text
stringlengths
11
513
மற்றும் பிற வாய்ப்புகளை வழங்க ஒரு நகரீயம் வசதிகளைப் பெற்றுள்ளது. எனவே பெரும் அளவிலான மக்கள் அதை நாடிச் செல்கின்றனர். நகரிய உள்ளாட்சி அரசாங்கம் தொழில்நிறுவனத்தின் இயல்பான நிர்வாகப் பொறுப்பாக அனுசரிக்கப்படுகின்றது. நெய்வேலி போன்ற சில நகரங்களில் , தொழில் நிறுவனங்களால் நியமனம் செய்யப்படும் நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். இந்நிர்வாக அலுவலர்களுக்கு அவைத்தலைவர்கள் , பொறியாளர்கள் மற்றும் பலர் உதவி செய்கின்றனர். நகராட்சியைப் போலன்றி , நகரீயங்கள் அதிகார உயர்தன்மையைக் கொண்டுள்ளன. குடியியல் நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டின்
அச்சத்தின் காரணமாக , நகரீயம் மக்களாட்சி அமைப்பு எதனையும் கொண்டிருக்கவில்லை. மேலும் , நகரீயங்களின் குடியிருப்பாளர்கள் தற்போதுள்ள ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து மனநிறைவைப் பெற்றவர்களாக உள்ளனர். 9.2.4 இராணுவக் கூட வாரியங்கள் ( Contonment Boards ) மைய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும். அவை பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. 1924 ஆம் ஆண்டின் இராணுவக் கூட்டங்கள் பற்றிய சட்டத்தின் கீழ் இராணுவக் கூடவாரியங்கள் அமைக்கப்படுகின்றன. இராணுவப் படைகள்
நிறுத்தப்படுவதற்கென அல்லது தங்குவதற்கென ஒரு நகரத்தில் உள்ள இடமே இராணுவக் கூடமாகும். இராணுவக் கூடப்பகுதியின் உள் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கென்று இராணுவக் கூட வாரியம் அமைக்கப்படுகிறது. இராணுவக் கூட வாரியத்தின் தலைவர் நிலையக் கட்டுப்பாட்டு அல்லது கட்டளை அதிகாரி ஆவார். அவருக்கு வாரியத்தில் விருப்பவாக்குச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி , தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிக்கின்றார். பதவியின் நிமித்தமான உறுப்பினர் தனது அதிகாரப் பூர்வமான பதவி வகிக்கும் காலம் வரை பதவியில்
நீடிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தமக்கென்று ஒரு துணைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கின்றார். நகராட்சிப் பணிகள் இராணுவக் கூட வாரியத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன. நகராட்சி மன்றத்தில் காணப்பெறுவதைப் போன்று இப்பணிகள் கட்டாயமானவை , தன் விருப்பமானவை என பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. வாரியத்தின் வருவாய் ஆதாரங்கள் வரிசார்ந்த வருவாய் , வரிசாராத வருவாய் என்று பிரிக்கப்பட்டுள்ளன. மைய அரசாங்கத்தின் முன் அனுமதியுடன் எத்தகைய வரியையும் வாரியம் விதிக்கலாம். நிலையக்
கட்டுப்பாட்டு அதிகாரி வாரியத்தினால் தயாரிக்கப்படும் நிதிநிலை அறிக்கையை அனுமதிக்கின்றார். இராணுவக்கூட வாரியங்களின் நிலைப்பாடு , தனிப்பட்ட அமைப்புகள் ஆகியவை பொருத்தமற்றதாய் உள்ளன. எனவே காலப்போக்கில் அவை அண்டை நகராட்சி அமைப்புகளின் உறுப்புகளாக இடம்பெறலாம். 9.2.5 நகர எல்லைப் பகுதி குழுக்கள் அசாம் , கேரளா , மத்திய பிரதேசம் , உத்திரபிரதேசம் , மேற்கு வங்களாம் , ஜம்மு காஷ்மீர் , இமாசலப்பிரதேசம் ஆகியவற்றில் உருவாக்கப்பட்டுள்ளன. நகர எல்லைப் பகுதி குழுக்கள் மாநில அரசாங்கத்தினால் இயற்றப்படும் தனிப்பட்ட சட்டங்களால்
நிர்வகிக்கப்படுகின்றன. நகர எல்லைப் பகுதிக்குழுவின் மீது மாவட்ட ஆட்சியாளர் அதிகப்படியான கட்டுபாட்டினையும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். நகர எல்லைப் பகுதிக் குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் அல்லது அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றனர். அல்லது ஒரு பங்கினர் தேர்ந்தெடுக்கப்பட்டோராகவும் மற்றொரு பங்கினர் நியமனம் செய்யப்பட்டோராகவும் உள்ளனர். இக்குழுவிற்குத் தெருவிளக்கு , வடிகால் மற்றும் துப்புரவு போன்ற கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இக்குழுக்கள் நகரப்
பஞ்சாயத்திற்குள் உட்படுத்திக் கொள்ளப்படலாம். குறிப்பிட்ட எல்லைப்பகுதி குழுக்கள் ( Notified Area Committee ) இக்குழுக்கள் பீகார் , குஜராத் , அரியானா , மத்தியப்பிரதேசம் , கர்நாடகம் , ஜம்மு காஷ்மீர் , உத்திரபிரதேசம் மற்றும் இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. ஒரு நகராட்சி அமையப் பெறுவதற்குரிய தேவையான நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாத ஒரு எல்லைப்பகுதிக்கென குறிப்பிட்ட எல்லைப் பகுதிக்குழு அமைக்கப்படுகின்றது. மேம்பாட்டினைப் பெற்றுவரும் புதியதோர் நகரகத்திற்கும் அது அமைக்கப்படுகின்றது. இக்குழுவின் அமைப்பு
அதிகாரப்பூர்வமான அரசிதழில் அரசாங்கத்தினால் அறிவிப்பு செய்யப்படுகின்றது. எனவே தான் அது அறிவிப்பு செய்யப்பட்டுள்ள எல்லைப் பகுதிக்குழு என அழைக்கப்படுகின்றது. இக்குழு மாநில நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வமான அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அறிவிக்கப்பட்டுள்ள நகராட்சிச் சட்ட ஏற்பாடுகள் மட்டுமே அதற்கு பொருத்தமானவையாய் இருக்கும். அறிவிக்கப்பட்ட எல்லைப்பகுதிக்குழு நகராட்சி மன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றிருக்கின்றது. ஆனால் நகராட்சி மன்றத்தைப் போலன்றி , அது ஒரு
நியமன அமைப்பாகும். இக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வமைப்பு தற்போதைய சட்ட அடிப்படையில் இல்லை என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். 9.3.1 மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை பஞ்சாயத்து முறை அரசியல். மாவட்டப்பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் 9.3.1.1 மாவட்ட பஞ்சாயத்துக்கள் மாவட்ட பஞ்சாயத்து என்பது பஞ்சாயத்து இராச்சிய கட்டுமானத்தின் மேல்மட்ட
அடுக்காகும். இது மாவட்டம் முழுவதும் அதிகார எல்லையைக் கொண்டுள்ளது. எனினும் , நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ள மாவட்டப்பகுதிகள் , அல்லது நகரப் பஞ்சாயத்து அல்லாத தொழில் நகரியம் அல்லது மாநகரப் பொறுப்புகள் கீழ் உள்ள பகுதிகள் அல்லது இராணுவக் கூட வாரியம் போன்றவை அதனுள் அடங்காது. மாவட்டப் பஞ்சாயத்து பின்வருவோரை உறுப்பினரர்களாய்க் கொண்டுள்ளது. அ. மாவட்ட பஞ்சாயத்து வட்டங்களிலிருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் , மாவட்டப் பஞ்சாயத்து எல்லையில் உள்ள ஏறத்தாழ 50,000 மக்களுக்கென ஒவ்வொரு வட்டமும்
அமைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் ஒரே ஒரு உறுப்பினர் நேரிடையாகத் தேர்ந்தெடுக்ப்படுகின்றார். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட பஞ்சாயத்தின் உறுப்பினராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. மாவட்ட பஞ்சாயத்து பகுதியின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள். மாவட்டத்திற்குள் ஓர் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்களின் அவை உறுப்பினர். ஈ. பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர்களிடமிருந்து ஐந்தில் ஒரு பங்கினர் மாவட்டப் பஞ்சாயத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அ , இ , ஈ ஆகியவற்றின்
கீழ்வரும் உறுப்பினர்கள் மாவட்டப்பஞ்சாயத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். ஆனால் வாக்களிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு மாவட்ட பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள மொத்த மக்கட்தொகையில் அவர்களின் எண்ணிக்கை பெற்றுள்ள விகிதாசாரத்திற்கேற்ப இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரைச் சேர்ந்த பெண்டிர்களையும் உட்கொண்ட வகையில் , மகளிர்களுக்கென மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒரு வாக்காளருக்குரிய வயது தகுதி 18 ஆகும். மாவட்ட
பஞ்சாயத்திற்கு நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஒரு உறுப்பினருக்கு வயதுத் தகுதி 21 ஆகும். ஆனால் , அவ்விருசாராருடைய பெயர்களும் சம்பந்தப்பட்ட வாக்காளர்பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். மைய , மாநில அரசாங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிபுரிவோர் , மாவட்டப் பஞ்சாயத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவும் அல்லது எப்பதவியையும் வகிக்கவும் தகுதியற்றவர்கள் ஆவர். மாவட்டப் பஞ்சாயத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். அது முன்கூட்டிக் கலைக்கப்படுமாயின் , ஆறு மாதங்களுக்குள் தேர்தல்
நடத்தப்படவேண்டும். ஏனைய அனைத்துப் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கு உள்ளதைப் போன்று , சட்டத்தின் கீழ் தகுதிக் கேடான எந்த நபரும் மாவட்டப் பஞ்சாயத்தில் வாக்களராக அல்லது உறுப்பினராக இருத்தல் முடியாது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஒவ்வொரு மாவட்டப் பஞ்சாயத்தும் ஒரு தலைவரையும் , துணைத்தலைவரையும் பெற்றுள்ளது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களால் , தமக்குள்ளிருந்து பதவியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதி இழக்கப்பட்டாலன்றி அல்லது நீக்கப்பட்டாலன்றி , அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் பதவியில் இருப்பர்.
வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் அவர்கள் அனுபவிக்கின்றனர். தலைவரின் பணிகள் மாவட்டபஞ்சாயத்தின் அரசியல் ரீதியான தலைமை நிர்வாகி அதன் தலைவர் ஆவார். அதன்படி , மாவட்ட பஞ்சாயத்தின் கூட்டங்களைக் கூட்டுவித்துத் தலைமை தாங்கி , அதன் செயல் நடவடிக்கைகளை நடத்துகின்றார். அவர் பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் பஞ்சாயத்துகள் செயல்படுவதை ஆய்வு செய்து , தனது அறிக்கையை மாவட்டப் பஞ்சாயத்திற்குச் சமர்ப்பிக்கின்றார். மாவட்டப் பஞ்சாயத்தின் செயலாளரின் வேலைப்பாட்டின் மீது தனது கருத்தினை எழுதுகிறார். இது மாவட்ட ஆட்சியாளரால் எழுதப்பெறும்
மந்தன அறிக்கையோடு இணைக்கப்படுகிறது. தமது பணிகளுள் எதனையும் துணைத்தலைவருக்கு அவர் ஒப்படைவு செய்யலாம். நெருக்கடியான சமயத்தின் போது , மாவட்டப்பஞ்சாயத்துத் தொடர்பான எப்பணியினையும் நிறைவேற்ற அவர் உத்தரவிடமுடியும். ஆனால் மாவட்டப் பஞ்சாயத்தின் அடுத்த கூட்டத்தில் அத்தகைய செயலை , அவர் அறிக்கை அறிவிப்புச் செய்யவேண்டும். மாவட்டப் பஞ்சாயத்தின் பதிவுகள் அல்லது ஆவணங்கள் அனைத்தையும் பார்வையிட அவர் அதிகாரம் பெற்றுள்ளார். இவ்வாறு , ஒரு தலைவர் மற்றும் ஒரு மேற்பார்வையாளர் ஆகியோரின் பங்குப்பணியினை தன்னுடன் இணைத்துக் கொண்டவராக
மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளார். அரசாங்கத்திற்கும் மாவட்டப் பஞ்சாயத்திற்கும் இடையே அவர் தகவல் தொடர்பு பாலமாக அமைந்துள்ளார். மாவட்டப் பஞ்சாயத்து அல்லது ஜில்லா பரிஷத்தின் அதிகாரங்களும் பணிகளும் மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்டுள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. மாவட்டப் பஞ்சாயத்து ஓர் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை புரியும் பங்குப் பணியினைஆற்ற வேண்டியுள்ளது அவை வருமாறு. 1. பஞ்சாயத்து சமிதிகளின் நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்கிறது. 2. தமது பணிகளைத் திறமையுடன் மேற்கொள்ளுமாறு பஞ்சாயத்து
சமிதிகளுக்கு அது உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றது. 3. பஞ்சாயத்து ஒருங்கிணைக்கின்றது. சமிதிகளால் தயாரிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை அது 4. மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் சம்பந்தமாக அது மாநில அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்குகின்றது. 5. மாவட்டத்தின் உள்ளூர் ஆணையுரிமை படைத்த நிறுவனங்களின் பணிகள் குறித்து அது புள்ளி விவரங்களைச் சேகரிக்கின்றது. 6. மாவட்டத்தின் உள்ள பஞ்சாயத்து சமிதிகளுக்கென மாநில அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதிகளை அது பகிர்ந்தளிக்கின்றது. 7. மாவட்டத்தின் பஞ்சாயத்துக்கள் , பஞ்சாயத்து சமிதிகள்
ஆகியவற்றிற்குச் செய்யப்படவேண்டிய பணி ஒதுக்கம் மீது அது மாநில அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகின்றது. 8. தனக்கு 9. மாநில கீழ் அமைந்துள்ள பஞ்சாயத்து இராச்சிய அடுக்கு முறை அமைப்புகளுக்கிடையிலான நல் உறவுகளை ஒழுங்கு முறைபடுத்துகின்றது. அரசாங்கத்தினால் அளிக்கப்படும் எல்லா அதிகாரங்களையும் அது செயல்படுத்துகின்றது. நிலைக்குழுக்கள் ஜில்லா பரிஷத் அல்லது மாவட்டப் பஞ்சாயத்து தனது நிலைக்குழுக்களின் வாயிலாகப்பணியாற்றுகிறது. இந்நிலைக் குழுக்கள் பின்வரும் செயல்பாடுகளுக்கென அமைக்கப்பட்டுள்ளன. 1. சமூக மேம்பாடு அல்லது முன்னேற்றம்
2. விவசாயம் , கூட்டுறவு , பாசனம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு. Page 168 of 204 3. குடிசை , கிராம மற்றும் சிறிய அளவிலான தொழில்கள். 4. கல்வி மற்றும் சமுதாயப் பொதுநலன். 5. நிதி மற்றும் வரிவிதிப்பு. 6. பொதுச்சுகாதாரம். இக்குழுக்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் தம்மால் தமக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாவட்டப் பஞ்சாயத்தின்தலைவர் ஒரு குழுவின் உறுப்பினராய் இருப்பாராயின் , அவரே அதன் தலைவராக இருத்தல் வேண்டும். வருவாய் ஆதாரங்கள் பொதுவாகக் கூற வேண்டுமாயின் , தனதுசெயலாக்கப் பணிகளைச் சந்திக்கும் பொருட்டு ,
ஒரு மாவட்டப் பஞ்சாயத்து பின்வரும் வருவாய் ஆதாரங்களைப் பெற்றுள்ளது. 1. தொழில் , வர்த்தகம் மற்றும் வாழ்க்கைப் பணி மீது விதிக்கப்படும் வரி. 2. பொதுக்கேளிக்கைகள் மற்றும் நீர் மீது விதிக்கப்படும் வரி. 3. பயணிகள் மீதான வரி. 4. மாநில அரசாங்கம் வழங்கும் மானியங்கள் மற்றும் கடன்கள். 5. பணியாளர் குழாம் மற்றும் சீரமைப்பு பற்றி மானியங்களும் நில வருவாயும். 6. திட்டம் மற்றும் வட்டாரம் குறித்த மானியங்கள். 7. இறைச்சி விற்பனையாளர்கள் செலுத்தும் உரிமக் கட்டணம். 8. சந்தையில் விற்பனையாகும் கால்நடைகள் மற்றும் பொருள்கள் மீது
விதிக்கப்படும் வரி. 9. தனது சொத்திலிருந்து வரும் வருமானம். ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்திற்கென , மாவட்டப் பஞ்சாயத்து நிதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பின்வரும் இனங்கள் மாவட்டப் பஞ்சாயத்து நிதியினுள் செலுத்தப்படுகின்றன. 1. மாநிலத்தின் திரண்ட நிதிக்குவிப்பிலிருந்து மாவட்டப் பஞ்சாயத்தின் நிதிக்கென்று ஒதுக்கம் செய்யப்பட்ட தொகை. 2. அரசாங்கத்தினால் வகை செய்யப்பெறும் அனைத்து மானியங்கள் , ஈட்டுத்தொகைகள் , கடன்கள் மற்றும் பங்களிப்புகள். 3. மாவட்டப் பஞ்சாயத்தின் நிலங்கள் அல்லது மற்ற சொத்து மூலம் பெறப்படும் வாடகை அல்லது
குத்தகைத் தொகை. 4. தனிநபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து மாற்றம் செய்யப்படும் அல்லது மானியங்களாய்ப் பெறப்படும் , அனைத்து வட்டிகள் , இலாபங்கள் மற்றும் நன்கொடையால் திரண்டுள்ள பிற வருமானங்கள். 5. மாவட்டப் பஞ்சாயத்தினால் விற்பனை செய்யப்பட்ட நிலம் மற்றும் சொத்துக்களின் மூலம் வரும் அனைத்து வருமானங்கள். 6. மாவட்டப் பஞ்சாயத்தினால் விதிக்கப்பெறும் அல்லது அதற்குச் செலுத்தப்படும் அனைத்துக் கட்டணங்கள் மற்றும் தண்டனைத்தொகைகள். ஒவ்வொரு மாவட்டப் பஞ்சாயத்து நிதிக்கும் , தன்னால் தீர்மானிக்கப்பட்ட அளவில் , மானியம்
ஒன்றினை அரசாங்கம் வழங்குதல் வேண்டும். தலைமை நிர்வாக அலுவலர் மாவட்ட ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு தலைமை நிர்வாக அலுவலர் அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார். பல்வேறு மாநிலங்களில் அவருடைய பதவிப் பெயர் மாறுபடுவதாய் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த அலுவலர் கிராம வளர்ச்சி இணை இயக்குனருக்குண்டான நிலையினை வகிக்கின்றார். தலைமை நிர்வாக அலுவலரின் ஆட்சேர்ப்பு முறை , ஊதியம் மற்றும் படிகள் , ஒழுங்கு மற்றும் நடத்தை மற்றும் பணிவரையறைகள் யாவும் அரசாங்கத்தினால் ஒழுங்குமுறைப் படுத்தப்படுகின்றன. மாவட்டப் பஞ்சாயத்தின் தலைமை
நிர்வாக அலுவலரின் பணிகள் , அதிகாரங்கள் மற்றும் கடமைகள். 1. தலைமை நிர்வாக அலுவலர் மாநிலச் சட்டமன்றத்தால் தன் மீது சுமத்தியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் செயல்படுத்துகின்றார். 2. மாவட்டப் பஞ்சாயத்துப் பணிகள் அனைத்தின் செயலாக்கத்தை அவர் மேற்பார்வையும் கட்டுப்பாடும் செய்கின்றார். 3. மாவட்டப் பஞ்சாயத்து மற்றும் அதன் குழுக்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் , அவைகளில் எந்த ஒரு தீர்மானத்தை முன் வைக்கவும் அவர் உரிமை பெற்றுள்ளார். 4. மாவட்டப் பஞ்சாயத்தின் தீர்மானங்களை அவர் செயல்படுத்த வேண்டும். 5. மாவட்டப்
பஞ்சாயத்தின் தீர்மானங்களின் செயலாக்கம் பற்றியும் வரி வசூலிப்பு பற்றியும் கால அறிக்கைகளை அவர் வழங்குதல் வேண்டும். 6. மாவட்டப் பஞ்சாயத்தின் அலுவலர்களையும் பணியாட்களையும் அவர் கட்டுப்பாடு செய்கின்றார். 7. மாவட்டப் பஞ்சாயத்தின் செயல்படுத்துகின்றார். உத்தரவுகளையும் கட்டளைகளையும் அவர் 8. மாவட்டப் பஞ்சாயத்தின் எந்த ஒர் அலுவலருக்கும் அல்லது பணியாளர்களுக்கும் , எழுத்து மூலமான உத்தரவினால் , தனது பணிகளுள் எதனையும் அவர் ஒப்படைவு செய்யலாம். 9.3.1.2 பஞ்சாயத்து யூனியன் / ஊராட்சி ஒன்றியம் பஞ்சாயத்து இராச்சிய முறையமைப்பில்
