. மரூஉ நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை. தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும் , திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து |
பிறழ்ந்து , சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும். ( எ.கா. ) - கோவை , குடந்தை , எந்தை , போது , சோணாடு தகுதி வழக்கு ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும். தகுதி வழக்கு மூன்று வகைப்படும். 1. இடக்கரடக்கல் 2. மங்கலம் 3. குழூஉக்குறி 1. இடக்கரடக்கல் பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும். ( எ.கா. ) கால் கழுவி வந்தான். குழந்தை வெளியே போய்விட்டது. ஒன்றுக்குப் போய் வந்தேன். |
2. மங்கலம் செத்தார் என்பது மங்கலமில்லாத சொல் என நம் முன்னோர் கருதினர். எனவே , செத்தார் எனக் குறிப்பிடாமல் துஞ்சினார் எனக் குறிப்பட்டனர். நாம் இக்காலத்தில் இயற்கை எய்தினார் என்று குறிப்பிடுகிறோம். இவ்வாறு மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர். ( எ.கா. ) ஓலை - திருமுகம் கறுப்பு ஆடு வெள்ளாடு விளக்கை அணை - விளக்கைக் குளிரவை சுடுகாடு -நன்காடு 3. குழூஉக்குறி பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத |
வகையில் சொற்களைப் பயன்படுத்துவர். இவ்வாறு ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும். ( எ.கா. ) பொன்னைப் பறி எனல் ( பொற்கொல்லர் பயன்படுத்துவது ) ஆடையைக் காரை எனல் ( யானைப்பாகர் பயன்படுத்துவது ) தெரிந்து தெளிவோம் இப்படியும் கூறலாம் இடக்கரடக்கல் , மங்கலம் , குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும். * நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல் • மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் |
குறிப்பிடுதல் மங்கலம் * பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் குழூஉக்குறி போலி அறம் செய விரும்பு- இஃது ஔவையார் வாக்கு. அறன் வலியுறுத்தல் என்பது திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று. இத்தொடர்களில் அறம் , அறன் ஆகிய சொற்களில் ஓர் எழுத்து மாறியுள்ளது. ஆனால் பொருள் மாறுபடவில்லை. இவ்வாறு சொல்லின் முதலிலோ , இடையிலோ , இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும். போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து |
தோன்றியது. போலி மூன்று வகைப்படும். 1. முதற்போலி 2. இடைப்போலி 3. கடைப்போலி 1. முதற்போலி பசல் – பைசல் , மஞ்சு- மைஞ்சு , மயல்- மையல் ஆகிய சொற்களில் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும். 2. இடைப்போலி அமச்சு – அமைச்சு , இலஞ்சி இலைஞ்சி , அரயர்- அரையர் ஆகிய சொற்களில் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறவில்லை. இவ்வாறு சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் |
எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும். கேட்க. மொழியை ஆள்வோம் ! பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேச்சின் ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க. கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக. 1. தேசியம் காத்த செம்மல் 2. கப்பலோட்டிய தமிழர் சொல்லக் கேட்டு எழுதுக. 1. அவன் எங்குள்ளான் என எனக்குத் தெரியவில்லை. 2. வீடுகள்தோறும் மணிகளால் அழகுசெய்யப்பட்ட மேடைகள் இருக்கும். 3. தெய்வீகத்தையும் தேசியத்தையும் தமது இரு அறிந்து பயன்படுத்துவோம். ஒரு தொடரில் மூன்று பகுதிகள் இடம்பெறும். அவை 1. எழுவாய் 2. பயனிலை |