நடு அடுக்காகப் பஞ்சாயத்து சமிதி அமைந்துள்ளது. அது ஒரு இடைநிலையான அடுக்காகவும் கருதப்படுகிறது. பஞ்சாயத்து யூனியன் அல்லது ஊராட்சி ஒன்றியம் என அது பலவகையாகப் பெயரிடப்பட்டுள்ளது. அமைப்பும் அளவும் தேசிய விரிவாக்கக் குறிக்கோளாக அமையப் பெறும் பஞ்சாயத்து வளர்ச்சிக்கு வட்டாரத்துடன் பொதுவாக முடிவதைலில் பஞ்சாயத்து சமிதியின் என்று அமைந்துள்ளது. ஒரு பஞ்சாயத்து ஒன்றியம் 112 கிராமங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்தின் நிர்வாகம் , பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்திடம் வழங்கப்படவேண்டும். பஞ்சாயத்து சமிதி அல்லது
பஞ்சாயத்து யூனியன் ஊராட்சி ஒன்றியம். 1. பஞ்சாயத்து ஒன்றியம் உள்ள வட்டாரங்களிலிருந்து நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றார். 2. பஞ்சாயத்து ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த ( மக்களவை ) உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள். 3. பஞ்சாயத்து ஒன்றியத்தின் வாக்காளார்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர்கள். 4. பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு
என்ற வகையில் கிராமப் பஞ்சாயத்து அவையில் இடம்பெறுகின்றார். பஞ்சாயத்து ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் தமக்குள் இவ்வுறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். தலைவர் மற்றும் துணைத்தலைவர் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் பிரமுகர் , பிரதான் என்று பல மாநிலங்களில் பெயரிடப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அவர் சேர்மன் ( தலைவர் ) என்று அழைக்கப்பட்படுகிறார். இவரைத் தவிர்த்து ஒரு துணைத்தலைவரும் இருக்கிறார். அவர் பஞ்சாயத்து ஒன்றியத்தின் உறுப்பினர்களால் தமக்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார். தகுதி
இழக்கப்பட்டாலன்றி ( அ ) பதவியிலிருந்து நீக்கப்பட்டாலன்றி அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிக்கின்றனர். பஞ்சாயத்து ஒன்றியமன்றத்தினால் தடை செய்யப்பட்டாலன்றி எழுத்து மூலமாக உத்தரவின் மூலம் , தலைவர் அவருக்குண்டான எப்பணிகளையும் துணைத்தலைவருக்கு ஒப்படைவு செய்யலாம். எனினும் தலைவர் பதவி காலியாக இருக்கும் போது தலைவருக்குண்டான பணிகளைத் துணைத்தலைவர் ஆற்ற வேண்டும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய இரு பதவிகளும் காலியாக இருக்குமாயின் வட்டார வருவாய் அதிகாரி ( Revenue Divisional Officer ) பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்தின்
அலுவல் சார்பான உறுப்பினராகவும் தலைவராகவும் இருப்பார். தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் பஞ்சாயத்து யூனியனின் தலைவர் அரசியல் ரீதியான செயலாக்கத் தலைவராவார். அவருடைய அதிகாரங்களும் பணிகளும் பின்வருவனவாகும். 1. பஞ்சாயத்து சமிதியின் கூட்டங்களைக் கூட்டித் தலைமை தாங்குவதோடு அதன் செயல்முறைகளை அவர் நடத்துகின்றார். 2. பஞ்சாயத்து சமிதி மற்றும் அதன் நிலைக்குழு ஆகியவற்றின் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை செயல்படுத்தும் போது வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவருடைய பணியாளர்கள் மீது கட்டுப்பாட்டினை அவர் செலுத்துகின்றார்.
Page 153 of 204 3. திட்டங்களை தீட்டுவதிலும் உற்பத்திச் செயல்திட்டங்களை செயல்படுத்துவதிலும் பஞ்சாயத்துக்களை ஊக்குவித்து அவைகளுக்கு வழித்துணையாக அவர் திகழ்கிறார். 4. பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்தின் ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல் பரிமாற்றம் அனைத்தும் தலைவரின் மூலமாக மேற்கொள்ளப்படவேண்டும். 5. ஒன்றியம் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக பார்வையிட அதிகாரம் பெற்றுள்ளார். 6. எந்த ஒரு முக்கியமான வேலையையும் உடனடியாக செயல்படுத்துவதற்கு அவர் உத்தரவுகளையும் பிறப்பிக்கலாம். 7. தான் ஒரு உறுப்பினராகத்
திகழும் பட்சத்தில் அலுவல் சார்பு முறையில் நிலைக்குழுவின் தலைவராக அவர் திகழ்கின்றார். பஞ்சாயத்து ஒன்றியத்தின் முறைமையின் முக்கியமான அமைப்பாக பஞ்சாயத்து சமிதி திகழ்கிறது. அது சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த தலையாயச் செயலாக்க அமைப்பாக உள்ளது. தனக்கென குறிப்பிட்ட வகையில் ஒதுக்கப்படும் பொறுப்புகளை செயல்படுத்துவதில் மாநில அரசாங்கத்தின் ஒரு முகவராக அது செயல்படுகின்றது. தனது அதிகார எல்லகைக்குள் அமைந்துள்ள கிராம பஞ்சாயத்துக்களின் மீது பஞ்சாயத்து சமிதி கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றை செலுத்துகின்றது.
அனைவருக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியை வழங்குகின்றது. இறுதியில் தனது எல்லைக்குள் உள்ள பஞ்சாயத்தின் நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்து அனுமதிக்கும் பொதுப்படையான அதிகாரத்தையும் பெற்றுள்ளது. பஞ்சாயத்து சமிதியின் பணிகள் 1. பஞ்சாயத்து சமிதியின் பணிகள் இருவகைப்படும். அவை குடியியல் வசதிகள் மேம்படச் செய்வது மற்றும் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றதலும் ஆகும். குடியியல் பொறுத்தமட்டில் பஞ்சாயத்து சமிதி பின்வரும் பொறுப்புகளைப் பெற்றுள்ளது. கிராமப் பஞ்சாயத்துச் சாலைகளைத் தவிர்த்து சமிதியின் அதிகார எல்லைக்குள்
சாலைகள் அமைத்துப் பராமரித்தல். குடிநீர் வழங்கல். வடிகால் குழாய்களை பராமரித்தல். 2. 3. 4. தாய் சேய் நல இல்லங்களையும் ஆரம்ப சுகாதார மையங்களையும் நிறுவுதல். 5. மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளை ஏற்படுத்துதல். 6. ஆரம்ப மற்றும் ஆதாரப் பள்ளிகளுக்கான ஏற்பாடு செய்து முதியோர் கல்வி மையங்களை நிறுவுதல். 7. ஊட்டுப்பாதைகளாக உள்ள கிராமச் சாலைகளுக்குத் துணைபுரிதல். 8. நூலகங்களை நிறுவுதல். 9. இளைஞர் அமைப்புகள் , மகளிர் , உழவர் குடிமக்கள் போன்றவைகளை நிறுவுதல். 10. கலாச்சார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்தல். தனது எல்லைக்குள்
சமூக வளர்ச்சி திட்டங்களைப் பஞ்சாயத்து சமிதி நிறைவேற்றுகின்றது. அதன் பணிகள் , 1. சமூக மேம்பாட்டின் கீழ் அனைத்து திட்டங்களையும் செயலாக்குதல். 2. வீரிய வித்துக்களைப் பெருக்கி , வினியோகித்தல். 3. தேர்ச்சியான உரங்களைச் சேகரித்தல் , வினியோகித்தல் , பிரபலமாக்குதல். 4. மண்வளம் , நிலத்தை மேம்படுத்துதல். 5. வேளாண்மைக்கான கடன் வழங்குதல். 6. கிணறுகளை வெட்டியும் , குளங்களைப் பழுதுபார்த்தும் பாசன வசதிகளைச் செய்து கொடுத்தல். 7. மரங்களை நடுதல் , மரங்களை வளர்த்தல். 8. தேர்ச்சி வாய்ந்த இனவிருத்தி ஆடுகள் , மாடுகள் , பறவைகள்
வளர்ப்பு அறிமுகம் செய்தல். 9. தேர்ச்சி வாய்ந்த கால்நடை தீவனத்தை அறிமுகம் செய்தல். 10. கால்நடைகளுக்கு வியாதி வராமல் தடுத்தல் மற்றும் உரிய நிவாரணம் அளித்தல். 11. பால்பண்ணை அமைத்தல் , பால் வினியோகம் செய்தல். 12. கூட்டுறவுச் சங்கங்களை துவங்கி மேம்படுத்துதல். 13. மீன் காப்பகங்களைப் பராமரித்தல். 14. குடிசை , கிராம மற்றும் சிறிய அளவிலான தொழில்களை மேம்படுத்துதல். 15. உற்பத்தி மற்றும் பயிற்சி மையங்களை நிறுவிப் பராமரித்தல். நிலைக்குழுக்கள் பஞ்சாயத்து சமிதி நிலைக்குழுக்களை அமைத்துக் கொண்டு தனது பணிகளை ஆற்றுகின்றது.
இக்குழுக்கள் சட்டமுறையிலான பணிகளையாற்றும் பொருட்டு ஐந்து குழுக்கள் உள்ளன. அமைப்புகளாகும். கீழ்க்காணும் அ. நிதி மற்றும் வரி விதிப்பு. ஆ. வேளாண்மை உற்பத்தி கால்நடைப் பராமரிப்பு மற்றும் பாசனம். இ கல்வி மற்றும் மாதர் நலன் உள்ளிட்ட சமுதாய பொதுநலன். ஈ. பொதுச் சுகாதாரம் மற்றும் துப்புரவு. உ. தகவல் , தொடர்பு மற்றும் கூட்டுறவு. நிலைக்குழுவின் உறுப்பினர்கள் பஞ்சாயத்து சமிதியின் உறுப்பினர்களாகத் தமக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பஞ்சாயத்து சமிதியின் தலைவர் நிதி மற்றும் வரிவிதிப்புக் குழுவின் தலைவராவார்.
பஞ்சாயத்து சமிதியினால் தமக்கு ஒப்படைவு செய்யப்படும் அதிகாரங்களை இக்குழுக்கள் செயல்படுத்துகின்றன. வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்குழுக்களின் செயலாளராகப் பணி புரிகின்றார். வருவாய் ஆதாரங்கள் பொதுவாக ஒரு பஞ்சாயத்து சமிதி பின்வரும் வருவாய் ஆதாரகளைக் கொண்டுள்ளது. 1. பஞ்சாயத்து சமிதி விதிக்கும் வரிகள் , கட்டணங்கள் , ஆகியவற்றில் கிடைக்கும் வருமானங்கள். 2. ஜில்லா பரிஷத் ( அ ) மாவட்டப் பஞ்சாயத்திலிருந்து பெறப்படும் நில வருவாய் மற்றும் உள்ளூர் தீர்வைப் பங்குத்தொகை. 3. மாநில அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் மானியங்கள். 4.
மாநில அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் கடன் தொகைகள். 5. பஞ்சாயத்து சமிதியினால் அனுமதிக்கப்படும் பொதுப் இன்ன பலவற்றின் குத்தகைகளிலிருந்து கிடைக்கும் வருமானம். பணித்துறையில் சந்தைகள் , 6. மாவட்ட பஞ்சாயத்தின் வாயிலாக ( அ ) மாவட்டப் பஞ்சாயத்திலிருந்து பெறப்படும் தற்காலிக மானியங்கள். 7. பங்களிப்புகள் மற்றும் நன்கொடைத் தொகைகள். 8. செயலாக்க செயலி என்ற வகையில் பஞ்சாயத்து சமிதிக்கு அரசாங்கத்தினால் மாற்றம் செய்யப்படும் திட்டங்களிலிருந்து வரும் நிதிகள். இவைகளுடன் பல்வேறு வருவாய் ஆதாரங்கள் பஞ்சாயத்து சமிதி பெற்றுள்ளது.
1994 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் பஞ்சாயத்துக்கள் சட்டப்படி ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்துக்கும் பஞ்சாயத்து ஒன்றிய பொது நிதி என்றும் பஞ்சாயத்து ( கல்வி ) நிதி ஒன்றும் அமைக்கப்படவேண்டும். சட்டத்தில் குறிப்பிட்டவாறு பொது நிதி 27 இனங்களில் கிடைக்கப்பெறும் தொகைகளைக் கொண்டுள்ளன. மற்ற மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து சமிதிகளும் பஞ்சாயத்து சமிதி நிதி வைப்புகளைக் கொண்டுள்ளன. நிர்வாக இயந்திரம் தனது பணிகளை ஆற்றும் பொருட்டு பஞ்சாயத்து சமிதி நிர்வாக இயந்திரம் ஒன்றினைப் பெற்றுள்ளது. அது வட்டார வளர்ச்சி அலுவலரால் தலைமை
தாங்கப்படுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உதவி புரிய விரிவாக்க அலுவலர்கள் உள்ளனர். இவ்வளர்ச்சி அலுவலர்கள் மாநில அரசாங்கத்தினால் ஊதியம் வழங்கப்படும் பணியாளர்கள் ஆவர். அவர்கள் விவசாயம் , கால்நடை பராமரிப்பு , பொதுச் சுகாதாரம் போன்ற சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுனர்களாய் உள்ளனர். அவர்களுக்கு கீழ் மற்ற பணியாளர்கள் உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஓர் எல்லை அல்லது வட்டத்தின் நிர்வாகியாக உள்ளார். அவர் ஆணையர் என்று தமிழ்நாட்டில் பதவிப் பெயர் பெற்றுள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுவாக மாநில வருவாய்த் துறையை
சார்ந்தவராக உள்ளார். அவர் ( அ ) அலுவலகத் தலைவராகவும் ( ஆ ) விரிவாக்க அலுவலர்களைக் கொண்ட ஒரு அணியின் தலைவராகவும் ( இ ) பஞ்சாயத்து யூனியனின் செயலாளராகவும் பணி ஆற்றுகின்றார். விரிவாக்க அலுவலர் அணியின் ஓர் தலைவர் என்ற வகையில் வட்டாரத்தில் பல்வேறு தொழில்நுட்பம் வாய்ந்த பணிகளை அவர் ஒருங்கிணைத்து பலவகையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துகின்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றியத்தின் செயலாளரும் தலைமைச் செயலாக்க அதிகாரியும் ஆவார். அவர் பின்வரும் பணிகளை ஆற்றுகின்றார். 1. பஞ்சாயத்து யூனியன் பலவகையான
தீர்மானங்களை நிறைவேற்றம் செய்கின்றார். 2. வட்டாரத்திலுள்ள பஞ்சாயத்துகளை மேற்பார்வை செய்கின்றார். பஞ்சாயத்து யூனியன் மற்றும் அதன் நிலைக்குழுக்கள் ஆகியவற்றின் கூட்டங்களுக்கு அவர் அறிக்கைகளை பிறப்பிக்கின்றார். அக்கூட்டங்களின் நடவடிக்கைகளைப் பதிவு செய்து பராமரிக்கின்றார். 3. வாக்களிக்கும் உரிமையை பெறாத வகையில் யூனியன் கூட்ட விவாதங்களில் அவர் பங்கேற்கின்றார். 4. யூனியன் நிதிகளிலிருந்து பணத்தை தருவித்துப் பட்டுவாடா செய்கிறார். 5. பணத்திருட்டு , கையாடல் மோசடி போன்றவற்றை அவர் யூனியனின் தலைவருக்கும் மாவட்ட
ஆட்சியாளருக்கும் புகார் செய்கின்றார். 6. பொருத்தமான அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களையும் , திட்ட செயல்களையும் செயலாக்கம் செய்கின்றார். 7. தனது வட்டாரத்திற்குள் உள்ள பஞ்சாயத்துகளின் நிதி நிலவரத்தை அவர் ஆய்வு செய்கிறார். 8. பஞ்சாயத்து யூனியனின் பணியாட்கள் மற்றும் ஏனைய அலுவலர்களை அவர் மேற்பார்வையும் கட்டுப்பாடும் செய்கின்றார். 9. யூனியனின் முன் அனுமதியுடன் யூனியனுக்காக அவர் ஒப்பந்தங்களைச் செயலாக்கம் செய்கின்றார். 9.3.1.3 கிராம சபை பஞ்சாயத்து இராச்சிய முழுமையான கட்டுமானத்தின் அடித்தளமாகக்
கிராமச் சபை உள்ளது. அது ஒரு பொதுவான அமைப்பாகும். அது ஒரு சட்டமுறையிலான அமைப்பாக ஏற்கப்பட்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்தின் தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களைக் கொண்டு அது அமையப் பெற்றுள்ளது. சராசரி 500 மக்கட் தொகையுடன் கூடிய ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கிராமங்களை ஒரு கிராம பஞ்சாயத்து அதிகார எல்லையாக கொண்டிருக்கலாம். கீழ்மட்ட நிலையில் ஓர் அடிமட்ட அமைப்பாக இருப்பதால் , அது நேரடி மக்களாட்சியின் அடிப்படை அலகாகப் பணியாற்றுகிறது. எனவே மக்களாட்சி கட்டுப்பாட்டுக்கு உரிய முனைப்பானதோர் சாதனமாக அது கருதப்படுகின்றது.
கிராம சபையானது , குறைந்தது மூன்று கூட்டங்களைளேனும் ஒரு நிதியாண்டில் நடத்தவேண்டும். கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் , கிராம சபையின் கூட்டங்களைக் கூட்டுவதற்குப் பொறுப்பினைப் பெற்றுள்ளார். பணிகள். 1. கிராமசபை பஞ்சாயத்து ஆற்றும் பணிகளை சீராய்வு செய்கின்றது. 2. அது சபை எல்லைக்குரிய வளர்ச்சித் திட்டத்தை வரைகின்றது. 3. அது பஞ்சாயத்தின் கணக்குகள் மற்றும் தணிக்கை பற்றிய துண்டு அறிக்கையைப் பரிசீலனை செய்கிறது. 4. அது கடந்த ஆண்டின் நிர்வாக அறிக்கையினையும் , எதிர்கொள்ளும் ஆண்டுக்குரிய செயல்திட்டத்தையும் பரிசீலனை செய்கின்றது.
5. அது கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்குகிறது. கிராமசபை இறைமை கொண்ட ஓர் அமைப்பாகும். எனவே அது சில செயல்பாடுகளைச் செய்யயும் பொருட்டு கிராமப் பஞ்சாயத்திற்கு அதிகாரங்கள் மற்றும் உரிமையை வழங்கலாம். கிராமப் பஞ்சாயத்து பஞ்சாயத்து இராச்சிய இறைமையின் முதலாவதாகவும் , தலையாய அலகாகவும். கிராமப் பஞ்சாயத்து உள்ளது. குறைந்தபட்சம் 500 மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து கிராமத்திற்கும் அது அமைக்கப்படுகின்றது. கிராமப் பஞ்சாயத்தின் உறுப்பினரின்
குறைந்தபட்ச எண்ணிக்கை ஐந்தாகவும் , அதிகப்பட்சமாகப் பதினைந்தாகவும் அதன் மக்கள் தொகையைச் சார்ந்து இருக்கும். கிராமப் பஞ்சாயத்து கிராம சபையின் செயலாக்க குழுவாக உள்ளது. அதன் உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்பு மூலம் கிராம சபையினால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். கிராமம் முழுவதும் வட்டங்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு வட்டமும் ஒன்று முதல் மூன்று உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டிற்கான ஏற்பாடு உள்ளது. Page 15 $
of 204 கிராமப் பஞ்சாயத்து ஒரு தலைவரால் தலைமையேற்கப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் கிராம சபையின் உறுப்பினர்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கிராம சபையின் மூன்றில் ஒரு பங்கினரின் பெரும்பான்மையுடன் அவருக்கு எதிரான ஒரு நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் அவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படலாம். ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு துணைத்தலைவரும் இருக்கிறார். 18 வயதடைந்த குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க உரிமைப் படைத்துள்ளனர். 21 வயதை நிறைவு செய்தவர்கள் மட்டுமே பஞ்சாயத்தின் தலைவராகவும்
துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட முடியும். கிராமப்பஞ்சாயத்தின் பதவிக்காலமும் அதன் உறுப்பினர்களின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளாகும். முன் கூட்டியே பஞ்சாயத்து கலைக்கப்படுமாயின் ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் கிராமப் பஞ்சாயத்தின் அரசியல் சார் செயலாக்க அதிகாரியாகத் தலைவர் திகழ்கின்றார். அவர் பின்வரும் அதிகாரங்களையும் பணிகளையும் பெற்றுள்ளார். 1. கிராமசபை மற்றும் கிராமப் பஞ்சாயத்தின் கூட்டங்களைக் கூட்டுவிக்கின்றார். 2. பஞ்சாயத்தின் கூட்டங்களுக்குத்
தலைமையேற்கிறார். 3. பஞ்சாயத்தின் ஆவணங்களைப் பராமரிக்கிறார். 4. பஞ்சாயத்துப் பணியாளர்கள் மீது நிர்வாகக் கட்டுப்பாட்டை செலுத்துகின்றார். 5. பஞ்சாயத்தின் இயற்றப்பட்ட தீர்மானங்களின் செயலாக்கத்தை பார்வை செய்கின்றார். 6. கிராமப் பஞ்சாயத்தில் எடுக்கப்படும் முடிவுகள் செயல்படுத்தப்படுவதற்கான பொறுப்பினை அவர் பெற்றுள்ளார். 7. பஞ்சாயத்தின் நிதிகளை மேலாண்மை செய்வதற்கு உறுதியான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளார். 8. தனது பஞ்சாயத்தின் பிரதிநிதியாக பஞ்சாயத்து சமிதி ( அ ) பஞ்சாயத்து ஒன்றியத்தின் கூட்டங்களில் கலந்துக் கொள்கிறார்.