3. செயப்படுபொருள் முத்துராமலிங்கத்தேவர். தொல்காப்பியத்தைப் படித்துத் தொல்லையெல்லாம் மறந்தேன். 5. இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும். ஒரு தொடரில் யார் ? எது ? எவை ? என்னும் வினாக்களுக்கு விடையாக எழுவாய். ( எ.கா. ) நீலன் பாடத்தைப் படித்தான். பாரி யார் ? புலி ஒரு விலங்கு. இத்தொடர்களில் நீலன் , பாரி , புலி ஆகியன எழுவாய்கள். கண்களாகக் கருதியவர் ஒரு தொடரை வினை , வினா , பெயர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடித்து வைப்பது பயனிலை. ( எ.கா. ) கரிகாலன் கல்லணையைக் கட்டினான். கரிகாலன் யார் ? |
கரிகாலன் ஒரு மன்னன். இத்தொடர்களில் கட்டினான் , யார் , மன்னன் ஆகியன பயனிலைகள். 71 அமைவது இயல் நான்கு அறிவியல் ஆக்கம் கற்றல் நோக்கங்கள் சங்கப் பாடல்களைச் சீர்பிரித்துப் படிக்கும் திறனும் கருத்தை உணரும் திறனும் பெறுதல் தமிழர்களின் கப்பல் கட்டும் தொழில்நுட்ப முறையை இலக்கியங்கள் வழி அறிந்து வியத்தல் மொழிபெயர்ப்புப் புதினத்தைப் படித்தறிந்து , கதையைச் சுருக்கமாகச் சுவைபட எடுத்துரைத்தல் மொழியில் பயன்படுத்தப்படும் இலக்கிய வகைச் சொற்களைக் கண்டறிதல் சொல்லும் பொருளும் உரு அழகு போழ பிளக்க வங்கூழ் நீகான் காற்று நாவாய் |
ஓட்டுபவன் பாடலின் பொருள் உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு பொருந்திய தோற்றத்தை உ டயது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும். உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான். வங்கம் எல் கோடு உயர் மாட ஒள்ளெரி தெரிந்து தெளிவோம் 1. நற்றிணை 2. குறுந்தொகை நூல் வெளி மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். |
கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே. மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. 3. ஐங்குறுநூறு 4. பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்கள் கற்பவை கற்றபின் கப்பல் பகல் கரை உயர்ந்த கலங்கரை விளக்கம் 5. பரிபாடல் 6. கலித்தொகை 7. அகநானூறு 8. புறநானூறு 1. கடலில் கிடைக்கும் |
பொருள்களின் பெயர்களைத் தொகுக்க. 2. கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றை அறிந்துவந்து வகுப்பறையில் பகிர்க. I இயல் நான்கு பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு. பயணம் தரைவழிப் பயணம் , நீர்வழிப் பயணம் , வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும். நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம் , கடல்வழிப் பயணம் என இருவகைப்படுத்தலாம். வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே ! கப்பல் கட்டுவதும் கப்பலைச் செலுத்துவதும் மிகச் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த கலைகள் |
ஆகும். கப்பலைப் பார்ப்பதும் கப்பலில் பயணம் செய்வதும் மட்டுமல்லாமல் கப்பலைப் பற்றிப் படிப்பதும் உள்ளத்திற்கு உவகை தரும். நுழையும்முன் -ரைநடை உலகம் தமிழரின் கப்பற்கலை மழை என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வருவது காகிதக் கப்பல். மழை நீரில் காகிதக் கப்பல் விட்டு விளையாடாத குழந்தைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நம் ஆழ்மனத்தில் கப்பல் இடம் பெற்றுள்ளது. பழங்காலம் முதல் தமிழர்கள் கப்பல் கட்டும் கலையில் சிறந்திருந்ததன் மரபுத் தொடர்ச்சி என்று இதனைக் கூறலாம். தமிழர்கள் கப்பல்களைக் கட்டினர் என்பதற்கும் கப்பல் மூலம் |
வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கும் நம் இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே மிகவும் பழமையானது தொல்காப்பியம். அந்நூல் முந்நீர் வழக்கம் என்று கடற்பயணத்தைக் குறிப்பிடுகிறது. எனவே , தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் கடல் பயணம் செய்துள்ளனர் என்பதை அறியலாம். 82 I கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து ( குறள் 496 ) என்னும் திருக்குறள் , திருவள்ளுவர் காலத்திலேயே பெரிய கப்பல்கள் இருந்தன என்பதற்குச் சான்றாகும். பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் |
மூலம் பொருள்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதைப் பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது. உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்- ( பாடல் 255 ) என்று பெரிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது. இதனையே பதிற்றுப்பத்து என்னும் நூலும் , " அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம் " ( பாடல் 52 ) என்று குறிப்பிடுகிறது. சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துபட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை உணரலாம். |
நீர்வழிப் பயணத் தொடக்கம் நீர்நிலைகளில் மரக்கிளைகள் மிதந்து செல்வதையும் அவற்றின்மீது பறவைகள் , தவளைகள் முதலியன அமர்ந்து செல்வதையும் பழங்கால மனிதன் கண்டான். நீரில் மிதக்கும் பொருட்களின் மீது தானும் ஏறிப் பயணம் செய்ய முடியும் என அவன் உணர்ந்தான். மிதக்கும் மரக்கட்டைகள் மீது ஏறி அமர்ந்து சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தொடங்கினான். மீன்கள் தம் உடலின் இரு பக்கங்களிலும் உள்ள துடுப்புப் போன்ற பகுதிகளைப் பயன்படுத்தித் தண்ணீரைப் பின்னுக்குத் தள்ளி நீந்துவதைக் கண்டான். தானும் மரத்துண்டுகளைத் துடுப்புகளாகப் பயன்படுத்தத் |
தொடங்கினான். பிறகு மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி அவற்றின் மீது ஏறிப் பயணம் செய்தான். அவையே இன்றுவரை வழக்கத்தில் உள்ள கட்டுமரங்கள் ஆகும். அதன் பின்னர் எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்துவிட்டுத் தோணியாகப் பயன்படுத்தினான். உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன. தமிழர்கள் தோணி , ஓடம் , படகு , புணை , மிதவை , தெப்பம் போன்றவற்றைச் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர். கலம் , வங்கம் , நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டனர். |
தெரிந்து தெளிவோம் நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். பிற்காலச் சோழர்களில் இராசராச சோழனும் , இராசேந்திர சோழனும் பெரிய கப்பற்படையைக் கொண்டு பல நாடுகளை வென்றனர் என்பதை வரலாறு பகர்கிறது. கப்பல் கட்டும் கலை தமிழர்கள் முற்காலத்திலேயே கப்பல் கட்டும் கலையை நன்கு அறிந்திருந்தனர். கப்பல் கட்டும் கலைஞர்கள் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர். |
இதனைக் , " கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய் " ( காதை 25 , அடி 124 ) என்னும் மணிமேகலை அடியால் அறியலாம். பெருந்திரளான மக்களையும் பொருள்களையும் ஏற்றிச் செல்லும் வகையில் பெரிய கப்பல்களைத் தமிழர் உருவாக்கினர். நீண்ட தூரம் கடலிலேயே செல்ல வேண்டி இருந்ததால் கப்பல்களைப் பாதுகாப்பானவையாகவும் வலிமை மிக்கவையாகவும் உருவாக்கினர். கப்பல் கட்டுவதற்கு உரிய மரங்களைத் தேர்ந்தெடுப்பதில் தமிழர்கள் மிகுந்த கவனம் செலுத்தினர். கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு அடையாத மரங்களையே கப்பல் கட்டப் பயன்படுத்தினர். |