9. மாநில அரசாங்கச் சட்டத்தினால் ( அ ) அச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள விதிகளால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் அவர் செயல்படுத்துகின்றார். தலைவர் இல்லாதிருக்கும் நேரத்தில் துணைத்தலைவர் இப்பணிகளை ஆற்றுகின்றார். கிராமப் பஞ்சாயத்தின் பணிகள் கிராமப் பஞ்சாயத்திடம் பலவகையான பொதுநலப்பணிகளும் , வளர்ச்சி நடவடிக்கைகளும் ஒப்படைவு செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் , கிராம மட்டத்தில் திட்டங்களைத் தயாரித்து சமுதாய நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை செயல்படுத்துவதாகும். மாநில
அரசாங்கத்தின் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் கிராமப் பஞ்சாயத்து ஆற்றவேண்டும். அவை கட்டாயமான பணிகள் மற்றும் தன்னிச்சையான பணிகள் என பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. கட்டாயமான பணிகள் கிராமப் பஞ்சாயத்து பின்வரும் கட்டாயமான பணிகளைப் பெற்றுள்ளது. 1. வேளாண்மை முன்னேற்றம் 2. குடிசை தொழில்களின் வளர்ச்சி 3. பொதுக் கிணறுகள் மற்றும் நீர்த்தொட்டிகள் பராமரித்தல். 4. குடிநீர் வினியோகம் செய்தல். 5. துப்புரவு , மற்றும் வடிகாலுக்கு ஏற்பாடு செய்தல். 6. கிராமத்துச் சாலைகளிலும் மற்ற பொது இடங்களிலும் விளக்குகள் அமைத்தல்.
7. இடுகாடு மற்றும் சுடுகாடுகளைப் பராமரித்தல். 8. பிறப்புகள் , இறப்புகள் , திருமணங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தல். 9. கால்நடை நீர்க்குட்டைகளைப் பராமரித்து , உயிர் நடைகளை பற்றி பொதுவான அக்கறை கொள்ளுதல். 10. கிராமப் பஞ்சாயத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல். 11. சிறு அளவிலான பாசன வேலைகளைக் கட்டுவித்துப் பராமரித்தல். 12. பொதுச் சந்தைகளையும் , அங்காடிகளையும் ஒழுங்குமுறை செய்தல். 13. கழிவுப்பொருட்களைக் குவிப்பதற்கு இடங்களை ஒதுக்குதல். 14. சமுதாயக் கல்வியின் மேம்பாடு மற்றும் பள்ளிகளின் மேற்பார்வை. 15. புள்ளிவிவரச்
செய்திகளைச் சேகரித்துப் பராமரித்தல். 16. வீரிய வித்துக்களையும் உரங்களையும் வினியோகிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல். 17. தாய் சேய் நல ( பிரசவ ) விடுதிகளையும் இறைச்சிக் தொட்டிகளையும் பராமரித்தல். 18. நிலச்சீர்திருத்தம் , திட்டங்களின் செயற்பாட்டில் உதவியினை வழங்குதல். 19. அம்மை ஊசி , காலரா ஊசி மற்றும் கொள்ளை நோய்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். தன் விருப்பப் பணிகள் கிராமப் பஞ்சாயத்தின் தன் விருப்பமான பணிகளுள் முக்கியமான சில பணிகள் பின்வருபவையாகும். 1. சாலை ஓரங்களில் செடிகளை நட்டுப் பேணி வளர்த்தல். 2.
தர்மசாலைகள் , ஓய்விடங்கள் , விளையாட்டு மைதானங்கள் , நூலகங்கள் , படிப்பறைகள் , பூங்காக்கள் போன்ற பிறவற்றை நிறுவிப் பராமரித்தல். 3. சுகாதாரமற்ற வட்டாரங்களை மீட்பு செய்தல். 4. சமூகக் கூடங்களை மேலாண்மை செய்தல். 5. ஏழைகளுக்கு நிவாரணம் அளித்து பொதுச் சுகாதாரத்தைக் கவனித்துக் கொள்ளுதல். 6. நெற்களஞ்சியங்களையும் , தானியப்பயிர் கிடங்குகளையும் நிறுவுதல். 7. கூட்டுறவுப் பண்ணை , குடும்ப நலத்திட்டம் , கால்நடை வேளாண்மை ஆகியவற்றைத் தேர்ச்சியுறுமாறு செய்தல். 8. பன்றி வளர்ப்பை ஒழுங்கு முறை செய்தல். 9. தீண்டாமையை நீக்குதல்.
10. கிராமப் பஞ்சாயத்தின் துப்புறவுப் பணியாளர்களுக்கு இல்லங்களைக் கட்டிப் பராமரித்தல். வருவாய் ஆதாரங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பணிகளை ஆற்றி கிராமப் பஞ்சாயத்து செயல்படுவதற்கான நபர்கள் , சொத்து மற்றும் வர்த்தகத்தின் மீது வரிகளை விதிப்பதற்கு அது அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்து கீழ்வரும் ஆதாரங்களின் மூலமாக வருவாயை பெறுகின்றது. 1. கால்நடை மீதான வரி 2. கட்டிட வரி. 3. பஞ்சாயத்துச் சட்டங்களை மீறிய காரணத்தால் விதிக்கப்படும் அபராதங்கள். 4. பஞ்சாயத்து முன் சமர்ப்பிக்கப்படும் சட்டமுறையிலான வழக்கிற்குச்
செலுத்தப்படும் கட்டணங்கள். 5. தனது எல்லைக்குள் கால்நடைகள் விற்பனை செய்வதற்கு விதிக்கப்படும் கட்டணங்கள். 6. கிராமச் சொத்துடைமையிலிருந்து பெறப்படும் வாடகை 7. வட்டார வர்த்தக வரி 8. மாட்டு வண்டிகள் போன்ற ஊர்திகள் மீதான வரி 9. மாநில அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவி மானியங்கள் 10. மாநில அரசாங்கத்தினால் வழங்கப்பெறும் துணை மானியங்கள். கிராமப் பஞ்சாயத்தின் வருவாய் கிராமப் பஞ்சாயத்து நிதியில் செலுத்தப்படுகின்றது. அதன் பலவகையான பணிகளைச் செய்து முடிக்க தேவைப்படும் செலவினை இந்த நிதியிலிருந்து தான் பெறவேண்டும். ஒவ்வொரு
கிராமப் பஞ்சாயத்தின் ஒரு செயல் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகிறார். அவர் கிராம பஞ்சாயத்தின் தீர்மானங்களை செயல்படுத்துகின்றார். அவர் கிராமப் பஞ்சாயத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாட்களைக் கட்டுப்பாடு செய்கிறார். தனது கடமைகளை ஆற்றுவதன் வாயிலாக அவர் தனது அதிகார எல்லைக்குட்பட்டு கிராமப் பஞ்சாயத்தின் அன்றாட நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கிறார். அத்தியாயம் 10 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா இந்தியா 20 - வது நூற்றாண்டுக் காலத்தில் குறிப்பாக அந்த நூற்றாண்டின்
இரண்டாவது பகுதியில் சமூகப் பொருளாதாரக் களங்களில் மிகவும் குறிப்பாக விவசாயம் மற்றும் அரசியல் களங்களில் பல மேம்பாடுகளைக் கண்டுள்ளது. இந்தியர்கள் ஒருமைப்படுவதில் செல்வாக்கு செலுத்தவும் , அவர்களின் தேசியநிலை மற்றும் சுதந்திரத்தை அடைவதை நோக்கிப் பல்வேறு நடவடிக்கைகளை துவக்கவும் பன்மையில் ஒற்றுமை என்பது முக்கியமான காரணியாக இருந்தது. அது கிட்டத்தட்ட வெளிநாட்டவர்களை நாட்டிலிருந்து விரட்டுகின்ற போராட்டத்தின் உருவிலும் , குறிப்பாக 1947 லிருந்து மிகவும் குறிப்பாக அரசியலின் குடியரசு மாதிரி தொடங்கப்பட்டதிலிருந்து பல
கோடிக்கணக்கான மக்களுக்காக வாழ்வு மற்றும் பாதுகாப்பை வழங்கும் நிலவுகின்ற முறைமைகள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்கும் உருவிலும் இருந்தது. இந்திய மக்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் மிக நீண்ட தன்மையுடையதாக இருந்தது. அவர்களுக்கு முன்பு பொருளாதார மேம்பாட்டின் மிகப்பெரிய பணி இருந்தது. பாதுகாப்புடன் கூடிய பொருளாதார வளமை , சமூக இணக்கம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி நடைபோடுவதற்கு , பல தலைவர்களுக்கிடையே பண்டித ஜவஹர்லால் நேரு , இராஜேந்திரப்பிரசாத் , பட்டேல் மற்றும் அம்பேத்கர் போன்ற சிறந்த மனிதர்கள் மற்றும்
எதிர்கால நோக்கர்கள் 50 மற்றும் 60 - களில் தொடங்கி அவர்களால் முடிந்த அளவு மக்களுக்காகப் பலதிட்டங்களை தீட்டி நிறைவேற்றினர். ஆனால் , அவைகளைச் சாதிக்கும் முயற்சியில் மிகக் கடினமான சவால்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. குறை கூறுபவர்களின் கருத்துகள் இருந்தும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை சரிசெய்தார்கள் மற்றும் ஒரு ஸ்திரமான வளர்ச்சி சகாப்தத்திற்கு வழிகாட்டியாகவும் இருந்தார்கள். இருப்பினும் , சுதந்திர இந்தியாவின் இந்தக் காலம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. தேசத்தின் ஸ்திரத்தன்மைக்கும் மக்களின் ஒருமைப்பாட்டிற்கும் மிகவும்
கடினமான சூழ்நிலைகளின் மூலம் பொறுப்பு மற்றும் வழிகாட்டலைப் பெற்றிருந்த நலிந்த தலைவர்களுடன் கூடிய நிலையற்ற காலத்தால் அது தொடரப்பட்டது. ஆனால் , மிகச் சமீபத்தில் , அடல் பிகாரி வாஜ்பாயால் தலைமைவகித்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் இந்திய அரசியல் முறைமை மற்றும் அதன் நிறுவனங்களின் மேன்மை இருந்தது. இந்தக் காலத்தில் , உள்நாடு மற்றும் பன்னாட்டளவில் செயல்பாட்டின் பல களங்களில் அனைத்துப் பகுதி வளர்ச்சியை இந்தியா கண்டது என்று கூறப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பையும் , அமெரிக்கா ,