நீர்மட்ட வைப்பிற்கு வேம்பு , இலுப்பை , புன்னை , நாவல் போன்ற மரங்களைப் பயன்படுத்தினர். பக்கங்களுக்குத் தேக்கு , வெண்தேக்கு போன்ற மரங்களைப் பயன்படுத்தினர். மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை வெட்டுவாய் என்பர். அதன் நிறத்தைக் கொண்டு மரத்தின் தன்மையை அறிவர். கண்ணடை என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ஆகும். மேலும் சுழி உள்ள மரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்தனர். நீளம் , அகலம் , உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்கினர். இவற்றைத் தச்சுமுழம் என்னும் நீட்டலளவையால் கணக்கிட்டனர். பெரிய |
படகுகளில் முன்பக்கத்தை யானை , குதிரை , அன்னம் முதலியவற்றின் தலையைப் போன்று வடிவமைப்பதும் உண்டு. கரிமுக அம்பி , பரிமுக அம்பி என்றெல்லாம் இவை அழைக்கப்பட்டன. மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்கும்போது அவற்றுக்கு இடையே தேங்காய் நார் , பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர். சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல்கள் பழுதடையாமல் நெடுங்காலம் உழைத்தன. இம்முறையை இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோபோலோ என்னும் கடற்பயணி |
வியந்து பாராட்டியுள்ளார். இரும்பு ஆணிகள் துருப்பிடித்துவிடும் என்பதால் மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர். இந்த ஆணிகளைத் தொகுதி என்பர். பாய்மரக் கப்பல்கள் தெரிந்து தெளிவோம் ' ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை " என்று வாக்கர் என்னும் ஆங்கிலேயர் கூறியுள்ளார். காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. பெரிய பாய்மரம் , திருக்கைத்திப் பாய்மரம் |
, காணப் பாய்மரம் , கோசுப் பாய்மரம் போன்ற பலவகையான பாய்மரங்களைத் தமிழர் பயன்படுத்தினர். பாய்மரங்களைக் கட்டும் கயிறுகளும் பல வகையாக இருந்தன. ஆஞ்சான் கயிறு , தாம்பாங்கயிறு , வேடாங்கயிறு , பளிங்கைக் கயிறு , மூட்டங்கயிறு , இளங்கயிறு , கோடிப்பாய்க்கயிறு என்பவை அவற்றுள் சில. பாய்மரக் கப்பலின் பாய் , கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று பரிபாடல் கூறுகிறது. கப்பலின் உறுப்புகள் கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது. எரா , பருமல் , வங்கு , கூம்பு , பாய்மரம் , சுக்கான் , |
நங்கூரம் போன்றவை கப்பலின் உறுப்புகளுள் சிலவாகும். கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் எரா எனப்படும். குறுக்கு மரத்தைப் பருமல் என்பர். கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் முதன்மையான கருவி சுக்கான் எனப்படும். கப்பலை நிலையாக ஓரிடத்தில் நிறுத்தி வைக்க உதவும் உறுப்பு நங்கூரம் ஆகும். சமுக்கு என்னும் ஒரு கருவியையும் கப்பல்களில் பயன்படுத்தினர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. இது காந்த ஊசி பொருத்தப்பட்ட திசைகாட்டும் கருவியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் |
கருதுகின்றனர். கப்பல் செலுத்துபவரை மாலுமி , மீகாமன் , நீகான் , கப்பலோட்டி முதலிய பல பெயர்களால் அழைப்பர். கப்பலைச் செலுத்தும் முறை காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். இவ்வுண்மையை , * நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக " ( பாடல் 66 ) என்னும் புறப்பாடல் அடிகளில் வெண்ணிக்குயத்தியார் குறிப்பிடுகிறார். கடலில் காற்று வீசும் திசை , கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் தம் பட்டறிவால் நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான |
திசையில் கப்பலைச் செலுத்தினர். திசைகாட்டும் கருவியைப் பயன்படுத்தியும் வானில் தோன்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர். கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர். கோள்களின் நிலையை வைத்துப் புயல் , மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல்நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர். கலங்கரை விளக்கம் கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் வேட்டையாடுவதில் வல்லவரான நெட் என்ற வீரரும் அக்கப்பலில் இருந்தார். |
நானும் எனது உதவியாளர் கான்சீலும் அக்கப்பலில் சென்றோம். மூன்று மாதங்கள் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள பெருங்கடல் பரப்பில் ஓர் இடம் விடாமல் தேடினோம். அந்த விலங்கு எங்கள் கண்ணில் படவே இல்லை. எனவே , கப்பல் எங்கள் நகரத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியது. அப்பொழுது பளபளப்பான உடலைக் கொண்ட அந்த விலங்கு மிக வேகமாக எங்கள் கப்பலை நோக்கி வந்தது. " அந்த விலங்கைச் சுட்டுத் தள்ளுங்கள் " என்று கப்பல் தலைவர் ஃபராகட் கட்டளையிட்டார். வீரர்கள் சுடத் தொடங்கினர். பீரங்கிக் குண்டுகள் அனைத்தும் அந்த விலங்கின் உடலைத் |
துளைக்க முடியாமல் தெறித்து விழுந்தன. நெட் வலிமை வாய்ந்த ஈட்டிகளை எய்தார். அவற்றாலும் அவ்விலங்கை எதுவும் செய்யமுடியவில்லை. அந்த விலங்கு நீரைப் பீய்ச்சியடித்தபடி எங்கள் கப்பலின் மீது வேகமாக மோதியது. நாங்கள் கப்பலிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டோம். நான் அப்படியே மயக்கமடைந்து போனேன். நான் கண்விழித்தபோது உலோகத்தினாலான அந்தக் கொடிய விலங்கின் மீது படுத்திருந்தேன். எனக்கு முன்னால் எனது உதவியாளர் கான்சீலும் நெட்டும் அமர்ந்திருந்தனர். " நாம் தேடிவந்த விலங்கு இதுதான். உண்மையில் இஃது ஒரு நீர்மூழ்கிக் கப்பல் " என்றார் |
நெட். நாங்கள் அந்த நீர்மூழ்கிக் கப்பலின் மீது வேகமாகத் தட்டி உள்ளே இருப்பவர்களை உதவிக்கு அழைத்தோம். நீண்ட நேரத்திற்குப் பிறகு மேல்பக்கத்தில் இருந்த மூடி திறக்கப்பட்டது. உள்ளே இருந்து வந்தவர்கள் எங்கள் மூவரையும் சிறைப்பிடித்து ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டினர். மறுநாள் காலை கப்பல் தலைவர் எங்கள் அறைக்குள் வந்தார். தமது பெயர் நெமோ என்று அவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். " நாட்டிலஸ் என்னும் இந்த நீர்மூழ்கிக் கப்பலை ஒரு விந்தையான விலங்கு என்று நான் எல்லோரையும் நம்பவைத்திருக்கிறேன். இந்த உண்மையைத் தெரிந்து |
கொண்ட நீங்கள் எக்காலத்திலும் இங்கிருந்து விடுதலையாக முடியாது. எனக்கான ஒரு தனி உலகத்தை இந்த நீர்மூழ்கிக் கப்பலிலேயே நான் உருவாக்கி வைத்துள்ளேன். எனது நம்பிக்கைக்குரிய வேலையாள்கள் இங்கே இருக்கிறார்கள். எங்களுக்குத் தேவையான அனைத்து உணவுகளையும் கடல்வாழ் உயிரிகளிடமிருந்தே உருவாக்கிக் கொள்கிறோம். இனி நான் கரைக்குத் திரும்பவேமாட்டேன். உங்களையும் திரும்ப விடமாட்டேன் " என்றார் நெமோ. நாங்கள் அதிர்ச்சியில் உறைந்து போனோம். அவரது மனத்தை மாற்ற முடியாது என்பது எங்களுக்குப் புரிந்துபோயிற்று. எப்படியாவது இந்தக் கப்பலில் |