இங்கிலாந்து , ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் நோக்கம் செரிந்த நேர்மறையான உறவையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஏற்படுத்தியது என்று மேலும் கூறப்பட்டது. பிரதம மந்திரியாக முனைவர் மன்மோகன் சிங்கின் சீரிய தலைமையிலும் , பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளை சேர்ந்த பல சிறந்த உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ள ஆளுவோரின் ஒரு புதிய அமைப்பில் இந்திய வாக்காளர்களின் நன்னம்பிக்கையை மே -2004 ல் மக்களவைக்கு நடந்த தேர்தல்கள் கண்டன. பிராந்தியக் கட்சிகளின் ஆதிக்கம் நடக்கின்ற மற்றும்
வெளியிலிருந்து தேசத்தை ஆள்வதிலும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இடது மற்றும் வலதுசாரிக் கம்யூனிசக் கட்சிகளின் ஆவலான ஒரு பங்கைப் பெற்றிருக்கின்ற கணிக்கமுடியாத அல்லது எதிர்பாராத மேம்பாடாக Page 1 / & of 204 இது உள்ளது. தேசிய அரசாங்கத்தை எந்நிலையிலும் குறை கூறுகின்ற பலரின் இயல்பான கருத்தாக இது உள்ளது. இருப்பினும் , அமைப்புக் கூறுகளின் ஒத்துழைப்பு வழங்கப்பட்ட தற்போதைய ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் சிறந்து செயல்படும் எனத் தோன்றுகிறது. வருகின்ற வருடங்களில் ஒரு சிறந்த இந்தியாவைச் சாதித்து இந்தியர்களுக்கு
உதவுவதற்கு 21 - ஆம் நூற்றாண்டிலுள்ள அரசாங்கம் முன்னேற முடியும். பொருத்தமான திட்டங்களை துவக்கமுடியும். மற்றும் திட்டவட்டத்துடன் அவைகளை நிறைவேற்ற முடியும் என்று ஒவ்வொருவரும் நம்ப முடியும். 10.1 தற்போதைய நிலை உறுதியான சாதனைகள் மூலமாக திருப்திகரம் அல்லது அதிக திருப்திகரமான முடிவுகளை அடைந்துள்ள இந்தியாவில் உள்ள சில களங்கள் பின்வருகின்றன. இவைகள் , இச்சிறந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டியாக உதவவும் பணிபுரியவும் முடியும். சமூக மேம்பாடு , பொருளாதார வளர்ச்சி , அரசியல் மாற்றம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம்
போன்றவைகள் கணக்கில் எடுக்கப்பட்ட மற்றும் ஆராயப்பட்ட களங்களாகும். இவைகள் ஒவ்வொன்றும் ஒரு தெளிவான புரிதிறனுக்காக சில துணைக் களங்களினடியில் விளக்கப்பட்டு பகுத்தாயப்படுகிறது. 1. சமூக மேம்பாடு பொதுவாகவே , பல்வேறு தன்மைகளில் பல்வேறு ஜாதிகள் , மதங்கள் , மொழிகள் , கலாச்சாரங்கள் மற்றும் இனங்கள் நிலவுகின்ற ஒரு பன்மைச் சமூகமாக இந்தியா உள்ளது. உலகில் மக்கட்தொகை ரீதியாக சீனாவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. 1872 - ல் முதலாவது அகில இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது. 1881 - லிருந்து
ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. 1920 - வரை இந்தியாவின் மக்கள்தொகை மெதுவாக வளர்ந்தது. 1911 - லிருந்து 1920 வரையிலான பத்து ஆண்டுகளிலும் மற்றும் 1921 - லிலும் பரவும் நோய்கள் நிலவியதற்கிணங்க மக்கள்தொகை வளர்ச்சியில் சரிவு இருந்தது. அட்டவணை 1 ல் காட்டியுள்ளதைப் போல சுதந்திரத்திற்குப் பின்பு மக்கள்தொகை வளர்ச்சி மிக அதிக அளவு இருந்திருக்கிறது. மேலும் , 2001 ன் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கிணங்க , இந்தியாவின் மக்கள்தொகை 102.7 கோடியாக இருந்தது. அது 1991 - ன் மக்கள்தொகை
மீது 21.34 சதவீதம் அதிகரித்திருந்தது. அதே காலத்தில் இறப்பு விகிதம் குறைந்திருந்ததாலும் வாழ்வு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்ததாலும் இவ்வதிகரிப்பு இருந்தது. 2001 - ன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , கவன ஈர்க்கும் விவரங்கள் சில பின்வருகின்றன. அ. நாட்டின் ஒட்டுமொத்தத்திற்கான சராசரி மக்கள் தொகை நெருக்கம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 324 நபர்கள் ஆகும். ஆ. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 9294 நபர்களுடன் மிக அதிகமான மக்கள் நெருக்கத்தை டெல்லி பெற்றுள்ளது. இ. மாநிலங்களுக்கிடையே , 904 நபர்களின் மிக அதிகமான நெருக்கத்தை மேற்கு வங்கம்
பெற்றிருக்கும் வேளையில் , அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு அது 13 நபர்களாக உள்ளது. 5. மக்கள்தொகையுடன் கலந்த சமூக மேம்பாட்டு இலக்குகளை வடிவமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஏற்றுக்கொள்ளல். மற்றும் 6. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துடன் தொடர்புள்ள துறைகளை மாற்றியமைக்கக்கூடிய விண்வெளி ஆணையம் மற்றும் அணுசக்தி ஆணையம் போல மக்கள்தொகை மற்றும் சமூக மேம்பாட்டு ஆணையம் என்ற ஒரு உயர்ந்த அமைப்பை நிறுவுதல். பின்வருகின்ற நோக்கங்களுடன் தேசிய மக்கள்தொகைக் கொள்கையை ( NPP ) பிப்ரவரி 2000 - ல்
இந்திய அரசாங்கம் அறிவித்தது. 1. கர்ப்பத்தடை , சுகாதார நலக்கட்டுமானம் , அடிப்படை மறுஉற்பத்தி மற்றும் குழந்தை சுகாதாரக் கவனத்திற்கான நிறைவேற்றாத தேவைகளை நிவர்த்தி செய்வது உடனடியான நோக்கமாக உள்ளது. 2. 2010 ல் 2.1 % விகிதமாக மாற்றும் அளவிற்கு மொத்த மகப்பேறு விகிதத்தை ( TFR ) கொண்டுவருவது நடுத்தரக் கால நோக்கமாக உள்ளது. மற்றும் 3. சீரான பொருளாதார வளர்ச்சி , சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தேவைகளுடன் நிலையான அளவில் 2045 - ல் ஒரு ஸ்திரமான மக்கள்தொகையைச் சாதிப்பது நீண்டகால நோக்கமாக உள்ளது. அதன்
விளைவாக பிரதம மந்திரியைத் தலைவராகவும் , மாநில முதலமைச்சர்கள் , மத்திய அமைச்சர்கள் , அரசுசாரா நிறுவனங்கள் , மக்கட்தொகை நிபுணர்கள் மற்றும் பொதுச் சுகாதார பணியாளர்கள் போன்றோரை உறுப்பினர்களாகவும் பெற்றுள்ள மக்கள்தொகை மீதான ஒரு தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அந்தக் கொள்கையை அமுலாக்கத்தை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். மேலும் , அக்கொள்கையை அமுல்படுத்துவதில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதான பங்கினையும் வலியுறுத்துகிறது. சிறந்த
செயல்பாட்டிற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிசளித்தல் , குடும்பக் கட்டுப்பாடு செய்கின்ற தாய்மார்களுக்கும் மற்றும் ஜோடிகளுக்கும் ரொக்க ஊக்கங்கள் மற்றும் இதுபோன்றவைகள் அந்தக் கொள்கையில் கூறப்பட்டுள்ள சில சிறந்த மற்றும் ஊக்குவிக்கும் செயல்பாடுகளாக உள்ளன. சாதனைகள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள்தொகையைக் உண்மையில் , கட்டுப்படுத்துவதற்குத் தேசிய குடும்பநலத் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை இந்தியா சாதித்துள்ளது. உதாரணங்கள். 1. 1951 - ல் 40.8 ஆக இருந்த தோராய பிறப்பு விகிதம் 2000 - ல் 25.8 ஆகக்
குறைந்துள்ளது. 2. 1951 - ல் 1000 க்கு 146 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் 2000 - ல் 1000 - க்கு 68– ஆகக் குறைந்துள்ளது. 3. 1951 - ல் 25 ஆக இருந்த தோராய இறப்பு விகிதம் 2000 - ல் 8.5 ஆகக் குறைந்துள்ளது. 4. 1951 - ல் 37 வருடமாக இருந்த ஒரு சராசரி இந்தியரின் வாழ்வு எதிர்பார்ப்பு 2000 - ல் 67 வருடமாக உயர்ந்துள்ளது. மற்றும் முறைகளின் மீது கலந்துள்ள வேளையில் இந்த மாற்றம் தவிர்க்கமுடியாததாக வந்துள்ளது. இங்கே , இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியின் சில களங்களை நாம் விவாதிக்கலாம். விவசாயம் பொருளாதார முதுகெலும்பாக
விவசாயம் உள்ளது. கச்சாப் பொருட்களுடனான அதிக எண்ணிக்கையுள்ள தொழில்களை விவசாயம் ஏற்படுத்தியது. அதனால் அது நாட்டின் தொழில் மேம்பாட்டிற்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் 64 % சதவிகித உழைப்புச் சக்திக்கு அது நேரடி வாழ்வளிக்கிறது என்பது இந்திய விவசாயத்தின் இயல்பான தன்மையாகும். இந்திய ஏற்றுமதியின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 18 சதவிகிதம் அது உள்ளது. தேனீர் , காப்பி , புகையிலை , முந்திரிப்பருப்பு , நறுமணப்பொருட்கள் , பருத்தி மற்றும் சர்க்கரை போன்றவைகள் அடங்கிய 13 முக்கியப் பொருட்களில் விவசாய ஏற்றுமதிகள் உள்ளன.
திடச் சுற்றுச்சூழலில் உள்ள வேறுபாடுகளுக்கிணங்க , இந்தியாவில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. நெல் , கோதுமை , மக்காச்சோளம் , பார்லி , கரும்பு , பருத்தி , சணல் , பயிர்வகைகள் , தேனீர் , காப்பி , ரப்பர் , பட்டு மற்றும் புகையிலை போன்றவைகள் முக்கியமான பயிர்களாக உள்ளன. மேம்பாட்டின் முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் விளைவாக விவசாயத்தில் பசுமைப்புரட்சி சாதிக்கப்பட்டது. ஜீலை 2000 - ல் இந்திய அரசாங்கம் அதன் புதிய விவசாயக் கொள்கையை ( NAP ) அறிவித்தது. நடப்பிலுள்ள 1.5 சதவிகித விவசாய வளர்ச்சியை 2005 - ல் சதவிகிதத்திற்கு
மேல் அதிகரிப்பதற்கு அது நோக்கம் கொண்டுள்ளது. ஒப்பந்தப் பண்ணை மற்றும் நிலக்குத்தகை ஏற்பாடுகள் மூலமாக தனியார்துறை பங்கேற்பை மேம்படுத்துவதற்கு அது நாடுகிறது. மேலும் , உள்நாட்டு விவசாயச் சந்தைகளின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் 4 சிக்கலான சட்டங்களையும் போக்குவதற்கு அது நாடுகிறது. அதனால் விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களுக்கு லாபகரமான விலையைப் பெறலாம். தேசிய வருமானம் ஒரு நாட்டின் உண்மையான வருமானம் என்பது அந்த நாட்டில் உற்பத்தியான மொத்த பொருட்கள் மற்றும் பணிகளைக் குறிக்கும். இவ்விதப் பொருட்களும் பணிகளும்
பல்வேறு அளவைகளில் வருவதால் , ஒட்டுமொத்தத்தையும் ஒரு பொது அளவையில் அளப்பது இயலாமல் உள்ளது. ஆதலால் , மதிப்புகள் பண ரீதியாக வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக , தேசிய வருமானம் என்பது ஒரு வருடத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இறுதியான பொருட்கள் மற்றும் பணிகளின் பணமதிப்பாக உள்ளது. இந்தியாவில் ஒரு அடிப்படை வருடத்துடன் நிலையான விலைகளில் தேசிய வருமானம் கணக்கிடப்படுகிறது. அடிப்படை வருடம் 1993-94 ஆகும். தொழில் , அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நடைமுறையில் இந்தியாவில் பல தொழில்களின் மேம்பாட்டிற்கான
அடித்தளத்தைப் பலவகையான விவசாய மற்றும் சுரங்க கச்சாப் பொருட்கள் ஏற்படுத்தியுள்ளன. தொழில்களின் மேம்பாட்டில் செயல்படுவதற்கு ஒரு சிறந்த பங்கை அரசு பெற்றிருந்தது என்ற கருத்து ஜவஹர்லால் நேருவை தலைவராகக் கொண்ட தேசிய திட்டக்குழுவின் ( 1950 ) அறிக்கையில் காணப்பட்டது. இது தொழில் கொள்கையின் ( 1945 ) அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் தொழில் நிகழ்வுகளை அமைத்ததில் சில பிரதான துவக்கங்கள் பின்வருகின்றன. 1. தொழில் கொள்கைத் தீர்மானம் , 1948 2. தொழில்கள் மேம்பாடு மற்றும் தீர்மான சட்டம் , 1951 3. தொழில்
கொள்கைத் தீர்மானம் , 1956 4. தொழில் கொள்கை அறிக்கை , 1973 5. தொழில் கொள்கை அறிக்கை , 1977 6. தொழில் கொள்கை அறிக்கை , 1980 மற்றும் 7. புதிய தொழில் கொள்கை , 1991. இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆய்வு தொழில்நுட்ப மையங்களை நிறுவுதல் , கருவிகளை நவீனப்படுத்துதல் , ஹைட்டரஜன் மற்றும் நைட்ரஜன் குண்டுகளைத் தயாரித்தல் , விண்வெளி ஆய்வு மற்றும் மேம்பாடு , இன்னும் இது போன்ற பலவற்றின் மூலமாக மேம்பாடு அடைந்துள்ளது. திட்டமிடல் அரசியல் முறைமை , அரசியல் மற்றும் ஆளுமையின் சிறப்புகள் தொடர்பாக பிரிட்டனின்
உதாரணத்தை இந்தியா பின்பற்றியது. இருப்பினும் , இதுவரையிலான பொருளாதார மற்றும் விவசாய மேம்பாடு தொடர்பாக , முன்னுரிமைத் திட்டமிடல் மற்றும் முறையான அமுலாக்கத்தை வலியுறுத்திய சோவியத் முன் மாதிரியை அது பின்பற்றியது. திட்டமிட்ட மேம்பாட்டின் ரஷ்ய முறையின் ஆதரவாளராகச் சமதர்மவாதியான பண்டித ஜவஹர்லால் நேரு இருந்தார். அவரின் முயற்சியால் இந்தியாவில் திட்டமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை ஒன்பது திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தன. மற்றும் தற்போது பத்தாவது திட்டம் நடைமுறையில் உள்ளது. ஐந்தாண்டுத் திட்டங்களையும் அவைகளின்
முன்னுரிமைகளையும் அட்டவணை –4 காண்பிக்கிறது. அட்டவணை 4 ஐந்தாண்டுத் திட்டங்களும் முன்னுரிமைகளும் | முன்னுரிமைகள் விவசாயம் , நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத் | திட்டங்கள் | தொழில் | ஐந்தாண்டுத்திட்டங்கள் | முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் 1951-56 | இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1956-61 மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் 1961-66 நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969-74 | ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் 1974-79 ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் 1980-85 | ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் 1985-90 எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1992-97 ஒன்பதாவது
ஐந்தாண்டுத் திட்டம் 1997-2002 | பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் 2002-07 அடிப்படைத் தொழில்கள் | பங்கீட்டு நிதியுடன் வளர்ச்சி வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு வறுமை ஒழிப்பு வேலைவாய்ப்பை உருவாக்குதல் 2000 - ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல் | சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம் வறுமை மற்றும் மக்கள் தொகை | வளர்ச்சியைக் குறைத்தல் 1966 - லிருந்து 1969 வரையிலும் மற்றும் 1990 - லிருந்து 1992 வரையிலும் திட்ட விடுமுறை இருந்தது. திட்டங்களின் சோதனையான அனுபவத்திற்குப் பின்னர் , மூன்று வருடங்களாக திட்ட
விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் வருடாந்திரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டன என்பது அதன் பொருளாகும். பசுமைப் புரட்சி , பணவாட்டத்தைக் குறைத்தல் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குதல் போன்றவைகள் அந்தக் காலகட்டத்தில் பிரதான வளர்ச்சிப் படிகளாக இருந்தன. III. அரசியல் மாற்றம் இங்கே , அரசியல் மாற்றத்தை குறிப்பாக அரசியலமைப்பு மாற்றங்களின் மூலமாக நாம் படிக்கலாம். ஆகஸ்ட் 15 , 1947 வரை இந்தியா பிரிட்டிஷாரால் ஆளப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சித் தன்மையின் விவரங்கள் வரலாற்றிலிருந்து நிர்ணயிக்கப்பட
முடிந்தது. ஒரு புதிய அரசியலமைப்பை வரையும் பணி இந்திய அரசியலமைப்புச் சபையால் மேற்கொள்ளப்பட்டது. பண்டித நேரு , அம்பேத்கர் , பட்டேல் , கிருஷ்ணமாச்சாரி மற்றும் பல சிறந்த உறுப்பினர்களை அது பெற்றிருந்தது. அதன் தலைவராக இராஜேந்திரப்பிரசாத் இருந்தார். அது இறுதியாக நவம்பர் , 26 , 1949 - ல் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. அப்புதிய அரசியலமைப்பு ஜனவரி 26 , 1950 - ல் நடைமுறைக்கு வந்தது. அப்போதிருந்து , கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சித் தன்மைகளுடன் இந்தியா ஒரு இறைமையான , சமதர்ம , மதச்சார்பற்ற , ஜனநாயக மற்றும் குடியரசு
நாடாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் இந்திய அரசியலமைப்பு மிகவும் பெரியதாகும். அரசியலமைப்பின் செயல்பாட்டுக் காலத்தில் , திருத்தங்கள் மூலமாக பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அம்மாற்றங்களில் மிகவும் முக்கியமானது , எல்லா மாநிலங்களிலும் பஞ்சாயத்துராஜ் மற்றும் நகராட்சி முறைகளை அறிமுகப்படுத்துவது கட்டாயத் தேவை என்பதை வலியுறுத்தும் 73 மற்றும் 74 - வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களாகும். குறிப்பிட்ட பகுதி மக்கள் தாங்கள் தொடர்புள்ள களங்களின் நிர்வாகத்தில் சிறப்பாக பங்கேற்பதற்கு இது ஊக்கமளிக்கிறது.