இருந்து தப்பிவிட வேண்டும் என்று நாங்கள் மனத்துக்குள் திட்டமிட்டுக்கொண்டோம். ஆழ்கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக் கப்பலில் எங்களது பயணம் தொடர்ந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பலினுள் எல்லா இடங்களுக்கும் செல்ல எனக்கு நெமோ இசைவு அளித்திருந்தார். கப்பலில் மிகச்சிறந்த நூலகம் ஒன்றும் மிகப்பெரிய அருங்காட்சியகம் ஒன்றும் இருந்தன. இந்த அரிய அறிவுக்கருவூலங்கள் யாருக்கும் பயன்படாமல் ஆழ்கடலில் மூழ்கி கிடக்கின்றவே என்று நான் வருந்தினேன். இந்தக் கப்பல் எந்தக் கடலில் எந்தப் பகுதியில் இருக்கிறது , கடலுக்கு அடியில் எவ்வளவு ஆழத்தில் |
இருக்கிறது ஆகியவற்றைத் துல்லியமாக காட்டும் பெரிய திரை ஒன்றும் அங்கே இருந்தது. " இந்தக் கப்பல் செல்வதற்கான ஆற்றல் எதிலிருந்து கிடைக்கிறது ? " என்று நான் நெமோவிடம் கேட்டேன். " இந்தக் கப்பல் செல்வதற்கும் இங்குள்ள விளக்குகள் எரிவதற்கும் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கும் கருவிகள் இங்கேயே உள்ளன " என்றார் அவர். " கப்பலை ஆழத்துக்கும் கடல் மேல் மட்டத்துக்கும் எப்படிக் கொண்டு செல்கிறீர்கள் ? " என்று கேட்டேன். " இந்தக் கப்பலில் மிகப்பெரிய நீர்த்தொட்டிகள் உள்ளன. அவற்றில் தண்ணீரை நிரப்பும்போது கப்பல் கடலுக்கு அடியில் |
செல்லும். அந்தத் தண்ணீரை எந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பொழுது கப்பலின் எடை குறைவதால் கப்பல் கடல் மட்டத்திற்குச் செல்லும் " என்று விளக்கினார் நெமோ. " எல்லாம் சரி , நாம் அனைவரும் மூச்சு விடுவதற்கான காற்று எப்படிக் கிடைக்கிறது ? " " சில நாட்களுக்கு ஒருமுறை கப்பல் கடல் மட்டத்திற்கு மேலே வரும்பொழுது அதன் மேல்மூடியைத் திறந்து காற்றைப் புதுப்பித்துக் கொள்வோம். அதுமட்டுமல்லாமல் இங்குக் காற்றைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் பைகள் இருக்கின்றன. அவற்றை முதுகில் கட்டிக்கொண்டு அதன் முகமூடியை முகத்தில் வைத்துக் கொண்டால் |
ஒன்பது மணி நேரம் வரை கடலுக்குள் நீந்த முடியும் " என்றார் அவர். இப்படியாக எங்களது பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தப்பிவிட வேண்டும் என்ற எங்களது முயற்சி பலமுறை தோல்வியிலேயே முடிந்தது. ஒருநாள் திடீரென்று கப்பல் கடல் மட்டத்தில் நின்றுவிட்டது. " என்ன ஆயிற்று ? " என்று நான் நெமோவிடம் கேட்டேன். " கடலுக்குள் இருக்கும் கடல்புற்று எனப்படும் மணல் திட்டில் கப்பல் சிக்கிக் கொண்டுவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் முழுநிலவு நாளன்று கடலின் நீர்மட்டம் உயரும். அப்போது நமது நீர்மூழ்கிக் கப்பல் |
தானாகவே நீர்மட்டத்தில் மிதக்கத் தொடங்கும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும் " என்றார் நெமோ. நாட்டிலஸின் மேல்தளத்தில் நின்று பார்த்தபொழுது சற்றுத் தொலைவில் ஒரு தீவு தெரிந்தது. நெமோவிடம் இசைவு பெற்று நானும் நெட்டும் கான்சீலும் ஒரு படகை எடுத்துக்கொண்டு அந்தத் தீவிற்குச் சென்றோம். அங்கிருந்து ஏராளமான காய்கறிகளைச் சேகரித்துக் கொண்டு படகில் ஏறினோம். திடீரென்று அந்தத்தீவைச் சேர்ந்த , மனிதர்களைக் கொன்று தின்னும் வழக்கமுடையவர்கள் எங்களைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். நாங்கள் மிகுந்த அச்சத்தோடு விரைவாகப் படகைச் |
செலுத்திக்கொண்டு கப்பலுக்கு வந்து சேர்ந்தோம். ஏராளமான படகுகளில் அந்த மனிதர்கள் எங்கள் நாட்டிலஸைச் சூழ்ந்தார்கள். நாங்கள் மேல்மூடியை இறுக மூடிக்கொண்டு உள்ளே இருந்தோம். இந்த முற்றுகை ஆறு நாள்கள் தொடர்ந்தது. ஏழாம் நாள் முழுநிலவு நாளன்று கடல்மட்டம் உயர்ந்தது. " இப்பொழுது நாம் மூடியைத் திறந்து காற்றைப் புதுப்பித்துக்கொண்டு நமது பயணத்தைத் தொடங்கலாம் " என்றார் நெமோ. மேல் மூடியைத் திறந்தால் அந்த மனிதர்கள் உள்ளே வந்து விடுவார்களே என்று நான் அஞ்சினேன். நெமோ சிரித்தபடியே மேல் மூடியைத் திறந்தார். உள்ளே இறங்குவதற்கு |