பின்வருவன சில அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களாகும். 1. அரசியலமைப்பின் பெரிதாக்கம் இந்தியாவின் ஆரம்ப அரசியலமைப்பு ஒரு முகவுரை , 22 பகுதிகள் , 395 விதிகள் மற்றும் 8 அட்டவணைகளைப் பெற்றிருந்தது. தற்போது , அது ஒரு முகவுரை , 22 பகுதிகள் , 444 விதிகள் மற்றும் 12 அட்டவணைகளைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் , விதி 368 - க்கிணங்க , 100 முறைகளுக்கு மேல் அது திருத்தப்பட்டுள்ளது. எனவே , உலகில் மிகவும் விளக்கமான மற்றும் பெரிய அரசியலமைப்பு நமதே என்று நாம் பெருமையாகக் கூறுகிறோம். 2. முகவுரையில் மாற்றங்கள் ஆரம்ப
அரசியலமைப்பின் முகவுரையில் இறைமை , ஜனநாயகம் மற்றும் குடியரசு போன்ற பிரதான கொள்கைகள் மட்டுமே இடம்பெற்றன. ஆனால் , 1976 - ஆம் ஆண்டின் நாற்பத்து இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சமதர்மம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அடுத்த இரண்டு பிரதானக் கொள்கைகளை முகவுரையில் புகுத்தியது. எனவே , இந்தியா ஒரு இறைமையான , சமதர்ம , மதச்சார்பற்ற , ஜனநாயக மற்றும் குடியரசு நாடு என்று நாம் சொல்கிறோம். இதே போல , 42 - வது திருத்தத்தால் அரசியலமைப்பின் முகவுரையில் ‘ இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ' சேர்க்கப்பட்டுள்ளது. 3.
அடிப்படை அமைப்புகளின் பராமரிப்பு அரசியலமைப்பின் ஆரம்ப உள்ளதைப் போல கொள்கைகளின் அடிப்படை அமைப்புகள் எவ்வித குளறுபடியுமின்றி முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இறைமை , மதச்சார்பின்மை , சமதர்மம் , மக்களாட்சி , குடியரசு , பாராளுமன்ற அரசாங்கமுறை , சட்டத்தின் ஆட்சி போன்றவைகள் அரசியலமைப்பின் சில அடிப்படை அமைப்புகளாகும். கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம் என்ற வழக்கில் ( 1973 ) , முகவுரையும் உள்ளடக்க அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் பாராளுமன்றம் திருத்தலாம். ஆனால் , அரசியலமைப்பின் அடிப்படை அமைப்புகள் எப்போதும்
மாற்றப்படாமல் நிலவவேண்டும். 4. அடிப்படைக் கடமைகள் 42 - வது திருத்தத்தால் , அரசியலமைப்பின் ஒரு புதிய பகுதி IV அ - வில் அடிப்படைக் கடமைகள் உள்ளடக்கப்பட்டன. மற்றும் ஒரு புதிய விதி 51 – அ புகுத்தப்பட்டது. அரசியலமைப்பை மதித்து நடத்தல். அதன் கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள் தேசியக்கொடி , தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை மதித்தல் , பொதுச்சொத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றைப் போல 10 அடிப்படைக் கடமைகளை அது விளக்குகிறது. 5. பஞ்சாயத்துக்கள் 1992 - ன் 73 - வது அரசியலமைப்புத்திருத்தச் சட்டம் அரசியலமைப்பின் பகுதி
IX- ல் பஞ்சாயத்துக்களை இடம்பெறச் செய்துள்ளது. இந்தப் பகுதி இந்தியாவில் கிராமபுற உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்து ராஜ்யத்தின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குகிறது. மேலும் பஞ்சாயத்துகளின் 29 பணிகளை வரிசைப் படுத்துகின்ற அரசியலமைப்பின் 11 - வது அட்டவணையை 73 - வது திருத்தம் ஏற்படுத்தியுள்ளது. 6. நகராட்சிகள் 1992 - ன் 74 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அரசியலமைப்பின் ஒரு புதிய பகுதி IX அ - வை உருவாக்கியுள்ளது. இப்பகுதி நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களின் அமைப்பையும் பணிகளையும் விவாதிக்கிறது. இடஒதுக்கீடு மற்றும்
பங்கேற்புப் போன்றவைகளும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் , நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் 18 பணிகளை வரிசைப்படுத்துகின்ற அரசியலமைப்பின் 12 - வது அட்டவணையை 74 - வது திருத்தம் ஏற்படுத்தியுள்ளது. 7. கூட்டுறவுக் கூட்டாட்சி மாநிலங்களுக்கிடைே யேயான ஆரம்பத்திலேயே கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி அரசாங்க முறைகளின் தன்மைகளை உள்ளடக்கிய ஒரு அரைகுறைக் கூட்டாட்சியை இந்திய அரசியலமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல மாநிலங்களைப் பெற்றிருப்பதாலும் மற்றும் மாநிலங்களுக்கிடையே மட்டுமல்லாமல் மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்
ஆகியவைகளுக்கிடையே பல பிரச்சனைகளைப் பெற்றிருப்பதாலும் , கவுன்சிலை உருவாக்கியுள்ளது. சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மே அது ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கவுன்சில் பிரதம மந்திரி , அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் சட்ட சபைகளைப் பெற்றுள்ள யூனியன் முதலமைச்சர்களையும் பெற்றுள்ளது. கூடுதலாக , மத்திய அமைச்சரவையிலிருந்து அமைச்சர்குழு தரத்தின் ஆறு அமைச்சர்களை பிரதம மந்திரி இந்தக் கவுன்சிலுக்கு அரசியலமைப்பு 1990 - ல் தான் மாநிலங்களின் பிரதேசங்களின் நியமிக்கலாம். கவுன்சிலின் கூட்டங்கள் பிரதம மந்திரியால் தலைமை
வகிக்கப்படுகின்றன. உண்மையில் , இந்தக் கவுன்சிலின் செயல்பாடு இந்தியாவில் ஒரு கூட்டுறவுக் கூட்டாட்சியை உருவாக்கியுள்ளது. 8. தேர்தல் சீர்திருத்தங்கள் இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக பல குழுக்களும் ஆணையங்களும் நியமிக்கப்பட்டன. அவைகளில் , பல பரிந்துரைகளை வழங்கியுள்ள டார்குண்டே குழு ( 1974 ) மற்றும் தினேஷ் கோஸ்வாமி குழு ( 1990 ) ஆகிய இரண்டும் முக்கியமான குழுக்களாகும். கூடுதலாக அவ்வப்போது தேர்தல் ஆணையமும் குறிப்பிட்ட தேர்தல் சீர்திருத்தங்களைக் கூறியுள்ளது. உதாரணமாக , அரசியல் கட்சிகள் தங்களது பதவியாளர்களை
நான்கு மாதத்திற்குள் தேர்வுசெய்ய வேண்டிய ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் 1994 - ல் வெளியிட்டது. கட்சிமாறா தடைச்சட்டம் ( 1985 ) , 18 வயதடைந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய 61 - வது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவைகள் இந்தியாவில் முக்கியமான தேர்தல் சீர்த்திருத்தங்களாகும். 9. தேர்தல்கள் சுதந்திரத்திலிருந்து , இந்தியாவில் பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டசபைகளுக்கும் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் 14 - வது மக்களவை தேர்தல்களை நாம் சந்தித்துள்ளோம். உண்மையிலேயே , அரசியலில் பங்கெடுப்பதற்கு
மக்களுக்கான தருணத்தை தேர்தல்கள் வழங்கியுள்ளன. மற்றும் மக்களிடையே விழிப்புணர்வையும் உருவாக்கியுள்ளன. இதுவரை , இந்தியாவில் பொதுவாக பல்வேறு தன்மைகளில் அரசியல் மாற்றத்தைக் குறிப்பாக அரசியலமைப்பு மாற்றங்களை நாம் விவாதித்துள்ளோம். இருப்பினும் , இன அரசியல் , மத அரசியல் பிராந்தியம் , அரசியலில் பணத்தின் பங்கு , பாரம்பரியக் காரணிகள் , தேர்தல் பிரச்சினைகள் , மக்களின் கபடமற்ற தன்மை , அரசியலில் மக்களின் பங்கேற்புப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இந்திய அரசியலில் நிகழ்கின்றன. IV. நிர்வாகச் சீர்த்திருத்தங்கள். பொதுவாகவே ,
இந்திய நிர்வாகத்தின் பல களங்கள் பிரிட்டிஷ் விட்டுச் சென்றதன் அடிப்படையாக உள்ளன. சுதந்திரத்தின் போது , ஏகாதிபத்திய அரசங்கத்தின் வரையறுக்கப்பட்ட பணிகளின் செயல்பாட்டிற்காக முதன்மையாக வடிவமைக்கப்பட்டிருந்த மற்றும் இந்தியாவின் ஒரு மதச்சார்பற்ற , சுதந்திரமான , ஜனநாயக மற்றும் சமதர்மக் குடியரசின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இயற்கையிலேயே பொறுத்தமற்ற ஒரு காலனி நிர்வாகத்தை இந்தியா பெற்றிருந்தது. எனவே , இந்திய சுதந்திரத்தினைக் கண்ட தந்தைகள் இந்திய நிர்வாகத்தை சீர்செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர். உண்மையிலேயே ,
இந்தியாவில் , நிர்வாகத்தின் மேம்பாடுகள் நிர்வாகக் சீர்திருத்தங்களாக உள்ளன. இங்கே , இந்திய நிர்வாகத்தின் சீர்த்திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டிற்காக பரிந்துரைத்த பல குழுக்களை நாம் விவாதிக்கலாம். 1. அய்யங்கார் குழு , 1949 அமைப்புமுறை மாற்றங்கள் , பணியாளர் திறனில் முன்னேற்றம் மற்றும் அரசாங்க நடவடிக்கை முறைகளில் முன்னேற்றம் போன்றவற்றை விளக்கிய கோபாலசுவாமி அய்யங்கார் குழு , 1949 - ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய அரசாங்க எந்திரத்தின் ஒரு பரந்த கருத்தை மேற்கொள்ள அமைக்கப்பட்ட முதல் குழுவாகும். ஒரு அமைச்சகத்திற்கும் ஒரு
துறைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அந்தக்குழு பரிந்துரைத்தது. 28 துறைகள் , 8 மத்திய நிர்வாக அலுலகங்கள் மற்றும் ஒரு அமைச்சர்குழுச் செயலகம் போன்றவைகள் அடங்கிய அமைப்பின் 37 பிரதான அலகுகளாக மத்தியச் செயலகம் பிரிக்கப்பட வேண்டும் என்று அந்தக்குழு பரிந்துரை செய்தது. மேலும் ஒவ்வொரு துறையிலும் ஒரு ‘ அமைப்பு மற்றும் முறைகள் ’ பிரிவை அமைப்பதற்காக அக்குழு பரிந்துரைத்தது. 2. கோர்வாலா குழு , 1951 1950 - ல் இந்திய அரசாங்கம் திட்ட ஆணையத்தை அமைத்தது பொது நிர்வாகத்தில் பல பிரச்சனைகள் உள்ளன என்பதை அந்த ஆணையம் உணர்ந்தது. எனவே ,