ஏணியில் கால் வைத்தவர்கள் அலறிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அந்த ஏணியில் மின்சாரம் பாய்ச்சி இருந்தார் நெமோ. அதன்பிறகு நாங்கள் காற்றைப் புதுப்பித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அருகில் நாட்டிலஸ் சென்று கொண்டிருந்தது. " இது முத்துக்குளிக்கும் தொழில் சிறப்பாக நடைபெறும் இடம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? இந்த ஆண்டுக்கான முத்துக்குளிக்கும் பருவம் இன்னும் தொடங்கவில்லை. என்றாலும் நாம் காற்றுப்பைகளைக் கட்டிக்கொண்டு சென்று கொஞ்சம் முத்துச்சிப்பிகள் |
சேகரித்து வருவோமா ? " என்று கேட்டார் நெமோ. நானும் நெமோவும் கடலுக்கடியில் சென்றோம். அங்கே தன்னந்தனியாக ஓர் இந்தியர் முத்துக்குளிப்பதற்காகக் கடலுக்குள் இறங்கினார். அவர் காற்றுப்பைகள் இல்லாமல் மூச்சை அடக்கிக்கொண்டு முத்துச்சிப்பிகளைச் சேகரிக்கத் தொடங்கினார். அப்போது அந்த மனிதரை நோக்கி ஒரு சுறாமீன் வேகமாகப் பாய்ந்து வந்தது. நெமோ தம் கையிலிருந்த நீளமான வாளினால் அந்தச் சுறாமீனைக் குத்திக்கிழித்து அந்த மனிதரைக் காப்பாற்றினார். ஓர் இந்தியரைக் காப்பாற்றிய மனநிறைவோடு நாங்கள் மீண்டும் நாட்டிலஸ்க்குத் திரும்பினோம். |
மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. வழியில் நாங்கள் பலவகையான விந்தைகளைக் கண்டோம். இங்கிலாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களைப் பார்த்தோம். அந்தக் கப்பல்களின் சிதைவுகளில் இருந்து தங்கம் , வெள்ளி , வைரம் போன்றவற்றை அள்ளிக்கொண்டோம். இன்னோர் இடத்தில் கடலுக்குள் தீப்பிழம்பைக் கக்கிக்கொண்டிருக்கும் எரிமலையைக் கண்டு வியந்தோம். அதன் அடியில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் பூகம்பத்தால் கடலுக்குள் மூழ்கிப்போன ' அட்லாண்டிஸ் ' என்னும் நகரத்தின் இடிபாடுகளைக் கண்டோம். |
பிறகு பூமியின் தென்துருவத்திற்குச் சென்றோம். அங்கே பென்குவின் , கடல்சிங்கம் போன்ற அரிய பறவைகளையும் விலங்குகளையும் கண்டோம். அங்கிருந்து திரும்பும் வழியில் மிகப்பெரிய ஆக்டோபஸ் ஒன்றுடன் போரிட்டு அதனைக் கொன்றோம். இப்படியே எங்கள் பயணம் தொடர்ந்தது. நாள்கள் கடந்தன. மீண்டும் நிலப்பரப்பை அடைய முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். ஒருநாள் தொலைவில் கரை ஒன்று தெரிந்தது. இன்று எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்று நாங்கள் மூவரும் எண்ணினோம். அதன்படி கப்பலுடன் இணைந்திருந்த சிறிய படகு ஒன்றில் ஏறினோம். அப்போது |
நாட்டிலஸ் ஒரு பெரும் கடல்சுழலுக்குள் சிக்கிக்கொண்டது. கப்பலுடன் இணைந்திருந்த எங்கள் படகும் சுழலில் சிக்கிக் கொண்டது. அதன் மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த நாங்கள் மூவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டோம். நாங்கள் கண்விழித்தபோது நார்வே நாட்டின் கடற்கரையில் மீனவர் ஒருவரின் குடிசையில் இருந்தோம். அதன்பிறகு நாட்டிலஸ்க்கு என்ன நேர்ந்தது என்பது பற்றியோ , நெமோ என்ன ஆனார் என்பது பற்றியோ யாருக்கும் எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. நூல் வெளி அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். இவர் பிரான்சு |
Subsets and Splits